சொகுசு கார்கள் மற்றும் எஸ்யூவி மீதான ஜிஎஸ்டி வரி உயருகின்றது

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில் ஆட்டோமொபைல் சார்ந்த பிரிவுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் செஸ் வரியாக சொகுசு கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களுக்கு ஜிஎஸ்டி வரியை அதிகரிக்க மத்திய அமைச்சரவை இன்று, ஒப்புதல் அளித்துள்ளது.

ஜிஎஸ்டி எஸ்யூவி வரி உயர்வு

ஆடம்பர சொகுசு கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களுக்கு முந்தைய வரி விதிப்பில் 55 சதவீதமாக இருந்த நிலையில் ஜிஎஸ்டிக்கு பிறகு 43 சதவீதமாக குறைந்த நிலையில் லட்சங்கள் முதல் கோடிகள் வரை கார்கள் மற்றும் எஸ்யூவி விலை குறைந்தது.

தற்போது, ஜிஎஸ்டி வரி வதிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஆடம்பர கார்கள் மற்றும் எஸ்.யூ.வி மாடல்களுக்கு 43 சதவீதமாக இருக்கும் நிலையில் , எனவே செஸ் வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதால், விரைவில் எஸ்யூவி மற்றும் சொகுசு கார்கள் விலை லட்சங்கள் அதிகரிக்கும் என்பதனால் ஆடம்பர கார்கள் மற்றும் எஸ்யுவி மாடல்களை வாங்குவதற்கு இதுவே சரியான தருணமாகும்.

மேலும் படிங்க – ஆட்டோமொபைல் ஜிஎஸ்டி சிறப்பு கட்டுரை

எனவே, புதிதாக வரவுள்ள இந்த வரி விதிப்பால், எஸ்.யூ.வி மற்றும் அனைத்து ஆடம்பர சொகுசு கார்களும் 28 சதவிகதம் வரி மற்றும் கூடுதலாக 25 சதவிதம் செஸ் வரியை பெறும். இதன் காரணமாக விரைவில் எஸ்.யூ.வி கார் அல்லது ஆடம்பர சொகுசு கார்களுக்கு, இனி மொத்தமாக நீங்கள் 53 சதவீதம் வரி செலுத்த வேண்டிய நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்படுவார்கள்.

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை – தமிழக அரசு அதிரடி

சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் செப்டம்பர் 1ந் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அசல் உரிமம் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு  3 மாதம் சிறை அல்லது ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசல் ஓட்டுநர் உரிமம்

செப்டம்பர் 1ம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அசல் ஓட்டுநர் உரிம்ம இல்லை என்றால் ரூ.500 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சீருடை அணிந்த எந்த காவல் துறை அதிகாரியும் வாகன ஓட்டுநர்களின் அசல் உரிமத்தை கேட்கும்போது காண்பிக்க வேண்டும் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைசென்ஸ் இல்லையா ?

மேலும் அரசு வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் விபரம் பின் வருமாறு ;-

தமிழகத்தில், இந்த ஆண்டு ஜூலை வரை, 9,231 விபத்துக்கள் நடந்து உள்ளன. அவற்றில், 9,881 பேர் உயிரிழந்துள்ளனர். 90 சதவீதத்துக்கும் அதிகமான விபத்துகள், டிரைவர்களின் கவனக்குறைவால் ஏற்படுகின்றன.

இதைக் குறைக்க மோட்டார் வாகன சட்டங்களின்படி வாகன விற்பனையாளர்கள் டிரைவிங் லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்ய கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால், விற்பனையாளர் குற்றவாளியாக கருதப்பட்டு, அவருக்கு சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ வழங்கப்படும். அதேபோல, புதிய வாகனத்தை பதிவு செய்யும் முன் வாகன உரிமையாளர் வாகனத்தை ஓட்டுவதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது.

ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என்று போக்குவரத்து காவல்துறை கமிஷனர் அதிரடி சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். மேலும், புதிய வாகனத்தை பதிவு செய்யும் முன் வாகன உரிமையாளர்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கக்வே கூடாது என்றும் அதில் கூறி உள்ளார்.

ஓட்டுநர் உரிமம் இல்லையா, இனி வாகனம் வாங்கவே முடியாது – தமிழக அரசு

தமிழகத்தில் விபத்துகள் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில் செப்டம்பர் 1 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற அறிவிப்பை தொடர்ந்து லைசென்ஸ் இல்லையென்றால் வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.

ஓட்டுநர் உரிமம்

ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என்று போக்குவரத்து காவல்துறை கமிஷனர் அதிரடி சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். மேலும், புதிய வாகனத்தை பதிவு செய்யும் முன் வாகன உரிமையாளர்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கக்வே கூடாது என்றும் அதில் கூறி உள்ளார்.

தமிழக, போக்குவரத்து கமிஷனர் தயானந்த் கட்டாரியா, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சார்பு அலுவலர்களுக்கு, அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில், இந்த ஆண்டு ஜூலை வரை, 9,231 விபத்துக்கள் நடந்து உள்ளன. அவற்றில், 9,881 பேர் உயிரிழந்துள்ளனர். 90 சதவீதத்துக்கும் அதிகமான விபத்துகள், டிரைவர்களின் கவனக்குறைவால் ஏற்படுகின்றன.

இதைக் குறைக்க மோட்டார் வாகன சட்டங்களின்படி வாகன விற்பனையாளர்கள் டிரைவிங் லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்ய கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால், விற்பனையாளர் குற்றவாளியாக கருதப்பட்டு, அவருக்கு சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ வழங்கப்படும். அதேபோல, புதிய வாகனத்தை பதிவு செய்யும் முன் வாகன உரிமையாளர் வாகனத்தை ஓட்டுவதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது.

மேலும், எல்.எல்.ஆர்., எனப்படும் பழகுனர் லைசென்ஸ் வைத்திருப்போர் அந்த உரிமத்தில் உள்ள வாகனத்தை மட்டுமே இயக்க அனுமதிக்க வேண்டும்.

இந்த நடைமுறைகளை கண்டிப்பாக அனைத்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும். இவற்றை வரும் செப்டம்பர் 1ந் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இனிமேல் புதிய வாகனம் வாங்க வேண்டும் என்றால், லைசென்ஸ் எடுக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் வாகனங்கள் வைத்திருப்போர் ஒரிஜினில் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியதும் அவசியம் என்பதனால் அனைவரும் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

100சிசி பைக்குகள் சந்தையிலிருந்து முற்றிலும் மறையலாம்

தொடக்கநிலை சந்தையில் உள்ள 100சிசி மற்றும் 110சிசி எஞ்சின் பெற்ற மாடல்கள் விற்பனையை விட ஸ்கூட்டர் சந்தை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருவதனை சியாம் விற்பனை அறிக்கை தெளிவுப்படுத்துகின்றது.

100-110சிசி பைக்குகள்

தொட்டகநிலை 100சிசி மற்றும் 110சிசி மோட்டார்சைக்கிள் சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை தவிர மற்ற எந்த நிறுவனமும் சிறப்பான பங்களிப்பினை பெறவில்லை. ஆனால் ஹோண்டா நிறுவனம் இந்தியாவின் ஒட்டுமொத்த ஸ்கூட்டர் விற்பனையில் 110சிசி சந்தையில் அபரிதமான பங்களிப்பினை பெற்று 60 சதவிகித பங்களிப்பை பெற்றுள்ளது.

ஆனால், 100-110சிசி வரையிலான மோட்டார்சைக்கிள் பிரிவில் ஹோண்டா நிறுவனம் களமிறக்கிய எந்த மாடலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தொடக்கநிலை மோட்டார் சைக்கிள் சந்தையில் ஸ்பிளென்ட்ர், HF டீலக்ஸ், பஜாஜ் சிடி100 மாடல்கள் தொடர்ந்து சிறப்பான வரவேற்பினை பெற்றிருந்தாலும் ஸ்கூட்டர் விற்பனையை நெருங்குவதில் பின்தங்கியே உள்ளது.

பஜாஜ் தவிர மற்ற மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளர்களான ஹோண்டா, டிவிஎஸ், யமஹா, சுசுகி உள்ளிட்ட நிறுவனங்கள் அமோக வளர்ச்சியை ஸ்கூட்டர் சந்தையில் பெற்று வருகின்றது. இதனை கருத்தில் கொண்டே நாட்டின் முன்னணி ஹீரோ நிறுவனம் மூன்று ஸ்கூட்டர் மாடல்களை அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

மேலும் யமஹா நிறுவனம் புதிய 110சிசி அல்லது 125சிசி ஸ்கூட்டர் மாடலை விரைவில் வெளியிட உள்ளது. அதே போல ஹோண்டா நிறுவனம் கிளிக் ஸ்கூட்டரை சமீபத்தில் வெளியிட்டிருக்கின்றது. பஜாஜ் நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் எந்தவிதமான மாடல்களை களமிறக்கும் நோக்கத்தில் இல்லை என்றே தெரிகின்றது.

ஆனால், எந்தவொரு மோட்டார்சைக்கிள் நிறுவனமும் 100சிசி சந்தையில் புதிய பைக் மாடல்களை களமிறக்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

புதிய மஹிந்திரா டிராக்ஸ்டார் டிராக்டர் அறிமுகம்

இந்தியாவின் முதன்மையான மஹிந்திரா டிராக்டர் தயாரிப்பாளருடன் குஜராத் அரசு இணைந்து கூட்டாக தொடங்கப்பட்ட மஹிந்திரா குஜராத் டிராக்டர் நிறுவனத்தை குரோமேக்ஸ் அக்ரி எக்கியூப்மென்ட் (Gromax Agri Equipment) என்ற பெயிரில் மாற்றியமைத்துள்ளது.

மஹிந்திரா டிராக்ஸ்டார் டிராக்டர்

குரோமேக்ஸ் கூட்டு நிறுவனத்தில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 60 சதவீத மூலதனத்தையும், குஜராத் அரசு 40 சதவீத மூலதனத்தையும் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் முதல் டிராக்டர் மாடலை 30 முதல் 50 ஹெச்பி பிரிவில் டிராக்ஸ்டார் என்ற பிராண்டு பெயரில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

மஹிந்திரா டிராக்ஸ்டார் பிராண்டில் 31, 36, 40, 45, 50hp என மொத்தம் 5 விதமான குதிரை திறன் பெற்ற டிராக்டர்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. நவீன நுட்பங்களை பெற்றுள்ள இவ்வகை டிராக்டர்கள் சிறப்பான செயல்திறன் மிக்கதாகவும், பல்வேறு விதமான விவசாய பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலும் அமைந்திருக்கும் என குரோமேக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற 80 சதவிகித டிராக்டர்கள்  30 முதல் 50 ஹெச்பி வரை திறன் பெற்ற மாடல்கள் ஆகும். இந்த டிராக்டர் அடிப்படையில் மஹிந்திரா நிறுவனமும் டிராக்டர்களை வெளியிடும் வாய்ப்புகளும் உள்ளது.

முதற்கட்டமாக செப்டம்பர் மாதம் முதல் உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒரிசா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் வெளியிடப்பட உள்ள இந்த டிராக்டர்கள், இரண்டாவது கட்டமாக குஜராத், மகாராஷ்டிரா மாநிங்களிலும் மற்ற மாநிலங்களில் அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2018 ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் டக்கார் ராலி பைக் டீசர் வெளியீடு

உலகில் மிகவும் கடுமையான சவால்கள் நிறைந்த மோட்டார் சைக்கிள் சவாரி பந்தயங்களில் ஒன்றான டக்கார் ராலியில் இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் பிரிவின் 2018 ஆம் ஆண்டின் போட்டிக்கான பைக் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

2018 டக்கார் ராலி

அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் நடைபெற உள்ள மிகவும் சவாலான டாக்கர் ரேலியில் இந்தியாவின் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இடம்பெற உள்ள 450சிசி எஞ்சின் பெற்ற பைக்கின் முதல் டீசர் படத்தின் மேற்பகுதி வெளியாகியுள்ளது.

முந்தைய மாடலை விட தோற்ற மாற்ற அமைப்பில் சில மாறுதல்கள் பெற்றதாக வரவுள்ள இந்த பைக்கில் 54 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 450சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதுடன், முன்பக்க எல்இடி ஹெட்லேம்ப் தவிர பேனல்கள் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்களை பெற்றதாக இருக்கலாம்.

ஹீரோ மற்றும் ஸ்பீடுபிரெயின் கூட்டணியில் வடிவமைக்கப்பட்டுள்ள பைக்குகளை மிக கடுமையான சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயணிக்கும் வகையில் 9000 கிமீ தொலைவினை டாக்கர் ரேலி பந்தயம் கொண்டுள்ளது. ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சி.எஸ் சந்தோஷ் மற்றும் Joaquim ரோட்ரிகஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

2017 ஹூண்டாய் க்ரெட்டா (ix25) எஸ்யூவி அறிமுகம்

சீனாவில் ஆகஸ்ட் 25 முதல் நடைபெற்று வரும் செங்டு மோட்டார் ஷோவில் 2017 ஹூண்டாய் க்ரெட்டா (ix25) எஸ்யூவி கூடுதல் வசதிகள் மற்றும் தோற்ற மாறுபாடுகளை பெற்றதாக வெளியிடப்பட்டுள்ளது.

2017 ஹூண்டாய் க்ரெட்டா (ix25) எஸ்யூவி

இந்தியாவில் பிரசத்தி பெற்ற விளங்கும் க்ரெட்டா எஸ்யூவி மாடல் சீனாவில் ix25 எஸ்யூவி என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல் தோற்ற அமைப்பின் முகப்பில் கிரில் அகலம் அதிகரிக்கப்பட்டு க்ரோம் பூச்சூடன் பனி விளக்கு மற்றும் பகல்நேர எல்இடி ரன்னிங் விளக்குகளுக்கு என தனியான அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ix25 எஸ்யூவி மாடலின் பக்கவாட்டு அமைப்பில் பெரிதாக மாற்றங்கள் இல்லாமல், புதிய வடிவம் பெற்ற அலாய் வீல் அம்சத்துடன், பின்புறத்தில் டெயில் விளக்கு மற்றும் எக்ஸ்ஹாஸ்ட் போன்றவற்றில் க்ரோம் இன்ஷர்ட்டுகளை பெற்றுள்ளது.

சீன சந்தையில்  ix25 எஸ்யூவி கார் 1.6 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்க உள்ளது.

இந்தியாவில் க்ரெட்டா எஸ்யூவி மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் டெல்லியில் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள பிப்ரவரி 2018  ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

image source – auto.soho.com

ரெனோ கேப்டூர் எஸ்யூவி வருகை விபரம் வெளியானது

ஐரோப்பா சந்தையில் க்ராஸ்ஓவர் எஸ்யூவி ரக பிரிவில் முன்னணி மாடலாக விளங்கும் ரெனோ கேப்டூர் (Captur) எஸ்யூவி இந்தியாவில் இந்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வருவதை பிரெஞ்சு நாட்டு தயாரிப்பாளர் அதிகார்ப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

ரெனோ கேப்டூர் எஸ்யூவி வருகை

ஐரோப்பியா மற்றும் ரஷ்யா சந்தையில் அமோகமான ஆதரவினை பெற்று விளங்கும் ரெனோ நிறுவனத்தின் கேப்டூர் M0 பிளாட்ஃபாரத்தில் டஸ்ட்டர் காருக்கு மேலாக நிலை நிறுத்தப்பட உள்ள இந்த எஸ்யூவி விற்பனையில் உள்ள க்ரெட்டா , காம்பஸ் , எஸ்யூவி 500 உள்ளிட்ட மாடல்களுக்கு மிகுந்த சவாலாக அமைந்துள்ளது.

டஸ்ட்டர் மாடலில் உள்ள அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 106 hp பவர் மற்றும் 142 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 5 வேக மேனுவல் தவிர சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 110 hp பவர் மற்றும் 245 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 6 வேக மேனுவல் தவிர 6 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர ஆல்வீல் டிரைவ் வேரியன்ட் ஆப்ஷனலாக விற்பனைக்கு கிடைக்கலாம்.

பல்வேறு நவீன வசதிகளான எல்இடி ஹெட்லேம்ப் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் டெயில் விளக்குகள் ஆகியவற்றுடன் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளை கொண்டதாகவும்  2,673 மிமீ வீல்பேஸ் பெற்ற மாடலாக இருக்கும் என்பதனால் தாராளமான  இடவசதி பெற்ற மாடலாகவும் 387 லிட்டர் கொள்ளளவு பெற்ற பூட் வசதியை, மேலும்அதிகரிக்க பின்புற இருக்கைகளை மடக்கினால் 1,200 லிட்டர் வரை விரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நுட்பவிபரங்கள் மற்றும் எஞ்சின் விபரங்கள் ஆகியவற்றை ரெனால்ட் நிறுவனம் அதிகார்வப்பூர்வமாக இதுவரை வெளியிடவில்லை, ஆனால் ரெனோ கேப்டூர் இந்தியா வருவது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் ரெனால்ட் நிறுவனத்தின் டீலர் எண்ணிக்கை 300 எட்டியுள்ள நிலையில் வரும் நாட்களில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் வாடிக்கையாளர்களுக்கு சேவை தொடர்பான வசதிகளை வழங்கவும், 2020 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் டாப் 5 மோட்டார் வாகன தயாரிப்பாளர் என்ற இடத்துக்குள் பெற ரெனால்ட் திட்டமிட்டுள்ளது.

கேப்டூர் இந்தியா வருகை உறுதி செய்யப்பட்டுள்ளதால், எனவே இந்நிறுவனத்தின் கூட்டணி மாடலான நிசான் நிறுவனத்தின் கிக்ஸ் எஸ்யூவி இந்தியா வரும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.

புதிய ராயல் என்பீல்டு ஆலை உற்பத்தி தொடங்கியது

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மூன்றாவது தொழிற்சாலை ரூ. 800 கோடி முதலீட்டில் சென்னை அருகே, வல்லம் வடகல் எனும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ராயல் என்பீல்டு தொழிற்சாலை

800 கோடி ரூபாய் முத­லீட்­டில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது ஆலையில் ஆண்டிற்கு 3,00,000 லட்சம் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற வாகனங்கள் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் மூன்றாவது தொழிற்சாலைக்கான இடத்தை தேர்வு செய்த என்பீல்டு நிறுவனம் 15 மாதங்களில் இந்த தொழிற்சாலையை கட்டி முடித்து பயன்பாட்டு கொண்டு வந்துள்ளதால் இந்நிறுவனத்தின் மொத்த உற்பத்தில் 17-18 ஆம் நிதி ஆண்டில் 8,25,000 வாகனங்களாக உயரக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2016-2017 ஆம் ஆண்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் 6,67,135 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்துள்ளது.

 

மாருதி ஸ்விஃப்ட் காருக்கு ஐ கிரியேட் வசதிகள் அறிமுகம்

முதன்முறையாக மாருதி சுசுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மாடலுக்கு அறிமுகம் செய்த தனிநபர் ஐ கிரியேட் கஸ்டமைஸ் அம்சங்கள் தற்போது பிரசத்தி பெற்ற மாருதி ஸ்விஃப்ட் காருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் i Create

அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள 2018 ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சியில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு வரவுள்ளதை தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஸ்விஃப்ட் காரின் இருப்பினை குறைக்கும் வகையில் கூடுதலான அம்சங்களை மாருதி சுசூகி வழங்க தொடங்கியுள்ளது.

i Create கஸ்டமைஸ் வழியாக மாருதி 120 விதமான கஸ்டமைஸ் ஆப்ஷன்களை தோற்றம் மற்றும் இன்டிரியரில் வழங்குகின்றது. வாடிக்கையாளர் விரும்பும் வகையிலான கஸ்டைமைஸ் அம்சங்களை ஆன்லைன் மற்றும் டீலர்கள் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

காரின் வெளி தோற்ற அமைப்பில் பாடி கிராபிக்ஸ், மேற்கூறை நிறம், ஸ்பாய்லர், பம்பர் நிறங்கள் மற்றும் ஸ்டிக்கரிங் ,அலாய் வீர் உள்ளிட்ட மேலும் பல வசதிகளும், இன்டிரியரில் இருக்கை கவர், டயர் பிரஷெர் மானிட்டரிங், கூல் பாக்ஸ், லோகோ புராஜெக்சன், ஸ்போர்ட்டிவ் பெடல்கள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற பல்வேறு வசதிகளை பெறலாம்.

2005 ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஸ்விஃப்ட் இந்தியாவின் மிக அதிகமாக விற்பனை செய்யப்படுகின்ற ஹேட்ச்பேக் காராக தொடர்ந்து பல ஆண்டுகளாக முன்னிலை வகித்து வருகின்றது.

வருகின்ற பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் கூடுதல் தனிநபர் கஸ்ட்மைஸ் வசதிகளை மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டுள்ளது.