இந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா

மகேந்திரா & மகேந்திரா மானியத்தில் இயங்கும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் ஜாவா மோட்டார் சைக்கிள்களை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பிராக் என்ற மூன்று வகையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிள்களின் விலைகள் முறையே 1.64 லட்சம் ரூபாய், 1.55 லட்சம் ரூபாய் மற்றும் 1.89 லட்சம் ரூபாய் விலையில் இருக்கும். கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் 105 டச்-பாயின்ட்கள் மற்றும் 64 டீலர்ஷிப்களை தொடங்கியுள்ளது. முதல் டீலர்ஷிப் பிசினஸ் அடுத்த மாதம் 5ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில், ஜாவா மோட்டார் சைக்கிள் டீலர்கள் குறித்த முழு பட்டியலிலை கிளாசிக் லெஜென்ட் நிறுவனம் இன்னும் வெளியிட வில்லை. இருந்தபோதும், ஜாவா மோட்டார் சைக்கிள் இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, டெல்லி, ஹைதராபாத், மற்றும் புனே ஆகிய நகரங்களில் தலா நான்கு ஷோரூம்கள் மற்றும் சரியான இடங்களில் டீலர்ஷிப்களுக்கு தொடங்கப்பட்டுள்ளது.

மும்பையில், அந்தேரி (மேற்கு), செம்பூர், தானே (விவியன மால் அருகே) மற்றும் வஷி.

டெல்லியில், கிருஷ்ண நாகர், குஜ்ரன்வாலா டவுன், சகட் மற்றும் திலக் நகர்.

ஹைதராபாத் மற்றும் புனேவில் ராணிகஞ்ச், பஞ்சரா ஹில் ரோடு நம்பர் 12, காசிபவாலி ஹைடெக் ஓரடு மற்றும் குகட்டபாலி மற்றும் பானேர், கொரேகோன் பார்க் மற்றும் சின்சவாத் ஸ்டேஷன்.

இதுமட்டுமின்றி பெங்களூரில் 5 டீலர்ஷிப்கள், சென்னயில் 4 டீலர்ஷிப்கள் மற்றும் கொல்கத்தாவில் ஒரு டீலர்ஷிப் தொடங்கப்பட்டுள்ளது.

ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. 5,000 ரூபாய் செலுத்தி இந்த மோட்டார் சைக்கிள்களை புக்கிங் செய்து கொள்ளலாம். பிராக் வகை மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங் வரும் 2019ம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிச்செல்லினை தனது டயர் பார்னராக தேர்வு செய்தது இண்டிகோ ஏர்லைன்ஸ்

இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் குறைந்த விலை கட்டணம் கொண்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தனது டயர் பார்ட்னராக மிச்செல்லின் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் மிச்செல்லின் நிறுவனம் இண்டிகோ ஏர்பஸ் மற்றும் ATR-களுக்கான டயர்களை நீண்ட காலம் சப்ளை செய்ய உள்ளது.
உலகளவில் ஏவியேஷன் டயர்கலை வழங்கி வரும் மிச்செல்லின் நிறுவனம், தற்போது இண்டிகோ நிறுவனத்திற்கு உதவ உள்ளது. இதன் மூலம் இண்டிகோ நிறுவனம் பயணிகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான குறைவான் எரிபொருள் மூலம் இயங்கும் டயர்களை சப்ளை செய்ய உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வரும் இண்டிகோ நிறுவனத்தின் முக்கிய கொள்கையே, குறைந்த விலையில் அதிக தூர விமான பயணத்தை, எந்தவித தயக்கமும் இன்றி விமாத்தில் பயணிக்கும் அனுபவத்தை அவர்களுக்கு அளிப்பதேயாகும். இந்த கொள்கையின்படியே வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மற்றும் எரிபொருள் சிக்கனமாக செலவிடும் வகையிலான A320 NEO குடும்பத்தை சேர்ந்த ஏர்கிராப்ட்களை வாங்கியுள்ளது. இதற்கு மிச்செல்லின் நிறுவனம் டயர் சப்ளை செய்ய உள்ளது.

இதுகுறித்து பேசிய மிச்செல்லின் டயர் நிறுவனம் உயரதிகாரி பிராங்க் மோர்அயு, இந்த டயர்களை விமாத்திற்காக உயர்த்த தொழில்நுட்பங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டயர்கள் அதிகளவிலான பாதுகாப்பு உறுதி அளிக்கும். விமான மேலே ஏறும் போதும், கீழே இறங்கும் போதும் இந்த டயர்கள் உறுதியான செயல் திறனை கொண்டிருக்கும் என்றார்.

வெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்

புதிய 2019 ஹுண்டாய் எலன்ட்ரா கார்கள் இந்தியாவி சோதனை செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. புதிய 2019 ஹுண்டாய் எலன்ட்ரா கார்கள், இந்தியாவில் Nu 2.0 பெட்ரோல் மற்றும் U2 1.6 டீசல் என இரண்டு ஆப்சன்களில் வெளியாக உள்ளது. டீசல் யூனிட்கள் 128PSமற்றும் 259.88Nm டார்க்யூ கொண்டதாக இருக்கும். பெட்ரோல் இன்ஜின்கள் 152PS மற்றும் 192.21Nm பீக் டார்க்யூ கொண்டதாக இருக்கலாம் என்றும், இந்த கார்கள் 6-ஸ்பீட் மெனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

அடுத்த தலைமுறை எலன்ட்ரா கார்கள், கேஸ்காட் கிரில், முக்கோண வடிவ LED ஹெட்லேம் மற்றும் தனியாக பொருத்தப்பட்ட திரும்புவதை உணர்த்தும் லைட்களை கொண்டிருக்கும். மேலும் இதில் புதிய 15 முதல் 17 இன்ச் கொண்ட அலாய் வீல் பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த காரின் பின்புறத்தில் புதிய தனித்துவமிக்க LED டைல் லேம்கள் மற்றும் ஹுண்டாய் நிறுவனம் எம்ப்ளம் பொருத்தப்பட்டுள்ளது. பிராண்டிங் எழுத்துகள் நீளமாக எழுத்தப்பட்டு, ஹுண்டாய் சோனடா என்று எழுதப்பட்டுள்ளது.

காரின் உட்பகுதியில், கவர்ந்திலுக்கும் வகையிலான டிசைன்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய டிசைன்களுடன் பம்பர்கள், முன்புற பென்டர்கள், கிரில், ஹெட்லேம்கள் மற்றும் டைல் லேம்ப்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய 2019 ஹுண்டாய் எலன்ட்ரா கார்களில், அதிக வேகத்தில் சென்றால் அதை எச்சரிக்கும் தொழில்நுட்பமும் மேம்படுத்தப்பட்ட உள் அலங்காரங்களுடன் புதிய ஸ்டீயரிங் வில் மற்றும் காலநிலை கட்டுபாட்டு வசதிகள் இடம் பெறும் என்று தெரிகிறது. இந்த கார்கள்இந்தியாவில் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் விற்பனைக்கு வரும் என்று தெரிய வந்துள்ளது.

இந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ

அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ நடத்திய அமெரிக்காவை சேர்ந்த மான்ஸ்டர் டிரக் சங்கம், அடுத்த ஆண்டு இதை இந்தியாவுக்கு கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது. மும்பையை சேர்ந்த ஸ்டார்லைட் 108 மீடியா இந்தியாவில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த ஷோவில், 12 அடி உயரம், 20 அடி நீளம் மற்றும் 5 அடி உயர டயர்கள் கொண்ட வாகனங்கள் காட்சி படுத்தப்பட உள்ளன. மேலும் இந்த வாகனங்களின் எடை 4500kg கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக இந்த இந்தியாவில் ஷோ மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நான்கு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக, மற்ற நகரங்களில் நடத்தப்படும்.

இதுமட்டுமின்றி இந்த ஷோவை ஆசிய நாடுகள் முழுமைக்கும் கொண்டு செல்ல ஸ்டார்லைட் 108 மீடியா திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இந்த் ஷோ குறித்து மால், ஸ்கூல் மற்றும் காலேஜ்களில் பிரபலப்டுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஷோ குறித்த முழு தகவல்கள் வரும் 2019ம் ஆண்டின் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.

4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்

ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனம், தங்கள் கார்களுக்கான விலையை 4% வரை உயர்த்த உள்ளது என்றும் இந்த விலை உயர்வு வரும் 2019-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள், ஆண்டு தோறும் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தி வருவது வழக்கமான ஒன்றாகும். இந்த் விலை உயர்வுக்கு முக்கிய காரணம், இன்புட் செலவுகள், எக்சேஞ்ச் விலையில் மாற்றம் போன்றவைகளே காரணமாகும். இது குறித்து அறிவிப்பு தயாரிப்பாளர்கள் வரும் நாட்களில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது 14 மாடல்களை விற்பனை செய்து வருகிறது. 2018ம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டில் பிஎம்டபிள்யூ நிறுவனம் 8000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

மஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

யுட்டிலிட்டி ரக வாகனங்கள் தயாரிப்பதில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் சாங்யாங் ரெக்ஸ்டான் ஜி4 அடிப்படையில் உயர் ரக எஸ்யூவி மாடலை மஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி என்ற பெயரில் ரூ.26.95 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

மஹிந்திரா குழுமத்தின் செயல்படும் சாங்யாங் நிறுவனத்தின் ரெக்ஸ்டான் ஜி4 எஸ்யூவி அடிப்படையில், இந்திய சந்தைக்கு ஏற்ற மாடலாக மஹிந்திரா பிராண்டில் வெளியிடப்பட உள்ள அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி மாடலில் உள்ள முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

183 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் பொருத்தப்பட்டு 450 என்எம் டார்க்கினை வழங்கும் திறனுடன் மெர்சிடிஸ் நிறுவனத்தின் 7 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஸ்யூவி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியில் மட்டும் முதற்கட்டமாக 2WD AT மற்றும் 4WD AT என இரண்டிலும் கிடைக்க உள்ளது.

அல்டுராஸ் G4 எஸ்யூவி போட்டியாளர்களான ஸ்கோடா கோடியக், டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவர், இசுசூ MU-X, மிட்ஷூபிசி அவுட்லேண்டர் மற்றும் ஹோண்டா சிஆர்-வி உள்ளிட்ட மாடல்களை நேரடியாக எதிர்கொள்ள உள்ள இந்த மாடல் போட்டியாளர்களை விட கூடுலான நவீன வசதிகளாக எல்இடி டெயில் மற்றும் முகப்பு விளக்கு, 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் ஓட்டுநர் இருக்கை, 9 காற்றுப்பை,  9.2 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ,  3D வடிவில் 360 டிகிரி கோண கேமரா என பல்வேறு வசதிகளை பெற்று விளங்குகின்றது.

பொதுவாக மஹிந்திரா நிறவனம் தன்னுடைய மாடல்களில் O என்ற எழுத்து முடியும் வகைகளில் பெயரை வைப்பதனை முதன்முறையாக தவிரத்து அல்டுராஸ் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

மஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி 2WD – ரூ. 26.95 லட்சம்

மஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி 4WD – ரூ. 29.95 லட்சம்

(விற்பனையக விலை டெல்லி)

கேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது

ரூ. 1.60 லட்சம் விலையில் கேடிஎம் டியூக் 200 பைக் மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் கூடுதல் ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஏபிஎஸ் பிரேக் அல்லாத மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் கேடிஎம் நிறுவனத்தின் குறைந்த விலை அதாவது தொடக்கநிலை மாடலாக விற்பனை செய்யப்படுகின்ற டியூக் 200 ஸ்போர்ட்டிவ் சந்தையில் மிகவும் பிரபலமான மாடலாக விளங்குகின்றது. வருகின்ற 2019 ஏப்ரல் முதல் 125சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட சிசி திறன் கொண்டு பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக் , 125 சிசிக்கு குறைவான பைக்குகளில் சிபிஎஸ் பிரேக் கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது.

விற்பனையில் உள்ள மாடலின் வசதியில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளாமல் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்ட ட்யூக் 200 பைக்கில் 199.5சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 24 BHP பவரையும், 19.6 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ட்ரெல்லிஸ் அடிச்சட்டத்தை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் அப்சைடு டவுன் அமைப்பிலான ஃபோர்க்குடன், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்ற இந்த பைக்கில் முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் இடம் பெற்றுள்ளது.

கேடிஎம் டியூக் 200 பைக் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் – ரூ.1.60 லட்சம்

இந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா

ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் “ப்ரீ கார் கேர் கிளினிக்”, இந்தியாவில் கடந்த 21ம் தேதி தொடங்கியது. ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட 1,309 டீலர்ஷிப்கள் மற்றும் சர்விஸ் பாயிண்ட்களை நடக்கும் இந்த “ப்ரீ கார் கேர் கிளினிக்” வரும் 27ம் தேதி வரை நடக்க உள்ளது.

இந்த “ப்ரீ கார் கேர் கிளினிக்”-கில் ஹூண்டாய் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 50-பாயிண்ட் செக்-ஆப் போன்ற பல ஆப்பர்களை பெறலாம். மேலும் சில பார்ட்ஸ்களை மாற்றும் போது 30 சதவிகிதம் வரை லேபர் கட்டணத்தில் டிஸ்கவுண்ட் பெறலாம். ஆண்டுதோறும் 10 ப்ரீ எக்டேண்டட் வாரண்டி மற்றும் பல கவர்ந்திழுக்கும் ஆப்பர்களும் பெறலாம். இதுமட்டுமின்றி, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களும், இந்தியாவில் உள்ள 400-க்கு மேற்பட்ட ஒர்க் ஷாப்களில் கூடுதலாக 360 டிஜிட்டல் சர்விஸ் அனுபவத்தை பெறலாம்.

இந்த “ப்ரீ கார் கேர் கிளினிக்” குறித்து பேசிய ஹூண்டாய் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன உயர் அதிகாரி புன்னைவனம் தெரிவிக்கையில். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். “ப்ரீ கார் கேர் கிளினிக்” சேவைகள் திட்டம், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை வழங்குவதேயாகும். அதே நேரத்தில் அவர்களுக்கு ஒனர்ஷிப் அனுபவத்தை கொடுப்போம்.

இந்தாண்டுகான “ப்ரீ கார் கேர் கிளினிக்”-கின் தீம், வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை அளிப்பதுடன், பிராண்ட் ரேங்கிங்கை நம்பர் ஒன்னாக மாற்ற உள்ளோம். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட “ப்ரீ கார் கேர் கிளினிக்” மார்ச் 2018-ல் தொடங்கப்பட்டு 10 நாட்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம் 2.5 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன் பெற்றனர்.

இந்திய அளவில் “ப்ரீ கார் கேர் கிளினிக்” நடத்துவதன் நோக்கம், அதன் முக்கியத்துவத்தை வாடிக்கையாளர்களுக்கு உணர்த்தி, வாகனங்களுக்கு தேவையான பராமரிப்பு மற்றும் சர்விஸ் சென்டர்களில் ஹூண்டாய் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பார்ட்ஸ்களை மாற்றி கொடுப்பதேயாகும்.

27-வது தேசியளவிலான “ப்ரீ கார் கேர் கிளினிக்” நாட்டில் முதல் முறையாக குர்கர்னில் உள்ள ஆம்பியன் மாலில் உள்ள பிரிலியன்ட் கிட்ஸ் மோட்டார் ஷோ 2018-ல் நடத்தப்பட்டது. இந்த கண்காட்சிக்காக நாட்டில் பல்வேறு பகுதியில் உள்ள குழந்தைகளிடம் இருந்து 5000-க்கு மேற்பட்ட என்ட்ரிகள் வந்துள்ளன. இந்த 5000 என்ட்ரிகளில், 8 டாப் டிசைன்கள் தேர்வு செய்யப்பட்டு, அதே போன்ற மாடல் கார்கள் பெரியளவில் தயாரி செய்யப்பட உள்ளது. இதுமட்டுமின்றி, 8 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பு தொழிற்சாலையை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்

அக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ

புதிய தலைமுறை ஹூண்டாய் சாண்ட்ரோ கடந்த அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார்களின் பட்டியலிலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த டாப் 10 பட்டியலில், ஹூண்டாய் சாண்ட்ரோ கார்கள் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்திலேயே 8,535 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ கார்கள் மொத்தமாக ஒன்பது வகைகளில் 5 டிரிம்களில் கிடைக்கிறது. இந்த கார்களில் விலை 3.89 லட்சம் முதல் 5.64 லட்சம் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை இந்தியாவில்) கிடைக்கிறது. இந்த கார்கள், ரெனால்ட் குவிட், டாடா டைகோ, மாருதி சுசூகி செலீரோ மற்றும் மாருதி வேகன் ஆர் கார்களுக்கு போட்டியாக வெளியானது. இந்த கார்கள் 1.1 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன் 68bhp ஆற்றல் மற்றும் 99Nm டார்க்யூ கொண்டதாக இருக்கும். இந்த இன்ஜின்கள் 5-ஸ்பீட் மெனுவல் மற்றும் AMT யூனிட் கொண்டதாக விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய சாண்ட்ரோ கார்களில் CNG ஆப்சன்களுடனும்,ம் 59bhp ஆற்றலில், 84Nm டார்க்யூ கொண்டதாக உள்ளது. இந்த பெட்ரோல் கார்கள் 20.3kmpl கொண்டதாவும், CNG பொருத்தப்பட்ட மாடல்கள் 30.5m/kg கொண்டதாக இருக்கும். மேலும் இந்த கார்களில் ஆப்பிள் கார்பிளே, ஆண்டிராய்டு ஆட்டோ, மிரார் லிங்க், ரியர் பார்கிங் கேமரா டிஸ்பிளே போன்றவைகளும் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய மாருதி சுசுகி எர்டிகா கார் விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசுகி நிறுவனம், மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை 2018 மாருதி சுசுகி எர்டிகா கார் மாடலை ரூ.7.44 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

புதிய எர்டிகா கார் விலை, வசதிகள், என்ஜின் விபரம் புகைப்படம் போன்றவற்றை தொடர்ந்து காணலாம்.

டிசைன்

சுசூகி நிறுவனத்தின் Heartect பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டாம் தலைமுறை எர்டிகா கார் விற்பனையில் உள்ள மாடலை விட 10 கிலோ வரை எடை குறைந்ததாக வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் மிக நேர்த்தியான கிரில் அமைப்புடன் எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய புராஜெக்ட்ர் முகப்பு விளக்குக்களை கொண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு முந்தைய மாடலின் அளவுகளை பெற்றிருந்தாலும் ஆனால் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ ஆக மட்டும் குறைக்கபட்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் மாருதி டிசையர் மற்றும் புதிய ஸ்விஃப்ட் காரின் வடிவ அம்சங்களை பெற்று மிக நேர்த்தியான இருக்கை மற்றும் தாரளமான இடவசதி கொண்டதாக விளங்குகின்றது.

என்ஜின்

மாருதி சுசூகி நிறுவனத்தின் அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை வழங்கவல்ல Smart Hybrid Vehicle by Suzuki (SHVS) நுட்பத்தை பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் பெற்று விளங்குகின்றது.

105 hp ஆற்றல் மற்றும் 138 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் 4 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று விளங்குகின்றது.

90 hp ஆற்றல் மற்றும் 200 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் DDiS சீரிஸ் டீசல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று விளங்குகின்றது.

மைலேஜ்

எர்டிகா பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 19.34 கிமீ (மேனுவல்)

எர்டிகா பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 18.69 கிமீ (ஆட்டோமேட்டிக்)

எர்டிகா டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 24.52 கிமீ

வசதிகள்

புதிய மாருதி எர்டிகா கார் முந்தைய மாடலை விட பல்வேறு கூடுதல் வசதிகளை பெற்று விளங்குகின்றது. குறிப்பாக இரட்டை காற்றுப்பை, ஏபிஎஸ் பிரேக் மற்றும் இபிடி போன்றவை அனைத்து வேரியன்டிலும் வழங்கப்பட்டு டாப் மாடல்களில் மாருதி ஸ்மார்ட்பிளே அமைப்புடன் கூடிய ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியுடன், ரியர் பார்க்கிங் கேமரா, ஆட்டோமேட்டிக் ஏசி, 15 அங்குல அலாய் வீல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டு விளங்குகின்றது.

போட்டியாளர்கள்

விற்பனையில் உள்ள பிரபலமான டொயோட்டா இன்னோவா கிறிஸ்டா, ரெனோ லாட்ஜி, ஹோண்டா பிஆர்-வி மற்றும் மிக வேகமாக விற்பனை ஆகி வரும் பிரசத்தி பெற்ற புதிய மஹிந்திரா மராஸோ உள்ளிட்ட மாடல்களை நேரடியாக மாருதி எர்டிகா எதிர்கொண்டு மாருதி அரேனா ஷோரூம் வாயிலாக விற்பனை செய்யப்பட்ட உள்ளது.

புதிய எர்டிகா கார் விலை விபரம்

LXi Petrol MT – ரூ. 7.44 லட்சம்
VXi Petrol MT – ரூ. 8.16 லட்சம்
ZXi Petrol MT – ரூ. 8.99 லட்சம்
ZXi+ Petrol MT – ரூ. 9.50 லட்சம்

VXi Petrol AT – ரூ. 9.18 லட்சம்
ZXi Petrol AT – ரூ. 9.95 லட்சம்

LDi Diesel MT – ரூ. 8.84 லட்சம்
VDi Diesel MT – ரூ. 9.56 லட்சம்
ZDi Diesel MT – ரூ. 10.39 லட்சம்
ZDi+ Diesel MT –ரூ. 10.90 லட்சம்

(விற்பனையக விலை பட்டியல்)