60 நாட்களில் 50,000 முன்பதிவுகளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி

hyundai venue

விற்பனைக்கு வெளிவந்த நாள் முதல் தற்போது வரை 50,000க்கு மேற்பட்ட முன்புதிவுகளை பெற்றுள்ள ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி மாடல் இதுவரை 18,000க்கு மேற்பட்ட கார்கள் இந்தியாவில் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 21 ஆம் தேதி விற்பனைக்கு வெளியான வென்யூ எஸ்யூவி அறிமுக விலை ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் என தொடங்கி அதிகபட்சமாக 11 லட்சத்து 10 ஆயிரமாக விற்பனை செய்யபடுகின்றது. மேலும் புக்கிங் செய்துள்ள பெரும்பாலானோரின் விருப்பமான தேர்வாக ப்ளூலிங்க் டெக்னாலாஜி பெற்ற டாப் வேரியண்ட் மாடலாகும். மேலும் 35 சதவீத முன்பதிவு டிசிடி டர்போ மாடலாகவும் உள்ளது.

10 விதமான நிறங்கள், 33 வகையான ப்ளூலிங்க் டெக்னாலாஜி வசதிகள், இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷன் போட்டியாளர்களை விட குறைவான விலை, மூன்று வருட வாரண்டி அல்லது வரம்பற்ற கிமீ மற்றும் மூன்று வருட ரோடு அசிஸ்டென்ஸ் போன்றவற்றை பெற்றுள்ளது.

120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை இந்த என்ஜின் மட்டும் பெற்றுள்ளது.

வென்யூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 18.27 கிமீ (மேனுவல்) மற்றும் லிட்டருக்கு 18.15 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.

இரண்டாவதாக உள்ள பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் உள்ள ஹூண்டாய் ஐ20 காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை கொண்டுள்ள வெனியூவில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்துகிறது. வென்யூ 1.2 லிட்டர் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 17.52 கிமீ (மேனுவல்)

வென்யூ டீசல் என்ஜின் தேர்வினை மட்டும் வழங்குகின்றது. 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் மாடல் 90 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 220 என்எம் முறுக்குவிசை பெற்றதாக விளங்குகின்றது. இந்த என்ஜினில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் வழங்கப்படவில்லை. வென்யூ 1.4 லிட்டர் டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 23.70 கிமீ (மேனுவல்).

Hyundai venue interior

பாதுகாப்பு அம்சங்களில் குறிப்பாக ஏபிஎஸ், 6 ஏர்பேக்குகள், இஎஸ்பி, ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்டு இருக்கைகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹீல் ஹோல்ட் அசிஸ்ட், ரியர் கேமரா உடன் ரியர் பார்க்கிங் சென்சார்,  போன்றவற்றை பெற்றதாக அமைந்துள்ளது.

இந்த காருக்கு போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் எஸ்யூவி, பிரபலமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா ஆகியவை உள்ளது.

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி விலை பட்டியல்

பெட்ரோல்
Hyundai Venue 1.2 Kappa E MT- ரூ. 6.50 லட்சம்
Hyundai Venue 1.2 Kappa S MT – ரூ. 7.20 லட்சம்
Hyundai Venue 1.0 GDI S MT- ரூ. 8.21 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX MT- ரூ. 9.54 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX (O) MT- ரூ. 10.60 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX DCT- ரூ. 9.35 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX+ DCT- ரூ. 11.10 லட்சம்

டீசல்
Hyundai Venue 1.4 CRDI E MT- ரூ. 7.75 லட்சம்
Hyundai Venue 1.4 CRDI S MT- ரூ. 8.45 லட்சம்
Hyundai Venue 1.4 CRDI SX MT- ரூ. 9.78 லட்சம்
Hyundai Venue 1.4 CRDI SX (O) MT- ரூ. 10.80 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் விலை டெல்லி)

Hyundai venue SUV officially revealed

Hyundai venue SUV officially revealed

நெக்ஸான் EV உட்பட 4 எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்

tata altroz ev

அடுத்த 18 மாதங்களில் டாடா நெக்ஸான் EV காம்பாக்ட் எஸ்யூவி உட்பட மொத்தம் நான்கு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற டாடாவின் 74வது வருடாந்திர கூட்டத்தில் பங்குதரர்களிடம் பேசிய டாடா மோட்டார்ஸ் சேர்மென் N. சந்திரசேகரன் கூறுகையில் ”இந்தியாவில் அடுத்த 18 மாதங்களுக்குள் நான்கு மின்சார பேட்டரியில் இயங்கும் கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நான்கு கார்களில் ஒன்றாக டாடாவின் பிரசத்தி பெற்ற காம்பாக்ட் ரக எஸ்யூவி மாடலான நெக்ஸானும் இடம்பெறவது உறுதியாகியுள்ளது. ஆல்ட்ரோஸ் EV, டிகோர் EV, நெக்ஸான் EV மற்றும் நான்காவது மாடல் குறித்தான பெயர் வெளியிடப்படவில்லை. குறிப்பாக சில வாரங்களுக்கு முன்பாக டிகோர் எலக்ட்ரிக் கார் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு ஏற்றதாக ரூபாய் 9 லட்சத்து 99 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த கார் பல்வேறு மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்ட தனிநபர் சந்தைக்கும் விற்பனைக்கு வரவுள்ளது.

ஆல்ட்ரோஸ் EV, மற்றும் நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலில் மிக விரைவாக DC சார்ஜர் மூலம் 60 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜிங் நிரம்புவதுடன், முழுமையான சிங்கிள் சார்ஜிங்கில் அதிகபட்சமாக 250 கிமீ முதல் 300 கிமீ ரேஞ்ச் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விற்பனையில் உள்ள டிகோர் பேட்டரி காரில் 16.2 கிலோவாட் பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றது, இது 30 கிலோவாட் (41 hp) பவரை 4,500 ஆர்.பி.எம் சுழற்சியிலும், 105 Nm டார்க் 2,500 ஆர்.பி.எம்மில் வெளிப்படுத்துகின்றது. 72 வோல்ட், 3-கட்ட ஏசி இன்டெக்‌ஷன் மோட்டார் மூலம் முன் சக்கரங்களுக்கு பவரை அனுப்புகிறது.

இந்த காரில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி திறன் மூலம் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக  142 கிமீ வரை பயணிக்கலாம் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு நிலையான ஏசி சார்ஜர் வழியாக 6 மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும், ஒரு டிசி 15 கிலோவாட் வேகமான சார்ஜர் வாயிலாக இதனை 90 நிமிடங்களில் பெற முடியும்.

tata tigor ev

வரும் ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியில் டாடா நிறுவன மின்சார கார்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. சமீபத்தில் மத்திய அரசு மின்சார வாகனங்கள் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் 12 சதவீத ஜிஎஸ்டி வரியிலிருந்து 5 சதவீதமாக குறைத்துள்ளது.

tata nexon

2020 ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் ஷோ தேதி அறிவிப்பு

ஆட்டோ எக்ஸ்போ 2020

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியன் எக்ஸ்போ மார்டில் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் ஆட்டோ எக்ஸ்போ உதிரி பாகங்கள் 2020 கண்காட்சி  பிப்ரவரி 6 முதல் 9 ஆம் தேதி வரை புது டெல்லியில் உள்ள பிரகதி மெய்டனில் நடைபெற உள்ளது.

14வது வருடமாக நடைபெற்ற 2018 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பல்வேறு புதிய மாடல்கள் உட்பட கான்செப்ட் என பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றது. மேலும் ஒரு சில வாகன தயாரிப்பாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்கவில்லை. கடந்த ஷோவில் சுமார் 67 நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் 20 நாடுகளைச் சேர்ந்த மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றது.

15வது முறையாக நடைபெற உள்ள 2020 ஆட்டோ எக்ஸ்போவில் குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் அணிவகுப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக குறைந்த விலை எலெக்ட்ரிக் கார்களான மாருதி வேகன் ஆர் EV, மஹிந்திரா eKUV100, மஹிந்திரா எக்ஸ்யூவி 500 EV, ரெனால்ட் க்விட் EV, மற்றும் டாடா ஆல்ட்ரோஸ் EV போன்ற மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

மேலும் இரு சக்கர வாகன தயாரிப்பாளர்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள், டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய கான்செப்ட்கள் இடம்பெறலாம்.

15வது ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்க உள்ள நிறுவனங்கள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும் தொடர்ந்து கடந்த ஆட்டோ எக்ஸ்போ 2018 அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.

IC என்ஜின் வாகனப் பதிவு கட்டணம் பல மடங்காக உயருகின்றதா..!

2019 Bajaj Ct 110

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் IC என்ஜின் வாகனப் பதிவு மற்றும் புதுப்பிப்பு கட்டணம் பல மடங்கு உயர்த்துவதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தயாரித்துள்ள புதிய வாகனப் பதிவு மற்றும் புதுப்பிப்பு கட்டணம் தொடர்பான வரைமுறையில் இரு சக்கர வாகனங்கள் முதல் நான்கு சக்கர வாகனங்கள் கனரக வாகனங்கள் வரை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும், 15 ஆண்டுகள் பழைய வாகனங்களை வருடத்திற்கு இரு முறை புதுப்பிக்கவும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

வரைவின்படி இரு சக்கர வாகனத்துக்கான பதிவுக் கட்டணம் 50 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்று சக்கர வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் 300யில் இருந்து 5000 ஆக, கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு 600 ரூபாயில் இருந்து 5000 என உயர்த்த வரையறுக்கப்பட்டுள்ளது.

4 சக்கர சரக்கு வாகனங்களுக்கு ஆயிரத்தில் இருந்து 10,000 ரூபாயாகவும், நடுத்தர, கனரக, சரக்கு, பயணிகள் வாகனங்களுக்கு 1000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாகவும் பதிவுக் கட்டணத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல், டீசல் வாகனங்களின் புதுப்பிப்பு கட்டணத்தையும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ரூ .600 ஆக உள்ள பழைய நான்கு சக்கர வாகனங்களின் பதிவை புதுப்பித்தல் கட்டணம், ரூ .10,000 என உயர்த்துவதற்கான முடிவினை மேற்கொண்டுள்ளது.

15 ஆண்டுகளை கடந்த மரபுசார் எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை FC மேற்கொள்ள வேண்டும் என்ற வரைவை மத்திய அரசு முன்னெடுத்து வருகின்றது. பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்தால் இதற்கான சான்றிதழை பெற்று புதிய வாகனத்தை வாங்கும் போது பதிவுக் கட்டணம் இல்லாமல் இலவசமாக பதிவு செய்யப்படும்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

விலை உயர்த்தப்பட்ட பஜாஜ் பல்சர் 150 பைக்குகளின் விவரம்

pulsar 150 neon

பஜாஜ் ஆட்டோவின் பிரசத்தி பெற்ற பல்சர் தொடரில் விற்பனை செய்யப்படுகின்ற 150 சிசி பிரிவில் உள்ள பல்சர் 150 நியான், பல்சர் 150 கிளாசிக் மற்றும் பல்சர் 150 ட்வீன் டிஸ்க் என மூன்று வேரியண்டுகளின் விலையும் ரூ. 475 முதல் ரூ. 2,950 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற 150சிசி மாடல்களில் ஒன்றான பஜாஜின் பல்சர் 150 மாடலில் 13.8 hp பவர் மற்றும் 13.4 Nm டார்க்கினை வழங்கவல்ல என்ஜின் பெற்றுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

பல்சர் 150 வரிசையில் உள்ள நியான் மாடல் சிங்கிள் டிஸ்க் பிரேக்குடன் நியான் நிறத்தை பெற்றதாகவும், பல்சர் 150 கிளாசிக் என்பது முன்புறத்தில் மட்டும் டிஸ்க் பிரேக் பெற்றதாகவும், டாப் வேரியண்ட் மாடலாக விளங்குகின்ற பல்சரின் 150 ட்வீன் டிஸ்க் பிரேக் பெற்ற மாடல் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக்கினை கொண்டுள்ளது. மேலும் மூன்று வேரிண்டுகளிலும் சிங்கிள் ஏனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் 5 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது.

Model New Price Old Price
Pulsar 150 Neon ரூ. 71,200 ரூ.  68,250
Pulsar 150 Classic (Rear Drum) ரூ. 84,960 ரூ. 84,461
Pulsar 150 Twin Disc ரூ.  88,838 ரூ. 88,339

(ex-showroom)

குறைந்த விலை கொண்ட பல்சர் 150 நியான் மாடல் அதிகபட்சமாக ரூ. 2950 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் வருகை விபரம் வெளியானது

tesla model 3

மின்சார கார்கள் மீதான ஈர்ப்பு பரவலாக அதிகரித்து வரும் நிலையில் டெஸ்லா மீதான ஆர்வம் இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஐஐடி மாணவர்களுக்கு கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் 452 கிமீ ரேஞ்ச் கொண்ட கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ரூபாய் 25.30 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் எம்ஜி eZS எஸ்யூவி விற்பனைக்கு வெளியாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான முயற்சியை எலான் மஸ்க் மேற்கொண்ட நிலையில் தோல்வியை சந்தித்து வருகின்றது. இந்நிலையில், அசோக் லேலண்ட் நிறுவனமும் டெஸ்லா கார்களை தயாரிக்க விருப்பம் தெரிவித்திருந்தது.

கடந்த 21ந் தேதி எலான் மஸ்க்கின் மற்றொரு நிறுவனமான ஸ்பேஸ் X, ஹைப்பர்லூப் சாதனத்திற்கான வடிவமைப்பு போட்டியை நடத்தியது. இதில், இந்தியா சார்பில் சென்னை ஐஐடி மாணவர் குழு பங்கேற்ற போது, டெஸ்லா கார்களின் இந்திய வருகை குறித்து எலான் மஸ்க்கிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த, இன்னும் ஓர் ஆண்டிற்குள் இந்தியாவில் டெஸ்லா கார்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

பஜாஜ் டோமினார் 400 பைக் விலை ரூ.6,000 உயர்ந்தது

dominar 400 bike

பஜாஜ் ஆட்டோவின் 2019 டோமினார் 400 பைக்கின் விலை ரூ.6,000 வரை உயர்த்தப்பட்டு தற்போது விலை ரூ.1.80 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக அறிமுக விலை ரூ.1.74 லட்சமாக மார்ச் 2019-யில் வெளியிடப்பட்டிருந்தது.

முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட 2019 டாமினார் 400 பைக்கின் பவர் அதிகரிக்கப்பட்டு 39.9 பிஎஸ் பவருடன் DOHC பெற்றதாக வந்துள்ள மாடலின் டார்க் தொடர்ந்து 35 என்எம் ஆக உள்ளது.

கடந்த மாடலை விட விற்னையில் உள்ள புதிய மாடலின் பெர்ஃபாமென்ஸ் அதிகரிக்கப்படிருப்பதுடன் அதிர்வுகள் (Vibration) பெருமளவு குறைக்கப்பட்டு, 100-125 கிமீ வேகத்தில் பயணிக்கும் போது சிறப்பான சஸ்பென்ஷன் செயல்பாடு பயண அனுபவத்தை மேலும் அதிகரிக்க உதவுகின்றது.

முன்பாக SOHC பெற்ற என்ஜினில் தற்போது  DOHC உடன் டோமினார் 400-ல் 373 சிசி என்ஜின் மூன்று ஸ்பார்க் பிளக்குகளுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டு பவர் 4.9 PS வரை அதிகரிக்கப்பட்டு , தற்போது 39.9 PS பவரினை 8650 ஆர்பிஎம் மூலம் வெளிப்படுத்துகின்றது. சிறப்பான வகையில் டார்க் சார்ந்த மேம்பாட்டை பெற்று 7000 ஆர்பிஎம்-ல் 35 Nm வழங்குகின்றது. டார்கில் மாற்றங்கள் இல்லை. அதே போல 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

இந்த பைக்கில் இரண்டு கிளஸ்ட்டர்கள் பெற்றிருக்கின்றது. டோமினாரில் நவீன வசதியை பெற்ற டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், இரண்டாவது கிளஸ்ட்டராக வழங்கப்பட்டுள்ள இடத்தில் எரிபொருள் கலனில் இணைக்கப்பட்டுள்ள கிளஸ்ட்டரில் கியர் பொசிஷன் இன்டிகேட்டர் டிரிப்மீட்டர், கடிகாரம் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கின்றது.

அடுத்ததாக இந்த பைக்கின் சஸ்பென்ஷன் முந்தைய மாடலை விட சிறப்பான சொகுசு தன்மை வழங்கும் வகையில் வந்துள்ளது. புதிய டோமினார் 400 பைக்கில் கேடிஎம் மாடலில் இடம்பெற்றுள்ளதை போன்ற 43mm முன்புற யூஎஸ்டி ஃபோர்க்கு சஸ்பென்ஷன் மற்றும் பின்புற மோனோ ஷாக் அப்சார்பர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டிருக்கின்றது.

மஹிந்திரா க்ரூஸியோ பஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

mahindra cruzio bus

மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ள புதிய மஹிந்திரா க்ரூஸியோ பேருந்து பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜின் பெற்று நடுத்தர ரக வர்த்தக வாகன பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 25 முதல் 27 வரை நவி மும்பையில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு பிரவாஸ் 2019 சர்வதேச பேருந்து மற்றும் கார் டிராவல் ஷோ அரங்கில் பல்வேறு நிறுவனங்களின் மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

மஹிந்திரா தனது இடைநிலை வர்த்தக வாகனங்கள் (ஐ.சி.வி) பிரிவில் புதிய க்ரூசியோ பஸ் மாடலை ஸ்டாஃப் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் வெளியிட்டுள்ளது. க்ரூஸியோ சிறந்த முறையிலான இருக்கை அகலத்தை வழங்குகிறது, மேலும் அவை முழுமையான சொகுசு தன்மையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்து மஹிந்திரா காப்புரிமை பெற்றுள்ள ஃபியூயல்ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. இது எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்த உதவுகிறது.

மஹிந்திரா நிறுவனம் இந்த பேருந்தில் டிரைவர் திறன் மேம்படுத்த மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் கருவியை கிளஸ்டரில் (Intelligent Driver Information System) கொடுத்துள்ளது. இந்த பேருந்து ரோல்ஓவர் பாதுகாப்புடன் மற்றும் புதிய பஸ் பாதுகாப்பு குறியீடு விதிமுறைகளான AIS 052, AIS 031 மற்றும் AIS 153 ஆகியவற்றுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. மஹிந்திரா க்ரூஸியோ பஸ்சின் நுட்பவிபரங்களை இந்நிறுவனம் வெளியிடவில்லை.

mahindra cruzio mahindra cruzio

2 புதிய பேருந்துகளை அறிமுகம் செய்த ஐஷர் மோட்டார்ஸ்

eicher-skyline-pro-bus

Prawaas 2019 சர்வதேச பேருந்து மற்றும் கார் டிராவல் ஷோ கண்காட்சியில் ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனம், 3009L ஸ்கைலைன் ப்ரோ ஸ்டாஃப் ஏசி பஸ் மற்றும் ஐஷர் 20.15R 12 மீட்டர் அடிச்சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இரண்டாம் ஆண்டு பிரவாஸ் 2019 சர்வதேச பேருந்து மற்றும் கார் டிராவல் ஷோ அரங்கில் பல்வேறு நிறுவனங்களின் மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டது. கடந்த ஜூலை 25 முதல் 27 வரை மும்பையில் நடைபெற்றது.

ஐஷர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இரு பேருந்துகளும் பள்ளி, ஊழியர்கள், ரூட் பர்மீட் மற்றும் இன்டர்சிட்டி பயணத்திற்கு ஏற்றவையாகும். குறிப்பாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஐஷர் 20.15R எனப்படுகின்ற 12 மீட்டர் நீளமுள்ள அடிச்சட்டத்தில் உயர்ரக தரத்தில் வடிவமைக்கப்பட்டு சிறப்பான சொகுசு தன்மையை வழங்கும் பேருந்தாக வடிவமைக்க இயலும்.

மேலும் இந்த பேருந்தில் 6 வேக ஓவர் ரைடு கியர்பாக்ஸ் உடன் வால்வோ நிறுவனத்தின் EMS 3.0 என்ஜின் மேலாண்மை அமைப்பினை பெற்றுள்ளது. கூடுதலாக க்ரூஸ் கன்ட்ரோல், எரிபொருள் அளவினை நிகழ்நேரத்தில் அறிவது உட்பட பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது.

 eicher-bus-chassis

அடுத்ததாக புதுப்பிக்கப்பட்டுள்ள ஐஷர் 3009L ஸ்கைலைன் ப்ரோ ஸ்டாஃப் ஏசி பேருந்தில் 2+1 இருக்கை வரிசை அமைப்புடன் மிக நேர்த்தியாக கஸ்டமைஸ் செய்யப்பட்டு ஆடம்பரமான இருக்கைகளை பெற்றதாக விளங்குகின்றது.

 

அதிர்ச்சி.! வெடித்து சிதறிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி

 hyundai-kona-electric-explodes

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரபலமான ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஒன்று கனடாவின் மாண்ட்ரியல் பகுதியில் வெடித்துள்ளது. மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி காரான கோனா சார்ஜிங் செய்யப்படாத நேரத்தில் வெடித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் பியோரோ கோசெண்டினோ புதிதாக கோனா எலெகட்ரிக் காரை வாங்கியுள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது காரேஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து கரும்புகை வெளியானதை தொடர்ந்து தீயனைப்பு வீரர்கள் மூலம் தீ அனைக்கப்பட்டுள்ளது.

கோனா EV காரின் வெடிப்பால் அவருடைய காரேஜின் முன்புற கதவும் மற்றும் மேற்கூறை வெடித்து சாலைகளில் சிதறியுள்ளது. ஒரு வேளை கதவின் அருகே யாரேனும் இருந்திருந்தால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் இருந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என உறுதியாகியுள்ளது.

kona ev

இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஹூண்டாய் கோனா மின்சார கார் விற்பனைக்கு வெளியிடப்பட்ட 10 நாட்களில் 120க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது.

கோனா எலெக்ட்ரிக் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் (permanent magnet synchronous motor) முறையில் உள்ளதாகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 136 ஹெச்பி குதிரை சக்தி மற்றும் 395 என்எம் டார்க் வழங்குகின்ற இந்த காரில் 39.2kWh லித்தியம் இயான் பேட்டரி கொடுக்கப்பட்டு, சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 452 கிமீ தொலைவு பயணிக்கும் திறுனுடன் விளங்குவதாக ஆராய் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.7 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும். முழுமையான பேட்டரி சார்ஜிங் செய்வதற்கு 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் அதிகபட்சமாக 57 நிமிடங்களில் முழுமையான சார்ஜிங் செய்ய இயலும். மேலும், சாதாரன ஏசி சார்ஜர் வாயிலாக 6 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், கார் வெடிப்பு தொடர்பான காரணம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

image source – Mathieu Daniel Wagner/Radio-Canada

source – cbc.ca