2021 ரெனோ ட்ரைபர் எம்பிவி விற்பனைக்கு வெளியானது

சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றதாக வந்துள்ள ரெனோ ட்ரைபர் எம்பிவி காரில் RxT மற்றும் RxZ என இரண்டு வேரியண்டுகளில் மட்டும் குறிப்பிடதக்க வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லை.

ரெனோ ட்ரைபர் எம்பிவி

7 இருக்கை கொண்ட 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரு விதமாக கிடைக்கின்றது.

ரெனோ ட்ரைபரின் மைலேஜ் லிட்டருக்கு 20.5 கிமீ வழங்கும் என ஆராய் அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.

RxZ வேரியன்டில் ஓட்டுநர் இருக்கை உயரம் அட்ஜெஸ்ட் செய்வது,கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட மேற்கூறை, மற்றும் டர்ன் இன்டிகேட்டருடன் விங் மிரர் இணைக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.17,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து வேரியண்டுகளிலும் இரண்டு ஹார்ன் கொடுக்கப்பட்டுள்ளது.

2021 Renault Triber price

வேரியண்ட் விலை
RXE ரூ. 5,30,000
RXL ரூ. 5,99,990
RXL Easy-R ரூ. 6,50,000
RXT ரூ. 6,55,000
RXT Easy-R ரூ. 7,05,000
RXZ ரூ. 7,15,000
RXZ Dual Tone ரூ. 7,32,000
RXZ Easy-R ரூ. 7,65,000
RXZ Easy-R Dual Tone ரூ. 7,82,000
(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

ஹீரோ கிளாமர் பைக்கில் 100 மில்லியன் எடிசன் விற்பனைக்கு வந்தது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பினை கொண்டாடும் வகையில் 100 மில்லியன் எடிசனில் கிளாமர் பைக் டிஸ்க் மற்றும் டிரம் என இரண்டிலும் ரூ.73,900 முதல் துவங்குகின்றது.

முன்பாக பண்டிகை காலத்தில் வெளியிடப்பட்ட கிளாமர் பிளேஸ் வேரியண்ட்டை விட ரூ.600 கூடுதலாக அமைந்துள்ளது. 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ள கிளாமர் பைக்கில் 125cc மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7,500rpm-ல் 10.73bhp பவரும், 6,000rpm-ல் 10.6Nm டார்க்கையும் வழங்குகின்றது. ஐ3எஸ் நுட்பத்தினை கொண்டுள்ள இந்த மாடல் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் எளிதாக சவாரி செய்ய, இப்போது ஆட்டோ சாய்ல் அம்சத்தையும் கொண்டுள்ளது.

சிவப்பு மற்றும் வெள்ளை நிற கலவையை கொண்டுள்ள கிளாமரில்  அகலமான டயர்கள், சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர் கொண்டிருக்கின்றது. முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் கொடுக்கப்பட்டு, பின்புறத்தில் பொதுவாக 130 மிமீ டிரம் இணைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ கிளாமர் பைக் விலை பட்டியல்

Hero glamour 100 million edition ரூ .75,700 (drum)

Hero glamour 100 million edition ரூ. 79,200 (disc)

Hero glamour  ரூ .73,900 (drum)

Hero glamour ரூ. 77,400 (disc)

Hero glamour blaze  ரூ .75,100 (drum)

Hero glamour blaze ரூ. 78,600 (disc)

(எக்ஸ்-ஷோரூம், சென்னை)

ஹீரோ பேஸன் புரோ 100 மில்லியன் எடிசன் விற்பனைக்கு வெளியானது

பேஸன் புரோ பைக்கின் அடிப்படையிலான ஹீரோ 100 மில்லியன் எடிசன் விற்பனைக்கு டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இருவிதமான வேரியண்டில் ரூ.69,600 முதல் ரூ.71,800 வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான டிசைன் அமைப்புகள் மற்றும் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் கூடுதலாக 10 கோடி உற்பத்தி எண்ணிக்கை கொண்டாடும் வகையில் மட்டும் 100 மில்லியன் எடிசன் வெளியிடப்பட்டுள்ளது.

பேஸன் புரோவில் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் முறையில் இயக்கப்படுகின்ற (XSens Programmed fuel injection) 7,500 ஆர்.பி.எம்-ல் 8.9 பிஹெச்பி மற்றும் 5,500 ஆர்.பி.எம்-ல் 9.79 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

குறிப்பாக இந்த பைக்கில் ஐ3எஸ் நுட்பம், நெரிசல் மிகுந்த சாலைகளில் கியரை ஷிஃப்ட் செய்யாமல் பைக்கினை இயக்குவதற்கு ஆட்டோ செயில் நுட்பம் ஆகியவற்றுடன் செமி டிஜிட்டல் கிளஸ்ட்டர் உள்ளது.

ஹீரோ பேஸன் புரோ விலை பட்டியல்

Hero passion pro 100 million edition ரூ .69,600 (drum)

Hero passion pro 100 million edition ரூ. 71,800 (disc)

Hero passion pro ரூ .67,800 (drum)

Hero passion pro ரூ. 70,000 (disc)

(எக்ஸ்-ஷோரூம், சென்னை)

2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி விற்பனைக்கு வந்தது

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் கூடுதலாக பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்துவதுடன் 2 கிலோ வரை எடை குறைந்துள்ளது. மற்றபடி பைக்கின் விலை ரூ.3,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய 2021 அப்பாச்சி பைக்கில் 159.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், 4 வால்வு, ஆயில் கூல்டு என்ஜினுடன் வருகிறது. இது 8250 ஆர்.பி.எம்-ல் 17.63 பிஎஸ் பவர் மற்றும் 7250 ஆர்.பி.எம்-ல் 14.72 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பாக இந்த மாடல் 16.02 பிஎஸ் மற்றும் 14.12 என்எம் டார்க் வெளிப்படுத்தி வந்தது. மேலும் எடை 2 கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளதால் தற்போது டிரம் பிரேக் வேரியண்ட் 145 கிலோவும், டிஸ்க் வேரியண்ட் 147 கிலோ எடையை கொண்டுள்ளது.

எல்இடி ஹெட்லைட், மேம்பட்ட பாடி கிராபிக்ஸ், ஃபெதர் டச் ஸ்டார்ட், புதிய மிரர் மற்றும் குறைவான வேகங்களில் சிறப்பான ரைடிங் அனுபவத்தினை வழங்க GTT (Glide Through Traffic) பெற்றதாக வந்துள்ளது.

அப்பாச்சி ஆர்டிஆர் 160 4 வி (டிரம்) ரூ.1.07 ஆகவும், ஆர்டிஆர் 160 4 வி (டிஸ்க்) விலை ரூ .1.10 லட்சமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கின் 100 மில்லியன் சிறப்பு எடிசன்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 100 மில்லியன் உற்பத்தி இலக்கை கடந்துள்ள நிலையில் எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கில் சிறப்பு எடிசன் விற்பனைக்கு ரூ. லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R சிறப்பு எடிஷன்

சிவப்பு மற்றும் வெள்ளை நிற கலவையை பெற்றுள்ள 100 மில்லியன் சிறப்பு எடிசனில் டெக்கனிக்கல் சார்ந்த மாற்றங்கள் இல்லை. புதிய நிறம் மற்றும் பேட்ஜ் மட்டுமே பெற்றுள்ளது.

எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கின் என்ஜின் மிக நேர்த்தியாக ட்யூன் செய்யப்பட்டு மிக சிறப்பான முறையில் அதிகபட்சமாக 8,500rpm-ல் 15.2 ஹெச்பி பவர் மற்றும் 6,500rpm-ல் 14 என்எம் டார்க் வெளிபடுத்தும். உள்ளது. குறிப்பாக அப்பாச்சி 160 பைக்கின் என்ஜின் ஆயில் கூல்டு பெற்றுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸை பெற்றுள்ளது.

சிங்கிள் டிஸ்க் – ரூ. 1,04,100 லட்சம்

டூயல் டிஸ்க் – ரூ. 1,07,100 லட்சம்

ஸ்பெஷல் எடிஷன் – ரூ. 1,08,900 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் இந்தியா)

ரூ.1.13 லட்சத்தில் 2021 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T விற்பனைக்கு வெளியானது

பிஎஸ்-6 இன்ஜின் பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள டூரிங் ரக புதிய 2021 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T பைக்கின் விலை ரூபாய் 1.13 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள எக்ஸ்பல்ஸ் 200 மாடலின் இன்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது.

முந்தைய மாடலில் பெற்றுள்ள அதே வசதிகளை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்ஜின் பிஎஸ்-6 முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. பிஎஸ் 6 என்ஜின் இப்போது ஆயில் கூல்டு எக்ஸ்பல்ஸ் 200 இப்போது அதிகபட்சமாக  8,500rpm-ல் 17.8 ஹெச்பி பவர் மற்றும் 6,500rpm-ல் 16.45 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

தோற்ற அமைப்பு வசதிகளில் எந்த மாற்றமும் வழங்கப்படவில்லை. இந்த பைக்கில் கோல்டு, பிளாக் மற்றும் ரெட் என மூன்று நிறங்கள் உள்ளது. முன்புறத்தில் 276 மிமீ டிஸ்க் பிரேக் உடன் பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்றதாக அமைந்துள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் , பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள மோனோஷாக் அப்சார்பர் அதிகபட்சமாக 170 மிமீ வரை பயணிக்கும், இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 மிமீ கொண்டிருப்பதுடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், எல்இடி ஹைட்லைட், ப்ளூடூத் ஆதரவை பெற்ற எல்சிடி கிளஸ்ட்டர் கொண்டதாகவும், நேவிகேஷன் ஆதரவுடன் வந்துள்ளது.

2021 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி விலை ரூ.1,12,800

நிசானின் மேக்னைட் டர்போ வேரியண்டின் விலை ரூ.30,000 வரை உயர்ந்தது

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள நிசான் மேக்னைட் எஸ்யூவி காரின் டர்போ வேரியண்டின் விலை அதிகபட்சமாக ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி, சாதாரண பெட்ரோல் வேரியண்ட் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை.

100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

சாதாரண 1.0 லிட்டர் B4D பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.

நிசான் மேக்னைட் புதிய விலை பட்டியல்

வேரியண்ட் விலை
XE ரூ. 4.99 லட்சம்
XL ரூ. 5.99 லட்சம்
XV ரூ. 6.68 லட்சம்
XV Premium ரூ. 7.55 லட்சம்
Turbo XL ரூ. 7.29 லட்சம்
Turbo XV ரூ. 7.98 லட்சம்
Turbo XV Premium ரூ. 8.75 லட்சம்
Turbo XL CVT ரூ. 8.19 லட்சம்
Turbo XV CVT ரூ. 8.88 லட்சம்
Turbo XV Premium CVT ரூ. 9.65 லட்சம்

 

ரூ.1.28 லட்சத்தில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி விற்பனைக்கு அறிமுகம்

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட மாடலில் ரைடிங் மோட் இணைத்து விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை ரூபாய் 1.28 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலில் 197.75 சிசி ஒற்றை சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், 4 வால்வு, ஆயில் கூல்டு என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 8500 ஆர்.பி.எம்மில் 20.5 பிஎஸ் சக்தியையும் 7500 ஆர்.பி.எம்மில் 16.8 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அதீக போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் குறைவான வேகங்களில் சிறப்பான ரைடிங் அனுபவத்தினை வழங்க GTT (Glide Through Traffic) பெற்றதாக வந்துள்ளது.

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளது. ரேடிங் மோடிற்கு ஏற்ப ஏபிஎஸ் டீயூன் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு டிவிஎஸ் SmartXonnect மூலம் இணைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

TVS Apache RTR 200 4V – ரூ.1.33 லட்சம்

TVS Apache RTR 200 4V – ரூ.1.28 லட்சம்

ஸ்கோடா குஷாக் காரின் இன்டீரியர் டீசர் வெளியானது

இந்தியாவில் பெரும்பாலான உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்ட ஸ்கோடா ஆட்டோவின் புதிய குஷாக் எஸ்யூவி காரின் இன்டீரியர் டிசைன் படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் உற்பத்தி நிலை மாடல் மார்ச் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

முன்பே பல்வேறு முறை இந்த காரின் எக்ஸ்டீரியர் படங்கள் வெளியானதை தொடர்ந்து டீசர் வெளியிடப்பட்டிருந்தது. இந்த காரின் உட்புறத்தில் மிக நேர்த்தியான டிசைன் அமைப்பில் கொடுக்கப்பட்டு சென்டரல் கன்சோலில் 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கனெக்ட்டிவ் சார்ந்த கார் மை ஸ்கோடா கனெக்ட் தொழில்நுட்பத்தையும் கொண்டதாக விளங்கும்.

டாப் வேரியண்டுகளில் சூப்பர்ப் Laurin & Klement மாடலில் உள்ளதை போன்ற இரண்டு ஸ்போக் ஸ்டீரியங் வீல் இணைக்கப்பட்டு, குறைந்த விலையில் கிடைக்கும் மாடல்களில் மூன்று ஸ்போக் வீல் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

குஷாக்கில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (115PS/200Nm) மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் (150PS/250Nm) மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் பெறலாம். டீசல் என்ஜின் இடம்பெறுவதற்கு மாற்றாக சிஎன்ஜி என்ஜின் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரூ.65,926 விலையில் பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் முதன்முறையாக குறைந்த 110சிசி இன்ஜின் பெற்ற பைக் மாடலாக பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் விற்பனைக்கு ரூபாய் 65,926 வெளியிடப்பட்டுள்ளது. 110 h-gear மாடலை விட ரூ.1600 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.

பிஎஸ்-6 இன்ஜின் பெற்றதாக வந்துள்ள பிளாட்டினா 110 பைக்கில் வழங்கப்பட்டுள்ள 115.45 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் எலக்ட்ரானிக் கார்புரேட்டர் பெற்று அதிகபட்சமாக 8.6 ஹெச்பி பவரை 7000 RPM-லும், 9.81 Nm டார்க்கினை 5000 RPM-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

செமி டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டரை பெறுகின்ற பிளாட்டினா 110 ஏபிஎஸ் மாடல் கியரில் கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர், கடிகாரம், ஃப்யூவல் இன்டிகேட்டர், ஓடோமீட்டர் ட்ரீப் மீட்டர் போன்றவை உள்ளது.

பின்புறத்தில் 110 மிமீ பயணிக்கின்ற நைட்ரக்ஸ் ஸ்பீரிங் டூ ஸ்பிரிங் சஸ்பென்ஷன் மற்றும் 135 மிமீ பயணிக்கின்ற டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் இணைக்கப்பட்டு கூடுதலாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பெறுகின்றது.