டெக் மையத்தை ஜெர்மனியில் திறந்த ஹீரோ மோட்டோகார்ப்

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டெக் மையம் ஜெர்மனியில் உள்ள முனிச் அருகே திறக்கப்பட்டுள்ளது. Hero Tech Center Germany GmbH என பெயரிடப்பட்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப்

இந்தியாவை தவிர்த்த மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை ஜெர்மனி நாட்டில் உள்ள முனிச் நகரின் அருகாமையில் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் ஹோண்டா நிறுவனம் பிரிந்த பின்னர், தொழிற்நுட்பம் சார்ந்த மேம்பாடுகளுக்கான Center of Innovation and Technology (CIT) மையத்தை 2016 ஆம் ஆண்டில் ஜெயப்பூரில் தொடங்கியது.

இந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200, எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200T உள்ளிட்ட மாடல்கள் தயாரிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்து வரவுள்ள பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு என தொடங்கப்பட்டுள்ள ஹீரோ டெக் மையத்தின் தலைமை அதிகாரியாக டெக்னாலஜி அதிகாரி மார்கஸ் நிர்வகிப்பார்.

இந்த மையத்தில் வரவுள்ள பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள் மாடல்கள் மற்றும் டாக்கர் ரேலிக்கான ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் டீம் ரேலி மாடல்களை உற்பத்தி செய்ய மற்றும் நுட்பம் சார்ந்த மேம்பாடுகளை வழங்க இந்த மையம் செயற்படுத்தப்பட உள்ளது.

யமஹா எம்டி 15 பைக்கின் விபரம் வெளியானது

யமஹா எம்டி 15 பைக் ஹெட்லைட்

Yamaha MT-15 : இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள புதிய யமஹா எம்டி 15 பைக்கின் பவர் மற்றும் டார்க் உட்பட பல்வேறு முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளது. யமஹா எம்டி-15 பைக் விலை ரூ.1.27 லட்சத்தில் தொடங்க வாய்ப்புள்ளது.

யமஹா எம்டி 15

வரும் பிப்ரவரி இறுதி வாரம் அல்லது மாரச் மாத தொடக்க வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்டைலிஷான யமஹா எம்டி 15 பைக்கின் CVMR அனுமதி சான்றிதழ் வாயிலாக முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளது.

ஆர்15 வெர்ஷன் 3.0  பைக்கில் இடம்பெற்றுள்ள என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல், எம்டி-15 பைக்கில் 19.1 ஹெச்பி பவர், மற்றும் 14.7 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் புதிய 155சிசி எஞ்சின் இடம்பெற்று 6 வேக கியர்பாக்சுடன் சிலிப்பர் கிளட்ச் வசதியை பெற்றிருக்கும்.

யமஹா MT15 பைக்

MT-15 பைக்கின் நீலம் 2,020மிமீ ,  800மிமீ அகலம் மற்றும் 1,070மிமீ உயரம் கொண்டுள்ளது. இந்த பைக்கின் வீல்பேஸ்  1,335 மிமீ ஆகும். பைக்கின் மொத்த வாகனத்தின் எடை 238 கிலோ ஆகும். கெர்ப எடை 138 கிலோ கிராம் ஆகும்.

சர்வதேச மாடலில் உள்ள எல்இடி ஹெட்லைட், பிரேக் ஆப்ஷனுடன் டுயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இடம்பிடித்திருக்கலாம். ஆனால் இந்த பைக்கில் யூஎஸ்டி ஃபோர்க்கு சஸ்பென்ஷனுக்கு மாற்றாக சாதாரன டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனை பெற்று விலை குறைப்பிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த மாற்றம். பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை இந்த எம்டி 15 பைக் இந்தியாவில் பெற்றிருக்கும்.

யமஹா எம்டி 15 பைக்கின் விலை ரூ.1.27 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் யமஹா டீலர் சந்திப்பில் இந்த பைக் குறித்தான டீசர் வெளியிடப்பட்டிருந்த நிலையில் , சில முன்னணி டீலர்கள் முன்பதிவை தொடங்கியுள்ளது.

Yamaha MT-15 image gallery

வாகன தயாரிப்பில் நெ.1 நிறுவனமாக வோக்ஸ்வேகன்

 

ஜெர்மனி நாட்டின் வோக்ஸ்வேகன் நிறுவனம், உலகின் முதன்மையான வாகன தயாரிப்பாளராக விளங்குகின்றது. கடந்த 2018-ல் 10.83 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

மோட்டார் வாகன விற்பனை

கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 70 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் முதன்மையான வாகன தயாரிப்பாளராக விளங்கி வந்தது. 2008 ஆம் ஆண்டில் முதல் சரிவை சந்தித்த ஜிஎம் நிறுவனம், டொயோட்டா மோட்டார் கார்ப்ரேஷன் நிறுவனத்திடம் முதலிடத்தை இழந்தது.

ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக வோக்ஸ்வேகன் நிறுவனம், முதலிடத்தை கைப்பற்றி உலகின் முதன்மையான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் வோக்ஸ்வேகன் 10.83 மில்லியன் வாகனங்களை சர்வதேச அளவில் விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் மேன் மற்றும் ஸ்கேனியா டிரக் விற்பனையும் அடங்கும்.

இரண்டாவது இடத்தில் ரெனோ-நிசான்-மிட்ஷூபிசி கூட்டு நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை எண்ணிக்கை சுமார் 10.76 மில்லியன் ஆகும்.

மூன்றாவது இடத்தில் டொயோட்டா மோட்டார் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை சர்வதேச அளவில் 10.59 மில்லியன் வாகனங்களாகும்.

இந்திய அளவில் மாருதி சுஸூகி நிறுவனம் முதன்மையான வாகன தயாரிப்பாளராக விளங்குகின்றது.

Tata Nano : டாடா நானோ கார் சகாப்தம் முடிவுக்கு வருகின்றதா ?

2009 ஆம் ஆண்டு உலகின் ”மலிவான கார்” என அறிமுகம் செய்யப்பட்ட டாடா நானோ கார் உற்பத்தி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 2020 முதல் நானோ கார் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது.

டாடா நானோ கார்

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா அவர்களின் முயற்சியால், இந்திய குடும்பங்களின் விலை குறைந்த காராக அறிமுகம் செய்யப்பட்ட டாடா நானோ அதிகப்படியான தொழிற்நுட்ப கோளாறுகளை அறிமுகம்  முதல் எதிர்கொண்ட நிலையில் போதிய வரவேற்பினை பெறாமல் போனது. இந்தியாவில் அறிமுகமான சமயத்தில் நானோ வெறும் ரூ. 1,12,735 விலையில் உலகின் விலை குறைந்த கார் மாடலாக இருந்தது.

அதன்பிறகு பல்வேறு மாற்றாங்களை பெற்ற டாடா ஜென்எக்ஸ் நானோ கார் தற்போது ரூ. 2.34 லட்சம் முதல் ரூ. 3.41 வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டில்  ஜூன் மாதம் வரை மொத்தம் 275 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு வெறும் மூன்று கார்கள் மட்டும் விற்கப்பட்டுள்ளன.

புதிய பாரத் கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு மற்றும் பிஎஸ் 6 மாசு வெளியேற்றக் கொள்கையினை நானோவில் செயல்படுத்த அதிகபட்டியான செலவு ஆகும் என்பதால் நானோவின் உற்பத்தியையே நிறுத்துகிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.

டாடா மோட்டார்ஸ் செய்தி தொடர்பாளர் கூறும் போது, அடுத்த ஆண்டு முதல் நானோ கார் பாதுகாப்பு விதிமுறைகள் எதிர்கொள்ள இருப்பதால் இதன் விற்பனை நிறுத்தப்படுவதாக தெரிவித்தார்.

Kia Motors : கியா SP2i எஸ்யூவி சோதனை உற்பத்தி தொடங்கப்பட்டது

ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமான கியா மோட்டார்ஸ் இந்தியா ஆலையில் கியா SP2i எஸ்யூவி சோதனை உற்பத்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். முதல் மாடலாக இந்திய சந்தையில் கியா எஸ்பி2ஐ விற்பனைக்கு வரவுள்ளது.

கியா மோட்டார்ஸ் இந்தியா

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தப்பூர் மாவடத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கியா மோட்டார்ஸ் ஆலை 536 ஏக்கர் பரப்பளவில் ஆண்டிற்கு 3,00,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக கட்டமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டின் மத்தியில் முழுமையான பயன்பாட்டுக்கு வரவுள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனம், முதல் வருடத்தில் உற்பத்தி எண்ணிக்கை 1 லட்சம் ஆக தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து படிப்படியாக உயர்த்தப்பட்டு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 3,00,000 கார்களை உற்பத்தி செய்ய கியா திட்டமிட்டு உள்ளது.

கொரியா நாட்டின் கியா நிறுவனம், பெட்ரோல், டீசல் கார்கள் மற்றும் எலக்ட்ரிக் கார்களை இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய உள்ளது. இந்நிறுவனத்தின் 15வது சர்வதேச உற்பத்தி ஆலையாக அமைந்திருக்கின்றது. இந்த ஆலை அறிமுகத்தின் போது எலக்ட்ரிக் பவர்டெரியன் பெற்ற கியா சோல் மாடலை ஆந்திர அரசின் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளது.

Kia SP2i

கடந்த 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிக்கு வைக்கபட்ட கியா SP கான்செப்ட் மாடலை அடிப்படையாக Kia SP2i எஸ்யூவி முதல் மாடலாக இந்திய சந்தையில் வெளியிடப்பட உள்ளது.

கியா நிறுவனத்தின் பாரம்பரிய புலியின் மூக்கை போன்ற கிரில் அமைப்பை பெற்றதாக கொண்ட பம்பரில் அமைந்துள்ள புராஜெக்டர் ஹெட்லைட் அமைப்பினை பெற்றுள்ளது. இந்த எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனை பெற்றிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கியா SP2i  எஸ்யூவி விலை ரூ.9 லட்சம் முதல் ரூ. 16 லட்சத்தில் அமைந்திருக்கலாம்.

ரூ.17.45 லட்சத்தில் மஹிந்திரா ஃப்யூரியோ டிரக் விற்பனைக்கு வந்தது

இடைநிலை வர்த்தக வாகனங்கள் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மஹிந்திரா ஃப்யூரியோ டிரக் மாடலின் தொடக்க விலை ரூபாய் 17.45 லட்சத்தில் தொடங்குகின்றது. ரூ. 600 கோடி முதலீட்டில் இடைநிலை வர்த்தக வாகனங்களை மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் பிரிவு உருவாக்கியுள்ளது.

மஹிந்திரா ஃப்யூரியோ டிரக்

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ரூ.600 கோடி முதலீட்டில் மஹிந்திரா டிரக் நிறுவனம், 500 மஹிந்திரா என்ஜினியர்கள் மற்றும் 180 உதிரிபாகங்கள் சப்ளையர்கள் உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இடைநிலை வரத்தக வாகனங்கள் பிரிவில் , அதாவது 8 டன் முதல் 16 டன் வரை எடை தாங்கும் திறனை பெற்ற டிரக்குகளின் வரிசைய ஃப்யூரியோ என்ற பெயரில், தனது பிளாசோ டிரக் மாடல்களுக்கு கீழாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய சாலைகளில் சுமார் 17 லட்சம் கிலோமீட்டர்களுக்கு அதிகமாக சோதனை செய்யப்பட்டுள்ள ஃப்யூரியோ டிரக்குகள் மிக சிறப்பான டார்க் மற்றும் செயல்திறன் மிக்கவையாக விளங்குவதுடன், மஹிந்திராவின் அதிக லாபம் அல்லது டிரக்கினை திரும்ப கொடுங்கள் (More Profit or Truck Back) என்ற நோக்கத்தை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரசத்தி பெற்ற கார் மற்றும் டிசைன் நிறுவனமாக விளங்கும் இத்தாலியின் மஹிந்திரா பினின்ஃபாரீனா உதவியுடன் கூடிய இன்டிரியரை இந்த டிரக் பெற்றுள்ளதால் மிக சிறப்பான வசதிகள் மற்றும் சொகுசு தன்மையை ஃப்யூரியோ கேபின் வழங்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.

பாரத் ஸ்டேஜ் 4 மாசு விதிகளுக்கு உட்பட்ட 138 bhp பவர் மற்றும் 500 Nm டார்க் வழங்குகின்ற  mDi டெக் டீசல் என்ஜினில் ஃப்யூவல் ஸ்மார்ட் நுட்பத்தை கொண்டுள்ளது. இதன் காரணமாக சிறப்பான மைலேஜ் வழங்குகின்ற டிரக் மாடலாக ஃப்யூரியோ விளங்க உள்ளது.

மஹிந்திரா நிறுவனம், வெளியிட்டுள்ள ஃப்யூரியோ டிரக்குகள் பராமரிக்க குறைந்த கட்டணம் மட்டும் போதுமானதாகும். மேலும் இந்த டிரக்கிற்கு 5 வருடம் அல்லது 5,00,000 கிமீ வாரண்டி, மேலும் இந்த டிரக்குகளுக்கு 5 வருடம் அல்லது 5 லட்சம் கிமீ சர்வீஸ் வழங்கப்படுகின்றது.

மஹிந்திரா ஃப்யூரியோ 12 டன் 19ft HSD – ரூ.17.45 லட்சம்

மஹிந்திரா ஃப்யூரியோ 14 டன் 19ft HSD – ரூ.18.10 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் புனே)

இந்தியாவின் முதல் ஏஎம்டி டிரக் அறிமுகம் – ஐசர் ப்ரோ 3016 AMT

eicher pro 3016 amt truck launched

ஐசர் மோட்டார்ஸ் நிறுவனம், முதன்முறையாக இந்திய சந்தையில் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற ஐசர் ப்ரோ 3016 AMT மாடலை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேனுவல் கியர் இல்லாத முதல் டிரக் மாடலாக விளங்குகின்றது.

ஐசர் ப்ரோ 3016 AMT

ஓட்டுநர்கள் கிளட்ச் மற்றும் கியர் மாற்றும் பளுவிலிருந்து விடுபடும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள ஐசர் ப்ரோ 3016 ஏஎம்டி டிரக் , இந்நிறுவனத்தின் மத்தியபிரதேச பிதாம்பூர் ஐசர் டிரக்ஸ் மற்றும் பஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

கிளட்ச் பெடல் இல்லாத இந்த டிரக் மாடல் ஓட்டுநர்களின் அதிகப்படியான பளுவினை குறைக்கும் என்பதனால், மிக சிறப்பான மற்றும் பாதுகாப்பான முறையில் டிரக்குகளை இயக்க வழி வகுக்கின்றது. கார்களில் இந்த நுட்பம் பரவலாக பயன்பாட்டில் உள்ள நிலையில் முதன் முறையாக இந்திய வர்த்தக வாகன சந்தையில் 16 டன் பிரிவில் முதல் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டிரக்கில் உள்ள இன்டலிஜென்ட் ஷிஃப்ட் கன்ட்ரோல் ஏக்ச்வேட்டர் மூலம் கிளட்ச் பெடல் செயற்பாட்டை குறைத்துள்ளது. ஆட்டோ மற்றும் மேனுவல் என இருமோட்களில் வந்துள்ள இந்த டிரக்கில் பவர் மற்றும் ஈக்கோ என இரு மோட் ஆப்ஷன் வாயிலாக சிறந்த மைலேஜ் பெற ஈக்கோ மற்றும் சிறப்பான செயல்திறனை வழங்க பவர் மோட் ஆப்ஷன் அமைந்துள்ளது.

Eicher Pro 3016 AMT டிரக் மாடல் மிக சிறப்பான உத்தரவாதத்தை வாடிக்கையாளர்களளுக்கு வழங்குவதுடன், பாதுகாப்பு மற்றும் ஓட்டுநரின் பனிச்சுமையை குறைக்க உதவுகின்றது. அதிகப்படியான தொலைவை ஓட்டுநர்கள் மிக இலகுவாக இயக்க கியர் ஷிஃப்டிங் இல்லாத ஏஎம்டி மாடல் மிகுந்த பலனை தரும் என ஐசர் குறிப்பிட்டுள்ளது.

ஐசர் டிரக் மற்றும் பஸ் நிறுவனம், 4.9 டன் முதல் 55 டன் வரையில் உள்ள பிரிவுகளில் பல்வேறு டிரக் மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

2018 ஆம் ஆண்டின் சிறந்த 10 பைக்குகள்

இந்திய இரு சக்கர வாகன சந்தையில், கடந்த 2018 ஆம் ஆண்டில் அதிகம் விற்பனையான சிறந்த 10 பைக்குகள் பற்றி தொகுப்பில் அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உள்ளது.

சிறந்த 10 பைக்குகள் – 2018

இந்தியாவில் ஸ்கூட்டர் சந்தை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது இந்திய சந்தையில் ஸ்டைலிஷான ஸ்கூட்டர் மாடல்கள் இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில் வெளியாக தொடங்கியுள்ளது.

1 . ஹோண்டா ஆக்டிவா

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் மிகவும் பிரசத்தி பெற்ற மாடலாக விளங்கும் ஹோண்டா ஆக்டிவா , இந்தியாவின் நெ.1 டூ-வீலர் என்ற பெருமையை பெற்று விளங்குகின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டில் சுமார் ஆக்டிவா விற்பனை எண்ணிக்கை 30,93,481 ஆகும்.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விலை ரூ.56,621 முதல் ரூ.58,486 ஆகும்.

2. ஹீரோ ஸ்பிளென்டர்

நாட்டின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் பைக் விற்பனை எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் ஸ்பிளென்டர் விற்பனை எண்ணிக்கை 30,00,278 ஆக பதிவு செய்துள்ளது. முதலிடத்தில் உள்ள ஆக்டிவா மாடலை விட சுமார் 93,203 யூனிட்டுகள் மட்டுமே குறைவாகும்.

ஹீரோ ஸ்பிளென்டர் பைக் விலை ரூ.49,160 முதல் ரூ.56,550 ஆகும்.

3. ஹீரோ HF டீலக்ஸ்

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் மிக சிறப்பான வரவேற்பினை கொண்டு விளங்கும் மாடல்களில் ஒன்றாகும். கடந்த 2018-ல் HF டீலக்ஸ் விற்பனை எண்ணிக்கை 21,13,045 ஆகும்.

ஹீரோ HF டீலக்ஸ் பைக் விலை ரூ.49,800 முதல் ரூ.49,496 ஆகும்.

4. ஹோண்டா சிபி ஷைன்

125சிசி சந்தையில் சிறந்து விளங்கும் ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் பைக் விற்பனை எண்ணிக்கை 10,21,800 ஆக பதிவு செய்துள்ளது. இதில் சிபி ஷைன் எஸ்பி மாடலும் அடங்கும்.

ஹோண்டா சிபி ஷைன் பைக் விலை ரூ. 60246 முதல் ரூ. 69,902 ஆகும்.

5. ஹீரோ பேஸன்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹீரோ பேஸன் பைக் மாடல் விற்பனை எண்ணிக்கை 9,68,354 ஆக உள்ளது.

ஹீரோ பேஸன் பைக் விலை ரூ. 53,975 முதல் ரூ. 57,800 ஆகும்.

6. டிவிஎஸ் XL 100

இந்த டாப் 10 பைக்குகள் பட்டியில் இடம்பெற்றுள்ள ஒரே மொபட் மாடாலாக விளங்கும், டிவிஎஸ் மோட்டாரின் எக்ஸ்எல் 100 அமோக ஆதரவை 2018-ல் பெற்றுள்ளது. டிவிஎஸ் XL 100 விற்பனை எண்ணிக்கை 8,81,640 ஆகும். சமீபத்தில் எக்ஸ்எல்100 மாடலில் எலக்ட்ரிக் ஸ்டார்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிவிஎஸ் XL 100 பைக் விலை ரூ. 30,329 முதல் ரூ.38,079 ஆகும்.

7. டிவிஎஸ் ஜூபிடர்

2018 ஆம் ஆண்டின் சிறந்த டூ-வீலர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இரண்டாவது ஸ்கூட்டர் மாடலாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கை  8,16,994 ஆக உள்ளது.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விலை ரூ.55,594 முதல் ரூ.64,454 ஆகும்.

8. ஹீரோ கிளாமர்

125சிசி சந்தையில் இடம்பெற்றுள்ள பைக்குகளில் அமோக வரவேற்பினை பெற்ற இரண்டாவது மாடலான ஹீரோ கிளாமர் பைக் , நடந்து முடிந்த 2018 காலண்டர் வருடத்தில் ஹீரோ கிளாமர் விற்பனை எண்ணிக்கை 7,82,675 ஆக உள்ளது. இந்த பட்டியலில் 8 வது இடத்தை பெற்றுள்ளது.

ஹீரோ கிளாமர் பைக் ரூ.59,700 ஆரம்ப விலை ஆகும்.

9. பஜாஜ் சிடி100

பஜாஜின் பட்ஜெட் விலை டூ-வீலர் மாடலாக விளங்குகின்ற பஜாஜ் சிடி 100 பைக் 2018-ல் சுமார் 6,97,842 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

பஜாஜ் சிடி 100 பைக் விலை ரூ. 32,704 முதல் ரூ.35,347 ஆகும்.

10. பஜாஜ் பல்சர் 150

பஜாஜ் ஆட்டோவின் மற்றொரு மாடலான பிரசத்தி பெற்ற பல்சர் 150 பைக் 2018 ஆம் ஆண்டின் சிறந்த 10 பைக்குகள் பட்டியலில் இறுதி இடத்தை பிடித்துள்ளது. பஜாஜ் பல்சர் 150 விற்பனை எண்ணிக்கை 5,70,786 ஆகும்.

பஜாஜ் பல்சர் 150 பைக் விலை ரூ.78,528 முதல் தொடங்குகின்றது.

சிறந்த டாப் 10 பைக்குகள் – 2018

வ.எண் மாடல் 2018
1 ஹோண்டா ஆக்டிவா 30,93,481
2 ஹீரோ ஸ்பிளென்டர் 30,00,278
3 ஹீரோ HF டீலக்ஸ் 21,13,045
4 ஹோண்டா CB ஷைன் 10,21,800
5 ஹீரோ பேஸன் 9,68,354
6 டிவிஎஸ் XL சூப்பர் 8,81,640
7 டிவிஎஸ் ஜூபிடர் 8,16,994
8 ஹீரோ கிளாமர் 7,82,675
9 பஜாஜ் சிடி100 6,97,842
10 பஜாஜ் பல்சர்  5,70,786

 

 

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்டின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

ரூபாய் 53.77 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ள ஸ்பெஷல் லேண்ட் மார்க் எடிசன் மாடல் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் அடிப்படையில் விற்பனைக்கு வந்துள்ளது. மூன்று நிறங்களில் கிடைக்கின்றது.

லேண்ட் மார்க் எடிசன்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற SE மற்றும் HSE என இரண்டு வேரியன்டுகளுக்கு இடையில் வெளியிடப்பட்டுள்ள லேண்ட் மார்க் எடிசன் மாடலில் நார்விக் பிளாக், யூலாங் ஒயிட், கோரிஸ் கிரே ஆகிய மூன்று நிறங்களை பெற்றதாக இருக்கும்.

இந்த மாடலில் முன்புற பம்பர், கிரில் அமைப்பு புதுப்பிக்கப்பட்டு, மேற்கூறை கர்பதியான் கிரே நிறத்தில் அமைந்திருப்பதுடன், 18 அங்குல கிரே நிறத்திலான அலாய் வீல் போன்றவை தோற்ற அமைப்பில் பெற்றுள்ளது. இன்டிரியரில் லேண்ட்மார்க் எடிசனில் எபோனி லெதர் இருக்ககைகள், ஹெட்லைனர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

2.0 லிட்டர் இன்ஜெனியம் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 180 ஹெச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரின் 0 முதல் 100 கிமீ வேகத்தை  9.9 வினாடிகளில் எட்டிவிடும். இந்த மாடலின் அதிகபட்சமாக மணிக்கு 188 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் லேண்ட் மார்க் எடிசன் விலை ரூ. 53.77 லட்சம் ஆகும். இந்த எஸ்யூவி இந்தியாவில் ரூ.44.68 லட்சம் தொடக்க விலையில் கிடைக்கிறது

புதிய சுஸூகி V-ஸ்டார்ம் 650 XT ஏ.பி.எஸ் விற்பனைக்கு வந்தது

7.46 லட்சம் ரூபாய் விலையில் 2019 சுஸூகி V-ஸ்டார்ம் 650 XT ஏ.பி.எஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய மாடலில் சிறிய அளவிலான மாற்றங்கள் மட்டும் கொண்டுள்ளது.

சுஸூகி V-ஸ்டார்ம் 650 XT ஏ.பி.எஸ்

நடுத்தர அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற சுஸூகி V-ஸ்டார்ம் 650 XT ஏ.பி.எஸ் மாடலில் ஹாஸார்ட் விளக்குகள் மற்றும் ரிஃப்லெக்டர் உடன் புதிதாக கிராபிக்ஸ் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது. மற்றபடி எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை.

இந்தியாவில் பாகங்களை தருவித்து ஒருங்கிணைக்கப்படுகின்ற வி – ஸ்ட்ராம் 650 எக்ஸ்டி மாடலில் 645cc, லிக்யுட்-கூல்டு, நான்கு ஸ்ட்ரோக், V ட்வீன் இன்ஜின் கொண்டு 70bhp பவர் மற்றும் 66Nm டார்க் கொண்டதாக விளங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. V-ஸ்டார்ம் 650 XT மோட்டார் சைக்கிள்களின்  எடை 213 கிலோ கிராமாக உள்ளது.

வி – ஸ்ட்ராம் 650 எக்ஸ்டி மோட்டார் சைக்கிளில், 18 இன்ச் முன்புற வீல் மற்றும் 17 இன்ச் ரியர் வீல் மற்றும் வழக்கமான டுயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஏபிஎஸ் பிரேக் வசதி சுவிட்ச் ஆப் செய்யும் ஆப்ஷன் வழங்கப்படவில்லை. இதில் இடம் பெற்றுள்ள எலெக்ட்ரானிக் வசதிகளை பொறுத்தவரை, V-ஸ்டார்ம் 650 XT மோட்டார் சைக்கிள்களில் இரு விதமான டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதை தேவைப்பட்டால் சுவிட்ச் ஆப் செய்து கொள்ள முடியும்.

சுஸூகி V-ஸ்டார்ம் 650 XT ஏ.பி.எஸ் பைக் விலை ரூபாய் 7.46 லட்சம் ஆகும்.