4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்

ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனம், தங்கள் கார்களுக்கான விலையை 4% வரை உயர்த்த உள்ளது என்றும் இந்த விலை உயர்வு வரும் 2019-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள், ஆண்டு தோறும் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தி வருவது வழக்கமான ஒன்றாகும். இந்த் விலை உயர்வுக்கு முக்கிய காரணம், இன்புட் செலவுகள், எக்சேஞ்ச் விலையில் மாற்றம் போன்றவைகளே காரணமாகும். இது குறித்து அறிவிப்பு தயாரிப்பாளர்கள் வரும் நாட்களில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது 14 மாடல்களை விற்பனை செய்து வருகிறது. 2018ம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டில் பிஎம்டபிள்யூ நிறுவனம் 8000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.