50,000 கார்களை விற்பனை செய்த ஹோண்டா WR-V க்ராஸ்ஓவர்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், கடந்த மார்ச் 2017-யில் விற்பனைக்கு வந்த ஹோண்டா WR-V க்ராஸ்ஓவர் கார் 50,000 அலகுகளை விற்பனை செய்து புதிய சாதனை மைல்கல்லை எட்டியுள்ளது.

 ஹோண்டா WR-V க்ராஸ்ஓவர்

ஒரு வருடத்தில் சுமார் 50,000 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ள டபிள்யூஆர்-வி க்ராஸ்ஓவர் மாடல் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் மார்ச் 2017 முதல் இதுவரை 28 சதவீத பங்களிப்பினை பெற்றதாக விளங்குகின்றது.

மொத்தம் 4 விதமான வேரியன்டில் கிடைக்கின்ற ஹோண்டா WR-V க்ராஸ்ஓவர் மாடலின் டாப் VX வேரியன்ட் மொத்த விற்பனையில் 80 சதவீத பங்களிப்பும், பெட்ரோல் மாடல் 42 சதவீதம், 58 சதவீதம் டீசல் மாடலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் விற்பனை செய்யப்பட்டுள்ள 50 ஆயிரம் கார்களில் முதற்கட்ட நகரங்களில் 38 சதவீம், இரண்டாம் கட்ட நகரங்கள் 30 சதவீதம், மூன்றாம் தர நகரம் 32 சதவீதமாக உள்ளது. பிராந்திய ரீதியான விற்பனையில் வடக்கு பகுதியில் 30 சதவீதமும், தெற்கில் 27 சதவீதமும், கிழக்கில் 15 சதவீமும், மேற்கு இந்தியாவில் 28 சதவீதமும் பதிவு செய்துள்ளது.

சமீபத்தில் இதனை கொண்டாடும் வகையில் WR-V எட்ஜ் சிறப்பு எடிசனை வெளியிட்டுள்ள நிலையில், இந்த காரில் 89 பிஹெச்பி ஆற்றலுடன் 109 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்ப்பெற்றுள்ளது. பெட்ரோல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.5 கிமீ ஆகும்.

99 பிஹெச்பி ஆற்றலுடன் 200 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர்  i-DTEC டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. டீசல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 25.5 கிமீ ஆகும்.

ஹோண்டா WR-V கார் ரூ. 7.78 லட்சம் முதல் ரூ.10.00 லட்சத் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.