ஹீரோ மோட்டோகார்ப் பைக் விலையை ரூ.2,000 வரை உயருகின்றது.

வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களின் விலையை அதிகபட்சமாக ரூ.2000 வரை விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் தனது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ஏப்ரல் 5 முதல் 2,000 ரூபாய் வரை உயர்த்தப் போவதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் மூலப் பொருட்களின் விலைகளின் பாதிப்பை ஓரளவு ஈடுகட்ட இந்த விலைத் திருத்தம் அவசியம் என்று நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் அதன் முழு தயாரிப்பு வரிசையின் எக்ஸ்-ஷோரூம் விலையில் மேல்நோக்கி திருத்தம் செய்யும். விலை திருத்தம் ரூ. 2,000 வரை இருக்கும், மேலும் சரியான அளவு அதிகரிப்பு குறிப்பிட்ட மாடல்கள் மற்றும் சந்தைக்கு உட்பட்டது.

ஆல்டோ முதலிடம்.., விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2021

Hyundai Venue imt gearbox

Hyundai Venue imt

2021 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் டாப் 10 இடங்களை பிடித்த கார்களின் பட்டியலில் ஆல்டோ முதலிடத்தில் உள்ள நிலையில், 7 இடங்களை மாருதி சுசூகி பெற்றுள்ளது. இது தவிர ஹூண்டாய் நிறுவனம் 3 இடங்களை பிடித்துள்ளது.

மாருதியின் ஆல்ட்டோ காரின் விற்பனையில் எண்ணிக்கை 18,260 ஆக பதிவு செய்துள்ளது. குறிப்பாக கிரெட்டா, வென்யூ விற்பனையில் முன்னிலை வகிப்பதுடன் முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2021

வரிசை தயாரிப்பாளர்/ மாடல் ஜனவரி 2021
1 மாருதி ஆல்டோ 18,260
2 மாருதி ஸ்விஃப்ட் 17,180
3 மாருதி வேகன் ஆர் 17,165
4 மாருதி பலேனோ 16,648
5 மாருதி டிசையர் 15,125
6 ஹூண்டாய் கிரெட்டா 12,284
7 ஹூண்டாய் வென்யூ 11,779
8 மாருதி ஈக்கோ 11,680
9 ஹூண்டாய் கிராண்ட் i10 Nios 10,865
10 மாருதி பிரெஸ்ஸா 10,623

 

முதலிடத்தில் ஆக்டிவா.., டாப் 10 ஸ்கூட்டர்கள் – டிசம்பர் 2020

இந்திய சந்தையில் தொடர்ந்து ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை 1,34,077 ஆக பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து சுசுகி ஆக்செஸ் ஸ்கூட்டர் 40,154 ஆக பதிவு செய்துள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக, டிவிஎஸ் ஜூபிடர் மாடல் விற்பனை எண்ணிக்கை 38,435 ஆக பதிவு செய்துள்ளது. மற்றபடி 125 சிசி சந்தையில், சுசூகி ஆக்செஸ், டிவிஎஸ் என்டார்க் 125, யமஹா ரே, யமஹா ஃபேசினோ மற்றும் ஹீரோ டெஸ்ட்னி 125 ஆகியவை இடம்பிடித்துள்ளது.

டாப் 10 ஸ்கூட்டர்கள் – டிசம்பர் 2020

வ.எண் தயாரிப்பாளர் டிசம்பர் 2020
1. ஹோண்டா ஆக்டிவா 1,34,077
2. சுசூகி ஆக்செஸ் 40,154
3. டிவிஎஸ் ஜூபிடர் 38,435
4. டிவிஎஸ் என்டார்க் 25,692
5. ஹோண்டா டியோ 22,025
6. ஹீரோ பிளெஷர் 19,090
7. யமஹா ரே 8,690
8. யமஹா ஃபேசினோ 6,180
9. ஹீரோ டெஸ்ட்னி 125 5,789
10. டிவிஎஸ் பெப்+ 4,481

 

டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – டிசம்பர் 2020

கடந்த 2020 ஆம் ஆண்டின் டிசம்பர் இறுதி மாதத்தில் முதல் 10 இடங்களை பிடித்த இரு சக்கர வாகனங்களை பற்றி இங்கு காணலாம். தொடர்ந்து 1,94,390 யூனிட்டுகளை விற்பனை செய்து முதலிடத்தில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக் இடம் பிடித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பீடுகையில் ஆட்டோமொபைல் சந்தை சற்று வீழ்ச்சி அடைந்திருந்தாலும், 2019 டிசம்பர் மாதத்துடன் ஒப்பீடுகையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

டாப் 10 பைக்குகள் – டிசம்பர் 2020

வ.எண் தயாரிப்பாளர் டிசம்பர் 2020
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் 1,94,390
2. ஹீரோ HF டீலக்ஸ் 1,41,168
3. பஜாஜ் பல்சர் 75,421
4. டிவிஎஸ் XL சூப்பர் 59,923
5. ஹோண்டா சிபி ஷைன் 56,003
6. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 39,321
7. ஹீரோ பேஸன் 36,624
8. பஜாஜ் பிளாட்டினா 30,740
9. டிவிஎஸ் அப்பாச்சி 26,535
10. ஹீரோ கிளாமர் 19,238

 

விற்பனையில் முந்திய ஆல்டோ.., டாப் 10 கார்கள் – டிசம்பர் 2020

கடந்த 2020 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வளர்ச்சியை நோக்கி பயணித்துள்ள நிலையில் டாப் கார்கள் பட்டியலில், மாருதியின் ஆல்ட்டோ காரின் விற்பனையில் எண்ணிக்கை 18,140 ஆக பதிவு செய்துள்ளது.

டாப் 10 இடங்களில் ஹூண்டாய் நிறுவனத்தை தவிர மற்றபடி வேறு எந்த நிறுவனங்களும் இடம் பெறவில்லை. 7 இடங்களை மாருதியும், 3 இடங்களை ஹூண்டாய் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ளதால் குறைந்த எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. எஸ்யூவி சந்தையை ஹூண்டாய் நிறுவனம் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக கிரெட்டா, வென்யூ விற்பனையில் முன்னிலை வகிப்பதுடன் முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் – டிசம்பர் 2020

வரிசை தயாரிப்பாளர்/ மாடல் டிசம்பர் 2020
1 மாருதி ஆல்டோ 18,140
2 மாருதி ஸ்விஃப்ட் 18,131
3 மாருதி பலேனோ 18,030
4 மாருதி வேகன் ஆர் 17,684
5 மாருதி டிசையர் 13,868
6 ஹூண்டாய் வென்யூ 12,313
7 மாருதி பிரெஸ்ஸா 12,251
8 மாருதி ஈக்கோ 11,215
9 ஹூண்டாய் கிரெட்டா 10,592
10 ஹூண்டாய் கிராண்ட் i10 Nios 10,263

ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை பெற்ற உலகின் முதல் இரு சக்கர வாகன தயாரிப்பாளர் – பஜாஜ் ஆட்டோ

1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீடு பெற்ற உலகின் முதல் இரு சக்கர வாகன உற்பத்தியாளர் என்ற பெருமையை பஜாஜ் ஆட்டோ பெற்றுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ சமீபத்தில் ரூ.650 கோடி முதலீட்டில் நான்காவது ஆலையை கட்டமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் எந்த ஒரு சர்வதேச இரு சக்கர வாகன நிறுவனமும் இதற்கு முன் 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை பெற்றதில்லை.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் தனது புதிய உச்ச விலையான 3,479 ரூபாயை அடைந்தது மூலம், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு சுமார் 1,00,670.76 கோடி அளவிலான உயர்வை அடைந்துள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளராகவும், மூன்று சக்கர வாகன தயாரிப்பில் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் பஜாஜ் ஆட்டோ உள்ளது. இந்நிறுவனம், கேடிஎம், ஹஸ்க்வர்னா ஆகியவற்றில் பெரும் அளவில் பங்குகளை கொண்டுள்ள நிலையில், ட்ரையம்ப் நிறுவனத்துடன் இணைந்து நடுத்தர மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட உள்ளது.

ஃபோர்டு மஹிந்திரா கூட்டணி ஒப்பந்தம் கைவிடப்பட்டது..!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோர்டு மற்றும் மஹிந்திரா நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டணி ஒப்பந்தம் நிறுத்தப்படுவதாக இரு நிறுவனங்களும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

இருநிறுவனங்களின் கூற்றுப்படி, உலகளாவிய பெருந்தொற்று நோய் தாக்கத்தால், கடந்த 15 மாதங்களில் உலகளாவிய பொருளாதார மற்றும் வணிக சூழ்நிலை மாற்றங்களை சந்தித்துள்ளது. இதனால் மூலதன ஒதுக்கீடு முன்னுரிமைகளை மறு மதிப்பீடு செய்ய ஃபோர்டு மற்றும் மஹிந்திராவின் தனி முடிவுகளை பாதித்துள்ளன.

மஹிந்திரா-ஃபோர்டு கூட்டணி

கடந்த அக்டோபர் 2019-ல், ஃபோர்டு மற்றும் மஹிந்திரா இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் மூலமாக இந்தியாவில் ஃபோர்டு கார்களை உருவாக்க, சந்தைப்படுத்த மற்றும் விநியோகிக்க ஒரு கூட்டு முயற்சியை உருவாக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இப்போது, இரு நிறுவனங்களும் இந்த கூட்டு முயற்சியை நிறுத்த முடிவு செய்துள்ளன.

இந்த கூட்டணியின் மூலம் 7 கார்களை அறிமுக செய்யவும், இந்தியா மட்டுமல்லாமல் வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் அடிப்படையிலான ஃபோர்டு சி-எஸ்யூவி காரினை உற்பத்தி செய்யவும், இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்து, 2021 மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்ற புதிய ஈக்கோஸ்போர்ட் காரில் மஹிந்திராவின் 1.2 லிட்டர்  TGDI (G12) என்ஜின் இடம்பெற வாய்ப்புகள் இருந்தது. இந்த திட்டங்கள் மட்டும் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் உள்ளது.

எனவே, ஃபோர்டு இந்தியா முழுமையாக ஃபோர்டின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமாக தொடர்ந்து இயங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

வெற்றி கணக்கை துவங்கிய மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் க்ரூஸர் ரக மீட்டியோர் 350 மாடலின் முதல் மாத விற்பனை எண்ணிக்கை 7,031 யூனிட்டுகளாக பதிவு செய்துள்ள நிலையில், போட்டியாளர்களை விட மிக சிறப்பான வரவேற்பினை தண்டர்பேர்டு வெற்றியாளராக மீட்டியோர் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஹோண்டா வெளியிட்ட ஹைனெஸ் சிபி 350 பைக்கின் விற்பனை எண்ணிக்கையை விட கூடுதலாக அமைந்திருப்பதுடன், மிக அதிகப்படியான முன்பதிவுகளை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஹோண்டாவின் பிக் விங் டீலர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையிலும் சிபி 350 அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.

மீட்டியோர் 350 Vs ஹெனெஸ் சிபி 350 விற்பனை எண்ணிக்கை

Meteor 350 7031
H’Ness CB350 4067
புல்லட் 350 6513
புல்லட் 350 ES 3490

இந்த மாடல்களை விட ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை எண்ணிக்கை நவம்பரில் 39,391 ஆக பதிவு செய்துள்ளது.

இந்திய நாட்டின் ஒட்டுமொத்த 200-700 சிசி மோட்டார்சைக்கிள் சந்தையில் சுமார் 95 % பங்களிப்பினை ராயல் என்ஃபீல்டு பெற்றுள்ளது. சர்வதேச அளவில் நடுத்தர மோட்டார் சைக்கிள் முதன்மையான நிறுவனமாக தொடர்ந்து ராயல் என்ஃபீல்ட் விளங்குகின்றது.

விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – நவம்பர் 2020

கடந்த நவம்பர் 2020 மாதந்திர ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடத்தை ஹோண்டா ஆக்டிவா பிடித்து 2,25,822 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. ஒட்டுமொத்த இரு சக்கர வாகன சந்தையில் தொடர்ந்து ஸ்பிளெண்டர் முதலிடத்தில் இருந்து வருகின்றது.

இதற்கு அடுத்தப்படியாக, டிவிஎஸ் ஜூபிடர் மாடல் விற்பனை எண்ணிக்கை 62,626 ஆக பதிவு செய்துள்ளது. மற்றபடி 125 சிசி சந்தையில், சுசூகி ஆக்செஸ், டிவிஎஸ் என்டார்க் 125, யமஹா ரே, யமஹா ஃபேசினோ மற்றும் ஹீரோ டெஸ்ட்னி 125 ஆகியவை இடம்பிடித்துள்ளது.

டாப் 10 ஸ்கூட்டர்கள் – நவம்பர் 2020

வ.எண் தயாரிப்பாளர் நவம்பர் 2020
1. ஹோண்டா ஆக்டிவா 2,25,822
2. டிவிஎஸ் ஜூபிடர் 62,626
3. சுசூகி ஆக்செஸ் 45,582
4. ஹோண்டா டியோ 34,812
5. டிவிஎஸ் என்டார்க் 28,987
6. ஹீரோ பிளெஷர் 19,707
7. ஹீரோ டெஸ்ட்னி 125 15,515
8. யமஹா ரே 15,238
9. ஹீரோ மேஸ்ட்ரோ 12,412
10. யமஹா ஃபேசினோ 10,992

 

விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – நவம்பர் 2020

hero passion pro bs6

கடந்த நவம்பர் 2020 மாதாந்திர விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கையில் டாப் 10 இடங்களை பிடித்த இரு சக்கர வாகனங்களை பற்றி இங்கு காணலாம். தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக் இடம் பிடித்துள்ளது.

125சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா ஷைன், கிளாமர் உட்பட பல்சர் போன்றவை இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. குறிப்பாக கிளாமர் விற்பனை எண்ணிக்கை முந்தைய அக்டோபர் மாதத்துடன் ஒப்பீடுகையில் பெருமளவு வீழ்ச்சி அடைந்துள்ளது.

டாப் 10 பைக்குகள் – நவம்பர் 2020

வ.எண் தயாரிப்பாளர் நவம்பர் 2020
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் 2,48,398
2. ஹீரோ HF டீலக்ஸ் 1,79,426
3. பஜாஜ் பல்சர் 1,04,904
4. ஹோண்டா சிபி ஷைன் 94,413
5. டிவிஎஸ் XL சூப்பர் 70,750
6. ஹீரோ பேஸன் 53,768
7. பஜாஜ் பிளாட்டினா 75,540
8. டிவிஎஸ் அப்பாச்சி 41,557
9. ஹீரோ கிளாமர் 39,899
10. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 39,391