437 கிமீ ரேஞ்சு.., டாடா நெக்ஸான் EV மேக்ஸ் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

இந்தியாவின் முதன்மையான டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் அடிப்படையில் விற்பனைக்கு வந்துள்ள புதிய நெக்ஸான் EV Max எஸ்யூவி காரில் அதிகபட்ச வசதிகள் மற்றும் கூடுதல் ரேஞ்சு வெளிப்படுத்துகின்றது. இந்த மாடல் முன்பாக விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதல் திறன் பெற்ற 40.5KWh லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

Nexon EV Max இரண்டு வகைகளில் வந்துள்ள நிலையில் 437கிமீ ARAI மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளது.

பெரிய பேட்டரி பேக் கொண்டுள்ள, நெக்ஸான் EV மேக்ஸ் காரில் ARAI சான்றளிக்கப்பட்டு 437km வரம்பைக் கொண்டிருக்கும். இது Nexon EV காரை விட 125km அதிகம். நிகழ் நேரத்தில் நெக்ஸான் இவி காரானது, அதிகபட்சமாக 210 கிமீ வரை கிடைக்கின்றது. எனவே புதிய EV மேக்ஸ் அதிகபட்சமாக 320 கிமீ தொலைவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பேட்டரி மட்டுமல்லாமல், நிரந்தர காந்த ஒத்திசைவான மோட்டார் கூட புதுப்பிக்கப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள நெக்ஸான் EV 127 HP மற்றும் 245 Nm வெளிப்படுத்தும். கூடுதலாக பவரை மேக்ஸ் 141 HP மற்றும் 250 Nm ஐ வெளியிடுகிறது. இது தெளிவான 14 HP மற்றும் 5 Nm உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கார் 3.3 kWh ஆன்-போர்டு போர்ட்டபிள் சார்ஜரை ஆதரிக்கிறது. ஆனால் Nexon EV Max மாடலுக்கு 7.2 kWh AC ஃபாஸ்ட் சார்ஜரிலிருந்து கூடுதல் பிரீமியத்திற்கு வாங்கலாம்.

வழக்கமான சார்ஜரில், Nexon EV Max ஆனது 16 மணி நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும். அதே நேரத்தில் அதிக சக்தி வாய்ந்த சார்ஜர் 6 மற்றும் அரை மணி நேரத்தில் வேலையைச் செய்துவிடும். எந்த 50 kWh சார்ஜரிலும், கார் 56 நிமிடங்களில் 0 முதல் 80 சதவிகிதம் வரை டாப் அப் செய்துவிடும்.

Tata Nexon EV Max Price:

Variant Charger Option Price
XZ+ 3.3 kW Rs. 17.74 lakhs
XZ+ 7.2 kW Rs. 18.24 lakhs
XZ+ Lux 3.3 kW Rs. 18.74 lakhs
XZ+ Lux 7.2 kW Rs. 19.24 lakhs

All prices, ex-showroom

விரைவில்.., அதிக ரேஞ்சு வழங்கும் டாடா நெக்ஸான் EV அறிமுகம்

tata nexon ev suv

இந்தியாவின் மிக பிரபலமான எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலான டாடா நெக்ஸான் EV காரில் கூடுதலான ரேஞ்சு வழங்கும் மாடலை விற்பனைக்கு ஏப்ரல் மாதம் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

நீண்ட தூரம் பயணிப்பதற்க்கான நெக்ஸான் மின்சார காரில், பெரிய 40kWh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய நெக்ஸான் EV உடன் விற்பனைக்கு கிடைக்கும். இந்தியாவில் விற்கப்படும் மின்சார கார்களில் 60 சதவீத சந்தையை நெக்ஸான் கொண்டுள்ளது.

டாடா நெக்ஸான் இவி சிறப்புகள்

விற்பனையில் கிடைக்கின்ற நெக்ஸான் மின்சார காரில் பொருத்தப்பட்டுள்ள 30.2 KWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 128 ஹெச்பி பவர் மற்றும் 254 Nm டார்க் வெளிப்படுத்தும். 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.5 விநாடிகளும், 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.9 விநாடிகளில் எட்டிவிடும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 312 கிமீ ரேஞ்சு தரவல்லதாக ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த மாடலை விட 30 சதவீத கூடுதலான 40kWh பேட்டரி திறனை பெற்று 6.6kW AC சார்ஜ,ஐ கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதனால், இதன் ரேஞ்சு 400 கிமீ-க்கு கூடுதலாக அமைந்திருக்கலாம்.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற மற்ற மாடல்களான கோனா இவி மற்றும் எம்ஜி இசட்எஸ்இவி கார்களை நேரடியாக எதிர்கொள்ளும். நீண்ட தொலைவு பயணிப்பதற்க்கான நெக்ஸான் EVயின் விலை சுமார் ரூ.17 லட்சம்-18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% வரி விலக்கு: தமிழக அரசு

tata nexon ev suv

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் எலக்ட்ரிக் வாகனங்கள் (பேட்டரி) மூலம் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100% வரி விலக்கு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் 50% வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 100% விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி நவம்பர் 3, 2020 முதல் 31-12-2022 வரை 100% வரி விலக்குடன் பேட்டரியால் இயங்கும் வாகனங்களை வாங்கி பொதுமக்கள் பயன்பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. இதன் மூலமாக மின்சார வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை கனிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

web title : Tamilnadu goverment announce electric vehicles exempted from road tax, registration fee

470 கிமீ ரேஞ்சு.., எவோக் 6061 எலக்ட்ரிக் பைக்கின் டாப் ஸ்பீடு 230 கிமீ

சீனாவின் எவோக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரின் புதிய மாடலான 6061 க்ரூஸர் ரக எலக்ட்ரிக் பைக் தனது பெர்ஃபாமென்ஸ் மூலம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த பைக்கின் உச்சபட்ச வேகம் மணிக்கு 230 கிமீ ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

டூகாட்டி டியாவெல் பைக்கின் தோற்ற அமைபின் உந்துலை பெற்றுள்ள எவோக் 6061 பைக்கின் தோற்றம் மிக கவர்ச்சிகரமாக வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் பெற்று மிக நேர்த்தியான முறையில் டிசைன் பேனல்களை கொண்டு கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது.

எவோக் 6061 பைக்கில் 120 கிலோ வாட் லிக்யூடூ கூல்டு எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு 24.8 கிலோ வாட் ஹவர் லிக்யூடு கூல்டு பேட்டரி பேக்கினை கொண்டுள்ள இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 230 கிமீ ஆகவும், நெடுஞ்சாலை பயணித்தின் போது சிங்கிள் சார்ஜில் 265 கிமீ பயணமும், அதே நேரத்தில் நகர பயன்பாட்டில் அதிகபட்சமாக 470 கிமீ வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசி விரைவு சார்ஜிங் ஆப்ஷனை பெற்ற இந்த பைக்கி வெறும் 15 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜ் பெரும் திறனுடன் கூடிய 125kW ஃபாஸ்ட் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சர்வதேச அளவில் பெர்ஃபாமென்ஸ் சந்தையில் பிரசத்தி பெற்று விளங்குகின்ற ஹார்லி டேவிட்சன் லைவ் வயர், எனெர்ஜிக்கா பைக்குகள் மற்றும் ஜீரோ S/F போன்றவற்றை எதிர்கொள்ளுகின்ற எவோக் 6061 விலை $24,995 (தோரயமாக ரூ. 18.73 லட்சம்). அமெரிக்காவில் 2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியாக உள்ளது. இந்தியவில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

ரேஞ்சு 70 கிமீ.., சியோமி ஏ1, ஏ1 புரோ எலக்ட்ரிக் மொபட் அறிமுகம்

சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளரான சியோமி வெளியிட்டுள்ள ஏ1 மற்றும் ஏ1 புரோ என இரு எலக்ட்ரிக் மொபட்டில் அதிகபட்சமாக 70 கிமீ ரேஞ்சை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ1 வரிசையில் வெளியிடப்பட்டுள்ள புதிய எலக்ட்ரிக் மொபட் முதற்கட்டமாக சீனாவில் மிகவம் விலை குறைவாக  2,999 yuan (ரூ. 31,685) புரோ மாடல் 3,999 yuan (ரூ. 52,816) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

ஹப் மவுன்ட்டெட் மோட்டாரை பெற்றுள்ள இந்த இ-மொப்ட்டில் உள்ள ஏ1 வேரியண்டில் 7.68Wh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 60 கிமீ ரேஞ்சை வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக ஏ1 புரோவில் 960Wh பேட்டரி பொருத்தப்பட்டு 70 கிமீ ரேஞ்சை வழங்குகின்றது.

மேலும் இந்த மாடலில் 16 அங்குல வீல் கொடுக்கப்பட்டு, டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டு எல்இடி ஹெட்லெம்ப், டிஜிட்டல் கிளஸ்ட்டர், ஒற்றை இருக்கை கொண்டுள்ள இந்த மாடலின் மொத்த எடை 57 கிலோ ஆகும்.

6.8 அங்குல டச் ஸ்கீரின் கிளஸ்ட்டரில் 4ஜி ஆதரவு இ-சிம் , புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன், ஜிபிஎஸ் நேவிகேஷன் உடன் 1,080p வைட் ஏங்கிள் கேமரா வழங்கப்பட்டு ரைடினை பதிவு செய்துக் கொள்ளலாம். இதன் மூலம் 90 நிமிடம் வரை வீடியோ பதிவு செய்யலாம்.

ரூ.10 லட்சத்தில் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவியை தயாரிக்க ஹூண்டாய் திட்டம்

hyundai venue suv

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், நெக்ஸான் இவி உட்பட புதிதாக வரவுள்ள ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்குள் விலையிலான மாடல்களுக்கு போட்டியாக இந்தியாவிலே தயாரிக்கப்பட உள்ள எலக்ட்ரிக் எஸ்யூவி கார் 200 கிமீ முதல் 300 கிமீ நிகழ்நேர வரம்பில் பயணிக்கும் திறனை கொண்டிருக்கும் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்டோ கார் புரோ இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின் படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், இந்தியாவில் முற்றிலும் அனைத்து உதிரிபாகங்களும் தயாரிக்கப்பட உள்ள எலக்ட்ரிக் எஸ்யூவி கார் மிக சவாலான விலையிலும், 200 கிமீ முதல் 300 கிமீ நிகழ்நேர ரேஞ்சை பெற்றிருக்கும் வகையில் தயாரிக்கப்பட உள்ளதாக ஹூண்டாய் இந்தியா நிர்வாக இயக்குநர் கிம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற நெக்ஸான் இவி, அடுத்த ஆண்டு வெளியாக வாய்ப்புள்ள மஹிந்திரா இஎக்ஸ்யூவி 300 போன்றவற்றுடன் இசட்எஸ் இவி மற்றும் ஹைய்மா போன்ற நிறுவனங்களின் மாடல்கள் எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

source – http://www.autocarpro.in