யூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்

யூஸ்டு பைக் அல்லது செகன்ட் ஹேன்ட் பைக் வாங்கும்பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளலாம். பழைய பைக் வாங்குவதில் உள்ள சிரமங்களை எளிதாக கையாளும் வகையில் உள்ள சில முக்கிய விவரங்கள்.

பழைய பைக் வாங்கும் முயற்சியில் இறங்கினால் சற்று கூடுதல் கவனம் மற்றும் அதிகப்படியான தேடுதலை செய்ய வேண்டியது அவசியம். யூஸ்டு பைக்கில் தேர்ந்தெடுப்பத்தில் கவனம் ஏன் தேவை ?

சில கேள்விகளுக்கு பதில் தாருங்கள்
1. எந்த மாதிரியான பைக்
2. ஏன் பழைய பைக்
3. எந்த பிராண்டு
4. ஏன் இந்த பிராண்டு
5. இந்த பைக் பற்றி தெரிந்த முக்கியமானவை
6. வண்டி சர்வீஸ் பற்றி
7. உரிமையாளர் உங்களுக்கு தெரிந்தவரா ? அல்லது கன்சல்ட்ன்சியா ?
8. டாக்குமென்ட் பற்றிய தெளிவு

இந்த கேள்விகளுக்கு  உங்கள் பதில்களை தனியாக வைத்துக்கொள்ளுங்க ? இனி தொடர்ந்து பார்க்கலாம்.

1. சந்தையில் பல விதமான மாடல்களில் பைக் விற்பனையில் உள்ளது. அவை ஸ்கூட்டர் , காமுடேட்டர் , ஸ்போர்ட்ஸ் மற்றும் பிரிமியம் பைக்குகள் என எதுவாக இருப்பினிலும் தேர்ந்தெடுங்கள்.

மேலும் படிக்க ; புதிய பைக் வாங்கலாமா டிப்ஸ்

2. சந்தையில் எண்ணற்ற புதிய மாடல்கள் பல விதமான என்ஜின் ஆப்ஷ்னில் குறைந்த வட்டி விகிதத்தில் புதிய பைக்குகள் கிடைக்கும் பொழுது ஏன் பழைய பைக்கினை தேர்வு செய்துள்ளோம் என்றால் குறைவான விலையில் தரமான பைக்கை வாங்கும் நோக்கத்தில் தான்.

3. சந்தையில் விற்பனையில் உள்ள முன்னனி பிராண்டுகளோ அல்லது உங்கள் விருப்பமான பிராண்டாக இருந்தாலும் அந்த பிராண்டினை பற்றியும் அதன் யூஸ்டு பைக் பற்றி அவசியம் தெரிய வேண்டும்.

4. நீங்கள் தேர்ந்தெடுத்த பிராண்டு உங்கள் விருப்பமானதோ ? அல்லது மற்றவரின் தூன்டலாக இருந்தாலும் அந்த பிராண்டில் உள்ள சிறப்பான மைலேஜ் தரவல்ல சிறப்பான பைக்கினை தேர்ந்தேடுங்கள்.

5. நீங்கள் வாங்க நினைக்கும் பைக்கில் கண்டிப்பாக இதையெல்லாம் கவனிங்க

1. தயாரித்த ஆண்டு
2. பைக்கின் தோற்றம் கவர்கின்றதா ? இல்லையா ?
3. எவ்வளவு தூரம் ஓடியுள்ளது.
4. டாக்குமென்ட் உள்ளதா ? இல்லையா ?
5. காப்பீடு இன்று வரை உள்ளதா ? அல்லது பாதியில் கைவிடப்பட்டுள்ளதா ?
6.  பைக்கின் உங்கள் மதிப்பீடு
7. சந்தையில் உள்ள மறுமதிப்பீடு

இவைகளை மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்

6. வாகனத்தில் சர்வீஸ் தொடர்ந்து செய்யப்பட்டுள்ளதா ? அல்லது முறையற்ற சர்வீஸா என்பதை அவசியம் கவனிங்க , சர்வீஸ்தான் ஒரு வாகனத்தின் தரத்தினை பெரும்பகுதி உறுதி செய்யும். எங்கே சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது சர்வீஸ் மையமா ? அல்லது தெரிந்தவரிடமா ? என கேட்டு தெரிந்து கொள்ளுவதனால் பைக்கை பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ளலாம்.

7. பழைய பைக் யாரிடம் வாங்க போறிங்களோ அவர்கள் உங்களுக்கு நன்கு அறிமுகமானவராக இருத்தல் மிக அவசியம். ஆட்டோ கன்சல்ட்ன்சியில் வாங்கினால் உங்கள் அருகாமையில் உள்ள நிலையத்தில் வாங்குங்கள்..அது உங்களுக்கு எதிர்காலத்தில் உதவி செய்யும்.

8.  டாக்குமென்ட் பற்றி நன்கு தெளிவான விவரங்கள் அறிந்த நபரை கொண்டு சோதனை செய்து வாங்குவதனால் பல இன்னல்களை தவிர்க்க முடியும்.

நீங்கள் உள்ள யூஸ்டு பைக் அல்லது பழைய பைக் வாங்கும்பொழுது அவசியம் செக் செய்ய வேண்டிய செக்லிஸ்ட் என்ன ? தெரிந்து கொள்ள கீழே சொடுக்கவும்

பழைய பைக் வாங்கும் முன் சோதனை செய்ய வேண்டிய செக்லிஸ்ட்

Used Bike buying tips in Tamil

முதல் பதிவுசெய்த நாள் 20/08/2015

புதிய அல்கசார் எஸ்யூவி படங்கள் அறிமுகத்திற்கு முன்பாக கசிந்தது

வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற 6 மற்றும் 7 இருக்கைகளை கொண்ட எஸ்யூவி காராக விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் அல்கசாரின் படங்கள் அறிமுகம் செய்வதற்கு முன்பாக இணையத்தில் கசிந்தள்ளது.

அல்கசாரில் இடம்பெற உள்ள இன்ஜின் பொறுத்தவரை அனேகமாக கிரெட்டாவில் உள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் அதிகபட்சமாக 140hp பவரை வெளிப்படுத்தும், டூயல் கிளட்ச் ஆட்டோ மற்றும் மேனுவல், 115 ஹெச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கலாம்.

அல்கசார் டிசைன்

தற்போது வெளிவந்துள்ள படங்களில் கிரெட்டா எஸ்யூவி தோற்ற உந்துதலை பின்னணியாக கொண்டுள்ள நிலையில் ஹூண்டாயின் பாலிசேட் எஸ்யூவி தோற்றத்தின் அடிப்படையில் அல்கசார் பல்வேறு சிறிய அளவிலான டிசைன் அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக முன்புற கிரில் அமைப்பு, ஹெட்லைட், பனி விளக்குகள், பம்பரில் சிறிய மாற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

பக்காவட்டு தோற்றத்தில் புதிய நிறத்திலான அலாய் வீல், சி-பில்லர் பகுதியில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிரெட்டாவை விட நீளமாகவும், மூன்றாவது வரிசை இருக்கை அமைப்பதற்கான இடம் தாராளமாக கொடுக்கப்பட்டிருக்கும்.

பின்புற டெயில் அமைப்பில் பெரும்பகுதி கிரெட்டா காரிலிருந்து அல்கசார் காரின் டெயில் விளக்குகள், நெம்பர் பிளேட் இடம், க்ரோம் ஸ்லாட் ஆகியவை மாறுபடுகின்றது.

முழுமையான விபரம் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் நிலையில் விற்பனைக்கு மே அல்லது ஜூன் மாதம் வெளியிடப்படும் ஹூண்டாய் அல்கசார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

image source – hum3d.com

ஸ்கிராம்பளர் பைக்கை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தும் ஜாவா

சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற ஜாவா அல்லது யெஸ்டி ஸ்கிராம்பளர் ஸ்டைல் பைக்கின் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜாவா பிராண்டில் ஜாவா 300, பெராக் மற்றும் ஃபார்ட்டி டூ ஆகிய மாடல்கள் விற்பனைக்கு கிடைத்து வரும் நிலையில், ஃபார்ட்டி டூ அடிப்படையிலான பாகங்களை கொண்டு ஸ்கிராம்பளர் பைக்கின் தோற்றத்தை பெற்றுள்ள மாடல் புனே அருகில் சோதனை செய்யப்பட்டு வரும் படங்கள் முதன்முறையாக கிடைக்கப் பெற்றுள்ளது.

பொதுவாக ஜாவா பயன்படுத்தி வருகின்ற  293 சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27.3 bhp பவரையும், 27 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும் வாய்ப்புகள் உள்ளது.

சோதனை செய்யப்படுகின்ற மாடலின் டேங்க் அமைப்பு 42 மாடலின் அடிப்படையில் சிறிய மாற்றங்களை மட்டும் பெற்றிருக்கலாம். மற்றபடி இரட்டை பயன்பாடுகளுக்கு ஏற்ற டயர், ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற இருக்கை அமைப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கின்றது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்புறத்திலும், பின்புறத்தில் இரட்டை ஸ்பீரிங் பெற்ற ஷாக் அப்சார்பர் கொண்டிருக்கின்றது.

சோதனை ஓட்டத்தில் உள்ள யெஸ்டி ஸ்கிராம்பளர் வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

image source – motorbeam

ஏப்ரல் 1 முதல் கார்கள் விலை உயருகின்றது

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மாருதி சுசூகி, நிசான், டட்சன் மற்றும் ரெனோ நிறுவனங்களின் கார்கள் விலை உயருகின்றது. மேலும் பல நிறுவனங்கள் அடுத்தடுத்து விலை உயர்வை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது.

பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ஜனவரி 2021-யில் விலை உயர்த்தியிருந்த நிலையில், மீண்டும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் உள்ளீட்டு கட்டணம் உயர்வு முக்கிய காரணமாக குறிப்பிட்டுள்ளனர்.

மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்கள் மற்றும் எஸ்யூவி விலையை ரூ.5,000 முதல் ரூ.34,000 வரை அதாவது 1% முதல் 6% வரை உயர்த்த உள்ளனர்.

மேலும் நிசான், டட்சன் மற்றும் ரெனோ நிறுவனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் விலை எவ்வளவு உயர்த்தப்படும் என அறிவிக்கவில்லை.

ஹீரோ டெஸ்ட்டினி 125 பிளாட்டினம் எடிசன் விற்பனைக்கு வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 100 மில்லியன் எடிசன் உட்பட கூடுதலாக டெஸ்டினி 125 பிளாட்டினம் எடிசன் விலை ரூ.72,050 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முன்பாக பிளெஷர் பிளஸ் மாடலில் பிளாட்டினம் எடிசன் வெளியிடப்பட்டிருந்தது.

டெஸ்ட்டினி 125 மாடலில் பிரீமியம் தோற்ற பொலிவினை பெற்று கருப்பு மற்றும் பிரவுன் நிறத்துடன் அமைந்துள்ளது. மிரர், சைலென்ஷர் மஃப்லர், கைப்பிடி மற்றும் ஃபென்டர் போன்றவற்றில் க்ரோம் பாகங்கள் பெரும்பாலும் இணைக்கப்பட்டுள்ளது.  இரு வண்ண இருக்கை, இருக்கை பேக் ரெஸ்ட் மற்றும் குறைந்த மைலேஜ் இன்டிகேட்டர் வசதி போன்றவற்றை பெற்றுள்ளது.

FI நுட்பத்துடன் கூடிய ஹீரோவின் 10 சென்சார் நுட்பத்தை (XSens Technology) கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்டினி 125 பிஎஸ்6 மாடலில் 125 சிசி புரோகிராம் செய்யப்பட்ட எஃப்ஐ இன்ஜின் ‘எக்ஸ்ஸென்ஸ் டெக்னாலஜி’ உடன் வருகிறது. 9 பிஹெச்பி பவரினை 7000 ஆர்.பி.எம் மற்றும் 10.4 என்எம் டார்க்கினை 5500 ஆர்.பி.எம்-ல் வழங்குகின்றது.

சாதரண டெஸ்டினி 125 வேரியண்ட் விலை ரூ.66,960 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

470 கிமீ ரேஞ்சு.., ஜாகுவார் ஐ-பேஸ் இந்திய சந்தையில் வெளியானது

ரூ.1.06 கோடி ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ள ஜாகுவார் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி ஐ-பேஸ் காரின் ரேஞ்சு சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 470 கிமீ தொலைவு பயணிக்கும் திறனை கொண்டிருக்கும் என இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குறைந்த விலை மின்சார கார்களை விட பிரீமியம் ரக மின்சார கார்களுக்கான சந்தை விரிவடைந்து வருகின்ற நிலையில் மெர்சிடிஸ்-பென்ஸ் EQC காருக்கு சவாலாகவும், அடுத்து வரவிருக்கும் ஆடி இ-ட்ரான் மாடலுக்கும் போட்டியாக விளங்கும்.

ஜாகுவார் i-Pace சிறப்புகள்

S, SE மற்றும் HSE என மூன்று வேரியண்டுகளில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஐ-பேஸில் பொதுவாக 90kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் இரண்டு மின்சார மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 400 ஹெச்பி பவரை, 696Nm டார்க் உருவாக்குகிறது. 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.8 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.

பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 100kW விரைவு முறையிலான ரேபீட் சார்ஜரில் 0-80 சதவீதம் எட்டுவதற்கு 45 நிமிடங்களும், 7.4Kw ஏசி வால் சார்ஜரில் 10 மணி நேரம் ஆகும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 470 கிமீ கிடைக்கும் என WLTP மதிப்பிட்டுள்ளது. ஆனால்  ARAI சோதனையின் படி ரேஞ்சு விபரம் வெளியாகவில்லை.

டாடா பவர் மூலம் இணைந்து ஜாகுவார் ஐ-பேஸ் கார் வாடிக்கையாளர்களுக்கு ஹோம் சார்ஜிங் கேபிள் மற்றும் 7.4 கிலோவாட் AC சார்ஜரை பொருத்தி தரப்பட உள்ளது.

இந்நிறுவனம், 8 ஆண்டு அல்லது 1,60,000 கி.மீ பேட்டரி உத்தரவாதத்துடன் கூடுதலாக 5 ஆண்டு சர்வீஸ் மற்றும் 5 ஆண்டு சாலையோர உதவியை வழங்குகிறது.

2021 Jaguar I-Pace prices (ex-showroom, India)
Variant Price
S Rs 1.06 crore
SE Rs 1.08 crore
HSE Rs 1.12 crore

அல்கசார் எஸ்யூவி மாதிரி படத்தை வெளியிட்ட ஹூண்டாய்

வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் அறிமுகத்திற்கு வரவிருக்கும் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி மாடலின் மாதிரி வரைபடம் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள கிரெட்டா 5 இருக்கைகளை கொண்ட மாடலை அடிப்படையாக கொண்ட 6 மற்றும் 7 இருக்கைகள் பெற்ற காராக விளங்க உள்ளது.

தோற்ற அமைப்பு உட்பட பல்வேறு வசதிகள் கிரெட்டா காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற அல்கசாரில் 6 கேப்டன் இருக்கை கொண்ட மாடலாகவும், 7 இருக்கை கொண்ட மாடலாகவும் வரவுள்ளது. காரின் தோற்ற அமைப்பில் பின்புற சி-பில்லர் பகுதியில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு, டெயில் கேட் பகுதி மாற்றியமைக்கப்பட்டு, டெயில் விளக்குகள், பம்பர் உள்ளிட்டவை மட்டும் சிறிதான மாற்றங்களை கொண்டிருக்கும். முன்புறத்தில் கிரில் அமைப்பு மற்றும் பம்பரில் மட்டும் கிரெட்டா காரின் தோற்றத்திலிருந்து வித்தியாசப்படும் வகையில் அமைந்திருக்கும்.

இன்டிரியரில் டேஸ்போர்டு, சென்ட்ரல் கன்சோல் மற்றும் ஸ்டீயரிங் அமைப்பில் கிரெட்டா காரினை பின்பற்றியும், சில கூடுதலான டிசைன் மாற்றங்கள், அப்ஹோல்ஸ்ட்ரி, இருக்கை உறைகளில் மாற்றங்கள் அமைந்திருக்கலாம்.

பாதுகாப்பு அம்சங்கள், நவீனத்துவமான கனெக்டிவ் சாந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். குறிப்பாக ADAS தொழில்நுட்பம் இதனை வெளிநாடுகளில் ஹூண்டாய் ஸ்மார்ட்சென்ஸ் என குறிப்பிடுகின்றது.

ஃபார்வர்ட் மோதல் தடுக்க தானியங்கி அவசரகால பிரேக்கிங் தொழில்நுட்பம், பிளைன்ட் ஸ்பாட் மோதல் தவிர்ப்பு உதவி, ரிவர்ஸ் மாறும்போது தானியங்கி அவசரகால பிரேக்கிங் மற்றும் பின்புற போக்குவரத்து எச்சரிக்கை போன்ற ஹூண்டாய் ஸ்மார்ட் சென்ஸ் அம்சங்களில் இடம்பெற்றிருக்கலாம்.

அல்கசார் இன்ஜின்

இந்த மாடலில் இடம்பெற உள்ள இன்ஜின் ஆப்ஷன் குறித்து எந்த தகவலும் தற்போது அறிவிக்கப்படவில்லை. எனினும், கிரெட்டாவில் உள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் அதிகபட்சமாக 140hp பவரை வெளிப்படுத்தும், டூயல் கிளட்ச் ஆட்டோ மற்றும் மேனுவல், 115 ஹெச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கலாம்.

அறிமுக விபரம்

வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் விற்பனைக்கு மே மாத இறுதி அல்லது ஜூன் மாத முதல் வாரத்தில் விலை அறிவிக்கப்படலாம். இந்தியாவில் கிடைக்கின்ற எம்ஜி ஹெக்டர் பிளஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி 500, டாடா சஃபாரி மற்றும் வரவிருக்கும் காம்பஸ் 7 இருக்கை ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ள ஹூண்டாய் அல்கசார் விலை ரூ.12 லட்சம் முதல் துவங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

புதிய நிறங்களில் 2021 ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் பைக்குகளில் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கான்டினென்டினல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 என இரு மாடல்களிலும் ஐந்து புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டு, பல்வேறு கஸ்டமைஸ் வசதிகளை வழங்கும் Make it Yours (MiY) வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்பட்டுள்ள மெக்கானிக்கல் வசதிகள் மற்றும் இன்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது. 650 சிசி என்ஜின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

இன்டர்செப்டார் 650 பைக்கில் புதிதாக ஒற்றை நிறத்தில் கேனியன் ரெட் மற்றும் வென்ச்சுரா ப்ளூ., டூயல் டோன் ஆப்ஷனில் டவுன்டவுன் டிராக், மற்றும் சன்செட் ஸ்ட்ரிப் மற்றும் மார்க் 2 என்ற புதிய குரோம் வேரியண்ட் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய நிறங்களான ஆரஞ்சு க்ரூஸ் மற்றும் பேக்கர் எக்ஸ்பிரஸ் கிடைக்கின்றது. இந்த பைக்குகளின் ஒற்றை நிற மாடல்களில் கருப்பு நிற வீல் மற்றும் மட்கார்டு உள்ளது.

கான்டினென்டினல் ஜிடி 650 பைக்கில் புதிதாக ஒற்றை வண்ணத்தில் ராக்கர் ரெட் மற்றும் பிரிட்டிஷ் ரேசிங் கிரீன்.., டக்ஸ் டீலக்ஸ் மற்றும் வென்ச்சுரா ஸ்ட்ராம், மிஸ்டர் க்ளீன் என்ற புதிய வேரியன்ட் கிடைக்கின்றது.

Variant Price
2021 Interceptor 650 Single Tone ரூ. 2,75,467
2021 Interceptor 650 Dual Tone ரூ. 2,83,593
2021 Interceptor 650 Chrome ரூ. 2,97,133
2021 Continental GT 650 Single Tone ரூ. 2,91,701
2021 Continental GT 650 Dual Tone ரூ. 2,99,830
2021 Continental GT 650 Chrome ரூ. 3,13,367

 

(எக்ஸ்ஷோரூம்)

குஷாக் எஸ்யூவி காரை வெளியிட்ட ஸ்கோடா ஆட்டோ இந்தியா

95 % உதிரிபாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்ற ஸ்கோடா ஆட்டோவின் குஷாக் எஸ்யூவி காரில் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் ‘India 2.0 project’ திட்டத்தில் விஷன் இன் கான்செப்ட் என அறிமுகம் செய்யப்பட்டு முதல் மாடலாக உற்பத்திக்கு எடுத்து செல்லப்பட்டுள்ள இந்த எஸ்யூவி காரில் பிரத்தியேகமான MQB A0 IN மாடூலர் பிளாட்ஃபாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குஷாக்கில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் அதிகபட்சமாக 115PS பவர் 200Nm டார்க் வெளிப்படுத்தும் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. அடுத்தப்படியாக, டாப் வேரியண்டில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் அதிகபட்சமாக 150PS பவர் 250Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் பெற உள்ளது.

இந்த காரின் உட்புறத்தில் மிக நேர்த்தியான டிசைன் அமைப்பில் கொடுக்கப்பட்டு டேஸ்போர்டில் க்ரோம் பார் இணைக்கப்பட்டு, சென்டரல் கன்சோலில் 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கனெக்ட்டிவ் சார்ந்த கார் மை ஸ்கோடா கனெக்ட் தொழில்நுட்பத்தையும் கொண்டதாக விளங்கும்.

டாப் வேரியண்டுகளில் சூப்பர்ப் Laurin & Klement மாடலில் உள்ளதை போன்ற இரண்டு ஸ்போக் ஸ்டீரியங் வீல் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உட்பட 6 ஸ்பீக்கர்கள், வென்டிலேட்டேட் இருக்கை, ஆகியவற்றை பெற்றிருக்கும்.

குஷாக் எஸ்யூவி காரில் 6 ஏர்பேக்குகள், ISOFIX குழந்தைகள் இருக்கை, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், வைப்பர் பெற்றுள்ளது.

அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள குஷாக் மாடலுக்கு ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, கியா செல்டோஸ், நிஸான் கிக்ஸ் உட்பட வரவிருக்கும் ஃபோக்ஸ்வேகன் டைகன் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

ஹார்லி-டேவிட்சன் SRV300 ஸ்போர்ட்ஸ்டெர் பைக்கின் படங்கள் கசிந்தது

296cc லிக்யூடு கூல்டு V-twin இன்ஜின் பெற்ற ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் சீன கூட்டணி நிறுவனமான Qianjiang (பெனெல்லி குழுமம்) தயாரிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள மாடலுக்கு SRV300 ஸ்போர்ட்ஸ்டெர் என பெயரிடப்பட்டுள்ளது.

குயான்ஜாங் நிறுவனம் முன்பாக ஹார்லியின் 338ஆர் மாடலை வடிவமைத்திருந்தது. தொடர்ந்து அடுத்து வடிவமைக்கப்பட்டுள்ள புதிய 296 சிசி லிக்யூடு கூல்டு V-twin இன்ஜின் பவர் அதிகபட்சமாக 30hp வரை வெளிப்படுத்துவது உறுதியாகியுள்ளது.

விற்பனையில் கிடைக்கின்ற பாபர் ரக ஸ்டைல் ஹார்லி-டேவிட்சன் ஐயன் 883 வடிவமைப்பினை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள புதிய மாடல் சீன சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. முன்புறத்தில் 16 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 15 அங்குல வீல், ஏபிஎஸ் மற்றும் பைக்கின் எடை 163 கிலோ ஆக அமைந்திருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

QJMotor SRV300 பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 129 கிமீ ஆகும்.

சீன சந்தையில் வெளியிடப்பட உள்ள நிலையில், இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் ஹார்லி இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ள நிலையில் ஆனால் எப்பொழுது விற்பனைக்கு வெளியிடப்படும் என்ற தகவலும் இல்லை.

image source