டொயோட்டா யாரீஸ் கார் அறிமுக தேதி & முன்பதிவு விபரம்

இந்தியாவின் காம்பேக்ட் ரக செடான் கார் மாடல்களுக்கு மிக சவாலாக அமையவுள்ள டொயோட்டா யாரீஸ் செடான் காரின் எஞ்சின் , சிறப்பு வசதிகள் மற்றும் நுட்ப விரங்களை முழுமையாக தொடர்ந்து படித்து அறிந்து கொள்ளலாம்.

டொயோட்டா யாரிஸ் கார்

இந்தியாவில் மிகவும் தரமான மற்றும் நம்பகமான கார் தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்று விளங்கும் டொயோட்டா இந்தியா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய நடுத்தர ரக பிரிவு செடான் கார் மாடலான யாரிஸ் கார் பல்வேறு வெளிநாடுகளில் யாரிஸ் அல்லது வயோஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

டிசைன்

உலகின் அதிகம் விற்பனை ஆகின்ற செடான் மாடலாக விளங்கும் கரோல்லா காரின் தோற்ற அமைப்பினை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில் மிக நேர்த்தியா பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள், புராஜெக்ட் ஹெட்லைட் பெற்றிருக்கின்றது.

4,425 மிமீ நீளம் கொண்டுள்ள யாரிஸ் காரில் மிக தாராளமான இடவசதியை வழங்கும் நோக்கில் 2,550 மிமீ வீல்பேஸ் பெற்று பக்கவாட்டில் அலாய் வீல், பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு ஆகியவற்றை கொண்டுள்ளது.

இன்டிரியர்

மிகவும் தாராளமான இடவசதியை பெற்றதாக வரவுள்ள யாரிஸ் காரின் டேஸ்போர்டில் பல்வேறு நவீன அம்சங்களை உள்ளடக்கிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றிருக்கும். இந்த அமைப்பில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய வசதிகளுத் இடம்பெற்றிருக்கலாம்.

தொடுதிரை நேவிகேஷன், ரியர் வியூ கேமரா, மேற்கூறையில் வழங்கப்பட்டுள்ள ஏர்கான் வென்ட், பின்புற மூன்று இருக்கைகளுக்கு ஹெட்ரெஸ்ட் அமைப்பு, எலக்ட்ரிக் மூலம் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஓட்டுநர் இருக்கை மற்றும் முன்பக்க பார்க்கிங் சென்சார் போன்றவற்றை கொண்டிருக்கும்.

எஞ்சின்

முதற்கட்டமாக யாரிஸ் செடான் காரில் 108hp பவரை வழங்கவல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலில் 7 வேக சிவிடி கியர்பாக்ஸ் அல்லது 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் என இரு தேர்வுகளில் கிடைக்க உள்ளது. டீசல் எஞ்சின் பெற்ற மாடல் மற்றும் ஹைபிரிட் ரக பெட்ரோல்-எலெக்ட்ரிக் மாடல்கள் தாமதமாக விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது.

சிறப்பம்சங்கள்

பாதுகாப்பு சார்ந்த ASEAN NCAP கிராஸ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்று விளங்கும் யாரிஸ் காரில் இந்த செக்மென்ட் பிரிவில் உள்ள மாடல்களை இடம்பெறாத நான்கு சக்கரங்களில் டிஸ்க் பிரேக், 7 ஏர்பேக்குகள் , டயர் பிரெஷர் மானிட்டெரிங், ஏபிஎஸ், இபிடி, இஎஸ்பி மற்றும் ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் ஆகியவற்றை பெற்றிருக்க உள்ளது.

போட்டியாளர்கள்

இந்தியாவில் முன்னணி காம்பேக்ட் ரக செடான் மாடலாக விளங்கும் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சியாஸ் ஆகிய மாடல்களை நேரடியாக யாரிஸ் கார் எதிர்கொள்ள உள்ளது. மேலே வழங்கப்பட்டுள்ள போட்டியாளர்களை விட மிக சிறப்பான இடவசதி மற்றும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கொண்டதாக விளங்க உள்ளது.

 

விலை & வருகை விபரம்

எட்டியோஸ் மற்றும் கரோல்லா அல்டிஸ் ஆகிய இரு மாடல்களுக்கு இடையே மிகவும் சவாலான விலையில் டொயோட்டா யாரீஸ் கார் 2018 மே மாதம் 18ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிகார்ப்பூர்வ முன்பதிவு ஏப்ரல் 22ந் தேதி தொடங்கப்பட உள்ளது.

விற்பனையில் உள்ள போட்டியாளர்களை ஈடுகொடுக்கும் வகையில் உள்நாட்டில், பெரும்பாலான பாகங்கள் உற்பத்தி செய்யப்படுவதனால், டொயோட்டா யாரிஸ் கார் விலை ரூ.8.50 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சமாக ரூ.13.50 லட்சம் வரை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

Toyota Yaris Image Gallery

ரூ. 6000 விலை குறைந்த பஜாஜ் CT100 பைக் விலை ரூ. 30,174 மட்டுமே

இந்தியாவின் மிக விலை குறைந்த மோட்டார்சைக்கிள் மாடலாக விளங்குகின்ற பஜாஜ் CT100 பைக் மாடலின் விலை ரூ.2000 வரை குறைக்கப்பட்டு ரூ.30,174 ஆரம்ப விலையில் பஜாஜ் சிடி100 மொத்தம் மூன்று விதமான வேரியன்டில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

பஜாஜ் CT100 பைக்

குறைந்த விலை மோட்டார்சைக்கிளை விற்பனை செய்யும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சிடி 100 மாடலின் விலை ரூ. 1939 முதல் அதிகபட்சமாக ரூ. 6835 வரை விலை குறைக்கப்பட்டு விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. சிடி100 பைக் மாடல் சிடி100பி, கிக் ஸ்டார்ட்டர் அலாய் வீல் , மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்டர் ஆகிய மூன்று வேரியன்டில் கிடைக்கின்றது.

இவற்றில் CT100B , KS Alloy ஆகிய இரு வேரியன்ட்களில் 97.2சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8 bhp ஆற்றல் மற்றும் 8.05 Nm டார்கினை வழங்குகின்றது. CT 100 ES Alloy வீல் பெற்ற மாடலில் 102சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7.5 bhp ஆற்றல் மற்றும் 8.24 Nm டார்கினை வழங்குகின்றது  இந்த இரண்டு மாடலிலும் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மணிக்கு 90 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட இந்த பைக்குகளில், முன்புறத்தில் 125 மிமீ ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுடன் 110மிமீ பிரேக்கினை டயரில் பெற்றுள்ளது,. பின்புறத்தில் 100மிமீ பயணிக்கும் திறன் பெற்ற SNS ட்வின் சாக் அப்சார்பருடன் , டயரில்  110மிமீ பிரேக்கினை கொண்டதாக விளங்குகின்றது.

டிவிஎஸ் XL100, டிவிஎஸ் ஸ்போர்ட் , ஹீரோ எச்எஃப் டான் ஆகிய மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் பஜாஜ் சிடி 100 பைக்கின் விலை அமைந்துள்ளது.

Bajaj CT100 Price List :
வேரியன்ட் புதிய விலை பழைய விலை வித்தியாசம்
CT100 B ரூ. 30,174 ரூ. 32,653 ரூ. 1939
CT100 KS Alloy ரூ. 31,802 ரூ. 38,637 ரூ. 6835
CT100 ES Alloy ரூ. 39,885 ரூ. 41,997 ரூ. 2112

(அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

உலகின் சிறந்த கார் 2018 விருதினை வென்ற வால்வோ XC60 எஸ்யூவி

சமீபத்தில் தொடங்கியுள்ள நியூ யார்க் மோட்டார் ஷோ அரங்கில் உலகின் சிறந்த கார் 2018 விருது உட்பட 5 பிரிவுகளில் சிறந்த மாடல்களை உலகின் முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளனர். இந்த பட்டியிலில் உலகின் சிறந்த கார் 2018 விருதினை வால்வோ XC60 எஸ்யூவி கைப்பற்றியுள்ளது.

 உலகின் சிறந்த கார் 2018

சர்வதேச அளவில் 82 முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் இடம்பெற்றுள்ள சிறந்த கார் தேர்வு முறையில் பங்கேற்ற பல்வேறு கார்களில் இறுதிச்சுற்றில் இடம்பிடித்துள்ள டாப் மூன்று கார்களில் உலகின் சிறந்த கார் 2018 விருதினை வெல்ல மூன்று எஸ்யூவி மாடல்களுக்கு இடையே மிக கடுமையான போட்டி நிகழந்த நிலையில் வால்வோ கைப்பற்றியுள்ளது.

உலகின் சிறந்த கார் மட்டுமல்லாமல் உலகின் சிறந்த சொகுசு கார்   , உலகின் சிறந்த பெர்ஃபாமென்ஸ் கார் , உலகின் சிறந்த சுற்றுசூழல் கார் , உலகின் சிறந்த அர்பன் கார் மற்றும் உலகின் சிறந்த டிசைன் கார் என மொத்தம் 6 பிரிவுகளில் வழங்கப்படுகின்றது.

World Car Of The Year 2018 :

வால்வோ XC60 எஸ்யூவி போட்டியாளர்களான மஸ்தா சிஎக்ஸ்-5 மற்றும் ரேஞ்ச் ரோவர் வேலர் ஆகிய மாடல்களை வீழ்த்தி முதலிடத்தை பெற்று உலகின் சிறந்த கார் 2018 விருதினை கைப்பற்றியுள்ளது. கடந்த வருடம் ஜாகுவார் F-Pace இந்த விருதினை கைப்பற்றியது.

World Urban Car Of The Year 2018 :

வெற்றியாளர் – Volkswagen Polo

போட்டியாளர்கள் – Ford Fiesta, Suzuki Swift

World Luxury Car Of The Year 2018 ;

வெற்றியாளர் – Audi A8

போட்டியாளர்கள் – Porsche Cayenne, Porsche Panamera

 

World Performance Car Of The Year 2018 :

வெற்றியாளர் – BMW M5

போட்டியாளர்கள் – Honda Civic Type R, Lexus LC 500

World Green Car Of The Year 2018 :

 

வெற்றியாளர் – Nissan Leaf

போட்டியாளர்கள் – BMW 530e iPerformance,  Chrysler Pacifica Hybrid

World Car Design Of The Year 2018 :

வெற்றியாளர் – Range Rover Velar

போட்டியாளர்கள் – Volvo XC60, Lexus LC 500

2018 பஜாஜ் பல்சர் 150 பைக் விலை விபரம் வெளியானது

17 ஆண்டுகாலாமாக இந்திய சந்தையில் இளைஞர்களின் இதயதுடிப்பை எகிறவைக்கும் பல்சர் வரிசை மாடலின் முதல் பல்சர் 150 பைக் மாடலின் மேம்படுத்தப்பட்ட 2018 பஜாஜ் பல்சர் 150 பைக் விலை ரூ.78,234 என இணையத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது.

2018 பஜாஜ் பல்சர் 150 பைக் படங்கள்

Spy Image Source: iamabikerdotcom

அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு வரவுள்ள புதிய பல்சர் 150 பைக்கில் பாரத் ஸ்டேஜ் 4 தர மாசு விதிகளுக்கு உட்பட 13.8 hp பவர் மற்றும் 13.4 Nm டார்க்கினை வழங்கவல்ல 150சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

பல்வேறு குறிப்பிடதக்க புதிய வசதிகளை பல்சர் 150 பைக் பெற்றிருந்தாலும் தோற்ற அமைப்பில் புதிய கிராபிக்ஸை பெற்று ஒற்றை இருக்கை அமைப்பிற்கு மாற்றாக இரு பிரிவை பெற்ற ஸ்பிளிட் இருக்கை மற்றும் புதிய கிராப் ரெயில் பெற்றிருப்பதுடன், கூடுதலாக பின்புறத்தில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பல்சர் 150 பைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில் 37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்கினை பெற்று சைலன்சரில் புதிய கிரில் அமைப்பினை பெற்று புதிய ஃபூட் பெக் மற்றும் பிரேக் அசெம்பிளி அமைப்பினை பெற்றதாக வந்துள்ளது.

17 அங்குல அலாய் வீலை கருப்பு நிறத்தில் பெற்றுள்ள புதிய பல்சர் 150 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படவில்லை என்பதனால், ஏப்ரல் 1, 2018 க்கு முன்பாக சந்தையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  வருகின்ற ஏப்ரல் 1, 2018 முதல் 125சிசி க்கு கூடுதலான பைக்குகளில் கட்டயாயமாக ஏபிஎஸ் பிரேக்கினை பெற்றிருப்பது அவசியமாகின்றது.

இது முந்தைய மாடலை விட ரூ. 2500 வரை அதிகரிக்கப்பட்டு புதிய பல்சர் 150 பைக் விலை ரூ.78,234 (எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு) ஆக அமைந்திருக்கலாம்.

50,000 கார்களை விற்பனை செய்த ஹோண்டா WR-V க்ராஸ்ஓவர்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், கடந்த மார்ச் 2017-யில் விற்பனைக்கு வந்த ஹோண்டா WR-V க்ராஸ்ஓவர் கார் 50,000 அலகுகளை விற்பனை செய்து புதிய சாதனை மைல்கல்லை எட்டியுள்ளது.

 ஹோண்டா WR-V க்ராஸ்ஓவர்

ஒரு வருடத்தில் சுமார் 50,000 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ள டபிள்யூஆர்-வி க்ராஸ்ஓவர் மாடல் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் மார்ச் 2017 முதல் இதுவரை 28 சதவீத பங்களிப்பினை பெற்றதாக விளங்குகின்றது.

மொத்தம் 4 விதமான வேரியன்டில் கிடைக்கின்ற ஹோண்டா WR-V க்ராஸ்ஓவர் மாடலின் டாப் VX வேரியன்ட் மொத்த விற்பனையில் 80 சதவீத பங்களிப்பும், பெட்ரோல் மாடல் 42 சதவீதம், 58 சதவீதம் டீசல் மாடலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் விற்பனை செய்யப்பட்டுள்ள 50 ஆயிரம் கார்களில் முதற்கட்ட நகரங்களில் 38 சதவீம், இரண்டாம் கட்ட நகரங்கள் 30 சதவீதம், மூன்றாம் தர நகரம் 32 சதவீதமாக உள்ளது. பிராந்திய ரீதியான விற்பனையில் வடக்கு பகுதியில் 30 சதவீதமும், தெற்கில் 27 சதவீதமும், கிழக்கில் 15 சதவீமும், மேற்கு இந்தியாவில் 28 சதவீதமும் பதிவு செய்துள்ளது.

சமீபத்தில் இதனை கொண்டாடும் வகையில் WR-V எட்ஜ் சிறப்பு எடிசனை வெளியிட்டுள்ள நிலையில், இந்த காரில் 89 பிஹெச்பி ஆற்றலுடன் 109 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்ப்பெற்றுள்ளது. பெட்ரோல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.5 கிமீ ஆகும்.

99 பிஹெச்பி ஆற்றலுடன் 200 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர்  i-DTEC டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. டீசல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 25.5 கிமீ ஆகும்.

ஹோண்டா WR-V கார் ரூ. 7.78 லட்சம் முதல் ரூ.10.00 லட்சத் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

ரேஞ்ச் ரோவர் எவோக் கன்வெர்டிபிள் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

இந்திய மோட்டார் வாகன சந்தையில், முதல் கன்வெர்டிபிள் ரக எஸ்யூவி மாடலாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின்,  ரேஞ்ச் ரோவர் எவோக் கன்வெர்டிபிள் எஸ்யூவி ரூ.69.50 லட்சம் விலையில் பல்வேறு வசதிகளை பெற்ற மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ரேஞ்ச் ரோவர் எவோக் எஸ்யூவி

ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் , இந்திய மோட்டார் சந்தையில் வெளியிட்டுள்ள டிராப் டாப் எஸ்யூவி மாடல் எவோக் HSE டைனமிக் என்ற ஒற்றை வேரியன்டில் முழுமையான பல்வேறு வசதிகளை கொண்டதாக 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பெற்றதாக வெளியாகியுள்ளது.

ஜேஎல்ஆர் நிறுவனத்தின் 2.0 இஞ்சினியம் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 240 ஹெச்பி ஆற்றல் மற்றும் 340 என்எம் இழுவைத் திறன் வெளிப்படுத்தும், இதில் நான்கு சக்கரங்களுக்கு பவரை எடுத்துச் செல்ல 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ரேஞ்ச் ரோவர் எவோக் எஸ்யூவி மாடல் அதிகபட்சமாக மணிக்கு 217 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக விளங்குவதுடன், 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8 விநாடிகள் எடுத்துக் கொள்ளும்.

இந்த மாடலில் இடம்பெற்றுள்ள மேற்கூறை மிக சிறப்பான வகையில் சாலை சப்தம் உட்பட சிறப்பான கேபின் தரத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு ஃபேபரிக் கொண்ட இந்த கூறை மணிக்கு 48 கிமீ வேகம் வரை திறந்த நிலையிலும், முழுமையாக மேற்கூறை எலக்ட்ரிக் கொண்டு இயக்கப்படுவதனால் 21 விநாடிகளில் முழுமையாக மூடிக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எஸ்யூவி மாடலில் ஸெனான் எல்இடி ஆடாப்டிவ் ஹெட்லைட் வழங்கப்பட்டு ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, சுற்றுப்புறத்தில் பார்க்கும் வகையிலான கேமரா, வை-ஃபை ஹாட்ஸ்பாட், இன்டச் கன்ட்ரோல் ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை பெற்றுள்ளது.

ரேஞ்ச் ரோவர் எவோக் எஸ்யூவி விலை ரூ. 69.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

 

டாடா மோட்டார்சின் புதிய டாடா நெக்ஸான் XZ வேரியன்ட் விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனையில் சிறப்பான வளர்ச்சி பெற்று வரும் டாடா மோட்டார்ஸ் , கடந்த ஆண்டு வெளியிட்ட காம்பேக்ட் ரக நெக்ஸான் எஸ்யூவி மாடலில் டாப் XZ+ வேரியன்டில் சில வசதிகளை நீக்கி விட்டு XZ வேரியன்ட் மாடலை ரூ. 7.99 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

டாடா நெக்ஸான் XZ

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், காம்பேக்ட் ரக எஸ்யூவி சந்தையில் மிக கடுமையான போட்டியை எதிர்கொண்டு வரும் நெக்ஸான் தொடர்ந்து விற்பனையில், தனது சிறப்பான வடிவமொழி மற்றும் செயல்திறன் காரணமாக அமோக வரவேற்பினை பெற்று விளங்குகின்றது.

நெக்ஸான் எக்ஸ்இசட் மாடலில் பகல் நேர ரன்னிங் விளக்குகள், அலாய் வீல், முன் மற்றும் பின் இருக்கை ஹேண்ட் ரெஸ்ட், 60 ; 40 மடக்கும் வகையிலான இருக்கை அமைப்பு, ஸ்மார்ட் கீ உடன் இணைந்த புஸ் ஸ்டார்ட் பட்டன், முன் மற்றும் பின் பனி விளக்குகள் மற்றும் டீஃபோகர் ஆகிய வசதிகளை  டாப் XZ+ வேரியன்டலிருந்து XZ மாடல் இழந்துள்ளது.

ஆனால் தொடர்ந்து புராஜெக்டர் ஹெட்லைட், ஹார்மன் 6.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ , வாய்ஸ் கமாண்ட், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட வசதிகள் தொடர்ந்து கிடைக்கப்பெற உள்ளது.

எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் ஆகியவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்ற எஸ்யூவிக்கு ஏற்ற வகையில் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரெவோடார்க் வரிசையில் புத்தம் புதிதாக வரவுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எஞ்சினிலும்  6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

இந்த பிரிவில் முதன்முறையாக மல்டி டிரைவ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோடின் வாயிலாக நெக்சன் எஸ்யூவி மாடலை ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என்ற மூன்று விதமான டிரைவிங் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக கன்சோல் கியர் லிவர் பகுதியில் டயல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மூன்று விதமான மோட்களில் நமக்கு தேவையானதை மாற்றிக் கொள்ளலாம்.

ஈக்கோ டிரைவிங் மோட் அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை பெற உதவும்.

சிட்டி டிரைவிங் மோட் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஓட்டுவதற்கு சிறப்பானதாக இருக்கும்.

ஸ்போர்ட் டிரைவிங் மோட் மூலமாக அதிக செயல்திறனை பெற வழிவகுக்கும் பயணத்தை தேற்கொள்ளலாம்.

டாடா நெக்ஸான் XZ பெட்ரோல் – ரூ.7.99 லட்சம்

டாடா நெக்ஸான் XZ டீசல் – ரூ.8.99 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காட்சியில் அறிமுகம் செய்யபட்ட ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் மே மாதம் மத்தியில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

அடுத்த தலைமுறை பஜாஜ் பல்சர் வருகை விபரம்

இந்திய இளைஞர்களின் ரேசிங் ஸ்போர்ட்ஸ் மாடலாக விளங்கி வருகின்ற பஜாஜ் பல்சர் பைக் வரிசை மாடல்களின் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட பஜாஜ் பல்சர் பைக்குகள் பிஎஸ் 6 எஞ்சினுடன் 2019 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

2020 பஜாஜ் பல்சர் வரிசை

2001 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகின்ற பல்சர் வரிசை பைக்குகள் தொடர்ந்து முன்னணி மாடலாக விளங்கி வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் புதுப்பிக்கப்பட்ட UG5 பல்சர் 150 பைக் மாடல் வெளியாக உள்ள நிலையில், பாரத் ஸ்டேஜ் 6 மாசு விதிகளுக்கு உட்பட்ட UG6 பல்சர் பைக் வரிசை 150சிசி முதல் 250சிசி வரையிலான திறனில் உருவாக்கும் பணியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செயற்படுத்த தொடங்கியுள்ளதாக ஆட்டோகார் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது 2-வால்வு, DTS-i எஞ்சின் மாடலுக்கு மாற்றாக 4 வால்வுகளை கொண்ட என்ஜின்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட தொடங்கியுள்ள நிலையில் 150சிசி போன்ற குறைந்த திறன் கொண்ட மாடல்கள் கார்புரேட்டர் எஞ்சினுடன் கூடுதல் சிசி கொண்ட பல்சர் 200, பல்சர் 220, பல்சர் 250 ஆகியவை எஃப்ஐ எஞ்சினை பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.

புதிய டிசைன்

தற்போதுள்ள வடிவ மொழியை முற்றிலும் மாற்றப்படாமல் சில அடிப்படையான தாத்பரியங்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு மிக நேர்த்தியான ஸ்டைலிஷான பெட்ரோல் டேங்க், அலாய், வீல், முழுமையான எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் விளக்கு, மோனோ ஷாக் அப்சார்பர் என அதிகபட்ச பிரிமியம் வசதிகளை பெற்றதாக வரவுள்ளது.

புதிய பல்சர் 250

தற்போது பல்சர் வரிசையில் பல்சர் 150. பல்சர் 160, பல்சர் 180, பல்சர் 200, பல்சர் 220 ஆகிய மாடல்களை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த வரிசையில் பல்சர் 180 பைக் மாடல் சந்தையிலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தேலும் கூடுதலாக டியூக் 250 எஞ்சினை அடிப்படையாக கொண்டு பல்சர் 250 பைக் விற்பனைக்கு வெளியிடபகபட வாய்ப்புகள் உள்ளது.

பல்ஸர் UG6 வருகை விபரம்

தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியுள்ளதால், முதல்முறையாக பல்ஸர் பைக் வரிசை 2019 ஆம் ஆண்டின் மத்தியில் பார்வைக்கு வெளியாக உள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2020 ஆம் ஆண்டின் மத்தியில் பல்சர் வரிசை விற்பனைக்கு வெளியாக வாய்ப்புகள் உள்ளது.

 

 

2018 ஹோண்டா லிவோ, ட்ரீம் யுகா பைக்குகள் விற்பனைக்கு வந்தது

மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்ட 2018 ஹோண்டா லிவோ, ஹோண்டா ட்ரீம் யுகா ஆகிய இரு பைக் மாடல்களை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

2018 ஹோண்டா லிவோ, ட்ரீம் யுகா

விற்பனைக்கு வந்துள்ள இரண்டு மாடல்களும் முந்தைய மாடலை விட கூடுதலான சில மாற்றங்களை பெற்றிருக்கின்றது. குறிப்பாக குறைந்தபட்ச பாரமரிப்பு கொண்ட டிரைவ் செயின், குறைந்த உராய்வினை வெளிப்படுத்தக்கூடிய ஹோண்டா இக்கோ டெக்னாலாஜி டயர்களை பெற்றதாக வந்துள்ளது.

லிவோ 110சிசி பைக்கில் மிக நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் ஸ்டைலுடன், டிஜிட்டல் அனால்க் கிளஸ்ட்டரை பெற்று விளங்குவதுடன்கருப்பு, நீலம், மெட்டாலிக் கிரே, சிவப்பு மற்றும் மெட்டாலிக் பிரவுன் ஆகிய நிறங்களை பெற்று டரிம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இரண்டு வேரியன்டில் கிடைக்கின்றது.

ட்ரீம் யுகா 110சிசி பைக்கில் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ், புதிய மீட்டர் டிசைன் மற்றும் பிளாக் வித் சன்ஷெட் பிரவுன் மெட்டாலிக் நிறத்துடன் முந்தைய நிறங்களில் கிடைக்க தொடங்கியுள்ளது.

2018 ஹோண்டா லிவோ பைக் விலை – ரூ. 56,230 (டிரம்)

2018 ஹோண்டா லிவோ பைக் விலை – ரூ. 58,720 (டிஸ்க்)

2018 ஹோண்டா ட்ரீம் யுகா பைக் விலை – ரூ. 52,741

(ex-showroom Delhi)

ரூ.14.33 கோடியில் கார்ல்மேன் கிங் எஸ்யூவி அறிமுகமானது – Karlmann King Suv

முதன்முறையாக 2017 துபாய் இன்டர்நேஷனல் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட உலகின் விலை உயர்ந்த எஸ்யூவி மாடலாக ரூ.14.33 கோடி ஆரம்ப விலையில் கார்ல்மேன் கிங் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கார்ல்மேன் கிங் எஸ்யூவி

சீனாவை மையமாக கொண்டு இயங்கும் கார் உற்பத்தி நிறுவனமான ஐஏடி ஆட்டோமொபைல் டெக்னாலஜி நிறுவனம், ஐரோப்பியாவின் தொழிற்நுட்ப குழு ஒன்றுடன் இணைந்து சுமார் 1800 நபர்களின் கூட்டணியில் கார்ல்மேன் கிங் எஸ்யூவி ஃபோர்டு F-550 பிளாட்ஃபாரத்தை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வேச அளவில் உள்ள முன்னணி பெரும் கோடிஸ்வரர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த எஸ்யூவி மாடல் , மிக நவீனத்துவமான வசதிகளை கொண்டதாக எஸ்யூவி விளங்குகின்ற, இந்த மாடல் ஃபோர்ட் நிறுவனத்தின் F-550 பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் 6 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ள எஸ்யூவி எடை 4000 கிலோ கொண்டதாகவும், கூடுதலாக புல்லட் ப்ரூஃப் பெற்ற கிங் எஸ்யூவி எடை 6000 கிலோ கொண்டதாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. F-550 டிரக்கில் இடம்பெற்றுள்ள 400 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 6.8 லிட்டர் வி10 எஞ்சின் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக இலகுவாக 140 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதாக அமைந்திருக்கும்.

3691 மிமீ வீல்பேஸ் பெற்றுள்ள இந்த எஸ்யூவி மிக தாரளமான இடவசதி கொண்டதாக வந்துள்ள இந்த மாடலில் உயர்தர சவுன்ட் சிஸ்டம், அல்ட்ரா ஹெச்டி 4K தொலைக்காட்சி, பிரைவேட் சேஃப்பாக்ஸ், போன் புராஜெக்‌ஷன் சிஸ்டம், செயற்கைகோள் தொலைக்காட்சி, காபி மெஷனின், டீபார்ட்டி கொண்டாடும் வகையிலான ரூம் ஆகியவற்றை பெற்று விளங்கும் கார்ல்மேன் கிங் எஸ்யூவி ஸ்டீல் மற்றும் ஃபைபர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக விலை உயர்ந்த எஸ்யூவி என்ற பெருமையை பெற்றுள்ள கார்ல்மேன் கிங் எஸ்யூவி விலை 1.56 மில்லியன் பவுண்டு ஸ்டெர்லிங்க் , இந்திய மதிப்பின் அடிப்படையில் ஆரம்ப விலை ரூ.14.33 கோடியாகும்.

கார்ல்மேன் கிங் எஸ்யூவி வீடியோ