ஏத்தர் சீரிஸ் 1 450X கலெக்டர் எடிசன் வெளியானது

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள 450X கலெக்டர் எடிசன் சீரிஸ் 1 குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் ஜனவரி 28 ஆம் தேதிக்கு முன்னர் முன்பதிவு மேற்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் விநியோகிக்கப்பட உள்ளது. முன்பே விற்பனை நிறைவுற்றதால் வரும் நவம்பர் முதல் வாரத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளது.

ஏத்தரின் 50X கலெக்டர் எடிசன் சீரிஸ் 1யில் பளபளப்பான கருப்பு நிறத்தை கொடுத்து கோல்டன் மெட்டாலிக் ஃபிளேக் உடன் சிவப்பு நிற டிக்கெல்ஸ் மற்றும் ரேசிங் ஸ்டிரிப் இணைக்கப்பட்டுள்ளது. அலுமினிய பிரேம் சேசிஸ், பக்கவாட்டில் ஊடுருவிய பார்க்கும் வகையிலான ஃபிரேம் அமைப்பினை கொடுத்துள்ள அம்சம் இந்திய சாலைகளில் முதன்முறையாக கவனிக்கதக்க அம்சமாக விளங்குகின்றது.

ஆனால் இந்த பேனல்கள் தற்போது தயாரிப்பில் உள்ளதால் வாகனங்கள் நவம்பரில் விநியோக்கித்தாலும் ஊடுருவி பார்க்கும் வகையிலான பேனல்கள் மே 2021-ல் வழங்கப்படும். எவ்விதமான கூடுதல் கட்டணமில்லாமல் பொருத்தி தரப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.

சீரிஸ் 1 பதிப்பில் 6 கிலோவாட் பி.எம்.எஸ்.எம் (PMSM ) மின்சார மோட்டார் இடம்பெற்றுள்ளது. ஏத்தர் 450X போன்றே 2.9 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரியிலிருந்து அதன் சக்தியைப் பெறுகிறது. ஈகோ, ரைடு, ஸ்போர்ட் மற்றும் செயல்திறன் கொண்ட ரேப் (Wrap) ஆகிய நான்கு மோடுகளை பெற்றுள்ளது.

108 கிலோ கிராம் எடை கொண்ட 450 எக்ஸ் ஸ்கூட்டரில் 0- 40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.29 விநாடிகளும், 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.50 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கின்றது. விற்பனையில் கிடைக்கின்ற 125சிசி பெட்ரோல் ஸ்கூட்டரை விட மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்துகின்றது.

450X ஸ்கூட்டரில் உள்ள பெரிய லித்தியம் அயன் பேட்டரி சார்ஜ் செய்ய இப்போது 3 மணிநேரம் 35 நிமிடங்கள் 80 சதவிகிதத்தையும் அதுவே, 5 மணிநேர 45 நிமிடங்களையும் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் பெறுவதற்கு தேவைப்படுகின்றது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள தொடுதிரை கிளஸ்ட்டரை ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி தொடர்பினை கொண்டுள்ளது. கூடுதலாக 4ஜி இ-சிம் கார்டு ஆப்ஷனை பெறகின்றது.

பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொச்சி, கோயம்புத்தூர், கோழிக்கோடு, மும்பை, டெல்லி என்.சி.ஆர், புனே, அகமதாபாத், கோழிக்கோடு, கொல்கத்தா ஆகிய அனைத்து 11 நகரங்களிலும் ஏத்தர் சீரிஸ் 1 கலெக்டர் எடிசன் விநியோகம் 2020 நவம்பருக்குள் தொடங்கும்.

web title : Ather Series 1 Collector’s Edition revealed details – auto news in tamil


பின்னூட்டமொன்றை இடுக