கார் இன்சூரன்ஸ் எடுக்கும்பொழுது கொஞ்சம் கவனிங்க

கார் இன்சூரன்ஸ் எடுக்கும்பொழுது பல விசயங்களில் முறையான கவனம் செலுத்துவது மிக அவசியமாகின்றது. சரியான கவனம் இல்லாமல் கார் காப்பீடு தேர்வு செய்தால் சில தேவையற்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் எனவே அதனை தவிர்க்க கவனிக்க வேண்டிய சிலவற்றை பார்க்கலாம்.

கார் இன்சூரன்ஸ் டிப்ஸ்

1. கார் இன்சூரன்ஸ் வழங்குவதில் முன்னணியாக விளங்கும் நிறுவனங்களை தேர்வு செய்வது மிகவும் அவசியம்.

2. பாலிசியின் தொகை அதிகமாக இருந்தாலும் அவற்றை தேர்வு செய்தால் அவசர காலங்களில் மிக பெரும் உதவியாக இருக்கும்.

3. இன்ஷ்யூரன்ஸ் முகவரிடம் பாலிசி குறித்து முழுமையான விவரங்களை மிக தெளிவாக கேட்டு அறிவது அவசியம்.  மேலும் இன்ஷயூரன்ஸ் எடுக்கும்பொழுது அதன் டாக்குமென்டில் குறிப்பிட்ட விவரங்கள் அனைத்திற்க்கும் தெளிவான விளக்கங்களை தெரிந்து கொள்வது கட்டாயாம்.

4.  டீலர்கள் பரிந்துரைக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்தையே தேர்வு செய்ய வேண்டிய அவசியமில்லை. முழுமையான விவரங்கள் அறிந்த பின்னர் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பாலிசிகளை ஒப்பீடு செய்த பின்னர் தேர்வு செய்யுங்கள்.

 

5.  உங்கள் காரின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் காரின் முழுமையான தகவல்களை அனைத்தினையும் பாலிசியில் குறிப்பிடுவது மிக அவசியம்.

6. குறைவான கட்டண பாலிசிகளை தேர்ந்தேடுப்பதனை விட நல்ல அதிக கவரேஜ் உள்ள பாலிசிகளை தேர்வு செய்யுங்கள். இதனால் பயன் கூடுதலாக இருக்கும்.

மேலும் பல்வேறு விதமான ஆட்டோமொபைல் பராமரிப்பு டிப்ஸ் படிங்க..

சரித்திர நாயகன் யமஹா RX100 – தி அல்டிமேட் பவர் மெஷின்

இந்திய மோட்டார் சைக்கிள் தொடக்க கால வளர்ச்சி அத்தியாத்தில் களமிறங்கிய சரித்திர நாயகன் யமஹா RX100 இன்றைக்கும் , இந்திய சாலைகளில் உலா வருகின்ற ஆர்எக்ஸ்100 சப்தம் எங்கேயும் விநாடிகளில் திரும்பி பார்க்க வைக்கும் ஈர்ப்பினை கொண்டதாக விளங்குகின்றது.

 

யமஹா RX100

இளைஞர்களின் மத்தியில் என்றைக்குமே, யமஹா நிறுவனத்தின் மீது ஒரு தீராத காதல் நிரந்தரமாகவே உள்ளது. இந்த காதலுக்கு முதல் அடிதளத்தை விதைத்த மாடல்தான் 2 ஸ்ட்ரோக் எஞ்சின் பெற்ற யமஹா RX100 பைக் மாடலாகும்.

களத்தில் யமஹா

1983 ஆம் ஆண்டு எஸ்கார்ட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஜப்பான் நாட்டின் யமஹா மோட்டார் நிறுவனம் வந்தடைந்த பிறகு ராஜ்டூட் 350 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா சுஸூகி-டிவிஎஸ் (Ind-Suzuki) கூட்டணியில் வெளிவந்த 100சிசி AX100 மாடலின் வெற்றி பெற்றதால், அதன் பிறகு யமஹா நிறுவனத்தின் ஜப்பான் ஆலையில் இருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து ஒருங்கிணைக்கப்பட்டு 1985 ஆம் ஆண்டு வரலாற்று நாயகனாக யமஹா ஆர்எக்ஸ் 100 சந்தைக்கு வந்தடைந்தது.

ஆர்எக்ஸ் 100 எஞ்சின் நுட்பம் மற்றும் விபரம்

  • 98cc, 2 ஸ்ட்ரோக் ஏர் கூல்டு எஞ்சின்
  • அதிகபட்ச பவர் 11 BHP at 7500 RPM
  • அதிபட்ச டார்க் 10.39 NM at 6500 RPM
  • 4 வேக கியர்பாக்ஸ்
  • அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ
  • மணிக்கு 0-60 கிமீ வேகத்தை எட்ட 7.5 விநாடிகள்
  • எடை 95 கிலோ
  • முன் சஸ்பென்ஷன் – ஆயில் டேம்ப்டு டெலிஸ்கோபிக் ஃபோர்க்
  • பின் சஸ்பென்ஷன் – ஸ்வின் ஆரம் காயில் ஸ்பிரிங்
  • பிரேக் – இரு டயர்களிலும் 130மிமீ டிரம் பிரேக்

 

வேகம்

அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகத்தை சர்வசாதாரணமாகஎட்டும் வல்லமை கொண்ட ஆர்எக்ஸ்100 பைக்கின் ட்யூனிங் செய்யப்பட்ட மாடல் 0 முதல் 400 மீட்டர் தூரத்தை வெறும் 14 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தது.

\

கர்ஜனை

யமஹா RX100 பைக் வெளிப்படுத்துகின்ற கர்ஜனையை பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. புல்லட்களின் சப்த ஆதிக்கத்திற்கு மத்தியில் தன்னை தனி ஒருவனாக தனது செயல்திறன் மற்றும் கர்ஜனையால் நிலைநிறுத்திக் கொண்டது.

விளம்பரம்

Born to Lead” மற்றும் “Ahead of the 100 இரு கோஷங்களும் ஆர்எக்ஸ்100 பைக்கின் சிறப்பை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது என்றால் மறுப்பதற்கில்லை.

விலை

யமஹா RX100 பைக் விற்பனைக்கு சந்தையிலிருந்த பொழுது அதிகபட்சமாக ஆன்ரோடு விலை ரூபாய் 19,764 மட்டுமே ஆகும்.

நிறுத்தம்

1985 ஆம் ஆண்டு முதல் 1996 வரை சுமார் 11 ஆண்டுகள் எந்தவிதமான தோற்ற மாற்றங்களும் இல்லாமல் சந்தையை கலக்கி வந்த ஆர்எக்ஸ் 100 சுற்றுசூழல் பிரச்சனையின் காரணமாக 2 ஸ்ட்ரோக் எஞ்சின்களை கைவிட வேண்டிய கட்டாயத்தினால் சந்தையிலிருந்து ஆர்எக்ஸ்100 பைக்கின் உற்பத்தியை யமஹா நிறுத்தி விட்டது.

 

யமஹா ஆர்எக்ஸ்100 வதந்தி தெரியுமா ?

ஆர்எக்ஸ் 100 பைக் நிறுத்தப்பட்டதற்கு இன்றளவும் பலரிடம் ஒரு வதந்தியான தகவலே உள்ளது, என்னவென்றால் திருடர்கள் , செயின் பறிப்பு திருடர்கள் போன்றோர் அதிகமாக பயன்படுத்தியதனால் இந்த பைக்கின் உற்பத்தியை நிறுத்தியதாக பலரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையான காரணம் மாசு உமிழ்வு தர கட்டுப்பாடு அம்சங்களுக்கு ஏற்ற வகையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தவறியதனால் யமஹா ஆர்எக்ஸ் 100 சந்தையிலிருந்து விடுவிக்கப்பட்டது.

மறுவிற்பனை

இன்றைக்கு யமஹா ஆர்எக்ஸ்100 பைக் வாங்க ஒரு லட்சம் வரை செலவு செய்யவும் பலர் தயாராக காத்திருக்கின்றனர் என்பதே உண்மையாகும்.

ரூ. 60000 விலையில் சிறந்த 5 பைக்குகள் – 2017

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள கம்யூட்டர் எனப்படும் தொடக்கநிலை பைக் மாடல்களில் ரூ.60,000 விலைக்குள் கிடைக்கின்ற 5 சிறந்த பைக்குகள் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த வரிசையில் இடம்பெற்றுள்ள பைக்குகள் அதிகப்படியான மைலேஜ் தரும் திறனை கொண்டதாகும்.

5 சிறந்த பைக்குகள்

இந்தியாவின் மொத்த மோட்டார் சைக்கிள் விற்பனையில் 54.6 சதவீத பங்களிப்பினை கொண்டுள்ள தொடக்கநிலை மாடல்களான 100 முதல் 110சிசி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் பைக் மாடல்களின் விற்பனை எண்ணிக்கையின் அடிப்படையிலே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

  • ஹீரோ ஸ்பிளென்டர்

உலகின் முதன்மையான மற்றும் இந்தியாவின் முதன்மையான பைக் தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் வரிசை பைக்குகள் முதலிடத்தில் உள்ளது. பெரும்பான்மையான இந்திய வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக அமையும் பைக் மாடலாக ஸ்பளென்டர் வரிசை விளங்குகின்றது.

 

ஸ்பிளென்டரில் மொத்தம் 5 வகை மாடல்கள் விற்பனையில் உள்ளது. அவற்றில் 4 மாடல்கள் 97.2சிசி இன்ஜின் பெற்றுள்ளது. ஐ3எஸ் அம்சத்தை பெற்றுள்ள ஐஸ்மார்ட் மாடலில் 110சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. அட்டவைனையில் நுட்ப விபரம் மற்றும் விலை சேர்க்கப்பட்டுள்ளது.

 மாடல் (automobiletamilan) சிசி  பவர்  டார்க்  கியர்பாக்ஸ் விலை
ஹீரோ ஸ்பிளென்டர் 97.2 cc 8.3 ps @ 8000 rpm 8.05 Nm @ 5000 rpm 4-வேகம் Rs 50,580 – 51,910
ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் 97.2 cc 8.3 ps @ 8000 rpm 8.05 Nm @ 5000 rpm 4-வேகம் Rs 47,280-49,530
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 109.15 cc 7 kw @ 7500 rpm 9 Nm @ 5500 rpm 4-வேகம் ரூ. 54,080
  • டிவிஎஸ் விக்டர்

தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்சின் நம்பகமான மாடல்களின் ஒன்றான டிவிஎஸ் விக்டர் கடந்த ஏப்ரலில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. மறுபிரவசத்திற்கு பின்னரும் தனது வலிமையான பிராண்டு மதிப்பின் காரணமாக மிக விரைவாக வாடிக்கையாளர்கள் மத்தியில் விக்டர் தனது பெரும்பான்மையை நிரூபித்துவிட்டது.

நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற மாடலாக டிவிஎஸ் விக்டர் பைக் மையப்படுத்தப்படுகின்றது.

 மாடல் (automobiletamilan) சிசி பவர் டார்க் கியர்பாக்ஸ் விலை
 டிவிஎஸ் விக்டர் 109.7 சிசி 9.6 ps @ 7500 rpm 9.4 Nm @ 6000 rpm 4 வேகம் ரூ. 51,215 – 53,215
  • பஜாஜ் பிளாட்டினா

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் 50,000 விலைக்கு கீழாக அமைந்துள்ள மாடல்களில் ஒன்றான பிளாட்டினா மீண்டும் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அமோக வரவேற்பினை தொடக்கநிலை சந்தையில் பெற்று விளங்குகின்றது.

 மாடல்  (automobiletamilan) சிசி  பவர் டார்க் கியர்பாக்ஸ் விலை
பஜாஜ் பிளாட்டினா 102 சிசி 8.2 ps @ 7500 rpm 8.5 Nm @ 5000 rpm 4 வேகம் Rs 45,985
  • ஹோண்டா ட்ரீம்

ஸ்பிளென்டர் பைக்குகளுக்கு மிக சவலாக ட்ரீம் வரிசை மாடல்களை அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்க காலங்களில் அமோக ஆதரவினை கண்டுவந்த ட்ரீம் வகை பைக்குகள் கடுமையான சவாலினை போட்டியாளர்கள் மத்தியில் எதிர்கொண்டு வருகின்றது. மொத்தம் மூன்று விதமான வேரியன்ட்களில் கிடைக்கின்ற ட்ரீம் பைக்குகளில் ஒரே இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மாடல் சிசி  பவர் டார்க்  கியர்பாக்ஸ்  விலை

ஹோண்டா ட்ரீம் நியோ

109.19சிசி 8.25 hp @ 7500 rpm 8.63 Nm @ 5500 rpm 4 வேகம் ரூ. 49,844
ஹோண்டா ட்ரீம் யுகா 109.19சிசி 8.25 hp @ 7500 rpm 8.63 Nm @ 5500 rpm 4 வேகம் ரூ 51,741
ஹோண்டா ட்ரீம் CD 110 109.19சிசி 8.25 hp @ 7500 rpm 8.63 Nm @ 5500 rpm 4 வேகம் ரூ 44,765 – 46,96
  • ஹீரோ பேஸன் ப்ரோ

ஹீரோ பைக் நிறுவனத்தின் மற்றொரு மாடலாக விளங்குகின்ற பேஸன் ப்ரோ மாடலிலும் 100சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் விற்பனையில் உள்ள 100சிசி மாடல்களில் சற்று கூடுதலான விலை கொண்டதாக பேஸன் ப்ரோ விளங்குகின்றது.

 மாடல் சிசி  பவர் டாரக் கியர்பாக்ஸ் விலை
ஹீரோ பேஸன் ப்ரோ 97.2 சிசி 8.36 @ 8000 rpm 8.05 Nm @ 5000 rpm 4 வேகம் ரூ 54,205

 

மேலும் இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து வாசிக்க ஃபேஸ்புக் முகவரி -fb.com/automobiletamilan

பின்குறிப்பு – சிறந்த பைக் செய்திக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ள விலை விபரங்கள் அனைத்து  டெல்லி எக்ஸ்ஷோரூம் பட்டியல் ஆகும். 

ரூ. 40,000 விலைக்குள் சிறந்த பைக்குகள் வாங்கலாமா ?

இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனையில் உள்ள மாடல்களில் ரூபாய் நாற்பது ஆயிரம் விலைக்குள் அமைந்திருக்கும் சிறந்த பைக்குகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விபரங்களை காணலாம்.

சிறந்த பைக்குகள் வாங்கலாமா

பைக்குள் மற்றும் மொபட் உள்பட தொகுக்கப்பட்டுள்ள இந்த பட்டியலில் மினி பைக் மாடல் ஒன்றும் இணைக்கப்பட்டு மொத்தம் 5 மாடல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்குகள் விலை சென்னை எக்ஸ்-ஷோரூமை அடிப்படையாக கொண்டதாகும்.

1. பஜாஜ் சிடி 100

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மிக குறைந்த விலை பைக் மாடலாக விளங்கும் பஜாஜ் சிடி100 பி மற்றும் சிடி 100 பைக்குகளில் 8.08 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் வகையிலான 99.27 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு 4 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இருபக்க டயர்களிலும் 110 மிமீ டிரம் பிரேக் வசதியுடன் கூடிய இந்த பைக் மாடலில் மொத்தம் மூன்று விதமான வேரியன்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றது.

Specifications Bajaj CT100/CT100B
எஞ்சின் வகை ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு
எஞ்சின் சிசி 99.27 cc
பவர் 8.08 bhp at 7,500 rpm
டார்க் 8.05 Nm at 4,500 rpm
கியர்பாக்ஸ் 4 வேக மேனுவல்
எடை 108 kg
மைலேஜ் 99.1 kmpl
ஆரம்ப விலை ரூ. 32,398

விலை பட்டியல்

  • பஜாஜ் சிடி 100 பி – ரூ. 32,398
  • பஜாஜ் சிடி 100 ஸ்போக் – ரூ.34,899
  • பஜாஜ் சிடி 100 அலாய் – ரூ.36,909

2. டிவிஎஸ் ஸ்போர்ட்

டிவிஎஸ் நிறுவனத்தின் குறைந்த விலை பைக் மாடலாக வலம் வருகின்ற ஸ்போர்ட் பைக்கில் டியூரோலைஃப் 99.77 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7.7 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் குறைந்த விலை பைக் மாடலாக ஸ்போர்ட் விளங்குகின்றது.

முன் பக்க டயரில் 130 மிமீ ,பின்பக்க டயரில் 110 மிமீ டிரம் பிரேக் வசதியுடன் கூடிய இந்த பைக் மாடலில் மொத்தம் மூன்று விதமான வேரியன்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றது.

 

Specifications TVS Sport
எஞ்சின் வகை ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு
எஞ்சின் சிசி 99.77 cc
பவர் 7.07 bhp at 7,500 rpm
டார்க் 7.08 Nm at 4,500 rpm
கியர்பாக்ஸ் 4 வேக மேனுவல்
எடை 108.5 kg
மைலேஜ் 95 kmpl
ஆரம்ப விலை ரூ. 38,515

விலை பட்டியல்

  • டிவிஎஸ் ஸ்போர்ட் கிக் ஸ்டார்ட் ஸ்போக் – ரூ. 38,515
  • டிவிஎஸ் ஸ்போர்ட் கிக் ஸ்டார்ட் அலாய் – ரூ. 41,315
  • டிவிஎஸ் ஸ்போர்ட் எலக்ட்ரிக் ஸ்டார்ட் அலாய் – ரூ. 47,440

3. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்

ஹீரோ நிறுவனத்தின் எச்எஃப் டீலக்ஸ் பைக் வரிசையில் மொத்தம் மூன்று விதமான மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில்  97.2 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8.36 bhp பவரை வெளிப்படுத்துகின்றது.

Specifications Hero HF-Deluxe
எஞ்சின் வகை ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு
எஞ்சின் சிசி 97.2 cc
பவர் 8.36 bhp at 7,500 rpm
டார்க் 8.05 Nm at 4,500 rpm
கியர்பாக்ஸ் 4 வேக மேனுவல்
எடை 112 kg
மைலேஜ் 88.5 kmpl
ஆரம்ப விலை ரூ. 38,990

விலை பட்டியல்

  • எச்எஃப் டீலக்ஸ் கிக் ஸ்டார்ட் ஸ்போக்  – 38,990
  • எச்எஃப் டீலக்ஸ் கிக் ஸ்டார்ட் அலாய்  – 39,900
  • எச்எஃப் டீலக்ஸ் கிக் ஸ்டார்ட் ஸ்போக்  – ரூ. 46,180
  • எச்எஃப் டீலக்ஸ் எலக்ட்ரிக் ஸ்டார்ட் அலாய்  – ரூ. 47,198

4. டிவிஎஸ் XL100

டிவிஎஸ் எக்ஸ்எல் பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை, டிவிஎஸ் XL100 மினி லோட்மேன்  மட்டுமல்ல ஆல் ரவுண்டராக வலம் வருகின்றது. இந்த மொபட்டில் 4 ஸ்டோரக் ஒற்றை சிலிண்டர் 99.7 சிசி எஞ்சின் 4.03 பிஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்றது.

 

முன்புறத்தில் 80 மிமீ டிரம் மற்றும் பின்பக்க டயரில் 110மிமீ டிரம் பெற்று இருவிதமான இருக்கை அமைப்பு கொண்ட வகையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 கிடைக்கின்றது.

Specifications TVS XL 100
எஞ்சின் வகை ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு
எஞ்சின் சிசி 99.7 cc
பவர் 4.03 bhp at 6000 rpm
டார்க் 6.05 Nm at 3,500 rpm
கியர்பாக்ஸ் ஆட்டோமேட்டிக்
எடை 80 kg
மைலேஜ் 67 kmpl
ஆரம்ப விலை ரூ. 32,398

விலை பட்டியல்

  • டிவிஎஸ் எக்ஸ்எல் 100 விலை ரூ – 31,589
  • டிவிஎஸ் எக்ஸ்எல் 100 கம்ஃபோர்ட் விலை ரூ – 31,589

5. ஹோண்டா நவி

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மினி பைக் மாடலாக விளங்கும் ஹோண்டா நவி மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன் பிரபலமான ஆக்டிவா ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 109.19சிசி எஞ்சினை பெற்று 7.8 பிஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்றது.

நவி மினி பைக் மாடல் வித்தியாசமான அனுபவத்தை தரும் வகையிலான அற்புதமான மினி பைக் மாடலாகும்.

Specifications Honda Navi
எஞ்சின் வகை ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு
எஞ்சின் சிசி 109.19 cc
பவர் 7.8 bhp at 7,000 rpm
டார்க் 8.96 Nm at 5,500 rpm
கியர்பாக்ஸ் ஆட்டோமேட்டிக்
எடை 108 kg
மைலேஜ் 60 kmpl
ஆரம்ப விலை ரூ. 44,318

உங்கள் சாய்ஸ் எந்த பைக் என மறக்காமல் ஒரு கமென்ட் பன்னுங்க..!

கொளுத்தும் 40 டிகிரி வெயிலிலும் உங்கள் பைக்கை ஜில்லென வைத்திருக்கு சில டிப்ஸ்

வெப்பம் அதிகபட்சமாக 40 டிகிரியை தொட்டு விட்ட இந்த கோடை காலத்தில் நம் உற்ற தோழனாக பயணிக்கும் பைக்குகளை பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சம்மரிலும் நம்முடைய பைக்கினை மிக கவனமாக கையாள சில முக்கிய டிப்ஸ் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.

சம்மர் பைக் டிப்ஸ்

  • உங்கள் பைக்கில் முறையான எஞ்சின் ஆயில் அளவை பராமரிப்பது மிகவும் அவசியம்.
  • வெயிலான இடங்களில் வாகனங்களை நிறுத்துவதனை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
  • டயரின் காற்றழுத்தம் , தேய்மானம் போன்றவற்றை கவனியுங்கள்.

எஞ்சின் ஆயில்

முறையான கால இடைவெளி பராமரிப்பு என்பது வாகனங்களை பராமரிப்பதில் உள்ள மிக முக்கியமான அம்சமாகும். மனிதர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூன்று வேளை உணவு கட்டாயம் என்பதனை போன்றதே வாகனங்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் பைக்கின் எஞ்சின் ஆயில் மாற்றுவதுடன் , ஆயில் அளவை சோதிக்க வேண்டியதும் மிக அவசியமாகும்.

பெயின்ட்

புதிதாக பைக் வாங்கியிருந்தாலும் பழைய பைக்காக இருந்தாலும் பைக் பாலீஷ் போன்றவற்றை பயன்படுத்தி பெயின்ட்டை பராமரித்தால் வாகனத்தின் நிறம் மாறாமல் புதிது போல பராமரிக்கலாம்.

டிரைவ்லைன்

பவரை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்லும் செயின்களை முறையான கால இடைவெளியில் சோதனை செய்து செயின் டென்ஷனை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

பெட்ரோல் டேங்க்

கோடை காலம் முழுவதும் பெட்ரோல் டேங்க் முழுமையாக நிரப்புவதனை தவிர்த்திடுங்கள். அதிகபட்சமாக டேங்கின் முக்கால் பாகம் வரை மட்டுமே பெட்ரோலை நிரப்பி வையுங்கள். ஏனெனில் தவறுதலாக நீங்கள் டேங்க் மூடியை சரிவர மூட தவறினாலோ அல்லது வேறு காரணங்களால் பெட்ரோல் மீது வெப்பம் அதிகரித்தால் தீப்பற்றும் வாய்ப்புகள் உள்ளது.

மேலும் எரிபொருள் எஞ்சினுக்கும் செல்லும் குழாய் பகுதியில் எதேனும் கசிவு இருந்தால் உடனடியாக கவனித்து மாற்றிவிடுங்கள்..

டயர்

டயரில் உள்ள காற்றழுத்தம் வாரம் இரு முறை கட்டாயமாக சோதனை செய்வது மிக அவசியமாகும். ஒனர்ஸ் மேனுவலில் கொடுத்துள்ள காற்றழுத்த PSi (Pounds per Square Inch) அளவுகளை முறையாக பராமரிப்பது நல்லது, முறையான காற்றழுத்தம் பராமரிக்க தவறினால் டயரில் வெடிப்பு ஏற்படவோ அல்லது வேறு எதேனும் தொந்தரவுகளை சந்திக்க நேரும், எனவே முறையான காற்றழுத்தம் டயர் தேய்மானத்தை கருத்தில் கொண்டு டயரை மாற்றிவிடுங்கள்.

பிரேக்

பிரேக் திரவத்தின் அளவு உள்பட தேய்மானம் போன்றவற்றை மிக முக்கியமாக கருத்தில் கொண்டு பைக்கை பராமரியுங்கள். தேய்மானம் அடைந்திருந்தால் பிரேக் லைனர்களை மாற்றி விடுங்கள்.

பேட்டரி மற்றும் எலக்ட்ரிக்

சாதரணமாக பராமரிக்க வேண்டிய கட்டாயம் பேட்டரிகளுக்கு இருந்தாலும், பெரும்பாலான பைக்குகளுக்கு தற்பொழுது பராமரிப்பு இல்லாத பேட்டரிகள் வழங்கப்பட்டு வருகின்றது. லைட்டிங் வேலைப்பாடுகள் அல்லது எக்ஸ்ட்ரா ஹார்ன் போன்றவற்றை வெளியிடங்களில் பொருத்தியிருந்தால் முறையான வயரிங் செய்திருப்பது மிக அவசியமாகும்.

மரங்கள் தேவை

இருசக்கர வாகனங்கள் மட்டுமல்ல கார்களையும் கோடை காலத்தில் வெயிலான பகுதியில் நிறுத்துவதனை முற்றிலும் தவிர்த்து விடுங்கள், மிக முக்கியமான மற்றொன்று மன்டைய பிளக்கும் வெயிலில் வாகனத்தை நிறுத்திவிட்டு தரமற்ற தார்பாய் கொண்டு வாகனத்தை மூடி வைக்காதீர்கள். அதுவே வாகனம் தீப்பற்ற மிக முக்கியமான காரணமாகிவிடும்.

Cultural Landscape Foundation
Omstead Parks

பைக் , கார்களில் BHP , RPM , NM என்றால் என்ன ?

எஞ்சின் (விசைப்பொறி) செயல்பாட்டில் இயங்கும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளான CC , HP ,BHP , PS , NM , RPM போன்றவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

  1. CC – Cubic Capacity

எஞ்சினில் அமைந்துள்ள சிலிண்டர்களின் எண்ணிக்கையுடன் ஸ்வெப்ட் வால்யூம் என்பதனை பெருக்கினால் சிசி கிடைக்கும்.

படத்தில் உள்ளதை கவனியுங்கள்

CC=No. of cylinder*swept volume

swept volume என்றால் சிலிண்டரின் போர் மற்றும் ஸ்ட்ரோக் என இரண்டையும் பெருக்கினால் கிடைக்கும்.

Swept volume=Bore*stroke

ஸ்வெப்ட் வால்யூம் என்பது கிராங் ஷாஃப்ட் இடம்பெயரும் BDC முதல்  TDC வரையிலான இடம் பெயர்வினை stroke என்றும் போர் என்பது அதன் அகலத்தை குறிக்கும்.

ஒரே வரியில் சிசி என்றால் இடம்பெயர்வின் கன அளவு என்பது பொருளாகும்.

2. HP , PS , BHP என்றால் என்ன ?

மூன்றுமே பவரை வெளிப்படுத்தும் காரணிகளை குறிப்பிடும் அளவின் குறியீடுகளாகும். மேலும் சில ஆற்றலை குறிப்படும் எழுத்துக்கள் KW , CV

  1. HP – Horse Power
  2. BHP – Brake Horse Power
  3. PS – pferdestärke (ஜெர்மனி அளவீடு )
  4. kw – Kilowatt
  5. CV – chevaux vapeur

பவர் என்றால் என்ன ?

இவ்வாறு வெவ்வேறு குறியீடுகளில் சொல்லப்பட்டாலும் இவைகள் பவர் அதாவது ஆற்றலின் குறிப்பிடுபவயாகவே உள்ளன. ஹார்ஸ்பவர்

1 HP = 745.7 watts (0.7457 kW)

1 HP = 1.01387 PS

1 HP = 0.986 320 070 6 bhp

எஞ்சின்களில் குறிப்பிடப்படும் ஹார்ஸ்பவர் மற்றும் பிரேக் ஹார்ஸ் பவர் இரண்டுமே ஏறத்தாழ ஒன்றே ஆகும்.

பெரும்பாலான தயாரிப்பாளரகள் பிஎஸ் என்கின்ற அளவுகளில்தான் குறிப்படுவார்கள் சாதரனமாக ஒரு என்ஜின் 198 hp ஆற்றல் வெளிப்படுத்துகின்றது என்றால் அதனை 200 PS என குறிப்பிடுவார்கள் . இதன் காரணம் வாடிக்கையாளர்களை விரைவாக சென்றடையவே இந்த செயல்பாடாகும்.

3. டார்க் என்றால் என்ன ?

பவர் ஆனது எஞ்சின் வேகத்தை சாரந்த செயல்பாடாகும். TORQUE என்பது எஞ்சினுடைய இழுவைதிறன் சாரந்த அம்சமாகும். பொதுவாக பெட்ரோல் கார்கள் சிறப்பான வேகத்தை வழங்கும். டீசல் மாடல் சிறப்பான இழுவைதிறனை வழங்கும். அதனால்தான் அனைத்து கனரக வாகனங்களிலும் டீசல் சார்ந்த எஞ்சின் பயன்படுத்தப்படுகின்றது. எடை இழுத்து செல்லக்கூடிய தன்மையை குறிப்பிடுவதே நியூட்டன் மீட்டர் (NM or lb-ft)  என குறிப்பிடுவர்.

4. RPM என்றால் என்ன?

rpm என்றால் revolutions per minute என்பது விளக்கமாகும். ஒரு நிமிடத்தில் சுற்றுகின்ற எண்ணிக்கையை கொண்டு கணக்கிடப்படுகின்றது. ஆர்பிஎம் கிராங் ஷாஃப்ட் சுற்றுவதனை கொண்டு கணக்கிடப்படுகின்றது.

என்ஜின் விபரம்

150சிசி என்ஜின் 10 ஹெச்பி ஆற்றலை அதிகபட்சமாக 8000 ஆர்பிஎம்யில் வெளிப்படுத்தும். 9 என்எம் டார்க்கை 7800 ஆர்பிஎம் யில் வெளிப்படுத்தும்.

மேலும் நுட்ப சந்தேகங்களுக்கு பதிவு செய்ய மோட்டார் டாக்கீஸ் மெக்கானிக்

ஆண்ட்ராய்டு ஆட்டோ vs ஆப்பிள் கார் பிளே வித்தியாசம் என்ன ?

ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே இரண்டுமே மிக சிறப்பான வகையில் கார்களில் உதவும் தன்மை கொண்ட செயலியாகும். இரண்டுமே கார்களில் வழங்கப்படுகின்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இடம்பெற்றிருக்கும்.

ஆப்பிள் கார் பிளே

ஆப்பிள் ஐஓஎஸ் தளத்தில் இயங்கும் கார் பிளே ஆப்ஸ் வாயிலாக ஆப்பிள் ஐபோன் உதவியுடன் உங்களுடைய காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல பயனுள்ள வசதிகளை பெறலாம். குறிப்பாக நேவிகேஷன் , மேசேஜ் , மியூசிக் என பலவற்றை பெற உதவும். ஐபோன்7 ஐபோன் 6 , ஐ போன் 6 பிளஸ் , ஐபோன் 5, ஐபோன் 5c மற்றும் ஐபோன் 5s போன்ற மாடல்களில் இயங்கும்.

ஆண்ட்ராய்ட் ஆட்டோ

கார் பிளே போன்றே ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான சிறப்பு அம்சங்களை கொண்ட ஆட்டோ ஆப்ஸ் வாயிலாக நேவிகேஷன் , மேசேஜ் , மியூசிக் என பலவற்றை காரில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வாயிலாக பெறலாம்.

ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் அல்லது அதற்கு மேல் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு இயங்குதளங்களிலும் கிடைக்கும்.

இரண்டு செயலிகளும் நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் அல்லது ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களை கொண்டு பயன்படுத்தி கொள்ள இயலும்.

தங்கம் விலை போல..! தினமும் மாறும் பெட்ரோல், டீசல் விலை

வருகின்ற மே 1ந் தேதி முதல் புதுச்சேரி உள்பட 5 முக்கிய நகரங்களில் தினந்தோறும் பெட்ரோலிய பொருட்கள் விலையை தினமும் மாற்றி அமைக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பெட்ரோலிய பொருட்கள்

  • முதற்கட்டமாக 5 முன்னணி நகரங்களில் தினமும் மாறுகின்ற வகையில் விலையை வழங்க உள்ளது.
  • தங்கம் விலை நிலவரம் போல பெட்ரோலிய பொருட்களுக்கு இனி விலையையும் மாற்றி அமைக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
  • ஐந்து நகரங்களில், 200 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன.

இந்தியாவில் செயல்படுகின்ற மொத்த பெட்ரோல் நிலையங்களில் 95 சதவித பங்களிப்பை  பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெற்றுள்ளது. அதாவது நாட்டில் மொத்தமாக  56,190 பெட்ரோலிய டீலர்கள் செயல்படுவதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் கீழ் சுமார் 52,604 பங்க்குகள் செயல்படுகின்றது.

முதற்கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர்,  ஜெம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் என மொத்தம் 5 மாநிலங்களில் உள்ள 200 பங்க்குகளில் தினமும் மாறும் பெட்ரோலிய பொருட்களின் விலையை அறிமுகப்படுத்த உள்ளது.

மே 1ந் தேதி முதல் பெட்ரோலிய பொருட்கள் விலையை தினமும் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ள நிலையில், இந்த நகரங்களில் இந்த திட்டத்தை அமல்படுத்திய பிறகு ஏற்படும் சிக்கல்களை ஆய்வு செய்து, படிப்படியாக மற்ற முன்னணி நகரங்கள் மற்றும் நாடு முழுவதும் இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

சர்வதேச சந்தையில் நிலவுகின்ற கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படடையாக கொண்டு பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றம் செய்யும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தும்.  தற்போது பெட்ரோல், டீசல் விலை மாற்றம் 15 நாளுக்கு ஒரு முறை செய்யப்பட்டு வருகிறது.

இந்த முறை நடைமுறை வரும்பொழுது பெட்ரோல், டீசல் மற்றும் மற்ற பெட்ரோலிய பொருட்கள் விலையில் தினமும் சில பைசாக்கள் முதல் ரூபாய்கள் வரை குறையவும் அல்லது ஏறும். ஆனால் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்பட வாய்ப்பில்லை, என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பொதுத்துறை நிறுவனங்களின் இந்த முடிவினை தொடர்ந்து தனியார் நிறுவனங்களும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.

ஏன் இந்த ஏமாற்று வேலை – மைலேஜ் தகவல்

நிறுவனங்கள் தரும் மைலேஜ் ஏன் வரவில்லை ? அவை போலியான மைலேஜ் ? அல்லது ஏமாற்று வேலையா ? – மைலேஜ் தகவல் உண்மை என்ன தெரிந்து கொள்ளலாம்.

வாகனங்களின் மைலேஜ் என்பது வாடிக்கையாளர்கள் வாகனத்தை தேர்வு செய்வதற்க்கு மிக முக்கிய காரணியாக உள்ளது. அதிக மைலேஜ் தருவதாக சொல்லப்படும் பைக்குகளும் கார்களும் உண்மையில் மைலேஜ் என்ன தருகின்றது.

வாசகரின் கேள்வி இதோ

ARAI மைலேஜ்

எந்தவொரு வாகனம் புதிதாக விற்பனைக்கு வந்தாலும் ஆராய் (Automotive Research Association of India -ARAI  )அமைப்பினால் அங்கிகரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே இந்திய சந்தையில் விற்பனை செய்ய இயலும். ஆராய் அமைப்புதான் வாகனங்களுக்கான மைலேஜ் விபரங்களை சோதனை செய்து அறிவிக்கின்றது.

நிறுவனங்களின் மைலேஜ்

ஐடில் நிலையில் அதாவது வாகனங்கள் எந்தவிதமான இயக்கமும் இல்லாமல் உண்மையான சாலையில் சோதனைகள் செய்யப்படாமல் சுற்றும் சாலைகளால் அதாவது டைனோமோமீட்டர் உதவியுடன் கார் மற்றும் பைக்குகள் இயங்குவதனை போல சாலைகளை சுற்றவிட்டு கார் மற்றும் பைக்குகளுக்கான மைலேஜ் சோதனை செய்யப்படுகின்றது.

அதாவது ஒரு காரினை எடுத்துகாட்டாக எடுத்துக்கொள்ளலாம்..

அந்த காரினை சுமார் 1140 விநாடிகள் அல்லது 10 நிமிடங்கள் அல்லது 10 கிமீ தூரம் வரை சுற்றும் சாலைகளால் இயக்கி மைலேஜ் சோதனை செய்யப்படுகின்றது.

நெடுஞ்சாலை மற்றும் நகரம் என இரண்டுக்கும் ஏற்ப இந்த ரோலிங் சாலைகளை மாற்றி சோதனை செய்ப்படுகின்றது. சோதனையின்பொழுது காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ மற்றும் குறைந்த வேகம் மணிக்கு 10கிமீ ஆகவும் சராசரியாக மணிக்கு 31.6கிமீ வேகத்தில் வாகனம் இயக்கப்படும். காற்று உராய்வினால் ஏற்படும் இழப்பு  வெறும் மணிக்கு 18 கிமீ ஆக எடுத்தக்கொள்ளப்படும். மேலும் வெளிப்புற வெப்பநிலை 25 டிகிரி செல்சியசாக எடுத்துக்கொள்ளுவார்கள். இவைகளை அடிப்படையாக கொண்டே சராசரி மைலேஜ் தீர்மாணிக்கப்படும்

சேஸீஸ் டைனோமோமீட்டர்  உதவியுடன் போலியான உருளும் சாலைகளில்தான் வாகனங்கள் இயங்குமோ தவிர நிஜமான சாலைகளில் இயங்காது..

உண்மையான சாலை

உண்மையான சாலைகளில் இயக்கும்பொழுது வாகனத்தினை இயக்குபவரின் வேகம் , இயக்கும் விதம், வாகனத்தின் எடை , சாலையின் தன்மை , எதிர் காற்றின் வேகம் என நிஜங்களுக்கு மத்தியில் போலிகள் மறைந்துவிடுவதனால் உண்மையான மைலேஜ் வெளிவருகின்றது.

சிலருக்கு மைலேஜ் சிறப்பாக வர காரணம் அவர்களின் ஓட்டும் திறன் மற்றும் வேகமே காரணம்

உண்மையான மைலேஜ் ஆராய் மைலேஜை விட 30 முதல் 35 சதவீதம் வரை குறைவாகத்தான் இருக்கும். சில பைக் மற்றும் கார்களில் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.

உங்கள் கார் மற்றும் பைக்கின் உண்மையான மைலேஜ் பகிர்ந்துகொள்ளுங்கள்..

கமெண்ட் .. அவற்றை தொகுத்து ஒரு செய்தியாக வெளியிடலாம் அது பலருக்கு உதவும்…..

பிடிச்சிருந்தா உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்….

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்றால் என்ன

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்றால் என்ன என்பதற்க்கு தெரிந்து கொள்வதற்கு முன்னால் மேனுவல் டிரான்ஸ்மிஷன் பற்றி அறியலாம்.. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மிக எளிதான பயணத்துக்கு வழி வகுகின்றது.
 

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்

ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் 9வது கேள்வி பதில் பக்கத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த கேள்வி அனுப்பியவர் நண்பர் முத்துக்குமார் ஆவார்.  தங்களின் வாழ்த்துக்கு நன்றி…அவரின் கேள்விக்கான பதில்

ஆட்டோமொபைல் தமிழன்
மேனுவல் டிரான்ஸ்மிஷன் 
மேனுவல் டிரான்ஸ்மிஷன் என்பது கியர்களை நாம் க்ளட்ச் துனைக் கொண்டு கியர்களை மாற்றி இயக்குவோம். எஞ்சினில் இருந்து வெளிவரும் ஆற்றலை முறையாக சக்கரங்களுக்கு கடத்த பெரிதும் கியர் பாக்ஸ்கள் உதவுகின்றன.
4 ஸ்பீடு ,  5ஸ்பீடு , 6 ஸ்பீடு என மாறுபட்ட வகையில் கியர்பாக்ஸ் இருக்கும்.கிளட்ச் கியர்களை என்கேஜ் மற்றும் டிஸ்என்கேஜ் செய்கின்றது.மேனுவல் டிரான்ஸ்மிஷன் மேம்படுத்தப்பட்ட வகைதான் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆகும்.
Automatic transmission

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் கிளட்ச் இல்லாமல் இருக்கும். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வகை CVT மற்றும்  செமி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை  கொண்டும் இருக்கும்.
வேகத்திற்க்கு ஏற்ப கியர் மாறிக்கொள்ளும் என்பதனால் நமக்கு தேவயற்ற சிரமங்கள் இருக்காது. கிளட்ச் என்பதற்க்கு தனியான பெடல் இல்லை என்பதால் கால்கள் பிரேக் மற்றும் ஆசிலேட்டரியில் மட்டும் பயன்படுத்தினால் போதும்.
ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் டார்க் கன்வர்டர் முக்கிய பங்கு வகிக்கின்றது.
டார்க் கன்வேர்டர் என்பது ஃபுளூயிட் கப்ளிங் ஆகும். எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷனுக்கு இடையில் நிறுவப்பட்டிருக்கும்.
ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்கள் தற்ப்பொழுது பரவலாக அனைத்து நிறுவனங்களும் அறிமுகம் செய்து வருகின்றன. இது மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களை விட ரூ 60000த்திற்க்கு மேல்  கூடுதலாக இருக்கும்.
டிராபிக் நிறைந்த பகுதிகளில் கூட மிக எளிதாக பயணிக்கலாம். மேனுவல் டிரான்ஸ்மிஷன் காரில் கூடுதலான மைலேஜ் எதிர்பார்க்கலாம். ஆனால் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்களில் மைலேஜ் குறைவு. மேன்வலை விட சராசரியாக 2 முதல் 5 கீமி வரை குறையலாம்.
பழுது ஏற்பட்டால் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர்களில் அதிக ரூபாய்கள் பிடிக்கும். மேனுவல் டிரான்ஸ்மிஷன் சற்று குறைவாக இருக்கும். அதிகப்படியாக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பழுதுகள் ஏற்படாது.
அதிகப்படியான மன அழுத்தம் இல்லாமல் எந்த சாலையிலும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனியில் பயணிக்கலாம்.
அனைத்து முன்னணி கார் பிராண்டுகளில் பலவிதமான மாடல்களில் டாப் வேரியன்டில் ஆட்டோ டிரான்ஸ்மிஷன் உள்ளது.
2013 ஆம் ஆண்டில் வெளிவந்த குறிப்பின் மேம்பட்ட பதிவாகும்.