ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் எலெக்ட்ரிக் அறிமுகம் எப்போது.?

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் பல்வேறு புதிய மாடல்களை தயாரித்து வரும் நிலையில் ஹிமாலயன் எலெக்ட்ரிக் பைக் மாடல் பற்றி சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

450சிசி மற்றும் 650 சிசி என்ஜின் பெற்ற பல்வேறு மாடல்களை தொடர்ந்து பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களை உருவாக்குவதில் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் மிக தீவரமாகவும் உள்ளது.

ஹிமாலயன் எலெக்ட்ரிக் பைக்

விற்பனையில் கிடைக்கின்ற ஹிமாலயன் பைக்கின் அடிப்படையில் பவர்ஃபுல்லான மற்றும் ஸ்டைலிஷான அட்வென்ச்சர் பெட்ரோல் மாடலை உருவாக்கி வருகின்றது. ராயல் என்ஃபீல்டின் தற்போதைய ஹிமாலயன் எலக்ட்ரிக் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளுக்கும் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார் சைக்கிள் புதியதாக இருக்கும். கசிந்துள்ள படம், மோட்டார் சைக்கிள் மிகவும் முரட்டுத்தனமான மோட்டார்சைக்கிள் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் படத்தில் பைக்கில் ஒரு பெரிய பேட்டரி பேக்கை பெற்றுள்ளதாக அமைந்துள்ளது.

ஆர்இ நிறுவனத்தின் முதல் மின்சார மோட்டார் சைக்கிள் 2026 ஆம் ஆண்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கிறோம். சமீபத்தில் என்ஃபீல்டு நிறுவனத்தின் எலக்ட்ரிக்01 என்ற பெயரிலான மாடலின் கான்செப்ட் தொடர்பான விபரங்களும் வெளியாகியுள்ளது.

 

குறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.?

அட்வென்ச்சர் டூரர் ஹிமாலயன் பைக்கின் அடிப்படையில் Scram 411 என்ற பெயரில் குறைந்த பட்ச ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் என்ஃபீல்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படுகின்றது.

குறிப்பாக சோதை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஹிமாலயனில் முன்புற வின்ட்ஷீல்டு, ஜெர்ரி கேன் ஹோல்டர் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஃபைபரால் தயாரிக்கப்பட்ட டேங்க் எக்ஸ்டென்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறிய அளவிலான ஆஃப் ரோடு சாகசத்திற்கு ஏற்ற வகையில் மட்டும் அமைந்திருக்கலாம்.

மற்றபடி கிளஸ்ட்டர் வழக்கம் போலவோ அல்லது டிரிப்பர் நேவிகேஷன் நீக்கப்பட்டு முந்தைய கிளஸ்ட்டர் அமைப்பினை கொடுத்திருக்கலாம். டெயில் பகுதியில் சிறிய அளவில் மாற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம்.

ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 பைக்கில் 6,500 rpm -யில் 24.3 ஹெச்பி பவர், 4,000-4,500 rpm -யில் அதிகபட்சமாக டார்க் 32 என்எம் வெளிப்படுத்தும் 411 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

image source

2021 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவின் பிரசத்தி பெற்ற அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் மாடலான 2021 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் டிரிப்பர் நேவிகேஷன் உட்பட புதிய நிறங்களை பெற்று ரூ. லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹிமாலயனில் 6,500 rpm -யில் 24.3 ஹெச்பி பவர், 4,000-4,500 rpm -யில் அதிகபட்சமாக டார்க் 32 என்எம் வெளிப்படுத்தும் 411 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

2021 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாற்றங்கள் என்ன ?

மிராஜ் சில்வர், கிராணைட் கருப்பு உட்பட பைன் க்ரீன் நிறம் என மூன்று புதிய நிறங்கள் பெற்றிருப்பதுடன்,  புதுப்பிக்கப்பட்ட இருக்கை, விண்ட்ஷீல்டு, குறிப்பாக டிசைனில், உயரமான ரைடர்களின் காலின் முட்டி பகுதி பெட்ரோல் டேங்க் அருகே கொடுக்கப்பட்டுள்ள மெட்டல் ஃபிரேமில் உரசுவதாக பெறப்பட்ட குறையை களைவதற்கான நோக்கில் இந்த பகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கிளஸ்ட்டர் பகுதியில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போனுடன் ப்ளூடூத் வாயிலாக இணைக்கப்பட்டு டர்ன் பை டர்ன் நேவிகேஷன் அம்சங்களை கூகுள் நிறுவன உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள டிரிப்பர் நேவிகேஷன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பாக இந்த வசதி மீட்டியோர் 350 மாடலில் இடம்பெற்றிருந்தது.

2021 Royal Enfield Himalayan விலை பட்டியல்

Himalayan – ரூ.2,36,000 (Siver,gery)

Himalayan – ரூ.2,39,999 (Lake Blue, Rock Red,Granite Black)

Himalayan – ரூ.2,44,000 (Pine Green)

(ஆன்ரோடு தமிழ்நாடு)

2021 ராயல் என்பீல்ட் ஹிமாலயன் பைக்கின் எதிர்பார்ப்புகள்

நடப்பு ஜனவரி மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் ஹிமாலயன் அட்வென்ச்சர் ரக பைக்கில் டிரிப்பர் நேவிகேஷன் உட்பட, புதிய நிறங்கள் மற்றும் சிறிய அளவிலான மேம்பாடுகளை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சில நாட்களுக்கு முன்பாக சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஹிமாலயனின் பைக்கில் டிரிப்பர் நேவிகேஷன் இடம்பெறுவதற்கான கிளஸ்ட்டர் உள்ள படங்கள் வெளியான நிலையில், தற்போது வெளிவந்துள்ள தகவல் ஜனவரி 21 ஆம் தேதி புதிய ஹிமாலயன் வெளியிடப்படலாம் என கூறப்படுகின்றது.

டிரிப்பர் நேவிகேஷன்

சமீபத்தில் வெளியான மீட்டியோர் 350 பைக்கில் இடம்பெற்றிருந்த ஸ்மார்ட்போன் மூலமாக ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் கூகுள் நிறுவனத்தின் ஆதரவில் வடிவமைக்கப்பட்ட டர்ன் பை டர்ன் நேவிகேஷன் அமைப்பினை பெற்றிருக்கும்.

மற்றபடி, பிஎஸ்-6 இன்ஜின் மாற்றத்தில் எந்த மாற்றங்ளும் இருக்க வாய்ப்பில்லை. 23.5 ஹெச்பி பவர் மற்றும் டார்க் 32 என்எம் வெளிப்படுத்தும் 411 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

கூடுதல் நிறங்கள், தற்போது கிடைத்து வருகின்ற நீக்கப்படலாம் என சில தகவல்கள் குறிப்பிடும் நிலையில், புதிதாக வெள்ளை நிறம், கருப்பு உட்பட புதிய பைன் க்ரீன் நிறம் என மூன்று நிறங்கள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.

குறிப்பாக டிசைனில், உயரமான ரைடர்களின் காலின் முட்டி பகுதி பெட்ரோல் டேங்க் அருகே கொடுக்கப்பட்டுள்ள மெட்டல் ஃபிரேமில் மோதுவதாக பெறப்பட்ட குறையை களைவதற்கான நோக்கில் இந்த ஃபிரேம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட 2021 ராயல் என்பீல்ட் ஹிமாலயன், தற்போதைய ரூ.1.91-ரூ.1.96 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையை விட சற்று கூடுதலாக துவங்கலாம்.

image source

2021 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் ஸ்பை படங்கள்

சமீபத்தில் வெளியான மீட்டியோரில் இடம்பெற்றிருந்த டிரிப்பர் நேவிகேஷன் பெற்ற 2021 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் சாலை சோதனை ஓட்ட படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது.

தோற்ற அமைப்பில் பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லாமல், தற்போது விற்பனையில் கிடைக்கின்ற ஹிமாலயனின் பல்வேறு அம்சங்களில் எந்த மாற்றங்களும் இல்லாமல், கூடுதலான சில நிறங்களை மட்டும் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

ஹிமாலயன் பைக்

ஹிமாலயனில் உள்ள 23.5 ஹெச்பி பவர் மற்றும் டார்க் 32 என்எம் வெளிப்படுத்தும் 411 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

தற்போது வெளியான மீட்டியோர் 350 பைக்கில் உள்ள கூகுள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் கொண்ட ஸ்மார்ட்போன் மூலம் ப்ளூடுத் வாயிலாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியுடன் வழங்கப்பட உள்ள டிரிப்பர் நேவிகேஷன் கொண்டிருக்கும். தற்போது உள்ள ஹிமாலயன் கிளஸ்ட்டரில் கூடுதலாக இதற்கான ஸ்லால்ட் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ள மாடலில் இந்த நேவிகேஷன் இடம்பெற்றிருக்கின்றது.

அட்வென்ச்சர் ஸ்டைல் பெற்ற என்பீல்ட் ஹிமாலயன் பைக் மிக சிறப்பான திறனை பெற்ற மாடலாக இந்திய சந்தையில் விளங்குகின்றது.

பட உதவி – gaadiwaadi

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350, கிளாசிக் 350 & ஹிமாலயன் பைக்குகள் விலை உயர்வு

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற புல்லட் 350, கிளாசிக் 350 மற்றும் அட்வென்ச்சர் ரக ஹிமாலயன் பைக்குகளின் விலையை ரூ.1,800 முதல் ரூ.2,800 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் ராயல் என்ஃபீல்டின் இன்ட்ர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 பைக்குகளின் விலை ரு.1,837 வரை உயர்த்தப்பட்டிருக்கின்றது. அதனை தொடர்ந்து மற்ற மாடல்களும் விலை உயர்ந்துள்ளது.

புல்லட் 350 மோட்டார் சைக்கிள் விலை அதிகபட்சமாக ரூ.2,800 வரை உயர்த்தப்பட்டு இப்போது குறைந்த விலை புல்லட் மாடல் ரூ.1.27 லட்சம் முதல் துவங்கி, ஸ்டாண்டர்டு புல்லட் ரூ.1.33 லட்சத்திலும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் பெற்ற புல்லட் எலக்ட்ரா ரூ.1.42 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

பிரசத்தி பெற்ற கிளாசிக் 350 பைக்கின் விலை அதிகபட்சமாக ரூ.1800 வரை உயர்த்தப்பட்டு, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்ற மாடல் ரூ.1.61 லட்சம் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற மாடல் ரூ.1.68 லட்சம் – ரூ.1.86 லட்சம் ஆக அமைந்துள்ளது.

royal enfield Himalayan blue

அடுத்தப்படியாக, அட்வென்ச்சர் ஸ்டைல் ஹிமாலயன் பைக்கின் விலை ரூ.1,800 வரை உயர்த்தப்பட்டு, தற்போது ரூ. 1.91 லட்சம் முதல் ரூ.1.95 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

விரைவில், புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 விற்பனைக்கு வெளியாக உள்ளது.

 

பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் விற்பனைக்கு வெளியானது

royal enfield Himalayan

ரூ.1.86 லட்சம் ஆரம்ப விலையில் பிஎஸ்6 என்ஜின் பெற்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக மூன்று புதிய நிறங்களையும் சில மேம்பட்ட வசதிகளையும் கொண்டுள்ளது.

பிஎஸ்4 மாடலை விட பவர் 1.2 ஹெச்பி வரை குறைக்கப்பட்டு தற்போது 23.5 ஹெச்பி பவர் மற்றும் டார்க்கில் எந்த மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து 32 என்எம் வெளிப்படுத்தும் 411 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

விற்பனையில் உள்ள மாடலை விட மிக சிறப்பான பிரேக்கிங் திறனை வழங்கும் நோக்கில் பிரேக்கிங் அமைப்பின் பெர்ஃபாமென்ஸ் அதிகரிக்கப்பட்டு, ஆஃப் ரோடு டிரைவிங்கிற்கு ஏற்ற சுவிட்சபிள் ஏபிஎஸ், ஆரம்ப அறிமுகத்தின் போது இடம்பெற்றிருந்த ஹசார்ட் விளக்குகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரிலும் வெள்ளை நிற பேக்லைட் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

royal enfield Himalayan blue

மேலும் இந்த பைக்கின் சைட் ஸ்டேண்டு அமைப்பில் வாடிக்கையாளர்ளின் குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் மாற்றியமைத்து விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

பிஎஸ் 6 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் விலை பட்டியல்

Himalayan BS-VI – Snow White ரூ.1,86,811

Himalayan BS-VI – Granite Black ரூ.1,86,811

Himalayan BS-VI – Sleet Grey ரூ.1,89,565

Himalayan BS-VI – Gravel Grey ரூ.1,89,565

Himalayan BS-VI – Lake Blue ரூ.1,91,401

Himalayan BS-VI – Rock Red ரூ.1,91,401

விரைவில்.., 2020 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 வெளியாகிறது

re Himalayan

ஹிமாலயன் அட்வென்ச்சர் ரக பைக் மாடலை பிஎஸ்6 என்ஜின் மற்றும் மூன்று புதிய நிறங்களுடன் சில கூடுதல் வசதிகளை பெற்றதாக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளர் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளனர்.

கடந்த 2019 இஐசிஎம்ஏ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட மூன்று புதிய நிறங்களான ப்ளூ, கிரே மற்றும் ரெட் ஆகியவற்றுடன் முந்தைய நிறங்களிலும் கிடைக்கலாம். குறிப்பாக பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான 410 சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். விற்பனையில் உள்ள மாடலை விட மிக சிறப்பான பிரேக்கிங் திறனை வழங்கும் நோக்கில் பிரேக்கிங் அமைப்பின் பெர்ஃபாமென்ஸ் அதிகரிக்கப்பட்டு, சுவிட்சபிள் ஏபிஎஸ், ஆரம்ப அறிமுகத்தின் போது இடம்பெற்றிருந்த ஹசார்ட் விளக்குகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரிலும் சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிய பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு ஹிமலாயன் பைக் மாடலுக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.6,000 வரை விலை உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளது. சமீபத்தில், இந்நிறுவனத்தின் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பாரத் ஸ்டேஜ் 6 மாடல் வெளியிட்டுள்ளது.

பிஎஸ் 6 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் விலை பட்டியல்

Himalayan BS-VI – Snow White ரூ.1,86,811

Himalayan BS-VI – Granite Black ரூ.1,86,811

Himalayan BS-VI – Sleet Grey ரூ.1,89,565

Himalayan BS-VI – Gravel Grey ரூ.1,89,565

Himalayan BS-VI – Lake Blue ரூ.1,91,401

Himalayan BS-VI – Rock Red ரூ.1,91,401

 

2020 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் டீசர் வெளியீடு

Royal Enfield Himalayan

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அட்வென்ச்சர் ரக மாடலான ஹிமாலயன் பிஎஸ் 6 என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. தற்போது விற்பனையில் கிடைக்கின்ற பிஎஸ் 4 மாடலை விட ரூ.15,000 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கலாம்.

இந்நிறுவனம் ட்வீட்டரில் வெளியிட்ட டீஸர் வீடியோ மூலம், 2020 ஹிமாலயன் பைக் பிஎஸ் 6 இணக்கமான என்ஜினை பெற்று, விற்பனையில் உள்ள நிறங்களை விட கூடுதலான நிறங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் கிளஸ்ட்டர், சுவிட்சபிள் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகளுடன் பல மேம்பாடுகளை கொண்டிருக்கும்.

410 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு ஏற்றதாகவும், தற்போதைய மாடலுடன் ஒப்பீடும் போது சற்று குறைவான சக்தியை பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். மற்றபடி கியர்பாக்சில் எந்த மாற்றங்களும் இருக்காது. அடுத்த சில நாட்களுக்குள் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

சமீபத்தில் இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கிளாசிக் 350 மாடலில் பிஎஸ் 6 என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டது.

புதிய நிறங்களில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் காட்சிப்படுத்தப்பட்டது – 2019 இஐசிஎம்ஏ

 Royal Enfield Himalayan

2019 இஐசிஎம்ஏ கண்காட்சியில் புதிதான மூன்று நிறங்களை பெற்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக் மாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் புதிய நிறத்துடன் பாரத் 6 மாசு உமிழ்வுக்கு ஏற்ற என்ஜினுடன் விற்பனைக்கு வெளியாகலாம்.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் பைக் ‘கிராவல் கிரே’ என்ற வண்ணத்தில் தோற்றமுடைய மேட் பெயிண்டை டேங்க் மற்றும் ஃபென்டர்களில் இந்த நிறத்தை ப் பெற்று மீதமுள்ள மோட்டார் சைக்கிள் கருப்பு நிறத்தை கொண்டுள்ளது. அடுத்ததாக ‘ராக் ரெட்’ மற்றும் ‘லேக் ப்ளூ’. இப்போது ராக் ரெட் நிற மாடலின் எரிபொருள் கருப்பு  மற்றும் சிவப்பு நிறங்களை பெற்றுள்ளது. அதே நேரத்தில் லேக் ப்ளூ வெள்ளை மற்றும் நீல நிறத்தையும். கூடுதலாக, இந்த இரண்டு வண்ணங்களிலும் பிரேம் கார்டு மற்றும் கிராப் ரெயில்கள் மாடலுக்கு ஏற்ற நிறத்தைப் பெற்றுள்ளது.

இந்த மாடல் , ஃப்யூவல் இன்ஜெக்‌ஷனுடன் பெற்ற 24.5 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 411 சிசி லாங்க் ஸ்டோர்க் எஞ்சின் 32 என்எம் டார்க் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும்போது புதிய நிறங்களுடன் பிஎஸ் 6 மேம்பாட்டை கொண்டிருக்கும்.

 Royal Enfield Himalayan  Royal Enfield Himalayan

image source – Travelmoto youtube