உங்கள் கார் டயர்களை பராமரிப்பதற்கான டிப்ஸ்கள்

நீங்கள் உங்கள் காரின் டயரை சிறிதளவு கவனமாக பார்த்து கொண்டால் கண்டிப்பாக நீண்ட ஆயுளை பெறுவதுடன், புதிய டயர்களுக்கு செலவிடுவதையை தவிர்க்க முடியும். உங்கள் காரின் டயர்கள் அதிக மைலேஜ் அளிக்க கடைபிடிக்க வேண்டிய முறைகள் குறித்து ஐந்து டிப்ஸ்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

டயர் அழுத்தை சரியான முறையில் பராமரித்தல்

ஆரோக்கியமான ஜோடி வீல்களை பராமரித்து வருவது நீங்கள் உங்கள் கனவு வாகனத்தை நீண்ட நாள் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். டயர்களின் அழுத்தத்தை தொடர்ந்து செக் செய்து கொள்வது, உங்கள் காரின் இன்ஜினில் இருந்து அதிக மைலேஜ் பெற உதவும், குறைந்த அழுத்தம் கொண்ட டயர்கள் இயங்க அதிக ஆற்றல் தேவைப்படும், இது உங்கள் எரிபொருள் திறனை அதிகரிப்பதுடன், இன்ஜின் அழுத்தத்தையும் அதிகரிக்கும். சரியான அழுத்தம் கொண்ட காரின் டயர்களுடன் சாலையில் பயணம் செய்யும் போது அந்த டயர்கள் அதிக பிடிமானம் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் உங்கள் வாகனத்தின் கண்ட்ரோல் சிறப்பாக இருக்கும். காரின் டயர்களில் குறிப்பிட்ட அளவை விட அதிகளவு அழுத்தம் இருந்தால், அது நீண்ட தூர பயணங்களின் போது ஆபத்தை விளைவிக்கும். இது போன்ற பயணங்களின் போது டயர்கள் வெப்பமடைந்து விரிவடையும். இதனால் உங்கள் காரின் டயர் வெடிக்க வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி குறைந்த காற்றழுத்தம் கொண்ட டயர்கள், அதிகளவு சாலையில் உராய்ந்து பயணம் செய்வதால், ஈரமான சாலைகளை செல்லும் போது பெரியளவில் பிரச்சினையை ஏற்படுத்தும்.

டயர்களை கவனமாக சோதனை செய்ய வேண்டும்

புதிய டயர்கள், 8-9mm ஆழமாக டிரிட் செய்யப்பட்டிருக்கும். இது டயர்கள் தேய்மானத்தை குறைக்கும். ஆனாலும், டயர்களின் டிரிட் ஆழம் 1.6mm அளவுக்கு கீழே செல்ல கூடாது. ஆகையால், இந்த விஷயத்தில் கவனமாக இருப்பது, நீங்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்வதற்கு முன்பு இதை செய்வதும் சிறந்ததாக இருக்கும். இதுமட்டுமின்றி தொடர்ச்சியாக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், தேவையற்ற உராய்வு எதுவும் உங்கள் காரில் உள்ளனவா? என்பதையும் சோதனை செய்து கொள்ள வேண்டும். காரை ஒட்டி செல்லும் போது, நீங்கள் ஸ்மூத்தாக செல்வது போன்று உணர வேண்டும். அப்படி நீங்கள் உணரவில்லை என்றால், கார் டயர்களின் அழுத்தத்தை செக் செய்ய வேண்டும் அல்லது கார் டயர்களின் அலைன்மென்ட்டில் பிரச்சினை உள்ளதா என்று சோதனை செய்து கொள்ள வேண்டும்.

உங்கள் டயர்களை மாற்ற வேண்டும்

நீண்ட தூரம் பயணம் செய்த டயர்களை மாற்றி கொள்வது சிறந்த வழியாக இருக்கும். குறைந்தது 5,000 முதல் 8,000 Kms பயனம் செய்த பின்னர் உங்கள் கார்களின் டயர்களை மாற்ற கொள்ள வேண்டும்.

உங்கள் காரின் ஸ்டீயரிங்கை பிடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்

உங்கள் காரின் ஸ்டீயரிங்கை பிடிக்கும் போது, அது வைப்ரேட் ஆவது போன்று நீங்கள் உணர்ந்தால், உங்கள் வீல்கள் சரியான பேலன்ஸ் செய்யப்படவில்லை என்று அர்த்தமாகும். இதுபோன்ற வைப்ரேஷன்கள், உங்கள் காரின் டயர் அதிகளவில் தேய்மானம் அடைந்துள்ளதை உங்களுக்கு உணர்த்தும். உடனடியாக கார் மெக்கானிக்கை தொடர்பு கொண்டு இந்த வைப்ரேஷன் ஏற்படுவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் வீல் பேலன்ஸ்-ஐ சரி செய்து கொள்ள வேண்டும்.

செய்ய கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை

ஒரே ஆக்சிளில் பொருத்தப்பட்டுள்ள உங்கள் டயர்களை மாற்றும் போது வெவ்வேறு தயாரிப்பாளர்களின் தயாரிப்புகளை கலந்து பயன்படுத்த கூடாது. பிரேகிங் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும், தேவையின்றி கடினமான முறையில் பிரேக்கிங் செய்வதை தவிர்ப்பது நல்லது.விரைவாக ஆக்சலரேட் செய்ய கூடாது. இது டயர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கடினமான பாதைகளில் பயணம் மேற்கொண்ட பின்னர், உங்கள் கார்களின் வீல் அலைன்மென்ட்டை சரியாக உள்ளதா என்று செக் செய்து கொள்ள வேண்டும். சரியான அலைன்மென்ட்டில் இல்லாத டயர்களால் உங்கள் காரின் மைலேஜ்-ஐ 30 சதவிகிதம் குறையலாம். உங்கள் டயர் சரியாக அலைன் செய்யப்பட்டுள்ளதாக என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சரியான அலைன் செய்யப்படாத டயர்களுடன் பயணிப்பதால், டயர்கள் வேகமாக தேய்மானம் அடைவதுடன், பல்வேறு டிரைவிங் பிரச்சினைகளுக்கும் வாய்ப்பாக அமைந்து விடும்.

நவீன கார்கள், அதிவேகமாக செல்லும் வகையிலும், சிறந்த முறையிலும் வடிவமைக்கப்பட்டு வந்த போதிலும், அந்த கார்களின் டயர்களை முறையாக பராமரித்து வருவது, காரை வசதியாக ஒட்டி செல்லவதுடன், உங்கள் பயணத்தை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சி கொண்டதாகவும் மாற்றும். மேற்குறிய டிப்ஸ்களை கடைபிடித்தால், உங்கள் காரின் டயர்களை சிறந்த முறையில் பராமாரித்து கொள்ள முடியும்.

எளியமுறையில் பெட்ரோல், டீசல் சேமிக்க 10 வழிகள்

2020 yamaha r15 grey

தினமும் உயரும் பெட்ரோல், டீசல்  விலை கார், பைக் வாங்க நினைபவர்களுக்கு கவலையாகவும் கார், பைக் வைத்திருப்பவர்களுக்கு மிகுந்த சவாலாக உள்ள நிலையில் இவற்றை சமாளிக்க பெட்ரோல், டீசல் சேமிக்க மிக எளிய 10 வழியை நாம் தெரிந்து கொள்ளலாம்.

எரிபொருளை எவ்வாறு சேமிக்கலாம் என சில முக்கிய குறிப்புகளை கவனிப்போம். முன்னணி ஆட்டோமொபைல் வல்லுனர்கள் பரிந்துரைக்கும் டிப்ஸ் தெரிந்து கொள்வோம்.

பெட்ரோல் டீசல் சேமிக்க டிப்ஸ்

1. வாகனங்களின் டயர்களில் சரியான காற்றழுத்ததை சீராக பராமரிப்பு மிகவும் அவசியம். அதிகப்படியான காற்று அல்லது குறைவான காற்று போன்ற காரணங்களால் மைலேஜ் கிடைக்காது மற்றும் டயர்களை பாதிக்கும்.நிறுவனத்தார் கொடுத்த காற்றழுத்ததை மட்டுமே பராமரிக்க வேண்டும்.

2. புதிய டயர்கள் மாற்றும்பொழுது வாகன தயாரிப்பாளர் பரிந்துரைத்த டயர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

3. காலை நேரங்களில் மட்டும் எரிபொருளினை நிரப்ப முயற்சியுங்கள். எரிபொருளின் ஸ்பெசிபிக் க்ராவிட்டி (specific gravity) காலை நேரங்களில் அதிகமாக இருக்கும்.

4. எரிபொருள் கலனில் எப்பொழுதும் அறை பங்கிற்க்கு மேல் எரிபொருள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இதனால் எரிபொருள் சரியான அழுத்ததில் செல்ல பெரிதும் உதவும்.

5. வாகனத்தின் பராமரிப்பு மிகவும் அவசியமாகும். சரியான கால இடைவெளியில் பராமரித்தால் தேவையற்ற செலவுகளை தவர்க்கலாம். வாகனத்தின் செயல்திறனும் சிறப்பாக இருக்கும்.

6. எக்காரணம் கொண்டு தயாரிப்பாளர் பரிந்துரைக்காத எரிபொருள்,அடிட்டீவஸ் பயன்படுத்தாதீர்கள்.

7. வாகனத்தை இயக்கும் பொழுது தேவையான அளவே அக்ஸிலேட்ர்களை கொடுங்கள். திடீரென அதிகப்படியான அக்ஸிலேட்ர் கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது. பிரேக் பிடிப்பதில் கவனம் கொள்ளுங்கள் அக்ஸிலேட்டர் கொடுத்தவுடன் உடனடியாக பிரேக் கொடுக்காதீர்.

சிக்னல்களில் திடீரென வேகம் எடுக்காதீர்கள். சீரான வேகத்திலே வாகனத்தை இயக்குங்கள்.

8. அதிவேகம் மிகுந்த ஆபத்தானவை அதேபோல எரிபொருளும் அதிகம் தேவைப்படும். டாப் க்யரிலும் மெதுவாக செல்வது எரிபொருளை சேமிக்க உதவும்.சராசரியாக 50-60 கீமி வேகத்தில் பயணிக்க முயலுங்கள்.

9. 2 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்தால் வாகனத்தை அனைத்து விடுங்கள்.

10. க்ளட்ச் மீது க்யர் மாற்றும்பொழுது மட்டுமே காலினை பயன்படுத்தவும். …. தொடர்ந்து நிலையான வேகத்தில் பயணத்தை மேற்கொள்ளுங்க….!

யூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்

யூஸ்டு பைக் அல்லது செகன்ட் ஹேன்ட் பைக் வாங்கும்பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளலாம். பழைய பைக் வாங்குவதில் உள்ள சிரமங்களை எளிதாக கையாளும் வகையில் உள்ள சில முக்கிய விவரங்கள்.

பழைய பைக் வாங்கும் முயற்சியில் இறங்கினால் சற்று கூடுதல் கவனம் மற்றும் அதிகப்படியான தேடுதலை செய்ய வேண்டியது அவசியம். யூஸ்டு பைக்கில் தேர்ந்தெடுப்பத்தில் கவனம் ஏன் தேவை ?

சில கேள்விகளுக்கு பதில் தாருங்கள்
1. எந்த மாதிரியான பைக்
2. ஏன் பழைய பைக்
3. எந்த பிராண்டு
4. ஏன் இந்த பிராண்டு
5. இந்த பைக் பற்றி தெரிந்த முக்கியமானவை
6. வண்டி சர்வீஸ் பற்றி
7. உரிமையாளர் உங்களுக்கு தெரிந்தவரா ? அல்லது கன்சல்ட்ன்சியா ?
8. டாக்குமென்ட் பற்றிய தெளிவு

இந்த கேள்விகளுக்கு  உங்கள் பதில்களை தனியாக வைத்துக்கொள்ளுங்க ? இனி தொடர்ந்து பார்க்கலாம்.

1. சந்தையில் பல விதமான மாடல்களில் பைக் விற்பனையில் உள்ளது. அவை ஸ்கூட்டர் , காமுடேட்டர் , ஸ்போர்ட்ஸ் மற்றும் பிரிமியம் பைக்குகள் என எதுவாக இருப்பினிலும் தேர்ந்தெடுங்கள்.

மேலும் படிக்க ; புதிய பைக் வாங்கலாமா டிப்ஸ்

2. சந்தையில் எண்ணற்ற புதிய மாடல்கள் பல விதமான என்ஜின் ஆப்ஷ்னில் குறைந்த வட்டி விகிதத்தில் புதிய பைக்குகள் கிடைக்கும் பொழுது ஏன் பழைய பைக்கினை தேர்வு செய்துள்ளோம் என்றால் குறைவான விலையில் தரமான பைக்கை வாங்கும் நோக்கத்தில் தான்.

3. சந்தையில் விற்பனையில் உள்ள முன்னனி பிராண்டுகளோ அல்லது உங்கள் விருப்பமான பிராண்டாக இருந்தாலும் அந்த பிராண்டினை பற்றியும் அதன் யூஸ்டு பைக் பற்றி அவசியம் தெரிய வேண்டும்.

4. நீங்கள் தேர்ந்தெடுத்த பிராண்டு உங்கள் விருப்பமானதோ ? அல்லது மற்றவரின் தூன்டலாக இருந்தாலும் அந்த பிராண்டில் உள்ள சிறப்பான மைலேஜ் தரவல்ல சிறப்பான பைக்கினை தேர்ந்தேடுங்கள்.

5. நீங்கள் வாங்க நினைக்கும் பைக்கில் கண்டிப்பாக இதையெல்லாம் கவனிங்க

1. தயாரித்த ஆண்டு
2. பைக்கின் தோற்றம் கவர்கின்றதா ? இல்லையா ?
3. எவ்வளவு தூரம் ஓடியுள்ளது.
4. டாக்குமென்ட் உள்ளதா ? இல்லையா ?
5. காப்பீடு இன்று வரை உள்ளதா ? அல்லது பாதியில் கைவிடப்பட்டுள்ளதா ?
6.  பைக்கின் உங்கள் மதிப்பீடு
7. சந்தையில் உள்ள மறுமதிப்பீடு

இவைகளை மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்

6. வாகனத்தில் சர்வீஸ் தொடர்ந்து செய்யப்பட்டுள்ளதா ? அல்லது முறையற்ற சர்வீஸா என்பதை அவசியம் கவனிங்க , சர்வீஸ்தான் ஒரு வாகனத்தின் தரத்தினை பெரும்பகுதி உறுதி செய்யும். எங்கே சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது சர்வீஸ் மையமா ? அல்லது தெரிந்தவரிடமா ? என கேட்டு தெரிந்து கொள்ளுவதனால் பைக்கை பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ளலாம்.

7. பழைய பைக் யாரிடம் வாங்க போறிங்களோ அவர்கள் உங்களுக்கு நன்கு அறிமுகமானவராக இருத்தல் மிக அவசியம். ஆட்டோ கன்சல்ட்ன்சியில் வாங்கினால் உங்கள் அருகாமையில் உள்ள நிலையத்தில் வாங்குங்கள்..அது உங்களுக்கு எதிர்காலத்தில் உதவி செய்யும்.

8.  டாக்குமென்ட் பற்றி நன்கு தெளிவான விவரங்கள் அறிந்த நபரை கொண்டு சோதனை செய்து வாங்குவதனால் பல இன்னல்களை தவிர்க்க முடியும்.

நீங்கள் உள்ள யூஸ்டு பைக் அல்லது பழைய பைக் வாங்கும்பொழுது அவசியம் செக் செய்ய வேண்டிய செக்லிஸ்ட் என்ன ? தெரிந்து கொள்ள கீழே சொடுக்கவும்

பழைய பைக் வாங்கும் முன் சோதனை செய்ய வேண்டிய செக்லிஸ்ட்

Used Bike buying tips in Tamil

முதல் பதிவுசெய்த நாள் 20/08/2015

புதிய பைக் பராமரிப்பு குறிப்புகள் – ஆட்டோ டிப்ஸ்

புதிய பைக் வாங்கி உள்ளவரா ? அல்லது வாங்க போறிங்களா ? யாராக இருந்தாலும்  பைக்கினை எவ்வாறு எளிமையாக பராமரிக்கலாம் என இந்த புதிய பைக் பராமரிப்பு பகுதியில் அறிந்து கொள்ளலாம்.

புதிதாக பைக் வாங்கி பொழுது தினமும் ஒருமுறை சுத்தமாக பைக்கினை துடைத்திருப்பீர்கள். கொஞ்சம் நாளில் பைக்கை சுத்தம் செய்ய சில வாரம் , மாதம் கூட ஆகலாம். சரி இது வரை எப்படியோ இனியாவது இதெல்லாம் கடைபிடிக்கலாம் வாங்க

1. புதிய பைக்கில் குறைந்தபட்சம் முதல் 1000 கிமீ வரை மணிக்கு 40கிமீ வேகத்துடனும் அடுத்த 1000கிமீ மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் பைக்கினை இயக்குங்கள்.

2. சரியான வேகம் சரியான கியர் ; குறைந்தபட்ச கியரில் அதிக வேகம் எடுப்பதோ அல்லது அதிகபட்ச கியரில் குறைவான வேகத்தில் அதிகம் நேரம் ஓட்டுவதோ இரண்டுமே வேண்டாம்.

3. திடீரென வேகம் எடுப்பதோ அல்லது அவசரகதியாக பிரேக் பிடிப்பதையும் தவிர்ப்பது மிகவும் நல்லது.

4. மழை காலத்தில் சேறு சகதி போன்றவை அதிகமாக என்ஜின் மீது படியும். நம்முடைய குறைந்தபட்டச சிசி என்ஜின்கள் அனைத்தும் காற்றினால் குளிர்விக்கப்படுவதனால் என்ஜின் மீது அதிகப்படியான தூசு மற்றும் என்ஜினை மறைக்கும் வகையில் பொருட்களை வைப்பது நல்லதல்ல.

5. முத்தான முதல் சர்வீஸ் ; மிக அவசியமான முதல் சர்வீசினை தயாரிப்பாளர் கொடுத்துள்ள கிமீ செய்துவிடுவது நல்லது.

6. காலம் தவறுதல் ; தயாரிப்பாளர் பரிந்துரை கிமீ சர்வீஸ் செய்ய தவறினால் மைலேஜ் , என்ஜின் ஆயுள் போன்றவை குறையும்.

 

7. அங்கிகரிக்கப்பட்ட பைக் சர்வீஸ் சென்டரில் என்றுமே சர்வீஸ் செய்வது மிகவும் நல்லதாகும் . தற்பொழுது விற்பனைக்கு வருகின்ற புதிய பைக்குகள் அனைத்துமே நவீன அம்சத்தை கொண்டுள்ளதாகும்.

8.  தொடருங்கள் புதிதாக பைக் வாங்கியபொழுது நாம் பராமரிக்கும் அனுபவத்தினை கடைசிவரை தொடர்ந்தால் பைக்கின் ஆயுளும் நல்லாயிருக்கும்.

9. ஒவ்வொரு பைக் ஓட்டிகளுக்கும் ஒவ்வொரு விதமான பழக்கங்களும் தனித்துவமான அனுபவங்களும் செயல்பாடும் இருக்கும். எனவே மைலேஜ் , என்ஜின் ஆயுள் போன்றவை இவற்றை கொண்டே அமையும்.

10. பைக்கினை பொறுத்தவரை ஒருவரின் பழக்கத்திலே தொடர்ந்து இயக்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும். இது பலருக்கு அனுபவத்தில் நன்றாகவே தெரியும். நம்முடைய பைக்கினை வேறு ஒருவர் ஓட்டிவிட்டு கொடுத்தால் நமக்கே தெரியும் வித்தியாசமாக இருப்பதனை உணர இயலும். எனவே முடிந்தவரை  இரவல் தந்தால் உடனடியாக திரும்பெற்று கொள்ளுங்கள்.

11. உங்கள் பைக்கினை விரும்புங்கள்..ஒவ்வொரு இடத்திற்கு நீங்கள் செல்லும்பொழுதும் உங்கள் உற்ற தோழனாக உங்கள் உடனே இணைந்திருக்கும் பைக்கினை விருபத்துடன் அனுகுங்கள்,..

30 கிமீ வரும் பைக் மைலேஜ் 50 கிமீ ஆக அதிகரிக்க என்ன செய்யலாம் ? – மைலேஜ் தகவல்

உங்கள் பைக் குறைவான மைலேஜ் தர முக்கிய காரணங்கள் என்ன ? அதற்கு உண்டான தீர்வுகள் என்ன என்பதனை பைக் மைலேஜ் தகவல் தெரிந்தகொள்ளலாம்.

பைக் மைலேஜ்

மைலேஜ் மிகவும் அவசியமான ஒன்று அவற்றை சாதாரணமாக எந்தவொரு மோட்டார்சைக்கிள் மற்றும் கார் ஓட்டுநர்களும் ஒதுக்கிவிட முடியாது அல்லவா ?

1.என்ஜின் ஆயில்

முறையான கால இடைவெளியில் தயாரிப்பாளரின் பரிந்துரையின் படி இஞ்ஜின் ஆயில் மாற்றாமல் இருப்பது மைலேஜ் குறைய மிக முக்கிய காரணம் ஆகும். அதேபோல தரமற்ற என்ஜின் ஆயில் அல்லது தயாரிப்பாளர் பரிந்துரைக்காத ஆயிலை பயன்படுத்தினாலும் குறையும்.

தயாரிப்பாளர் கொடுத்துள்ள கையேடில்  ஆயில் மாற்றும் விவரங்களை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட கிமீ வாகனம் ஓடவில்லை என்றாலும் என்ஜின் ஆயிலை குறிப்பிட்ட காலத்தில் மாற்றுவது மிக அவசியம். ஆயில் தன்மை காலம் கடந்துவிட்டால் தானாகவே மாறிவிடும் இயல்பினை கொண்டதாகும்.

என்ஜின் குளிர்ச்சியாக இருக்கும் தருணத்தில் ஆயில் டேங் மூடியை திறந்து ஆயிலின் நிறத்தினை தெரிந்துகொள்ளலாம். கருமை நிறத்தினை ஆயில் எட்டியிருந்தால் நிச்சியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

 

2. டயர்

டயரில் முறையான காற்று அழுத்ததை முறையாக கடைப்பிடிக்காமல் இருப்பது மைலேஜ் குறைய முக்கிய காரணமாகும்.  அவ்வாறு முறையான காற்றுழுத்தம் இல்லை என்றால் பைக் செல்லும் பொழுது டயர்கள் சரியான இயக்கத்தினை வெளிப்படுத்தாமல் சிரமப்படுவதனால் மைலேஜ் குறையும். அதிகமான காற்று இருப்பதும் மிகவும் தவறான ஒன்றாகும்.

3. மித வேகம்

பைக்கில் மணிக்கு 60 கிமீ வேகத்திற்கு மேல் பயன்படுத்துவனை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். சுமார் மணிக்கு 40 கிமீ வேகத்திலிருந்து 60 கிமீ வேகத்திற்குள் பயன்படுத்தினால் சிறப்பான மைலேஜ் பெறலாம்.

4. கார்புரேட்டர்

என்ஜினுக்கு தேவையான காற்று மற்றும் எரிபொருளை கொண்டு செல்லும் கார்புரேட்டரை சரியாக வைத்து கொள்ளுவது அவசியம். இதில் உள்ள காற்று மற்றும் எரிபொருள் செல்வதற்கான ஸ்க்ரூ மற்றும் என்ஜின் ஐடில் ஆர்பிஎம் ஸ்க்ரூ, இவற்றில் காற்று மற்றும் எரிபொருளுக்கான ஸ்க்ரூவினை அதிக காற்று குறைவான எரிபொருள் என்ற முறையில் வைத்தால் சிறப்பான மைலேஜ் கிடைக்கும். ஆனால் பெர்ஃபாமென்ஸ் சற்றுகுறையும்.

ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் (FI) டைப் வாகனங்களில் இசியூ இந்த வேலையை செய்து கொள்ளுவதனால், சிரமங்கள் இல்லை.

 

5. பிரேக்

தேவையற்ற நேரங்களில் பிரேக்குகளை தவிர்க்கவில்லை என்றால் மைலேஜ் குறையும் அதிவேகத்தில் சென்று திடீரென பிரேக் பிடிப்பதனால் எரிபொருள் இழப்பு மிகுதியாக இருக்கும். எனவே தேவையற்ற வேகத்தை தவிர்த்தால் பிரேக்கிங் திறன் கூடும், எனவே மைலேஜ் அதிகரிக்கும்

மேலும் படிக்க ; மைலேஜ் என்பது எமாற்று வேலை ?

6. டாப் கியர்

அதிகமாக குறைந்த கியரில் இயக்கினால் மைலேஜ் குறையும் எனவே முடிந்த வரை  டாப் கியரில் பயணம் செய்தால் சிறப்பான மைலேஜ் கிடைக்கும். டாப் கியர் வேகத்தில் செல்லும் பொழுதும் சற்று குறைவான வேகத்தில் சென்றாலும் அதற்கு ஏற்ப செயல்படும்.

மேலும் படிக்க ; மைலேஜ் அதிகம் பெறும் வழிமுறைகள்

முதல் பதிவு செய்த நாள் : April 07, 2015 – 05:16 PM

உங்கள் பைக்கை தினமும் சோதனை செய்வது எப்படி ? – பைக் பராமரிப்பு

bs6 pulsar 150

உங்கள் பைக் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருப்பது என்ன ? பைக்கில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன ? நீங்கள் அதனை தினமும் சோதனை செய்கிறீர்களா ? இந்த கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன , ஆம் இல்லை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை..!

உங்களின் பயணத்தின் தோழனாக பயணிக்கும் பைக் பற்றி அவசியம் நீங்களே செக் செய்ய வேண்டிய முக்கிய அம்சங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

பைக் பாதுகாப்பு செக்லிஸ்ட் பற்றி தெரிந்து கொள்ளலாம்

டயர்

பைக்கின் டயரை தினமும் சோதனை செய்து திரட் பேடர்னில் உள்ள கற்கள் , ஆணிகள் போன்றவை இருந்தால் நீக்குவது மிக அவசியம். டயரின் காற்றுழுத்தத்தை டயரின் வெப்பம் மிக குறைவாக உள்ள நேரத்தில் வாரம் இருமுறை தோதனை செய்யுங்கள்

வீல்
ஆலாய் வீல் மற்றும் ஸ்போக் வீல் என எதுவாக இருந்தாலும் அதன் தன்மையை கைகளால் சோதனை செய்யுங்கள். எங்கேனும் விரிசலோ அல்லது ஸ்போக் லூசாக இருந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும்.
பிரேக்
என்ஜின் இதயம் என்றால் பிரேக் வாகனத்தில் பயணிப்பவருக்கான உயிர்நாடி, எனவே அவசியம் சோதனை செய்யுங்க…
ஆயில்
ஆயில் மற்றும் கூலன்ட் முறையான சர்வீஸ் பல இன்னல்களை தவிர்க்க உதவும் எனவே தயாரிப்பாளர் பரிந்துரைத்த மைலேஜ்படி ஆயில் சர்வீஸ் செய்வது மிக அவசியம். அதேபோல ஆயில் லெவல் மாதம் இருமுறை செக் பன்னுங்க..
எலக்ட்ரிக் சிஸ்டம்
ஜீரோ பராமரிப்பு பேட்டரிகளை பயன்படுத்துவது மிக அவசியமானதாகும். மேலும் முகப்பு விளக்குகள் , பின்புற விளக்குகள் மற்றும் இண்டிகேட்டரை தினமும் சோதனை செய்ய வேண்டும்.
சஸ்பென்ஷன்
முன் ஃபோர்க்குகளை மற்றும் பின் சாக் அப்சார்பர்களை பயணித்தின் பொழுது சொகுசு தன்மையில் மாறுதல் உள்ளதா ? என்பதனை கொண்டு சோதிக்கவும்.
ஸ்டாண்டு

சைட் ஸ்டாண்டு மற்றும் சென்டர் ஸ்டாண்டு இரண்டின் ஸ்பிரிங் டென்சனை சோதிப்பது அவசியம்.

For more news from AutomobileTamilan, follow us on Twitter @automobiletamilan and on Facebook at facebook.com/automobiletamilan

பெட்ரோலை சேமிக்க டிப்ஸ்கள்

சர்வதேச விலை உயர்வை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலைகள் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், உங்களால் குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் போறவற்றை வாங்குவதை நினைத்து கூட பார்க்க முடியாத நிலையில் தற்போது உள்ளது. இந்நிலையில், இதற்கு ஏற்றவாறு எப்படி நம்மை தயார் படுத்தி கொள்வது என்பதை பார்க்கலாம்.

ஒவ்வொரு பெட்ரோல், டீசல் துளியையும் முழுமையாக பயன்படுத்தி கொள்வதே இதற்கு சிறந்த வழியாக இருக்கும். இதை எப்படி செய்வது என்பதை ஆய்வு செய்த பொருளாதார நிபுணர்கள், அதற்கான 5 டிப்ஸ்களை வெளியிட்டுள்ளனர். அவை.

1. உங்கள் காரை முறையான பராமரிப்பது:

ஆண்டுதோறும் உங்கள் காரை தொடர்ச்சியாக பராமரித்து வருவது உங்கள் காரின் எரிபொருள் திறனை அதிகரிக்க உதவும், சரியான பராமரிப்பு கொண்ட வாகனங்கள் உரிமையாளர்களுக்கு சிறந்த முறையில் எரிபொருள் திறனை அதிகரித்து கொடுக்கும்.

முறையாக பராமரிப்பு செய்யப்பட்ட வாகனங்கள் என்பது, குறிப்பட்ட கால இடைவெளியில் சரியான ஆயில் மாற்றப்படுவது, பில்டர்களை மாற்றியமைப்பது மற்றும் அதிகப்படியான எரிபொருள் திறனுக்காக எந்த விதமான ஆற்றல் பாதிப்பும் இல்லாத வகையில், பைன்-டூயூன் செய்யப்பட்ட காரக இருக்கும்.

எரி’பொருள் திறனை அதிகரிக்க, காரில் ஏர்-கண்டிசனை பயன்படுத்த கூடாது என்று சிலர் கூறுவார்கள். நாங்கள் பார்த்த வரை இது சாத்தியமற்றதாகவே உள்ளது. இதற்கு பதிலாக நீங்கள் எர்கான்-ஐ கிளீன் செய்து, கேபின் வசதிக்கு தேவையான வகையில் பரமாரிப்புகளை செய்து கொள்ளலாம். இந்த நிலையில் தெர்மோஸ்டாட்டை முழு அளவு பயன்படுத்தப்படாமல் இருந்து அதிகளவு எரிபொருள் செலவாகும்.

2. உங்கள் காரின் டயர் அழுத்ததை சோதனை செய்வது:

உங்கள் காரின் டயரில் உள்ள அழுத்தம் 1 psi அளவுக்கு குறைந்தால், எரிபொருள் செலவு மூன்று சதவிகிதம் அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஏன்என்றால், அழுத்தம் குறைவான டயர்கள் இயங்க அதிக ஆற்றலை எடுத்து கொள்ளும். அதிவேகமாக செல்லும் போது இன்னும் அதிகளவு எரிபொருள் செலவாகும்? டயர்களை வாரத்திற்கு ஒருமுறை சோதனை செய்து கொள்ளும் பழக்கம் இதுபோன்ற எரிபொருள் செலவை குறைக்க உதவும். சில மக்கள் இது ஒரு சின்ன வேலை என்றும் சொல்வார்கள், ஆனாலும், டயர் மானிட்டரிங் சிஸ்டம் பொருத்துவது இந்த பிரச்சினைக்கான தீர்வை எளிதாக்கும்.

கூடுதலாக, நீங்கள் உங்கள் கார்களில் உள்ள பழைய டயர்களை, கிரீன் டயர்களாக மாற்றி விட வேண்டும்.. இந்த டயர்கள் குறைந்த ரெசிஸ்டன்ஸ் கொண்ட ரோலிங் திறனுடன் இருக்கும்.

3. எரிபொருளை சேமிக்கும் எண்ணத்துடன் செயல்படுவது:

எரிபொருளை சேமிக்கும் அடிப்டையான முறைகள் தெரிந்து கொண்டு, திறமையுடன் காரை ஒட்டி செல்வது நல்லது. இதற்கான முதல் விதிமுறை உங்கள் கையில் உள்ளது, காரை ஒட்டி செல்லும் போது அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும், முன்னால் செல்லும் காரை போதிய இடைவெளி விட்டு தொடர்ந்து செல்வது அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்த்து, இதனால் அதிகரித்தும் எரிபொருள் தேவையை குறைக்கும். இதுபோன்று பயணிப்பது, உங்கள் பாதுகாப்புக்கும் உதவும்.

பொறுமையாக காரை ஓட்டுவது எரிபொருள் சேமிப்பின் மற்றொரு வகையாகும். மக்கள் அதிக செல்லும் பகுதியில் காரை ஒட்டி செல்லும் போது அடிக்கடி காரை நிறுத்தி அல்லது வேகத்தை குறைத்து செல்வது ஆற்றல் இழப்பை ஏற்படுத்தும். அமைதியான முறையில் காரை ஒட்டுவ்துடன், 2,000 rpm வேகத்தில் பயணம் செய்வது, டெக்கோமீட்டர் வேகம் குரூஸ் கண்ட்ரோல் ஸ்பீட்டை எட்டும் வரை இதே வேகத்தில் பயணம் செய்வது நல்லது. எக்ஸ்பிரஸ்வே-களில் பயணம் செய்யும் போது எரிபொருளை குறைக்கும் நோக்கில் சில டிரைவர்கள் 2,500 rpm ஆற்றலை பேலன்ஸ் செய்து பயணம் செய்வார்கள்.

இருந்தபோதிலும், இன்ஜின் எந்த தடையுமின்றி அதிக கியரில் பயணம் செய்வது எரிபொருள் செலவை குறைக்கும். புதிய கார்களில் ஐந்துக்கு மேற்பட்ட கியர் டிரான்ஸ்மிஷன்கள் உள்ளன. இதுமட்டுமின்றி இந்த கார்களில் குரூஸ் கண்ட்ரோல் ஆப்சன்களும் உள்ளத்தால், எரிபொருள் செலவாகும் அளவு குறையும்.

4. தேவையற்ற அசிஸ்சொரிஸ்கள் மற்றும் பேக்கேஜ்களை தவிர்ப்பது:

காரை நவீனமாயமாக காரில் பொருத்தப்பட்டுள்ள அசிஸ்சொரிஸ்கள் அவசியமாக இருந்த போதும், சில பாகங்கள், எரிபொருள் செலவை அதிகரித்தும் வகையிலே உள்ளன. குறிப்பாக ரூஃப் ரேக், இதை பயன்படுத்தாமல் இருக்கும் போதும், இதை அகற்றி விடுவதே நல்லது. ஏன்என்றால், இவை, காரில் எரிபொருள் செலவில், 5 சதவிகிதம் அளவுக்கு பயன்படுத்தி கொள்ளும்.

தேவையற்ற பேக்கேஜ்களை எடுத்து செல்வதால், வழக்கத்தை விட 45 கிலோ மீட்டர் பயணிக்கும் எரிபொருள் அளவு அதிகரிக்கும். இதை குறைத்தால் 2 சதவிகித எரிபொருள் பயன்பாட்டை அதிகரித்து கொள்ள முடியும். இதனால், எவ்வளவு முடியுமோ, அவ்வளவு லக்கேஜ்களை குறைந்து விட வேண்டும்.

5. பயணத்தை முன்பே திட்டமிடுவது:

எக்கோ டிரைவிங் ஸ்டைல் மற்றும் முறையான திட்டமிடல் ஆகியவை எரிபொருள் திறனை அதிகரிக்கும் உங்கள் முயற்சிக்கு வெற்றியை கிடைக்க செய்யும். உங்கள் பயணத்தை திட்டமிடும் போது, மேப்களை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும். இதன் மூலம் பயணம் நேரத்தை வேகமாக சரியான பாதையில் சென்றடைந்து எரிபொருள் திறனை அதிகரிக்க செய்ய முடியும். இந்த திட்டமிடலின் போது போக்குவரத்து நெரிசல் அதிகமான நேரத்தை மனதில் கொண்டு அந்த பயணிப்பதை தவிர்க்கும் வகையில் திட்டமிட வேண்டும். கூடுதலாக, மொபைல் போன் அப்ளிகேஷன்களை பயன்படுத்தி, டிராபிக் ரிப்போர்ட்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதிக போக்குவரத்து நெரிசல் இருந்தால், சற்று பொறுமையாக இருந்து பயணத்தை தொடர வேண்டும்.

இறுதியாக, நீங்கள் மேற்குறிய டிப்ஸ்களை பயன்படுத்தினாலும், பயன்படுத்தா விட்டாலும் கவலையில்லை. உங்கள் டிரைவிங் ஸ்டைலை மாற்றினாலே எரிபொருள் திறனை அதிகரித்து, உங்கள் பர்சில் இருந்து செல்லும் பணத்தை சேமிக்கலாம். பணத்தை சேமிக்க விரும்பும் ஒவ்வொருவரும், அதற்காக நேரம், உழைப்பு மற்றும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். இந்த போதும், மேற்குறிய ஐந்து வழிகளும், உங்கள் எரிபொருள் திறனை அதிகரிக்க உதவும் என்பது உறுதியாக சொல்கிறோம்.

டயர் பராமரிப்பு டிப்ஸ்

டயர் வாகனங்களின் மிக இன்றியமையாத பகுதியாகும். டயர் பராமரிப்பு எப்படி, டயரில் சரியான காற்றழுத்ததை பராமரிப்பது எவ்வாறு, டயரில் பதியும் கற்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை சோதனை செய்வது எவ்வாறு என தெரிந்துகொள்ளலாம்.

டயரினை முறையாக பராமரித்தல் பல்வேறு இன்னல்களில் இருந்து தவிர்க்கலாம். முறையான தொடர் பராமரிப்பு மற்றும் சரியான கால இடைவெளியில் டயரினை மாற்றுவது மிக அவசியம்.

டயர் பராமரிப்பு குறிப்புகள்

1. வீல் அலைன்மென்ட்

வீல் அலைன்மென்ட் மற்றும் பேலன்சிங் விவரங்களை தொடர்ந்து பராமரித்தல் அவசியம். வீல் அலைன்மென்ட் இயல்பாகவே மாறக்கூடியதாகும். சாலைகளில் பயணிக்கும் பொழுது பள்ளங்கள், மேடுகள் என சாலையின் சூழ்நிலைகளுக்கேற்ப டயர் இயங்குவதால் வீல் அலைன்மென்ட் மாறிகொண்டே இருக்கும்.
டயரின் முக்கிய அம்சமான கேஸ்டர் மற்றும் கேம்பர் சரியான விகிதத்தில் பராமரிப்பு அவசியம். முறையான அலைன்மென்ட மற்றும் பேலன்ஸ் இல்லாமல் இருந்தால் டயரில் முறையான தேய்மானம் இருக்காது. மேலும் சஸ்பென்ஷன் அமைப்பு பாதிக்கும்.
2. டயர் சோதனை
டயர் சோதனை செய்வது மிக அவசியம். தினமும் 10 நிமிடம் ஒதுக்கி டயரினை சோதியுங்கள். டயரில் தேவையற்ற பொருட்கள் தங்குவதற்க்கான வாய்ப்புகள் அதிகம். கற்கள் போன்றவற்றை நீக்கமால் இருந்தால் டயரின் ஆயுட்காலம் பாதிக்கப்படும்.
டயரின் திரெட்களில் கற்கள் தங்க வாய்ப்புள்ளது. இதனை கண்டறிய 1 ரூபாய் நானையத்தை பயன்படுத்துங்கள். டயரின் திரெட்களில் நானையத்தை கொண்டு சோதிக்கும் பொழுது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அவற்றில் மேடு பள்ளங்கள் ஏற்பட்டால் அந்த இடத்தினை சோதியுங்கள்.
டயர் முறையான தேய்மானத்தில் இருக்கின்றதா என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.
3. டயர் இடமாற்றுதல்
டயரினை இடம் மாற்றி போடும்பொழுது மெக்கானிக்கின் பரிந்துரையை பின்பற்றுங்கள். முறையான தேய்மானம் முன்பற டயர்களில் ஏற்படுவது சற்று சிரமம்தான் அதற்க்கு காரணம் முன்புற டயர்களின் அதிக அழுத்தம்தான்.
முன்புற இடது டயரை பின்புற வலது டயருக்கு மாற்றுங்கள். உதவி டயர்கள் இல்லாத பட்சத்தில் நேராகவே மாற்றிக்கொள்ளுங்கள். உதவி டயர் இருக்கும்பட்சத்தில் கடிகார திசைப்படி டயரினை மாற்றுங்கள். இதனால் 5 டயர்களும் முறையான தேய்மானத்தை அடையும்.
4. புதிய டயர் வாங்குமுன்
தேய்மான அடைந்த டயர்களை மாற்றிவிடுங்கள். மேலும் புதிய டயர் வாங்கும்பொழுது விலை குறைவானதா இருந்தாலும் தயாரிப்பாளர் பரிந்துரைத்த டயர்களை வாங்குங்கள்.

மரக்கூழ் கொண்டு கார்களை வடிவமைக்கும் தொழில்நுட்பம்

எஃகினால் செய்யப்படும் காரின் உதிரிபாகங்களுக்கு பதிலாக மரக்கூழைக் கொண்டு வலுவான பாகங்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இன்னும் பன்னிரெண்டு வருடங்களில் நடைமுறைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஜப்பான் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

வாகனத்தின் இன்ஜினுக்கு அருகே உள்ள உலோக பாகங்களுக்கு பதிலாக, அதிக வெப்பத்தைத் தாங்கும் பிளாஸ்டிக்கால் ஆன பாகங்களை உருவாக்ககும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

கார்களின் எடையை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட அத்துறையின் முக்கிய கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

“அதிக மாசுபாட்டை உருவாக்கும் கார்கள், குறிப்பாக எஸ்.யு.வி. வகை கார்கள், அல்லது கனரக வாகனங்களின் எடையை விரைவில் கூடுமானவரை குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்று ஐ.ஹெச்.எஸ் மார்க்கிட் என்னும் பல்துறை ஆய்வு நிறுவனத்தின் வாகன கூறுகள் ஆய்வு பிரிவின் தலைவரான பவுலோ மார்ட்டினோ கூறுகிறார்.

எடை குறைந்த கார்களுக்கு குறைந்த எரிபொருளே தேவைப்படும். வாகனத்தின் எடையில் 10% குறைந்தால் அது வாகனத்தின் எரிபொருள் பயன்பாட்டை 8% வரை குறைக்கும் என்று அமெரிக்க எரிசக்தி துறை கூறுகிறது.

தயாரிப்பாளர்கள் மின்சக்தியில் இயங்கும் கார்களையும் இலகுவாக்குவதன் மூலம் ஒரு முறை சார்ஜ் செய்தாலே அதிக தூரம் சென்று கார் உரிமையாளர்களின் கவலையைத் தீர்க்குமென்று மார்டினோ தெரிவித்தார்.

இங்குதான் மரம் உள்ளே வருகிறது. இதுவரை, வரை மரம் கப்பல் கட்டவும், வீடுகள் மற்றும் மரச்சாமான்கள் தயாரிக்கவும் நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜப்பானில் உள்ள கியோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மரக் கூழில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவிதமான பொருள் எஃகு போன்று வலுவானதாகவும் 80% இலகுவானதாகவும் இருக்குமென்று கூறுகிறார்கள்.

மில்லியன் கணக்கான செல்லுலோஸ், நானோஃபைர்ஸ் (சிஎன்எஃப்) மற்றும் சிஎன்எஃப் பிளாஸ்டிக்காக சிதறடிக்கப்பட்டு, வேதியியல் சோதனைக்கு இந்த மரக்கூழ் உட்படுத்தப்படுகிறது.

சிஎன்எஃப்களை பிளாஸ்டிக்கால் வளைப்பதன் மூலம் அது வலுவான கலப்பின பொருளை உருவாக்குகிறது. அது எஃக்குக்கு மாற்றான உதிரிப்பாகங்களை உருவாக்கப் பயன்படுமென்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த பொருளானது காரினுடைய கதவுகள், மோதலை தவிர்க்கும் அமைப்பு மற்றும் காரின் மேற்பகுதி மூடி போன்றவற்றை தயாரிக்கப் பயன்படுமென்று கியோட்டோ பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் குழுவின் தலைவரான பேராசிரியர் ஹிரோயுகி யானோ கூறியுள்ளார்.

பேனாவின் மை முதல் ஒளி ஊடுருவுகிற திரைகள் வரை என பல்வேறு பொருட்ககளில் செல்லுலோஸ் நானோ ஃபைபர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கார்பன் ஃபைபர் போன்ற வர்த்தக ரீதியாக பயன்பாட்டுக்கு வந்த இலகுரக பொருட்களுக்கிடையே ஏராளமான போட்டிகள் நிலவும் நிலையில், சிஎன்எஃப்-அடிப்படையிலான பாகங்கள் அதற்கு சாத்தியமான மாற்றாக இருக்க முடியும் என்று நம்புகிறார் பேராசிரியர் யானோ.

ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் சிறப்பு பிளாஸ்டிக் மூலம் கார் பாகங்களை தயாரிக்கும் முயற்சியில் தனித்தனியாக ஈடுபட்டுள்ளார்கள்.

ஜப்பானின் மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியரான டாட்சுனோ கனெகோ, உயிரியல் மூலக்கூறுகளினால் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை உருவாக்கி வருகிறார்.

இந்த புதிய பொருளும் எஃகைவிட இலகுவான மற்றும் 300 செல்ஷியஸ் வெப்பம் வரை தாங்கவல்லதாக இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

“வெப்பம் தாங்க முடியாமல் போவதால், இன்ஜினுக்கு அருகிலிருக்கும் வெப்பப் பகுதியில் பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்படுவதில்லை” என பேராசிரியர் கனெகோ கூறுகிறார்.

“ஆனால், நான் உருவாக்கிய உயிரி பிளாஸ்டிக்குகள் அதிக வெப்பநிலையை தாங்கக்கூடும்” என்கிறார்.

இவர் பல ஜப்பானிய கார் தயாரிப்பாளர்கள், கார் பகுதி மற்றும் மின்னணு உற்பத்தியாளர்களுடனும் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும், இன்னும் ஐந்தாண்டுகளில் எஃகுக்கு ஒரு சாத்தியமான மாற்றாக இருக்கும் பொருளைப் பயன்படுத்துவதன் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, அது வாகனத்தின் எடையை குறைந்துவிடும் என்பதே ஆகும்.

இலகுவான பிளாஸ்டிக் கார் பாகங்கள் கரியமில வாயு வெளியாகும் அளவைக் குறைக்கின்றன. ஆனால், அவற்றின் உற்பத்தி பிற சுற்றுச்சூழல் அபாயங்களைக் கொண்டுவரவில்லையா?

கண்ணாடி போன்ற பொருட்களை பயன்படுத்தி உயிரி பிளாஸ்டிக் போன்ற மாற்றுப் பொருட்களை தயாரிப்பது மாசுபாட்டை அதிகரிக்கக்கூடும் என்று பேராசிரியர் கனெகோ ஒப்புக்கொள்கிறார், ஏனெனில் அத்தகைய கழிவுப்பொருட்கள் மக்கும் தன்மை கொண்டவையல்ல.

ஆனால், அவர் தான் உருவாக்கியுள்ள பொருட்கள், பாரம்பரிய பிளாஸ்டிக்கை விட சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்று கருதுகிறார்.

வழக்கமான பெட்ரோலிய அடிப்படையிலான பிளாஸ்டிக்குகளின் உற்பத்தி பெரிய அளவிலான கார்பன்-டை-ஆக்சைடை உருவாக்குகிறது. அதேசமயம் நுண்ணுயிர்களில் இருந்து தயாரிக்கப்படும் உயிரி-பிளாஸ்டிக்குகள் குறைந்த அளவு கழிவுகளை உற்பத்தி செய்கின்றன என்று அவர் கூறுகிறார்.

“பசுமையான” பொருட்களைப் பயன்படுத்துவதற்கான எண்ணம், வாகன உற்பத்தியாளர்களிடையே வேகத்தை எடுத்துள்ளது.

மாசு மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் வகையில் 2040 ஆம் ஆண்டில் புதிய டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை தடை செய்ய இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய கார் சந்தையான சீனா, 2025 ஆம் ஆண்டில் அதன் வாகன விற்பனையில் குறைந்தபட்சம் ஐந்தில் ஒரு பங்கை மின்சார பேட்டரி கார்கள் மற்றும் மற்ற சுற்றுசூழலுக்கு உகந்த கார்களை விற்று தன் இலக்கை எட்டிட வேண்டும் என்று விரும்புகிறது.

குறைந்த எடை கொண்ட கார்களை உருவாக்குவதில் கவனம் செலுத்திய பி.எம்.டபிள்யூ, கார்பன் ஃபைபரை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் கடந்த மாதம் கார்பன் ஃபைபரால் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் கூரையுடைய ஒரு புதிய மெலிதான M5 செடானை அறிமுகப்படுத்தியது.

டொயோட்டா நிறுவனம் அதன் பிரியஸ் பிரைம் மற்றும் லெக்ஸஸ் எல்சி 500 வகை கார்களில் மேற்கண்ட அதே பொருளைப் பயன்படுத்தி எடையை குறைத்து, ப்ரியஸில் பேட்டரி அளவை அதிகரித்துள்ளது.

ஜாகுவார், அலுமினியம் மீது கவனம் செலுத்துகிறது. அலுமினியம் எஃகுக்கு சமமான அளவு மூன்றில் ஒரு பங்கு எடை மட்டுமே உள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது.

“ஒரு அலுமினிய அடிப்பீடம் (Chassis) மூலம் குறைக்கப்பட்ட ஒவ்வொரு 100 கி.கி. எடையும் வாகனத்தின் கார்பன் டை ஆக்சைடு வெளியாகும் அளவை ஒரு கிலோமீட்டருக்கு 9 கிராம் குறைக்க உதவுகிறது. மேலும், அதன் வாழ்நாள் எரிபொருள் பயன்பாட்டில் 800 லிட்டர் வரை சேமிக்கிறது,” என்று ஜாகுவார் நிறுவனம் கூறுகிறது.

காரின் மேற்புற கண்ணாடிகள் மற்றும் மற்ற கண்ணாடி தொடர்புடைய உதிரி பாகங்களில் பயன்படுத்தும் கொரில்லா வகை கண்ணாடி தயாரிப்பாளரான கோரிங், தனது உயர்-தொழில்நுட்ப கண்ணாடியானது மற்ற கார்களின் கதவுகளில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகளை விட மூன்று மடங்கு மெலிதானது என்று தெரிவித்துள்ளது.

நன்றி — > பிபிசி தமிழ்

டிராவல் இன்சூரன்ஸ் என்றால் என்ன ? பலன் தருமா

பஸ் பயணத்தில் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் ஏற்படும் இழப்பீடுகளை சமாளிக்க உதவும் வகையில் வழங்கப்படுகின்ற டிராவல் இன்சூரன்ஸ் என்றால் என்ன ? இதுபற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.

டிராவல் இன்சூரன்ஸ்

பிரசத்தி பெற்ற ரெட் பஸ் நிறுவனம் வழங்குகின்ற ரூ.15 மதிப்பிலான பயண காப்பீடு தொடர்பான முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். பயணத்தின் போது ஏற்படுகின்ற எதிர்பாரத விபத்து, உடமைகள் இழப்பு அல்லது விபத்தினால் காயங்கள் ஏற்படும்போது நமக்கு உதவிகரமானதாக டிராவல் இன்சுரன்ஸ் உதவி புரிகின்றது.

வெறும் 15 ரூபாய் டிராவல் இன்ஷுரன்ஸ் வாயிலாக காயமடைந்தவர்களுக்கு 1,00,000 ரூபாய்க்கான மருத்துவமனை செலவுகள், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால், தினசரி 500 ரூபாய் வீதம் அதிகபட்சம் 7 நாட்களுக்கு உதவித்தொகை, உடைமைகளை இழந்தால் 3,000 ரூபாய் கிடைக்கும். இது தவிர தனிப்பட்ட விபத்துக்கு 600,000 ரூபாய் வழங்குகின்றது.

பஸ் பயணம் ரத்து அல்லது இடையூறு என ஏதாவது  நேர்ந்தால் 1,500 ரூபாய் உள்பட பலதரப்பட்ட பிரச்னைகளுக்கும், பாலிசி எடுத்தவர்களுக்கு இன்ஷுரன்ஸ் க்ளெய்ம் பெறும் முறை வழங்கப்படுகிறது.

டிராவல் காப்பீடு பொறுத்தவரை பெரும்பாலும், ஒரு வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை பாலிசி வழங்கப்படுகிறது. இந்த பாலிசிக் காலம் ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

மருத்துவமனைச் செலவுகள்! 

பேருந்து பயணத்தின்போது விபத்து நேர்ந்தால் பின்வருகின்ற மருத்துவமனை செலவினங்களை காப்பீடு நிறுவனம், பாலிசிதாரருக்கு திருப்பிச் செலுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் தங்கும் செலவு, நர்சிங் செலவு, மருத்துவ பரிசோதனை செலவு, மருத்துவர் கட்டணம், மருத்துவமனையால் வழங்கப்பட்ட மருந்தகங்களின் செலவு அல்லது மருத்துவமனையல்லாத பதிவு செய்யப்பட்ட மருந்தகத்திலிருந்து வாங்கப்பட்டதற்கான செலவு மற்றும் பிசியோதெரபி செலவு போன்ற மருத்துவ செலவுகளுக்கு க்ளெய்ம் வழங்கப்படுகிறது.

பிரசத்தி பெற்ற ரெட்பஸ் உள்ளிட்ட பல்வேறு தனியார் பஸ் நிறுவனங்களுடன் இணைந்து ஐசிஐசிஐ லம்போர்டு காப்பீடு நிறுவனம் செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தில் க்ளெய்ம் செய்வது தொடர்பான விபரங்களை பின்வருமாறு காணலாம்.

க்ளெய்ம் செய்யும் வழிமுறை ?

ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் பட்சத்தில் வழங்கப்படுகின்ற இந்த சிறப்பு டிராவல் காப்பீடு திட்டத்தை க்ளெய்ம் செய்ய விபத்து அல்லது உடைமைகள் களவு போகும் பட்சத்திலோ உடனடியாக இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரியப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இதனை தெரியப்படுத்த, இலவச தொலைபேசி எண் 1800 2666 அல்லது ihealthcare (at) icicilombard.com என்ற இமெயில் முகவரிக்குத் தெரியப்படுத்தலாம். மேலும் இதுதொடர்பான டாக்குமென்டுகளை அதாவது மருத்துவமனை ரசீது, மருத்துவமனை செலவு உள்பட தேவையான மற்றும் சரியான ஆவணங்களைக் கடிதம் மூலமாக அனுப்பி வைக்க வேண்டிய முகவரி

ICICI LOMBARD GENERAL INSURANCE COMPANY LIMITED

ICICI Lombard General Insurance Company Ltd. Group Travel Insurance

ICICI Bank Tower, Plot No. 12,

Financial District, Nanakram Guda, Gachibowli,

Hyderabad, Telangana,  Pin Code: 500032

க்ளெயம் செய்வதில் பிரச்சனைகள் எதிர்கொண்டால் ?

கீழே வழங்கப்பட்டுள்ள காப்பீடு குறைதீர்ப்பு மையத்தைத் தொடர்பு கொண்டு க்ளெய்ம் பெற்றிடுங்கள்.

Office of the Insurance Ombudsman,

Fatima Akhtar Court,

4th Floor, 453 (old 312),

Anna Salai, Teynampet,

CHENNAI – 600 018.

Tel.:- 044-24333668 / 24335284

Fax:- 044-24333664

Email:- bimalokpal.chennai@gbic.co.in