இந்தியாவின் முதல் பிஎஸ் 6 டூ வீலரை வெளியிடும் ஹோண்டா

ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிஷன்

பாரத் ஸ்டேஜ் 6 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்ட ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மாடல் FI என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு ஜூன் 12, 2019-ல் வெளி வரவுள்ளது. இந்தியாவின் முதல் இரு சக்கர வாகனத்தில் பிஎஸ் 6 என்ஜின் பெற்ற மாடலாக ஹோண்டா விற்பனைக்கு வெளியிட உள்ளது.

ஜூன் 12 ஆம் தேதி ஹோண்டா நிறுவனம், முதல் பிஎஸ் 6 என்ஜின் பெற்ற மாடலை தவிர மற்றொரு ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை விற்பனைக்கு வெளியிடும் வாய்ப்புகள் உள்ளது.

முதல் ஹோண்டா பிஎஸ் 6 ஸ்கூட்டர்

‘a quiet revolution’ என்ற கோஷத்துடன் வெளியிடப்பட்டுள்ள டீசரில் எஃப்ஐ என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு வெளியிட உள்ளது. முதன்முறையாக இந்தியாவில் வெளியிடப்பட உள்ள 110சிசி என்ஜின் பெற்ற எஃப்ஐ மாடல் மிக நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்த ஸ்கூட்டரில் ஸ்மார்ட்போனை இணைக்கும் வகையிலான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை பொருத்தப்பட்டிருக்கும் என கருதப்படுகின்றது. முழுமையான எல்இடி விளக்கு, எல்இடி டெயில் விளக்கு, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளை கொண்டதாக அமைந்திருக்கலாம்.

ஹோண்டா நிறுவனம், சமீபத்தில் லிமிடெட் எடிசன் பெற்ற ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் மற்றும் ஹோண்டா சிபி ஷைன் ஆகிய இரு மாடல்களை வெளியிட்டுள்ளது.

டாடா டியாகோ NRG ஏஎம்டி விற்பனைக்கு வெளியானது

கிராஸ் ஹோட்ச் தோற்றத்தை வெளிப்படுத்தும் டாடா டியாகோ NRG காரில் கூடுதல் வசதிகள், பெட்ரோல் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் கூடுதலாக இணைக்கப்பட்டு விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

பிரபலமான டியாகோ கார் இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற மாடல்களில் ஒன்றாக விளங்குகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் எடிஷனில் என்ஆர்ஜி எடிஷன் கிடைக்கின்றது.

டாடா டியாகோ NRG

டியாகோ காரை விட கூடுதலாக தோற்ற அமைப்பில் பாடி கிளாடிங், ஸ்கிட் பிளேட்ஸ், ரூஃப் ரெயில் மற்றும் 14 அங்குல ஸ்டீல் ரிம் வீல் போன்றவற்றுடன் இன்டிரியர் அமைப்பில் 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்றவற்றுடன் மேனுவல் ஏசி, பவர் அசிஸ்டெட் ஸ்டீயரிங், நான்கு கதவுகளில் பவர் விண்டோஸ், ரிமோட் லாக்கிங் போன்றவற்றுடன் வந்துள்ளது.

சமீபத்தில் டியாகோ காரில் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களை பெற்றதாக வந்திருந்தது. தற்போது விற்பனைக்கு கிடைக்கின்ற 70hp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் டார்க் 140Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83hp மற்றும் டார்க் 114Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா டியாகோ NRG ஏஎம்டி விலை ரூ.6.15 லட்சம் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்)

ஃபியட் கிறைஸலர் ஆட்டோமொபைல்ஸ் உடன் ரெனால்ட் கூட்டணி

fiat chrysler

50 சதவீத பங்ககுளை ரெனால்ட் குழுமத்துக்கு வழங்க ஃபியட் கிறைஸலர் ஆட்டோமொபைல்ஸ் (Fiat Chrysler Automobiles – FCA) நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள 50 சதவீத பங்ககுளை ஃபியட் கிறைஸலர் தன் வசம் வைத்துக் கொள்ளவதாக அறிவித்துள்ளது.

இரு நிறுவனங்களுக்கிடைய ஏற்பட உள்ள ஒப்பந்தம் மூலம் புதிய மாடல் தயாரிப்பு, கனெக்கட்டிவிட்டி, மின்சார கார் மற்றும் தானியங்கி கார் போன்ற தயாரிப்பில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளது.

ஃபியட் கிறைஸலர் ஆட்டோமொபைல்ஸ்

ரெனோ குழுமம் முன்பாக நிசான், மிட்ஷூபிஷி போன்ற நிறுவனங்களை தன்வசம் பெற்றுள்ளது. ஃபியட் குழுமம் நிறுவனம்,  ஃபியட், ஜீப், டைசியா, லாடா, மஸாராட்டி, ஆல்ஃபா ரோமியோ போன்ற நிறுவனங்களை கொண்டுள்ளது. இந்த இணைப்பின் மூலம் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுனவனமாக செயல்பட உள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய அளவில் கூட்டணியாக இணைந்து நிறுவனங்கள் செயல்பட துவங்கி வருகின்றன. குறிப்பாக டொயோட்டா-சுசுகி நிறுவனங்களை போல பல்வேறு நுட்பங்களை ஃபியட் மற்றும் ரெனோ இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

ரெனோ நிறுவனம், எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் பல்வேறு நுட்பங்களை பெற்று முன்னோடியாக விளங்கி வருகின்றது. அதே போல FCA நிறுவனம் கூகுள் வேமோ, பிஎம்டபிள்யூ மற்றும் ஏப்டிவ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து தானியங்கி கார் நுட்பங்களை மேம்படுத்தி வருகின்றது.

இரு நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் மூலம், இந்திய சந்தையிலும் புதிய மாடல்களை இந்நிறுவனம் கூட்டாக உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

டாடாவின் அல்ட்ரோஸ் கார் விற்பனைக்கு தயாராகிறது

டாடா அல்ட்ரோஸ்

பண்டிகை காலத்துக்கு முன்னதாக வெளியிடப்பட உள்ள டாடா மோட்டார்சின் அல்ட்ரோஸ் காரின் விளம்பர படப்பிடிப்புக்கான புகைப்படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது.

கடந்த 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில்  45X கான்செப்ட் என காட்சிப்படுத்தப்பட்டு, பிறகு இந்த ஆண்டின் 2019 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அல்ட்ரோஸ் என்ற பெயர் உறுதிப்படுத்தப்பட்டது.

அல்ட்ரோஸ் காரின் எதிர்பார்ப்புகள்

ஹாரியர் எஸ்யூவி மாடலை தொடர்ந்து டாடாவின் இம்பேக்ட் டிசைன் 2.0 அடிப்படையில் டிசைனிங் செய்யப்பட்டு அல்ட்ரோஸ் காரில் முதன்முறையாக இந்நிறுவன டாடா அல்ஃபா (ALFA Agile Light Flexible Advanced – ALFA) பிளாட்ஃபாரத்தில் வரவுள்ள முதல் மாடலாக விளங்க உள்ளது.

தொடர்ந்த பல்வேறு சமயங்களில் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், வர்த்தக விளம்பரத்திற்கான படப்படிப்பில் ஈடுபடும் புகைப்படங்கள் மறைக்கப்படாமல் முழுமையாக காட்சி தந்துள்ளது. குறிப்பாக இந்த காரில் இரு நிறத்திலான 17 அங்குல வீலுடன் ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டதை போன்ற உற்பத்தி நிலை மாடல் அமைந்துள்ளது.

டாடா அல்ட்ரோஸ்

இன்டீரியர் அமைப்பில், மிதக்கும் வகையிலான டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்ம், டிஜிட்டல் கிளஸ்ட்டர் போன்றவற்றுடன் பல்வேறு டிஜிட்டல் நுட்பம் சார்ந்த அம்சங்களை கொண்டதாக ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளை வசதிகளுடன் இ-சிம் ஆதரவினை பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.

அல்ட்ரோஸ் காரில் இரண்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் ஒரு டீசல் என்ஜின் தேர்வினை கொண்டதாக அமைந்திருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போன்றவற்றை பெற்றதாக அமைந்துள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி சுசுகி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் மற்றும் பெலினோ அடிப்படையிலான டொயோட்டா கிளான்ஸா போன்ற கார்களுக்கு மிகவும் சவாலாகவும் போட்டியாளர்களை விட குறைவான விலையிலும் அல்ட்ரோல் விற்பனைக்கு வரக்கூடும் என கருதப்படுகின்றது.

டாடா அல்ட்ரோஸ்

ரூ. 62,234 விலையில் ஹோண்டா சிபி ஷைன் லிமிடெட் எடிஷன் அறிமுகம்

cb shine limited edition

பிரபலமான 125சிசி ரக ஹோண்டா சிபி ஷைன் பைக் மாடலின் லிமிடெட் எடிஷன் விலை ரூபாய் 62,234 தொடக்க விலையில் வெளியிடப்பட்டுள்ளது. தோற்ற மாற்றங்களை மட்டும் இந்த எடிஷன் கொண்டுள்ளது.

ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிஷன் போன்றே இந்த பைக்கில் டூயல் டோன் நிறத்தை கொண்டுள்ளது. விற்பனையில் உள்ள சாதாரன மாடலை விட ரூ.400 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபி ஷைன்

டூயல் டோன் என இரு விதமான கலவை பெற்ற நிறத்தை கொண்டுள்ள சிபி சைன் பைக்கினில் கருப்பு நிறத்துடன் சிவப்பு மெட்டாலிக், கருப்பு நிறத்துடன் சில்வர் மெட்டாலிக் போன்றவற்றை கொண்டதாக அமைந்திருக்கும். சிறப்பு எடிசனில் வைஷர், டேங்க், கவுல் பேனல் போன்றவற்றில் பாடி கிராபிக்ஸ் மட்டும் புதிதாக பெற்றுள்ளது

இந்த பைக்கில் எவ்விதமான மெக்கானிக்கல் மற்றும் என்ஜின் மாற்றங்கள் இல்லாமல் வெளிவந்துள்ளது. சிறப்பு எடிசனில் தொடர்ந்து 10.16 பிஹெச்பி பவரையும், 10.30 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 125 சிசி ஏர் கூல்டு ஒற்றை சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது சிபி ஷைன் பைக்கில் பவரை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இரு டயரிலும் டிரம் பிரேக் , மற்றும் டிஸ்க் பிரேக் என இரு மாறுபட்ட வேரியன்டில் கிடைக்கின்ற இரு வேரியன்டிலும் லிமிடெட் எடிஷன் வெளியாகியுள்ளது.

honda cb shine

ஹோண்டா CB ஷைன் டிரம் பிரேக் லிமிடெட் எடிஷன் விலை ரூ. 62,234 மற்றும் ஹோண்டா CB ஷைன் டிஸ்க் லிமிடெட் எடிஷன் விலை ரூ.66,894 என (விற்பனையக விலை சென்னை) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ. 58,131 விலையில் ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிஷன் அறிமுகம்

 ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிஷன்

ரூபாய் 58,131 விலையில் புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் லிமிடெட் எடிஷன் மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. தோற்ற அமைப்பில் டூயல் டோன் நிறங்களை மட்டும் பெற்றதாக வந்துள்ளது.

ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரை தவிர 125சிசி ஹோண்டா சிபி ஷைன் பைக் மாடலிலும் லிமிடெட் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள சாதாரன மாடலை விட ரூ.400 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி

10க்கு மேற்பட்ட ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ள ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் குறிப்பாக இரு நிற கலவையிலான இரண்டு நிறங்களை கொண்டுள்ளது. அவை வெள்ளை உடன் சில்வர், சில்வர் மெட்டாலிக் உடன் கருப்பு என இரு நிறங்களாகும்.

ஆக்டிவா 5ஜி-யில் 8 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 9 என்எம் முறுக்கு விசை வெளிப்படுத்துகின்ற 109.1சிசி என்ஜினை கொண்டுள்ளது.

சில்வர் உடன் கருப்பு நிறம் , வெள்ளை உடன் கோல்டு ஆகிய இரு டூயல் டோன் நிறங்களை பெற்று STD மற்றும் DLX என இரு வேரியன்டிலும் வரவுள்ள இந்த எடிஷனில் குறிப்பாக கருப்பு நிற வீல், லிமிடெட் எடிசன் என்ற பெயருடன் கூடிய பாடி கிராபிக்ஸ் முன்புற மட்கார்டு, அப்ரான் உட்பட பாடி முழுமைக்கும் இடம்பெற்றுள்ளது.

 ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிஷன்

ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிஷன் STD விலை ரூ. 58,131 மற்றும் ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிஷன் DLX விலை ரூ. 59,996 என (விற்பனையக விலை சென்னை) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஆக்டிவா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது. முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய ஆக்டிவா 6ஜி இந்த வருடத்தின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 விற்பனைக்கு வந்தது

tvs apache rr310

சிலிப்பர் கிளட்ச் வசதியை கூடுதலாக பெற்ற 2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் ரூ.2.27 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.3,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய மாடலில் பாண்டம் பிளாக் எனற நிறம் கூடுதலாக இணைக்கப்பட்டு சிறிய அளவிலான பாடி கிராபிக்ஸ் மாற்றங்களை பெற்றதாக அமைந்துள்ளது. மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லை.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310

வளைவான இடங்களில் மற்றும் வேகத்தை விரைவாக குறைக்கும்போது கியரினை குறைப்பதனால் ஏற்படுகின்ற பின்புற வீல் பூட்டிக் கொள்வதனை கிளட்ச் தடுமாற்றத்தை தவிர்க்கும் நோக்கில் மேம்படுப்பட்ட மாடலில் சிலிப்பர் கிளட்ச் வசதி அடிப்படையாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பயன்பாட்டில் உள்ள வாகனங்களிலும் சிலிப்பர் கிளட்ச் நுட்பத்தினை இணைக்க இயலும் என குறிப்பிடப்படுள்ளது.

அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் 313 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக 34 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 28 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் சிலிப்பர் கிளட்ச் வசதியுடன் இடம்பெற்றிருக்கின்றது.

கருப்பு நிறம் புதிதாக இணைக்கப்பட்டு, புதிய பாடி கிராபிக்ஸ் சிவப்பு நிறத்தில் இணைக்கப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள மாடலை விட புதிய மாடல் விலை ரூபாய் 3,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 2019 அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடலின் முதல் பைக்கினை எம்.எஸ் தோனி டெலிவரி பெற்றுள்ளார்.

 

17,000 புக்கிங் பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி விபரம்

hyundai venue

 

கடந்த 21 ஆம் தேதி வெளியிடப்பட்ட வென்யூ கார் முன்பதிவு எண்ணிக்கை 17,000 கடந்துள்ளது. விற்பனைக்கு முன்பாக 15,000 எண்ணிக்கையாக இருந்தது. வென்யூ எஸ்யூவிக்கு முன்பதிவு தொடங்கப்பட்ட முதல் நாளில் 2,000 முன்பதிவுகளுடன் மொத்தம் 15,000 புக்கிங் பெற்றுள்ள இந்த காருக்கு 50,000 மேற்பட்ட நபர்கள் கார் தொடர்பான விபரங்களை கேட்டறிந்துள்ளனர் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

ஹூண்டாயின் இந்தியாவின் முதல் ‘Connected Car’ என அழைக்கப்படுகின்ற இந்த எஸ்யூவி காரில் ப்ளூலிங்க் டெக்னாலாஜி வழங்கப்பட்டு 33 வகையான டெக் அம்சத்தை பெற்றுள்ளது.

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி

வென்யூவில் 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை கொண்டுள்ளது.

மூன்றாவதாக 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் மாடல் 90 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 220 என்எம் முறுக்குவிசை பெற்றதாக விளங்குகின்றது.

Hyundai venue interior

Hyundai venue interior

வென்யூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 18.27 கிமீ (மேனுவல்) மற்றும் 18.15 கிமீ (ஆட்டோமேட்டிக்)

வென்யூ 1.2 லிட்டர் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 17.52 கிமீ (மேனுவல்)

வென்யூ 1.4 லிட்டர் டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 23.70 கிமீ (மேனுவல்)

விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி உட்பட சந்தையில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 300, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற கார்கள் சந்தையை பகிர்ந்து கொள்கின்றன.

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி விலை பட்டியல்

ஹூண்டாய் வென்யூ E S SX SX (O)
1.2 Kappa Petrol ரூ. 6.50 லட்சம் ரூ. 7.20 லட்சம்
1.0 Turbo Petrol ரூ. 8.21 லட்சம் ரூ. 9.54லட்சம் ரூ. 10.60 லட்சம்
1.0 Turbo Petrol Auto ரூ. 9.35 லட்சம் ரூ. 11.10 லட்சம்
1.4 U2 Diesel ரூ. 7.75 லட்சம் ரூ. 8.45 லட்சம் ரூ. 9.78 லட்சம் ரூ. 10.84 லட்சம்
Hyundai venue SUV officially revealed

Hyundai venue SUV officially revealed

டாட்டா மோட்டார்சின் இன்ட்ரா டிரக் பற்றிய 5 சிறப்பு அம்சங்கள்

டாடா இன்ட்ரா டிரக்

டாட்டா மோட்டார் நிறுவனத்தின் புதிய இன்ட்ரா டிரக் மாடலில் பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்ற இந்தியாவின் முதல் காம்பேக்ட் ரக டிரக் மாடலாக விளங்குகின்றது.

இந்தியாவின் முதன்மையான வர்த்தக வாகன தயாரிப்பாளரின் புதிய இன்ட்ரா டிரக்கில் இரு விதமான என்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. 800சிசி குறைந்த விலை வி10 டிரக் 1000 கிலோ சுமை தாங்குவதுடன், 1.4 லிட்டர் பெற்ற வி20 டிரக் 1100 கிலோ சுமை தாங்கும் திறனையும் பெற்றுள்ளது.

டாட்டா இன்ட்ரா டிரக் சிறப்புகள்

சிறிய ரக வர்த்தக வாகனங்களில் முன்னணி வகிக்கும் டாடா ஏஸ் டிரக்குகளை தொடர்ந்து ஏஸ் மெகா எக்ஸ்எல் மாடலுக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கார்களுக்கு இணையான தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியரில் சிறப்பான வசதிகளை கொண்டிருக்கின்றது.

என்ஜின்

இன்ட்ரா V20 டாப் வேரியன்டில் 1.4 லிட்டர் (DI) நான்கு சிலிண்டர் பிஎஸ் 6 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்ட டீசல் இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது. 1396 சிசி இயந்திரம் 52 kW (70 hp) at 4000 rpm பவரையும், மற்றும் 140 NM at 1800-3000 rpm டார்க் உருவாக்குகிறது. 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கேபிள் ஷிப்ட் வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளது.

அடுத்தப்படியாக குறைந்த விலை டாட்டா இன்ட்ரா V10 டிரக்கில் 0.8 லி என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. 800 சிசி இயந்திரம் 32 kW (40 HP) at 3750 rpm பவரையும், மற்றும் 90 NM at 1750 – 2500 rpm டார்க் உருவாக்குகிறது. 4-வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாட்டா இன்ட்ரா டிரக்

வசதிகள்

கார்களுக்கு இணையான தோற்றம் மற்றும் இன்டிரியரை பெற்றுள்ள இந்த டிரக்கில் குறிப்பாக பவர் ஸ்டீயரிங், எலக்ட்ரானிக் கன்ட்ரோல் மற்றும் கூடுதலாக ஆப்ஷனல் ஏசி, மொபைல் சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் 14 அங்குல வீல், கியர் ஷிஃப்ட் அட்வைசர் (Gear Shift Advisor ) ஆனது சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் நுட்பமாகும்.

டாட்டா இன்ட்ரா டிரக்

சுமை தாங்கும் திறன்

முன்புறத்தில் 6 பட்டைகள் கொண்டு பின்புறத்தில் 7 பட்டை கொண்ட லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷனை பெற்றுள்ள இரு வேரியன்டுகளிலும் 4316 மிமீ நீளமும், 1639 மிமீ அகலமும், 1919 மிமீ உயரமும் கொண்டுள்ளது. 1100 மற்றும் 1000 (வி10) கிலோ எடை தாங்கும் திறனுடன் வந்துள்ள இந்த டிரக்கில் 2512 மிமீ, 1602 மிமீ அகலமும் மற்றும் 463 மிமீ உயரமும் கொண்ட பே லோடு பாக்ஸ் உள்ளது.

1.1 டன் சுமை தாங்கும் திறனுடன் இன்ட்ரா வி20 வாகனத்தின் மொத்த எடை தாங்கும் திறன் 2.3 டன் (2300 GVW) ஆகும். 1 டன் சுமை தாங்குவதுடன் வி10 வாகனத்தின் மொத்த எடை தாங்கும் திறன் 2.1 டன் (2110 GVW) ஆகும்.

டாட்டா இன்ட்ரா

போட்டியாளர்கள்

டாட்டாவின் இன்ட்ரா டிரக் அசோக் லேலண்ட் தோஸ்த், பியாஜியோ போர்டர், மற்றும் மஹிந்திரா சுப்ரோ மேக்ஸி டிரக் போன்றவற்றுக்கு சவாலாக விளங்குகின்றது.

விலை பட்டியல்

டாட்டா இன்ட்ரா V20 விலை ரூ.5.85 லட்சம்

டாட்டா இன்ட்ரா V10 விலை ரூ.5.35 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

tata intra truck

ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் விபரம் வெளியானது

ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன்

கூடுதலான பாடி கிராபிக்ஸ் பெற்ற ஸ்பெஷல் ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் மாடல் விரைவில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. சாதாரன மாடலை விட சற்று கூடுதலான விலையில் கிடைக்க உள்ளது.

சமீபத்தில் ஹோண்டா சிபி ஷைன் பைக்கில் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வருவது உறுதியாகிருந்த நிலையில் , தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஸ்கூட்டர் மாடலான ஆக்டிவா 5ஜி-யிலும் லிமிடெட் எடிஷன் வெளியாக உள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி

மெக்கானிக்கல் மற்றும் என்ஜின் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. 8 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 9 என்எம் முறுக்கு விசை வெளிப்படுத்துகின்ற 109.1சிசி என்ஜினை இந்த ஸ்கூட்டர் கொண்டுள்ளது.

சில்வர் உடன் கருப்பு நிறம் , வெள்ளை உடன் கோல்டு ஆகிய இரு டூயல் டோன் நிறங்களை பெற்று STD மற்றும் DLX என இரு வேரியன்டிலும் வரவுள்ள இந்த எடிஷனில் குறிப்பாக கருப்பு நிற வீல், லிமிடெட் எடிசன் என்ற பெயருடன் கூடிய பாடி கிராபிக்ஸ் முன்புற மட்கார்டு, அப்ரான் உட்பட பாடி முழுமைக்கும் இடம்பெற்றுள்ளது.

விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.400 வரை விலை அதிகரிக்கபட்டு, ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிஷன் STD விலை ரூ. 55,032 மற்றும் ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிஷன் DLX விலை ரூ. 56,897 என நிர்ணயம் செய்யப்படலாம்.