120 கிமீ ரேஞ்சு.., டார்க் கிராடோஸ், கிராடோஸ் R இ-பைக் விற்பனைக்கு வந்தது

டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் கிராடோஸ் மற்றும் கிராடோஸ் R என இரண்டு எலக்ட்ரிக் பைக் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

கிராடோஸ், கிராடோஸ் R

இரு பைக் பாடல்களும் பொதுவாக 4KWh லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயக்கப்பட்டு IP67 சான்றிதழ் பெற்றதாக அமைந்துள்ளது. மற்றபடி ஈக்கோ, சிட்டி, ஸ்போர்ட்ஸ் உட்பட ரிவர்ஸ் மோட் ஆகிய டிரைவ் மோடுகளை பெற்றுள்ளது.

கிராடோஸ் மாடலில் 7.5kW, 28Nm மோட்டார் மூலம் இயக்கப்பட்டு 4 நொடிகளில் 0-40 கிமீ வேகத்தை எட்டும் திறனுடன் அமைந்துள்ளது. இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ ஆகும்.

கிராடோஸ் R மாடலில்  9kW, 38Nm மோட்டார் மூலம் இயக்கப்பட்டு 3.5 நொடிகளில் 0-40 கிமீ வேகத்தை எட்டும் திறனுடன் அமைந்துள்ளது. இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிமீ ஆகும்.

இந்நிறுவனம் வழங்கியுள்ள இந்தியன் டிரைவிங் சைக்கிள் முறைப்படி 180 கிமீ ரேஞ்சு வழங்கும் ஆனால் நிகழ் நேரத்தில் சாலையில் 120 கிமீ ரேஞ்சு வழங்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, புனே, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத் மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் முதற்கட்டமாக விற்பனைக்கு டார்க் வெளியிட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில் 100 நகரங்களில் வெளியிட உள்ளது.

Tork Kratos and Kratos R price –

Model Price Without Subsidy Price With Subsidy
Kratos Rs. 1,92,499/- Rs. 1,32,499/-
Kratos R Rs. 2,07,499/- Rs. 1,47,499/-

Prices are ex-showroom, Chennai

ஜனவரி 26.., டார்க் கிராடோஸ் இ-பைக் விற்பனைக்கு வருகின்றது

வரும் ஜனவரி 26 ஆம் தேதி விற்பனைக்கு டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக் மாடலாக கிராடோஸ் வெளியிடப்பட உள்ளது.
2016 ஆம் ஆண்டு முதன்முறையாக T6X என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தற்போது பல்வேறு மேம்பாடுகளை பெற்றுள்ள இந்த மாடல் ஆனது உற்பத்தி நிலை மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. வெளியிடப்படும் அன்றைக்கு முன்பதிவும் தொடங்கப்பட்டு மார்ச் முதல் வாரத்தில் டெலிவரியும் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

125 சிசி – 150 சிசி வரையிலான மோட்டார்சைக்கிள் சந்தையில் மிக சிறப்பான எலக்ட்ரிக் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ள கிராடோஸ் எலக்ட்ரிக் பைக் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.

லித்தியம் ஐன் பேட்டரி ஒரு மணி நேரத்துக்குள்ளாக 80 சதவீத சார்ஜ் ஏறும் வசதி கொண்டதாக இருக்கும்.  ஒரு முறை முழுமையான சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்கும் வகையில்மிக சிறப்பான பேட்டரி திறனை பெற்றதாக டார்க் டி6எக்ஸ் விளங்கும் வகையில் உள்ள பேட்டரியின் ஆயுட்கால வாரண்டி 80,000 கிலோமீட்டர் முதல் 1,00,000 கிமீ வரை அல்லது 3 முதல் 5 வருடங்கள் தருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

நீரால் எவ்விதமான பாதிப்பும் அடையாத வாட்டர் ப்ரூஃப் பாதுகாப்பை கொண்ட பேட்டரி 6 கிலோ வாட் மோட்டார் கொண்டு டியூப்லெர் ஸ்டீல் ஸ்வின்கிராம் இணைக்கப்பட்ட டெர்லிஸ் ஃபிரேம் பெற்றதாக வரவுள்ளது.  முன்பக்கத்தில் டெஸ்கோபிக் ஃபோர்க்குடன் கூடுதலாக டிஸ்க் பிரேக் ஆப்ஷனை டயரில் பெற்றுள்ளது. பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பருடன் , ரியர் டிஸ்க் பிரேக்கை பெற்றுள்ளது. மேலும் அடிப்படை பாதுகாப்பு அம்சமாக சிபிஎஸ் பிரேக்கை கொண்டுள்ளது.

டார்க் கிராடோஸ் விலை ரூ.1.60 லட்சத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

₹.1.98 லட்சத்தில் யெஸ்டி பைக்குகள் விற்பனைக்கு வந்தது

மஹிந்திரா நிறுவனம் யெஸ்டி பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ரோட்ஸ்டெர், அட்வென்ச்சர், மற்றும் ஸ்கிராம்பளர் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

யெஸ்டி பைக்

Roadster, Scrambler & Adventure மூன்று மாடல்களும் 334சிசி, சிங்கிள்-சிலிண்டர், DOHC, லிக்விட் கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்பட்டாலும்,  ஒவ்வொன்றும் வெவ்வேறு ட்யூன் நிலையில், சற்று மாறுபட்ட பவர் மற்றும் டார்க் மாறுபடுகின்றது. இதேபோல், ஒவ்வொரு பைக்கிலும் வெவ்வேறு சஸ்பென்ஷன் மற்றும் வீல் அளவுகள், மற்ற வேறுபாடுகளுடன் தனித்துவமான சேஸ் உள்ளது.

மூன்று மாடல்களும் LED ஹெட்லைட் மற்றும் டெயில்-லேம்ப் ஆகியவற்றைப் பெற்று டூயல் கார்டிள் சேஸ் உடன் வடிவமைக்கப்பட்டு, பிரேக்கிங் அமைப்பில் 320 மிமீ முன்புற டிஸ்க் மற்றும் 240 மிமீ பின்புற டிஸ்க் உடன் இரண்டு மிதக்கும் காலிப்பர்கள் பெற்று இரட்டை சேனல் ஏபிஎஸ் உடன் வருகின்றன.

யெஸ்டி ரோட்ஸ்டர்

க்ரூஸர் பைக் ஸ்டைலை பெற்றுள்ள ரோட்ஸ்டெர் மாடல் க்ரோம் மற்றும் டார்க் என இரண்டு நிறங்களில் கிடைக்கின்றது. குறிப்பாக ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக்கின நேரடியாக எதிர் கொள்கின்ற வகையில் உள்ளது. இந்த மாடலை பொறுத்தவரை மிக நேர்த்தியான வடிவமைப்பில் கொடுத்துள்ளனர்.

334cc இன்ஜின் மூலம் இயக்கப்பட்டு 7300 RPM இல் 29.7 PS மற்றும் 6500 RPM இல் 29 Nm டார்க் உருவாக்குகிறது. அதே நேரத்தில் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது.

டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் (135 மிமீ பயணம்) மற்றும் கேஸ் சார்ஜ் செய்யப்பட்ட இரட்டை ஷாக் அப்சார்பர் (100 மிமீ பயணம்) மற்றும் 175 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

18-இன்ச் முன் சக்கரம் (100/90-பிரிவு டயர்) மற்றும் 17-இன்ச் பின்புற சக்கரம் (130/80-பிரிவு டயர்) பெற்று 1440 மிமீ வீல்பேஸ், 790 மிமீ இருக்கை உயரம், 12.5 லிட்டர் எரிபொருள் கலன் மற்றும் 184 கிலோ எடை கொண்டுள்ளது.

Yezdi Roadster price list –

Variant/Colour Price
Roadster Dark – Smoke Grey Rs. 1,98,142/-
Roadster Dark Hunter Green Rs. 2,02,142/-
Roadster Dark Steel Blue Rs. 2,02,142/-
Roadster Chrome Gallant Grey Rs. 2,06,142/-
Roadster Chrome Sin Silver Rs. 2,06,142/-

Prices are ex-showroom, Delhi

யெஸ்டி ஸ்கிராம்பளர்

இந்த மாடலில் 334cc இன்ஜின் மூலம் இயக்கப்பட்டு 8000 RPM இல் 29.1 PS மற்றும் 6750 RPM இல் 28.2 Nm டார்க் உருவாக்குகிறது. அதே நேரத்தில் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது.

ஸ்போக் 19-இன்ச் முன் சக்கரம் (100/90-பிரிவு டயர்) மற்றும் 17-இன்ச் பின்புற வீல் (140/70-பிரிவு டயர்), பைக்கில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் (150 மிமீ பயணம்) மற்றும் கேஸ்-சார்ஜ் செய்யப்பட்ட இரட்டை பின்புற ஷாக் அப்சார்பர் (130 மிமீ பயணம்) பெற்றுள்ளது.

ரோட்ஸ்டரைப் போலல்லாமல், இந்த பைக்கில் 3 ஏபிஎஸ் முறைகள் (Rain, Road & Off-road), 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 1403 மிமீ வீல்பேஸ், 800 மிமீ இருக்கை உயரம் மற்றும் 182 கிலோ எடை, அதே 12.5 லிட்டர் எரிபொருள் கலன் உள்ளது.

Yezdi Scrambler price list –

Colour Price
Fire Orange Rs. 2,04,900/-
Yelling Yellow Rs. 2,06,900/-
Outlaw Olive Rs. 2,06,900/-
Mean Green Rs. 2,10,900/-
Midnight Blue Rs. 2,10,900/-
Rebel Red Rs. 2,10,900/-

Prices are ex-showroom, Delhi

யெஸ்டி அட்வென்ச்சர்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு நேரடி போட்டியாக அமைந்துள்ள அஃவென்ச்சரில் புளூடூத் இணைப்பு மற்றும் டர்ன்-பை-டர்ன் வழிசெலுத்தலுடன் கூடிய எல்சிடி டேஷ், பிரத்யேக ஆப் மற்றும் பேட்டரி இருப்பினை வழங்குகிறது.

அட்வென்ச்சர் மாடலில் 334cc இன்ஜின் மூலம் இயக்கப்பட்டு 8000 RPM இல் 30.2 PS மற்றும் 6500 RPM இல் 29.9 Nm டார்க் உருவாக்குகிறது. அதே நேரத்தில் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது.

 

Yezdi Adventure price list –

Colour Price
Slick Silver Rs. 2,09,900/-
Mambo Black Rs. 2,11,900/-
Ranger Camo Rs. 2,18,900/-

 

டாடா டியாகோ & டிகோர் சிஎன்ஜி முன்பதிவு ஆரம்பம்

டியாகோ மற்றும் டிகோர் என இரண்டிலும் CNG மாறுபாட்டை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிடுவதனை டீசர் வாயிலாக உறுதி செய்துள்ளது. இந்த மாடல் வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் எனவே சிஎன்ஜி மாடலுக்கு முன்பதிவுகள் தொடங்கியுள்ளன.

தற்போது விற்பனையில் உள்ள பெட்ரோல் மாடலை விட தோற்ற அமைப்பில் அல்லது மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர், ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும். அதிகபட்சமாக 85bhp மற்றும் 113Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. சிஎன்ஜி ஆப்ஷனில் ஐந்து வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கலாம்.

மாருதி மற்றும் ஹூண்டாய் என இரு நிறுவனங்கள் மட்டும் சிஎன்ஜி சந்தையை பெரிதும் பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் டாடா மோட்டார்ஸ் நுழைவு மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதந்திர கார் விற்பனையில் ஹூண்டாய் நிறுவனத்தை பின்னனுக்கு தள்ளி டாடா மோட்டார்ஸ் இரண்டாம் இடத்தை கைப்பற்றியுள்ளது.

யமஹா பொங்கல் திருநாள் சலுகைகளை அறிவித்துள்ளது

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனம், தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு சலுகைகளை இன்று அறிவித்துள்ளன. தமிழகத்தில் ஜனவரி மாதம் 31 வரை செல்லுபடியாகும். இந்தியாவில் கிடைக்கும் யமஹாவின் 125cc ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல், 150cc FZ மாடல் மற்றும் 155cc YZF-R15 V3 மாடல் ஆகியவற்றில் தற்போது சலுகைகள் பொருந்தும்.

தமிழ்நாடு மாநிலத்திற்கான பொங்கல் சலுகை விவரங்கள் கீழே:

  1. ஃபேசினோ 125 Fi ஹைப்ரிட் | ரே ZR 125 Fi ஹைப்ரிட் | ரே ZR ஸ்ட்ரீட் ரேலி 125 Fi ஹைப்ரிட்: ரூ. 5,000/- கேஷ் பேக் சலுகை மற்றும் 0% வட்டி விகிதம்.
  2. யமஹா FZ 15 மாடல் வரம்பு: குறைந்த கட்டணம் – ரூ. 9,999/- அல்லது 9.25% வட்டி விகிதம்.

3. யமஹா YZF-R15 V3 மாடல்: குறைந்த கட்டணம் – ரூ 19,999/- அல்லது 10.99% வட்டி விகிதம்.

125cc ஹைப்ரிட் ஸ்கூட்டர்கள் FZ 15 மாடல் வரம்பு மற்றும் YZF R15 V3 மாடல்களில் சலுகைகள் மட்டும் நிதித் திட்டங்கள் பொருந்தும்.

₹.1.16 லட்சத்தில் 2022 யமஹா FZS விற்பனைக்கு வெளியானது

சிறிய அளவிலான மாற்றங்களை பெற்ற யமஹா எஃப்இசட் எஸ் பைக் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. கூடுதலாக Dlx வேரியன்ட விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய மாடலை பொருத்தவரை மிக நேர்த்தியான அமைப்புகளை பெற்று மேட் ப்ளூ மற்றும் மேட் ரெட் என இரண்டு நிறங்களை மட்டும் கொண்டுள்ளது. FZS Dlx வேரியண்ட்டில் புதிய மெட்டாலிக் பிளாக் (டூயல் டோன் இருக்கை), மெட்டாலிக் டீப் ரெட் (டூயல் டோன் இருக்கை) மற்றும் சாலிட் கிரே (கருப்பு இருக்கை) என மூன்று நிறங்களில் கிடைக்கும்.

LED ஹெட்லைட், LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு, ஒற்றை-சேனல் ஏபிஎஸ் உடன் டிஸ்க் பிரேக்குகள், சைட் ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் வசதிகள் போன்றவை உள்ளது. புதிய LED டெயில்-லேம்ப், இது LED டர்ன் சிக்னல்களுடன் வருகிறது.

மற்றபடி மெக்கானிக்கல் மற்றும் இன்ஜின் சார்ந்த அம்சங்களில் எந்தவொரு மாற்றங்களும் செய்யப்படவில்லை.

149 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட், 2 வால்வு, மூலம் பவர் 9.1 கிலோவாட் அல்லது 12.4 பிஎஸ் பவர் மற்றும் 13.6 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

2022 Yamaha FZS price list

Variant Price
FZS Rs. 1,15,900/-
FZS Deluxe Rs. 1,18,900/-