அசோக் லேலண்ட் ஆயிஸ்டர் பஸ் அறிமுகப்படுத்தப்பட்டது

ashok leyland oyster

புதிய தலைமுறையினர் விரும்புகின்ற சொகுசு தன்மையை பெற்ற அசோக் லேலண்ட் ஆயிஸ்டர் பஸ் (Oyster Bus) இந்தியாவில் நடைபெற்ற பிரவாஸ் 2019 கண்காட்சி அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு பிரவாஸ் 2019 சர்வதேச பேருந்து மற்றும் கார் டிராவல் ஷோ அரங்கில் பல்வேறு நிறுவனங்களின் மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டது. கடந்த ஜூலை 25 முதல் 27 வரை மும்பையில் நடைபெற்றது.

midi-bus வகை என்பது சிறிய ரக மினி பஸ் மாடலாகும். 8 முதல் 11 மீட்டருக்கு குறைவான நீளத்தைப் பெற்ற பேருந்தாகும்.

ஏசி வசதியை பெற்றுள்ள ஆயிஸ்டர் பேருந்து ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணங்களுக்காக அசோக் லேலண்ட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அசோக் லேலண்ட் ஆயிஸ்டர் 41 சாய்வான முறையை பெறும் இருக்கைகளை கொண்டுள்ளது. இந்த பேருந்து ரோல்ஓவர் பாதுகாப்புடன் மற்றும் புதிய பஸ் பாதுகாப்பு குறியீடு விதிமுறைகளான AIS 052, AIS 140 மற்றும் AIS 153 ஆகியவற்றுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது.

பிரீமியம் சந்தைக்கு ஏற்ற மாடலாக விளங்கும் இந்த பஸ்சில் 127 ஹெச்பி பவர் மற்றும் 450 என்எம் டார்க் வழங்கும்  பிஎஸ் 4 ஆதரவை பெற்ற H வரிசை 4 சிலிண்டர் iEGR என்ஜினை பெற்றுள்ளது.

அசோக் லேலண்டின் நடுத்தர மற்றும் கனரக வணிக வாகனத் துறைத் தலைவர் சஞ்சய் சரஸ்வத் கூறுகையில், “அதிகப்படியான பயணிகள் பயணத்திற்கு அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. எனவே, வசதியான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து தீர்வுக்கான தேவை உள்ளது. ஆயிஸ்டர் அத்தகைய பேருந்து ஆகும். இந்த பேருந்து பயணத்தை ஒரு இனிமையான அனுபவமாக வழங்குவதுடன் இந்த பஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மிகச் சிறந்ததாகவும் மற்றும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றதாக விளங்கும். வெகுஜன மக்களின் பயணத்திற்கு ஏற்ப, கவர்ச்சிகரமான தோற்றத்துடன் சிறந்த செயல்திறன் கொண்ட வாகனமாக வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். என குறிப்பிட்டுள்ளார்.

அசோக் லேலண்ட் பஸ்

ஹீரோவின் அடுத்த பைக் ஹண்டர் என பெயரிடப்பட்டுள்ளது.!

hero hunter

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், அடுத்து வரவிருக்கும் பைக் மாடலுக்கு ஹீரோ ஹண்டர் என பெயரிடப்பட்டுள்ளது. அனேகமாக இந்த மாடல் 110 அல்லது 125சிசி சந்தைக்கு ஏற்றதாக முற்றிலும் புதிய பைக் மாடலாக விளங்க உள்ளது.

காப்புரிமை கோரி ஹீரோ விண்ணப்பித்துள்ள புதிய பைக் மாடலின் பெட்ரோல் டேங்க், வட்ட வடிவ ஹெட்லைட், மற்றும் வைசர் போன்றவற்றின் பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த மாடலில் இடம்பெற உள்ள என்ஜின் மற்றும் அறிமுக விவரம் போன்ற எந்தவொரு தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.

கம்யூட்டர் ரக மாடலுக்கு இணையான தோற்ற பொலிவினை வழங்கவல்லதாக டேங்க் காட்சியளிப்பதனால் 110சிசி அல்லது 125சிசி இவையிரண்டும் அல்லாமல் ஒருவேளை ஹீரோ பெரிதும் சோபிக்காத 150சிசி சந்தையாக இருப்பதற்க்கும் வாய்ப்புகள் உள்ளது.

சமீபத்தில் ஹீரோ நிறுவனம் பிரீமியம் சந்தையில் நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. குறிப்பாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R, எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் டூரிங் ரக எக்ஸ்பல்ஸ் 200T போன்ற மாடல்கள் 200சிசி சந்தையை ஆக்கிரமித்துள்ளது.

ஹீரோ ஹண்டர் பைக் தொடர்பான மேலதிக விபரங்கள் இனி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

hero hunter bikeimage source -gaadiwaadi

புதிய மாருதி எக்ஸ்எல்6 காரின் படங்கள் வெளியாகியுள்ளது

மாருதி சுசுகி எக்ஸ்எல்6

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் அறிமுக செய்ய உள்ள 6 சீட்டர் பெற்ற மாருதி எக்ஸ்எல்6 காரின் தோற்ற அமைப்பு படங்கள் முழுதாக வெளியாகியுள்ளது. நீண்ட தொலைவு பயணிப்பவர்களுக்கு ஏற்ற கேப்டன் இருக்கைகள் கொண்ட இந்த மாடல் கிராஸ்ஓவர் ரக ஸ்டைலுடன் அமைந்துள்ளது.

ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியாக உள்ள புதிய 6 இருக்கை கொண்ட இந்த மாடலில் பல்வேறு சிறப்புகளுடன் விளங்க உள்ளது. குறிப்பாக எர்டிகா காரின் அடிப்படையிலான கிராஸ்ஓவர் ரக மாடலாக விளங்க உள்ளது.

மாருதி சுசுகி எக்ஸ்எல் 6 என பெயரிடப்பட்ட, எம்பிவி எர்டிகாவிலிருந்து வடிவமைப்பு அம்சங்களை பெற்றதாக வந்துள்ளது. இந்த மாடலை விட மிக வித்தியாசமான முறையில் பெரிய கிரில் மற்றும் ஸ்டைலிஷான எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் புதிய பம்பர்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வீல் ஆர்சுகளில் பிளாக் கிளாடிங் பெற்றதாகவும், முன் மற்றும் பின்புறத்தில் ஸ்கிட் பிளேட்டுகளை கொண்டுள்ளது. எக்ஸ்எல் 6 விற்னையில் உள்ள எர்டிகாவை விட சற்றே அதிகமான கிரவுண்ட் கிளியரண்ஸ் என்பதை படங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கூடுதலான அலாய் வீல், டெயில் விளக்குகள், கதவுகள் மற்றும் டெயில்கேட் ஆகியவற்றை பெற்றதாக விளங்கும்.

எர்டிகா மற்றும் சியாஸில் இடம்பெற்றுள்ள சமீபத்திய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 104.7 பிஎஸ் குதிரைத்திறனையும், 138 என்எம்  முறுக்குவிசையையும் வழங்குகின்றது. இந்த என்ஜினின் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான மாடலாக வரவுள்ள இந்த காரில் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் தானியங்கி கியர்பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற உள்ளது.

மாருதி சுசுகி எக்ஸ்எல் 6

மாருதி சுசுகி எக்ஸ்எல் 6 எர்டிகாவின் விலை ரூ. 7.45-9.96 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என விற்பனை செய்யப்படுகின்றது. மஹிந்திரா மராஸ்ஸோ, இன்னோவா கிரிஸ்ட்டா போன்ற மாடல்களுடன் சில எஸ்யூவி ரக மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்த உள்ளது. சாதாரன மாடலை விட மாருதி சுசுகி எக்ஸ்எல்6 விலை ரூ. 8 லட்சம் என தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

image source – gaadiwaadi

6 சீட்டர் பெற்ற காரின் பெயர் மாருதி சுசுகி XL6 என உறுதியானது

மாருதி சுசுகி XL6

ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள 6 இருக்கை கொண்ட மாருதி சுசுகி எர்டிகா அடிப்படையிலான XL6 என பெயரிடப்பட்டுள்ளது. மாருதியின் நெக்ஸா ஷோரூம் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.

எர்டிகா காரின் அடிப்படையிலான மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள இந்த கிராஸ்ஓவர் ரக மாடலுக்கு மாருதி எக்ஸ்எல்6 என உறுதி செய்யப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லைட், ஸ்டைலிஷான க்ராஸ்ஓவருக்கு இணையான பம்பர் உள்ளிட்டவை பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது.

மூன்று வரிசை இருக்கை பெற உள்ள இந்த காரில் இரண்டு கேப்டன் இருக்கைகளை இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சாதாரன எர்டிகா காரை விட மிகவும் ஸ்டைலிஷான மற்றும் முரட்டு தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்க உள்ள மாருதி சுசுகி XL6 காரில் மிக நேர்த்தியான புராஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள், பாடி கிளாடிங் உள்ளிட்ட வசதிகளுடன் வரவுள்ளது.

இன்டிரியரில் பல்வேறு புதிய வசதிகளை பெற்றிருக்கும். குறிப்பாக கருப்பு நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட டேஸ்போர்டில் மாருதி ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருப்பதுடன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளை கொண்டதாக அமைந்திருக்கும்.

மாருதியின் XL6 காரில் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது.  கூடுதலாக ஹைபிரிட் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது.

image source -gaadiwaadi

புதிய நிறத்தில் சுசுகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டர் அறிமுகமானது

 

மேக்ஸி ஸ்கூட்டர் ரக 125சிசி என்ஜின் பெற்ற சுசுகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரில் புதிதாக மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட கருப்பு நிறம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக கிடைத்து வரும் மூன்று நிறங்களுடன் கூடுதலான நிறம் இணைக்கப்பட்டிருந்தாலும் விலை உயர்த்தப்படவில்லை.

கடந்த 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக பர்க்மேன் ஸ்டீரிட் மாடல் மாதந்தோறும் சராசரியாக 6,000 விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வருகின்றது. இந்நிலையில் மொத்தமாக 90,000 க்கு அதிமான ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

சுசுகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்துடன் (Suzuki Eco Performance) கூடிய 8.5 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 124.3 cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.2 Nm  இழுவைத் திறனை பெற்றதாக பொருத்தப்பட்டிருக்கின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் ஒற்றை சாக் அப்சார்பரை பின்புறத்தில் பெற்றிருக்கின்றது. முன்புற டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் டிரம் பிரேக் வழங்கப்பட்டு கூடுதலாக சிபிஎஸ் எனப்படும் பாதுகாப்பு சார்ந்த பிரேக்கிங் அமைப்பினை கொண்டதாக விளங்குகின்றது.

இந்த ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் அகலமான இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், ட்யூப்லெஸ் டயர், 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்ட அம்சங்களை பெற்றதாக அமைந்திருக்கின்றது.

சுசுகி பர்க்மேன் ஸ்டீரிட் விலை ரூ. 72,912 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

புதிய பஜாஜ் சிடி110 பைக் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது

Bajaj Ct 110 Red

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பஜாஜ் சிடி110 பைக்கில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தொடக்கநிலை சந்தைக்கு ஏற்ற பைக் மாடலாக வந்துள்ளது. கிக் ஸ்டார்ட் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்டர் என இரு விதமான முறையில் கிடைக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யபடுகின்ற குறைந்த விலை பெற்ற ஹீரோ எச்எஃப் டீலக்ஸ், டிவிஎஸ் ஸ்போர்ட் சிட்டி போன்ற மாடல்களை எதிர்கொள்கின்ற பஜாஜ் CT110 பைக்கில் 115சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பஜாஜ் சிடி 110 பைக் மாடலின் ஸ்டைலிங் சார்ந்த அம்சங்கள் விற்பனைக்கு கிடைக்கின்ற சிடி 100 போன்றே அமைந்துள்ளது. குறிப்பாக இதன் பெட்ரோல் டேங்க் பக்கங்களில் புதிய கிராபிக்ஸ் மற்றும் ரப்பர் பேட்களை பெற்றுள்ளது. சக்கரங்கள், கைப்பிடி, கிராப் ரெயில், புகைப்போக்கி மற்றும் என்ஜின் பாகங்கள் போன்றவை கருப்பு நிறத்தை கொண்டுள்ளன.

Bajaj Ct 110 Blue

இந்த பைக் மாடலில் இரட்டை பிரிவு இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்,  சுவிட்ச் கியர் உடன் கூடிய பாஸ் பட்டனைப் பெறுகிறது. இந்த பைக் மாடலில் மொத்தம் மூன்று விதமான நிறங்கள் வழங்கப்பட்டுள்ளது. கருப்பு நிறத்தில் நீல ஸ்டிக்கிரிங், சிவப்பு நிறத்தில் ஸ்டிக்கரிங், மற்றும் மேட் ஃபினிஷ் ஆலிவ் க்ரீன் நிறத்தில் என கிடைக்கின்றது.

பிளாட்டினா 110 பைக்கில் உள்ளதை பெற்றுள்ளது. இந்த என்ஜின் 115 சிசி ஆனது, 7000 ஆர்.பி.எம் சுழற்சியில் 8.6 பிஎஸ் பவரும், 5000 ஆர்.பி.எம்மில் 9.81 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. இந்த என்ஜின் 4 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் இரட்டை பக்க ஸ்பிரிங்-இன்-ஸ்பிரிங் சஸ்பென்ஷன் பொருத்தப்படுள்ளது. பஜாஜ் சிடி 110 பைக்கில் சிபிஎஸ் பிரேக் உடன் 130 மிமீ டிரம் பிரேக்குகளை கொண்டுள்ளது.

2019 பஜாஜ் CT110 விலை

கிக் ஸ்டார்டர் சிடி 110 விலை ரூ. 38,502
கிக் ஸ்டார்டர் சிடி 110 விலை ரூ. 44,608

(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

2019 Bajaj Ct 110

அட்வென்ச்சர் ஹோண்டா X-ADV 150 ஸ்கூட்டர் அறிமுகம் – GIIAS 2019

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் GIIAS மோட்டார் ஷோவில் ஹோண்டா X-ADV 150 ஸ்கூட்டர் எனப்படுகின்ற அட்வென்ச்சர் ரக ஸ்கூட்டர் மாடல் X-ADV 745சிசி மாடலை அடிப்படை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடக்க நிலை சந்தைக்கு ஏற்ற மாடலாக கெய்கிண்டோ இந்தோனேசியா சர்வதேச ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஹோண்டா எக்ஸ்-அட்வ் 150 மாடல் மிக ஸ்டைலிஷான மற்றும் முரட்டு தன்மையை வெளிப்படுத்தும் அட்வென்ச்சர் ரக மாடலாக விளங்குகின்றது.

இந்த அட்வென்ச்சர் ரக மாடலில் 149.3சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 14.2 bhp பவர் மற்றும் 13.8 Nm டார்க் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரில் வி-மேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

honda adv150 giias 2019

இந்த மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின்-கேஸ் சார்ஜ் ஷோவா ஸ்ப்ரிங் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் திறனில் சிபிஎஸ் அல்லது ஏபிஎஸ் உடன் கூடிய முன்புறம் 240 மிமீ பெட்டல் டிஸ்க், பின்புறம் 220 மிமீ டிஸ்க் வழங்கப்படுகிறது.

எல்இடி ஹெட்லைட் கொண்ட இந்த மாடலில் வழங்கப்பட்டுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மூலம் பேட்டரி, எரிபொருள் அளவு விவரம், சர்வீஸ் இன்டிகேட்டர், தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்களை வழங்குவதுடன் ஸ்மார்ட்போனை சார்ஜிங் செய்ய சாக்கெட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா சந்தையில் வெளியிடப்பட உள்ள ஹோண்டா X-ADV 150 விலை 1.65 லட்சத்தில் தொடங்குகின்றது. இந்த ஸ்கூட்டர் இந்திய சந்தையில் வெளியிடப்படுவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை.
honda adv150 giias 2019 honda adv150 honda adv150

2000 hp பவரை வெளிப்படுத்தும் லோட்டஸ் எவியா ஹைப்பர் கார்

lotus evija hyper car

130 யூனிட்டுகள் மட்டும் தயாரிக்கப்பட உள்ள லோட்டஸ் எவியா (Lotus Evija) எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் அதிகபட்சமாக 2000 hp குதிரைத்திறன் வெளிப்படுத்துகின்றது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த உற்பத்தி நிலை சாலை காராக எவியா விளங்குகின்றது.

லோட்டஸ் எவிஜா (Evija  pronounced ‘E-vi-ya’) என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டாலும் எவியா என்பதே இதன் உச்சரிப்பு முறையாகும். பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த லோட்டஸ் கார் நிறுவனம், தயாரித்துள்ள இந்த கார் முழுமையான எலெக்ட்ரிக் காராக விளங்குகின்றது. நான்கு எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட இந்த காரில் ஒவ்வொரு மோட்டாரும் 500 ஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்றது.

லோட்டஸ் எவியா சிறப்புகள்

மிகவும் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் எவியா காரில் மிட் என்ஜின் ஸ்போர்ட்ஸ் கார் மாடலான தோற்றத்துடன் வில்லியம்ஸ்அட்வான்ஸ்டு என்ஜினியரிங் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஃபார்முலா E பந்தயங்களை பின்னணியாக கொண்ட இலகுரக பேட்டரி பேக் கொண்டுள்ளது. எவியா 1680 கிலோ எடையை கொண்டு சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 400 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கும் திறனை பெற்றதாக இந்த மாடல் விளங்குகின்றது.

இந்த கார் வெறும் 3 வினாடிகளுக்கு குறைவான நேரத்தில்  0 – 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பதுடன் மணிக்கு 320 கிமீ வேகம் வரை எட்டும் திறனுடன் இந்த எலெக்ட்ரிக் கார் வந்துள்ளது.

ஏரோடைனமிக்ஸ் திறனுடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள எவியா காரில் ஃபார்முலா ஒன் பந்தய கார்களில் இடம் பெற்றுள்ளதை போன்ற வகையிலான ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.  இரண்டு இருகைகளை பெற்ற இந்த மாடலில் அல்காண்ட்ரா லெதர் இருக்கைகள் கொண்டுள்ளது. ரேஞ்ச், சிட்டி, டூர், ஸ்போர்ட் மற்றும் டிராக் என பல்வேறு விதமான டிரைவிங் மோடுகளை பெற்றுள்ள ஸ்டீயரிங் வீல் மூலமாகவே கட்டுப்படுத்த இயலும்.

lotus evija electric

எவியா மின்சார ஹைப்பர் காரில் 350kW சார்ஜர் வாயிலாக வெறும் 12 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு பேட்டரியில் சார்ஜ்ங் திறனை பெறவும், 18 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம். அடுத்த வழங்கப்பட்டுள்ள 800kW சார்ஜர் மூலம் 9 நிமிடங்களில் சார்ஜிங் செய்யும் திறனுடன் வழங்கப்பட்டுள்ளது.

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் மற்றும் ரிமேக் கான்செப்ட் 1 மாடல்களுக்கு போட்டியாக லோட்டஸ் எவியா ஹைப்பர் கார் விளங்குகின்றது.

lotus evija

சந்தையிலிருந்து ஹெக்ஸா காரை டாடா மோட்டார்ஸ் நீக்குகிறதா.?

டாடா ஹெக்ஸா கார்

ஸ்டைலிஷான எம்பிவி ரக மாடலாக விளங்கும் டாடா ஹெக்ஸா காரை தொடர்ந்து பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணையாக தயாரித்து விற்பனை செய்ய உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவை அதிகாரி SN பார்மன் அளித்த பேட்டியில் தெரிய வந்துள்ளது.

SN பார்மன் சமீபத்தில் தி இந்து பிசினஸ்லைன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிஎஸ் 6-க்கு தேவையான தொழில்நுட்பத்துடன் தயாராக உள்ளது. இந்நிலையில் பிஎஸ்-6 மாற்றத்திற்கு ஹெக்ஸா தயாராக உள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு வரவுள்ள 7 இருக்கை கொண்ட ஹேரியர் அடிப்படையிலான பஸ்ஸார்டு எஸ்யூவி ஆனது ஹெக்ஸா எம்பிவி ரக மாடலுக்கு மேலாக நிலை நிறுத்தப்பட உள்ளது. எனினும் குறைந்த விலையில் 7 இருக்கை கொண்ட மாடலை விரும்புவோர்க்கு தொடர்ந்து ஹெக்ஸா விற்பனை செய்யப்படும் என உறுதிப்படுத்தப்படுள்ளது.

சில நாட்களாக ஹெக்ஸா கார் நீக்கப்படலாம் என வெளியான தகவல்களுக்கு விடையளிக்கும் வந்துள்ள பேட்டியின் மூலம் ஹெக்ஸா தொடர்ந்து விற்பனை செய்ப்படுவது உறுதியாகியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 1.5 லிட்டருக்கு குறைவான டீசல் என்ஜின் மாடல்களை பிஎஸ் 6 நடைமுறைக்கு மேம்படுத்துவதில்லை என முன்பே அறிவித்துள்ளது.

 

இந்தியாவில் விற்பனையான டாப் 10 பைக்குகள் ஜூன் 2019

Hero Splendor iSmart

கடந்த ஜூன் மாத நிலவரப்படி இந்திய மோட்டார் சந்தையில் விற்பனையான டாப் 10 பைக்குகள் பற்றி முக்கிய விபரங்களை தொடர்ந்து காணலாம். ஹீரோ ஸ்பிளெண்ட் இந்தியாவின் முதன்மையான பைக் மாடலாக விளங்குகின்றது.

கடந்த நவம்பர் 2018 முதல் பல்வேறு முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கடுமையான வீழ்ச்சியை கண்டு வருகின்றது. நாட்டின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் முதல் பிரீமியம் ரக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் வரை, ஆனால் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் மட்டும் தொடர்ந்து சீரான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது.

ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான ஸ்பிளெண்டர் பைக் விற்பனை எண்ணிக்கை 2,42,743 ஆக ஜூன் மாதம் பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு ஜூன் மாதம் 2,78,169 ஆக பதிவு செய்திருந்தது.

மிகப்பெரிய சரிவினை ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் பதிவு செய்துள்ளது. முன்பாக ஜூன் 2018-ல் 2,92,294 ஆக இருந்த எண்ணிக்கை, தற்போது 2,36,739 ஆக சரிந்துள்ளது.

125சிசி சந்தையில் தொடர்ந்து ஹோண்டா சிபி ஷைன் முதலிடத்திலும், அதனை தொடர்ந்து ஹீரோ கிளாமர் பைக்கும் உள்ளது.

விற்பனையில் டாப் 10 டூ வீலர்கள் – ஜூன் 2019

வ.எண் தயாரிப்பாளர் ஜூன் 2019
1. ஹீரோ ஸ்பிளென்டர் 2,42,743
2. ஹோண்டா ஆக்டிவா 2,36,739
3. ஹீரோ HF டீலக்ஸ் 1,93,194
4. ஹோண்டா சிபி ஷைன் 84,871
5. பஜாஜ் பல்ஸர் 83,008
6. ஹீரோ கிளாமர் 69,878
7. பஜாஜ் பிளாட்டினா 56,947
8. டிவிஎஸ் ஜூபிடர் 56,254
9. ஹீரோ பேஸன் 56,143
10. டிவிஎஸ் XL சூப்பர் 52,253