ரெனோ க்விட் 02 அனிவெர்சரி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவின் தொடக்கநிலை கார் சந்தையில் மிக சவாலான மாடலாக விளங்குகின்ற ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் மாடலின் இரண்டு ஆண்டு நிறைவையொட்டி சிறப்பு ரெனோ க்விட் 02 அனிவெர்சரி எடிசன் 0.8 லி மற்றும் 1.0 லி என இரு எஞ்சினிலும் கிடைக்கின்றது.

ரெனோ க்விட் 02 அனிவெர்சரி எடிசன்

இந்தியாவின் முதன்மையான கார் மாடலாக விளங்கும் மாருதி சுசுகி ஆல்டோ காருக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்திய ரெனால்ட் க்விட் அமோகமான ஆதரவினை பெற்றதை தொடர்ந்து 0.8 லி, 1.0 லி மற்றும் ஏஎம்டி உள்ளிட்ட தேர்வுகளில் கிடைத்து வருகின்றது.

சாதாரண RXL மற்றும் RXT வேரியண்டினை பின்னணியாக கொண்டு கூடுதலாக ஸ்போர்ட்டிங் பாடி கிராபிக்ஸ் அம்சத்துடன் , முன்பக்கத்தில் அமைந்துள்ள பானெட்டில் 02 பேட்ஜ் பதிக்கப்பட்டு வெள்ளை மற்றும் சிவப்புநிறங்களில் கிடைக்க உள்ளது.

இரு வண்ண ஓஆர்விஎம் பெற்றதாக வந்துள்ள இந்த சிறப்பு பதிப்பில் 02 பேட்ஜ் பெற்ற அப்ஹோல்ஸ்ட்ரி, இரு வண்ண கியர் ஷிஃப்டர், ஃபுளோர் மேட்ஸ், சிறப்பு ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றை பெற்றதாக கிடைக்கின்றது. எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

 

க்விட் எஞ்சின் விபரம்

54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.

67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.

ரெனோ க்விட் 02 அனிவெர்சரி எடிசன் விலை பட்டியல்

சாதாரன வேரியன்டை விட ரூ. 15,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ள ரெனோ க்விட் 02 விலை பட்டியல் பின்வருமாறு

 வேரியன்ட்  விலை
Kwid RXL 0.8L SCe ரூ. 3,42,800
Kwid RXT 0.8L SCe ரூ.3,76,400
Kwid RXL 1.0L SCe ரூ. 3,64,400
Kwid RXT 1.0L SCe ரூ. 3,97,900

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை பட்டியல்)

ஹோண்டா ஜாஸ் ப்ரீவிலேஜ் எடிசன் விற்பனைக்கு வந்தது

சமீபத்தில் அமேஸ் செடான் மாடலில் ப்ரீவிலேஜ் எடிசன் மாடலை போலவே ஹோண்டா ஜாஸ் ப்ரீவிலேஜ் எடிசன் ரூ. 7.36 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் சிவிடி ஆப்ஷனல்களில் கிடைக்கின்றது.

ஹோண்டா ஜாஸ் ப்ரீவிலேஜ்

ஹோண்டா ஜாஸ் காரின் ஜாஸ் V வேரியன்ட் மாடலின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள பிரீவிலேஜ் சிறப்பு பதிப்பு சாதாரண மாடலை விட ரூ. 5000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.

வெளி தோற்ற அமைப்பில் ப்ரீவிலேஜ் எடிசன் பேட்ஜ் போன்றவற்றுடன் இன்டிரியர் அமைப்பில் டிஜிபேட் 17.7-cm இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் செயற்கைகோள் தொடர்புடன் கூடிய 3D நேவிகேஷன்,  1.5GB சேமிப்பு வசதியுடன் புளூடூத் மற்றும் யூஎஸ்பி ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.

எஞ்சினில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஜாஸ் காரில் 90பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 100என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி தானியங்கி கியர்பாக்சிலும் கிடைக்கும்.
ஜாஸ் டீசல் காரில் 100பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் i-DTEC என்ஜின் பொருத்தியுள்ளனர். இதன் முறுக்குவிசை 200என்எம் ஆகும். 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தியுள்ளனர்.

ஹோண்டா ஜாஸ் ப்ரீவிலேஜ் விலை பட்டியல்
MT Privilege Edition (Petrol) ரூ. 7,36,358
V CVT Privilege Edition (Petrol) ரூ. 8,42,089
V MT Privilege Edition (Diesel) ரூ. 8,82,302

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி )

டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

டிரையம்ப் ஸ்டீரிட் ட்வின் பைக் மாடலை அடிப்படையாக கொண்டு வடிமைக்கப்பட்டுள்ள கிளாசிக் தோற்ற உந்துதலை பெற்று வந்துள்ள ரூ. 8.1 லட்சத்தில் டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் கிடைக்க தொடங்கியுள்ளது.

டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர்

டிரையம்ப் நிறுவனத்தின் போனிவில் பிரிவின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ள ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் மிக நேர்த்தியான பைக்கில் 900சிசி பேரலல் ட்வின் லிக்யூடு கூல்டு  எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 54 bhp பவரை வெளிப்படுத்துவதுடன் 80 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ரைட் பை வயர், ஏபிஎஸ் மற்றும் டிராக்‌ஷன் கன்ட்ரோல் ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.

டெலஸ்கோபிக் ஃபிரெண்ட் ஃபோர்க்ஸ், டூயல் ரியர் ஷாக்ஸ், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், பேஷ் பிளேட், எல்.இ.டி டெயில் லேம்ப் போன்றவற்றுடன் மிக நேர்த்தியான இரட்டை புகைப்போக்கி அம்சத்தை கொண்டதாக வந்துள்ளது. இந்த பைக்கில் 150 க்கு மேற்பட்ட துனைக்கருவிகள் வழங்கப்பட்டுள்ள ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக்கின் முன்பக்க சக்கரத்தில் 19 அங்குல அளவுக்கொண்டதாகவும் பின் பக்க சக்கரத்தில் 17 அங்குலத்தை பெற்றுள்ளது.

டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் விலை ரூ. 8.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஜூலை 2017

கடந்த ஜூலை 2017 மாதந்திர விற்பனை முடிவில் முன்னணி வகித்து டாப் 10 பைக்குகள் மற்றும் ஸ்ட்டர்களை பற்றி இங்கே காணலாம். ராயல் என்ஃபீல்டு தொடர்ந்து 350 சிசி சந்தையில் சிறப்பான பங்களிப்பினை பெற்று விளங்குகின்றது.

டாப் 10 பைக்குகள் – ஜூலை 2017

இந்திய சந்தையில் தொடர்ந்து ஸ்கூட்டர் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற நிலையில் ஆக்டிவா 292,669 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து நாட்டின் முதன்மையான இருசக்கர வாகனமாக விளங்குகின்றது.

இரண்டாவது இடத்தில் முந்தைய முன்னணி இருசக்கர வாகனமாக விளங்கிய ஸ்பிளென்டர் விளங்குகின்றது. மிகவும் சவாலான ஸ்கூட்டர் சந்தையில் சிறப்பான பங்களிப்பினை ஜூபிடர் தொடர்ந்து வழங்கி வழங்குகின்றது.

125சிசி சந்தையில் ஷைன் மற்றும் கிளாமர் பைக்குகளுக்கு இடையே தொடரந்து கடுமையான போட்டி நிலவி வருகின்றது. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற 350சிசி சந்தையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 42,967 அலகுகள் விற்பனை செய்து 10வது இடத்தை பிடித்திருக்கின்றது.

விற்பனையில் டாப் 10 பைக்குகள் பட்டியலை கீழே உள்ள அட்டவனையில் காணலாம்

ஆட்டோமொபைல் உதிரிபாகங்களில் விநாயகர் சிலையை வடிவமைத்த ஃபோர்டு

வருகின்ற 25ந் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6.5 அடி உயரத்தில் விநாயகர் சிலையை ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை கொண்டு ஃபோர்டு நிறுவனத்தின் ஆதரவுடன் மாதவி பிட்டி எனும் கலைஞர் மற்றும் நிஷாந்த சுதாகரன் மெட்டல் கலைஞர் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை

ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள ஆட்டோமொபைல் உதரிபாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை Workshop Q மாதவி பிட்டி எனும் கலைஞர் மற்றும் நிஷாந்த சுதாகரன் மெட்டல் கலைஞர் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

உண்மையான உதிரிபாகங்களை பயன்படுத்துவற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு கனேசா சிலையில் வாகனங்களில் பயன்படுத்துகின்ற உதிரிபாகங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் CT100 எலக்ட்ரிக் ஸ்டார்ட் பைக் விற்பனைக்கு அறிமுகம்

தமிழ்நாடு எக்ஸ்-ஷோரும் விலை ரூ. 39,729 என வெளியிடப்பட்டுள்ள பஜாஜ் CT100 ES பைக் மாடல் குறைந்த விலை தொடக்கநிலை கம்யூட்டர் சந்தையில் பஜாஜ் நிறுவனத்தின் 4வது வேரியன்ட் ஆகும்.

பஜாஜ் CT100 ES

இந்தியாவின் மிக விலை குறைந்த இருசக்கர மோட்டார் சைக்கிள்களில் ஒன்றான பஜாஜ் சிடி 100 பைக்கின் ஆரம்ப விலை ரூ. 31,716 (சிடி 100B) முதல் தொடங்குகின்றது. தற்போது வெளியாகியுள்ள புதிய வேரியன்டில் எலக்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் அலாய் வீல் பெற்று 102 சிசி எஞ்சினை பெற்றுள்ளது.

தொடக்கநிலை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சிடி 100 எலக்ட்ரிக் ஸ்டார்ட் மாடலில் கருப்பு மற்றும் சில்வர் நிறத்துடன் கூடிய சிவப்பு ஸ்டிக்கரிங்,   கருப்பு மற்றும் சில்வர் நிறத்துடன் கூடிய நீல ஸ்டிக்கரிங் மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களுடன் கிடைக்க உள்ள இந்த பைக்கில் மிக அகலமான இருக்கை வழங்கப்பட்டிருப்பதுடன் நீண்ட தூர பயணத்திற்கும் ஏற்ற வகையில் சிறப்பான சொகுசு தன்மையை வழங்கும்  SNS (Spring in Spring Suspension) இடம்பெற்றுள்ளது.

CT 100B,  CT 100 ஸ்போக் மற்றும் CT 100 அலாய் ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள 99.27சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் புதிதாக வந்துள்ள பஜாஜ் CT100 ES மாடலில் 7.6 bhp மற்றும் 8.24 NM டார்க்கினை வழங்கும் 102சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

விற்பனையில் உள்ள ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் , ஹோண்டா CD 110 ட்ரீம் போன்றவற்றுக்கு போட்டியாக  பஜாஜ் CT100 எலக்ட்ரிக் ஸ்டார்ட் ரூ.39,729 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS FI டீசர் வெளியானது

கடந்த ஜனவரி 2016 ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS FI விரைவில் சந்தைக்கு வருவதனை தனது சமூக வலைதள பக்கங்களில் டீசர் வாயிலாக உறுதி செய்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS FI

இந்த பைக்கில் 21PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. இது FI மற்றும் கார்புரேட்டர் மாடல் (20.5 PS) என இரு தேர்வுகளில் கிடைக்கின்றது. இதன் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 129 கிமீ ஆகும்.

கார்புரேட்டர் மாடல் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.95 விநாடிகள் எடுத்துக் கொள்ளுகின்ற நிலையில் அப்பாச்சி ஆர்டிஆர் எஃப்ஐ மாடல் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.90 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

அப்பாச்சே 200 பைக்கிலும் தொடர்கின்றது. முன்பக்கத்தில் டியூவல் சேனல் ஏபிஎஸ் வழங்கியுள்ளது. முன்பக்கத்தில் 270மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் KYB மோனோஷாக் அப்சார்பர் பின்புறத்தில் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் 37மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் உள்ளது.

விலை விபரம்

தமிழகத்தில் எக்ஸ்-ஷோரூம் விலையில் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் விலை ரூ. 95,025 மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைரேலி டயர் பைக் விலை ரூ. 100,025 ஆகும்.

விரைவில் வரவுள்ள ஏபிஎஸ் மற்றும் எஃப்ஐ பெற்ற மாடல் அதிகபட்சமாக ரூ. 1.22 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

யமஹா ஃபேஸர் 25 Vs யமஹா FZ25 வித்தியாசங்கள் அறிவோம்

யமஹா மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் புதிய யமஹா ஃபேஸர் 25 மற்றும் யமஹா FZ25 என இரு பைக்குகளுக்கு இடையே உள்ள குறிப்பிட்ட சில முக்கிய வித்தியாசங்களை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

யமஹா ஃபேஸர் 25 Vs யமஹா FZ25

நெடுந்தொலைவு பயணங்களுக்கு ஏற்ற வகையில் ஸ்போர்ட்டிவ் டூரிங் மாடலாக ஃபேஸர் 25 பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டிவ் நேக்டூ வெர்ஷன் மாடலான யமஹா FZ25 பின்னணியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

FZ25 மற்றும் ஃபேஸர் 25 பைக்கில் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஃபேரிங்

ஏரோடைனமிக்ஸ் அம்சத்தை பெற்ற ஃபேரிங் பேனல்களை கொண்டு மிக நேர்த்தியாக டூயல் எல்இடி ஹெட்லேம்ப் பெற்றதாகவும் வந்துள்ளது. சாதாரண மாடலை விட அகலமான ஏர் டேம் பெற்றதாக வந்துள்ளது.

எடை

நேக்டூ வெர்ஷன் மாடல் 148 கிலோ எடைபெற்றுள்ள நிலையில் ஃபேரிங் செய்யப்பட்ட மாடல் ஃபேசர் 25 154 கிலோ கிராம் எடை பெற்றுள்ளது.

டூயல் ஹார்ன் மற்றும் டூயல் எல்இடி ஹெட்லேம்ப்

ஒற்றை ஹார்ன் அல்ல இரண்டு ஹார்ன்களை ஃபேஸர் 25 பெற்றிருப்பதுடன் , இரண்டு பிரிவு பெற்ற எல்இடி விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் விளக்கினை பெற்றதாக வந்துள்ளது.

விலை

இரு மாடல்களுக்கு விலை சராசரியாக ரூ. 10,000 வரை வித்தியாசமாம் உள்ளது. யமஹா ஃபேஸர் 25 பைக் ரூ. 1.29 லட்சத்திலும், யமஹா FZ25 பைக் ரூ. 1.19 லட்சத்தில் கிடைக்கின்றது.

 

2018 முதல் யமஹா பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக் வருகை

புதிதாக யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய 250 சிசி ஃபேஸர் 25 பைக்கில் ஏபிஎஸ் ஆப்ஷனலாகவும் வழங்கப்படவில்லை என்பது பலருக்க ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஏபிஎஸ் பிரேக் கட்டாயம்

அடுத்த ஆண்டு முதல் 125 சிசி க்கு மேற்பட்ட ஏபிஎஸ் பிரேக் கட்டாயம் என்ற நடைமுறைக்கு வரவுள்ளதை தொடர்ந்தே ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்படும் என இந்தியா யமஹா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படுகின்ற உயர்ரக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பஜாஜ், டிவிஎஸ், சுசூகி போன்ற நிறுவனங்கள் 160 சிசி மற்றும் 200 சிசி பைக்குகளுக்கு ஏபிஎஸ் பிரேக்கினை ஆப்ஷனலாக வழங்கி வருகின்றது.

ஆனால் சமீபத்தில் வெளியான நேக்டூ FZ25 பைக் அடிப்படையிலான ஃபேரிங் செய்யப்பட்ட ஃபேஸர் 250 பைக்கில் ஏபிஎஸ் வழங்கப்படவில்லை என்பது இங்கே குறிப்படதக்கதாகும்.

வரும் ஏப்ரல் 2018 முதல் 125 சிசிக்கு மேற்பட்ட அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளது. பயன்பாட்டில் உள்ள மோட்டர் சைக்கிள்களுக்கு 2019 ஆம் ஆண்டு முதல் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு கட்டயாமாகும்.

 

2017 ஹூண்டாய் வெர்னா கார் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட டிசைன் மற்றும் இன்டிரியர் உள்ளிட்ட அம்சங்களை பெற்ற 2017 ஹூண்டாய் வெர்னா கார் பற்றி இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

2017 ஹூண்டாய் வெர்னா

விற்பனையில் உள்ள மாடலை விட மாறுபட்ட தோற்ற அமைப்பினை பெற்று கூடுதலாக செயல்திறன் மிக்க காராக மாறியுள்ள வெர்னாவின் இன்டிரியர் அமைப்பிலும் கூடுதலான வசதிகள் மற்றும் தாரளமான இடவசதியை பெற்றதாக வந்துள்ளது.

சர்வதேச அளவில் 66 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற வெர்னா இதுவரை 8.8 மில்லியன்க கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய சந்தையில் மட்டும் 3.17 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

டிசைன்

புதிய டிசைனிங் பெற்ற வெர்னா காரில் மிக நேர்த்தியான முகப்பு தோற்றத்தை பெற்று எலன்டாரா காரின் உந்துதலை பெற்றதாக வந்துள்ளது. K2 பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள வெர்னா மாடலில் எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்தாக எல்இடி முகப்பு புராஜெக்டர் விளக்குகளுடன் கூடிய இந்த காரில் பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகள் மற்றும் 16 அங்குல அலாய் வீல் ஆப்ஷனை கொண்டிருக்கின்றது.

Dimensions ஹூண்டாய் வெர்னா
நீளம் 4,440 mm
அகலம் 1,729 mm
உயரம் 1,475 mm
வீல்பேஸ் 2,600 mm
கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 mm

இன்டிரியர்

நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் ஸ்மார்ட்போன் போன்றவற்றை இணைக்கும் வகையில் ஆதரவினை பெற்ற 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடிய டேஸ்போர்டு மிக நேர்த்தியான அமைப்பினை பெற்றிருக்கும்.

NVH குறைக்கப்பட்டு 65 மிமீ வரை நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கூடுதலான இடவசதியுடன் ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்களுடன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், எலக்ட்ரிக் சன்ரூஃப் போன்றவற்றை பெற்றுள்ளது.

எஞ்சின்

123hp பவரை வெளிப்படுத்தும் 1.6 L காமா பெட்ரோல் மற்றும் 128hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 L U2 CRDi டீசல் என இரு எஞ்சின் ஆப்ஷன்களை பெற்றுள்ளது. இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 6 வேக மேனுவல் என இரண்டிலும் கிடைக்க உள்ளது.

விபரம்
Hyundai Verna 2017 Petrol Hyundai Verna 2017 Diesel
எஞ்சின் 1,591 cc Gamma Dual VTVT 1,582 cc U2 CRDi
பவர் 123 PS 128 PS
டார்க் 151Nm 260 NM
கியர்பாக்ஸ் 6-speed MT/6-speed AT 6-speed MT/6-speed AT
மைலேஜ் 17.70 km/l (MT)15.92 km/l (AT) 24.75 km/l (MT)21.02 km/l (AT)

பாதுகாப்பு அம்சங்கள்

K2 எனும் புதிய பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வெர்னாவில் முந்தைய மாடலை விட 50 சதவிகித கூடுதல் திறன் பாதுகாப்பு மற்றும் கட்டுறுதி (Advanced High Strength Steel – AHSS) சூப்பர் பாடி கட்டுமானத்தை பெற்றுள்ள புதிய வெர்னா காரின் அனைத்து வேரியன்டிலும் இரண்டு காற்றுப்பை மற்றும் ஏபிஎஸ்,இபிடி போன்றவை நிரந்தர அம்சமாகவும், உயர்ரக வகையில் 6 காற்றுப்பைகள் பெற்றிருக்கின்றது.

வேரியண்ட்

வெர்னா காரில் மொத்தம் E, EX, SX, SX (O), EX AT, SX+ AT மற்றும் SX (O) AT என மொத்தம் 7 விதமான வேரியண்ட்களில் கிடைக்கின்றது. ஆரம்ப நிலை E வேரியண்டில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே பெற்றுள்ளது. உயர்க SX (O) வேரியண்டில் மட்டுமே 6 காற்றுப்பைகள் பெற்றுள்ளது.

 

போட்டியாளர்கள்

மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, வென்ட்டோ மற்றும் ரேபிட்  போன்றவற்றுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் மாடலாக 2017 ஹூண்டாய் வெர்னா விற்பனைக்கு வரவுள்ளது.

விலை

தற்போது 4000 க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ள புதிய வெர்னா காரின் ஆரம்ப விலை போட்டியாளர்களை விட மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

2017 ஹூண்டாய் வெர்னா கார் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பட்டியல் விபரம்

வேரியன்ட் பெட்ரோல் டீசல்
E ரூ. 7,99,900 ரூ. 9,19,900
EX ரூ. 9,06,900 ரூ. 9,99,900
SX ரூ. 9,49,900 ரூ. 11,11,900
SX (O) ரூ. 11,08,900 ரூ. 12,39,900
EX AT ரூ. 10,22,900 ரூ.11,39,900
SX+ AT ரூ. 12,61,900
SX (O) AT ரூ. 12,23,900