பெட்ரோல் என்ஜினுடன் 2019 சுசுகி கேரி மினி டிரக் அறிமுகமானது

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி சுசுகி சூப்பர் கேரி மினி டிரக் மாடலின் அடிப்படையில் கிடைக்கின்ற சுசுகி கேரி தற்போது 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் கேரி டிரக் உற்பத்தி செய்யப்பட்டு 100 நாடுகளுக்க மேல் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், இந்த இலகு ரக டிரக் 145 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மொத்தமாக இதுவரை சர்வதேச அளவில் 20 லட்சம் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2019 சுசுகி கேரி மினி டிரக்

மாருதி சியாஸ், எர்டிகா கார்களில் பொருத்தப்பட்டுள்ள அதே பெட்ரோல் என்ஜின் K15B-C என தற்போது கேரி மினி டிரக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 97 PS பவர் மற்றும் 135 Nm டார்க் வழங்குகின்றது.

1 டன் எடை தாங்கும் திறனை கொண்ட குறைந்த விலை மினி டிரக் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வரும் ஏப்ரல் 2020 முதல் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட சூப்பர் கேரி டிரக்கினை கைவிட உள்ள மாருதி நிறுவனம்., தற்போது இந்தோனேசியா சந்தையில் வெளியிடப்பட்ட மாடலின் அடிப்படையிலே பெட்ரோல் என்ஜினை பொருத்தி கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனை வழங்க உள்ளது.

இந்தியாவில் மாருதியின் சூப்பர் கேரி மினி டிரக் அமோக ஆதரவை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவின் 2 சதவீத வர்த்தக வாகன சந்தையை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

மே 20: ஸ்டைலிஷான சுசுகி ஜிக்ஸர் 250 பைக் களமிறங்குகின்றது

இந்தியாவில் சுசுகி மோட்டார்சைக்கிள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், அடுத்த பிரிமியம் மாடலாக 250சிசி என்ஜின் பெற்ற சுசுகி ஜிக்ஸர் 250 விற்பனைக்கு மே 20 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

முதற்கட்டமாக நேக்டு வெர்ஷன் அல்லது முழுமையான ஃபேரிங் செய்யப்பட்ட சுசுகி ஜிக்ஸர் SF 250 மாடலை விற்பனைக்கு இந்நிறுவனம் வெளியிடலாம் எதிர்பார்க்கப்படுகின்றது.ஜிக்ஸர் 150 வெற்றியை தொடர்ந்து இந்த புதிய மாடல் வெளியாகின்றது. விற்பனையில் உள்ள யமஹா FZ25, ஃபேஸர் 25 மாடலுக்கு நேரடியான போட்டியாக விளங்கும் என கருதப்படுகின்றது.

சுசுகி ஜிக்ஸர் 250 பைக்கின் எதிர்பார்ப்புகள்

ஜப்பானை தலைமையிடமாக கொண்ட சுசுகி நிறுவன விற்பனை சில வருடங்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சுஸூகி ஆக்செஸ் ஸ்கூட்டர் மற்றும் ஜிக்ஸர் வரிசை நல்லதொரு வளர்ச்சியை இந்நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.

ஆனால் இந்த மோட்டார்சைக்கிள் பற்றி எந்தவொரு உறுதிப்படுத்தப்பட்ட பவர் மற்றும் டார்க் விபரங்கள் வெளியாகத நிலையில் இந்த பைக் இந்நிறுவனத்தின் பிரபலமான பிரிமியம் ரக மாடல்களான GSX-S750 மற்றும் GSX-S1000 தோற்ற உந்துதலை பின்புலமாக கொண்டிருக்கும் என கருதப்படுகின்றது.

இந்தியாவில் மே 20, 2019-ல் விற்பனைக்கு புதிய பைக் ஒன்றை சுசுகி வெளியிடுவது தற்போது உறுதியாகியுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200T பைக் முன்பதிவு துவங்கியது

மே 1 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள அட்வென்ச்சர் ரக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் டூரிங் ரக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T பைக்கிற்கான முன்பதிவு பல்வேறு டீலர்களில் தொடங்கப்பட்டுள்ளது. பைக்கிற்கான முன்பதிவு கட்டணமாக ரூ.5000 செலுத்தலாம் என குறிப்பிடப்படுகின்றது.

எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மாடலாக ஹீரோ எக்ஸ்பல்ஸ் வரிசை மாடல்கள் விளங்க உள்ளன. இந்த பைக்கில் 200சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 சிறப்புகள்

ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் கொண்டிருப்பதனால் பவர் அதிகரிக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகள் உள்ளது. அதிகபட்சமாக 18.4 ps பவர் மற்றும்  17.1 Nm  டார்க் திறனை கொண்டதாக விளங்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

190 மிமீ பயணிக்கும் சஸ்பென்ஷன் , பின்புறத்தில் வழங்கப்படுள்ள ஒற்றை ஷாக் அப்சார்பர் அதிகபட்சமாக 170 மிமீ பயணிக்கும், இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மிமீ கொண்டிருப்பதுடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், எல்இடி ஹைட்லைட் கொண்டதாக இருக்கலாம்.

ரூ.1 லட்சம் முதல் ரூ. 1.30 லட்சத்துக்கும் குறைவான விலையில் ஹீரோவின் அட்வென்ச்சர் பைக் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் டூரிங் ரக எக்ஸ்பல்ஸ் 200டி விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மேலதிக விபரங்கள் நாளை விற்பனைக்கு வரும்போது வெளியாகும்.

 

 

மாருதி சுசுகி எர்டிகா காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அறிமுகம்

தற்போது பொருதப்பட்டிருந்த 1.3 லிட்டர் ஃபியட் என்ஜினுக்கு மாற்றாக 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பெற்ற மாருதி சுசுகி எர்டிகா MPV மாடல் 9.68 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக இந்த என்ஜின் சியாஸ் காரில் அறிமுகம் செய்யப்பட்டது.

சமீபத்தில் ஏப்ரல் 2020 முதல் டீசல் என்ஜின் பெற்ற கார்களை விற்பனை செய்யப் போவிதில்லை என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்த நிலையில் சுசுகி புதிய காரை தற்போது இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

மாருதி சுசுகி எர்டிகா டீசல் விலை

1000 ரூபாய் கோடி முதலீட்டில் தனது சொந்த முயற்சியில் மாருதி சுசுகி உருவாக்கியுள்ள புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜினுக்கு DDiS225 என பெயரிட்டுள்ளது. இந்த என்ஜின் முதன்முறையாக சியாஸ் காரில் விற்பனைக்கு வந்திருந்தது. எர்டிகாவின் VDi, ZDi மற்றும் ZDi+ வேரியன்டுகளில் மட்டும் இந்த என்ஜினும், பேஸ் வேரியன்ட் LDi காரில் 1.3 லிட்டர் என்ஜின் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய என்ஜின் பெற்ற மாடல் முந்தைய வேரியன்டை விட ரூ.29,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

95 ஹெச்பி பவர் மற்றும் 225 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெற்ற டர்போசார்ஜ்டு டீசல் என்ஜினை மாருதி சுசூகி நிறுவனம் DDiS 225 என்ற பெயரில் குறிப்பிடுகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் ஆராய் சான்றிதழ் படி எர்டிகா கார் மைலேஜ் லிட்டருக்கு 24.20 கிமீ ஆகும். இது முந்தைய 1.3 லிட்டர் மாடலை விட 1.27 கிமீ குறைவாகும்.

புதிதாக என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ள நிலையில், தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியரில் எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை.

எர்டிகா கார் விலை பட்டியல்

வேரியன்ட் எர்டிகா 1.5
Ertiga VDi ரூ. 9.86 லட்சம்
Ertiga ZDi ரூ. 10.69 லட்சம்
Ertiga ZDi+ ரூ. 11.20 லட்சம்

(Ex-showroom delhi)

தல அஜித் பைக் மற்றும் கார்கள் #HBDIconicThalaAJITH

நம்ம தல அஜித்குமார் ரேஸ் பிரியர் மிகசிறப்பாக வாகனங்களை இயக்குவதில் வல்லவர் என்பது நான் அறிந்ததே அஜித் அவர்களின் கார் மற்றும் பைக்குகளை தெரிந்து கொள்ளலாம்.

தல அஜித்

கார்களை விட பைக்கிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் தல அஜித் அவரிடம் உள்ள கார் மற்றும் பைக்குகளின் விவரம்

1. ஹோண்டா அக்கார்டு

சொகுசு மற்றும் சக்திவாய்ந்த என்ஜினுடன் விளங்கும் ஹோண்டா அக்கார்டு காரில் 275பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் முறுக்குவிசை 339என்எம் ஆகும். 5 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ள அக்கார்டு காரின் விலை ரூ.30 லட்சம் ஆகும்.

2. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

சொகுசு பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 740Li காரில் 326பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இன்லைன் 6 சிலிண்டர் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.87 லட்சம் ஆகும்.

தல அஜித் பைக்

1. அப்ரிலியா கேப்போனார்ட் 

சமீபத்தில் தல அஜித் அவர்கள் வாங்கிய இந்த அப்ரிலியா கேப்போனார்ட்  சூப்பர் பைக்கில் 128பிஎச்பி ஆற்றலை தரவல்ல 1200சிசி என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்ட 5.4 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். இதன் டாப் ஸ்பீடு வேகம் மணிக்கு 225கிமீ ஆகும்.
முழுதும் வடிவமைக்கப்பட மாடலாக இறக்குமதி செய்யப்படும் அப்ரிலியா கேப்போனார்ட் பைக் விலை ரூ.19லட்சம் ஆகும்.

2. பிஎம்டபிள்யூ S1000 RR

பிஎம்டபிள்யூ மோட்டார்டு S1000 RR பைக்கில் சக்திவாய்ந்த 193பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்த்க்கூடிய 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்ட 3 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். பிஎம்டபிள்யூ S1000 RR டாப் ஸ்பீடு வேகம் மணிக்கு 320கிமீ ஆகும்.
முழுதும் வடிவமைக்கப்பட மாடலாக இறக்குமதி செய்யப்படும் பிஎம்டபிள்யூ S1000 RR பைக் விலை ரூ.27.5லட்சம் ஆகும்.

3. பிஎம்டபிள்யூ K1300 S

பிஎம்டபிள்யூ மோட்டார்டு K1300 S பைக்கில் சக்திவாய்ந்த 170பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்த்க்கூடிய 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்ட 2.8 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். பிஎம்டபிள்யூ S1000 RR டாப் ஸ்பீடு வேகம் மணிக்கு 273கிமீ ஆகும்.

பிஎம்டபிள்யூ K1300 S பைக் விலை ரூ. 21.8 லட்சம் ஆகும்.

4. கவாஸாகி நின்ஜா ZX 14R

கவாஸாகி நின்ஜா ZX 14R பைக்கில் சக்திவாய்ந்த 209பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்த்க்கூடிய 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.  கவாஸாகி நின்ஜா ZX 14R டாப் ஸ்பீடு வேகம் மணிக்கு 300கிமீ ஆகும்.

கவாஸாகி நின்ஜா ZX 14R பைக் விலை ரூ. 17.66 லட்சம்.

நம்ம தல  அஜித் கார் மற்றும் பைக் விபரங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்….. பல்லாண்டு தல அஜித் வாழ வாழ்த்துக்கள்…

Thala Ajith cars and bikes

டொயோட்டாவின் கிளான்ஸா காரின் படங்கள் வெளியானது

மாருதி சுசுகி பலெனோ காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட டொயோட்டா கிளான்ஸா காரின் முழுமையான தோற்ற படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் இன்டிரியர் தொடர்பான படங்கள் வெளியாகவில்லை.

உற்பத்தி நிலை படமாக வந்துள்ள இந்த காரின் தோற்ற அமைப்பில் ரேடியேட்டர் கிரில் மாற்றம் மற்றும் லோகோ தவிர வேறு எந்த மாற்றங்களும் பலேனோ காரிலிருந்து மேற்கொள்ளப்படாமல் கிளான்சா காரின் முன்புற தோற்றம் அமைந்துள்ளது.

கிளான்ஸா காரின் புகைப்படம்

டொயோட்டா-சுசுகி நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதல் காராக பெலினோ காரின் அடிப்படையிலான முதல் டொயோட்டாவின் காரினை க்ளான்ஸா என பெயிரிட்டுள்ளது.

புதிதாக வெளிவந்துள்ள படங்களில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படாமல் பலேனோ காரின் மெட்டல் சீட், அலாய் வீல் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. அடுத்த முன்புற ரேடியேட்டர் கிரில் டொயோட்டா குடும்பத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்றதாகவே அமைந்திருக்கின்றது. இன்டிரியர் தொடர்பான எந்த படங்களும் வெளியாகவில்லை.

5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி என இரு கியர்பாக்ஸ் ஆப்ஷனில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்றிருக்கும். இந்த காரில் டொயோட்டா Glanza G மற்றும் டொயோட்டா Glanza V என இரு வேரியன்டுகள் மட்டும் கிடைக்க உள்ளது. பலேனோ, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் கார்களை நேரடியாக எதிர்க்க உள்ளது.

5 லட்ச ரூபாய் கார் இனி 12 லட்சம் என அறிவித்த மாருதி சுசுகி

வரும் காலங்களில் சிறிய ரக பெட்ரோல் என்ஜின் கார்கள் எலெக்ட்ரிக் கார்களாக மாறும்போது ரூ.5 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக ரூபாய் 12 லட்சமாக உயரக்கூடும் என மாருதி சுசுகி அறிவித்துள்ளது. இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளராக இந்நிறுவனம் விளங்கி வருகின்றது.

முதல் மாருதி நிறுவன எலெக்ட்ரிக் கார் மாடலாக மாருதி சுசுகி வேகன்ஆர் EV விளங்க உள்ளது. இந்த காரானது, தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

எலெக்ட்ரிக் கார் விலை

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் சந்தையின் வளர்ச்சி மிகவும் சவாலாகவே இருக்கும் என மாருதி வெளியிட்ட சில தகவல்களின் அடிப்படையில் முக்கிய விபரங்களை இதன் வாயிலாக வெளியாகியுள்ளது.

எலெக்ட்ரிக் கார் சந்தைக்கு தேவையான சார்ஜிங் நிலையதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் போதுமானதாக இல்லை என குறிப்பிடுகின்றது.

தற்போது இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் எலெக்டரிக் கார்களுக்கு 12 சதவீதம் மட்டும் வரி விதிக்கபடுகின்ற நிலையில், தற்போது சந்தையில் 5 லட்சம் விலையில் கிடைக்கின்ற பெட்ரோல் கார்கள், எலெக்ட்ரிக் வெர்ஷனில் மாறும்போது 12 லட்சமாக உயரும், மேலும் மத்திய அரசின் FAME II ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ்  தனிநபர் வாகனங்களுக்கு வழங்கப்படவில்லை. தற்போது டாக்ஸி பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது.

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள மாருதி சுசுகி ஆலையில் டொயோட்டா மற்றும் சுசுகி கூட்டணியில் லித்தியம் ஐயன் பேட்டரிகள் தயாரிக்கப்பட உள்ளது. மேலும் எதிர்காலத்தில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களுக்கான ஆய்வு பனிகளிலும் இரு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றது.

சென்னையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக விபரம்

வரும் ஜூன் மாதம் சென்னையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களான ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. கடந்த 2018 முதல் பெங்களூருவில் ஏத்தர் எனெர்ஜி நிறுவன ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்தியாவின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் பின்புலத்தில் செயல்படும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் (Ather Energy) எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை தயாரித்து வருகின்றது.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

பெங்களூர் நகரின் 35 இடங்களில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் நிர்வகித்து வரும், இந்நிறுவனம், விரைவில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் அதேசமயம் வரும் 2022 ஆம் ஆண்டுக்கு முன்பாக, நாட்டின் முக்கியமான 30 நகரங்களில், 6,500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.

ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும், 5kW BLDC (brushless direct current) எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 340 ஸ்கூட்டரில் 4.4 kw (5.9 PS) பவர், 20 NM டார்க் திறனையும், இந்த ஸ்கூட்டரில் முழுமையான ஒரு முறை சார்ஜ் செய்தால், 60 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கலாம். ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டர் ஆகும். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 5.1 விநாடிகள் தேவைப்படும்.

ஏத்தர் 450 ஸ்கூட்டரில் 5.4 kw (7.3 PS) பவர்,  20.5 NM வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையான ஒரு முறை சார்ஜ் செய்தால், 75 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர் ஆகும். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.

2.4 kWh லித்தியம் இயான் பேட்டரி 50,000 கிலோ மீட்டர் வரை உழைக்கும் திறனை கொண்டதாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரி பேக் மிக சிறப்பான பாதுகாப்பு அம்சமாக IP67 எனப்படும், தூசு மற்றும் நீரினால் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பேட்டரி விளங்கும்.

தற்போது இந்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் சென்னை வாடிக்கையாளர்களுக்கு ப்ரீ புக்கிங் செய்யும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏத்தர் 340 மின்சார ஸ்கூட்டர் விலை ரூ. 1.13 லட்சம்

ஏத்தர் 450 ஸ்கூட்டர் ஸ்கூட்டர் விலை ரூ. 1.28 லட்சம்

(ஆன் ரோடு பெங்களூரு)

பஜாஜ் ஆட்டோ வெளியிட்ட பல்சர் 150 நியான் ஏபிஎஸ் மாடல்

இந்தியாவில் ரூ.67,386 விலையில் பஜாஜ் பல்சர் 150 நியான் ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஏபிஎஸ் அல்லாத மாடலை விட ரூ. 2000 மட்டும் விலை உயர்த்தப்பட்டு வேறு எந்த மாற்றங்களையும் பெறாமல் அமைந்துள்ளது.

பல்சர் 150 நியான் பைக் மாடலில் நியான் சிவப்பு, நியான் மஞ்சள் மற்றும் நியான் சில்வர் ஆகிய நிறங்கள் கிடைக்க உள்ளது. பல்சர் 150 நியான் கடந்த நவம்பர் 2018-ல் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது,

பஜாஜ் பல்சர் 150 நியான் ஏபிஎஸ்

14 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 13 என்எம் இழுவைத் திறன் வழங்கும் 149.5சிசி இரு வால்வுகளை கொண்ட இரட்டை ஸ்பார்க் பிளக் பெற்ற மாடலாக விளங்குகின்றது.

முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் பெற்றுள்ள இந்த மாடலில் தற்போது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் 5 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்ஸர் வரிசையில் தற்போது RS200, NS200, NS160, 220F, 180F, 150, 150 ட்வீன் டிஸ்க்,150 கிளாசிக் மற்றும்  135LS என மொத்தம் 9 மாடல்கள் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் பஜாஜ் பல்சர் NS 160 அறிமுகம்

பஜாஜ் பல்சர் என்எஸ்160

 

பல்சர் என்எஸ்200 பைக்கின் அடிப்படையில் வெளியான பஜாஜ் பல்சர் NS 160 பைக்கினில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் எனப்படுகின்ற பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு இணைக்கப்பட்டு ரூ. 92,595 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பைக்கிற்கு சவாலாக 200சிசி பெற்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர், டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V, அப்பாச்சி RTR 160, ஹோண்டா சிபி ஹார்னெட் மற்றும் சுசூகி கிக்ஸ்ர் பைக்குகள் விளங்குகின்றது.

பஜாஜ் பல்சர் NS 160 ஏபிஎஸ்

160.3cc, 4-வால்வுகளை பெற்ற சிங்கிள் சிலிண்டர் என்ஜினுடன் 15.5 hp குதிரைத்திறன் மற்றும் 14.6Nm முறுக்கு விசை வெளிபடுத்தும். இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் , பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரை பெற்றுள்ள இந்த மாடலின் முன்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டிருக்கின்றது.

முந்தைய ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் அல்லாத மாடலை விட ரூ.  6656 வரை விலை உயர்த்தி, தற்போது பஜாஜ் பல்சர் NS 160 பைக் விலை ரூபாய் 92,595 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏபிஎஸ் பொருத்தபட்ட பல்சர் 180F மாடலை வெளியிட்டிருந்தது.