2022 ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 எதிர்பார்ப்புகள்

உலகின் மிகப் பழமையான மோட்டார் சைக்கிள் மாடலான ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கின் புதிய தலைமுறை மாடல் சாலை சோதனை ஓட்டம் செய்யப்பட்டு வருகின்றது. என்ஃபீல்டு நிறுவனத்தின் J-series எஞ்சின் பயன்படுத்தப்பட்ட புதிய மாடல் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஜே-சீரிஸ் எஞ்சின், தற்போது இந்நிறுவனத்தின் 350cc பைக் வரிசை கொண்டுள்ளது, இதில் மீட்டியோர் 350, கிளாசிக் 350 மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹண்டர் 350 ஆகியவை அடங்கும்.

ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350

புதிய தலைமுறை 350 மாடல்களில் இருந்து நன்கு அறியப்பட்ட 349சிசி ஜே-சீரிஸ் 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க்கை எஞ்சின் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

புல்லட் 350 மாடலில் பெரும்பாலான பாகங்கள் கிளாசிக் 350 பைக்கினை போலவே உள்ளது, சில தனித்துவமான மாற்றங்களை புல்லட் 350 கொண்டிருக்கும். இரண்டு துண்டு இருக்கைக்கு பதிலாக ஒற்றை துண்டு உள்ளது. மேலும், பின்புற ஃபெண்டரின் வடிவமைப்பு கிளாசிக்கிலும் வேறுபட்டது. சோதனை ஓட்டத்தில் காணப்பட்ட பைக்கில், கிளாசிக் 350 போன்ற அதே டெயில்-லேம்ப் மற்றும் இண்டிகேட்டர்கள் இடம்பெற்றுள்ளன.

விரைவில் விற்பனைக்கு வர உள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடல் ஆனது பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கும் எனவே இந்த பைக்கின் விலை சற்று கூடுதலாக அமைந்திருக்கும். என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 குறைந்த விலை மடலாக விளங்குவதனால் அதனை விட சற்று கூடுதலாக ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 ரூபாய் 1.55 லட்சத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது

உங்கள் கார் டயர்களை பராமரிப்பதற்கான டிப்ஸ்கள்

நீங்கள் உங்கள் காரின் டயரை சிறிதளவு கவனமாக பார்த்து கொண்டால் கண்டிப்பாக நீண்ட ஆயுளை பெறுவதுடன், புதிய டயர்களுக்கு செலவிடுவதையை தவிர்க்க முடியும். உங்கள் காரின் டயர்கள் அதிக மைலேஜ் அளிக்க கடைபிடிக்க வேண்டிய முறைகள் குறித்து ஐந்து டிப்ஸ்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

டயர் அழுத்தை சரியான முறையில் பராமரித்தல்

ஆரோக்கியமான ஜோடி வீல்களை பராமரித்து வருவது நீங்கள் உங்கள் கனவு வாகனத்தை நீண்ட நாள் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். டயர்களின் அழுத்தத்தை தொடர்ந்து செக் செய்து கொள்வது, உங்கள் காரின் இன்ஜினில் இருந்து அதிக மைலேஜ் பெற உதவும், குறைந்த அழுத்தம் கொண்ட டயர்கள் இயங்க அதிக ஆற்றல் தேவைப்படும், இது உங்கள் எரிபொருள் திறனை அதிகரிப்பதுடன், இன்ஜின் அழுத்தத்தையும் அதிகரிக்கும். சரியான அழுத்தம் கொண்ட காரின் டயர்களுடன் சாலையில் பயணம் செய்யும் போது அந்த டயர்கள் அதிக பிடிமானம் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் உங்கள் வாகனத்தின் கண்ட்ரோல் சிறப்பாக இருக்கும். காரின் டயர்களில் குறிப்பிட்ட அளவை விட அதிகளவு அழுத்தம் இருந்தால், அது நீண்ட தூர பயணங்களின் போது ஆபத்தை விளைவிக்கும். இது போன்ற பயணங்களின் போது டயர்கள் வெப்பமடைந்து விரிவடையும். இதனால் உங்கள் காரின் டயர் வெடிக்க வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி குறைந்த காற்றழுத்தம் கொண்ட டயர்கள், அதிகளவு சாலையில் உராய்ந்து பயணம் செய்வதால், ஈரமான சாலைகளை செல்லும் போது பெரியளவில் பிரச்சினையை ஏற்படுத்தும்.

டயர்களை கவனமாக சோதனை செய்ய வேண்டும்

புதிய டயர்கள், 8-9mm ஆழமாக டிரிட் செய்யப்பட்டிருக்கும். இது டயர்கள் தேய்மானத்தை குறைக்கும். ஆனாலும், டயர்களின் டிரிட் ஆழம் 1.6mm அளவுக்கு கீழே செல்ல கூடாது. ஆகையால், இந்த விஷயத்தில் கவனமாக இருப்பது, நீங்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்வதற்கு முன்பு இதை செய்வதும் சிறந்ததாக இருக்கும். இதுமட்டுமின்றி தொடர்ச்சியாக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், தேவையற்ற உராய்வு எதுவும் உங்கள் காரில் உள்ளனவா? என்பதையும் சோதனை செய்து கொள்ள வேண்டும். காரை ஒட்டி செல்லும் போது, நீங்கள் ஸ்மூத்தாக செல்வது போன்று உணர வேண்டும். அப்படி நீங்கள் உணரவில்லை என்றால், கார் டயர்களின் அழுத்தத்தை செக் செய்ய வேண்டும் அல்லது கார் டயர்களின் அலைன்மென்ட்டில் பிரச்சினை உள்ளதா என்று சோதனை செய்து கொள்ள வேண்டும்.

உங்கள் டயர்களை மாற்ற வேண்டும்

நீண்ட தூரம் பயணம் செய்த டயர்களை மாற்றி கொள்வது சிறந்த வழியாக இருக்கும். குறைந்தது 5,000 முதல் 8,000 Kms பயனம் செய்த பின்னர் உங்கள் கார்களின் டயர்களை மாற்ற கொள்ள வேண்டும்.

உங்கள் காரின் ஸ்டீயரிங்கை பிடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்

உங்கள் காரின் ஸ்டீயரிங்கை பிடிக்கும் போது, அது வைப்ரேட் ஆவது போன்று நீங்கள் உணர்ந்தால், உங்கள் வீல்கள் சரியான பேலன்ஸ் செய்யப்படவில்லை என்று அர்த்தமாகும். இதுபோன்ற வைப்ரேஷன்கள், உங்கள் காரின் டயர் அதிகளவில் தேய்மானம் அடைந்துள்ளதை உங்களுக்கு உணர்த்தும். உடனடியாக கார் மெக்கானிக்கை தொடர்பு கொண்டு இந்த வைப்ரேஷன் ஏற்படுவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் வீல் பேலன்ஸ்-ஐ சரி செய்து கொள்ள வேண்டும்.

செய்ய கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை

ஒரே ஆக்சிளில் பொருத்தப்பட்டுள்ள உங்கள் டயர்களை மாற்றும் போது வெவ்வேறு தயாரிப்பாளர்களின் தயாரிப்புகளை கலந்து பயன்படுத்த கூடாது. பிரேகிங் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும், தேவையின்றி கடினமான முறையில் பிரேக்கிங் செய்வதை தவிர்ப்பது நல்லது.விரைவாக ஆக்சலரேட் செய்ய கூடாது. இது டயர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கடினமான பாதைகளில் பயணம் மேற்கொண்ட பின்னர், உங்கள் கார்களின் வீல் அலைன்மென்ட்டை சரியாக உள்ளதா என்று செக் செய்து கொள்ள வேண்டும். சரியான அலைன்மென்ட்டில் இல்லாத டயர்களால் உங்கள் காரின் மைலேஜ்-ஐ 30 சதவிகிதம் குறையலாம். உங்கள் டயர் சரியாக அலைன் செய்யப்பட்டுள்ளதாக என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சரியான அலைன் செய்யப்படாத டயர்களுடன் பயணிப்பதால், டயர்கள் வேகமாக தேய்மானம் அடைவதுடன், பல்வேறு டிரைவிங் பிரச்சினைகளுக்கும் வாய்ப்பாக அமைந்து விடும்.

நவீன கார்கள், அதிவேகமாக செல்லும் வகையிலும், சிறந்த முறையிலும் வடிவமைக்கப்பட்டு வந்த போதிலும், அந்த கார்களின் டயர்களை முறையாக பராமரித்து வருவது, காரை வசதியாக ஒட்டி செல்லவதுடன், உங்கள் பயணத்தை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சி கொண்டதாகவும் மாற்றும். மேற்குறிய டிப்ஸ்களை கடைபிடித்தால், உங்கள் காரின் டயர்களை சிறந்த முறையில் பராமாரித்து கொள்ள முடியும்.