ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 பைக் படங்களின் தொகுப்பு

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள ரெட்ரோ கிளாசிக் ஸ்டைல் ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 பைக் மாடல் புகைப்படங்களின் தொகுப்பை இங்கே பார்க்கலாம். மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஹைனெஸ் மாடல் இந்தியாவில் கிடைக்கின்ற கிளாசிக் 350, ஜாவா மற்றும் இம்பீரியல் 400 மாடல்களுக்கு சவாலாக விளங்க உள்ளது.

டூயல் டோன்

6 நிறங்களை பெற உள்ள ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் DLX புரோ வேரியண்டில் டூயல் டோன் வண்ணங்கள் இடம்பெற உள்ளது.

சிபி 350 என்ஜின்

348.36சிசி இன்ஜின் அதிகபட்சமாக 20.8 பிஹெச்பி பவர் மற்றும் 30 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

எல்இடி ஹெட்லைட்

சிபி 350 மாடலில் பிரகாசமான ஒளியை வழங்கும் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது.

டேங்க்

ரெட்ரோ ஸ்டைல் பெட்ரோல் டேங்க் 15 லிட்டர் கொள்ளளவுடன் அமைந்து ஹோண்டா பேட்ஜிங் பெற்றுள்ளது.

கிளஸ்ட்டர்

ஹைனெஸ் சிபி 350 பைக்கில் வழங்கப்பட்டுள்ள வட்ட வடிவத்திலான இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலமாக ஸ்மார்ட்போன் இணைப்பு, வாய்ஸ் கன்ட்ரோல், ம்யூசிக், இன்கம்மிங் அழைப்புகள் மற்றும் நேவிகேஷனை பெறலாம்.

எக்ஸ்ஹாஸ்ட்

பெரும்பாலான பாகங்கள் க்ரோம் பூச்சூ பெற்றதாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க – ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 

நிறங்கள்

இந்த பைக் மாடலில் மொத்தம் 6 நிறங்கள் அமைந்துள்ளது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 விலை

ஹைச்’நெஸ் 350 பைக்கின் விலை ரூ.1.90 லட்சத்தில் துவங்கலாம்.

web title: Honda H’ness CB350 image gallery

ரூ.1.90 லட்சத்தில் ஹோண்டா H’Ness CB350 பைக் விற்பனைக்கு வந்தது

ராயல் என்ஃபீல்டு, ஜாவா பெனெல்லி நிறுவனங்களுக்கு சவாலாக ஹோண்டா H’Ness CB350 மோட்டார்சைக்கிள் பல்வேறு விதமான நவீனத்துவமான வசதிகளுடன் ரூ.1.90 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

எச்’நெஸ் என குறிப்பிடப்பட்டாலும் அழைப்பது ஹைனெஸ் சிபி 350 என்பதே ஆகும். ஹோண்டாவின் பிரத்தியேக பிக்விங் டீலர் மூலம் விற்பனை செய்யப்பட்ட உள்ளது. மேலும் பிரத்தியேகமாக பல்வேறு ஆக்செரிஸ்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. புதிய 350சிசி இன்ஜின் பொருத்தப்பட்டு, ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி, எல்இடி ஹெட்லேம்ப், வாய்ஸ் கனெகட் வசதி போன்றவற்றை முன்னிலைப்படுத்துகின்றது.

புதிய 348சிசி ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 21 பிஹெச்பி அதிகபட்ச சக்தியையும் 30 என்எம் பீக் டார்க் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 பைக்கில் முன்புற டயரில் 310 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் உட்பட முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா ஹெச்’னெஸ் சிபி 350 இரண்டு வகைகளில் கிடைக்கும் – டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் புரோ என இரண்டு வேரியண்டில் வரவுள்ளது. ஆரம்ப நிலை வேரியண்ட் விலை ரூ.1.90 லட்சம் முதல் துவங்கலாம். ஆனால் உறுதியான விலை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. (எக்ஸ்-ஷோரூம்). அக்டோபர் மாதம் மத்தியில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் இணையதளம் மூலம் முன்பதிவு துவங்கப்பட உள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.5,000 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிடைக்கின்ற ஜாவா 42, ஜாவா கிளாசிக், பெனெல்லி இம்பீரியல் 400 மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் வரவுள்ள மீட்டியோர் 350 போன்றவற்றை எதிர்கொள்ள உள்ளது.

web title : Honda H’Ness CB 350 Launched price Rs.1.90 lakh – bike news in Tamil

ரூ.1.11 கோடிக்கு ஏலம் போன மஹிந்திரா தார் #1 எஸ்யூவி

மஹிந்திரா அறிமுகம் செய்துள்ள புதிய தார் எஸ்யூவி காரின் #1 மாடலை பிரத்தியேகமாக ஏலம் விடப்பட்ட நிலையில் இதற்கான தொகை ரூ.1.11 கோடியாக நிறைவடைந்துள்ளது. இந்த தொகைக்கு டெல்லியை சேர்ந்த ஆகாஷ் மின்டா ஏலம் எடுத்துள்ளார்.

வென்ற ஏலத் தொகையின் ஒரு பகுதியை மஹிந்திராவின் தார் #1 மாடலுக்கு மின்டா செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை கோவிட்-19 நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள நாண்டி அறக்கட்டளை, ஸ்வேட்ஸ் அறக்கட்டளை மற்றும் பி.எம் கேர்ஸ் நிதி என இந்த மூன்று அமைப்புகளில் ஒன்றிற்கு நன்கொடை அளிக்கப்பட உள்ளது. அதன் விவரங்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏலத்தில் 5400 நபர்கள் பங்கேற்ற நிலையில், ரூ.25 லட்சம் முதல் துவங்கிய ஏலம் ஒவ்வொரு நபர்களும் குறைந்தபட்சம் ரூ.25,000 வரை கூடுதலாக உயர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. முதல் நாளில் 80 லட்சத்தை தொட்ட ஏல தொகை, இறுதி நாளான நேற்று ரூ.1.11 கோடியில் நிறைவடைந்துள்ளது.

தார் எஸ்யூவி காரில் பெட்ரோல் என்ஜின் இணைக்கப்பட்டுள்ளதால் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை பெட்ரோல் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. 2.0 லிட்டர் Mstallion பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 150 ஹெச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பெறும் தார் காரில் அதிகபட்சமாக 130 ஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

மேலும் அனைத்து வேரியண்டிலும் மேனுவல் ஷிஃப்ட் 4×4 டிரான்ஸ்ஃபர் கேஸ் வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவி விலை எவ்வளவு ?

இரண்டாம் தலைமுறை மஹிந்திரா எஸ்யூவி விலை ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்குள் அமையலாம்.

web title: Mahindra Thar #1 auctioned winning bid Rs.1.11 crore – car news in Tamil

டாடா அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் விலை கசிந்தது

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டர்போ பெட்ரோல் இன்ஜின் பெற்ற டாடா அல்ட்ராஸ் காரின் விலை மற்றும் பவர் விபரம் இணையத்தில் கசிந்துள்ளது. சாதாரன பெட்ரோல் டாப் வேரியண்டை விட ரூ.10,000 வரை கூடுதலாக அமைய உள்ளது.

முன்பாக விற்பனையில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 3-சிலிண்டர் அதிகபட்சமாக 6000 ஆர்.பி.எம்-மில் 86 பிஎஸ் பவர் மற்றும் 3300 ஆர்.பி.எம்-மில் 113 என்எம். இந்த என்ஜின் 5 வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அல்ட்ராஸ் காரில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர், பிஎஸ் 6 டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகின்ற அல்ட்ராஸில் 4000 ஆர்.பி.எம்-மில் 90 பிஎஸ் பவர், 1250-3000 ஆர்.பி.எம்-மில் 200 என்எம் டார்க்கையும் வங்குகின்றது. இந்த என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

புதிதாக வரவுள்ள 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 3-சிலிண்டர் அதிகபட்சமாக 5500 ஆர்.பி.எம்-மில் 108 பிஎஸ் பவர் மற்றும் 1500-5000 ஆர்.பி.எம்-மில் 140 என்எம். இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் முதற்கட்டமாக 5 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. டிசிடி ஆட்டோ வேரியண்ட் கால தாமதமாக விற்பனைக்கு கிடைக்கலாம்.

தற்போது விற்பனையில் உள்ள டாடா அல்ட்ராஸ் காரின் பெட்ரோல் ஆரம்ப விலை ரூ.5.44 லட்சம் முதல் துவங்கி ரூ.7.89 லட்சம் வரையும், டீசல் மாடல் சமீபத்தில் விலை ரூ.40,000 வரை குறைந்த காரணத்தால் இப்போது ரூ.6.99 லட்சம் முதல் ரூ.9.09 லட்சம் வரை கிடைத்து வருகின்றது.

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விற்பனைக்கு வெளியாக உள்ள டாடாவின் அல்ட்ரோஸ் டர்போ பெட்ரோல் விலை ரூ.7.99 லட்சம் முதல் துவங்கி ரூ.8.75 லட்சம் வரை நான்கு விதமான வேரியண்டில் கிடைக்க உள்ளது. இந்தியாவில் கிடைக்கின்ற ஃபோக்ஸ்வாகன் போலோ மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ என இரண்டையும் எதிர்கொள்ள உள்ளது.

 

image source-  team-bhp

web title: Tata Altroz turbo petrol specs and price leaked – car news in Tamil

நாளை வரவுள்ள ஹோண்டா ஹைனெஸ் பைக்கின் எதிர்பார்ப்புகள்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ராயல் என்ஃபீல்டு, ஜாவா, பெனெல்லி நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் ஹைனெஸ் மோட்டார்சைக்கிள் மாடலை செப்டம்பர் 30 ஆம் தேதி நாளை வெளியிட உள்ளது.

ரிபெல் க்ரூஸர் மாடல் போல அல்லாமல் ஹோண்டா சிபி பைக்குகளுக்கு இணையான தோற்றத்தை வெளிப்படுத்தலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் காப்புரிமை கோரிய பெயர்களில் Rebel, H,Ness (Highness) என்ற பெயர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

க்ரூஸர் ஸ்டைல் ரிபெல் போன்றே வரக்கூடும் என்ற தகவல் ஒருபக்கம் வெளியானலும் மற்றொரு பக்கம் ஹோண்டாவின் பிரசத்தி பெற்ற CB1100 மாடலின் தோற்ற வடிவமைப்பினை பின்பற்றி இந்திய சந்தைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட 300சிசி என்ஜின் பெற்ற மாடலாக எச்’னெஸ் விளங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிதாக வரவுள்ள ஹோண்டா ஹைனெஸ் மாடலின் சைலென்சர் ஒலியை பல்வேறு வகையில் ஹோண்டா தனது டீசர் மூலம் வெளிப்படுத்தி வருகின்றது. இறுதியாக இந்தியாவில் வரவுள்ள மாடல் நாளை தெரியவரும்.

web title: upcoming Honda Highness to be launched tomorrow in India – Bike News in Tamil

 

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் விலை எதிர்பார்ப்புகள் ?

வரும் அக்டோபர் 2ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கான முன்பதிவு அன்றைய தினமே துவங்கப்படுகின்றது.

முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட காராக வந்துள்ள தார் எஸ்யூவி காரில் இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் என இரு இன்ஜின் ஆப்ஷன்களை பெறுவதுடன் AX மற்றும் LX என இரு விதமான வேரியண்ட் ஆப்ஷனில் வழங்கப்பட உள்ளது.

முதன்முறையாக தார் எஸ்யூவி காரில் பெட்ரோல் என்ஜின் இணைக்கப்பட்டுள்ளதால் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை பெட்ரோல் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. 2.0 லிட்டர் Mstallion பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 150 ஹெச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பெறும் தார் காரில் அதிகபட்சமாக 130 ஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

மேலும் அனைத்து வேரியண்டிலும் மேனுவல் ஷிஃப்ட் 4×4 டிரான்ஸ்ஃபர் கேஸ் வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவி விலை எவ்வளவு ?

இரண்டாம் தலைமுறை மஹிந்திரா எஸ்யூவி விலை ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்குள் அமையலாம்.

web title: new Mahindra Thar SUV price expectation – Auto news in Tamil

புதிய டூ வீலரை வெளியிடும் சுசூகி மோட்டார் சைக்கிள்

வரும் அக்டோபர் 7 ஆம் தேதி சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம், புதிய பைக் அல்லது 125சிசி ஸ்கூட்டர் ஒன்றை வெளியிடும் வாய்ப்புள்ளது. ஒரு வேளை தனது மாடல்களில் சுசூகி ரைட் கனெக்ட் (Suzuki Ride Connect) என்ற கனெக்ட்டிவிட்டி சார்ந்த கிளஸ்ட்டரை வெளியிடலாம்.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில் கிளஸ்ட்டர் மட்டுமே காட்சிப்படுத்தியுள்ளதால், பல்வேறு வகையில் யூகத்தின் அடிப்படையில் பிஎஸ் 6 இன்ஜின் பெற்ற சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT அல்லது ரெட்ரோ ஸ்டைல் பெற்ற 125சிசி ஸ்கூட்டர் எனவும் கருதப்படுகின்றது.

மற்றொரு தகவல், விற்பனையில் உள்ள மாடல்களில் புதிய கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை இணைத்து டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் மேம்பட்டதாக வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.

காத்திருங்கள்..! அக்டோபர் 7 வரை…

web title: Suzuki motorcycle India to launch new two wheeler – auto news in tamil

ஏத்தர் சீரிஸ் 1 450X கலெக்டர் எடிசன் வெளியானது

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள 450X கலெக்டர் எடிசன் சீரிஸ் 1 குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் ஜனவரி 28 ஆம் தேதிக்கு முன்னர் முன்பதிவு மேற்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் விநியோகிக்கப்பட உள்ளது. முன்பே விற்பனை நிறைவுற்றதால் வரும் நவம்பர் முதல் வாரத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளது.

ஏத்தரின் 50X கலெக்டர் எடிசன் சீரிஸ் 1யில் பளபளப்பான கருப்பு நிறத்தை கொடுத்து கோல்டன் மெட்டாலிக் ஃபிளேக் உடன் சிவப்பு நிற டிக்கெல்ஸ் மற்றும் ரேசிங் ஸ்டிரிப் இணைக்கப்பட்டுள்ளது. அலுமினிய பிரேம் சேசிஸ், பக்கவாட்டில் ஊடுருவிய பார்க்கும் வகையிலான ஃபிரேம் அமைப்பினை கொடுத்துள்ள அம்சம் இந்திய சாலைகளில் முதன்முறையாக கவனிக்கதக்க அம்சமாக விளங்குகின்றது.

ஆனால் இந்த பேனல்கள் தற்போது தயாரிப்பில் உள்ளதால் வாகனங்கள் நவம்பரில் விநியோக்கித்தாலும் ஊடுருவி பார்க்கும் வகையிலான பேனல்கள் மே 2021-ல் வழங்கப்படும். எவ்விதமான கூடுதல் கட்டணமில்லாமல் பொருத்தி தரப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.

சீரிஸ் 1 பதிப்பில் 6 கிலோவாட் பி.எம்.எஸ்.எம் (PMSM ) மின்சார மோட்டார் இடம்பெற்றுள்ளது. ஏத்தர் 450X போன்றே 2.9 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரியிலிருந்து அதன் சக்தியைப் பெறுகிறது. ஈகோ, ரைடு, ஸ்போர்ட் மற்றும் செயல்திறன் கொண்ட ரேப் (Wrap) ஆகிய நான்கு மோடுகளை பெற்றுள்ளது.

108 கிலோ கிராம் எடை கொண்ட 450 எக்ஸ் ஸ்கூட்டரில் 0- 40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.29 விநாடிகளும், 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.50 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கின்றது. விற்பனையில் கிடைக்கின்ற 125சிசி பெட்ரோல் ஸ்கூட்டரை விட மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்துகின்றது.

450X ஸ்கூட்டரில் உள்ள பெரிய லித்தியம் அயன் பேட்டரி சார்ஜ் செய்ய இப்போது 3 மணிநேரம் 35 நிமிடங்கள் 80 சதவிகிதத்தையும் அதுவே, 5 மணிநேர 45 நிமிடங்களையும் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் பெறுவதற்கு தேவைப்படுகின்றது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள தொடுதிரை கிளஸ்ட்டரை ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி தொடர்பினை கொண்டுள்ளது. கூடுதலாக 4ஜி இ-சிம் கார்டு ஆப்ஷனை பெறகின்றது.

பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொச்சி, கோயம்புத்தூர், கோழிக்கோடு, மும்பை, டெல்லி என்.சி.ஆர், புனே, அகமதாபாத், கோழிக்கோடு, கொல்கத்தா ஆகிய அனைத்து 11 நகரங்களிலும் ஏத்தர் சீரிஸ் 1 கலெக்டர் எடிசன் விநியோகம் 2020 நவம்பருக்குள் தொடங்கும்.

web title : Ather Series 1 Collector’s Edition revealed details – auto news in tamil

இந்திய சந்தையில் விடைபெறும் ஹார்லி-டேவிட்சன்

இந்திய சந்தையிலிருந்து விற்பனை மற்றும் உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உயர் ரக பிரீமியம் அமெரிக்கா மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ஹார்லி இந்தியாவில் கடந்த 2009 முதல் செயல்பட்டு வந்தது.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பால் மோட்டார் துறை விற்பனை சரிவடைந்துள்ள நிலையில் ஹார்லி நிறுவனம் தனது REWire எதிர்கால திட்டங்கள் மற்றும் குறைந்த வருவாய் தரும் நாடுகளில் விலகிக் கொள்ள முடிவெடுத்திருந்தது. அந்த வரிசையில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

ஹார்லி-டேவிட்சன் இந்தியா கடந்த நிதியாண்டில் 2,500 க்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனத்தின் மோசமான சர்வதேச சந்தைகளில் ஒன்றாகும். இதன் காரணமாக 70 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இந்நிறுவனம் ஹரியானாவின் பவலில் ஒரு அசெம்பளி ஆலையை கொண்டுள்ளது.

இந்திய சந்தையிலிருந்து ஹார்லி வெளியேறினாலும் தொடர்ந்து டீலர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்ட பைக்குகளுக்கு சர்வீஸ் வழங்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய சந்தையில் கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் வெளியேறி ஆட்டோமொபைல் நிறுவனங்ளின் பட்டியலில் இப்போது ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் இணைந்துள்ளது. முன்பாக ஃபியட், செவர்லே, சாங்யாங், யூஎம் மோட்டார்சைக்கிள், ஸ்கேனியா மற்றும் மேன் ஆகும்.

2021-2025 ஆம் ஆண்டு வரை தனது வர்த்தகத்தை Rewire எனப்படும் சீர்திருத்த முறையில் செயல்பட உள்ளது. இதன் காரணமாக அதீத வருவாய் தரக்கூடிய சந்தையில் மட்டும் கவனத்தை செலுத்த உள்ளது.

 

ஹோண்டா வெளியிட உள்ள ராயல் என்ஃபீல்டு போட்டியாளர் பெயர் ஹைச்’நெஸ் (H’Ness)

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ஹோண்டா இந்தியா வெளியிட உள்ள புதிய மோட்டார் சைக்கிள் பெயர் ஹெச்’நெஸ் அல்லது ஹைனெஸ் (Honda Highness or H’Ness) என அழைக்கப்படலாம். சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டாவின் ரிபெல் 300 க்ரூஸரின் அடிப்படையில் ராயல் என்ஃபீல்டு மற்றும் ஜாவா பைக்குகளுக்கு போட்டியாக வரவுள்ளது.

ரிபெல் 300 அடிப்படையிலான ஹோண்டா எச்’நெஸ் பைக்கில் 30.4 PS பவர் மற்றும் 27.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 286சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூலிங் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

குறிப்பாக இந்தியாவில் கிடைக்கின்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் க்ரூஸர் ஸ்டைல் மாடல் மற்றும் ஜாவா பைக்குகளுக்கு போட்டியிடும் வகையிலான இந்த மாடலை ஹோண்டாவின் பிரீமியம் டீலரான பிங் விங் மூலம் விற்பனை செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனம் காப்புரிமை கோரி விண்ணப்பித்த ஆவனங்களின் மூலம் புதிய ஹோண்டா பைக் பெயர் ஹெச்’நெஸ் என்பது உறுதியாகியுள்ளது. இந்த மாடலின் விலை ரூ.2.20 லட்சம் முதல் ரூ.2.70 லட்சத்திற்குள் அமையலாம். அக்டோபர் முதல் வாரத்தில் வரவுள்ள புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு போட்டியாக விளங்கும்.