ஸ்விஃப்ட் முதல் எர்டிகா வரை.., டாப் 10 கார்கள் – நவம்பர் 2020

sonet suv features

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற கார்களில் நவம்பர் 2020-ல் டாப் 10 இடங்களை பிடித்த பட்டியலில் தொடர்ந்து மாருதி சுசூகி முன்னிலை வகித்து வருகின்றது. அதனை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் உள்ளது.

4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் கடந்த நவம்பர் 2020-ல் விட்டாரா பிரெஸ்ஸா காரை வீழ்த்தி சொனெட் எஸ்யூவி 11,417 யூனிட்டுகளை விற்பனை செய்து முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. அதனை தொடர்ந்து வென்யூ, விட்டாரா பிரெஸ்ஸா, நெக்ஸான் போன்றவை இடம்பெற்றுள்ளது.

பண்டிகை கால நிறைவை ஒட்டி இந்திய ஆட்டோமொபைல் சந்தை மந்தமான விற்பனை எண்ணிக்கையை நவம்பரில் பதிவு செய்துள்ளது. கிரெட்டா எஸ்யூவி காரை தொடர்ந்து கியா செல்டோஸ் விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது. காம்பேக்ட் எஸ்யூவி சந்தை உட்பட மற்ற பிரிவிலும் தென் கொரியா நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் – நவம்பர் 2020

வரிசை தயாரிப்பாளர்/ மாடல் நவம்பர் 2020
1 மாருதி ஸ்விஃப்ட் 18,498
2 மாருதி பலேனோ 17,872
3 மாருதி வேகன் ஆர் 16,256
4 மாருதி ஆல்டோ 15,321
5 மாருதி டிசையர் 13,536
6 ஹூண்டாய் கிரெட்டா 12,017
7 கியா சொனெட் 11,417
8 மாருதி ஈக்கோ 11,183
9 ஹூண்டாய் கிரான்ட் i10 Nios 10,936
10 மாருதி எர்டிகா 9,557

 

web title : Top 10 selling Cars in India for November 2020

அக்டோபர் 2020 மாத விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள்

இந்திய சந்தையில் பண்டிகை கால விற்பனை துவங்கியதால் 2020 அக்டோபர் மாத டாப் 10 ஸ்கூட்டர்கள் விற்பனை எண்ணிக்கையில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அமோக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா விற்பனை எண்ணிக்கை 2,39,570 பதிவு செய்து டாப் 10 ஸ்கூட்டர்களில் முதன்மையான ஸ்கூட்டராக விளங்குகின்றது. இதற்கு அடுத்தப்படியாக, டிவிஎஸ் ஜூபிடர் மாடல் விற்பனை எண்ணிக்கை 74,159 ஆக பதிவு செய்துள்ளது.

டாப் 10 ஸ்கூட்டர்கள் – அக்டோபர் 2020

வ.எண் தயாரிப்பாளர் அக்டோபர் 2020
1. ஹோண்டா ஆக்டிவா 2,39,570
2. டிவிஎஸ் ஜூபிடர் 74,159
3. சுசூகி ஆக்செஸ் 52,441
4. ஹோண்டா டியோ 44,046
5. டிவிஎஸ் என்டார்க் 31,524
6. ஹீரோ டெஸ்ட்னி 125 26,714
7. ஹீரோ பிளெஷர் 23,392
8. ஹீரோ மேஸ்ட்ரோ 23,240
9. யமஹா ரே 15,748
10. யமஹா ஃபேசினோ 13,360

 

125சிசி சந்தை பிரிவில் சுசூகி ஆக்செஸ், டிவிஎஸ் என்டார்க் 125, யமஹா ரே, யமஹா ஃபேசினோ மற்றும் ஹீரோ டெஸ்ட்னி 125 போன்றவை இடம்பெற்றுள்ளது.

web title : Top 10 selling Scooters for October 2020

விற்பனனையில் டாப் 10 டூ விலர்கள் – அக்டோபர் 2020

கடந்த அக்டோபர் 2020 மாத விற்பனையில் டாப் 10 டூ வீலர்கள் பட்டியலில் முதலிடத்தை ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் எண்ணிக்கை 3,15,798 ஆக பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஹெச்எஃப் டீலக்ஸ் மாடல் விளங்குகின்றது.

இந்தியாவில் கிடைக்கின்ற மொபெட் மாடல்களில் ஒன்றான டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மாடல் 80,268 யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. பஜாஜ் பல்சர் பைக்குகள் ஒட்டுமொத்தமாக 1,38,218 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

டாப் 10 பைக்குகள் – அக்டோபர் 2020

வ.எண் தயாரிப்பாளர் அக்டோபர் 2020
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் 3,15,798
2. ஹீரோ HF டீலக்ஸ் 2,33,061
3. பஜாஜ் பல்சர் 1,38,218
4. ஹோண்டா சிபி ஷைன் 1,18,547
5. டிவிஎஸ் XL சூப்பர் 80,268
6. ஹீரோ கிளாமர் 78,439
7. ஹீரோ பேஸன் 75,540
8. பஜாஜ் பிளாட்டினா 60,967
9. பஜாஜ் சிடி 51,052
10. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 41,953

 

web title : Top 10 selling 2 wheelers of October 2020

விற்பனையில் டாப் 10 கார்கள் அக்டோபர் 2020

நவராத்திரி துவங்கி தீபாவளி என பண்டிகை காலத்தை முன்னிட்டு வாகன விற்பனை எண்ணிக்கை கனிசமாக உயர தொடங்கியுள்ள நிலையில் டாப் 10 கார்கள் பட்டியலில் இடம்பெற்ற மாடல்களை மாதந்திர அக்டோபர் 2020 விற்பனை விபரத்தை அறிந்து கொள்ளலாம்.

தொடர்ந்து இந்திய பயணிகள் வாகன சந்தையில் மாருதி சுசூகி கார்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஹூண்டாய் மற்றும் கியா என இரு நிறுவனங்களும் காம்பேக்ட் எஸ்யூவி சந்தையை கைபற்ற துவங்கியுள்ளன.

மொத்தமுள்ள 10 இடங்களில் 7 இடங்களை மாருதியும், 3 இடங்களை ஹூண்டாய் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. புதிதாக வந்த கியா நிறுவனத்தின் சொனெட் எஸ்யூவி அமோகமான வரவேற்பினை பெற்று பட்டியலில் இடம்பிடித்திருப்பதுடன் காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு அடுத்தப்படியாக உள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் – அக்டோபர் 2020

வரிசை தயாரிப்பாளர்/ மாடல் அக்டோபர் 2020
1 மாருதி ஸ்விஃப்ட் 24,589
2 மாருதி பலேனோ 21,971
3 மாருதி வேகன் ஆர் 18,703
4 மாருதி ஆல்டோ 17,850
5 மாருதி டிசையர் 17,675
6 ஹூண்டாய் கிரெட்டா 14,023
7 ஹூண்டாய் கிரான்ட் i10 Nios 14,003
8 மாருதி ஈக்கோ 13,309
9 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 12,087
10 கியா சொனெட் 11,721

 

web title : Top 10 Selling Cars of October 2020

விற்பனையில் சரித்திர சாதனையை படைத்த ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தனது மாதந்திர விற்பனை எண்ணிக்கையில் முதன்முறையாக 806,848 இரு சக்கர வாகனங்களை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிறுவன வரலாற்றில் முதன்முறையாக 8 லட்சத்திற்க்கும் கூடுதலான மாதந்திர விற்பனையை பதிவு செய்துள்ள நிலையில், முந்தைய அக்டோபர் 2019 ஆண்டுடன் ஒப்பீடுகையில் 35 சதவீத கூடுதல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த அக்டோபர் 2019-ல் 599,248 ஆக பதிவு செய்திருந்தது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், அக்டோபர் 2020-ல் உள்நாட்டு விற்பனை 34.7 சதவீதம் அதிகரித்து 791,137 யூனிட்டுகளை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்நிறுவனத்தின் ஏற்றுமதி ஒட்டுமொத்த அளவுகளில் 28.14 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஹீரோ கடந்த மாதம் 15,711 இருசக்கர வாகனங்களை அனுப்பியது. ஒரு வருடத்திற்கு முன்பு 12,260 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்திருந்தது.

2020 அக்டோபரில் ஹீரோவின் 732,498 ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 32.53 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. இதற்கிடையில், ஸ்கூட்டர் விற்பனை கடந்த மாதம் 74,350 ஆக இருந்தது. இது 2019 அக்டோபரில் விற்கப்பட்ட 46,576 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 59.63 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Web title : Hero Motocorp achieves Record Sales of over 8 lakh milestone

5 ஆண்டுகளில் 2 லட்சம் கிரெட்டா கார்களை ஏற்றுமதி செய்த ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எஸ்யூவி கார் மாடலான கிரெட்டா விற்பனைக்கு வெளியிடப்பட்டு 5 ஆண்டுகளுக்குள் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது.

4 கண்டங்களில் சுமார் 88 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற கிரெட்டா எஸ்யூவி இந்தியாவில் உள்ள தமிழக ஆலையில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. புதிய மற்றும் முந்தைய கிரெட்டா என இரண்டும் மொத்தமாக 2,00,000 யூனிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனம் அதிக கார்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்து வந்த நிலையில் அதனை இப்போது ஹூண்டாய் இந்தியா முந்தியுள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா தற்போது 10 மாடல்களை மேட்-இன்-இந்தியா’ கார்களாக ஏற்றுமதி செய்கிறது. அடாஸ் (சான்ட்ரோ), கிராண்ட் i10, எக்ஸ்சென்ட், கிராண்ட் i10 (நியோஸ்) & கிராண்ட் i10 (ஆரா), எலைட் i20, i20 ஏக்டிவ், அசென்ட் (வெர்னா), வென்யூ மற்றும் கிரெட்டா போன்ற மாடல்கள் 88 நாடுகளுக்கு ‘ஏற்றுமதி செய்கிறது.

ஹூண்டாயின் ஒட்டுமொத்த ஏற்றுமதி எண்ணிக்கை –

மார்ச் 2008 – 5,00,000
பிப்ரவரி 2010 – 10,00,000
மார்ச் 2014 – 20,00,000.

web title : Made in India Hyundai CRETA export cross 2 lakh milestone

ஸ்விஃப்ட் முதல் ஐ20 வரை.., விற்பனையில் டாப் 10 கார்கள் – செப்டம்பர் 2020

இந்தியாவில் கோவிட்-19 ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி சீராக அதிகரிக்க துவங்கியுள்ளது. முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை 22,643 ஆக பதிவு செய்துள்ளது. விற்பனையில் டாப் 10 இடங்களை பிடித்த கார்களின் பட்டியலை தொடர்ந்து காணலாம்.

சமீபத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட கியா சொனெட் எஸ்யூவி 4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற காம்பாக்ட் சந்தையில் அதிகபட்ச விற்பனை எண்ணிக்கையாக 9266 ஆக பதிவு செய்துள்ளது. அடுத்தப்படியாக விட்டாரா பிரெஸ்ஸா 9,153 எண்ணிக்கையில் பதிவு செய்துள்ளது.

மொத்தமுள்ள 10 இடங்களில் 7 இடங்களை மாருதியும், 3 இடங்களை ஹூண்டாய் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. ஸ்விஃப்ட் காரின் விற்பனை கடந்த செப்டம்பர் 2019 உடன் ஒப்பீடுகையில் 75 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் – செப்டம்பர் 2020

வரிசை தயாரிப்பாளர்/ மாடல் செப்டம்பர் 2020
1 மாருதி ஸ்விஃப்ட் 22,643
2 மாருதி பலேனோ 19,433
3 மாருதி ஆல்டோ 18,246
4 மாருதி வேகன் ஆர் 17,581
5 மாருதி டிசையர் 12,325
6 ஹூண்டாய் கிரெட்டா 12,235
7 மாருதி ஈக்கோ 11,220
8 ஹூண்டாய் கிரான்ட் i10 Nios 10,385
9 மாருதி எர்டிகா 9,982
10 ஹூண்டாய் எலைட் ஐ20 9,852

 

ஆக்டிவா முதல் கிரேஸியா வரை.., டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஆகஸ்ட் 2020

இந்தியாவில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் விற்பனை பரவலாக உயர்ந்து வரும் நிலையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா எண்ணிக்கை 1,93,607 ஆக பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து டிவிஎஸ் ஜூபிடர் மாடல் விற்பனை எண்ணிக்கை 52,378 ஆக பதிவு செய்துள்ளது.

ஸ்கூட்டரின் 125சிசி சந்தையில் சுசூகி ஆக்செஸ், டிவிஎஸ் என்டார்க் யமஹா ரே, யமஹா ஃபேசினோ, ஹீரோ டெஸ்ட்னி 125 மற்றும் கிரேஸியா 125 போன்றவை இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் சுசூகி ஆக்செஸ் ஸ்கூட்டரின் எண்ணிக்கை 41,484 ஆக பதிவு செய்துள்ளது.

டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஆகஸ்ட் 2020

வ.எண் தயாரிப்பாளர் ஆகஸ்ட் 2020
1. ஹோண்டா ஆக்டிவா 193,607
2. டிவிஎஸ் ஜூபிடர் 52,378
3. ஹோண்டா டியோ 42,957
4. சுசூகி ஆக்செஸ் 41,484
5. டிவிஎஸ் என்டார்க் 19,918
6. ஹீரோ பிளெஷர் 16,935
7. யமஹா ஃபேசினோ 15,668
8. யமஹா ரே 15,620
9. ஹீரோ டெஸ்ட்னி 125 13,609
10. ஹோண்டா கிரேஸியா 12,588

 

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஆகஸ்ட் 2020

bs6 hero splendor plus

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்ப்ளெண்டர் ஆகஸ்ட் 2020 மாத விற்பனை எண்ணிக்கையில் 2,32,301 ஆக பதிவு செய்து டாப் 10 பைக்குகள் பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. 10 இடங்களில் ஹீரோவின் நான்கு மாடல்கள் இடம்பெற்றுள்ளது.

125சிசி சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் மாடல் 1,06,133 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து ஹீரோவின் கிளாமர் பைக் 54,315 ஆக எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இந்த வரிசையில் டிவிஎஸ் நிறுவனத்தின் மொபெட் மாடல் XL எண்ணிக்கை 70,126 ஆக உள்ளது.

டாப் 10 பைக்குகள் – ஆகஸ்ட் 2020

வ.எண் தயாரிப்பாளர் ஆகஸ்ட் 2020
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் 2,32,301
2. ஹீரோ HF டீலக்ஸ் 1,77,168
3. ஹோண்டா சிபி ஷைன் 1,06,133
4. பஜாஜ் பல்சர் 87,202
5. டிவிஎஸ் XL சூப்பர் 70,106
6. ஹீரோ கிளாமர் 54,315
7. ஹீரோ பேஸன் 52,471
8. பஜாஜ் பிளாட்டினா 40,294
9. பஜாஜ் சிடி 34,863
10. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 34,791

 

10வது இடத்தில் பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடலாக விளங்குகின்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடல் விற்பனை எண்ணிக்கை 34,791 ஆக உள்ளது.

ஆகஸ்ட் 2020-ல் விற்பனையில் கலக்கிய டாப் 10 கார்கள்

கோவிட்-19 பரவல் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் படிப்படியாக விற்பனை எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் டாப் 10 கார்கள் பட்டியிலில் மாருதி சுசுகி நிறுவனம் 7 இடங்களை கைப்பற்றியுள்ளது. மற்ற மூன்று இடங்களில் ஹூண்டாய் மற்றும் கியா இடம் பிடித்துள்ளது.

தொடர்ந்து மாருதி சுசுகியின் ஸ்விஃப்ட் கார் விற்பனை எண்ணிக்கையில் 14,869 பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து ஆல்டோ மற்றும் வேகன் ஆர் கார் இடம் பிடித்துள்ளது. மாருதியை தவிர ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா எஸ்யூவி 11,758 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த பட்டியலில் செல்டோஸ் 7வது இடத்தில் உள்ளது.

காம்பேக்ட் ரக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற விட்டாரா பிரெஸ்ஸா, வென்யூ போன்ற எஸ்யூவிகளில் முதல் 10 இடங்களில் இடம்பிடிக்கவில்லை.

டாப் 10 கார்கள் – ஆகஸ்ட் 2020

வரிசை தயாரிப்பாளர்/ மாடல் ஆகஸ்ட் 2020
1 மாருதி ஸ்விஃப்ட் 14,869
2 மாருதி ஆல்டோ 14,397
3 மாருதி வேகன் ஆர் 13,770
4 மாருதி டிசையர் 13,629
5 ஹூண்டாய் கிரெட்டா 11,758
6 மாருதி பலேனோ 10,742
7 கியா செல்டோஸ் 10,655
8 ஹூண்டாய் கிரான்ட் i10 10,190
9 மாருதி எர்டிகா 9,302
10 மாருதி ஈக்கோ 9,115