ரூ.11.99 லட்சத்தில் மஹிந்திரா XUV700 விற்பனைக்கு வந்தது

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் புத்தம் புதிய XUV700 எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.11.99 லட்சம் முதல் ரூ.21.59 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை முதல் 25,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சலுகை கிடைக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.

அக்டோபர் 7 -ம் தேதி முதல் முன்பதிவு துவங்கும் நிலையில் பெட்ரோல் XUV700 டீசலுக்கு முன்பாக டெலிவரி தொடங்கும் தேதியுடன் அக்டோபர் 10-க்குள் டெலிவரி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

XUV700 எஸ்யூவி விபரம்

ஸ்டைலிஷான மற்றும் தனது புதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.

200 ஹெச்பி பவரை வழங்குகின்ற எம் ஸ்டோலின் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, 2.0 லிட்டர் எம்ஹாக் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் 155 ஹெச்பி பவர், 350 என்எம் டார்க், இரண்டாவதாக 185hp மற்றும் 420Nm (450Nm ஆட்டோமேட்டிக்)  என இரு விதமான பவர் ஆப்ஷனை டீசல் என்ஜினில் பெற்று 6 வேக ஆட்டோ மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது.

டீசல் இன்ஜின் பெற்ற மாடலுக்கு Zip, Zap, Zoom மற்றும் Custom என நான்கு விதமான டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டு, ஸ்டீயரிங் அட்ஜெஸ்ட் வசதியும் உள்ளது.

Mahindra XUV700 விலை பட்டியல்

Petrol –

Variant Price
MX 5-seater MT Rs. 11.99 lakhs
AX3 5-seater MT Rs. 13.99 lakhs
AX5 5-seater MT Rs. 14.99 lakhs
AX7 7-seater MT Rs. 17.59 lakhs
AX3 5-seater AT Rs. 15.59 lakhs
AX5 5-seater AT Rs. 16.59 lakhs
AX7 7-seater AT Rs. 19.19 lakhs
Prices are ex-showroom, India

Diesel –

Variant Price
MX 5-seater MT Rs. 12.49 lakhs
AX3 5-seater MT Rs. 14.59 lakhs
AX5 5-seater MT Rs. 15.59 lakhs
AX7 7-seater MT Rs. 18.19 lakhs
AX3 5-seater AT Rs. 16.19 lakhs
AX5 5-seater AT Rs. 17.19 lakhs
AX7 7-seater AT Rs. 19.79 lakhs
Prices are ex-showroom, India

தீபாவளி ஸ்பெஷல்: டாடா பஞ்ச் எஸ்யூவி எதிர்பார்ப்புகள்

வரும் அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகின்ற டாடா பஞ்ச் எஸ்யூவி காரின் மீதான எதிர்பார்ப்பு பரவலாக அதிகரித்துள்ளது. பட்ஜெட் விலையில் ஸ்டைலிஷாக அமைந்துள்ள இந்த காரில் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற பஞ்ச் எஸ்யூவி காரின் அறிமுகம் தீபாவளிக்கு முன்பாக விலை அறிவிக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து உடனடியாக விநியோகம் செய்ய டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பன்ச் எஸ்யூவி காரில் இடம்பெற உள்ள இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை, 86 ஹெச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். அடுத்தப்படியாக சற்று கூடுதல் பவரை வழங்கும் டர்போ பெட்ரோல் இன்ஜின் பெற்று 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ்  இணைக்கப்படும். ஆனால் டீசல் என்ஜின் இடம் பெறாது.

சமீபத்தில் இன்டிரியர் மற்றும் பல்வேறு ஸ்பை படங்கள் மூலம் அதாவது டீலர்களுக்கு வந்துள்ள கார்களில் டேஸ்போர்டு, இருக்கை அமைப்புகள் உட்பட பல்வேறு வசதிகள் வெளியாகியுள்ளது.

இந்த காருக்கான முன்பதிவுகளை டாடா மோட்டார்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படவில்லை. இருப்பினும், பல டீலர்கள் ஏற்கனவே மைக்ரோ-எஸ்யூவிக்கு முன்பதிவுகளை துவங்கிவிட்டார்கள்.

ஃபோக்ஸ்வேகன் டைகன் எஸ்யூவி காரின் சிறப்பம்சங்கள்

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் புதிய டைகன் எஸ்யூவி காரின் அறிமுக ஆரம்ப விலை ரூ.10.50 லட்சம் என நிர்ணையிக்கப்பட்டுள்ளது. டைனமிக் லைன் மற்றும் பெர்ஃபாமென்ஸ் லைன் என இரு பிரிவுகளில் மொத்தமாக 7 வேரியண்டுகள் கிடைக்கின்றது.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, கியா செல்டோஸ், நிஸான் கிக்ஸ் உட்பட தனது மாற்று மாடலான ஸ்கோடா குஷாக்ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

டிசைன்

ஃபோக்ஸ்வேகன் Taigun டி.ஆர்.எல் உடன் பெரிய எல்.இ.டி ஹெட்லைட்கள், இரண்டு ஸ்லாட் குரோம் கிரில் மற்றும் பம்பரின் கீழ் பகுதியில் குரோம் ஸ்லாட்டினை கொண்டுள்ளது. பின்புறத்தில், டெயில்-லைட் கிளஸ்டர் டெயில்கேட்டின் கீழ் பகுதியில் க்ரோம் பாகத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இன்டிரியர்

பல்வேறு ஸ்பார்ட் கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்குகின்ற இந்நிறுவனத்தின் MyVolkswagen Connect App ஆதரவுடன் மிக நேர்த்தியான டேஸ்போர்டு கட்டமைப்பினை பெற்றதாக அமைந்துள்ள டைகனில் அமைந்துள்ள பல்வேறு அம்சங்கள் குஷாக்கில் உள்ளதை போன்றே அமைந்திருக்கின்றது.

என்ஜின்

ஸ்கோடா குஷாக்கில் உள்ள அதே என்ஜினை பகிர்ந்துகொள்ளும் டைகனில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் அதிகபட்சமாக 115PS பவர் 200Nm டார்க் வெளிப்படுத்தும் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. அடுத்தப்படியாக, டாப் வேரியண்டில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் அதிகபட்சமாக 150PS பவர் 250Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் பெற உள்ளது.

வசதிகள்

உயர் ரக GT பிளஸ் வேரியண்ட்டில் 10 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, மை வோக்ஸ்வாகன் கனெக்ட் ஆப், 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, ஆம்பியண்ட் லைட்டிங், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், USB ஆகியவற்றை கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், ISOFIX குழந்தைகள் இருக்கை, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், வைப்பர் பெற்றுள்ளது. டைகன் காருக்கு 4 ஆண்டு அல்லது 1,00,000 கிமீ நிலையான உத்தரவாதத்துடன் வருகிறது. இது தவிர 7 ஆண்டுகள் அல்லது 1,50,000 கிமீ வரை நீட்டிக்கப்படலாம்.

ஃபோக்ஸ்வேகன் Taigun விலை பட்டியல்

TAIGUN SUV PRICES
Price (ex-showroom, India)
Comfortline 1.0 TSI MT Rs 10.50 lakh
Highline 1.0 TSI MT Rs 12.80 lakh
Highline 1.0 TSI AT Rs 14.10 lakh
Topline 1.0 TSI MT Rs 14.57 lakh
Topline 1.0 TSI AT Rs 15.91 lakh
GT 1.5 TSI MT Rs 15.00 lakh
GT Plus 1.5 TSI AT Rs 17.50 lakh

2022 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

பிரசத்தி பெற்ற அட்வென்ச்சர் ரக மாடலான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200 மாடலில் கூடுதல் வசதிகளுடன் 4V ஸ்டிக்கர் பெற்றதாக சாலை சோதனை ஓட்ட படங்கள் வெளியாகியுள்ளது.

தற்போது விற்பனையில் உள்ள எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் உள்ள இரண்டு வால்வு என்ஜினுக்கு பதிலாக 4 லால்வு பெற்ற என்ஜினை எக்ஸ்பல்ஸ் 200 பைக் பெறுவதனை உறுதி செய்யும் வகையில் ‘4-valve’  என்ற ஸ்டிக்கரை பெற்றுள்ளது. விற்பனையில் உள்ள மாடலில் 17.8bhp பவர் மற்றும் 16.45Nm டார்க்கினை வெளிப்படுத்தும் நிலையில், புதிய எக்ஸ்பல்ஸ் 200 4வி கூடுதல் பவரை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சோதனை ஓட்ட படங்களில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மாடலுக்கு புதிய நிறங்களை அறிமுகப்படுத்தும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கருப்பு மற்றும் நீல நிறத்தை பேனல்களை உள்ளடக்கியது.

மீதமுள்ள அம்சங்கள் பெரும்பாலும் மாறாமல் இருக்கும். எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் 21 அங்குல முன்புற வீல் உடன் 18 இன்ச் வீல் உடன் பயணிக்கிறது. ஒற்றை-சேனல் ஏபிஎஸ் முன் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பிரேக்கிங் கையாளப்படுகிறது. இது ப்ளூடூத் இயக்கப்பட்ட எல்சிடி கன்சோலுடன் எல்இடி விளக்குகளையும் பெறுகிறது.

தற்போது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விலை ரூ.1.21 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) உள்ளது. ரூ.5,000-8.000 வரை விலை உயர்த்த வாய்ப்புகள் உள்ளது.

Image Source

இந்தியாவின் சக்திவாய்ந்த யமஹா ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஏராக்ஸ் 155 மேக்ஸி ஸ்டைல் ஸ்கூட்டர் இந்தியாவில் கிடைக்கின்ற ஸ்கூட்டர்களில் அதிகபட்ச பவரை வெளிப்படுத்துகின்ற மாடல் என்ற பெருமையுடன் 14.96 ஹெச்பி வழங்குகின்றது.

122 கிலோ எடை பெற்றுள்ள ஏராக்ஸில் இரு பக்கத்திலும் 14 அங்குல வீல் கொடுக்கப்பட்டு 140-section அகலமான டயருடன், ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் ஆர்15 என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது.

யமஹா Aerox 155

ஏராக்ஸ் மேக்ஸி ஸ்கூட்டரில் 155 சிசி திரவ குளிரூட்டப்பட்ட, DOHC ஒற்றை சிலிண்டர் எஞ்சின் ஆகும். VVA உடன் 8,000 ஆர்பிஎம்மில் 14.8 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 14 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.  V- பெல்ட் பெற்ற CVT கியர்பாக்ஸ் பயன்படுத்துகிறது. இதே என்ஜின் R15 V4, MT-15 மாடல்களில் உள்ளது.

ஏராக்ஸ் 155 சிறப்பம்சங்களைப் பொருத்தவரை, 25 லிட்டர் அண்டர்சீட் சேமிப்பு இடத்தைக் கொண்டுள்ளது. மற்ற அம்சங்களில் டிஜிட்டல் கருவி, ஸ்டார்ட்-ஸ்டாப் டெக், எல்இடி லைட்டிங், சார்ஜிங் சாக்கெட் மற்றும் ப்ளூடூத் இணைப்பு ஆகியவை அடங்கும். 14 அங்குல சக்கரங்கள் மற்றும் 140-பிரிவு பின்புற டயருடன் பொருத்தப்பட்டுள்ளது.

யமஹா ஏராக்ஸ் 155 அதிகபட்ச செயல்திறன் ஸ்கூட்டரை இந்தியாவில் ரூ.1.29 லட்சத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Variant Price
Aerox 155 Grey Vermillion & Racing Blue Rs. 1,29,000/-
Aerox 155 Monster Energy MotoGP Edition Rs. 1,30,500/-

Prices are ex-showroom, Delhi

ரூ. 1.67 லட்சம் விலையில் யமஹா R15 V4 & R15M விற்பனைக்கு வெளியானது

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய R15 V4 மற்றும்  R15M என இரு பைக்குகள், மேக்ஸி ஸ்டைல் ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் உட்பட கூடுதலாக ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் என இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய YZF-R15 பைக்கில் க்விக் ஷிப்பட்டர், யூஎஸ்டி ஃபோர்க், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி என பல்வேறு சிறப்பு வசதிகளை யமஹா கொண்டு வந்துள்ளதால் இளைய தலைமுறையினர் மத்தியில் தனது மதிப்பை மேலும் ஆர்15 உயர்த்திக் கொள்ள உள்ளது.

யமஹா R15 V4

புதிய YZF-R15 மிகவும் நவீனத்துவமான புதிய வடிவமைப்பைப் பெற்று முன்பக்கத்தில் புதிய ஃபேரிங் மற்றும் விண்ட்ஸ்கிரீன் சேர்க்கப்பட்டு LED ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது. பகல்நேர ரன்னிங் விளக்குகள், இருபுறமும் ஹெட்லைட் இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய YZF-R7 மாடலின் தோற்றத்தை நினைவூட்டுகிறது என்றாலும், பின்புறத்தில் R15 V3.0 மாடலில் உள்ளதைப் போன்றே அமைந்துள்ளது. ஆனால் பெரிய ஏர் டக்ட்ஸ் எக்ஸாஸ்ட் மஃப்ளர் மற்றும் பில்லியன் ரைடருக்கான கால் வைக்கும் முறைகளும் மாற்றப்பட்டுள்ளன.

யமஹா R15M

உலகளவில் விற்பனை செய்யப்படும் வழக்கமான மாடல்களில் இருந்து மாறுபட்ட கூடுதல் செயல்திறன் பெற்றவற்றை இந்நிறுவனம் வழக்கமாக M பெயரை வைத்திருக்கும்.

புதிதாக வந்துள்ள ஆர்15 எம் வேரியண்டில் நீல நிற சக்கரங்கள், வித்தியாசமான இருக்கை கவர் மற்றும் தங்க நிறத்தை பெற்ற பிரேக்குகளுடன் பிரகாசமான  சில்வர் நிறத்தை கொண்டுள்ளது. இந்த பைக்கில் டிராக்‌ஷன் கன்ட்ரோல், க்விக் ஷிஃப்ட் உட்பட சிறப்பான பெர்ஃபானெஸை வெளிப்படுத்தும்.

யமஹா ஆர்15 வி 4 மற்றும் ஆர்15 எம் என இரண்டிலும் 155 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு SOHC ஃபியூயல் இன்ஜெக்ட் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 18.3 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க்கையும் வழங்கும். VVA உடன் இந்த எஞ்சின் 6 வேக டிரான்ஸ்மிஷனுடன் ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. இரட்டை சேனல் ஏபிஎஸ் அமைப்பும் வழங்கப்படுகிறது.

Yamaha R15 V4 & R15M Price Ex-Showroom New Delhi
Metallic Red Rs. 1,67,800
Dark Knight Rs. 1,68,800
Racing Blue V4 Rs. 1,72,800
Racing Blue R15M Rs. 1,77,800
MotoGP R15 V4 Rs. 1,79,800

₹ 14.79 லட்சம் விலையில் மஹிந்திரா ஃப்யூரியோ 7 லாரி விற்பனைக்கு வந்தது

மஹிந்திராவின் இடைநிலை மற்றும் இலகுரக வர்த்தக வாகனப் பிரிவில் வெளியிடப்பட்டுள்ள ஃப்யூரியோ 7 வரிசை டிரக்குகளில் 4-டயர் கார்கோ, 6-டயர் கார்கோ எச்டி மற்றும் 6-டயர் டிப்பர் என மொத்தமாக மூன்று விதமான வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஃப்யூரியோ இலகுரக வர்த்தக வாகனத்தின் அறிமுகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபுரியோ ரேஞ்ச் இன்டர்மீடியட் & இலகுரக வர்த்தக வாகனப் பிரிவில் மஹிந்திரா ₹ 650 கோடி முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான இத்தாலிய வடிவமைப்பு பிரிவான பினின்ஃபரினாவால் இந்திய சாலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா ஃப்யூரியோ 7 டிரக் சிறப்புகள்

புதிய மஹிந்திரா ஃப்யூரியோ 7 லாரியில் மூன்று விதமான வேரியண்ட்களில் 4-டயர் சரக்கு, 6-டயர் சரக்கு எச்டி மற்றும் 6-டயர் டிப்பர் ஆகும். இந்நிறுவனத்தின் அறிக்கையில், ஃப்யூரியோ 7 எல்சிவி பிரிவில் பல பயன்பாடுகளை உள்ளடக்கியது. மேலும், சிறந்த இலாபத்தை சிறந்த தர மைலேஜ், அதிக பேலோட் மற்றும் பெஞ்ச்மார்க் கேபினுடன் உள்ளடக்கியது. வாகன டெலிமாடிக்ஸ் இந்நிறுவனத்தின் iMAXX இயங்குதளத்தால் கையாளப்படுகிறது.

இந்த டிரக்கில் இரு விதமான இன்ஜின் ஆப்ஷன் பயன்படுத்தப்படுகின்றது. 4 டயர் பெற்ற கார்கோ ஃப்யூரியோ 7 டிரக்கில் mDI 2.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 220 Nm டார்க் பெற்று 81 ஹெச்பி பவரை வழங்குகின்றது.

அடுத்தப்படியாக உள்ள 6-டயர் கார்கோ எச்டி, 6-டயர் டிப்பர் என இரண்டிலும் mDI 3.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 375 Nm டார்க் பெற்று 122 ஹெச்பி பவரை வழங்குகின்றது. பொதுவாக இரண்டு என்ஜினிலும் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

Furio 7 10.5ft HSD – ரூ. 14.79 லட்சம்

Furio 7 HD – ரூ. 15.18 லட்சம்

Furio 7 Tipper- ரூ. 16.82 லட்சம்

(all ex-showroom Pune).

இந்தியாவில் புதிய சிட்ரோன் C3 எஸ்யூவி அறிமுகம்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற சிட்ரோன் பயணிகள் வாகன தயாரிப்பாளரின் முதல் காம்பெக்ட் எஸ்யூவி காராக C3 அறிமுகம் செய்யபட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் சி3 விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

சென்னை அருகே அமைந்துள்ள திருவள்ளூர் ஆலையில், கார் உற்பத்தி நடப்பு ஆண்டு டிசம்பர் முதல் தொடங்க உள்ளது. C3 அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, சிட்ரோன் இந்தியாவில் அதன் டீலர் நெட்வொர்க்கை விரிவுபடுத்தும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் La Maison ஷோரூம்களை திறந்துள்ளது. பிரத்யேக ஆன்லைன் விற்பனை தளத்தையும் துவங்கவுள்ளது.

சிட்ரோன் C3 எஸ்யூவி

90 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதனால் சி3 எஸ்யூவி காரின் விலை சவாலாகவும், இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவிகளுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்த உள்ளது.

Common Modular Platform (CMP) என்ற பிளாட்ஃபாரத்தில் வளரும் சந்தைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள சி3 எஸ்யூவி காரில் 100 bhp மற்றும் 160 Nm டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டு 5 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கும். மற்றபடி, இந்த காரில் டீசல் இன்ஜின் பொருத்தப்பட வாய்ப்பில்லை.

C3 காரின் இன்ஜின் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஃப்ளெக்ஸ் ஃபியூயல் எஞ்சினைப் பெறும் இந்தியாவின் முதல் காராக விளங்கும். இது பெட்ரோல் மற்றும் எத்தனால் கலந்த எரிபொருளை கொண்டு இயங்கும் திறன் பெற்றிருக்கும். பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நேரத்தில், ஃப்ளெக்ஸ்-ஃபியூயல் எஞ்சின் கொண்ட ஒரு எஸ்யூவி வாடிக்கையாளர்களிடமிருந்து வரவேற்பினை பெறலாம்.

ஒன்றிய அரசின் திட்ட வரைவுப்படி, 2022 ஆம் ஆண்டுக்குள் 10% எத்தனால் கலவை அடையவும், 2030 ஆம் ஆண்டிற்குள் அதை இரட்டிப்பாக்கவும் திட்டமிட்டுள்ளது.

டிசைன் அம்சங்கள்

இந்நிறுவனத்தின் பாரம்பரியமான டிசைன் அமைப்பினை பெற்ற பம்பர், லோகோ உடன் மிக நேர்த்தியான பானெட் அமைப்பு வழங்கப்பட்டு, உயரமான வீல் ஆர்ச் கொடுக்கப்பட்டுள்ளது. கிராஸ்ஓவர் ஸ்டைல் கார்களை போல அமைந்துள்ள சி3 காரில் 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஒருங்கிணைப்பு வழங்கப்பட உள்ளது.

C3 மாடலில் ஒற்றை நிறம் மற்றும் டூயல் டோன் விருப்பங்களில் கிடைக்கும். டூயல் டோனில் ஏ, பி மற்றும் சி பில்லர்கள் கருப்பு நிறமாக இருக்கும். கூடுதலாக, சிட்ரோன் கஸ்டமைஸ் விருப்பங்களை வழங்க உள்ளது.

டிவிஎஸ் ரைடர் 125 பைக் விற்பனைக்கு வெளியானது

ரூ.77,500 ஆரம்ப விலையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ரைடர் 125சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றுள்ளது.

லிட்டருக்கு 67 கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் மோட்டார் குறிப்பிட்டுள்ள நிலையில் டிரம் பிரேக், டிஸ்க் பிரேக் ஆப்ஷனை கொண்டு மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் டெங்க், இரு பிரிவு கொண்ட இருக்கைகள் என போட்டியாளர்களான கிளாமர் எக்ஸ்டெக், பல்சர் 125 மற்றும் எஸ்பி125 பைக்கிற்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தியுள்ளது.

டிவிஎஸ் Raider 125

மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை வழங்கியுள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பெரும்பாலும் எல்இடி விளக்குகளை கொடுத்து, முரட்டுத்தனமான டேங்க் வடிவமைப்பு, ஸ்பீளிட் சிட் என குறிப்பிடதக்க அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது.

124.8 சிசி, மூன்று வால்வு, காற்றினால் குளிரூட்டப்படுகின்ற இயந்திரம் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 11.4 பிஎச்.பி பவரையும், 6,000 ஆர்பிஎம்-ல் 11.2 என்.எம் டார்க்கையும் வழங்கும். இந்த எஞ்சின் FI ஆப்ஷனை பெற்று ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ரைடர் 125 மைலேஜ் லிட்டருக்கு 67 கிமீ என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ரைடர் 125 மாடலின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் மூலம் கையாளப்படுகிறது. அடுத்தப்படியாக, பிரேக்கிங் அமைப்பில் 240 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம்  மற்றும் பின்புறத்தில் பொதுவாக 130 மிமீ டிரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 17 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுவீல் பேஸ் 1,326 மிமீ மற்றும் இருக்கை உயரம் 780 மிமீ கொண்டு டேங்க் கொள்ளளவு 10 லிட்டராகவும், 123 கிலோ எடையைக் கொண்டுள்ளது.

ரைடரில் முழு டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு கியர் பொசிஷன் இன்டிகேட்டர்  வசதியும் உள்ளது. மேலும் சில மாதங்களில் ப்ளூடூத் இணைப்பைக் கொடுக்க ஒரு விருப்பமான TFT திரையை கூடுதல் ஆப்ஷனலாக வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

TVS Raider 125 – ரூ.77,500 (drum brake variant)

TVS Raider 125 ரூ. 85,469 (disc brake variant)

All prices ex-showroom, Delhi.

ஸ்டைலிஷான எம்ஜி ஆஸ்டர் எஸ்யூவி அறிமுகமானது

வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள ஆஸ்டர் எஸ்யூவி காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள இசட்எஸ் இவி காரின் அடிப்படையிலான பெட்ரோல் வெர்ஷன் மாடலாக ஆஸ்டர் விளங்குகின்றது.

ஆஸ்டர் எஸ்யூவி சிறப்புகள்

ஆஸ்டரில் 110 ஹெச்பி பவர் மற்றும் 150 என்எம், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும், சக்திவாய்ந்த 140 ஹெச்பி பவர் மற்றும் 220 என்எம், 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் 6 வேக  ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

காரின் இன்டிரியரில் 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ஸ்டெப் டாஷ், பிரஷ் செய்யப்பட்ட மெட்டல் எஸ்க்யூ அலங்கார டிரிம் டாஷ்போர்டு மற்றும் கதவு பேனல்கள் மற்றும் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி உடன் 3 விதமான டேஸ்போர்ட் தீமை பெற்று டூயல் டோனில் சாங்ரியா ரெட், ஐகானிக் ஐவரி மற்றும் டக்ஸிடோ பிளாக் ஆகியவற்றை பெற்றுள்ளது.

இந்த காரில் நவீனத்துவமான Level-2 ADAS (Advanced Driver Assistance Systems) சிஸ்டத்தை அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டம்ஸ் பிரிவில் நெடுந்தொலைவு பயணத்தில் உதவுகின்ற ஆடாப்ட்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், அல்ட்ராசோனிக் சென்சாரின் உதவியுடன் செயல்படும் தானியங்கி பார்க்கிங் அசிஸ்ட், முன்புற மோதலை தடுக்கம் வசதி, ஆட்டோமேட்டிக் அவசர பிரேக்கிங் வசதி, பிளைன்ட் ஸ்பாட் அறிதல் மற்றும் லேன் மாறுவதனை கேமரா உதவியுடன் எச்சரிக்கும் லேன் வார்னிங் வசதியும் உள்ளது.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற கிரெட்டா, செல்டோஸ், கிக்ஸ், டஸ்ட்டர் மற்றும் குஷாக் உள்ளிட்ட எஸ்யூவி கார்களை எதிர்கொள்ளும் வகையில் ஆஸ்டரை எம்ஜி மோட்டார் கொண்டு வந்துள்ளது.