அமெரிக்காவில் களமிறங்கும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அட்வென்ச்சர் ரக மாடலாக விளங்கும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் மாடலை அமெரிக்காவில் சந்தையில் விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

அமெரிக்கா சந்தையில் சோதனைக்காக சில குறப்பிட்ட எண்ணிக்கையில் அனுப்பியுள்ள ஹிமாலயன் பைக்குகள் சிறப்பான பயண அனுபவத்தை வெளிப்படுத்துவதாக அறிக்கை கிடைத்துள்ள நிலையில், அமெரிக்காவில் விற்பனை செய்வதற்கான முயற்சியை இந்நிறுவனம் தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு மாடல்கள் சிறப்பான வளர்ச்சியை பெற்று வரும் நிலையில், அமெரிக்காவில் அட்வென்ச்சர் ரக மாடலை களமிறக்குவதற்கு அனுமதி சான்றிதழுக்கு விண்ணிப்பித்துள்ளாதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவில் அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள்களுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. புதிய FI பொருத்தப்பட்ட ஹிமாலயன் பைக்கில்  24.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 411சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 32 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது. இந்தியாவில் பிஎஸ் 4 மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்தியா மற்றும் வளரும் நாடுகளுக்கு மஹிந்திரா ஃபோர்டு கூட்டணி

இந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி மோட்டார் வாகன தயாரிப்பாளரராக விளங்கும் மஹிந்திரா நிறுவனம் மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு சந்தைகளில் ஃபோர்டு மிகப்பெரிய பங்களிப்பை கொண்டுள்ளது.

மஹிந்திரா ஃபோர்டு கூட்டணி

இந்தியாவில் மிகச் சிறப்பான வகையில் பல்வேறு விதமான சேவைகள் நாடு முழுவதும் வழங்கி வருகின்ற இந்நிறுவனத்துடன், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் சிறப்பான பங்களிப்பை பெற்றுள்ள ஃபோர்டு நிறுவனத்தின் சேவைகளை மஹிந்திரா பயன்படுத்திக் கொள்ளவும், மஹிந்திரா வாயிலாக இந்தியாவில் ஃபோர்டு சேவைகளை விரிவுப்படுத்துவதே இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமாகும்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி , மேலும் நீட்டிக்கப்படுவது குறித்து மூன்று ஆண்டுகள் நிறைவடையும் போது அறிவிக்கப்படலாம்.

இந்த கூட்டணியின் நோக்கங்கள் பின்வருமாறு ;-

1. மின்சார கார் துறை

2. வாகனத்தின் கனெக்டேட் நுட்பம்

3. மொபைலிட்டி ப்ரோகிராம்

4. ஃபோர்டு சேவைகள் இந்தியாவில் அதிகரிக்கவும்

5. மஹிந்திரா சேவைகள் சர்வதேச அளவில் அதிகரிக்கவும்

6. புதிய மாடல்கள் உருவாக்குவதற்கு மற்றும்

7. வணிகரீதியான மற்றும் வளம் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளப்படும்.

மஹிந்திரா நிறுவனம் மின்சார கார் துறையில் சந்தை மதிப்பை பெற்ற இந்தியாவின் ஒரே நிறுவனமாக விளங்கும் நிலையில், இதுனுடைய பொருட்களை சர்வதேச அளவில் விரிவுப்படுத்தவும், இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கவும் மஹிந்திராவை பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டு இந்தியாவில் (சென்னை) நுழைந்த முதல் சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு இந்தியா நிறுவனம் மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்துடன் இணைந்து தொடங்கியது , அதன்பிறகு இந்த கூட்டணி 2005 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடதக்கதாகும். மேலும் 1926 முதல் 1954 ஆம் ஆண்டு வரையிலான ஃபோர்டு இந்தியா நுழைவின் போதும் இந்த கூட்டணி இயங்கியது.

 

2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD ஸ்போர்ட்டிவோ விரைவில்

புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர்  எஸ்யூவி காரின் ஃபார்ச்சூனர் TRD ஸ்போர்ட்டிவ் மாடல் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் பிரசத்தி பெற்ற பிரிமியம் ஃபார்ச்சூனர் எஸ்யூவி இந்திய மட்டுமல்லாமல் பல நாடுகளில் சிறந்த எஸ்யூவி மாடலாகும்.

2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD ஸ்போர்ட்டிவோ

 

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரில் புதிய 2.8 லிட்டர் என்ஜின் ஆப்ஷனுடன் பல தரப்பட்ட நவீன வசதிகளுடன் நேர்த்தியான நவீன டிசைன் தாத்பரியத்துடன் தொடர்ந்து கம்பீரத்தை தக்கவைத்துள்ளது.

சாதாரண மாடலில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் தோற்ற மாற்றங்களை பலவற்றை கொண்டுள்ளது. குறிப்பாக ஸ்போர்ட்டிவ் முன் , பின் பம்பர்கள் , 20 இஞ்ச் கருப்பு வண்ண ஸ்போர்ட்டிவ் வீல் , இரட்டை வண்ண கலவை மேற்கூறையில் கருப்பு வண்ணம் , டிஆர்டி ஸ்போர்ட்டிவ் பேட்ஜ் , கதவு சில்ஸ் ,  புகைப்போக்கி மஃப்லர் போன்றவற்றை பெற்றுள்ளது.

உட்புறத்தில் டிஆர்டி ஸ்போர்ட்டிவ் இன்ஸ்டூர்மெண்ட் கிளஸ்ட்டர் , 7 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , சிவப்பு மற்றும் கருப்பு வண்ண கலவை இருக்கைகள் , டிஆர்டி ஸ்போர்ட்டிவோ மிதியடிகள் போன்ற சில மாற்றங்களை கொண்டுள்ளது.

ஸ்போர்ட்டிவோ தன்மையை பெறும் வகையில் சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் அமைப்புகள் மட்டுமே மாற்றங்கள் பெற்றுள்ளன. 175 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் புதிய 2.8 லிட்டர் GD டீசல் என்ஜினை பெற்றுள்ளது. 6 வேக தானியங்கி கியர்பாக்சினை பெற்றுள்ளது.

2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD (TRD stands for Toyota Racing Development) ஸ்போர்ட்டிவோ எஸ்யூவி கருப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ளது.

ரூ.10 லட்சம் வரை ஜாகுவார் கார்கள் & எஸ்யூவி விலை உயர்த்தப்பட்டுள்ளது – ஜிஎஸ்டி

ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஜாகுவார் கார்கள் மற்றும் எஸ்.யூ.வி ஆகியவற்றின் விலை ரூ.80,000 முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஜாகுவார் கார்கள் & எஸ்யூவி

சமீபத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள செஸ் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் விலை ரூ.80 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை அதிகரிக்கபட்டுள்ளது.

ஜாகுவார் நிறுவனத்தின் XE, XF மற்றும் XJ செடான், F-type ஆகியவற்றுடன் F-Pace எஸ்யூவி மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி நடைமுறைக்கு பிறகு செஸ் வரி குறைக்கப்பட்டதால் ரூ.10 லட்சம் வரை குறைந்த நிலையில், மீண்டும் செஸ் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் தற்போது எக்ஸ்இ குறைந்தபட்சமாக ரூ.80,000 முதல் அதிகபட்சமாக  F-Type ரூ.10 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜாகுவார் கார்கள் மற்றும் எஸ்யூவி விலை பட்டியல்

ஜாகுவார் XE – பெட்ரோல் ரூ.35.85- ரூ.43.69 லட்சம் , டீசல் ரூ.36.61-ரூ.44.72 லட்சம்.

ஜாகுவார் XF – 2.0 லிட்டர் பெட்ரோல் – ரூ.51.40-ரூ.58.35 லட்சம் 2.0 லிட்டர் டீசல் – ரூ.46.46- ரூ.59.25 லட்சம்

ஜாகுவார் XJ – ரூ.1.00 கோடி (பெட்ரோல்) மற்றும் டீசல் ரூ.1.07 கோடி

ஜாகுவார்  F-Type -ரூ. 2.15-2.57 கோடி மற்றும் கன்வெர்டிபிள் விலை ரூ. 2.29-2.72 கோடி ஆகும்.

ஜாகுவார் F-Pace எஸ்யூவி – ரூ.70.67-76.84 லட்சம் மற்றும் R-Line – ரூ.1.05-1.15  கோடி ஆகும்.

(எக்ஸ்-ஷோரூம் இந்தியா )

இனி கார்களுக்கு சாவி ஸ்மார்ட்போன் – பிஎம்டபிள்யூ

பாரம்பரிய சாவிகளுக்கு மாற்றாக ஸ்மார்ட்போன் மூலம் கார்களை திறக்க மற்றும் ஸ்டார்ட் செய்ய பிஎம்டபிள்யூ செயலி வாயிலாக செயல்படுத்தப்படலாம்.

பிஎம்டபிள்யூ கார் கீ

இன்றைய நவீன தலைமுறையினர் மட்டுமல்லாமல் அனைவரும் ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கின்ற நிலையில், எதற்காக தனியான சாவிகள் கொண்டு காரினை திறக்க மற்றும் ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இதனை செயல்படுத்த உள்ளனர்.

வளர்ந்து வரும் நவீன நுட்பங்களில் பெரும்பாலான பயன்பாடுகளுக்கு ஸ்மார்ட்போன் அடிப்படை அங்கமாக மாறி வரும் நிலையில் கார்களுக்கு அடிப்படையாக உள்ள சாவிகளுக்கு மாற்றாக ஸ்மார்ட்போன் செயலி வாயிலாக வாகனத்தை திறப்பதற்கு மற்றும் இயக்குவதற்கு அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி ராபர்ட்சன் ராய்ட்ரஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரசத்தி பெற்ற மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லா நிறுவனம் தன்னுடைய மாடல் 3 கார்களில் முற்றிலும் சாவிகளை நீக்கிவிட்டு ப்ளூடூத் LE அல்லது என்எஃப்சி  (NFC-near-field communications) கீ அட்டைகள் வாயிலாக கார்களை திறக்க மற்றும் ஸ்டார்ட் செய்யும் வகையில் உருவாக்கியுள்ளது.

மேலும் பெரும்பாலான  ஆடம்பர கார் தயாரிப்பாளர்கள் தங்களது பிரத்தியேக கார் செயலி வாயிலாக சிரமம் நிறைந்த பார்க்கிங் இடங்களில் கார்களை நிறுத்துவதற்கான வசதியை வழங்கி வருகின்றனர்.

சமீபத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனம் பிரிமியம் ரக ஐ8 மற்றும் 8 சீரிஸ் ஆகிய மாடல்களுக்கு என பிரத்யேக கருப்பு மற்றும் வெள்ளை கலவை பிஎம்டபிள்யூ லோகோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

சுசுகி GZ150 க்ரூஸர் பைக் இந்தியாவில் களமிறங்குகின்றதா ?

தொடக்க நிலை க்ரூஸர சந்தையில் புதிய சுசுகி GZ150 க்ரூஸர் பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டமிட்டுள்ளது. GZ150 க்ரூஸர் பைக் விலை ரூ. 85,000 விலையில் அமையலாம்.

சுசுகி GZ150 க்ரூஸர் பைக்

இந்திய சந்தையில் ஜிக்ஸெர் பைக் மூலம் 150சிசி சந்தையில் மிகப்பெரிய வளர்ச்சியை சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பெற்று வரும் நிலையில் 250சிசி மாடலை களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிய தகவல் ஒன்றை பைக்அட்வைஸ் தளம் வெளியிட்டுள்ளது.

150சிசி சந்தையில் ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் SF  இரண்டும் பெற்ற வெற்றியை தொடர்ந்து தொடக்கநிலை க்ருஸர் சந்தையில் விற்பனையில் உள்ள பஜாஜ் அவென்ஜர் பைக்கிற்கு இணையான சவாலினை ஏற்படுத்தும் விலையில் ஜிஇசட் 150 மாடல் அமையலாம். இந்தியாவில் 150சிசி மற்ற்றும் 220சிசி என இரண்டிலும் கரூஸர் ரக மாடலில் அபரிதமான வரவேற்பினை பெற்றதாக விளங்கும் அவென்ஜருக்கு நிச்சியமாக சவாலாக சுசுகி ஜிஇசட் 150 மாடல் அமையலாம்.

 

சுசுகி GZ150 பைக் விபரம்

வட்ட வடிவ முகப்பு விளக்கு , கிளாசிக் டிசைன் என க்ரூஸருக்கு உரித்தான அம்சங்களுடன் ஸ்பிளிட் செய்யப்பட்ட இரு இருக்கைகள் என ஜிஇசட்150 சோப்பர் மாடலாக விளங்குகின்றது.

சசூகி GZ150 பைக்கில் 15.42 hp பவரை வெளிப்பட்டுத்தும் ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு SOHC 150சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 11.20 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 5 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஜிஇசட் 150 பைக்கின் நீளம் 2,250மிமீ, அகலம் 900மிமீ மற்றும் உயரம் 1,160மிமீ பெற்று இருக்கையின் உயரம் 710 மிமீ கொண்டதாக உள்ளது. இந்த பைக்கின் எடை 137 கிலோ கிராம் ஆகும். முன்புறத்தில் 18 அங்குல அலாய் சக்கரம் மற்றும் பின்புறத்தில் 16 அங்குல அலாய் சக்கரம் பெற்று முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் ஆப்ஷனுடன் விளங்குகின்றது.

இந்த பைக்கின் சஸ்பென்ஷன் அமைப்பில் டெலிஸ்கோபிக் முன்புறத்திற்கு வழங்கப்பட்டு சாக் அப்சார்கள் பின்புறத்தில் இடம்பெற்றுள்ளது.

வருகை மற்றும் விலை

வியட்நாம், கொலம்பியா போன்ற நாடுகள் உள்ளிட்ட பல்வேறு தேசங்களில் விற்பனை செய்யப்படுகின்ற இந்த மாடல் இந்திய மதிப்பில் ரூ.93,000 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்பட்டால் சசூகி GZ150 பைக் விலை ரூ. 82,000 முதல் ரூ. 87,000 விலைக்குள் அமையும் என்பதனால் அவென்ஜருக்கு நெருக்கடியாகவே அமையும்.

இந்திய சந்தைக்கு வருவதனை டீலர் வாயிலாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள வரும் பண்டிகை காலத்திற்கு முன்னதாகவோ அல்லது ஆண்டின் இறுதி மாதங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

ஹோண்டா கார்கள் & எஸ்யூவி விலை உயர்ந்தது – ஜிஎஸ்டி

சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு பிறகு செஸ் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் நடுத்தர கார்கள் முதல் ஆடம்பர கார்கள் வரை விலை கனிசமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஹோண்டா கார்கள் மற்றும் எஸ்யூவி விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஹோண்டா கார்கள் & எஸ்யூவி

சரக்குகள் மற்றும் சேவைகள் வரியில் உள்ள செஸ் எனப்படுகின்ற இழப்பீட்டு வரி நடுத்தர கார்கள் மற்றும் எஸ்யூவி உட்பட ஆடம்பர கார்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான நிறுவனங்களின் கார்கள் மற்றும் எஸ்யூவியின் விலையை உயர்த்த தொடங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 11ந் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

ரூ.7003 முதல் அதிகபட்சமாக ரூ.89,069 வரை விலையை இந்நிறுவனம் உயர்த்தியுள்ளது. இந்நிறுவனத்தின் பிரபலமான சிட்டி செடான் கார் ரூ.7003 முதல் அதிகபட்சமாக ரூ.18,791 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிஆர்-வி எஸ்யூவி மாடல் விலை ரூ. 2,490 முதல் அதிகபட்சமாக ரூ.18,242 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரிமியம் ரக சிஆர்-வி எஸ்யூவி மாடல் ரூ. 75,034 முதல் அதிகபட்சமாக ரூ.89,069 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

 

சமீபத்தில் டொயோட்டா , ஃபியட் கிறைஸலர் மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் விலை உயர்வினை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.

தொடர்ந்து நமது மொழியில் ஆட்டோமொபைல் செய்திகளை வாசிக்க எங்களுடைய

ஃபேஸ்புக்கில் பின் தொடர- https://www.facebook.com/automobiletamilan/ 

டிவிட்டரில் பின் தொடர- https://twitter.com/automobiletamil

ஹூண்டாய் கார்கள் & எஸ்யூவி விலை உயர்ந்தது – ஜிஎஸ்டி

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களின் விலையை ஜிஎஸ்டி செஸ் வரி உயர்வின் காரணமாக ரூ.12,547 முதல் அதிகபட்சமாக ரூ.84,867 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கார்கள் & எஸ்யூவி

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக விளங்கும் ஹூண்டாய் நிறுவனம் தன்னுடைய பிரிமியம் எஸ்யூவி , காம்பேக்ட் ரக எஸ்யூவி மற்றும் நடுத்தர ரக செடான் மாடல்களின் விலையை ஜிஎஸ்டி வரியின் காரணமாக உயர்த்தியுள்ளது. விலை உயர்வு செப்டம்பர் 12 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தீபாவளிக்கு முன்னதாக 12,000 வெர்னா கார்களை விற்பனை செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ள நிலையில், முதல் வாரத்தில் 7,000 முன்பதிவுகளை பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காரின் விலை வேரியன்ட் வாரியாக விலை உயர்வு மாறுபட்டாலும் அதிகபட்சமாக ரூ.29,090 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பிரபலமான ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ரூ.20,900  முதல் ரூ. 55,375  வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றொரு எஸ்யூவி மாடலான டூஸான் ரூ. 64,828 முதல் அதிகபட்சமாக ரூ.84,867 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

எக்ஸ்கூட்டிவ் செடான் ரக மாடலான எலன்ட்ரா ரூ.50,312 முதல் அதிகபட்சமாக ரூ.75,991 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய ரக கார் மாடல்களில் எலைட் ஐ20 காரின் ரூ.12,547 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் டொயோட்டா , ஃபியட் கிறைஸலர் மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் விலை உயர்வினை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.

தொடர்ந்து நமது மொழியில் ஆட்டோமொபைல் செய்திகளை வாசிக்க எங்களுடைய

ஃபேஸ்புக்கில் பின் தொடர- https://www.facebook.com/automobiletamilan/ 

டிவிட்டரில் பின் தொடர- https://twitter.com/automobiletamil

ரூ.72,000 வரை ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை உயர்ந்தது – ஜிஎஸ்டி செஸ்

ஃபியட் கிறைஸலர் குழுமத்தின் ஜீப் பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை ரூ.21 ஆயிரம் முதல் ரூ.72 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை உயர்வு

சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு பிறகு எஸ்யூவி மற்றும் ஆடம்பர சொகுசு கார்கள் வரி குறைந்ததை தொடர்ந்து லட்சங்கள் வரை விலை குறைந்திருந்த நிலையில் மீண்டும் செஸ் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் பல்வேறு நிறுவனங்களின் கார்கள் மற்றும் எஸ்யூவி விலை உயர தொடங்கியுள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி 10 ஆயரத்துக்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றிருக்கின்ற நிலையில் தற்போது ரூ.21 ஆயிரம் முதல் ரூ.72 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் உயர்ரக ஆடம்பர எஸ்யூவி மாடல்களான கிராண்ட் செராக்கீ, கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி மற்றும் ரேங்கலர் மாடல்கள் ரூ. 2.75 லட்சம் முதல் ரூ.6.40 லட்சம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த குழமத்தின் கீழ் இந்தியாவில் உள்ள ஃபியட் நிறுவனத்தின் புன்ட்டோ, லீனியா மற்றும் அவென்ச்சூரா மாடல்களில் லீனியா மற்றும் அவென்ச்சூரா மாடல்கள் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி செஸ் வரி உயர்வு டீலர்கள் வாரியாக மாறுபடும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

தொடர்ந்து நமது மொழியில் ஆட்டோமொபைல் செய்திகளை வாசிக்க எங்களுடைய

ஃபேஸ்புக்கில் பின் தொடர- https://www.facebook.com/automobiletamilan/ 

டிவிட்டரில் பின் தொடர- https://twitter.com/automobiletamil

மின்சார பைக்குகளை தயாரிக்க புதிய பிராண்டு – பஜாஜ் அர்பனைட்

பஜாஜ் அர்பனைட் என்ற மின்சார பைக் மற்றும் மூன்று சக்கர வாங்களுக்கு என பிரத்யேக பிராண்டினை 2020 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்ய உள்ளது.

பஜாஜ் அர்பனைட்

இந்திய சந்தையில் பஜாஜ் நிறுவனம் கேடிஎம், ஹஸ்க்வர்னா, டிரையம்ப் உள்ளிட்ட பிராண்டுகளுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், இந்தியாவில் 200சிசி முதல் 600சிசி வரையிலான பிரிவில் மிகப்பெரிய சந்தை மதிப்பினை கைப்பற்றுவதற்கு பஜாஜ் திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவன கூட்டணியில் 250சிசி முதல் 650சிசி வரையிலான மோட்டார்சைக்கிள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் மிகவும் சவாலான விலையிலும் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

சர்வதேச அளவில் மோட்டார் துறை மின்சார கார்கள் மற்றும் பைக்குகளை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ள நிலையில்,இந்திய சந்தையில் 2030 ஆம் ஆண்டு முதல் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் தயாரிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படும் என மத்திய அரசுஅறிவித்துள்ளது.

சமீபத்தில் லைவ்மின்ட் பத்திரிக்கைக்கு  பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் அளித்துள்ள பேட்டியில் 2020 ஆம் ஆண்டு முதல் குறைந்த விலை மற்றும் சிறப்பான ரேஞ்சு கொண்ட மின்சார மோட்டார்சைக்கிள் மாடல்களை அர்பனைட் என்ற பிராண்டு பெயரில் அறிமுகம் செய்ய உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் 4 சக்கர வாகன துறையில் டெஸ்லா மிகப்பெரிய மின்சார கார் தயாரிப்பாளராக விளங்குவதனை போல இரு சக்கர வாகன துறையின் டெஸ்லா நிறுவனமாக பஜாஜ் அர்பனைட் விளங்கும் என குறிப்பிட்டுள்ளார். அர்பனைட் பிராண்டில் பைக்குகள் தவிர மூன்று சக்கர ஆட்டோக்களும் தயாரிக்கப்படலாம்.

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்கள் தயாரிப்பதில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் முன்னணி வகித்து வருகின்றது. நாட்டில் 300 க்கு மேற்பட்ட டீலர்களை கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. மேலும் சமீபத்தில் ஏதர் எனர்ஜி என்ற ஸ்டார்டப் நிறவனம் S340 என்ற மின்சார ஸ்கூட்டரை தயாரித்து வரும் நிலையில், இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ரூ.200 கோடி வரை ஹீரோ மோட்டோகார்ப் முதலீடு செய்துள்ளது.

இந்நிறுவனத்தின் எஸ்340 ஸ்கூட்டர் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் பல்வேறு நகரங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. மேலும் புனேவைச் சேர்ந்த டார்க் மோட்டார் சைக்கிள் நிறுவனம் டி6எக்ஸ் என்ற ஸ்போர்ட்டிவ் எலக்ட்ரிக் பைக் ஒன்றை ரூ.1.24 லட்சம் விலையில் வெளியிட்டுள்ளது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மின்சார ஸ்கூட்டர் மாடல் ஒன்றை அடுத்த 6-9 மாதங்களுக்குள் விற்பனைக்கு வெளியிட உள்ளது இங்கே குறிப்பிடதக்கதாகும்.