ரூ.13,000 வரை விலை உயர்ந்த ரெனோ ட்ரைபர் கார்

ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி

ரெனோ இந்தியா நிறுவனத்தின் குறைந்த விலை எம்பிவி ரக மாடல் ரெனோ ட்ரைபர் விலை ரூ.13,000 வரை உயர்த்தப்பட்டு இப்போது ரூ.5.12 லட்சம் முதல் துவங்குகின்றது. குறைந்த விலையில் 7 இருக்கை கொண்ட காராக விளங்குகின்றது.

ட்ரைபர் எம்பிவி ஆரம்ப நிலையில் உள்ள RXE வேரியண்ட் மட்டும் அதிகபட்சமாக ரூ.13,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி மற்ற வேரியண்டுகள் ரூ.11,500 வரை விலை உயர்ந்துள்ளது.

ட்ரைபர் காரில் இடம்பெற்றுள்ள 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றதாக கிடைக்கின்றது.

அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட், டூயல் முன்பக்க ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உடன் இபிடி, பார்க்கிங் சென்சார், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், மற்றும் உயர் ரக மாடல்களில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா கொண்டதாக விளங்கும்.

இதுதவிர, டாப் வேரியண்டில் அதிகபட்சமாக நான்கு ஏர்பேக்குகள் வழங்கப்பட்டிருக்கும். ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான ஏர்பேக் உட்பட பக்கவாட்டு ஏர்பேக் மற்றும் முன் ஏர்பேக் வழங்கப்பட்டிருக்கும்.

Renault Triber விலை பட்டியல்

வேரியன்ட் பழைய விலை புதிய விலை வித்தியாசம்
RxE ₹ 4.99 லட்சம் ₹ 5.12 லட்சம் ₹ 13,000
RxL ₹ 5.78 லட்சம் ₹ 5.89 லட்சம் ₹ 11,500
RxL AMT ₹ 6.18 லட்சம் ₹ 6.29 லட்சம் ₹ 11,500
RxT ₹ 6.28 லட்சம் ₹ 6.39 லட்சம் ₹ 11,500
RxT AMT ₹ 6.68 லட்சம் ₹ 6.79 லட்சம் ₹ 11,500
RxZ ₹ 6.82 லட்சம் ₹ 6.94 லட்சம் ₹ 12,500
RxZ AMT ₹ 7.22 லட்சம் ₹ 7.34 லட்சம் ₹ 12,500

டொயோட்டா அர்பன் க்ரூஸர் விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் காம்பாக்ட் எஸ்யூவி சந்தையில் மற்றொரு மாடலாக டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் விலை ரூ.8.40 லட்சம் முதல் ரூ.11.30 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாகும்.

இந்திய சந்தையில் டொயோட்டா-சுசுகி கூட்டணியில் வெளியான பலேனோ அடிப்படையிலான கிளான்ஸா சீரான விற்பனையை பதிவு செய்து வருகின்றது. தற்போது இரண்டாவது மாடலாக இந்த எஸ்யூவி விளங்க உள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸா அடிப்படையிலான அதே இன்ஜினை பெறுகின்ற அர்பன் க்ரூஸரில் டீசல் இன்ஜின் வழங்கப்படாமல் பெட்ரோல் இன்ஜின் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 103 ஹெச்பி பவர், 138 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் SHVS ஹைபிரிட் நுட்பத்துடன் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்டுள்ளது.

அர்பன் க்ரூஸர் காரின் பெட்ரோல் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 17.03 கிமீ (மேனுவல்) மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 18.76 கிமீ ஆகும்.

இன்டிரியரின் டேஸ்போர்டு மற்றும் கேபின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. டொயோட்டா லோகோ மட்டும் இணைக்கப்பட்டு பிரெஸ்ஸாவின் கருப்பு நிற அப்ஹோல்ஸ்ட்ரிக்கு பதிலாக பிரவுன் நிறத்தை பெற்றுள்ளது. இன்டிரியரில் கருப்பு – பிரவுன் நிறத்தை கொண்டுள்ளது. 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றை கொண்டுள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்டியரிங் மவுன்டேட் ஆடியோ கன்ட்ரோல், மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர்கள் உள்ளது.

தோற்ற அமைப்பினை பொறுத்தவரை, விட்டரா பிரெஸ்ஸா காரின் முகப்பு அமைப்பில், வழக்கமான டொயோட்டாவின் எஸ்யூவி கார்களுக்கு உரித்தான முன்புற ஸ்லாட் கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. பனி விளக்கு அறை மட்டும் விட்டாரா பிரெஸ்ஸா காரிலிருந்து மாறுபட்டுள்ளது. மற்றபடி, பனி விளக்குகள், எல்இடி ஹெட்லேம்ப் , எல்இடி டெயில் லைட் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.

பாதுகாப்பு சார்ந்த அமைப்பில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ரியர் வியூ கேமரா போன்றவை உள்ளது. டொயோட்டா நிறுவனம் இந்த காருக்கு மூன்று வருடம் அல்லது 1,00,000 கிமீ வாரண்டி வழங்கப்படுகின்றது. இன்று முதல் ஆன்லைன் மற்றும் டீலர்கள் வாயிலாக ரூ.11,000 செலுத்தி முன்பதிவு மேற்கொள்ளலாம்.

இந்த எஸ்யூவி மாடலில் மிட், ஹை மற்றும் பிரீமியம் என மூன்று வேரியண்டுகளை பெற்றுள்ளது. இந்த காருக்கு போட்டியாக விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், வென்யூ, எக்ஸ்யூவி300 மற்றும் டாடா நெக்ஸான் போன்றவை உள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் விலை பட்டியல்

விட்டாரா பிரெஸ்ஸா காரை விட ரூ.5500 வரை விலை கூடுதலாக டொயோட்டாவின் அர்பன் க்ரூஸர் விலை அமைந்துள்ளது.

Toyota Urban Cruiser விலை (விற்பனையகம் டெல்லி)
வேரியண்ட் Urban Cruiser MT Urban Cruiser AT
Urban Cruiser Mid ரூ.8.40 லட்சம் ரூ.9.80 லட்சம்
Urban Cruiser High ரூ.9.15 லட்சம் ரூ.10.65 லட்சம்
Urban Cruiser Premium ரூ.9.80 லட்சம் ரூ.11.30 லட்சம்

விற்பனையில் தெறிக்க விடும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்

ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்த புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் விற்பனை எண்ணிக்கை போட்டியாளர்களை விட மிக சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக எக்ஸ் பிளேடு மற்றும் ஜிக்ஸர் போன்ற பைக்குகளுக்கு சவாலாக அமைந்திருக்கின்றது.

150சிசி-160சிசி பைக்குகளுக்கான சந்தையில் மிகவும் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் வெளியான எக்ஸ்ட்ரீம் 160ஆர் மாடலின் போட்டியாளர்களாக அப்பாச்சி ஆர்டிஆர் 160, பல்சர் என்எஸ் 160, யமஹா FZ S, எக்ஸ்பிளேடு மற்றும் சுசூகி ஜிக்ஸர் போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது.

அப்பாச்சி வரிசையில் விற்பனை செய்யப்படுகின்ற 160, 180 200 போன்றவற்றின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 33,540 ஆக உள்ளது. சுசூகி ஜிக்ஸர் மாடலின் எண்ணிக்கை 2,817 ஆகவும், ஹோண்டாவின் எக்ஸ்பிளேடு எண்ணிக்கை 5,557 ஆக உள்ளது. மற்றொரு போட்டியாளரான பிரசத்தி பெற்ற யமஹா FZ எண்ணிக்கை 17,868 ஆகும்.

நேரடியான போட்டியாளர்களான ஜிக்ஸர் மற்றும் எக்ஸ் பிளேடு போன்றவற்றை விட கூடுதலான எண்ணிக்கையில் 12,037 ஆக பதிவு செய்துள்ளது.

மாடல் எண்ணிக்கை
எக்ஸ்ட்ரீம் 160R 12,037
ஜிக்ஸர் 2,817
எக்ஸ்-பிளேடு 5,557

 

விலைக்கு ஏற்ற மதிப்பினை வழங்குகின்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனை எண்ணிக்கை பண்டிகை காலத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதனால் மிக சிறப்பான வரவேற்பினை தக்கவைத்து கொள்ள வாய்ப்புள்ளது.

3 லட்சம் டாடா டியாகோ கார்கள் உற்பத்தியில் சாதனை

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சனந்த டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி துவங்கப்பட்ட டாடா டியாகோ காரின் உற்பத்தி எண்ணிக்கை 3,00,000 நான்கு ஆண்டுகளில் கடந்து சாதனை படைத்துள்ளது.

முன்பாக டியாகோ டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனைக்கு கிடைத்து வந்த நிலையில், தற்போது டியாகோ காரில் 86 ஹெச்பி மற்றும் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது.

சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற குளோபல் என்சிஏபி சோதனையின் மூலம் கிராஷ் டெஸ்டில் 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள் பாதுகாப்பில் மூன்று நட்சத்திரங்களை கொண்டுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் சான்ட்ரோ, மாருதி செலிரியோ மற்றும் டட்சன் கோ போன்ற கார்களை டாடா டியாகோ எதிர்கொள்ளுகின்றது.

ரூ.11.95 லட்சத்தில் டூகாட்டி ஸ்கிராம்பளர் 1100 விற்பனைக்கு வந்தது

பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற டூகாட்டி ஸ்கிராம்பளர் 1100 புரோ மற்றும் ஸ்கிராம்பளர் 1100 ஸ்போர்ட் புரோ என இரு மாடல்களையும் இந்தியாவில் ரூ.11.95 லட்சம் முதல் ரூ.13.74 லட்சம் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைமுறையில் உள்ள புதிய மாசு கட்டுப்பாடு விதிகள் பிஎஸ்-6 முறைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட 1079 சிசி ஏர் கூல்டு  L-ட்வீன் இன்ஜின் அதிகபட்சமாக 86 ஹெச்பி பவர் மற்றும் 88 என்எம் டார்க் வழங்குகின்றது.

புரோ மற்றும் ஸ்போர்ட் புரோ என இரு மாடல்களும் ஒரே இன்ஜினை பகிர்ந்து கொள்வதுடன், தோற்ற அமைப்பில் ஒரே மாதிராயக இருந்தாலும் ஸ்போரட் புரோ மாடல் சிறப்பு மேட் கருப்பு நிறத்துடன் உயர் ரக Öhlins சஸ்பென்ஷன் மற்றும் லோயர் ஹேண்டில் பார் கொண்டுள்ளது.

மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் டுகாட்டி டிராக்‌ஷன் கட்டுப்பாடு, மூன்று ரைடிங் மோட் (ஆக்டிவ், ஜர்னி, சிட்டி) மற்றும் போஷின்  கார்னிரிங் ஏபிஎஸ் போன்ற எலக்ட்ரானிக்ஸ் உடன் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டரைப் பெறுகின்றன. இரண்டு பைக்குகளிலும் ப்ரெம்போ எம்4 காலிப்பர்ஸ் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் டுகாட்டி Scrambler 1100 புரோ ரூ. 11.95 லட்சம் மற்றும் புரோ ஸ்போர்ட் 13.74 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் கிடைக்கின்றது.

குறைந்த விலை டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி விற்பனைக்கு வந்தது

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மட்டும் இணைக்கப்பட்ட சூப்பர் மோட்டோ ஏபிஎஸ் வேரியண்ட் ரூ.1.23 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் கிடைக்கின்ற டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் ஒப்பீடுகையில் ரூ.5,000 வரை விலை குறைவாக அமைந்துள்ளது.

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலில் 197.75 சிசி ஒற்றை சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், 4 வால்வு, ஆயில் கூல்டு என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 8500 ஆர்.பி.எம்மில் 20.5 பிஎஸ் சக்தியையும் 7500 ஆர்.பி.எம்மில் 16.8 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அதீக போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் குறைவான வேகங்களில் சிறப்பான ரைடிங் அனுபவத்தினை வழங்க GTT (Glide Through Traffic) பெற்றதாக வந்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு டிவிஎஸ் கனெக்ட் ஆப் மூலம் இணைத்துக் கொள்ளுவதன் மூலம் குறுஞ்செய்தி, அழைப்புகள் போன்ற அறிவிப்புகள், ஓவர் ஸ்பீடு அலெர்ட், டீரிப் மீட்டர், பார்க்கிங் இருப்பிடம், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் கிராஸ் அலெர்ட் மற்றும் அதிகபட்ச வேகத்தை பதிவு செய்வதுடன் ஹெல்மெட் ரிமைன்டரை கொண்டுள்ளது.

இந்த பைக்கில் உள்ள கைரோஸ்கோபிக் சென்சாரைப் பயன்படுத்தி வளைவுகளில் பயணிக்கும் போது குறைவான லீன் ஏங்கிளை பதிவு செய்கின்றது. பின்னர், அவை டிஜிட்டல் கன்சோலில் தோன்றும், மேலும் இதில் உள்ள ரேஸ் டெலிமெட்ரி ஒவ்வொரு ரேஸ் அல்லது சவாரி முடிவிலும் உள்ள அனைத்து அத்தியாவசிய தரவுகளையும் சுருக்கமாக வழங்கும். க்ராஷ் அலர்ட் சிஸ்டம்  இது ஒரு அவசதர கால பாதுகாப்பு வசதியாகும்.

TVS Apache RTR 200 4V Price

Apache RTR 200 4V – ரூ. 1,23,500 (சிங்கிள் சேனல் ஏபிஎஸ்)

Apache RTR 200 4V – ரூ.128 567 (டூயல் சேனல் ஏபிஎஸ்)

(விற்பனையக விலை சென்னை)

மேலும் படிங்க – ஹோண்டா ஹார்னெட் 2.0 Vs டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி Vs பல்சர் பல்சர் 200என்எஸ் – எந்த பைக் வாங்கலாம் ?

 

ஃபோர்டு எண்டேவர் ஸ்போர்ட் விற்பனைக்கு வெளியானது

பிரீமியம் எஸ்யூவி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபோர்டு நிறுவனத்தின் எண்டோவர் ஸ்போர்ட் என்ற பெயரில் கூடுதலான சில மாற்றங்களை பெற்ற காரை ரூ.35.10 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

விற்பனையில் உள்ள டைட்னானியம்+ 4×4 வேரியண்ட் அடிப்பையில் தோற்ற மாறுதல்களை கொண்டுள்ள புதிய எண்டோவர் ஸ்போர்ட் வேரியண்டில் 2.0 லிட்டர் ஈக்கோ ப்ளூ பிஎஸ்6 என்ஜின் பெற்றுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 170 ஹெச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 10 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற காராக விளங்குகின்றது.  4×4மற்றும்  4×2 என இரண்டிலும் கிடைக்கின்றது.

இன்டிரியரில் எந்த மாற்றங்களும் இல்லை. மற்றபடி காரின் தோற்றத்தில் ஸ்மோக்டூ ஹெட்லைட், மூன்று ஸ்லாட் வழக்கமான கிரிலுக்கு மாற்றாக தேன்கூடு அமைப்புடைய கருப்பு நிறத்தை பெற்ற கிரில், கருப்பு நிற ஸ்கிட் பிளேட், கருப்பு நிற அலாய் வீல் என மிக நேர்த்தியாக அமைந்துள்ளது. எண்டோவர் ஸ்போர்டில் கருப்பு, சில்வர் மற்றும் வெள்ளை என மூன்று நிறங்கள் கிடைக்க உள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா ஃபார்ச்சூனர், மஹிந்திரா அல்டூராஸ் மற்றும் வரவுள்ள எம்ஜி குளோஸ்டர் போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது.

 

புதிய நிறத்தை பெறும் பஜாஜ் பல்சர் 200என்எஸ்

பஜாஜ் ஆட்டோவின் பிரசத்தி பெற்ற பல்சர் 200என்எஸ் மாடலில் புதிதாக நிறங்களை கொண்டு வருவதனை உறுதி செய்யும் வகையில் தனது புதிய Pulsar Chalk Lines விளம்பர வீடியோவில் வெளியிட்டுள்ளது. அனேகமாக புதிய நிறங்கள் பண்டிகை காலத்தில் சந்தையில் வெளியிடப்படலாம்.

நேக்டூ ஸ்டைல் பல்சர் என்எஸ் 200 மாடலில் இடம்பெற்றுள்ள 199.5 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 24.5 PS பவர் மற்றும் 18.5 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

புதிதாக வெளியிடப்பட உள்ள 200என்எஸ் மாடலில் சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு நிறங்கள் கலந்திருப்பதுடன், கூடுதலாக மற்றொரு நிறத்தில் வெள்ளை மற்றும் கருப்பு நிறம், மஞ்சள் நிறம் சில இடங்களில் ஸ்டிக்கரிங் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லை.

தொடர்ந்து பல்சர் என்எஸ்200 பைக்கில் நிறங்கள், சிறிய அளவிலான கிராபிக்ஸ் மாற்றங்கள் மட்டும் தொடர்ந்து ஏற்படுத்தப்படுகின்றது. அனேகமாக வரும் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆக்டிவா முதல் கிரேஸியா வரை.., டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஆகஸ்ட் 2020

இந்தியாவில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் விற்பனை பரவலாக உயர்ந்து வரும் நிலையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா எண்ணிக்கை 1,93,607 ஆக பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து டிவிஎஸ் ஜூபிடர் மாடல் விற்பனை எண்ணிக்கை 52,378 ஆக பதிவு செய்துள்ளது.

ஸ்கூட்டரின் 125சிசி சந்தையில் சுசூகி ஆக்செஸ், டிவிஎஸ் என்டார்க் யமஹா ரே, யமஹா ஃபேசினோ, ஹீரோ டெஸ்ட்னி 125 மற்றும் கிரேஸியா 125 போன்றவை இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் சுசூகி ஆக்செஸ் ஸ்கூட்டரின் எண்ணிக்கை 41,484 ஆக பதிவு செய்துள்ளது.

டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஆகஸ்ட் 2020

வ.எண் தயாரிப்பாளர் ஆகஸ்ட் 2020
1. ஹோண்டா ஆக்டிவா 193,607
2. டிவிஎஸ் ஜூபிடர் 52,378
3. ஹோண்டா டியோ 42,957
4. சுசூகி ஆக்செஸ் 41,484
5. டிவிஎஸ் என்டார்க் 19,918
6. ஹீரோ பிளெஷர் 16,935
7. யமஹா ஃபேசினோ 15,668
8. யமஹா ரே 15,620
9. ஹீரோ டெஸ்ட்னி 125 13,609
10. ஹோண்டா கிரேஸியா 12,588

 

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஆகஸ்ட் 2020

bs6 hero splendor plus

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்ப்ளெண்டர் ஆகஸ்ட் 2020 மாத விற்பனை எண்ணிக்கையில் 2,32,301 ஆக பதிவு செய்து டாப் 10 பைக்குகள் பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. 10 இடங்களில் ஹீரோவின் நான்கு மாடல்கள் இடம்பெற்றுள்ளது.

125சிசி சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் மாடல் 1,06,133 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து ஹீரோவின் கிளாமர் பைக் 54,315 ஆக எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இந்த வரிசையில் டிவிஎஸ் நிறுவனத்தின் மொபெட் மாடல் XL எண்ணிக்கை 70,126 ஆக உள்ளது.

டாப் 10 பைக்குகள் – ஆகஸ்ட் 2020

வ.எண் தயாரிப்பாளர் ஆகஸ்ட் 2020
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் 2,32,301
2. ஹீரோ HF டீலக்ஸ் 1,77,168
3. ஹோண்டா சிபி ஷைன் 1,06,133
4. பஜாஜ் பல்சர் 87,202
5. டிவிஎஸ் XL சூப்பர் 70,106
6. ஹீரோ கிளாமர் 54,315
7. ஹீரோ பேஸன் 52,471
8. பஜாஜ் பிளாட்டினா 40,294
9. பஜாஜ் சிடி 34,863
10. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 34,791

 

10வது இடத்தில் பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடலாக விளங்குகின்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடல் விற்பனை எண்ணிக்கை 34,791 ஆக உள்ளது.