ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸ் விலை விபரம் வெளியானது

மிக நீண்டகாலாமக உற்பத்தி செய்யப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 650 சிசி எஞ்சின் பெற்ற ராயல் என்ஃபீல்டு ட்வின்ஸ் என அழைக்கப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டினல் ஜிடி 650 ஆகிய இரு பைக்குகளை ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.

ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸ்

கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட 650சிசி கொண்ட இந்த இரட்டையர்கள் இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு செல்ல உள்ள நிலையில் ஆஸ்திரேலியா சந்தையில் பார்வைக்கு ஏற்றுமதி செய்துள்ள மாடல்களின் வாயிலாக விலை விபரங்கள் கசிந்துள்ளது.

இங்கிலாந்தில் அமைந்துள்ள ராயல் என்ஃபீல்டு டெக்னிக்கல் சென்டர் மற்றும் ஹாரீஸ் பெர்ஃபாமென்ஸ் இணைந்து உருவாக்கப்பட்ட அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இரு மாடல்களிலும் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் கேஸ் நிரம்பிய ட்வீன் ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது.

மேலும் இரு மாடல்களிலும் முன் மற்றும் பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ள இரு பைக்குகளிலும் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.

கான்டினென்டினல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டர் 650 ஆகிய இரு பைக் மாடல்களில் ஏர் மற்றும் ஈயில் கூலிங் 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் டயர் 100/90-18 மற்றும் பின்புறத்தில் டயர் 130/70-18 சக்கரங்களில் 18 அங்குல ஸ்போக் வீலுடன், இரட்டை பிரிவுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் டேக்கோமீட்டர், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் மற்றும் எரிபொருள் அளவினை வழங்கும் காட்டும் கருவி ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.

எரிபொருள் இல்லாமல் 202 கிலோ கிராம் எடை கொண்டுள்ள இன்டர்செப்டார் 650 (198 கிலோ கான்டினென்டினல் ஜிடி) மாடலில் 13.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. 804 மீமீ இருக்கை உயரம் பெற்றுள்ளதால் சற்று உயரம் குறைவானவர்களும் மோட்டார்சைக்கிளை கையாளுவதற்கு எளிமையாக அமைந்திருக்கும்.

ஆஸ்திரேலியா சந்தையில் பார்வைக்கு சென்னையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 பைக்குகளின் விலை விபரங்கள் வெளியாகி உள்ளது.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 ஆஸ்திரேலியா டாலர் 10,000 (ரூ.5 லட்சம்)

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டினல் ஜிடி 650 ஆஸ்திரேலியா டாலர் 10,400 (ரூ. 5.20 லட்சம்)

ஆஸ்திரேலியா சந்தையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள மாடல்களின் அடிப்படையில், இந்திய சந்தையில் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கின் விலை ரூ.4 லட்சத்துக்கு குறைவான விலையில் விற்பனைக்கு வரவாய்ப்புகள் உள்ளது. இதனை விட ரூ.20,000 வரை கூடுலான விலையில் கான்டினென்டினல் ஜிடி 650 பைக் விலை அமைந்திருக்கும். விற்பனைக்கு வரும் நாட்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை.

ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறிய டெஸ்லா, ஸ்பேஸ்X நிறுவனங்கள் #DeleteFacebook

தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர், முதலீட்டார் என பல்வேறு பரிமானங்களை கொண்ட எலான் மஸ்க் தலைமையின் கீழ் செயல்படும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்X போன்ற நிறுவனங்களின் அதிகார்வப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் நீக்கப்பட்டுள்ளது.

டெலிட் ஃபேஸ்புக்

உலகின் முதன்மையான சமூக வலைதளமாக விளங்கும் ஃபேஸ்புக் பயனர்களின் தரவுகளை கொண்டு கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் அரசியல் ரீதியான மாற்றங்களை அமெரிக்கா , இந்தியா போன்ற நாடுகளில் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து #DeleteFacebook என்ற டேக்லைன் தொடர்ந்து டிரென்டாகியுள்ள நிலையில் பிரசத்தி பெற்ற எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான டெஸ்லா மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் ஸ்பேஸ்X ஆகிய இரு நிறுவனங்களின் அதிகார்வப்பூர்வ ஃபேஸ்புக் பக்கங்களை நீக்கியுள்ளது.

பிரசத்தி பெற்ற எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளராக விளங்கும் டெஸ்லா நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ பக்கம் உட்பட விண்வெளி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பக்கங்களை கோடிக்கணக்கான பயனாளர்ளை பெற்றிருந்த நிலையில், மிக தைரியமாக ஃபேஸ்புக்கிலிருந்து இந்த நிறுவனங்களின் பக்கத்தை எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – பிப்ரவரி 2018

இந்தியளவில் கடந்த பிப்ரவரி 2018 மாதந்திர இரு சக்கர வாகன விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை டாப் 10 பைக்குகள் – பிப்ரவரி 2018 செய்தி தொகுப்பில் பற்றி அறிந்து கொள்ளலாம்.

டாப் 10 பைக்குகள் – பிப்ரவரி 2018

100 – 125 சிசி ஸ்கூட்டர் சந்தையில் ஹோண்டா நிறுவனமும், இதே பிரிவு பைக் சந்தையில் ஹீரோ நிறுவனமும் தொடர்ந்து முதலிடத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. நாட்டில் அதிகப்படியாக விற்பனை ஆகின்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஹோண்டா ஆக்டிவா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

125சிசி சந்தையில் தொடர்ந்து ஹோண்டா மற்றும் ஹீரோ நிறுவனத்திற்கு இடையே கடுமையான போட்டி நிகழந்து வரும் சூழ்நிலையில் ஹோண்டா சிபி ஷைன் மாடல் 82,189 அலகுகளை விற்பனை செய்து பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இதன் போட்டியாளரான ஹீரோ கிளாமர் 6வது இடத்தில் உள்ளது.

வழக்கம்போல் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார் சைக்கிள் 10வது இடத்தில் இடம்பெற்று மொத்தம் 48,557 அலகுகளை விற்பனை செய்துள்ளது. மேலும் பல்சர் வரிசை 60,772 அலகுகளை பிப்ரவரி 2018யில் விற்பனை செய்திருக்கின்றது.

டாப் 10 பைக்குகள் – பிப்ரவரி 2018

வ.எண் மாடல் பிப்ரவரி -2018 ஜனவரி -2018
1 ஹோண்டா ஆக்டிவா 2,47,377 2,43,826
2 ஹீரோ ஸ்பிளென்டர் 2,38,722 2,31,356
3 ஹீரோ HF டீலக்ஸ் 1,65,205 1,71,167
4 ஹோண்டா CB ஷைன் 82,189 82,390
5 டிவிஎஸ் XL சூப்பர் 71,931 76,309
6 ஹீரோ கிளாமர் 66,064 75,533
7 டிவிஎஸ் ஜூபிடர் 64,534 64,990
8 ஹீரோ பேஸன் 61,895 61,661
9 பஜாஜ் பல்சர் வரிசை 60,772 56,919
10 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 48,557 53,221

 

மறக்காம படிங்க – விற்பனையில் டாப் 10 கார்கள் பிப்ரவரி 2018

 

மஹிந்திரா , ஃபோர்டு கூட்டணியில் இரண்டு புதிய எஸ்யூவிகள்

இந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளர் மஹிந்திரா மற்றும் அமெரிக்காவின் ஃபோர்டு இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியா உட்பட வளரும் நாடுகளுக்கு விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஃபோர்டு – மஹிந்திரா எஸ்யூவி

முதன்முறையாக 1995 ஆம் ஆண்டு ஃபோர்டு மற்றும் மஹிந்திரா இரு நிறுவனங்களும் கூட்டணி அமைத்து எஸ்கார்ட் செடான் கார் உட்பட ஐகான் மற்றும் மான்டியோ ஆகிய மாடல்களை வெளியிட்டிருந்த நிலையில், இரு கூட்டணி நிறுவனங்களும் பிறகு தனியாக பிரிந்து செய்ல்பட தொடங்கிய நிலையில் ஃபோர்டு இந்தியா நிறுவனம் உருவெடுத்தது. தற்போது மீண்டும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஒரு காம்பேக்ட் எஸ்யூவி உட்பட மின்சார எஸ்யூவி மாடல் என மொத்தம் இரு மாடல்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி ஆட்டோ நிறுவனமும், இந்தியாவின் எஸ்யூவி ராஜாவாக விளங்கும் இரு நிறுவனங்களும் இணைந்து அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரை வடிவமைக்கும் பணிகளை இரு நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ள உள்ளது.  இந்த எஸ்யூவி மாடல் ஃபோர்டு நிறுவனத்தின் பெயரில் ஈக்கோஸ்போர்ட் மற்றும் ஃபோர்டு என்டேவர் ஆகிய இரு மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது.

மேலும் அடுத்த மாடலாக விளங்க உள்ள எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் மஹிந்திரா இவி நிறுவனத்தின் பவர்டெரியின் கொண்டு ஃபோர்டு நிறுவனத்தின் ஆஸ்பயர் செடான் ரக மாடலை பினபற்றி வடிவமைக்கப்பட உள்ள காம்பேக்ட் எஸ்யூவி மாடல் க்ரெட்டா எஸ்யூவிக்கு எதிராக விளங்கும் என கூறப்படுகின்றது.

இரு நிறுவனங்களும் மேற்கொண்டுள்ள மூன்று ஆண்டுகால புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் குறைந்த விலையில் சிறந்த நுட்பங்களை உருவாக்கும் திறனை ஃபோர்டு பெறுவதுடன், ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து மஹிந்திரா சிறந்த என்ஜினியரிங் நுட்பங்களை பெறுவதற்காக கையெழுத்திட்டுள்ளது.  மேலும் ஃபோர்டு நிறுவனத்தின் ஆதரவை மஹிந்திரா வளரும் நாடுகளில் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

இரு நிறுவனங்களின் கூட்டணியில் முதல் எஸ்யூவி மாடல் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 

ஜாவா பைக்குகளில் மஹிந்திரா மோஜோ என்ஜின் பயன்படுத்தபடலாம்

இந்தியாவின் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் தலைமையிலான கூட்டணிக்கு கீழ் உள்ள ஜாவா , பிஎஸ்ஏ போன்ற மோட்டார்சைக்கிள் பிராண்டுகளில், ஜாவா பைக் வரிசை மாடல்களை துரிதமாக உற்பத்தி நிலைக்கு எடுத்துச் செல்ல மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஜாவா பைக்குளில் 300சிசி எஞ்சின்

 

மஹிந்திரா நிறுவனம் இரு சக்கர வாகன சந்தையில் மிக சிறப்பான வளர்ச்சியை பெறும் நோக்கில் பல்வேறு முதலீட்டு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. அவற்றில், குறிப்பாக ஜாவா பிராண்டு பைக்குகளை மீண்டும் இந்திய சந்தையில் நவீனத்துவமான எஞ்சின் அம்சங்களுடன் கிளாசிக் ரக வடிவமைப்பினை பெற்றதாக அறிமுகம் செய்வதற்கான திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஆட்டோகார் ப்ரோஃபெஸனல் (autocarpro) இந்தியா இணையதளம், மஹிந்திரா டூ வீலர் பிரிவு அதிகாரிகளின் மிகவும் நம்பதகுந்த ஒருவர் வாயிலாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், மஹிந்திரா நிறுவனம் , ஜாவா பிராண்டில் பைக்குகளை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மிக தீவரமாக செயற்பட்டு வருவதாகவும், இந்நிறுவனத்தின் பிரபலமான மோஜோ பைக்கில் இடம்பெற்றுள்ள 300சிசி எஞ்சின் மாடலை , வரவுள்ள மோஜோ பைக்கில் பொருத்த வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஜாவா தவிர பி.எஸ்.ஏ பிராண்டு மாடலையும் கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் கார்புரேட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய மோஜோ யூடி300 பைக் மாடலை அறிமுகம் செய்திருந்த நிலையில் குறைவான விலையை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட உள்ள ஜாவா மாடல்கள் இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகளுடன் ஜாவா பாரம்பரியத்தை பெற்றதாக கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வருடத்தின் இறுதி மாதங்கள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் முதன்முறையாக ஜாவா பைக்குகள் உட்பட பிஎஸ்ஏ மாடல்கள் காட்சிக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ள நிலையில் விற்பனைக்கு 2019 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் சந்தையில் கிடைக்கப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 என இரு மாடல்களுக்கும் சவாலாக விளங்கும் வகையிலான ஜாவா பைக்குகள் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2018 ட்ரையம்ப் டைகர் 800 வரிசை பைக்குகள் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் சூப்பர் பைக்குகள் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், ட்ரையம்ப் நிறுவனத்தின், அட்வென்ச்சர் ரக மோட்டார் சைக்கிள் 2018 ட்ரையம்ப் டைகர் 800 வரிசை பைக்குகளில் XR, XRx, XCx என மொத்தம் மூன்று வேரியன்ட்களில் ரூ.11.70 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

2018 ட்ரையம்ப் டைகர் 800

முந்தைய மாடலை விட கூடுதலான சில மாற்றங்களை பெற்று விளங்குகின்ற டைகர் 800 வரிசை பைக்குகளில், இந்திய சந்தையில் XCa வேரியன்டை தவிர மற்ற  XR, XRx, & XCx  என மொத்தம் மூன்று வேரியன்ட்களில் , முந்தைய மாடலை விட 200 க்கு அதிகமான சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டதாக டைகர் 800 வெளிவந்துள்ளது.

தோற்ற அமைப்பில் எல்இடி ஹெட்லைட் உடன் கூடிய எல்இடி ரன்னிங் விளக்குகள், எரிபொருள் டேங்க் பக்கவாட்டில் நேர்த்தியான டிசைன் கொண்டதாகவும், 5 விதமாக மாற்றியமைக்கும் வகையிலான வின்ட்ஷீல்டு பெற்று வந்துள்ளது. ஸ்டீரிட் ட்ரிபிள் மாடலில் இடம்பெற்றுள்ளதை போன்ற TFT எல்சிடி கன்சோல் கொண்டு விளங்குகின்றது.  XR வேரியன்ட் மாடல் ஷோவா சஸ்பென்ஷனை பெற்று விளங்குகின்ற நிலையில், கூடுதலான ஆஃப் ரோடு அனுபவத்தினை பெறும் வகையில் XC வேரியன்டில்  WP சஸ்பென்ஷனை பெற்றுள்ளது. XR, XRx மாடல்களில் 19-inch முன் டயர்/17-inch பின் டயரில் பெற்ற அலாய் வீல் கொண்டுள்ளது. XCx வேரியன்டில் 21-inch முன் டயர்/19-inch பின்புறத்தில் ஸ்போக் வீலை பெற்றுள்ளது.

இன்-லைன் மூன்று சிலிண்டர் பெற்ற 800சிசி எஞ்சின் அதிகபட்சமாக 94 bhp பவர் மற்றும் 79 Nm டார்க்கினை வழங்கவல்லதாக விளங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

2018 Triumph Tiger 800 Price in India

Variants Price (ex-showroom)
Tiger 800 XR ரூ. 11.76 lakh
Tiger 800 XRx ரூ. 13.13 lakh
Tiger 800 XCx ரூ. 13.76 lakh

2018 ஹோண்டா WR-V எட்ஜ் எடிசன் விற்பனைக்கு வந்தது

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், க்ராஸ்ஓவர் ரக கார் மாடலாக விளங்கும் ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் அடிப்படையில் ஹோண்டா WR-V எட்ஜ் எடிசன் ரூ. 8.01 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 ஹோண்டா WR-V எட்ஜ் எடிசன்

மிகவும் ஸ்டைரலிஷான க்ராஸ்ஓவர் ரக மாடலாக விளங்குகின்ற ஹோண்டா WR-V மாடலின் S வேரியன்ட் அடிப்படையில் கூடுதல் வசதிகளை பெற்றதாக வெளியாகியுள்ள எட்ஜ் எடிசன் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

எஞ்சின் ஆற்றல் மற்றும் இழுவைத் திறன் ஆகியவற்றில் மாற்றங்கள் இல்லாமல், 89 பிஹெச்பி ஆற்றலுடன் 109 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்ப்பெற்றுள்ளது. பெட்ரோல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.5 கிமீ ஆகும்.

99 பிஹெச்பி ஆற்றலுடன் 200 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர்  i-DTEC டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. டீசல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 25.5 கிமீ ஆகும்.

WR-V எட்ஜ் எடிசன் மாடலின் தோற்ற அமைப்பில் புதிய மல்டி ஸ்போக் அலாய் வீல் பெற்றிருப்பதுடன், வெள்ளை நிற பெயின்ட் செய்யப்பட்ட மாடல் மற்றும் இன்டிரியர் அமைப்பில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரியர் பார்கிங் செனன்சார் மற்றும் ஹோண்டா கனெக்ட்  கார் ஆப் ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.

ஹோண்டா  WR-V எட்ஜ் எடிசன் பெட்ரோல் – ரூ.8.01 லட்சம்

ஹோண்டா  WR-V எட்ஜ் எடிசன் டீசல் – ரூ.9.01 லட்சம்

சாதாரண எஸ் வேரியன்ட் மாடலை விட ரூ.20,000 விலை கூடுதலாக இந்த சிறப்பு எடிசன் விற்பனைகு கிடைக்க தொடங்கியுள்ளது.

2018 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

160 சிசி சந்தையில் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய மாடலாக விளங்கும் 2018 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக் பற்றி பல்வேறு முக்கிய விபரங்கள் உட்பட சிறப்புகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.

2018 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி முதன்முறையாக 2005 ஆம் ஆண்டில் வெளியிட்ட அப்பாச்சி பிராண்டு அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வரிசையில் அப்பாச்சி ஆர்டிஆர் 160, அதனை தொடர்ந்து அப்பாச்சி ஆர்டிஆர் 180, அப்பாச்சி RTR 200 4V ஆகிய மாடல்களை தொடர்ந்து முழுமையாக அலங்கரிக்கப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து விற்பனைக்கு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அப்பாச்சி 200 பைக்கின் தோற்ற அமைப்பின் உந்துதலை பின்னணியாக கொண்டு கூடுதலான தோற்ற மாற்றங்கள் மற்றும் நுட்பம் தொடர்பான மாற்றங்களை பெற்ற 2018 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் கார்புரேட்டர் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் ஆகியற்றுடன் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக்குகளை பெற்ற இரண்டு பிரிவுகளில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அப்பாச்சி 160 ஸ்டைல்

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் மாடலின் தோற்ற உந்துதலை பெற்றதாக வெளியிடப்பட்டுள்ள புதுப்பிகப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக் மிக கூர்மையான தோற்ற பொலிவினை வழங்கவல்ல பெட்ரோல் டேங்க் பெற்று  மிக நேர்த்தியான ஹெட்லைட் , டெயில் லைட் ஆகியவற்றுடன் இரட்டை குழல் பெற்ற சைலன்சரை பெற்று புதுப்பிக்கப்பட்ட புதுவிதமான ஆலாய் வீலை பெற்று விளங்குகின்றது.

அப்பாச்சி 160 பைக்கில் ரேசிங் சிவப்பு, மெட்டாலிக் நீலம் மற்றும் நைட் கருப்பு ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்க தொடங்கியுள்ளது

அப்பாச்சி 160 எஞ்சின்

முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட புதிய 160 சிசி எஞ்சின் முந்தைய எஞ்சினை காட்டிலும் கூடுதலான வகையில் ஆற்றல் மற்றும் வெப்பத்தை கட்டுப்படுத்தும் ஆயில் கூலிங் நுட்பத்தை பெற்ற நான்கு வால்வுகளை (4V) கொண்ட டெக்னாலாஜி முறையை பெற்றதாக கார்புரேட்டர் மற்றும் எஃப்ஐ என இரண்டு எஞ்சின் தேர்வுகளில் கிடைக்க தொடங்கியுள்ளது.

ஆயில் கூலிங் அம்சத்துடன் கூடிய அப்பாச்சி 160 பைக்கில் 159.7cc எஞ்சினுடன் 4 வால்வுகளுடன் கார்புரேட்டர் மாடல் அதிகபட்சமாக 16.5hp பவர் , 14.8 Nm டார் க் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது. மேலும் ஆயில் கூலிங் அம்சத்துடன் கூடிய அப்பாச்சி 160 பைக்கில் 159.7cc எஞ்சினுடன் 4 வால்வுகளுடன் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் மாடல் அதிகபட்சமாக 16.8hp பவர் , 14.8 Nm டார் க் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது.  இரு மாடல்களும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

அப்பாச்சி 160 வசதிகள்

மிக சிறப்பான ரைடிங் ஸ்டைல் பொசிஷன் கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ள அப்பாச்சி 160 பைக்கில் மிக நேர்த்தியான முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் பெற்று ஒற்றை இருக்கை அமைப்புடன், 800 மிமீ இருக்கை உயரம் பெற்ற அப்பாச்சி 160 பைக்கில் டிரம் பிரேக் மாடல் 145 கிலோ எடை, டிஸ்க் பிரேக் மாடல் 145 கிலோ எடையை பெற்று பெட்ரோல் டேங்க் கொள்ளவை 12 லிட்டர் பெற்று விளங்குகின்றது.

புதிய அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கில் முன்புறத்தில் 33 மிமீ ஷோவா டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் பின்புறத்தில் முதன்முறையாக மோனோ ஷாக் அப்சார்பரை அப்பாச்சி 160 பெற்று  விளங்குகின்றது. மேலும் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படவில்லை.

அப்பாச்சி 160 போட்டியாளர்கள்

யமஹா FZ-S FI, ஹோண்டா ஹார்னெட் 160R, பஜாஜ் பல்சர் 160NS, மற்றும் பிரபலமான சுஸூகி ஜிக்ஸெர் ஆகியவற்றுடன் புதிதாக வெளியான ஹோண்டா எக்ஸ்-பிளேடு ஆகியவற்றுடன் போட்டியிடும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மிகவும் சவாலை வழங்கவல்லதாக உள்ளது.

அப்பாச்சி 160 பைக் விலை

போட்டியாளர்களுக்கு மிக சவாலை ஏற்படுத்தும் விலையில் வெளியிடப்பட்டுள்ள அப்பாச்சி 160 பைக் மிக சிறப்பான வசதிகளை கொண்டதாக 160சிசி சந்தையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 35 ஆண்டுகால ரேசிங் அனுபவத்தினை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் மாடலின் வேரியன்ட் வாரியான விலை பட்டியல் பின் வருமாறு ;-

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V –  ரூ. 81,490 (carb front disk brake version)

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V  – ரூ. 84,490 (Carb double disc version)

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V  – ரூ. 89,990 ( EFi double disc version)

( எக்ஸ்-ஷோரூம் விலை )

2018 ஹோண்டா CBR 250R பைக் விற்பனைக்கு வெளியானது

மேம்படுத்தப்பட்ட புதிய 2018 ஹோண்டா CBR 250R பைக்கில் புதிய பாடி கிராபிக்ஸ், பாரத் ஸ்டேஜ் 4 எஞ்சின் ஆகியவற்றை பெற்றிருப்பதுடன் 4 வித புதிய நிறங்களை பெற்றதாக ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் விலை ரூ. 1.63 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

2018 ஹோண்டா CBR 250R

தோற்ற அமைப்பில் புதுவிதமான பாடி கிராபிக்ஸ் பெற்று முகப்பு அமைப்பில் புதிய எல்இடி ஹெட்லைட் பெற்றதாக  வந்துள்ள சிபிஆர் 250ஆர் பைக்கில் நான்கு விதமான கிரே-ஆரஞ்சு, கிரே-பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மெக்கானிக்கல் அமைப்புகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாமல், பிஎஸ்-3 எஞ்சினுக்கு மாற்றாக மேம்படுத்தப்பட்ட 249.6 சிசி பாரத் ஸ்டேஜ் 4 எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 26.5hp ஆற்றல் மற்றும் 22.9Nm இழுவைத் திறன் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

அப்சைடு ஃபோர்க்கினை முன்புறத்தில் பெற்று பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரை கொண்டதாக வந்துள்ள இந்த பைக்கில் முன்புறத்தில் 296 மீமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ டிஸ்க் பிரேக் கொண்டதாக  வந்துள்ளது. மேலும் இந்த பைக்கில் ஆப்ஷனாலாக டூயல்-சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்றதாக கிடைக்கின்றது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டுள்ள இந்த பைக்கின் எடை 167 கிலோ ஆகும்.

2018 ஹோண்டா CBR 250R  விலை பட்டியல்

CBR 250R STD – ரூ. 1.63 லட்சம்

CBR 250R ABS – ரூ. 1.94 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

நிசான், டட்சன் கார்கள் விலை 2 % உயருகின்றது

இந்தியா பயணிகள் வாகன சந்தையில் நிசான் நிறுவனம் விற்பனை செய்கின்ற கார்கள் மற்றும் எஸ்யூவி உட்பட, பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகின்ற டட்சன் பிராண்டு மாடல்கள் விலை ஆகியவை அதிகபட்சமாக 2 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

நிசான், டட்சன் கார்கள்

இந்திய சந்தையில் நிசான் இந்தியா நிறுவனம் மைக்ரா, மைக்ரா ஏக்டிவ், சன்னி செடான், டெரானோ எஸ்யூவி உட்பட பிரிமியம் ரக நிசான் ஜிடி-ஆர் ஆகிய மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. டட்சன் நிறுவனத்தின் கோ, ரெடி-கோ, மற்றும் கோ பிளஸ் ஆகியவற்றை விற்பனை செய்கின்றது.

மாறி வரும் சூ ழ்நிலை, அதிகரித்து வரும் உற்பத்தி செலவீனங்கள் ஆகியவற்றில் கருத்தில் கொண்டு நிசான் பிராண்டு கார்கள் மற்றும் எஸ்யூவி உட்பட இந்நிறுவனத்தின் துனை பிராண்டாக விளங்கும் டட்சன் கார்கள் விலையும் அதிகபட்சமாக 2 சதவீதம் உயர்த்தப்பட்டுவதுடன் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு மிக சிறப்பான தரம் மற்றும் சேவையை வழங்க உள்ளதாக இந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.60,000 வரை விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில், அதனை தொடர்ந்து ஆடி ஆடம்பர சொகுசு நிறுவனமும் கார் விலையை உயர்த்தியுள்ளது.