நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் க்ராஷ் கார்டுகள் பொருத்தக்கூடாது

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகளில் வாகனத்தினை பாதுகாக்கவும், எடுப்பான தோற்றத்தை வெளிப்படுத்தும் க்ராஷ் கார்டுகள் மற்றும் கூடுதல் பம்பர்களை பயன்படுத்தக்கூடாது என மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

க்ராஷ் கார்டுகள்

ஒவ்வொரு வாகனம் வடிவமைக்கும்போது பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு எதிர்பாராத மோதல் சமயங்களில் அதிகபட்ச பாதுகாப்பினை வழங்கும் வகையிலும், காற்றுப்பை உட்பட பாதுகாப்பு சார்ந்த அம்சங்கள் இயங்குவதற்கு வழி வகுக்கின்றது.

வாகனங்களில் பொருத்தப்படுகின்ற புல் பார்கள் மற்றும் க்ராஷ் கார்டுகள் ஏர்பேக் சென்சார் செயற்படுவதுற்கு சிக்கலை ஏற்படுத்துவனதால் க்ராஷ் கார்டுகள் மற்றும் கூடுதல் பம்பர்கள் ஆகியவற்றை கார்கள், எஸ்யூவி, கனரக வாகனங்கள் உட்பட இரு சக்கர வாகனங்களிலும் பொருத்துவதற்கு 1988 மோட்டார் வாகன சட்ட பிரிவு 52 விதிகளுக்கு உட்பட்டு விதி மீறலாக கருதப்படும் என அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற பம்பர்களால் பாதாசாரிகள் மிக கடுமையான சிரமத்துக்கு உள்ளாவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே,வரும் காலங்களில் இதுபோன்ற பம்பர்களை பொருத்தும் வாகன உரிமையாளர்களுக்கு ரூ.250 முதல் ரூ.2,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.

இந்தியாவில் மின்சார பைக்குகளை களமிறக்கும் யமஹா

இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களை களமிறக்கும் திட்டத்தை செயற்படுத்த யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

யமஹா எலெக்ட்ரிக் பைக்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு ஆராய்ந்து வருவதனால், மோட்டார் வாகன தயாரிப்பாளர்களும் மின்சாரத்தில் இயங்கும் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு முதலீடு செய்யும் திட்டங்களை அதிகரித்து வருகின்றன.

எக்கனாமிக்ஸ் ஆட்டோ இதழுக்கு யமஹா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்துள்ள பேட்டியில் நாங்கள் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனனங்களை செயற்படுத்த தொடங்கியுள்ள நிலையில், இதனை இந்திய சந்தைக்கும் கொண்டு வருவது எங்களுக்கு கடினமாக இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுள்ள யமஹா நிறுவனம் முழுமையான ஐசி எஞ்சின்களுக்கு மாற்றாக இந்திய சந்தையில் மின்சார வாகனங்கள் அமையாது என கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, தொடர்ந்து ஐசி எஞ்சின்களை விற்பனை செய்யவும், கூடுதலாக மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக யமஹா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுமையான மின்சார வாகனங்களுக்கு மாறும் வகையிலான திட்டத்தை மத்திய அரசு செயற்படுத்த தொடங்கியுள்ளது.

 

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S பைக் அறிமுக விபரம் – 2018 ஆட்டோ எக்ஸ்போ

 

200சிசி ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் மிக கடுமையான சவாலை ஏற்படுத்தும் மாடலாக  ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S ஸ்போர்ட்டிவ் நேக்டூ பைக்கினை நிலை நிறுத்த ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டு வருகின்றது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ்

கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக்கில் 18.6 PS ஆற்றலை 8500 rpm மற்றும் 17.2 Nm டார்க்கினை 6000 rpm சுற்றில் வழங்கும் புதிய ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் 200cc 4 ஸ்டோர்க் என்ஜினை பெற்றுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்சினை பெற்றிருக்கும்.

காட்சிப்படுத்தப்பட்ட மாடலின் தோற்றத்துடன் கூடுதலாக சில ஸ்போர்ட்டிவ் மாறுதல்களை பெற்று இருபக்க டயர்களிலும் டிஸ்க்பிரேக் , ஏபிஎஸ் ஆப்ஷனலாக இடம்பெறலாம். முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரினை பெற்றிருக்கும்.

மல்டி ஸ்போக் அலாய் வீல் , எல்இடி பைலட் விளக்கு , ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் , ஹாலெஜன் முகப்பு விளக்கு , டிஜிட்டல் இன்ஸ்டூரூமென்ட் கிளஸ்ட்டரை பெற்று விளங்கும். வரவுள்ள புதிய கேடிஎம் டியூக் 200 பைக்கிற்கு நேரடியான போட்டியை ஏற்படுத்தும் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ள ஹீரோ எக்ஸ்டீரிம் 200 எஸ் பைக் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி , பல்சர் 200 ஏஎஸ் போன்ற மாடல்களுடன் சந்தையை பகிர்ந்துகொள்ளும்.

கடந்த சில வருடங்களாக 200சிசி சந்தை மிக வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில் நாட்டின் முதன்மையான மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ஹீரோ 200சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட சந்தையில் எந்த மாடலை அறிமுகம் செய்யாமல் உள்ள நிலையில் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

ஹீரோ நிறுவனம் 2014 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய ஹீரோ HX250R மாடலை உற்பத்திக்கு கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. 250சிசி க்கு மாற்றாக மாறிவரும் சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப 300சிசி மாடலாக அறிமுகம் செய்ய ஹீரோ திட்டமிட்டுள்ளது.

 

மேலும் 2017 இ.ஐ.சி.எம்.ஏ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட அட்வென்ச்சர் ரக ஹீரோ எக்ஸ்பல்ஸ் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் முதல் 10 இரு சக்கர வாகனங்கள் – நவம்பர் 2017

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இரு சக்கர வாகன விற்பனையில் ஸ்கூட்டர்கள் விற்பனை பைக்கைவிட கூடுதலான வேகத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில், நவம்பர் 2017 மாதந்திர முடிவில் முதல் 10 இடங்களை பிடித்த இரு சக்கர வாகனங்கள் விபரத்தை தொடர்ந்து காணலாம்.

டாப் 10 பைக்குகள் – நவம்பர் 2017

ஹோண்டா நிறுவனத்தின் புதிய வரவான கிரேஸியா சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற தொடங்கியுள்ள நிலையில் கடந்த நவம்பர் 2017-ல் 17,047 அலகுகள் விற்பனை செய்துள்ளது.

ஹீரோ நிறுவனத்தின் மேஸ்ட்ரோ மாடல் 42,537 அலகுகள்,  ஹீரோ டூயட் 22,647 அலகுகள் விற்பனை செய்துள்ளது. இதே காலகட்டத்தில் டிவிஎஸ் ஜூபிடர் 62,553 அலகுகள் மற்றும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் டாப் 10 பட்டியிலில் 2,26,046 வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது.

மோட்டார் சைக்கிள் விற்பனையில் ஹீரோ ஸ்பிளென்டர் 2,25,737 அலகுகள் விற்பனை ஆகி இரண்டாவது இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து ஹீரோ எச்எஃப் டீலக்ஸ், ஹோண்டா சிபி ஷைன் மற்றும் ஹீரோ கிளாமர் பைக்குகள் உள்ளன.

முழுமையான விற்பனை பட்டியலை அட்டவனையில் காணலாம்

டாப் 10 பைக்குகள் – நவம்பர் 2017

வ.எண் மாடல் நவம்பர் -17
1 ஹோண்டா ஆக்டிவா 2,26,046
2 ஹீரோ ஸ்பிளென்டர் 2,25,737
3 ஹீரோ HF டீலக்ஸ் 1,52,879
4 ஹோண்டா CB ஷைன் 82,247
5 ஹீரோ கிளாமர் 73,226
6 டிவிஎஸ் XL சூப்பர் 69,888
7 டிவிஎஸ் ஜூபிடர் 62,553
8 ஹீரோ பேஸன் 55,680
9 பஜாஜ் பிளாட்டினா 51,809
10 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 49,534

ஜன., 1 முதல் ரெனால்ட் இந்தியா கார்கள் விலை உயருகின்றது

ரெனால்ட் இந்தியா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற க்விட், லாட்ஜி மற்றும் டஸ்ட்டர் ஆகிய மூன்று மாடல்களின் விலையை 3 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

ரெனால்ட் கார்கள் விலை

இந்தியாவின் மாருதி சுசூகி, டொயோட்டா, ஹோண்டா, ஸ்கோடா, டாடா , மஹிந்திரா உட்பட பெரும்பாலான மோட்டார் நிறுவனங்கள் விலையை ஜனவரி 1, 2018 முதல் அதிகரித்துள்ள நிலையில், அந்த வரிசையில் ரெனால்ட் இந்தியா நிறுவனமும் இணைந்துள்ளது.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயர்ந்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதனாலும் விலை உயர்வை அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் அறிமுகம் செய்த ரெனால்ட் கேப்டூர் எஸ்யூவி தவிர க்விட், லாட்ஜி மற்றும் டஸ்ட்டர் மாடல்களின் விலை 3 % வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை ரூ.80,000 உயருகின்றது

ஃபியட் கிறைஸலர் ஆட்டோமொபைல் இந்தியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை அதிகபட்சமாக ரூ.80,000 வரை விலை உயர்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காம்பஸ் எஸ்யூவி விலை

இந்தியாவின் முன்னணி எஸ்யூவி மாடலாக விளங்கும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை மாடலை தவிர மற்ற வேரியன்ட்கள் விலை அதிகபட்சமாக ரூ.80,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.15.16 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்ட காம்பஸ் எஸ்யூவி அதிகபட்மாக ரூ.21.73 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலை அமைந்துள்ளது.

தற்போது அதிகரித்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு விலையை அதிகரிப்பதாக ஜீப் அறிவித்துள்ளது. ஆனால் தொடக்கநிலை வேரியன்ட் விலை மட்டும் அதிகரிக்கப்படாது என குறிப்பிட்டுள்ளது.

விற்பனைக்கு வந்த நான்கு மாதங்களிலே 10,000 க்கு மேற்பட்ட காம்பஸ் எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மாடலில் 160 hp ஆற்றலுடன் 350 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் 170 hp பவருடன்,  260 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் மல்டிஏர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 7 வேக டூயல் கிளட்ச் கியராபாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு ஜனவரி 1, 2018 முதல் அமலுக்கு வருகின்றது.

ஜன., 1 முதல் மஹேந்திரா எஸ்யூவி-கள் விலை 3 % உயருகின்றது

மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம் தங்களுடைய யுட்டிலிட்டி ரக பயணிகள் வாகனங்களின் விலையை அதிகபட்சமா 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

மஹேந்திரா எஸ்யூவி விலை

மஹிந்திரா பயணிகள் வாகன விற்பனை பிரிவு சந்தையில் உள்ள எக்ஸ்யூவி 500, ஸ்கார்ப்பியோ உட்ப ட அனைத்து மாடல்களின் விலையும் 3 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

விலை அதிகரிப்பு குறித்து மஹேந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வினை கருத்தில் கொண்டு விலையை அதிகரிப்பது தவிர்க்க முடியாக ஒன்றாக மாறியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி, டொயோட்டா, இசுசூ உட்பட பல்வேறு மோட்டார் நிறுவனங்கள் கார்கள் மற்றும் எஸ்யூவி விலையை கனிசமாக உயர்த்தியுள்ளது.

அனைத்து கார்களின் விலையும் ஜனவரி 1, 2018 முதல் உயரவுள்ளது.

இசுசூ கார்கள் விலை அதிகபட்சமாக 4 % உயருகின்றது

இசுசூ இந்தியா நிறுவனம் தங்களுடைய கார்கள் மற்றும் பிக்கப் டிரக்குகள் விலையை 3 முதல் 4 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஜனவரி 1, 2018 முதல் விலை உயர்வு அமலுக்கு வருகின்றது.

இசுசூ கார்கள் விலை

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இசுசூ மோட்டார்ஸ் நிறுவனம் எஸ்யூவி மற்றும் பிக்கப் விலையின் எக்ஸ்ஷோரூம் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.15,000 முதல் ரூ.1,00,000 வரை விலை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

விலை உயர்வு குறித்து இசுசூ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டீல் , காப்பர் மற்றும் அலுமினியம் ஆகிய உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் விலையை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

இசுசூ இந்தியா நிறுவனம் இந்தியாவில் பிக்கப் டிரக்குகள் மற்றும் எஸ்யூவி ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றது.

டொயோட்டா கார்கள் விலை 3 % உயருகின்றது

டொயோட்டா கிரிலோஸ்கர் இந்தியா நிறுவனம் ஜனவரி மாதத்திலிருந்து 3 சதவீதம் விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் எம்பிவி மற்றும் எஸ்யூவி கார்களுக்கும் விலை உயர்வு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா கார்கள் விலை

டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஃபார்ச்சூனர்,இன்னோவா க்ரிஸ்டா எட்டியோஸ், லிவா உட்பட கரோல்லா , பிரையஸ் மற்றும் கேம்ரி ஆகிய மாடல்களின் விலை உயரவுள்ளது.

விலை உயர்வு குறித்து டொயோட்டா வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாறி வரும் சந்தையின் சூழ்நிலைக்கு ஏற்பவும், உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு விலையை அதிகரிக்க பரிசீலனை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் இருப்பில் உள்ள கார்களை விற்பனை செய்யும் நோக்கில் டிசம்பர் 31, 2017 வரை Remember December Campaign என்ற பெயரில் அதிகபட்சமாக ரூ.90,000 விலை சலுகை உட்பட குறைந்தபட்ச 4.99 சதவீத கடன் திட்டம் மற்றும் பல்வேறு சிறப்பு இஎம்ஐ திட்டங்களை அறிவித்துள்ளது.

ஜனவரி 1, 2018 முதல் விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது.

 

ஸ்கோடா கார்கள் அதிகபட்சமாக 3 % விலை உயருகின்றது

இந்தியா ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தங்களுடைய கார்கள் மற்றும் எஸ்யூவி விலையை அதிகபட்சமாக 2-3 % வரை விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

ஸ்கோடா கார்கள் விலை

பெரும்பாலான மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கார் விலையை உயர்த்தி வரும் நிலையில் செக் குடியரசை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்கோடா இந்தியா நிறுவனமும் ஜனவரி 1, 2018 முதல் விலையை உயர்த்த உள்ளது.

ஸ்கோடா வெளியிட்டுள்ள அறிக்கையில், மாறிவரும் வணிகரீதியான மாற்றங்களுக்கு ஏற்பவும், உயர்ந்து வரும் ஸ்டீல், அலுமினியம மற்றும் காப்பர் ஆகிய உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு கார்கள் மற்றும் எஸ்யூவி விலையை 2 முதல் 3 சதவீதம் உயர்த்த உள்ளோம் என குறிப்பிட்டுள்ளது.

ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் கோடியாக் எஸ்யூவி, சூப்பர்ப், ஆக்டாவியா மற்றும் ரேபிட் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.