கவாஸாகி வல்கன் S க்ரூஸர் பைக் விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் முதன்முறையாக க்ரூஸர் ரக பைக் மாடலை இந்தியா கவாஸாகி மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.5.44 லட்சம் விலையில் கவாஸாகி  வல்கன் S அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் 2018 ஆட்டோ எக்ஸ்போ அரங்கின் வாயிலாக அதிகார்வப்பூர்வமாக காட்சிக்கு வெளியிடப்பட உள்ளது.

கவாஸாகி வல்கன் S

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நின்ஜா 650, Z650 மற்றும் வெர்சிஸ் 650 ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள திறன் மிகுந்த 649 சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது. 650 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 61 பிஎஸ் ஆற்றல் , 63 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பல்வேறு விசேஷ அம்சங்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள க்ரூஸர் ரக வல்கன் எஸ் மாடலில் வழங்கப்பட்டுள்ள எர்கோ ஃபீட் அம்சம் எவ்விதமான உயரத்தை கொண்டவர்களும் எளிதாக வாகனத்தை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும்.  மேலும் இந்த பைக்கில் நமது தேவைக்கேற்ப மாற்றி அமைக்கும் வகையிலான ஹேண்டில் பார், ஃபூட் பெக் ஆகியவற்றை மூன்று விதமாக மாற்றியமைக்கலாம்.

முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் ப்ரீலோடு அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்றதாக வந்துள்ள இந்த மாடலில் 300 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 250 மிமீ டிஸ்க் பிரேக் பின்புறத்தில் கொண்டதாக வந்துள்ளது.

கவாஸாகி வல்கன் S க்ரூஸர் பைக் விலை ரூ. 5.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

ஹீரோ மோட்டோகார்ப் பைக்குகள் விலை உயருகின்றது

வருகின்ற ஜனவரி 1 , 2018 முதல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அனைத்து பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றை ரூ.400 வரை விலை உயர்த்துவதாக ஹீரோ அறிவித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப்

இந்தியாவின் பல்வேறு மோட்டார் கார் தயாரிப்பாளர்கள் ஜனவரி 1 முதல் விலை உயர்வை அதிகார்வப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், முதன்மையான மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ஹீரோ உயர்ந்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வினை கருத்தில் கொண்டு விற்பனையில் உள்ள அனைத்து மாடல்களுக்கும் எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ.400 உயர்த்துவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

100-125 சிசி சந்தை உட்பட ஒட்டுமொத்த மோட்டார் சைக்கிள் சந்தையில் 50 சதவீத பங்களிப்பினை கொண்டதாக ஹீரோ விளங்கி வருகின்றது..

நேற்று இந்நிறுவனம் புத்தம் புதிய 125 சிசி எஞ்சின் பெற்ற சூப்பர் ஸ்பிளென்டர் , ஹீரோ பேஸன் எக்ஸ் ப்ரோ மற்றும் ஹீரோ பேஸன் ப்ரோ ஆகிய மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல்களின் விலை விபரம் விரைவில் வெளியாக உள்ளது.

 

2020-ல் மாருதியின் முதல் மின்சார வாகனம் அறிமுகம்

இந்தியாவின் முதன்மையான நான்கு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசுகி அடுத்த இரண்டு ஆண்டுகளில் முதல் மின்சார வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக மாருதி சுசூகி சேர்மென் ஆர்.சி. பார்கவா தெரிவித்துள்ளார்.

மாருதி சுசூகி மின்சார கார்

வருகின்ற 2030 ஆம் ஆண்டு முதல் மின்சார வாகனங்களை நாடு முழுவதும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் , முதல் மின்சார காரை 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்வதற்கான திட்டங்களை மாருதி சுசூகி ஆராய தொடங்கியுள்ளது.

மாருதி நிறுவனத்தின் வசம் எவ்விதமான எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் நுட்பத்தை பற்றி எவ்விதமான ஆதாரமும் இல்லாத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சுசூகி மற்றும் டொயோட்டா கூட்டணியில் உருவாக்கப்பட உள்ள மின்சார கார் சார்ந்த நுட்பத்தை மாருதி நிறுவனம் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய உள்ளதாக பார்கவா தெரிவித்துள்ளார்.

மாருதி நிறுவனம் மின்சார கார் தயாரிப்பிற்கான முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ள நிலையில் 2018 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத முடிவில் தயாராக உள்ளதால் அதனை தொடர்ந்த ஹேட்ச்பேக் அல்லது செடான் ரக மின்சார கார் உற்பத்திக்கு என பிரத்யேக அடிப்படை கட்டுமானம் மற்றும் வாகன தயாரிப்பை மேம்படுத்த மாருதி சுசூக்கி திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் மின்சார கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னிலையில் உள்ளது. மேலும் டாடா மோட்டார்ஸ் மத்திய அரசின் பனிகளுக்கு மின்சார வாகனத்தை விற்பனை செய்ய 10,000 கார்களுக்கான ஏலத்தை கைப்பற்றியுள்ளது.

2018 ஹீரோ பேஸன் ப்ரோ i3S பைக் அறிமுகம்

உலகின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புத்தம் புதிய ஹீரோ பேஸன் ப்ரோ i3S பைக் அறிமுகம் செய்யப்பட்டு நிலையில் கூடுதலாக பேஸன் எக்ஸ்ப்ரோ மற்றும் ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் ஆகிய இருமாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹீரோ பேஸன் ப்ரோ i3S பைக்

ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளென்டர் மாடலை தொடர்ந்து மாபெரும் வெற்றி பெற்ற மாடல்களில் ஒன்றாக திகழும் பேஸன் பைக் வரிசை 2001 ஆம் ஆண்டில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை பெற்றதாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது முற்றிலும் மேம்படுத்தப்பட்டதாக வெளியாகியுள்ளது.

புதிய பேஸன் ப்ரோ பைக் பல்வேறு தோற்ற மாறுதல்களுடன் நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் பெற்றுள்ள நிலையில் புதிய பெட்ரோல் டேங்க், புதுப்பிக்கப்பட்ட டெயில் விளக்கு, இருக்கை அடியில் வழங்கப்பட்டுள்ள ஸ்டோரேஜ் வசதி மற்றும் மொபைல் சார்ஜிங் போர்ட் உட்பட புதிய டிஜிட்டல் அடலாக் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு டிஜிட்டல் எரிபொருள் கேஜ், ட்ரீப் மீட்டர் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டதாக புதிய பேஷன் ப்ரோ பைக் வெளியாகியுள்ளது.

புதிய பேஸன் ப்ரோ பைக்கில் i3s நுட்பத்தை பெற்ற 110சிசி TOD (Torque on Demand) எஞ்சின் அதிகபட்சமாக 9.4 bhp பவருடன், 9 Nm டார்க்கினை வழங்கும்,இதில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. பேஸன் ப்ரோ மிக சிறப்பான மைலேஜ் மற்றும் கையாளுமை வெளிப்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், முந்தைய மாடலை விட 12 சதவீத கூடுதல் பவர் மற்றும் டார்க் வழங்கும் என ஹீரோ குறிப்பிட்டுள்ளது.

டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு பிரேக் தேர்வுகளிலும் கிடைக்க உள்ள ஹீரோ பேஸன் ப்ரோ பைக்கில் கருப்பு, சிவப்பு, நீலம், சில்வர் மற்றும் கிரே ஆகிய 5 நிறங்களில் கிடைக்க உள்ளது.

வருகின்ற ஜனவரி 2018 முதல் வாரத்தில் 2018 ஹீரோ பேஸன் ப்ரோ பைக் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்த பைக்கின் விலை விபரம் அடுத்த வார இறுதியில் வெளியாக உள்ளது.

மேலும் படிங்க

2018 ஹீரோ பேஸன் எக்ஸ் ப்ரோ பைக் அறிமுகம் முழுவிபரம்

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் பைக் அறிமுகம் முழுவிபரம்

 

2018 ஹீரோ பேஸன் எக்ஸ் ப்ரோ i3S பைக் அறிமுகம்

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புத்தம் புதிய ஹீரோ பேஸன் எக்ஸ் ப்ரோ i3S பைக் அறிமுகம் செய்யப்பட்டு நிலையில் கூடுதலாக பேஸன் ப்ரோ மற்றும் ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் ஆகிய இரு மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹீரோ பேஸன் எக்ஸ் ப்ரோ

சாதாரண  பேஸன் ப்ரோ மாடலை விட பிரிமியம் தோற்றத்தை வெளிப்படுத்தும் மாடலாக விளங்குகின்ற பேஸன் எக்ஸ் ப்ரோ மிகவும் ஸ்டைலிசாக விளங்குவதுடன் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

ஏறக்குறைய பேஸன் ப்ரோ வசதிகளை பெற்றிருந்தாலும் எக்ஸ் ப்ரோ மாடல் கூர்மையான பெட்ரோல் டேங்க் ,நேர்த்தியான கவுல் பேனல், சைட் ஸ்டெப் இன்டிகேட்டர் ஆகிய அம்சங்களுடன் , புதிய டிஜிட்டல் அனலாக் மீட்டரை பெற்றதாக வந்துள்ளது.

புதிய பேஸன் ப்ரோ பைக்கில் இடம்பெற்று அதே எஞ்சினை பேஸன் எக்ஸ் ப்ரோ மாடலும் பெற்றுள்ளது. i3s நுட்பத்தை பெற்ற 110சிசி TOD (Torque on Demand) எஞ்சின் அதிகபட்சமாக 9.4 bhp பவருடன், 9 Nm டார்க்கினை வழங்கும்,இதில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. பேஸன் எக்ஸ் ப்ரோ மிக சிறப்பான மைலேஜ் மற்றும் கையாளுமை வெளிப்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், முந்தைய மாடலை விட 12 சதவீத கூடுதல் பவர் மற்றும் டார்க் வழங்கும் என ஹீரோ குறிப்பிட்டுள்ளது.

அலாய் வீல், முன்புறத்தில் டிஸ்க் பிரேக் ஆகியவற்றை பெற்றுள்ள பேஸன் எக்ஸ் ப்ரோ மாடலில் கருப்பு நிறத்துடன் கலந்த சிவப்பு, சிவப்பு நிறத்துடன் கலந்த கருப்பு, கருப்பு நிறத்துடன் நீலம், கருப்பு நிறத்துடன் கிரே, மற்றும் சில்வர் நிறத்துடன் கருப்பு என மொத்தம் 5 விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

வருகின்ற ஜனவரி 2018 முதல் வாரத்தில் 2018 ஹீரோ பேஸன் எக்ஸ் ப்ரோ பைக் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்த பைக்கின் விலை விபரம் அடுத்த வார இறுதியில் வெளியாக உள்ளது.

மேலும் படிங்க

2018 ஹீரோ பேஸன் ப்ரோ பைக் அறிமுகம் முழுவிபரம்

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் பைக் அறிமுகம் முழுவிபரம்

 

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் i3S பைக் அறிமுகம்

இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய 2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் i3S பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளதை தொடர்ந்து கூடுதலாக ஹீரோ பேஸன் ப்ரோ மற்றும் பேஸன் எக்ஸ்ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது.

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர்

100-125சிசி வரையிலான சந்தையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் ஹீரோ அறிமுகம் செய்துள்ள மேம்படுத்தப்பட்ட புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் அறிமுகம் செய்யட்டுள்ளதை தொடர்ந்து விற்பனைக்கு ஜனவரி முதல் வாரத்தில் கிடைக்க உள்ளது.

விற்பனையில் உள்ள சூப்பர் ஸ்பிளென்டர் பைக்கை விட கூடுதலான மைலேஜ் மற்றும் சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சூப்பர் ஸ்பிளெண்டரில் தோற்ற பொலிவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய சூப்பர் ஸ்பிளென்டர் பைக் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன், சைட் ஸ்டான்டு இன்டிகேட்டர் மற்றும் அகலமான பின்புற டயருடன் கூடுதலாக இருக்கையின் அடியில் ஸ்டோரேஜ் வசதி மற்றும் பெட்ரோல் டேங்க் அடிப்பகுதியில் ஸ்டோரேஜ் வசதி பெற்றுள்ளது.

நவீன தலைமுறை பாடி கிராபிக்ஸ் , க்ரோம் பூச்சூ பெற்ற சைலன்சர், சில்வர் பூச்சூ கொண்ட ஸ்பிளென்டர் மாடலில் கருப்பு நிறுத்துடன் பாடி கிராபிக்ஸ், கருப்பு நிறத்துடன் சிவப்பு நிற பாடி கிராபிக்ஸ், கருப்பு நிறத்துடன் சில்வர் கிராபிக்ஸ், சிவப்பு மற்றும் கிரே நிறுத்துடன் கூடிய கிராபிக்ஸ் ஆகியவற்றுடன் மொத்தம் 5 நிறங்களில் கிடைக்க உள்ளது.

i3S நுட்பத்தை பெற்ற 125 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 11.2 bhp பவரையும், 11Nm டார்க் திறனையும் வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இது முந்தைய மாடலைவிட எஞ்சின் 27 சதவீதம் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும் திறனையும், 6 சதவீதம் கூடுதல் டார்க் திறனையும் வழங்கும் என ஹீரோ குறிப்பிட்டுள்ளது.

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் பைக் மணிக்கு 94 கிமீ வேகம் பயணிக்கும் திறன் கொண்டதாக வெளியாகியுள்ளது.

வருகின்ற ஜனவரி 2018 முதல் வாரத்தில் 2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்த பைக்கின் விலை விபரம் அடுத்த வாரம் இறுதியில் வெளியாக உள்ளது.

 

ஜனவரி 1, 2018 முதல் ஹூண்டாய் கார் விலை 2 % உயருகின்றது

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தங்களுடைய அனைத்து மாடல்களின் விலையை 2 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

ஹூண்டாய் கார் விலை அதிகரிப்பு

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ரூ.3.29 லட்சம் ஆரம்ப விலை கொண்ட இயான் கார் முதல் அதிகபட்சமாக ரூ.25.19 லட்சம் விலை கொண்ட ஹூண்டாய் டூஸான் கார் வரை விலையை அதிகரித்துள்ளது.

விலை அதிகரிப்பு குறித்து ஹூண்டாய் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகரித்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வினை கருத்தில் கொண்டு அதிகபட்சமாக 2 சதவீதம் வரை விலை உயர்த்துவதாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் நிசான், மஹிந்திரா, வோல்ஸ்வேகன், மாருதி சுசூகி இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஃபோர்டு, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், ஹோண்டா கார்ஸ் இந்தியா, ஸ்கோடா மற்றும் இசுசூ போன்ற நிறுவனங்கள் தங்களுடைய மாடல்களின் விலையை கனிசமாக உயர்த்தியுள்ளது.

வருகின்ற ஜனவரி 1, 2018 முதல் விலை உயர்வை அமலுக்கு வரவுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

ஓகினவா பிரெயஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான வாகன விற்பனை அதிகரித்து வரும் சூழ்நிலையில் 170 கிமீ முதல் 200 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் பெற்ற ஓகினவா பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் ரூ.59,989 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஓகினவா பிரெயஸ்

இந்தியாவின் மிக வேகமான மின்சாரா ஸ்கூட்டராக வெளிவந்துள்ள பிரெயஸ் மணிக்கு 75 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்றுள்ள ஓகினவா பிரெயஸ் மின்சார ஸ்கூட்டருக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் ரூ.2000 செலுத்தப்பட்ட முன்பதிவு நடைபெற்று வரும் சூழ்நிலையில் விரைவில் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

பிரெயஸ் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ள 1000 வாட்ஸ் மின் மோட்டார் இயக்க 72V, 45Ah லித்தியம் ஐயன் பேட்டரி மிக வேகமாக சார்ஜில் ஏறும் நுட்பத்துடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிக வேகமான சார்ஜ் முறையை பெற்றிருப்பதுடன் இந்த முறையில் 80 சதவீத சார்ஜ் ஏறுவதற்கு 45 நிமிடங்களும், முழுமையான சார்ஜ் ஏறுவதற்கு 6 முதல் 8 மணி நேரம் வரை தேவைப்படுகின்றது. முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்திலும், 170 கிமீ முதல் 200 கிமீ வரை முழுமையான சிங்கிள் சார்ஜில் இந்த ஸ்கூட்டரை பயன்படுத்தலாம். மேலும் இந்த ஸ்கூட்டரில் ஈக்கோ ( அதிகபட்ச வேகம் மணிக்கு 35kph),  ஸ்போர்ட்டி ( அதிகபட்ச வேகம் மணிக்கு 65kph) மற்றும் டர்போ ( அதிகபட்ச வேகம் மணிக்கு 75kph)  என மொத்தம் மூன்று மோட்களை பெற்றுள்ளது.

774 மிமீ இருக்கை உயரத்துடன், 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வந்துள்ள பிரெயஸ் ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பருடன் 12 அங்குல அலாய் வீல் ஆகியவற்றுடன் டிஸ்க் பிரேக் வசதியுடன் எலக்ட்ரானிக் பிரேக் அசிஸ்ட்  பெற்றுள்ளது.

ஒகினவா பிரெயஸ் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள்,  சைட் ஸ்டேன்ட் இன்டிகேட்டர், திருட்டை தடுக்கும் சென்சார், கீலெஸ் ஸ்டார்ட், மொபைல் சார்ஜிங் போர்ட் உட்பட ஃபைன்ட் மை ஸ்கூட்டர் ஆகிய அம்சங்களை பெற்றுள்ளது.

இந்தியாவின் மிக வேகமான மற்றும் அதிக தொலைவு பயணிக்கும் திறன் பெற்ற ஸ்கூட்டராக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஓகினவா பிரெயஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.59,889 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆகும்.

விற்பனையில் சாதனை படைத்த டாடா ஏஸ் மினி டிரக்

சின்ன யானை என்று அழைக்கப்படுகின்ற டாடா மோட்டார்சின் டாடா ஏஸ் மினி டிரக் 20 லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளாதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

டாடா ஏஸ் மினி டிரக்

இந்தியாவின் முதன்மையான மற்றும் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் டிரக் மற்றும் பஸ் தயாரிப்பாளராக விளங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2005 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியிட்ட டாடா ஏஸ் மினி டிரக், தற்போது இந்தியாவின் சிறிய ரக வர்த்தக வாகனங்கள் பிரிவில் 65 % பங்களிப்பை பெற்று விளங்குகின்றது.

2005 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு மாற்றங்களுடன் 15 மாறுபட்ட வகையில் ஏஸ்,ஜிப், மெகா மற்றும் மின்ட போன்ற மாறுபட்ட வகையில் மிக சிறப்பான எடை தாங்கும் திறன் கொண்டதாகவும், சிறப்பான மைலேஜ் மற்றும் இழுவை திறனுடன் விளங்குகின்றது.

கடந்த 12 ஆண்டுகளாக சந்தையில் மிக சவாலான விலையில் போட்டியாளர்களான அசோக் லேலண்ட் தோஸ்த் மற்றும் மஹிந்திரா ஜீதோ ஆகியவற்றுடன் சந்தையை பகிர்ந்து கொண்டுள்ளது.

ஜன., 1 முதல் நிசான் கார்கள் விலை ரூ.15,000 வரை உயருகின்றது

இந்தியா சந்தையில் செயல்பட்டு வரும் நிசான் இந்தியா குழுமத்தின் நிசான் மற்றும் டட்சன் பிராண்டுகளில் உள்ள கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்கள் விலை ரூ.15,000 வரை உயர்த்தப்பட உள்ளது.

நிசான் கார்கள் விலை

பெரும்பாலான மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் தங்களுடைய வாகனங்களின் விலையை அதிகபட்சமாக 3 % வரை உயர்த்தியுள்ளதை தொடர்ந்து நிசான் நிறுவனமும் விலை உயர்வை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.

விலை அதிகரிப்பு குறித்து நிசான் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘  அதிகரித்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலையின் காரணமாக வருகின்ற ஜனவரி 1, 2018 முதல் நிசான் மற்றும் டட்சன் பிராண்டுகளில் விற்பனை செய்யபடும் மாடல்களின் விலையை ரூ.15,000 வரை உயர்த்துவதாக குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் மாருதி சுசூகி , டொயோட்டா, டாடா,ஹோண்டா உட்பட அனைத்து முன்னணி மோட்டார் வாகன நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்துள்ளது.