குறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.?

அட்வென்ச்சர் டூரர் ஹிமாலயன் பைக்கின் அடிப்படையில் Scram 411 என்ற பெயரில் குறைந்த பட்ச ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் என்ஃபீல்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படுகின்றது.

குறிப்பாக சோதை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஹிமாலயனில் முன்புற வின்ட்ஷீல்டு, ஜெர்ரி கேன் ஹோல்டர் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஃபைபரால் தயாரிக்கப்பட்ட டேங்க் எக்ஸ்டென்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறிய அளவிலான ஆஃப் ரோடு சாகசத்திற்கு ஏற்ற வகையில் மட்டும் அமைந்திருக்கலாம்.

மற்றபடி கிளஸ்ட்டர் வழக்கம் போலவோ அல்லது டிரிப்பர் நேவிகேஷன் நீக்கப்பட்டு முந்தைய கிளஸ்ட்டர் அமைப்பினை கொடுத்திருக்கலாம். டெயில் பகுதியில் சிறிய அளவில் மாற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம்.

ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 பைக்கில் 6,500 rpm -யில் 24.3 ஹெச்பி பவர், 4,000-4,500 rpm -யில் அதிகபட்சமாக டார்க் 32 என்எம் வெளிப்படுத்தும் 411 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

image source

பஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையின் முதல் மாடலாக உயர் ரக பல்சர் 250F விற்பனைக்கு 2022 ஆம் ஆண்டின் மத்தியில்  எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது சாலை சோதனை ஓட்ட படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளது.

புதிய 250எஃப் பைக்கில் முன்பக்க அமைப்பில் எல்இடி ஹெட்லைட் கொண்டிருப்பதுடன் ரன்னிங் விளக்குகள் கண் புருவத்தை போல அமைந்துள்ளது. எல்இடி டர்ன் இன்டிகேட்டர், புதிய வகை ரியர் வியூ மிரர், மேம்பட்ட நவீனத்துவமான டேங்க் டிசைனை கொண்டிருப்பதுடன், கிளீப் ஆன் ஹேண்டில்பார், மிகவும் சவுகரியமான ரைடிங் பொசிஷனை பஜாஜ் ஏற்படுத்தியுள்ளது. டெயில் லைட், டர்ன் இன்டிகேட்டர் எல்இடி விளக்குகளாக அமைந்திருப்பதுடன் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றிருக்கும்.

இரு பிரிவு இருக்கைகளை கொண்டுள்ள பல்சர் 250F மாடலில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பெற்றிருக்கின்றது.

புதிதாக உருவாக்கப்பட்ட 250சிசி இன்ஜின் பெற உள்ள பல்சர் மாடலின் பவர் டொமினார் 250 (27hp/23.5Nm) பைக்கினை விட கூடுதலாகவும் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

image source

சோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..?

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் ஃபேரிங் ஸ்டைல் மாடலாக விளங்குகின்ற ஆர்15 பைக்கின் வெர்ஷன் 4.0 சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படம் முதன்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

தற்போது விற்பனையில் கிடைத்து வருகின்ற ஆர்15 வெர்ஷன் 3.0 மாடலை விட பல்வேறு வகையில் ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றிருப்பதுடன், புதிய நிறங்கள், நவீன வசதிகள் என பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கும்.

யமஹா YZF-R15 v4 எதிர்பார்ப்புகள்

சர்வதேச அளவில் விற்பனையில் கிடைத்து வருகின்ற யமஹா R7 பைக்கின் முகப்பு தோற்ற உந்துதலை பெற்றதாக எதிர்பார்க்கப்படுகின்ற 2022 ஆர்15 பைக்கில் மிக ஸ்டைலிஷனான அபைப்புடன் கூடிய விண்ட்ஷீல்டூ, எல்இடி புராஜெக்டர் விளக்கை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பக்கவாட்டு தோற்ற அபைப்பில் சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்களை மட்டும் பெற்று வழக்கமான பேனல்களை கொண்டு புதிய நிறத்துடன், நவீனத்துவமான ஸ்டிக்கரிங் அம்சங்கள் சேர்க்கப்படலாம். அடுத்தப்படியாக, சஸ்பென்ஷன், பிரேக்கிங் செட்டப் உட்பட பல்வேறு மெக்கானிக்கல் அம்சங்களில் பெரிதாக மாற்றங்கள் இல்லாமல் மேம்பாடுகளை மட்டும் பெற்றிருக்கலாம்.

R15 V3.0 பைக்கில் 19.1 ஹெச்பி பவர், மற்றும் 14.7 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் புதிய 155சிசி இன்ஜின் திரவ-குளிரூட்டப்பட்ட, 4 ஸ்ட்ரோக், SOHC, 4 வால்வு பெற்று 6 வேக கியர்பாக்சுடன் சிலிப்பர் கிளட்ச் வசதியை பெற்றிருக்கின்றது. இதே என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஆர்15 வி 4.0 பெறலாம்.

புதிய யமஹா R15 V4.0 பைக் 2022 ஆம் ஆண்டின் துவக்கம் அல்லது மத்தியில் விற்பனைக்கு ரூ.1.65 லட்சத்திற்குள் எதிர்பார்க்கலாம்.

2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர் வரிசையில் இடம்பெற்றுள்ள மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மேம்படுத்தப்பட்ட மாடலுடன் ஹீரோ கனெக்ட் வசதி பெற்றதாக அமைந்துள்ளது.

சமீபத்தில் ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக் பைக்கில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் கனெக்ட்டிவிட்டி வசதி பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேஸ்ட்ரோ எட்ஜில் இணைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125

125 சிசி புரோகிராம் செய்யப்பட்ட எஃப்ஐ இன்ஜின் ‘எக்ஸ்ஸென்ஸ் டெக்னாலஜி’ உடன் வருகிறது. 9 bhp பவரினை 7000 ஆர்.பி.எம் மற்றும் 10.4 Nm டார்க்கினை 5500 ஆர்.பி.எம்-ல் வழங்குகின்றது.

முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டரில் எரிபொருள் இருப்பை நிகழ்நேரத்தில் அறிவதுடன், கியர் பொசிஷன், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியில் கூகுள் மேப் ஆதரவுடன் கூடிய டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் அலெர்ட் ஆகியவள்ளை அறிவிப்புகளாக திரையில் பெறலாம்.

ஹீரோ கனெக்ட் ஆப் மூலம் டாப்பிள் அலர்ட், பார்க்கிங் விவரம், திருட்டு எச்சரிக்கை, பயண பகுப்பாய்வு மற்றும் வாகன கண்காணிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

125சிசி சந்தையில் முதன்முறையாக எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் பெற்றதாக அபைந்துள்ள மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் 190 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் பிரேக் என இரு ஆப்ஷன்களுடன், பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்

இந்தியாவின் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரின் ‘Series S’ மின்சார ஸ்கூட்டரில் 10 விதமான நிறங்களுடன், வழக்கபான முறையில் விநியோகம் செய்யாமல் நேரடியாக வீட்டிற்கே டோர் டெலிவரி செய்வதற்கான திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ரூ.499 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு ஒரே நாளில் 1 லட்சம் ஸ்கூட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக இந்நிறுவனம் தமிழ்நாட்டில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் தொழிற்சாலையின் பணிகளை விரைவுப்படுத்தி வருகின்றது.

ஓலா சீரிஸ் எஸ் சிறப்புகள்

சீரிஸ் எஸ் மின்சார ஸ்கூட்டரில் மிகவும் நவீனத்துவமான டிசைன் அம்சங்களை கொண்டிருப்பதுடன் நேர்த்தியான எல்இடி ஹெட்லைட் பெற்று மூன்று பேட்டரியை கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு பேட்டரியும் 80 கிமீ பயணிக்கும் திறனை கொண்டுள்ளதால், முழுமையான சிங்கிள் பேட்டரி சார்ஜில் 240 கிமீ பயணிக்கும் திறன் கொண்டிருக்கும்.

எஸ்1, எஸ்1 புரோ என இரு விதமான மாறுபாட்டில் வரவுள்ள பேட்டரி ஸ்கூட்டரில் 0- 45 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 விநாடிகளை எடுத்துக் கொள்ளும். முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் ஷாக் அப்சார்பர் பெற்று இரு பக்க டயர்களில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. 12 அங்குல அலாய் வீல் பெற்றதாக அமைந்திருக்கலாம்.

யமஹா ஃபேசினோ 125 ஹைபிரிட் விற்பனைக்கு வெளியானது

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனத்தின் 125சிசி ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மாடலான ஃபேசினோ125 ஹைபிரிட் ஆரம்ப  விலை ரூ.70,000 முதல் துவங்குகின்றது. அடுத்தப்படியாக டிஸ்க் பிரேக் பெற்ற வேரியண்ட் விலை ரூ.76,530 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த மாடலுக்கு மாற்றாக வந்துள்ள ஃபேசினோ 125 ஹைபிரிட் ஸ்கூட்டரில் டிஸ்க் வேரியண்டில் 9 நிறங்களும், டிரம் பிரேக்கினை பெற்ற ஆப்ஷனில் 7 நிறங்களும் உள்ளன.

யமஹா ஃபேசினோ 125 ஹைபிரிட் இன்ஜின்

பிஎஸ்-6 இன்ஜினில் கூடுதலாக ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டரை (Smart Motor Generator -SMG) இணைத்துள்ளது. இதன் மூலம் சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்கின்ற வசதி மற்றும் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை செயல்படுத்துகின்றது. குறிப்பாக, மின்சார மோடடார் உதவியுடன் நிற்கும் போது அல்லது செங்குத்தான சாலை பயணத்தில் சிறிய சக்தியை வழங்குகிறது. பவர் அசிஸ்ட் செயல்பாடு செயல்பாட்டில் இருக்கும்போது கிளஸ்டரில் அறிவிப்பு கிடைக்கின்றது. மூன்று விநாடிகளுக்கு பிறகு அல்லது முன்னரே தீர்மானிக்கப்பட்ட குறிப்பிட்ட ஆர்.பி.எம் தாண்டிய பிறகு அல்லது திராட்டலை மூடினால் அசிஸ்ட் வசதி முடக்கப்படும்.

இந்த மாடலில் 8.2 ஹெச்பி பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ என்ஜின் அதிகபட்சமாக 10.3 என்எம் டார்க் (முன்பு 9.7 என்எம்) வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக ஃபேசினோ 125 ஹைபிரிட் டிஸ்க் வேரியண்டில் எல்இடி ஹைட்லைட், டி.ஆர்.எல், மற்றும் ப்ளூடூத் வசதியுடன் செயல்படக்கூடிய யமஹா மோட்டார்சைக்கிள் கனெக்ட் எக்ஸ் வசதியும் உள்ளது.

ஹீரோ கிளாமர் Xtec பைக்கின் சிறப்புகள் மற்றும் வசதிகள்

ஹீரோ கிளாமர் Xtec

125சிசி சந்தையில் வெளியிடப்பட்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள புத்தம் புதிய கிளாமர் எக்ஸ்டெக் மாடல் ஆனது தற்போது விற்பனையில் இருக்கின்ற சாதாரண கிளாமர் மாடலை விட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 125சிசி சந்தையில் அதிக வசதிகளை பெற்ற மாடலாக மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது.

கிளாமர் மாடலின் டிசைன் வடிவமைப்பு போன்றவற்றில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றாலும் கூட புதிய வசதிகள் ஆனது பெரும்பாலும் இளைய தலைமுறையினரை வெகுவாக கவரக் கூடியதாக அமைந்திருக்கின்றது.

கிளாமர் Xtec இன்ஜின்

XSens ப்ரோகிராம்டு ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் நுட்பத்துடன் 125cc மோட்டார் பொருத்தப்பட்டு கிளாமர் எக்ஸ்டெக் அதிகபட்சமாக 7,500rpm-ல் 10.73bhp பவரும், 6,000rpm-ல் 10.6Nm டார்க்கையும் வழங்குகின்றது. ஐ3எஸ் எனப்படும் ஐடியல் ஸ்டார்ட் சிஸ்டம் நுட்பத்தினை கூடுதலாக பெற்றிருக்கின்றது.

கிளாமர் Xtec சிறப்புகள்

முதன்முறையாக 125சிசி சந்தையில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி பெற்ற மாடலாக அமைந்துள்ள எக்ஸ்டெக் பைக்கில் ஆட்டோ செயில் டெக், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், 34 % கூடுதல் வெளிச்சத்தை வழங்கும் வகையில் எல்இடி ஹெட்லைட் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ரோல் ஓவர் சென்சார் அதாவது பைக் கீழே தவறுதலாக சாய்ந்தால் இன்ஜின் இயக்கத்தை அணைக்க இயலும், சைட் ஸ்டாணடு உள்ள சமயங்களில் என்ஜின் ஸ்டார்ட் செய்ய இயலாது.

ஹீரோ கிளாமர் Xtec பைக்

கிளாமர் Xtec பைக்கில் உள்ள முழுபையான டிஜிட்டல் கிளஸ்ட்டரில் எரிபொருள் இருப்பை நிகழ்நேரத்தில் அறிவதுடன், கியர் பொசிஷன், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியில் கூகுள் மேப் ஆதரவுடன் கூடிய டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் அலெர்ட் ஆகியவள்ளை அறிவிப்புகளாக திரையில் பெறலாம்.

இரு விதமான பிரேக்கிங் ஆப்ஷனில் கிடைக்கின்றது. 240 மிமீ டிஸ்க் உடன் கூடிய பிரேக் மற்றும் இரண்டு டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக்கினை கொண்டுள்ளது.

ஹீரோ கிளாமர் Xtec விலை

விற்பனையில் கிடைத்து வருகின்ற கிளாமர் பைக்கினை விட கூடுதலாக ரூ.4000 வரை விலை கூடுதலாக எக்ஸ்டெக் அமைந்துள்ளது. மற்றபடி, 100 மில்லியன் எடிசன், பிளேஸ் எடிசன் ஆகியவை கிளாமரில் விற்பனை செய்யப்படுகின்றது.

Variant Price
Glamour Xtec Drum Rs. 81,900/-
Glamour Xtec Disc Rs. 86,500/-

எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு

125சிசி சந்தையில் கிடைக்கின்ற சூப்பர் ஸ்ப்ளெண்டர் உட்பட ஹோண்டா சைன், ஹோண்டா எஸ்பி 125, பஜாஜ் பல்சர் 125 போன்ற மாடல்களுக்கு சவாலினை ஏற்படுத்துகின்றது.

பஜாஜ் டோமினார் 250 பைக்கின் விலை ரூ.16,500 குறைப்பு

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டோமினார் 250 பைக்கின் விலை ரூ.16,500 வரை குறைக்கப்பட்டுள்ளது. முன்பாக விற்பனை செய்யப்பட்டு வந்த விலை ரூ.1.71 லட்சமாக இருந்தது. எனவே டோமினார் 400 பைக்கை விட ரூ.60,000 வரை விலை குறைவாக அமைந்துள்ளது.

டொமினார் 250 மாடலில் உள்ள என்ஜின் 250 டியூக் மாடலில் பெறப்பட்டு ரீடியூன் செய்யப்பட்டு, 248.77cc ஒற்றை சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டார் பிஎஸ்6 முறையில் அதிகபட்சமாக 27hp பவர், 23.5 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 132 கிமீ வேகத்தை எட்டும் திறனுடன், 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 11.5 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.

முழுமையான எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர்,டோமினார் 250 பைக்கில் 300 மிமீ டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது. சிறிய அளவிலான டயரை டோமினார் 250 பைக்கில் முன்புறத்தில் 100/80-17″ மற்றும் பின்புறத்தில் 130/70-17″ வழங்கப்பட்டுள்ளது.

புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விலை ரூ.1.54 லட்சம்

மஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது

வருகின்ற ஆக்ஸ்ட மாதம் விற்பனை துவங்கப்பட மஹிந்திராவின் புதிய XUV700 எஸ்யூவி காரில் 200 hp பவரை வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 185 hp பவரை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் என இரு விதமான என்ஜின் ஆப்ஷனை பெறுவது உறுதியாகியுள்ளது.

தற்போது விற்பனையில் கிடைக்கின்ற எக்ஸ்யூவி 500 மாடலை விட மிகவும் பிரீமியம் வசதிகளை பெற்றதாகவும் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாக போட்டியாளர்கள் வழங்குகின்ற பல்வேறு புதிய தலைமுறை வசதிகளை விட கூடுதலான சிறப்பு வசதிகளை மஹிந்திரா கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற அல்கசார், ஹெக்டர் பிளஸ், டாடா சஃபாரி போன்ற எஸ்யூவி கார்களுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள எக்ஸ்யூவி 700 காரில் உள்ள இன்ஜின் போட்டியாளர்களை விட சிறப்பாக அமைந்துள்ளது. 200 ஹெச்பி பவரை வழங்குகின்ற எம் ஸ்டோலின் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் பெற வாய்ப்புள்ளது. அடுத்தப்படியாக 185 ஹெச்பி பவரை வழங்கும் டீசல் என்ஜினில் ஆட்டோ மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது.

நடப்பு ஜூலை மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய மஹிந்திரா XUV700 எஸ்யூவி விற்பனைக்கு ஆகஸ்ட் முதல் கிடைக்க துவங்கலாம்.

source