2019 டிவிஎஸ் அப்பாச்சி 180 பைக் விற்பனைக்கு வெளியானது

டிவிஎஸ் மோட்டார்சின் பிரசத்தி பெற்ற அப்பாச்சி 180 பைக் விற்பனை எண்ணிக்கை 30 லட்சம் கடந்துள்ள நிலையில், கூடுதல் வசதிகள் மற்றும் புதிய பொலிவை பெற்ற 2019 டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 பைக் ரூ. 84,578 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலான மாற்றங்களை பெற்றுள்ள புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கில் ரேஸ் பைக்குகளை போன்ற சிவப்பு மற்றும் வெள்ளை கலவையிலான புதிய பாடி கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டு உள்ளன. புதிய அமைபிலான ஹேண்டில்பார், கிராஷ் கார்டு மற்றும் சட்டத்தில் இணைக்கப்பட்ட ஃப்ரேம் ஸ்லைடர்கள், ஃபோர்ஜ்டு ஹேண்டில்பார் வெயிட் மற்றும் அல்கான்ட்ரா மாதிரியிலான இருக்கை அமைப்பை பெற்று விளங்குகின்றது.

குறிப்பாக இந்த மாடலில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் புதுப்பிக்கப்பட்டு வெள்ளை வண்ணத்திலான பேக்லிட்டுடன் கூடிய புதிய டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் வழங்கப்பட்டுள்ளது. என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல், அப்பாச்சி 180 பைக்கில் 177.4சிசி திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 16 bhp பவரையும், 15.5 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக அப்பாச்சி 180 பைக் மணிக்கு 114 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டு விளங்குகின்றது.

இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், கூடுதலாக டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட வேரியண்டும் விற்பனை செய்யப்படுகின்றது.

பியர்ல் வெள்ளை, க்ளாஸ் கருப்பு, T கிரே, மேட் நீலம் மற்றும் மேட் சிவப்பு ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கின்ற அப்பாச்சி 180 பைக் தொடக்க விலை ரூ. 84,578 மற்றும் ஏபிஎஸ் பிரேக் பெற்ற மாடல் ரூ. 95,392 (விற்பனையக விலை) ஆகும்.

 

ரூ. 40,000 உயர்ந்தது மஹிந்திரா மராஸ்ஸோ விலை

இந்தியா UV நிறுவனமான மகேந்திரா நிறுவனம் மராஸ்ஸோ கார்களை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. மஹிந்திரா நிறுவனத்தின் முதல் பயணிகள் வாகனமாக வெளியான மராஸ்ஸோ எம்விவி-கள், சென்னையில் உள்ள ரிசார்ச் வேலி-யின் உதவியுடம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வட அமெரிக்க தொழில்நுட்ப மையம் மற்றும் மும்பையில், பின்னின்ஃபாரினா மற்றும் மஹிந்திராவின் கண்டிவலி வடிவமைப்பு ஸ்டூடியோ ஆகியவற்றுடன் இணைந்தே வடிவமைக்கப்பட்டது.

மராஸ்ஸோ எம்பிவி-க்கள் 7 மற்றும் 8 சீட் வடிவமைப்புடன் வெளியாக உள்ளது.. 7 சீட் வகைகளில் கேப்டன் சீட்கள் இரண்டாவது வரிசையிலும், 8 சீட் வகைகளில் பெஞ்ச் சீட்களும் இடம் பெற்றுள்ளன. 7 சீட் கொண்ட கார் வகைகளில் கடைசி சீட்டை அடைய கேப்டன் சீட்களை முன்புறமாக மடக்கி கொள்ளும் வகையில், 8 சீட் வகை கார்களில் பெஞ்ச் சீட்டை 40:20:40 என்ற ஸ்பிலிட்களில் மடக்கலாம்.

கருப்பு-மற்றும்-பளபளப்பான T- வடிவ டாஷ்போர்ட், அலுமினியம் இன்செர்ட்ஸ், லெதர் சீட், 7.0 அங்குல தொடுதிரை, தானியங்கி காலநிலை கட்டுப்பாடு மற்றும் மூன்று வரிசைகளுக்கு ஏசி வெண்ட்ஸ், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ, ஸ்டீயரிங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆடியோ கண்ட்ரோல், புரஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், டேடைம் ரன்னிங் லைட் போன்றவற்றை கொண்டுள்ளது.

மகேந்திரா மராஸ்ஸோ, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், இந்த இன்ஜின் 121hp மற்றும் 300Nm டார்க்யூவை உருவாக்கும். இந்த கார்கள் தொடக்கத்தில் 5 ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ், அனைத்து வகையான கார்களும் எர்பேக்ஸ், ABS-களுடன் கூடிய EBD, ஆகியவற்றுடன் வழக்கமாக கிடைக்கும் ரியர் பார்க்கிங் சென்சார்ஸ்களை கொண்டிருக்கிறது.

இந்த கார்களின் அறிமுக விலையாக 9.99 லட்ச முதல் 13.9 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மகேந்திர நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில். இந்த கார்களின் விலை 40,000 உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இந்த விலை உயர்வு வரும் 2019 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்டது ஹோண்டா பிரியோ

ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா நிறுவனம் தனது  பிரியோ கார்களை 2011ம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இந்த கார்கள் விற்பனையில் பெரியளவில் சாதிக்கவில்லை. இந்த சிறிய ரக கார்களால் மார்க்கெட்டில் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இந்த கார்கள் விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 120 யூனிட்களையும் செப்டம்பர் மாதத்தில் 102 யூனிட்களும் தயாரிக்கப்பட்டது. இரண்டு மாதத்தின் விற்பனை முறையே 157 மற்றும் 64 யூனிட்களாக இருந்துள்ளது. இதை தொடர்ந்து இந்த கார்களின் தயாரிப்பை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி ஹோண்டா கார்கள், அமோசாஸ் மற்றும் WR-V கிராஸ் ஓவர்-கள் இதே பிரியோ கார்களுக்கான பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார்கள் மார்க்கெட்டில் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. பிரியோ கார்களை தொடர்ந்து, அடுத்த தலைமுறை கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படமாட்டாது என்று ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய உச்சத்தை தொட்ட ஹோண்டா ஸ்கூட்டர் விற்பனை

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளராக விளங்கும் ஹோண்டா நிறுவனம், ஸ்கூட்டர் விற்பனையில் புதிய உச்சத்தை அதாவது 2.5 கோடி ஸ்கூட்டர்கள் எண்ணிக்கையை 17 ஆண்டுகளில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் 57 சதவீத பங்களிப்பை இந்தியாவில் பெற்று விளங்கும் நிலையில், இந்நிறுவனத்தின் பிரபலமான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மிக சிறப்பான ஆதரவை பெற்று விளங்கி வருகின்றது. முதன்முறையாக ஹோண்டா நிறுவனம் 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் ஆக்டிவா ஸ்கூட்டரை வெளியிட்டது.

அறிமுகம் செய்த 13 ஆண்டுகளில், 1 கோடி ஸ்கூட்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்தது.ஆனால், இந்த சாதனையை, அடுத்த 3 ஆண்டுகளில் முறியடித்து, மேலும், 1 கோடி ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டன. அடுத்து ஓராண்டுக்குள்ளாகவே கூடுதலாக, 50 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து உள்ளதாக இந்நிறுவனத்தின் விற்பனை பிரிவின் மூத்த உதவி தலைவர், யாதவிந்தர் சிங் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும், அன்புமே எங்களது இந்த வளர்ச்சிக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

 

புதிய மாருதி எர்டிகா கார் பற்றி அறிந்து கொள்ளலாம்

எம்பிவி வாகனங்களில் பிரபலமாக விளங்கும் மாருதி நிறுவனத்தின் மாருதி எர்டிகா காரின் மேம்படுத்தப்பட்ட 2018 மாருதி எர்டிகா காரின் மைலேஜ் உட்பட மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் வசதிகளை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

டிசைன்

சுசூகி நிறுவனத்தின் Heartect பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டாம் தலைமுறை எர்டிகா கார் விற்பனையில் உள்ள மாடலை விட 10 கிலோ வரை எடை குறைந்ததாக வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் மிக நேர்த்தியான கிரில் அமைப்புடன் எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய புராஜெக்ட்ர் முகப்பு விளக்குக்களை கொண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு முந்தைய மாடலின் அளவுகளை பெற்றிருந்தாலும் ஆனால் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ ஆக மட்டும் குறைக்கபட்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் மாருதி டிசையர் மற்றும் புதிய ஸ்விஃப்ட் காரின் வடிவ அம்சங்களை பெற்று மிக நேர்த்தியான இருக்கை மற்றும் தாரளமான இடவசதி கொண்டதாக விளங்குகின்றது.

என்ஜின்

மாருதி சுசூகி நிறுவனத்தின் அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை வழங்கவல்ல Smart Hybrid Vehicle by Suzuki (SHVS) நுட்பத்தை பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் பெற்று விளங்குகின்றது.

103 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் 4 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று விளங்குகின்றது.

89 bhp வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் DDiS சீரிஸ் டீசல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று விளங்குகின்றது.

மைலேஜ்

எர்டிகா பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 19.34 கிமீ (மேனுவல்)

எர்டிகா பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 18.69 கிமீ (ஆட்டோமேட்டிக்)

எர்டிகா டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 24.52 கிமீ

வசதிகள்

புதிய மாருதி எர்டிகா கார் முந்தைய மாடலை விட பல்வேறு கூடுதல் வசதிகளை பெற்று விளங்குகின்றது. குறிப்பாக இரட்டை காற்றுப்பை, ஏபிஎஸ் பிரேக் மற்றும் இபிடி போன்றவை அனைத்து வேரியன்டிலும் வழங்கப்பட்டு டாப் மாடல்களில் மாருதி ஸ்மார்ட்பிளே அமைப்புடன் கூடிய ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியுடன், ரியர் பார்க்கிங் கேமரா, ஆட்டோமேட்டிக் ஏசி, 15 அங்குல அலாய் வீல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டு விளங்குகின்றது.

போட்டியாளர்கள்

விற்பனையில் உள்ள பிரபலமான டொயோட்டா இன்னோவா கிறிஸ்டா, ரெனோ லாட்ஜி, ஹோண்டா பிஆர்-வி மற்றும் மிக வேகமாக விற்பனை ஆகி வரும் பிரசத்தி பெற்ற புதிய மஹிந்திரா மராஸோ உள்ளிட்ட மாடல்களை நேரடியாக மாருதி எர்டிகா எதிர்கொண்டு மாருதி அரேனா ஷோரூம் வாயிலாக விற்பனை செய்யப்பட்ட உள்ளது.

விலை

வருகின்ற நவம்பர் 21ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள மாருதி சுசூகி எர்டிகா கார் ஆரம்ப விலை ரூ. 7 லட்சம் விலையில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக் அறிமுக தேதி விபரம்

இந்தியாவின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 200சிசி மற்றும் ஸ்கூட்டர் சார்ந்த சந்தையில் புதிய மாடல்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் குறைந்த விலை அட்வென்ச்சர் மாடலாக 200சிசி எஞ்சின் பெற்ற ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கினை விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் ஹீரோ விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்த எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கை தொடர்ந்து, EICMA 2018 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட டூரர் ரக எக்ஸ்பல்ஸ் 200T மற்றும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட எக்ஸ்பல்ஸ் 200 ஆகிய இரு மாடல்களையும், வரும் 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், அதாவது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் உறுதியாக விற்பனைக்கு வெளியிட உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

முதன்முறையாக 2017 EICMA மோட்டார் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த அட்வெனச்சர் ரக மோட்டார்சைக்கிளில் எகஸ்ட்ரீம் 200 மாடலில் இடம்பெற உள்ள அதே எஞ்சின் அதிகபட்சமாக 18 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 17 என்எம் டார்க் வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

மேலும் இந்த மோட்டார்சைக்கிள் ஏபிஎஸ் ஆப்ஷனாலாக உள்ள மாடலும் ரூ.1 லட்சத்தக்கு குறைந்த விலையை கொண்டிருக்கும் என்பதனால் நிச்சியமாக சந்தையில் மிகுந்த வரவேற்பினை பெற வாய்ப்பபுகள் உள்ளது.

 

ஜாவா , ஜாவா 42 பைக்குகளின் சிறப்பம்சங்கள் அறிவோம்

70, 80களில் ஜாவா பைக் என்றால் தனியான ரசிகர் கூட்டத்தை பெற்றிருந்த பிரசத்தி பெற்ற மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ஜாவா மீண்டும் வெற்றிகரமாக தனது இரண்டு பைக்குகளை ஜாவா, ஜாவா 42 என்ற பெயரிலும் பாபர் ஸ்டைல் மாடலாக ஜாவா பெராக் என்ற பைக்கையும் வெளியிட்டுள்ளது.

மஹிந்திரா ஜாவா

மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து இருசக்கர வாகன சந்தையில் மிக கடுமையான சவாலை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த முறை மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றிருந்த ஜாவா மோட்டார்சைக்கிள் பிராண்டை 2018 ஆம் ஆண்டுக்கு ஏற்ற முறையில் நவீனத்துவத்துடன் பழமை மாறாமல் தரவேண்டும் என்ற நோக்கில் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பொதுவாக பழைய மோட்டார்சைக்கிள் மாடல்களில் பெரும்பாலும் க்ரோம் சார்ந்த பாகங்களை அதிகம் பெற்றிருப்பதனை போன்றே ஜாவா என்ற பெயரில் ஒரு மாடலும் குறைந்த க்ரோம் பாகங்களுடன் ஸ்டைலிஷான அம்சத்தை பெற்றதாக ஜாவா ஃபார்ட்டி டூ மாடல் அமைந்துள்ளது.

ஜாவா என்ஜின்

ஜாவா ஃபார்ட்டி டூ மற்றும் ஜாவா என இரு மாடல்களிலும் இந்நிறுவனத்தின் இரட்டை  புகைப்போக்கி குழல் பெற்ற 293சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வடிவமைக்கப்படுள்ளது.

ஜாவா 42 மாடலில் சில குறிப்பிடதக்க மாற்றங்களாக குறைவான க்ரோம் பாகங்கள் , பின்புறம் பார்க்கும் கண்ணாடியில் மாற்றம், கிளஸ்ட்டரில் நவீனத்துவம் கொண்டுள்ளது. ஸ்டான்டர்டு ரக ஜாவா மாடலில் அதிகப்படியான க்ரோம் பாகங்கள் மற்றும் பழமையான தோற்றத்தை வெளிப்படுத்தும் கிளஸ்ட்டர் கொண்டிருக்கின்றது.

வட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், பெரும்பாலான பாகங்களுக்கு க்ரோம் பூச்சூ, அகலமான பின்புற மட்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களில் டபூள் கார்டில் அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்று முன்புறத்தில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய  280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 153 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

14 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் கலனை கொண்டு ஜாவா மற்றும் ஜாவா 42 மாடல்களின் எடை 170 கிலோ மட்டுமே ஆகும். ஜாவா 42 மோட்டார்சைக்கிள் ஹாலிஸ் டீல், கெலக்டிக் பச்சை, ஸ்டார்லைட் நீலம், லூமோஸ் லைம், நெபுலா நீலம் மற்றும் காமட் சிவப்பு ஆகிய 6 வண்ணங்களிலும், ஜாவா கிளாசிக் வகையில் ஜாவா கருப்பு, ஜாவா மெரூன் மற்றும் ஜாவா கிரே ஆகிய மூன்று வண்ணங்களிலும் கிடைக்கும்.

ஜாவா போட்டியாளர் யார் ?

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கிளாசிக் 350 மாடலை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இரு மாடல்களும் அடுத்த சில வாரங்களில் மஹிந்திரா டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்ட உள்ள நிலையில், நீண்ட பாரம்பரியமிக்க என்ஃபீல்டு நிறுவனத்துக்கு சவாலை ஜாவா விடுக்கும் என எதிர்பார்த்தாலும் வலுவான என்ஃபீல்டு சந்தையை உடைக்க ஜாவா மிக கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

ஜாவா மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்

ஜாவா – ரூ. 1.64 லட்சம்

ஜாவா 42 – ரூ. 1.55 லட்சம்

(டெல்லி விற்பனையக விலை)

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மாடல் ஆரம்ப விலை ரூ. 1.40 லட்சம் ஆகும்.

விரைவில் யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ பைக்குகள் அறிமுகம்

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற பழமையான மோட்டார்சைக்கிள் பிராண்டுகளில் ஜாவா தற்போது அறிமுகமாகியுள்ள நிலையில், அதனை தொடர்ந்து யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ பிராண்டுகளில் மோட்டார்சைக்கிள்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா குழுமத்தின் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தில் 60 சதவீத பங்கினை கொண்டுள்ள மஹிந்திரா நிறுவனம் , நேற்று மிகவும் பிரசத்தி பெற்ற ஜாவா பிராண்டில் ஜாவா , ஜாவா 42 மற்றும் ஜாவா பெர்டோ என மொத்தமாக மூன்று பைக்குகளை விற்பனைக்கு வெளியிட்டுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் கீழ் செயல்படும் யெஸ்டி பிராண்டில் 250சிசி அல்லது அதற்கு கூடுதலான திறன் பெற்ற நடுத்தர மோட்டார்சைக்கிள் பிரிவில் மாடல்களை அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

இந்நிறுவனத்தின் கீழ் செயல்படும் மற்றொரு பழமையான பாரம்பரியமிக்க பி.எஸ்.ஏ பிராண்டில் 500சிசி முதல் 750சிசி வரையிலான எஞ்சின் திறன் பெற்ற மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியா மற்றும் ஏற்றுமதி சந்தையில் விற்பனை செய்வதற்கான முயற்சியில் களமிறங்க திட்டமிட்டுள்ளதால், பிஎஸ்ஏ பிராண்டில் 2019 ஆம் ஆண்டின் மத்தியில் பைக்குகள் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

 

மஹிந்திரா டிரியோ மின் ஆட்டோ விற்பனைக்கு வெளியானது

மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் மஹிந்திரா எலக்ட்ரிக் மின்வாகன தயாரிப்பு பிரிவு பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக இரண்டு மூன்று சக்கர வாகனத்தை மஹிந்திரா டிரியோ மற்றும் டிரியோ யாரி என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

வாகனங்கள் வெளியிடும் புகையினால் மிகுந்த அளவில் சுற்றுச்சூழல் பாதிப்படைவதனால், சர்வதேச அளவில் மின் வாகனங்களுக்கு என பிரத்தியேக வரைமுறையை சர்வதேச நாடுகள் செயல்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் மின் வாகன தயாரிப்பிற்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளதால் இருசக்கர வாகனம், கார்கள் மற்றும் பேருந்துகளை தொடர்ந்து தற்போது மூன்று சக்கர வாகனங்களை மின்சாரத்தில் இயங்கும் வகையில், முதற்கட்டமாக பெங்களூருவில் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள மஹிந்திரா டிரியோ மற்றும் டிரியோ யாரி மின்சார ஆட்டோவிற்கு மத்திய அரசின் FAME மானியம் வழங்கப்படுவதனால் டிரியோ யாரி விலை ரூ.1.36 லட்சத்திலும் மற்றும் உயர் ரக டிரியோ மாடல் ரூ. 2.22 லட்சம் விலையில் வெளியிடப்பட்டு டிரியோ ஆட்டோ வகையில் சாதாரன மேற்கூறை மற்றும் கடின மேற்கூறை என இரண்டிலும் வழங்கப்பட்டுள்ளது.

டிரியோ மின் ஆட்டோ ஓட்டுநருடன் 3 இருக்கைகளை பெற்று 7.47 kW லித்தியம் ஐயன் பேட்டரி கொண்டு அதிகட்சமாக முழுமையான மூன்று மணி நேரம் 50 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும், 5.4 kW மற்றும் 30 என்எம் டார்க் வழங்கும் வகையிலான இந்த பேட்டரி அதிகபட்சமாக 130 கிமீ தொலைவை வெளிப்படுத்தும் இந்த ஆட்டோவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 45 கிமீ வேகத்தில் பயணிக்க இயலும்.

டிரியோ யாரி மின் ஆட்டோ ஓட்டுநருடன் 4 இருக்கைகளை பெற்று 3.69 kW லித்தியம் ஐயன் பேட்டரி கொண்டு அதிகட்சமாக முழுமையான இரண்டு மணி நேரம் 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும், 2 kW மற்றும் 17.5 என்எம் டார்க் வழங்கும் வகையிலான இந்த பேட்டரி அதிகபட்சமாக 80 கிமீ தொலைவை வெளிப்படுத்தும் இந்த ஆட்டோவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்க இயலும்.

முதலில் மஹிந்திரா டிரியோ பெங்களூரிலும் அதைத் தொடர்ந்து சென்னை, ஹைதராபாத், தில்லி, மும்பை ஆகிய நகரங்களில் மின் ஆட்டோவை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜாவா பைக்குகள் விற்பனைக்கு வெளியானது

மஹிந்திரா நிறுவனத்தின் கிளாசிக் லெஜென்ட்ஸ் பிரிவின் கீழ் செயல்படுகின்ற ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவில் கிளாசிக் ரக பாரம்பரியத்தை கொண்ட ஜாவா , ஜாவா ஃபார்ட்டி டூ மற்றும் பாபர் ஸ்டைல் பெற்ற ஜாவா பெராக் என மொத்தமாக மூன்று மோட்டடார்சைக்கிளை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

1960களில் தொடங்கி இந்திய சந்தையில் கொடிகட்டி பறந்த ஜாவா பைக்குகளை மீண்டும் மஹிந்திரா அறிமுகம் செய்துள்ள நிலையில் , ஜாவா பைக்குகள் மிக கடுமையான சவாலினை ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்திடமிருந்து கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 போன்ற மாடல்களுடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. புதிதாக வெளியிடபட்டுள்ள மூன்று மாடல்களில் ஜாவா 42 மாடல் நவீனத்துவத்தை பெற்றதாகவும், ஜாவா என பெயரிடப்பட்டுள்ள மாடல் பாரம்பரியத்தை கொண்டதாகவும், பாபர் ஸ்டைலை பெற்ற மாடலை ஜாவா பெராக் எனவும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஜாவா ஃபார்ட்டி டூ மற்றும் ஜாவா என இரு மாடல்களும் இந்நிறுவனத்தின் இரட்டை  புகைப்போக்கி குழல் பெற்ற 293சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது.

கிளாசிக் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் வகையில் வட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், பெரும்பாலான பாகங்களுக்கு க்ரோம் பூச்சூ, அகலமான பின்புற மட்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களில் டபூள் கார்டில் அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்று முன்புறத்தில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய  280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 153 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

14 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் கலனை கொண்டு ஜாவா மற்றும் ஜாவா 42 மாடல்களின் எடை 170 கிலோ மட்டுமே ஆகும். ஜாவா 42 மோட்டார்சைக்கிள் ஹாலிஸ் டீல், கெலக்டிக் பச்சை, ஸ்டார்லைட் நீலம், லூமோஸ் லைம், நெபுலா நீலம் மற்றும் காமட் சிவப்பு ஆகிய 6 வண்ணங்களிலும், ஜாவா கிளாசிக் வகையில் ஜாவா கருப்பு, ஜாவா மெரூன் மற்றும் ஜாவா கிரே ஆகிய மூன்று வண்ணங்களிலும் கிடைக்கும்.

பாபர் கஸ்டம் ஸ்டைல் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜாவா பெராக் பைக்கில் 334சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த என்ஜின் பவர் வெளிப்படுத்தும் திறன் உள்ளிட்ட விபரம் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

முதற்கட்டமாக இந்த வருட இறுதி, அதாவது டிசம்பர் 2019 முதல், மஹிந்திரா நிறுவன இருசக்கர வாகனப் பிரிவின் கீழ் நாடு முழுவதும் உள்ள 105 பிரத்யேக டீலர்கள் வாயிலாக ஜாவா மோட்டார்சைக்கிள்கள் விற்பனை துவங்கப்பட உள்ளது.

ஜாவா மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்

ஜாவா – ரூ. 1.64 லட்சம்

ஜாவா 42 – ரூ. 1.55 லட்சம்

ஜாவா பெராக் – ரூ. 1.89 லட்சம்

(டெல்லி விற்பனையக விலை)