இந்தியாவில் புதிய டுகாட்டி ஸ்கிராம்பளர் 800 பைக்குகள் அறிமுகம்

டுகாட்டி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய டுகாட்டி ஸ்கிராம்பளர் 800 வரிசை பைக்குகளில் ஐகான், டெஸர்ட் ஸ்லெட், கஃபே ரேசர் மற்றும் ஃபுல் திராட்டில் என மொத்தமாக நான்கு மாடல்கள் விற்பனைக்கு இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய டிசைன், டெக் வசதிகள் போன்றவற்றை பெற்றுள்ள இந்த மாடல்களில் ஸ்கிராம்பளர் Icon, Desert Sled மற்றும் Café Racer மாடல்கள் இன்னும் சில தினங்களில் டெலிவரி கொடுக்கப்பட உள்ளது. மற்றொரு மாடலான Full Throttle ஜூன் மாதம் முதல் வழங்கப்பட உள்ளது.

2019 டுகாட்டி ஸ்கிராம்பளர் 800 பைக் சிறப்புகள்

நான்கு வகையான வேரியன்டுகளிலும் ஸ்கிராம்பளர் 800 மாடல் ஆனது பொதுவாக  73.4hp குதிரைத்திறன் மற்றும் 67Nm டார்க் வழங்கும் 803cc L-ட்வீன் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் பாதுகாப்பு சார்ந்த கார்னரிங் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் பாஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது.

முந்தைய மாடலை விட பல்வேறு மாறுதல்களை பெற்றுள்ள ஸ்கிராம்பளர் 800 வரிசையில், புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹைட்லைட், பகல் நேர ரன்னிங் விளக்குடன் அமைந்துள்ளது. தானாகவே அனைந்து கொள்ளும் வகையிலான ஆட்டோமேட்டிக் டர்ன் இன்டிகேட்டர், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் மல்டிமீடியா ஆதரஙு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இசை, இன்கம்மிங் அழைப்புகளை பெறும் வசதி, சாட் உட்பட பல்வேறு நவீன வசதிகளை கொண்டுள்ளது.

Model Price (New Model)*
Scrambler Icon Iரூ. 7.89 லட்சம்
Scrambler Full Throttle ரூ. 8.92 லட்சம்
Scrambler Cafe Racer ரூ. 9.78 லட்சம்
Scrambler Desert Sled ரூ. 9.93 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் விலை பட்டியல் இந்தியா )

மாருதி சுஸூகி சூப்பர் கேரி டிரக்கிலும் டீசல் என்ஜின் இல்லை

இந்தியாவின் முதன்மையான பயணிகள் கார் தயாரிப்பாளரின், ஒரே வர்த்தக ரீதியான டிரக் மாடலான மாருதி சுஸூகி சூப்பர் கேரி வாகனத்தின் டீசல் என்ஜின் விற்பனையை ஏப்ரல் 2020 முதல் நிறுத்த மாருதி திட்டமிட்டுள்ளது. இனி, பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வெர்ஷனில் மட்டும் கிடைக்க உள்ளது.

சமீபத்தில் மாருதி வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி சிறிய ரக டீசல் என்ஜின் தயாரிப்பினை முற்றுலும் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பிஎஸ் 6 பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் கார்களை மட்டும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

மாருதி சுஸூகி சூப்பர் கேரி டிரக்

மாருதி சுஸூகி கமெர்ஷியல் பிரிவால் விற்பனை செய்யப்படுகின்ற குறைந்த விலை இலகுரக டிரக் மாடலில் தற்போது 24 KW குதிறைத்திறன் வெளிப்படுத்தும் 793 சிசி டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 48 KW குதிரைத்திறன் பெற்ற 1200 சிசி சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

இந்நிலையில் விலையை கட்டுபாட்டுக்குள் வைக்கும் நோக்கத்தில் பிஎஸ் 6 என்ஜின் கொண்ட பெட்ரோல் மாடலை மட்டும் பொருத்தி விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. எனவே 2020 முதல் டீசர் டிரக் மாருதி விற்பனை செய்ய வாய்ப்பில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இனி, புதிய சூப்பர் கேரி டிரக் பிஎஸ் 6 நடைமுறைக்கு ஏற்ற G12B 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 54 kW குதிரைத்திறன் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கலாம். சுஸூகி தலைவர் ஆர்.சி பார்கவா கூறுகையில், குறைந்த விலை கொண்ட சூப்பர் கேரி டிரக் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனில் அதிகப்படியான மைலேஜ் வழங்கும் வகையில் விற்பனைக்கு கிடைக்கும் என உறுதிப்படுத்தியுள்ளார்.

பிஎஸ் 6 மாருதி சுஸூகி டீசல் கார் விற்பனைக்கு கிடைக்கும்

இந்திய பயணிகள் வாகன சந்தையில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் பாரத் ஸ்டேஜ் 6 டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட கார்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் என மாருதி நிறுவன சேர்மேன் ஆர்.சி பர்கவா உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட சில மாடல்களில் மட்டும் விற்பனை செய்யபடும்.

சமீபத்தில் வெளியான புதிய சியாஸ் காரில் மாருதியின் 1.5 லிட்டர் DDiS 225 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் கொண்ட சியாஸ், எஸ் கிராஸ் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்களில் மட்டும் டீசல் என்ஜின் கிடைக்கப்பெறும்.

மாருதி சுஸூகி டீசல் கார்

இந்தியாவின் முதன்மையான மாருதி சுஸூகி நிறுவன்ம், 2020 ஏப்ரல் முதல் டீசல் என்ஜின் கார்களை விற்பனை செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளது. குறிப்பாக பிஎஸ் 6 நடைமுறைக்குப் பின்னர் டீசல் என்ஜின் கார்களின் விலை பிஎஸ் 4 மாடலை விட ரூ. 60.000 முதல் ரூ.80,000 வரை சிறிய ரக கார்களின் விலை உயரும் என்பதனால் அதிரடி முடிவை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக இந்நிறுவனத்தின் கார்களில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த என்ஜினை பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு மாற்றும் எண்ணம் இல்லை என ஃபியட் அறிவித்துள்ளது.

மாருதி சியாஸ் 1.5 லிட்டர்

இதனை தொடர்ந்து மாருதி நிறுவனம் ரூ.1000 கோடி முதலீட்டில் தயாரித்துள்ள 95 hp குதிரைத் திறன் மற்றும் 225 Nm முறுக்கு விசை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் DDiS 225 என்ஜின் முதற்கட்டமாக சியாஸ் காரில் பொருத்தப்பட்டு விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்த என்ஜின் பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றப்பட உள்ளது. ஆனால் சந்தையின் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த என்ஜின் தயாரிக்கப்பட உள்ளது.

ஆட்டோகார் ப்ரோ தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ஆர்.சி பர்கவா குறிப்பிட்டுள்ள முக்கிய விபரங்கள் சில பின் வருமாறு, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக பெட்ரோல் கார்களை மட்டும் கொண்டிருந்த மாருதி சுஸூகி, சந்தையின் சூழல் காரணமாக டீசல் கார்களை நோக்கிய பயணத்தை துவக்கினோம். ஆனால், தற்போது மீண்டும் நாங்கள் பெட்ரோல் என்ஜின் நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாடுகளால் டீசல் என்ஜின் விலை அதிகரிப்பே முக்கிய காரணமாக உள்ள நிலையில் மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையான என்ஜின் தயாரிப்பது மிக அவசியமாகின்றது.

மாருதி நிறுவனம் , பிஎஸ் 6 என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் மிக தீவரமாக செயல்பட்டு வருகின்றது. அடுத்த ஆண்டு முதல் மின்சார கார்களை விற்பனை செய்ய மாருதி சுஸூகி திட்டமிட்டுள்ளது.

டொயோட்டாவின் புதிய கிளான்ஸா காரின் டீசர் வெளியானது

கிளான்ஸா கார்

இந்தியாவின் பயணிகள் வாகன சந்தையில், புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் கார் மாடலாக டொயோட்டா கிளான்ஸா (Toyota Glanza) கார் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. டொயோட்டா-சுசூகி இடையில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் முதன்முதலாக இந்தியாவில் வெளியாக உள்ள காராக க்ளான்ஸா விளங்க உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு டொயோட்டா மற்றும் சுசூகி நிறுவனங்களுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக மாருதியின் கார்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்வதற்கும், டெயோட்டா நுட்பங்களை மாருதி பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிடப்பட்டிருக்கின்றது.

டொயோட்டா கிளான்ஸா காரில் என்னென்ன வசதிகள்

பொதுவாக மாருதி பெலினோ காரின் பேட்ஜை மட்டும் நீக்கிவிட்டு டொயோட்டா நிறுவனத்தின் பாரம்பரியத்துக்கு ஏற்ற வகையில் முன்பக்க கிரில் , பம்பர் , தோற்ற அமைப்பு மாற்றப்பட்டு விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது. அலாய் வீல் எந்த மாற்றங்களும் இல்லாமல் டொயோட்டா லோகோ மட்டும் பெற்றுள்ளது டீசர் மூலம் உறுதியாகியுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் சற்று கூடுதலான பிரீமியம் அம்சங்களை இணைத்திருக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் என்ஜின் ஆப்ஷனில் தொடர்ந்து பெலினோ காரில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மட்டும் விற்பனைக்கு வரக்கூடும். 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி என இரு கியர்பாக்ஸ் ஆப்ஷன் எதிர்பார்க்கப்படுகின்றது. 1.3 லிட்டர் டீசல் என்ஜின் கைவிடப்பட உள்ளதால், டீசல் ஆப்ஷன் குறித்த எந்த உறுதியான தகவலும் இல்லை.

Toyota Glanza G மற்றும் Toyota Glanza V என இரு வேரியன்டுகளில் மட்டும் கிடைக்க உள்ள இந்த காரின் வாராண்டி காலம் மூன்று வருடம் அல்லது 1,00,000 கிமீ வரை வழங்க உள்ளது. இதுதவிர வரும் காலத்தில் நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் இந்நிறுவனம் வழங்க வாய்ப்புகள் உள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200T அறிமுக தேதி அறிவிப்பு

நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T பைக்குகள் மே 1 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், கூடுதலாக ஃபேரிங் செய்யப்பட்ட புதிய ஹீரோ HX200R பைக் மாடலும் வெளியிடப்பட உள்ளது.

எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள அட்வென்சர் ரக புதிய எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200T பைக்குகளில் 200சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். முதன்முறையாக 2017 ஆம் ஆண்டு EICMA மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் எக்ஸ்பல்ஸ் 200 காட்சிப்படுத்தப்பட்டது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200

இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கில் கார்புரேட்டர் பெற்ற 200சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், அட்வென்ச்சர் ரக வரிசையில் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பொருத்தப்பட்டதாக அறியப்படுகின்றது.

அதிகபட்சமாக 18.4 பிஎஸ் குதிரைத்திறன் மற்றும்  17.1 Nm முறுக்கு விசை திறனை கொண்டதாக அமைந்திருக்கின்ற இந்த பைக்கில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

இரு பைக்குகளிலும் 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு உள்ளது.  இதன் மூலம் டேங்கை முழுமையாக நிரப்பினால், அதிகபட்சமாக 450 கிமீ வரை பயணிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள 190 மிமீ பயணிக்கும் சஸ்பென்ஷன் , பின்புறத்தில் வழங்கப்படுள்ள ஒற்றை ஷாக் அப்சார்பர் அதிகபட்சமாக 170 மிமீ பயணிக்கும், இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மிமீ கொண்டிருப்பதுடன் டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , ப்ளூடுத் ஆதரவு, சிங்கிள் சேனல் ஏபிஎஸ், எல்இடி ஹைட்லைட் அம்சத்தை பெற்றதாக அமைந்திருக்கும்.

ரூபாய் 1 லட்சம் விலைக்கு குறைவான அட்வென்சர் ரக மாடலாக பல்வேறு அம்சங்களை கொண்டதாக ஹீரோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்பல்ஸ்200 மற்றும் எக்ஸ்பல்ஸ்200T விளங்கும் என கருதப்படுகின்றது. அடுத்தப்படியாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முழுவதும் ஃபேரிங் செய்யப்பட்ட ஹெச்எக்ஸ்200ஆர் பைக்கினை வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக விளங்க உள்ளது.

ஏப்ரல் 2020 முதல் மாருதி சுசூகி டீசல் கார்கள் நீக்கப்படுகின்றது

இந்தியாவின் முதன்மையான பயணிகள் கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம், ஏப்ரல் 2020 முதல் டீசல் என்ஜின் கொண்ட கார்களை விற்பனையிலிருந்து நீக்க உள்ளதாக அதிரடியான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. டீசல் கார்களுக்கு மாற்றாக ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் கவனம் செலுத்த உள்ளது.

இந்தியாவில் மாருதியின் ஒட்டுமொத்த கார் விற்பனை சந்தையில் தற்போது 23 சதவிகித பங்களிப்பை டீசல் என்ஜின் பெற்ற மாடல்கள் வழங்கி வருகின்றது.

மாருதி சுசூகி டீசல் கார்கள்

இந்தியாவின் மாருதி சுசூகி தலைவர் ஆர்.சி. பர்கவா கூறுகையில், ஏப்ரல் 1, 2020 முதல் நாங்கள் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட கார்களை விற்பனை செய்ய மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தேசிய என்ஜின் என அழைக்கப்படுகின்ற ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பெரும்பாலான இந்திய கார்களில் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக மாருதியின் ஸ்விஃப்ட், இக்னிஸ், டிசையர், சியாஸ், பிரெஸ்ஸா உட்பட டாடா நிறுவனத்தின் இன்டிகா, ஜெஸ்ட், போல்ட், மற்றும் ஃபியட் நிறுவன புன்ட்டோ, லீனியா, அவன்ச்சூரா போன்றவை பெற்றிருக்கின்றது.

இந்நிலையில் அதிகப்படியான விலை உயர்வின் காரணமாக பிஎஸ் 6 நடைமுறைக்கு இந்த என்ஜின் மேம்படுத்தம் திட்டத்தை ஃபியட் கைவிட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான கார்களில் மாருதி இந்த என்ஜினை நீக்க உள்ளது.

ஆனால் மாருதி சுசூகி நிறுவனம், ரூ.1000 கோடி முதலீட்டில் உற்பத்தி செய்துள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உருவாக்கியுள்ளது. முதன்முறையாக இந்த என்ஜின் சியாஸ் காரில் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. குறிப்பிட்ட அளவில் ட்டும் இந்த என்ஜின் உற்பத்தி செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான சிறிய ரக மாருதி கார்கள் பெட்ரோல், சிஎன்ஜி, ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷனில் மட்டும் கிடைக்க உள்ளது.

மேலும் மாருதியின் வர்த்தக ரீதியான சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற சுசூகி சூப்பர் கேரி மாடலிலும் டீசல் என்ஜின் நீக்கப்பட்டு , பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வகையில் மட்டும் கிடைக்க உள்ளது.

குறிப்பாக மாருதி சியாஸ், எஸ் கிராஸ் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் மட்டும் டீசல் என்ஜினில் கிடைக்க உள்ளது.

பிரபலமான மாருதி பலேனோ டீசல் காரின் விலை உயர்ந்தது

2019-maruti-suzuki-Baleno-RS

புதிய மாருதி பலேனோ, பலேனோ ஆர்எஸ் டீசல் காரின் விலையை மாருதி சுசூகி நிறுவனம், அதிகபட்சமாக ரூ.12,000 முதல் ரூ.20,000 வரை விலையை உயர்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக பிஎஸ் 6 என்ஜின் பெற்ற டியூவல் ஜெட் ஸ்மார்ட் ஹைபிரிட் காரை விற்பனைக்கு வெளியிட்டிருந்தது.

1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டூயல் ஜெட் ஸ்மார்ட் ஹைபிரிட் மாடல் பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட மாடல் விலை ரூ.5.38 லட்சம் முதல் ரூ. 8.90 லட்சம் வரையிலான விலையில் அமைந்துள்ளது.

மாருதி பலேனோ டீசல் சிறப்புகள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹேட்ச்பேக் ரக கார் மாடல்களில் முன்னணி வகிக்கும் பலேனோ காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. மிகவும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பின் சமீபத்தில் பெற்ற இந்த கார் பல்வேறு வசதிகளை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

பலேனோ RS காரில் 100.5 ஹார்ஸ் பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெற்ற பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் எஞ்ஜினை பெற்றிருக்கும். இதன் டார்க் 150 NM ஆகும்.  பவரை எடுத்து செல்ல 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கின்றது. பலேனோ ஆர்எஸ் காரின் மைலேஜ் லிட்டருக்கு 20.1 கிமீ ஆகும்.

74 bhp ஆற்றலை வழங்கும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் டார்க் 190 NM மற்றும் மைலேஜ் லிட்டருக்கு 27.39கிமீ ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கிறது.

வேரியன்ட் விலை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)
பலேனோ Sigma ரூ. 6.74 லட்சம்
பலேனோ Delta ரூ. 7.52 லட்சம்
பலேனோ Zeta ரூ. 8.13 லட்சம்
பலேனோ Alpha ரூ. 8.73 லட்சம்
பலேனோ RS ரூ. 8.89 லட்சம்

 

பஜாஜ் பல்சர் 180F பைக்கில் கூடுதல் பாதுகாப்பு வசதி அறிமுகம்

Bajaj Auto

பஜாஜ் ஆட்டோவின், ஆஃப் ஃபேரிங் செய்யப்பட்ட பல்சர் 180F பைக்கில் தற்போது அடிப்படை பாதுகாப்பு அம்சமாக ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக 180எஃப் நியான் எடிசன் ஏபிஎஸ் அல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

முந்தைய பல்சர் 180 மாடலுக்கு மாற்றாக புதிய பல்சர் 180எஃப் (Pulsar 180F) மோட்டார் பைக் மாடலை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டது.

பஜாஜ் பல்சர் 180F ஏபிஎஸ்

ஏப்ரல் 1, 2019 முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஏபிஎஸ் பிரேக் தொடர்பான பாதுகாப்பு விதிமுறையை பெறுவதற்காக பல்சர் 180F என பைக்கில் இடம்பெற்றுள்ளது..

புதியதாக நியான் நிறம் சேர்க்கப்பட்டு அரை ஃபேரிங் செய்யப்பட்டதாக படத்தில் உள்ளது. மற்றபடி எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இடம்பெறுவதற்கான வாய்ப்பில்லை. இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள 17 PS பவர் வெளிப்படுத்துகின்ற 178 சிசி என்ஜின் டார்க்  14.2 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

முன்புறத்தில் 280 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக பல்சர் 180எஃப் மோட்டார் சைக்கிளின் விலை சுமார் 7,800 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டு, ரூ. 94,278 (எக்ஸ் ஷோரூம் புனே) ஆகும்.

 

ரூ.81,036 விலையில் பஜாஜ் அவென்ஜர் 160 விற்பனைக்கு அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், புதிய பஜாஜ் அவென்ஜர் 160 பைக் மாடல் முன்பு விற்பனை செய்யப்பட்ட அவென்ஜர் 180 பைக்கிற்கு மாற்றாக விற்பனைக்கு வெளிவந்துள்ளது. அடுத்த சில வாரங்களுக்குள் நாடு முழுவதும் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

அவென்ஜர் 220 மற்றும் அவென்ஜர் 180 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பது ஏபிஎஸ் இணைக்கப்பட்டு விலை குறைந்த க்ரூஸர் ரக பைக் மாடலாக அவென்ஜர் 160 விளங்குகின்றது.

பஜாஜ் அவென்ஜர் 160 விலை மற்றும் சிறப்புகள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற குறைந்த விலை கொண்ட க்ரூஸர் ரக மாடலாக அவென்ஜர் வரிசை மற்றும் சுசூகி இன்ட்ரூடர் பைக் மாடல்கள் விளங்குகின்றது. தற்போது வந்துள்ள 160 சிசி என்ஜின் பெற்ற மாடல் முந்தைய ஏபிஎஸ் அல்லாத அவென்ஜர் 180 மாடலை விட ரூ.7000 விலை குறைவாக அமைந்துள்ளது.

பல்சர் என்எஸ் 160 பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற என்ஜினில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல், அவென்ஜர் 160-ல் அதிகபட்சமாக 15.5hp குதிரைத்திறன் மற்றும் 14.6 Nm முறுக்குவிசை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

அவென்ஜர் 180 மாடலின் வசதிகளை தொடர்ந்து பெற்றுள்ள அவென்ஜர் 160-ல் குறிப்பாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. முன்பாக இந்த பைக் வரிசையில் இடம்பெற்றிருந்த அவென்ஜர் 180 பைக் கைவிடப்பட்டுள்ளது.

பஜாஜ் அவென்ஜர் 160 பைக்கின் விலை ரூ.81,036 (விற்பனையக விலை) புனே ஆகும். இனி, இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸர் என்ற பெருமையை இந்த பைக் பெற்றுள்ளது.

₹ 9.46 லட்சத்தில் புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் வெளியானது

பாரம்பரிய வடிவ தாத்பரியங்களை பின்பற்றி வந்துள்ள புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் பைக் இந்தியாவில் ரூபாய் 9.46 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 97 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் என்ஜினை கொண்டுள்ளது.

1939 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த ஸ்பீடு ட்வீன் 5டி மாடலின் உந்துதலில் ஸ்ட்ரீட் ட்வீன் மற்றும் தரக்ஸ்டன் ஆர் மாடல்களின் கூட்டு வடிவத்தை பின்பற்றியதாக இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின்

1,200 சிசி பேரலல் ட்வின் லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 97 பிஎச்பி குதிரைத் திறன், 112 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்துகின்றது. 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ரைடு பை ஒயர் தொழில்நுட்பமும், ரெயின், ரோடு, மற்றும் ஸ்போர்ட் மூன்று விதமான நிலைகளில் இயக்கும் டிரைவிங் மோடுகளும் உள்ளன.

இந்த பைக்கில் 41 மிமீ காட்ரீட்ஜ் முன்புற ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் இரட்டை சாக் அப்ஷார்பர் கொண்டு, முன்சக்கரத்தில்  305மிமீ இரண்டு டிஸ்க்குளும், பின்சக்கரத்தில் 220மிமீ சிங்கிள் டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டமும் உள்ளது. இரு டயர்களும் 17 அங்குல வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் பைக் ரூபாய் 9.46 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம் ) கிடைக்கும்.