மாருதியின் டிசையர் ஆல்யூர் எடிசன் விலை விபரம் – updated

மாருதி சுசூகி டிசையர் செடான் காரில் கூடுதல் வசதிகளை பெற்ற சிறப்பு வரையறுக்கப்பட்ட மாருதி டிசையர் ஆல்யூர் பதிப்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை.

அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள புதிய தலைமுறை டிசையர் காரின் அறிமுகத்திற்கு முன்னதாக தயாரிக்கப்பட்டு வரும் மாடல்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கியில் வந்துள்ள மாருதியின் டிசையர் ஆல்யூர் பதிப்பின் விலை சாதரன மாடலை விட ரூபாய் 20,990 முதல் கூடுதலாக அமைந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரு எஞ்சின் ஆப்ஷனிலும் அனைத்து வேரியன்டிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் உள்பட அனைத்திலும் இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பு கிடைக்கும்.

டிசையர் ஆல்யூர்

டிசையர் ஆல்யூர் எடிசனில் சிறப்பு பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் செய்யப்பட்டு காரின் நான்கு காரனர்களிலும் பம்பர் புரொடெக்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது.  மேலும் ஆல்யூர் என்ற லிமிடேட் எடிசன் பேட்ஜ் பின்புறத்தில் பதிக்கப்பட்டுள்ளது. கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் பூட்லீட்ல் க்ரோம் பட்டையும் அலங்காரத்தை கூட்டுகிறது

பீஜ் மற்றும் பழுப்பு என இரட்டை வண்ணக் கலவையுடன் பழுப்பு வண்ண இருக்கை கவர்கள் மிக பிரிமியம் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில்சேர்க்கப்பட்டுள்ளது. ஆல்யூர் எடிசன் பெயர் பொறிக்கப்பட்ட தலையணை , டேஷ்போர்டு, கதவுகளில் ஃபாக்ஸ் வுட் மரத் தகடுகள் , ஸ்டீயரிங் வீலுக்கு லெதர் உறை , டிசையர் பேட்ஜ் பொறிக்கப்பட்ட கதவு சில் பிளேட்டுகள் , ஆம்பியன்ட் லைட்டிங் ஆப்ஷனலாக ஹெர்ட்ஸ் ஆடியோ சிஸ்டத்துன் ஸ்பீக்கர் வூஃபர் மற்றும் ஆம்பிலிஃபையர் இடம்பெற்றுள்ளது.

updated:-

ஆல்யூர் எடிசன் விலை பட்டியல் விபரம்

  • ஆல்யூர் பேட்ஜ் ரூ. 2,990
  • சைட் ஸ்கர்ட்  ரூ. 5,990
  • க்ரோம் லைனிங் ரூ. 1390
  • ஜன்னல் கார்னிஷ் ரூ. 690
  • பம்பர் புரொடெக்டர்கள் ரூ. 490
  • லெதர் ஸ்டீயரிங் கவர் ரூ. 510
  • லெதர் இருக்கை கவர் (chocolate brown and beige colour) ரூ.  6,490
  • ஃபாக்ஸ் வுட் மரத் தகடுகள் ரூ. 5,990
  • கார்பெட் வாங்கினால் ரூ. 1190

மேலும் ஆப்ஷனலாக வழங்கப்பட்டுள்ள ஆடியோ சிஸ்டம் விலை ரூ.29,990 ஆகும்.

  • Nertz ஆடியோ சிஸ்டம் 8 அங்குல சப் வூஃபருடன் ரூ. 12,990
  • 4 சேனல் ஆம்ப் ரூ. 15,290
  • 6.5 2-Way Coax 100W ரூ. 3,790
  • 6.5 Component 160W ரூ. 5,990
  • ஒரு ஜோடி ஸ்பேசர்ஸ் ரூ. 590

மொத்த விலை ரூ. 38,650 . மாருதி 22 சதவீத விலையில் வழங்குவதனால்  ரூ.29,990 மட்டுமே…

 

மாருதி சுஸூகி கார்களின் விலை உயர்வு

இந்தியாவின் முதன்மையான பயணிகள் கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுஸூகி நிறுவனம் ரூபாய் 1500 முதல் 8014 ரூபாய் வரை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. பிரிமியம் நெக்ஸா கார்களின் விலையும் உயருகின்றது.

மாருதி சுஸூகி

மாருதியின் ஆல்டோ கார் முதல் எஸ் க்ராஸ் வரையிலாக உள்ள அனைத்து மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது தொடக்க நிலை மாடல்களான ஆல்டோ , வேகன் ஆர் போன்றவை ரூபாய் 1500 வரையும் , நெக்ஸா ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகின்ற பலேனோ , எஸ் க்ராஸ் போன்றவை ரூபாய் 8014 வரை உயர்த்தப்படுகின்றது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது.

இதுகுறித்து மாருதி சுசூகி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை, நிர்வாகம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வினை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் வாரத்தில் மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் நேற்று மேம்படுத்தப்பட்ட வேகன் ஆர் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் புதிய மாருதி பலேனோ ஆர்எஸ் , டிஸையர் , ஸ்விஃப்ட் போன்ற மாடல்களும் சந்தைக்கு வரவுள்ளது.

பெரும்பாலான வாகன தயாரிப்பாளர்கள் கடந்த ஜனவரி 1, 2017 முதலே விலை உயர்வினை அறிவித்திருந்தனர் இது குறித்தான தகவல்களை ஆட்டோமொபைல் வணிகம் பிரிவில் படிக்கலாம்.

டாடாவின் நானோ கார் இனி காற்றில் இயங்கும்

உலகின் மிக விலை குறைந்த காராக விளங்கும் ரத்தன் டாடா அவர்களின் கனவு காரான டாடா மோட்டார்சின் நானோ கார் தற்பொழுது பல்வேறு புதிய அம்சங்களுடன் மேம்பட்டு வருகின்றது. புதிய நானோ காரில் ஹைபிரிட் ,எலக்ட்ரிக் மற்றும் அழுத்தம் மிக்க காற்று மூலம் இயங்கும் மாடல்களை கொண்டு வர டாடா திட்டமிட்டுள்ளது.

நானோ ஹைபிரிட்

சமீபத்தில் டாடா தலைவர் பதவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்த்ரியே தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ந. சந்திரசேகரன் டாடா மோட்டார்ஸ் தலைவராகவும் செயல்பட உள்ளதால் மிஸ்த்ரி கை விட வேண்டும் என சொன்ன நானோ காரை சந்திரசேகரன் புதுப்பிக்க உள்ளார்.

இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் டாடாவின் நானோ காரினை முற்றிலும் மேம்படுத்தி புதிய வசதிகளுடன் நானோ எலக்ட்ரிக் , நானோ ஹைபிரிட் மற்றும் நானோ ஏர் பவர்டு போன்ற மூன்று விதமான வேரியன்டில் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தோற்ற அமைப்பில் நானோ காரில் புதிய ஹெட்லேம்ப் , டெயில் விளக்கு மற்றும் டியாகோ காரின் இன்டிரியர் அம்சங்களை பெற்ற மாடலாக புதிய நானோ களமிறங்க உள்ளது. வரவுள்ள புதிய மாடல்கள் நானோ காருக்கு புதிய அடிதளத்தை அமைக்குமா என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.

உதவி – hindustan times

மாருதியின் புதிய வேகன் ஆர் VXi+ வேரியன்ட் அறிமுகம்

மாருதி வேகன் ஆர் காரில் கூடுதலாக உயர் ரக வேரியன்ட் மாடலாக புதிய வேகன் ஆர் VXi+ ரூ. 4.70 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் வசதிகளுடன் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை.

சமீபத்தில் வேகன் ஆர் ரீஃபிரேஷ் மாடல் விபரங்கள் வெளிவந்ததை தொடர்ந்து விற்பனைக்கு வந்துள்ள VXi+ வேரியன்டில் VXi+, VXi+(O), VXi+ AGS மற்றும் VXi+ (O) AGS என நான்கு விதமான பிரிவுகளில் வந்துள்ளது.

புதிய வேரியன்டில் புதிய முன்பக்க கிரில் , புராஜெக்டர் முகப்பு விளக்குகள் , அலாய் வீல் , சைட் ஸ்க்ர்ட் மற்றும் உட்புறத்தில் இரு வண்ண கலவையிலான டேஸ்போர்ட் மற்றும் பிரிமியம் ஃபேபரிக் இருக்கைகளை பெற்றுள்ளது.  ஆப்ஷனல் வேரியன்டில் இரு காற்றுப்பை மற்றும் ஏபிஎஸ் வசதிகள் கிடைக்கும்.

எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 1.0 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

புதிய வேகன்ஆர் விலை பட்டியல்

முந்தைய டாப் வேரியன்டை விட சராசரியாக ரூ.30,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது. வேகன்ஆர் கார் விலை டெல்லி எக்ஸ்ஷோரூம் ஆகும்.

வேகன்ஆர் வேரியன்ட்

விலை விபரம்

 VXi+  ரூ. 4,69,840
 VXi+ (O) ரூ. 4,89,072
VXi+ AGS ரூ. 5,17,253
VXi+ AGS (O) ரூ.5,36,486

இது தமிழக போலீஸ் அல்ல சீனாவின் ரோபோ டிராஃபிக் போலீஸ்

சாலைகளில் கால்கடுக்க நின்று போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தி வரும் காவலர்களுக்கு உதவிக்கு சீனாவில் ரோபோ டிராஃபிக் போலீஸ் சிங்யாங் நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எந்திரன் போலீஸ்

முறையற்ற வகையில் சாலையை கடக்கும் பாதசாரிகளை பிடிப்பதற்கு இந்த எந்திர வகையிலான போலீசார்களை சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செயற்கை அறிவினை கொண்ட எந்திரன் சாலைகளை கடக்கும் பொழுது மக்கள் செய்யும் தவறுகளை கண்காணித்து அதற்கு ஏற்ப சில எச்சரிக்கை அறிவிப்புகளை வெளிப்படுத்தும்.

சிவப்பு விளக்கு உள்ள நேரத்தில் பாதையை கடந்தாலோ அல்லது தவறான வகையில் சாலையை கடக்க முயற்சித்தாலோ இதில் அனைத்து தரவுகளும் சேகரிக்கப்பட்டு அதற்கு ஏற்ற முறையில் அவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் எச்சரிக்கையை வழங்கும். மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உதவியுடன் தவறான முறையில் சாலையை கடப்பவர்களையும் பதிவு செய்யும்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் சாலையில் மிக சரியாக பாதசாரிகள் கடப்பதற்கும் , போக்குவரத்து காவலர்களுக்கு உதவும் நோக்கிலே இவைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா 2 லட்சம் முன்பதிவு சாதனை

கடந்த மார்ச் 2016யில் விற்பனைக்கு வந்த மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி 2 லட்சம் முன்பதிவுகளை அள்ளி புதிய சாதனையை பெற்றுள்ளது. பிரெஸ்ஸா சராசரியாக மாதம் 9000 கார்கள் வரை டெலிவரி கொடுக்கப்படுகின்றது.

 

காம்பேக்ட் ரக எஸ்யூவி சந்தையில் உள்ள ஈக்கோஸ்போர்ட் மற்றும் டியூவி300 போன்ற மாடல்களுக்கு நேரடியாகவும் க்ரெட்டா , டஸ்ட்டர் , டெரோனோ போன்ற எஸ்யூவிகளின் தொடக்க நிலை வேரியன்ட்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான விலையில் வந்த விட்டாரா இந்திய எஸ்யூவி ஆர்வலர்கள் மத்தியில் மாருதியின் வலுவான விற்பனை மற்றும் சேவை மையங்களின் ஆதரவாலும் மிக விரைவாகவே யுட்டிலிட்டி ரக சந்தையில் ஆதிக்கத்தை தொடங்கியது.

விட்டாரா பிரெஸ்ஸா

விட்டாரா காரில் வழக்கம் போல மாருதியின் ஆஸ்தான எஞ்சின் இன்ஜின் 1.3 லிட்டர் மல்டிஜெட் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 89 bhp மற்றும் இழுவைதிறன் 200 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மைலேஜ் லிட்டருக்கு 24.3 கிமீ ஆகும்.

இருவண்ண கலவை , மாருதி ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் ஆப்பிள் கார்பிளே , ஆண்ட்ராய்டு ஆட்டோ தொடர்புகள் ,  ஸ்டைலிசான அமைப்பு போன்றவற்றுடன் சவலான விலையே பிரெஸ்ஸா மாடலுக்கு பக்கபலமாக அமையவே விட்டாரா மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

 

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விலை பட்டியல்

பிரெஸ்ஸா எஸ்யூவி விலை பட்டியல் சென்னை எக்ஸ்ஷோரூம் , தமிழ்நாடு

வேரியன்ட் விபரம் சென்னை விலை (ரூபாய்)
Ldi 743194
Ldi (O) 756425
Vdi 812706
Vdi(O) 825937
Zdi 891067
Zdi+ 991827
Zdi+ Dual Tone 1014218

நிசான் ஜிடி-ஆர் வரைந்த இந்திய வரைபடம் – குடியரசு தினம்

நமது நாட்டின் 68வது குடியரசு தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காட்ஸில்லா என்கின்ற நிசான் ஜிடி-ஆர் ஸ்போர்ட்டிவ் கார் வாயிலாக உலகின் மிகப்பெரிய இந்திய வரைபடம் வரைந்துள்ளது.

ஜிடி-ஆர் கார்

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள சாம்பார் ஏரியில் இந்ந சாதனை முயற்சியை சிகப்பு வண்ண நிசான் ஜிடி ஆர் கார் நிகழ்த்தியுள்ளது. இந்த சாதனை 2018 ஆம் ஆண்டு லிம்கா புத்தகத்தில் பதிவு செய்யப்பட உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய வரைபடமாக வரையப்பட்டுள்ள இந்திய நாட்டின் வரைபடத்தின் நீளம் மூன்று கிலோ மீட்டர் , 2.8 கிலோ மீட்டர் அகலம் என மொத்தமாக 14.7 கிலோ மீட்டர் சுற்றளவை கொண்ட வரைபடமாகும். இதனை நிசான் ஜிடி-ஆர் காரினை கொண்டு சாம்பார் ஏரியின் நிலப்பகுதியில் ரேலி ஒட்டுநர் ராகுல் கந்தராஜ் செய்தார். இது குறித்தான சாதனையை லிம்கா புத்தகத்தில் பதிவு செய்யும் நோக்கில் ட்ரோன்களை கொண்டு படம்பிடிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற ஜூன் 2018 லிம்கா சாதனை புத்தகத்தில் இந்த சாதனையை பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. இது குறித்து நிசான் வெளியிட்டு யூடியூப் வீடியோ இதோ..

link-https://youtu.be/2AqKcVgZUIA

 

ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி விலை உயர்வு

இந்திய பிரிமியம் ரக எஸ்யுவி சந்தையில் மிக சிறப்பான மாடல்களில் ஒன்றான ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி விலை ரூ.2.85 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2.2 4X2 பேஸ் வேரியன்டில் எந்த மாற்றங்களும் இல்லை.

கடந்த வருடத்தில் அதிரடியாக விலை குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது முந்தைய விலையை ஈடுகட்டும் வகையில் மீண்டும் விலை உயர்வை அதனை சமன் செய்யும் வகையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எண்டேவர் எஞ்சின்

என்டெவர் எஸ்யூவி காரில் 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் என் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன் உள்ளது. 160 பிஎஸ் ஆற்றலை வழங்கும் 2198 சிசி TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 385என்எம் ஆகும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர் ஆப்ஷனில் உள்ளது.

200 பிஎஸ் ஆற்றலை வழங்கும் 3198 சிசி TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 450 என்எம் ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் மட்டுமே உள்ளது.

2.2 லிட்டர் என்ஜினில் 2 வீல் டிரைவ் மற்றும்  ஆல் வீல் டிரைவ் உள்ளது. அதுவே 3.2 லிட்டர் என்ஜினில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே உள்ளது.

எண்டேவர் எஸ்யூவி புதிய விலை பட்டியல்

 வேரியன்ட்  புதிய விலை  முந்தைய விலை  வித்தியாசம்
2.2 4X2 AT Trend ரூ 23.78 லட்சம் ரூ 23.78 லட்சம்
2.2 4X4 MT Trend ரூ 26.63 லட்சம் ரூ 23.78 லட்சம் ரூ 2.85 லட்சம்
2.2 4X2 AT Titanium ரூ 27.93 லட்சம் ரூ 27.50 லட்சம் ரூ 43,000
3.2 4X4 AT Trend ரூ 27.68 லட்சம் ரூ 25.93 லட்சம் ரூ 1.75 லட்சம்
3.2 4X4 AT Titanium ரூ 30.89 லட்சம் ரூ 29.76 லட்சம் ரூ 1.13 லட்சம்

(அனைத்தும் எக்ஸ்ஷோரூம் டெல்லி விலை )

புதிய யமஹா ஆர் 15 V3.0 பைக் அறிமுகம்

யமஹா ஆர்15 ஸ்போர்ட்டிவ் பைக்கின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் 3.0 இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் யமஹா ஆர்15 வி3.0 விற்பனைக்கு வரவுள்ளது.

புதிய ஆர்15 பைக்கினை மோட்டோ ஜிபி புகழ் வேலன்டினோ ரோசி மற்றும் மாவிரைக் வேயினல்ஸ் அறிமுகம் செய்துள்ளனர். அடுத்த சில வாரங்களில் ஆர்15 பைக் இந்தோனேசியாவில் விற்பனைக்கு செல்ல உள்ளது.

புதிய யமஹா ஆர்15

முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட பல்வேறு வசதிகளை கொண்ட புதிய ஆர்15 மாடலில் மிக நேர்த்தியான இரட்டை பிரிவு எல்இடி ஹெட்லைட் , எல்இடி டெயில் லைட் மற்றும் சிறப்பான டிசைனிங் செய்யப்பட்ட பல்வேறு அம்சங்களுடன் முந்தைய மாடலை விட கூடுலாக  19 ஹெச்பி வரையிலான பவரை வெளிப்படுத்தும் புதிய 155சிசி எஞ்சின் இடம்பெற்று 6 வேக கியர்பாக்சுடன் சிலிப்பர் கிளட்ச் போன்றவை பெற்றுள்ளது.

 

 

யமஹா R15 V3 நுட்ப விபரம்

  • நீளம் – 1990 mm  (R15 V2 – 1970 mm)
  • அகலம் – 725 mm  (R15 V2 – 670 mm)
  • உயரம் – 1135 mm  (R15 V2 – 1070 mm)
  • வீல் பேஸ் – 1325 mm  (R15 V2 – 1345 mm)
  • எடை – 137 kg  (R15 V2 -136 kg)
  • எஞ்சின் – Liquid Cooled 4-stroke, SOHC
  • சிலிண்டர் எண்ணிக்கை – Single cylinder
  • சிசி – 155.1cc (R15 V2 had 150 cc)
  • Bore x Stroke – 58 x 58.7 mm
  • Compression Ratio – 11.6 : 1
  • பவர் – 14.2 kW (19.93 PS) / 10000 rpm
  • டார்க் – 14.7 Nm / 8500 rpm
  • ஸ்டார்டிங் – எலக்ட்ரிக்
  • எரிபொருள் கலன் – 11 லிட்டர்
  • ஃப்யூவல் சிஸ்டம் – Fuel Injection
  • கிளட்ச் டைப் – Wet Type Multi-Plate Clutch
  • முன் டயர் – 100/80-17M/C 52P
  • பின் டயர் – 140/70-17M/C 66S
  • முன்பக்க டிஸ்க் – 282 mm
  • பின்பக்க டிஸ்க்  – 240 mm

 

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ப்ரைம் விரைவில் – updated

வருகின்ற 2017 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய மாடல் கிராண்ட் ஐ10 ப்ரைம் என்ற பெயரில் வர வாய்ப்புகள் உள்ளது.

இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் கார் இளம் தலைமுறையினர் விரும்பும் டிசைன் அம்சங்களுடன் அமைந்து சிறப்பான வரவேற்பினை பெற்று போட்டியாளரான மாருதி ஸ்விஃப்ட் ,ஃபிகோ போன்ற கார்களுடன் சந்தையை பகிர்ந்துகொண்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட கிராண்ட் ஐ10 கார் முதன்முறையாக  பாரீஸ் மோட்டார் ஷோ ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

2017-hyundai-i10-facelift-official-images-front

 

புதிய கிராண்ட் ஐ10 டிசைன்

ஐரோப்பியா வடிவ தாத்பரியங்களை கொண்ட இதே மாடலின் அடிப்பையிலே சில தோற்ற மாற்றங்களை பெற்றதாக இந்தியாவில் வரவுள்ளது. முந்தைய மாடலின் தோற்றத்தில் இருந்து வித்தியாசப்படும் வகையில் கிரில் அமைப்பு , ஹெட்லேம்ப் உடன் இணைந்த பகல் நேர ரன்னிங் விளக்கு , புதிய 14 அங்குல அலாய் வீல் , புதுப்பிக்கப்பட்ட பின்புற பம்பர் மற்றும் டெயில் விள்க்குளை பெற்றிருக்கும்.

இன்டிரியர் அமைப்பின் தோற்றம் மேம்படுத்தப்பட்டு , நவீன வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கும். குறிப்பாக தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , புதிய அப்ஹோல்ஸ்ட்ரி , லைட் இல்மினேஷன் போன்றவற்றை கொண்டிருக்கும்.

விற்பனையில் உள்ள மாடலில் இடம்பெற்றிருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். கூடுதலாக பெட்ரோல் மாடலில் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.  முந்தைய 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக 75hp மற்றும் 171Nm டார்க் வெளிப்படுத்தும் . 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். மேலும் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களாக விளங்கும் முன்பக்க இரு காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் போன்றவை நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டிருக்கிம்.

2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 விற்பனைக்கு வரவுள்ள காரின் விலை ரூ.5 லட்சம் முதல் 7 லட்சம் விலையில் அமையலாம்.

புதிய கிராண்ட் ஐ10 படங்கள்