ஹோண்டா சிபி ஷைன் லிமிடெட் எடிஷன் விபரம் வெளியானது

cb shine

இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற 125சிசி மாடல்களில் ஒன்றான ஹோண்டாவின் சிபி ஷைன் பைக்கில் கூடுதல் வசதிகளை பெற்ற லிமிடெட் எடிஷன் விற்பனைக்கு வரவுள்ளது.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் உற்பத்தி செய்யப்பட உள்ள இந்த பைக்கின் எண்ணிக்கை மற்றும் விலை குறித்து அதிகார்வப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. குறிப்பாக விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.300 வரை விலை அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.

ஹோண்டா சிபி ஷைன்

மெக்கானிக்கல் மற்றும் என்ஜின் மாற்றங்கள் இல்லாமல் வெளிவரவுள்ள சிறப்பு எடிசனில் தொடர்ந்து 10.16 பிஹெச்பி பவரையும் ,10.30 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள சிபி ஷைன் பைக்கில் பவரை சக்கரங்களுக்கு எடுத்து செல்ல 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இரு நிறங்களில் கிடைக்க உள்ள சிறப்பு எடிஷனில் கருப்பு நிறத்துடன் சிவப்பு மெட்டாலிக், கருப்பு நிறத்துடன் சில்வர் மெட்டாலிக் போன்றவற்றை கொண்டதாக அமைந்திருக்கும். சிறப்பு எடிசனில் பாடி கிராபிக்ஸ் மட்டும் புதிதாக பெற்றுள்ளது.

இரு டயரிலும் டிரம் பிரேக் , மற்றும் டிஸ்க் பிரேக் என இரு மாறுபட்ட வேரியன்டில் கிடைக்கின்ற இந்த பைக் விற்பனைக்கு அடுத்த வாரம் வெளியிடப்படலாம்.

உதவி – ஆட்டோகார் இந்தியா

இந்தியா வரவுள்ள ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது

Skoda Superb facelift

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சூப்பர்ப் பிளக் இன் ஹைபிரிட் ஆப்ஷன் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

ஸ்கோடாவின் சூப்பர்ப் காரின் தோற்ற அமைப்பு , இன்டீரியர் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய சூப்பர்ப் கார் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் கிடைக்க உள்ளது.

ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட்

முழுமையான எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட் கொண்ட சூப்பர்ப்-ல் புதுப்பிக்கப்பட்ட முன்பக்க் கிரில், பம்பர் அமைப்பு போன்றவற்றுடன் எல்இடி டெயில் லைட் இணைக்கப்பட்டுள்ளது. முந்தைய காரை விட 8 மிமீ நீளம் அதிகரிக்கப்பட்டு காரின் நீளம்  4,869 மிமீ ஆக உயர்ந்துள்ளது. டிரைவர் அசிஸ்டென்ஸ், பிரீடெக்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ட்ரையிலர் அசிஸ்ட், ஏரியா வியூ என நான்கு கேமராக்களை கொண்டு 360 டிகிரி பாகையில் காரை காணும் வசதி பெற்றதாக அமைந்துள்ளது.

superb facelift

பிளக் இன் ஹைபிரிட் வெர்ஷன் மாடல் உட்பட மொத்தம் 6 விதமான என்ஜின் தேர்வுகளை கொண்டதாக சூப்பர்ப் சர்வதேச அளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 150 BHP பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TSI என்ஜின் 6 வேக மேனுவல் அல்லது 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உடன் வந்துள்ளது.

150 BHP பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TSI என்ஜின் பெற்ற மாடல் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் உடன் வந்துள்ளது. மேலும் மற்றொரு 272 BHP பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TSI என்ஜின் பெற்ற மாடல் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் உடன் வந்துள்ளது.

டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் உடன் வந்துள்ள 1.6 லிட்டர் TDI என்ஜின் ஆனது 120 BHP பவரை வெளிப்படுத்தும். அடுத்தப்படியாக 2.0 லிட்டர் TDI Evo என்ஜின் 150 BHP மற்றும் 190 BHP என இருவிதமான பவரை வெளிப்படுத்துகின்றது.

Skoda Superb facelift interior

பிளக் இன் ஹைபிரிட் மாடல் வோக்ஸ்வேகன் பஸாத் GTE காரில் உள்ளதை போன்ற அமைப்பினை  156 BHP பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் Tsi என்ஜின் உடன் எலெக்ட்ரிக் மோட்டார் 115 BHP வழங்குகின்றது. மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள 13 kWh பேட்டரி பேக் முழுமையாக 55 கிமீ பயணத்தை வெளிப்படுத்துகின்றது. 6 வேக டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் முதல் ஸ்கோடா சூப்பர்ப் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்திய சந்தையில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

Skoda Superb facelift Skoda Superb facelift front Skoda Superb facelift side Skoda Superb facelift rear

கூடுதல் பாதுகாப்புடன் டாடா டியாகோ கார் வெளியானது

டியாகோ

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவின், பிரபலமான டியாகோ காரில் கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

அதிகம் விற்பனையாகின்ற ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான டியாகோ காரின் விலை தற்போது ரூ.4.40 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டாடா டியாகோ காரின் வசதிகள்

முந்தைய மாடலை விட பேஸ் வேரியன்ட் விலை ரூ.13,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பெற்றுள்ள அம்சங்கள் இரு முன்பக்க ஏர்பேக், ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS),எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்டிரிபுசன் (EBD), கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (CSC), மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் போன்றவற்றுடன் அதி வேக எச்சரிக்கை , ஒட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான இருக்கை பட்டை எச்சரிக்கை போன்றவற்றை கொண்டுள்ளது.

 

தற்போது விற்பனைக்கு கிடைக்கின்ற 70hp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் டார்க் 140Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83hp மற்றும் டார்க் 114Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள புதிய டாடா ஆல்ட்ரோஸ் காரினை போல இம்பேக்ட் டிசைன் 2.0 அம்சத்தை பெற்றதாக மேம்படுத்தப்பட்ட டியாகோ கார் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. பிஎஸ் 6 என்ஜின் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்படும் சிறிய ரக டீசல் காரை கைவிடும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, டியாகோ காரில் டீசல் என்ஜின் கார் மாடல் விற்பனைக்கு வெளியாகாது.

 

சோதனையில் உள்ள பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பை படங்கள்

அர்பனைட் ஸ்கூட்டர்

வரும் 2020 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர் மாடல் விற்பனைக்கு வெளியாகும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. அர்பனைட் பிராண்ட் பிரத்தியேகமான எலெக்ட்ரிக் டூ வீலர் பிராண்டாக விளங்கும் என குறிப்பிடப்படுகின்றது.

எலக்ட்ரிக் கார் சந்தையில் பிரபலமாக விளங்கும் டெஸ்லா கார் நிறுவனத்தைப் போல இந்தியாவில் எலெக்ட்ரிக் டூ வீலர் சந்தையில் விளங்குவதனை நோக்கமாக கொண்டுள்ளதாக ராஜீவ் பஜாஜ் குறிப்பிட்டுள்ளார்.

பஜாஜ் அர்பனைட்

இன்றைக்கும் இந்தியாவில் பிரபலமாக பேசப்படுகின்ற ஸ்கூட்டர்களில் மிக முக்கியமான மாடல் பஜாஜ் சேட்டக் ஆகும். கடந்த 13 ஆண்டுகளாக ஸ்கூட்டர் தயாரிப்பிலிருந்து விலகியிருந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாயிலாக சந்தைக்கு வரவுள்ளது.

bajaj-urbanite

முதல்முறையாக சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தபடுகின்ற பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் படங்கள் இணையத்தில் காண கிடைக்கின்றது. இந்த ஸ்கூட்டரின் நுட்பவிபரங்கள் போன்றவை இதுவரை கிடைக்கப் பெறவில்லை. சோதனையில் ஈடுபட்டுள்ள அர்பனைட் ஸ்கூட்டரின் பின்புறத்தில் இரு பிரிவுகளை கொண்ட எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டு, ரெட்ரோ தோற்றத்துடன் கூடிய நவீனத்துவமான ஸ்கூட்டராக இந்த மாடல் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல்வேறு ஸ்மார்ட் டெக் வசதிகளை கொண்டதாக வெளிவரவுள்ள பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர் இந்த ஆண்டின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு வெளியாகலாம்.

image source – powerdrift and motorbeam

 

மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்போர்ட் எடிஷன் அறிமுகம்

மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா

ஸ்டைலிஷான தோற்ற பொலிவினை வெளிப்படுத்தும் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்போர்ட் லிமிடெட் எடிஷன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. தோற்ற அமைப்பில் கூடுதலான ஆக்செரீஸ்கள் மட்டும் பெற்ற பதிப்பாகும்.

டீலர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ள இந்த பிரத்தியேக ஆக்செரீஸ்களுக்கு கூடுதல் கட்டணமாக ரூ.29,990 வசூலிக்கப்பட உள்ளது. என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்போர்ட்

ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் டாடா நெக்ஸான் போன்ற கார்களுக்கு சவாலாக விளங்குகின்ற விட்டாரா பிரெஸ்ஸா டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றது. 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ளது.

ரூபாய் 29,990 மதிப்புள்ள ஆக்செரீஸ் பேக்கில் வெளிப்புறத்தில் டிசைனிங் செய்யப்பட்ட மேட், பக்கவாட்டில் பாடி கிளாடிங், பாடி கிராபிக்ஸ், முன் மற்றும் பின் பம்பர்களில் க்ரோம் கார்னீஷ், டோர் ஷீல் கார்டு வீல் ஆர்ச் கிளாடிங் கிட் போன்றவற்றுடன் இன்டிரியரில் புதிய இருக்கை கவர், லெதர் ஸ்டீயரிங் வீல் மற்றும் நெக் குஷைன் போன்றவை பெற்றுள்ளது.

விற்பனைக்கு வந்த நாள் முதல் 4 லட்சத்துக்கு மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த காரில் 1.3 லிட்டர் DDiS டீசல் எஞ்சனில் எந்த மாற்றங்களும் இல்லாமல், 90 ஹெச்பி ஆற்றல் மற்றும் 200 என்எம் இழுவைத் திறனை கொண்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் கூடுதலாக ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா

இந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு!

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+

நிதி அயோக் பரிந்துரையின்படி, 150சிசிக்கு குறைந்த திறன் பெற்ற டூ வீலர் விற்பனையை 2025 ஆம் ஆண்டு முதல் தடை செய்ய இந்திய அரசு திட்டமிட்டு வருகின்றது. இந்த பிரிவில் எலெக்ட்ரிக் டூ வீலர்களை மட்டும் விற்பனை செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ள India’s think tank என்ற அறிக்கையில், 2023 ஆம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களும், 2025 முதல் 150 சிசிக்கு குறைந்த பெட்ரோல் மாடல்களை தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

பெட்ரோல் டூ வீலர் தடை

கடந்த 2018-2019 ஆம் நிதியாண்டில் விற்பனை செய்யப்பட்டுள்ள பெட்ரோலில் இயங்கும் இரு சக்கர வாகன எண்ணிக்கை 2.1 கோடியாகும். ஆனால் இதே காலகட்டத்தில் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரின் மொத்த விற்பனை வெறும் 1,26,000 மட்டும் ஆகும். ஆனால் இதற்கு முந்தைய நிதியாண்டு 17-2018 காலத்தில் 54,800 மட்டும் விற்பனை ஆகியிருந்தது.

தற்போது இந்தியாவில் ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர், ஓகினாவா போன்ற முன்னணி மின்சார இரு சக்கர வாகன நிறுவனங்களு FAME II ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

ஹீரோ பிளெஷர் பிளஸ் 110

நிதி அயோக் பரிந்துரைப்படி, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசினை கட்டுப்படுத்த பெட்ரோல் இரு சக்கர வாகனங்களில் 150சிசி க்கு குறைந்த திறன் பெற்ற பைக் மற்றும் ஸ்கூட்டர்களை 2025 முதல் முற்றிலும் விற்பனை நிறுத்தப்படுவதுடன், இதற்கு மாற்றாக எலெக்ட்ரிக் டூ வீலர்களை நிலைநிறுத்தவும், 2023 முதல் மூன்று சக்கர வாகனங்கள் அனைத்தும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இந்த பரிந்துரையை அரசு ஏற்கும் பட்சத்தில் பெட்ரோல் வாகன விற்பனை எண்ணிக்கை கட்டுப்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம்.

புதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்

2019 சுசுகி ஜிக்ஸெர் SF

சமீபத்தில் வெளியான சுஸுகி மோட்டார்சைக்கிளின், ஜிக்ஸர் SF 250 மாடலுக்கு 6 விதமான ஆக்செரீஸ்களை இந்நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. குறிப்பாக இருக்கை கவர், பெட்ரோல் டேங்க் பாதுகாப்பு கவர் போன்றவையும் உள்ளது.

ரூ.1.70 லட்சத்தில் மிகவும் ஸ்டைலிஷாக விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கின்ற ஜிக்ஸர் எஸ்எஃப் 250 மாடலின் அடிப்படையிலான நேக்டு வெர்ஷன் அடுத்த சில மாதங்களில் ஜிக்ஸர் 250 என வரவுள்ளது.

சுஸுகி ஜிக்ஸர் SF 250

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 6 ஆக்செரீஸ்கள் சுஸுகி ஜிக்ஸர் SF வரிசைக்கு முழுமையாக பொருந்தும், அதாவது 250சிசி மற்றும் 155சிசி என இரு ஃபேரிங் மாடலுக்கும் ஏற்றதாகவே விளங்கும்.

  • டேங்க் புராடெக்டர் – ஸ்கிராட்ச்களில் இருந்து பாதுகாக்க உதவும்
  • டேங்க் கிராபிக் – பெட்ரோல் டேங்கின் மேற்பகுதியில் வைக்கும் பொருட்களால் ஏற்படும் ஸ்கிராட்சினை தடுக்கும்.
  • ரிம் ஸ்டிக்கர் – ரிம்யில் வழங்கப்பட்டுள்ள ஸ்டிக்கர் வாயிலாக ஸ்டைலிசான் தோற்றத்தை அதிகரிக்கின்றது.
  • DC சாக்கெட் – நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வமான மொபைல் சார்ஜிங் வசதிக்கு டிசி சாக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
  • இருக்கை கவர்
  • ஸ்மோக்டு வைஷர்

சுஸுகி ஆயில் கூலிங் சிஸ்டம் (SOCS – Suzuki Oil Cooling System) நுட்பம் பெற்றதாக 249சிசி SOHC , 4 வால்வுகளை பெற்ற ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.5 ஹெச்பி பவரும் மற்றும் 22.6Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

14.1 hp பவரை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் எஸ்எஃப் வரிசை பைக் என்ஜினில் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்று சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 14 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

சுஸுகி ஜிக்ஸர் SF – ரூ.1.10 லட்சம்

சுஸுகி ஜிக்ஸர் SF 250 – ரூ.1.70 லட்சம்

வெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்

ஹீரோ மோட்டோகார்ப்

உலகிலேயே அதிகம் விற்பனையாகின்ற பைக் மாடலாக விளங்கும் ஹீரோ ஸ்பிலெண்டர் 25 ஆண்டு காலாமாக இரு சக்கர வாகன சந்தையில் நாயகனாக விளங்குகின்றது.

செல்ஃப் ஸ்டார்ட் வசதியுடன் கூடிய டிரம் பிரேக் பெற்ற அலாய் வீல் மாடலின் அடிப்படையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. சாதாரன மாடலை விட ரூ.1000 வரை விலை அதிகரிக்கப்பட்டிருக்கலாம்.

ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்

1994 ஆம் ஆண்டு ஹீரோ ஹோண்டா கூட்டணியில் விற்பனைக்கு வந்த முதல் ஸ்பிளென்டர் பைக் மாடல் இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற இரு சக்கர வாகனமாக தொடர்ந்து விளங்குகின்றது. ஹோண்டா பிரிந்த பின்னரும் ஹீரோ ஸ்பிளென்டரின் விற்பனை அமோகமாக இருந்து வருகின்றது.

விற்பனையில் உள்ள ஸ்பிலெண்டர்+ i3S மாடலை அடிப்படையாக கொண்டு “Hero Splendor+ 25 Years Special Edition” என்ற பேட்ஜ் பக்கவாட்டில் அமைந்துள்ளது. ஹெட்லைட் மேற்புற பேனலில் “25 Years Special Edition” கொடுக்கப்பட்டுள்ளது. 3டிஅமைப்பில் ஹீரோ பேட்ஜ் மற்றும் ஸ்பிளென்டர் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. புதிதான பாடி கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டு மற்றபடி யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி ஹேண்டில் பாரில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்பிளென்டர் பிளஸ்

ஸ்பெஷல் எடிசன் மாடலில் தோற்ற அமைப்பு மாறுதல்களை 97.2 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் OHC உடன் 8.36 PS பவர் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இன்ட்கிரேட்டெட் பிரேக்கிங் சிஸ்டம் ஆதரவுடன் இரு டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டு, ஸ்பெஷல் எடிசன் மாடலில் கருப்பு நிற பூச்சை பெற்ற அலாய் வீல் கொண்டுள்ளது.

சாதாரன மாடலை விட ரூ.1,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ள சிறப்பு எடிஷன் ஹீரோ ஸ்பிளென்டர் பிளஸ் பைக் விலை ரூ. 55,600 (விற்பனையக விலை) என நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

 

புதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்

gixxer 250

அடுத்த சில மாதங்களுக்குள் நேக்டு ஸ்டைல் சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் விற்பனைக்கு வெளியிட சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் ஃபேரிங் ரக ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் ரூ.1.70 லட்சம் விலையில் வெளியாகியுள்ளது.

முந்தைய ஜிக்ஸர் 150 மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலும் விற்பனைக்கு வரக்கூடும் இரு மாடல்களும் ஒரே மாதரியான ஸ்டைல் அம்சத்தை கொண்டதாக அமைந்திருக்கும்.

சுஸூகி ஜிக்ஸெர் 250

சுசுகி நிறுவனத்தின் மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சத்துடன் புதிதாக வரவுள்ள இந்த மாடல் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற  GSX-S125 பின்னணியாக கொண்டதாக அமைந்திருக்கும். சுசுகி ஆயில் கூலிங் சிஸ்டம் (SOCS – Suzuki Oil Cooling System) நுட்பம் பெற்றதாக 249சிசி SOHC , 4 வால்வுகளை பெற்ற ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.5 ஹெச்பி பவரும் மற்றும் 22.6Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

சுசுகி ஜிக்ஸர்

சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் மைலேஜ் லிட்டருக்கு 38.5 கிமீ ஆக இருக்க வாய்ப்புள்ளது. எல்இடி ஹெட்லைட் யூனிட், ஸ்டைல் அம்சங்கள் உட்பட எல்இடி டெயில்லைட், டைமன்ட் கட் ஃபினிஷ் பெற்ற மல்டி ஸ்போக் அலாய் வீல், டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டு பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது. இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக அமைந்துள்ளது.

யமஹா FZ25 மாடலுக்கு போட்டியாக வெளி வரவுள்ள சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக்கின் விலை ரூ. 1.60 – ரூ.1.65 லட்சத்துக்குள் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

விற்பனையில் இந்தியாவின் டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2019

activa 125

கடந்த ஏப்ரல் 2019 மாதந்திர விற்பனையில் டாப் 10 பைக்குகள் பட்டியல் விபரம் வெளிவந்துள்ளது. இந்திய இரு சக்கர வாகன சந்தையில் ஹீரோ ஸ்பிளென்டர் மற்றும் ஹோண்டா ஆக்டிவா மாடல்களுக்கு இடையில் முதலிடத்திற்கான கடுமையான போட்டி நிகழ்ந்து வருகின்றது.

ஆக்டிவா விற்பனை ஏப்ரல் மாதம் உயர்வு பெற்றிருக்கும் நிலையில் ஸ்பிளென்டர் பைக் மாடலிடம் முதலிடத்தை தொடர்ந்து 8வது மாதமாக இழந்துள்ளது.

டாப் 10 பைக்குகள் – ஏப்ரல் 2019

கடந்த மார்ச் மாதம் பெரும்பாலான மோட்டார்சைக்கிள் நிறுவன விற்பனை மிகப்பெரிய சரிவை கண்டிருந்த நிலையில், ஏப்ரல் மாதம் சீரான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப்

குறிப்பாக ஹோண்டா சிபி ஷைன் பைக் விற்பனை ஏப்ரல் மாதம் 82,315 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய மார்ச் மாத முடிவில் 29,827 பைக்குகள் மட்டும் விற்பனை செய்திருந்தது குறிப்பிடதக்கதாகும்.

டாப் 10 இரு சக்கர வாகன பட்டியலில் இரு ஸ்கூட்டர்கள் மாடல்கள் மட்டும் இடம் பெற்றுள்ளன. ஆக்டிவா ஸ்கூட்டரினை தொடர்ந்து டிவிஎஸ் ஜூபிடர் இடம்பெற்றுள்ளது.

வ.எண் தயாரிப்பாளர் ஏப்ரல் 2019
1. ஹீரோ ஸ்பிளென்டர் 2,23,532
2. ஹோண்டா ஆக்டிவா 2,10,961
3. ஹீரோ HF டீலக்ஸ் 1,82,029
4. ஹோண்டா சிபி ஷைன் 82,315
5. பஜாஜ் பல்ஸர் 75,589
6. ஹீரோ கிளாமர் 67,829
7. பஜாஜ் பிளாட்டினா 67,599
8. டிவிஎஸ் XL சூப்பர் 63,725
9. ஹீரோ பேஸன் 59,138
10. டிவிஎஸ் ஜூபிடர் 54,984

 

cb shine