2017 டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் X எடிசன் அறிமுகம்

க்ராஸ்ஓவர் எட்டியோஸ் க்ராஸ் மாடலில் கூடுதல் வசதிகளை பெற்ற 2017 டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் X எடிசன் ரூ.6.79 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

2017 டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் X எடிசன்

எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக் காரை அடிப்படையாக கொண்ட க்ராஸ்ஓவர் ரக எட்டியோஸ் க்ராஸ் மாடலை பின்னணியாக கொண்டு சிறப்பு வசதிகளை பெற்ற எட்டியோஸ் க்ராஸ் X எடிசன் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான எஞ்சின் தேர்வுகளிலும் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

X எடிசன் மாடலில் தோற்ற அமைப்பில் சிறப்பு பிரவுன் நிறத்துடன் கூடுதலாக முகப்பில் பனி விளக்கு அருகில் பெசல் பெற்றதாக, கருப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங் மற்றும் முகப்பு கிரில் ஆகியவற்றுடன் நேர்த்தியான X எடிசன் பேட்ஜ் பக்கவாட்டில் பதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அலாய் வீல் ஆகியவற்றுடன் இன்டிரியரில் சில குறிப்பிதக்க வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொண்டுக்கப்பட்ட கேபினில் கார்பன் ஃபைபர் ஃபினிஷ், புதிய இருக்கை கவர், 6.8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புடன் கூடிய ரியர் பார்க்கிங் கேமரா, ஏபிஎஸ் , இபிடி ஆகியவை அடிப்படை பாதுகாப்பு கருவிகளாக கொண்டுள்ளது.

விற்பனையில் உள்ள ஃபியட் அவென்ச்சூரா, போலோ க்ராஸ், மற்றும் ஹூண்டாய் ஐ 20 ஏக்டிவ் மாடல்களுக்கு சவாலாக எட்டியோஸ் க்ராஸ் X எடிசன் விளங்குகின்றது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதி ஆல்டோ உத்சவ எடிசன் அறிமுகம்

இந்தியாவின் முதன்மையான மோட்டார் கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு கூடுதல் வசதிகளை பெற்ற மாருதி ஆல்டோ உத்சவ எடிசன் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மாருதி ஆல்டோ உத்சவ எடிசன்

ஆற்றல் மற்றும் டார்க் ஆகியவற்றில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளாமல் தோற்ற அமைப்பு மற்றும் கூடுதல் துனைக்கருவிகளை மட்டுமே பெற்றதாக க்விட் 02 ஆண்டு விழா எடிசன் மாடலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் விற்பனைக்கு ரூ.3.94 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

48bhp ஆற்றலுடன் 69Nm டார்க் வழங்கும் 0.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 5வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த காரில் தோற்ற அமைப்பில் பாடி ஸ்டிக்கரிங், ORVM  கவர் கார்னிஷ், புதிய இருக்கை கவர், ரியர் பார்க்கிங் சென்சார், கதவு சீல் கார்டு, கருப்புநிற அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ள இந்த துனைக்கருவிகள் மதிப்பு ரூ.25,000 ஆகும்.

சாதாரண VXi வேரியன்ட் மாடலை அடிப்படையாக கொண்ட மாருதி ஆல்டோ உத்சவ எடிசன் விலை ரூ.3.94 லட்சம் ஆகும்.

ஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் – அமைச்சா் தா்மேந்திர பிரதான்

பெட்ரோலிய பொருட்களை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த பரீசிலனை நடைபெறுவதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வீட்டுக்கே பெட்ரோல் , டீசல்

இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப பெட்ரோல் பங்க்குகளில் வரிசையில் காத்திருப்பதனை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் வகையில் வீட்டுக்கே வந்து நிரப்பும் வகையிலான திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றது.

மொபைல் வாயிலாக உணவு பண்டங்களை முன்பதிவு செய்வது போல பெட்ரோலிய பொருட்ளை ஆர்டர் செய்து விட்டால், நுகர்வோர்களின் வீடுகளுக்கே பெட்ரோல் டீசல் கொண்டு வந்து வழங்கப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் தொடக்க விழாவில் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு பேசியதாவது:-

தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள புரட்சியானது, அனைத்து துறைகளிலும் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சரியான கொள்கைகளுடன் செயல்படும் சுதந்திர சந்தை, எப்போதும் நுகர்வோர் நலன்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பயன்படுத்தி, விரைவில் ஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனையை தொடங்க உள்ளோம்.

பெட்ரோலிய பொருட்களையும் ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவது தொடா்பாகவும் விவாதித்து வருகிறோம். அதுவும் விரைவில் நடைபெறும் என்றும் அமைச்சா் தொிவித்துள்ளாா்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ – 2018 தேதிகள் அறிவிப்பு

தெற்காசியாவின் மிகப்பெரிய மோட்டார் கண்காட்சிகளில் ஒன்றான டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டா-வில் உள்ள இந்தியன் எக்ஸ்போ மார்ட் அரங்கில் ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காட்சி பிப்ரவரி 9ந் தேதி முதல் பிப்ரவரி 14ந் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2018

வருகின்ற 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ந் தேதி முதல் 11ந் தேதி வரை புது டெல்லியில் உள்ள பிரகதி மெய்டன் அரங்கில் 14வது ஆட்டோ எக்ஸ்போ உதிரபாகங்களுக்கு கண்காட்சி நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து கிரேட்டர் நொய்டா-வில் இந்தியன் எக்ஸ்போ மார்ட் அரங்கில் ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் ஷோ 2018 கண்காட்சி பிப்ரவரி 9ந் தேதி முதல் பிப்ரவரி 14ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் தவிர சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்க உள்ள இந்த கண்காட்சியில் புதிய கான்செப்ட், வரவுள்ள புதிய கார் மற்றும் பைக்குகள் ஆகியவற்றை காட்சிப்படுத்த உள்ளன.

இந்நிலையில் வோல்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் வோல்ஸ்வேகன், ஸ்கோடா, ஆடி உட்பட ஜிஎம், ஃபோர்டு ஆகிய 4 சக்கர வாகன தயாரிப்பாளர்களுடன் பஜாஜ், ராயல் என்ஃபீல்டு போன்ற இரு சக்கர வாகன நிறுவனங்களும் ஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் பங்கேற்பதனை தவிர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் ரெனால்ட் கேப்டூர் எஸ்யூவி முன்பதிவு தொடங்கியது

அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ரெனால்ட் கேப்டூர் எஸ்யூவி மாடலுக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரெனால்ட் கேப்டூர் முன்பதிவு

டஸ்ட்டர் எஸ்யூவி மாடலில் இடம்பெற்றுள்ள அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 106 hp பவர் மற்றும் 142 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 5 வேக மேனுவல் தவிர சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம். மேலும்  1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 110 hp பவர் மற்றும் 245 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 6 வேக மேனுவல் தவிர 6 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர ஆல்வீல் டிரைவ் வேரியன்ட் ஆப்ஷனலாக அறிமுகம் செய்யப்படலாம்.

பல்வேறு நவீன வசதிகளான ஸ்பார்க்கிள் எல்இடி ஹெட்லேம்ப் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் டெயில் விளக்குகள், 17 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் ஆகியவற்றுடன் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளை கொண்டதாக இருக்கும்.

அக்டோபர் மாத மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள கேப்சர் எஸ்யூவி மாடலுக்கு டீலர் வாயிலாக ரூ. 25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். கேப்டூர் எஸ்யூவி விலை ரூ.12 லட்சத்தில் தொடங்கி ரூ.17 லட்சத்திற்குள் அமையும் வாய்ப்புகள் உள்ளது.

2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD Sportivo விற்பனைக்கு வந்தது

ரூ.31.01 லட்சத்தில் 2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD Sportivo எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் மட்டுமே ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்ட்டிவோ கிடைக்க உள்ளது.

2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD Sportivo

மெக்கானிக்கல் வசதிகள் மற்றும் ஆற்றல், டார்க் ஆகியவற்றில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் தோற்ற அமைப்பில் மட்டுமே பெற்றுள்ள இந்த எஸ்யூவி மாடலில் இன்டிரியரில் குறிப்பிடதக்க வசதிகள் பெற்றுள்ளது.

TRD என்றால் Toyota Racing Development என்பது விளக்கமாகும். 177 HP ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 420 Nm டார்க்கினை வழங்கும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் பெற்றதாக வந்துள்ளது. இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக 4×2 டிரைவில் மட்டுமே கிடைக்க உள்ளது.

தோற்ற அமைப்பில் முன்புறத்தில் கருப்பு நிற கிரிலுடன் கூடிய மிக சிறப்பாக கம்பீர தன்மையை வெளிப்படுத்துவதுடன் TRD பேட்ஜினை பெற்றுள்ளதுடன் பக்கவாட்டில் 18 அங்குல அலாய் வீல் மற்றும் டிஆர்டி ஸ்டிக்கரிங் பெற்றுள்ளது.

சிவப்பு நிற அசென்ட்ஸ் பெற்றதாக சென்ட்ரல் கன்சோல் அமைப்பில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் நேவிகேஷன், ரியர் பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக், ஏபிஎஸ், இபிடி, 7 காற்றுப்பைகள் உள்பட பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது.

2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD Sportivo விலை ரூ.31.01 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

டிவிஎஸ் அப்பாச்சி 160, அப்பாச்சி 180 மேட் ரெட் விற்பனைக்கு வந்தது

பண்டிகை காலத்தை முன்னிட்டு டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அப்பாச்சி வரிசை மாடல்களில் உள்ள அப்பாச்சி 160, அப்பாச்சி 180 ஆகியவற்றில் மேட் சிவப்பு நிறத்தை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி 160, அப்பாச்சி 180

விற்பனையில் உள்ள மற்ற நிற மாடல்களை விட ரூ.1000 வரை விலை கூடுதலாக பெற்றுள்ள இந்த நிறத்தில் வேறு எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்பட வில்லை.

அப்பாச்சி 160 பைக்கில் 159.7cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு 15.2 HP ஆற்றல் மற்றும் 13.1 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

அப்பாச்சி 180 பைக்கில் 177.4cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு 17.03 HP ஆற்றல் மற்றும் 15.5 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

அப்பாச்சி 160, அப்பாச்சி 180 மேட் ரெட்

Apache 160 Matte Red – ரூ. 77,865/-
Apache 160 Matte Red Rear-Disc – ரூ. 80,194/-
Apache 180 Matte Red – ரூ. 81,833/-

தற்போது நாடு முழுவதும் உள்ள டிவிஎஸ் டீலர்களிடம் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

 

டாடா நெக்சன் எஸ்யூவி விற்பனை வந்தது – விலை மற்றும் முழுகவரேஜ்

காம்பேக்ட் ரக எஸ்யூவி பிரிவில் களமிறங்கி உள்ள டாடா நெக்சன் எஸ்யூவி ரூ.5.97  விற்பனைக்கு லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் தற்போது நெக்சன் காம்பேக்ட் ரக எஸ்.யூ.வி பிரிவில் மிகவும் குறைந்த விலை மாடலாகும்.

கடுமையான சவால்கள் நிறைந்த தொடக்க நிலை காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக மிகவும் ஸ்டைலிசான தோற்ற அமைப்பில் டாடா மோட்டார்சின் புதிய இம்பேக்ட் டிசைன் மொழி தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். நெக்ஸான் காரின் டிசைன் வடிவம் ரேஞ்ச்ரோவர் எவோக் காரின் வடிவ சாயலை பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.

நெக்ஸான் தகவல்கள்

1. டாடா மோட்டார்சின் புதிய டிசைன் மொழி இம்பேக்ட் வடிவ தாத்பரியத்தில் உருவாக்கப்பட்டுள்ள டியாகோ அமோக வரவேற்பினை பெற்றுள்ளதை தொடர்ந்து வடிவமைக்கப்பட்டிருக்கும் கைட் 5 செடான் காரினை தொடர்ந்து நெக்ஸான் எஸ்யூவி வரவுள்ளது.

2. நெக்ஸான் தோற்ற அமைப்பில் சிறப்பான வடிவ தாத்பரியங்களுடன் புராஜெக்டர் முகப்பு விளக்கு , பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்கு , 16 இன்ச் அலாய் வீல் போன்றவற்றுடன் 4 மீட்டருக்குள் அதாவது 3990 மிமீ நீளத்தினை பெற்றிருக்கும்.

 

3. விற்பனையில் உள்ள டாடா டியாகோ காரின் உட்புற அமைப்பினை போன்ற அம்சங்களுடன் 5 இருக்கை ஆப்ஷன்களுடன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் , சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட டேஸ்போர்டு , நேர்த்தியான இருக்கை அமைப்பு , தாரளமான இடவசதி போன்றவற்றுடன் 2470மிமீ வீல்பேஸ் கொண்டிருக்கின்றது.

4. இஞ்ஜின் ஆப்ஷன்  1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெவோடார்க் வரிசையில் புத்தம் புதிதாக வரவுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு எஞ்சினிலும்  6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

Specifications Petrol Diesel
எஞ்சின் சிசி 1198 cc 1497 cc
பவர் 108 bhp @ 5000 rpm 108 bhp @ 3750 rpm
டார்க் 170 Nm @ 1750-4000 rpm 260 Nm @ 1500-2750 rpm
கியர்பாக்ஸ் 6-speed MT 6-speed MT
மைலேஜ் 17 kmpl 21.5 kmpl

5. முன்பக்க இரட்டை காற்றுப்பை, ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்றவை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும்.

6. போட்டியாளர்கள் விட்டாரா பிரெஸ்ஸா , டியூவி300 , ஈகோஸ்போர்ட், நூவோஸ்போர்ட்  போன்றவற்றுக்கு நேரடியான சவாலாக டாடா நெக்ஸான் எஸ்யுவி அமைந்திருக்கும்.

டாடா நெக்சன் விலை
Tata Nexon Petrol Diesel
XE ரூ.5,97,315 ரூ. 6,97,509
XM ரூ.6,62,217 ரூ. 7,58,963
XT ரூ. 7,42,220 ரூ. 8,27,414
XZ+ ரூ.8,57,224 ரூ. 9,42,418
XZ+ Dual Roof ரூ.8,72,225 ரூ. 9,57,419

 

 

சான்ட்ரோ பெயரை புதிய ஹூண்டாய் கார் பெற வாய்ப்பில்லை

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற சான்ட்ரோ கார் பெயரை அடுத்த புதிய ஹேட்ச்பேக் கார் மாடல் பெற வாய்ப்பில்லை என ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மூத்த பொது மேலாலளர் தெரிவித்துள்ளார்.

2018 ஹூண்டாய் ஹேட்ச்பேக் கார்

இந்திய சந்தையில் தொடக்க நிலை சந்தை மற்றும் காம்பேக்ட் ரக ஹேட்ச்பேக் கார்களுக்கு இடையிலான பிரிவில் உள்ள டியாகோ, செலிரியோ, க்விட் மற்றும் வரவுள்ள புதிய மாருதி 800 ஆகிய மாடல்களுக்கு மிகுந்த சவாலாக விளங்கும் வகையில் க்ராஸ்ஓவர் ரக மாடல்களின் அடிப்படையில் ஹேட்ச்பேக் கார் ஒன்றை அடுத்த ஆண்டின் மத்தியில் ஹூண்டாய் அறிமுகம் செய்ய உள்ளது.

சமீபத்தில் ஃபைனான்ஸ் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மூத்த பொது மேலாலளர் மற்றும் விளம்பரப்படுத்துதல் பிரிவு தலைவர்  புனீத் ஆனந்த அளித்த பேட்டியில் அடுத்த ஆண்டு வரவுள்ள ஹேட்ச்பேக் கார் மாடல், தற்போதுள்ள சந்தை நிலவரத்துக்கு ஏற்ற வகையில் புதிய பெயரை பெற்றதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் பெற்றிருக்கின்ற இந்த மாடல் ஏஎம்டி மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றதாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தீபாவளி பரிசாக ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி அறிமுகம் மற்றும் முன்பதிவு விபரம்

இந்தியாவில் டஸ்ட்டர் மற்றும் க்விட் ஆகிய மாடல்கள் வாயிலாக சிறப்பான பங்களிப்பை பெற்றுள்ள ரெனால்ட், புதிதாக ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி-யை செப்டம்பர் 21ந் தேதி அறிமுகம் செய்கின்றது.

ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி அறிமுகம்

 

ஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ், மஹிந்திரா எக்ஸ்.யூ.வி 500 ஆகிய மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் ரெனால்ட் கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில் செப்டம்பர் 21ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதை தொடர்ந்து, மறுநாள் அதாவது செப்டம்பர் 22ந் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட உள்ளதால் அக்டோபர் மாத மத்தியில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

டஸ்ட்டர் எஸ்யூவி மாடலில் இடம்பெற்றுள்ள அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 106 hp பவர் மற்றும் 142 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 5 வேக மேனுவல் தவிர சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம். மேலும்  1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 110 hp பவர் மற்றும் 245 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 6 வேக மேனுவல் தவிர 6 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர ஆல்வீல் டிரைவ் வேரியன்ட் ஆப்ஷனலாக அறிமுகம் செய்யப்படலாம்.

பல்வேறு நவீன வசதிகளான எல்இடி ஹெட்லேம்ப் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் டெயில் விளக்குகள், 17 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் ஆகியவற்றுடன் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளை கொண்டதாக இருக்கும்.

2,673 மிமீ வீல்பேஸ் பெற்ற மாடலாக இருக்கும் என்பதனால் தாராளமான  இடவசதி பெற்ற மாடலாகவும் 387 லிட்டர் கொள்ளளவு பெற்ற பூட் வசதியை, மேலும்அதிகரிக்க பின்புற இருக்கைகளை மடக்கினால் 1,200 லிட்டர் வரை விரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய சந்தையில் பெரும்பாலான உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படும் என்பதனால், இந்த க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி காப்டூர் மாடல் மிகவும் சவாலாகவும் பல்வேறு வசதிகளை பெற்றதாகவும் விற்பனைக்கு வரக்கூடும்.

ரெனோ கேப்டூர் விலை

கேப்டூர் எஸ்யூவி விலை ரூ.12 லட்சத்தில் தொடங்கி ரூ.17 லட்சத்திற்குள் அமையும் வாய்ப்புகள் உள்ளது. வருகின்ற செப்டம்பர் 21ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதை தொடர்ந்து, மறுநாள் அதாவது செப்டம்பர் 22ந் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட உள்ளதால் அக்டோபர் மாத மத்தியில் அதாவது தீபாவளிக்கு முன்னதாக டெலிவரி தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலதிக ஆட்டோமொபைல் செய்திகள் வாசிக்க தொடர்ந்து இணைந்திருங்கள்