2017 பஜாஜ் பல்ஸர் 200 என்எஸ் ஏபிஎஸ் ஆப்ஷன்

பஜாஜின் பல்ஸர் வரிசையில் இடம்பெற்றுள்ள பஜாஜ் பல்ஸர் 200 என்எஸ் பைக்கில் கூடுதலாக ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வரவுள்ளதை உறுதி செய்யும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மீண்டும் பல்ஸர் 200 NS பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அடுத்த சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரவுள்ளது. ஷோரூம்களுக்கு வந்து சேர்ந்து விட்ட புதிய 200 என்எஸ் முன்பதிவு நடந்து வருகின்றது.

பஜாஜ் பல்ஸர் 200 என்எஸ்

ஏபிஎஸ் ஆப்ஷனலாக சேர்க்கப்பட்ட பல்ஸர் 200 என்எஸ் மாடல் டீலர்களிடம் உள்ளதை ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஏபிஎஸ் ஆப்ஷனை உறுதிப்படுத்தும் வகையில் ஏபிஎஸ் இல்லாத மாடலும் உள்ள பல்சர் 200 NS பைக்கின் உட்புற குறியீடு தகவலும் வெளியாகியுள்ளது.

படத்தில்  JLA/K4 N ABS என்பதில்  N ABS என்றால் Non-ABS ஆகும்.

 

 

முந்தைய மாடலின் தோற்ற அமைப்பிலே கூடுதலாக என்ஜின் கார்டு மட்டுமே பெற்றுள்ள மாடலாக காட்சிக்கு வந்துள்ளது. பல்சர் NS200  பைக்கில் 23.1 குதிரைசக்தி (24 பிஹெச்பி துருக்கி மாடல் ) வெளிப்படுத்தும் 199.5சிசி டிரிப்ள்-ஸ்பார்க் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.3 நியூட்டன் மீட்டர் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் மாடலாகும்.

spy image pictures – bikeadvice

பஜாஜ் பல்சர் 200 NS படங்கள்

மேலும் முழுமையாக 15 பல்சர் 200 என்எஸ் படங்களையும் காண படத்தின் மீது க்ளிக் பன்னுங்க…

Automobile Tamilan

 

 

எண்டேவர் டைட்டானியம் வேரியன்டில் SNYC3 மேம்பாடு

ஃபோர்டு எண்டேவர் டைட்டானியம் வேரியன்டில் SNYC3 மேம்பாடு வழங்கப்பட்டுள்ளது. முந்தைய வாடிக்கையாளர்களுக்கும் SNYC3 மேம்பாட்டினை பெற்றுக் கொள்ளலாம்.

எண்டேவர் டைட்டானியம்

எண்டேவர் டாப் வேரியன்டில் இடம்பெற்றுள்ள ஃபோர்டு SNYC2 மென்பொருள் மேம்படுத்தப்பட்டு SNYC3 கொடுக்கப்பட்டுள்ளது. புதிய மேம்பாடுகளில் சிறப்பான வகையில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்வற்றின் அம்சங்களை சிறப்பாக பயன்படுத்த இயலும். டைட்டானியம் வேரியன்டில் இடம்பெற்றுள்ள 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வாயிலாக பாடல்கள் , அழைப்புகள் , குறுஞ்செய்தி போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ஃபோர்டு எமர்ஜென்சி சேவை , ரிவர்ஸ்கேமரா , கிளைமேட் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.

பயன்பாட்டில் உள்ள கார்களுக்கு வைபை வாயிலாக தொடர்பு கொள்ளும் பொழுது சிங்க்3 மேம்பாட்டினை பெறலாம்.

 

எண்டேவர் எஸ்யூவி எஞ்சின்

என்டெவர் எஸ்யூவி காரில் 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் என் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன் உள்ளது. 160 பிஎஸ் ஆற்றலை வழங்கும் 2198 சிசி TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 385என்எம் ஆகும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர் ஆப்ஷனில் உள்ளது.

200 பிஎஸ் ஆற்றலை வழங்கும் 3198 சிசி TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 450 என்எம் ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் மட்டுமே உள்ளது.

2.2 லிட்டர் என்ஜினில் 2 வீல் டிரைவ் மற்றும்  ஆல் வீல் டிரைவ் உள்ளது. அதுவே 3.2 லிட்டர் என்ஜினில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே உள்ளது.

சமீபத்தில் ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி காரின் விலை அதிகபட்சமாக ரூ. 2.85 லட்சம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மாருதியின் நெக்ஸா 200வது டீலர் திறப்பு

மாருதி சுஸூகி நிறுவனத்தின் வாடிக்கையார்களுக்கு உயர்தர அனுபவத்தினை வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதியின் நெக்ஸா ஷோரூம் எண்ணிக்கை 200 எட்டியுள்ளது. இந்த நிதி ஆண்டில் 250 நெக்ஸா டீலர்களை மாருதி நியமிக்க திட்டமிட்டுள்ளது.

மாருதியின் நெக்ஸா

சமீபத்தில் ஹைத்திராபாத் எல்பி நகரில் (Nexa LB Nagar) கல்யானி மோட்டார்ஸ் டீலர் திறக்கப்பட்டுள்ளது. நெக்ஸா டீலர்கள் வாயிலாக எஸ்-கிராஸ் க்ராஸ்ஓவர் , மாருதி பெலினோ மற்றும் புதிய இக்னிஸ் கார் மாடலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அடுத்த சில வாரங்களில் பெலினோ ஆர்எஸ் மாடலும் விற்பனைக்கு வரவுள்ளது.

கடந்த 18 மாதங்களில் 121 நகரங்களில் 200 டீலர்களை கொண்டு 1,85,000 கார்களை மாருதி விற்பனை செய்துள்ள நிலையில் 20 மாதங்களுக்குள் 2,00,000 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் 2016-2017 ஆம் நிதி ஆண்டில் நாடு முழுவதும் 250 டீலர்களை அதாவது மார்ச் 2017க்குள் திறக்க உள்ளது.

நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்படுகின்ற எஸ் க்ராஸ் மாடலை தவிர்த்து பெலினோ மற்றும் இக்னிஸ் கார்கள் அமோக ஆதரவினை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெற்றுள்ளது. பலேனோ விற்பனைக்கு வந்த சில மாதங்களிலே அமோக முன்பதிவு செய்யப்பட்டு அதிகபட்சமாக 4 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் உள்ளது. இந்த மாத தொடக்க வாரங்களில் விற்பனைக்கு வந்த இக்னிஸ் கார் அமோக வரவேற்புடன் 10,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை குவித்துள்ளது.

உலகின் நெ.1 கார் தயாரிப்பாளர் – ஃபோக்ஸ்வேகன் குழுமம்

உலகின் முதன்மையான கார் தயாரிப்பாளராக ஜெர்மனி நாட்டின் ஃபோக்ஸ்வேகன் குழுமம் முன்னேறியுள்ளது. முதலிடத்தை டொயோட்டா நிறுவனம் 4 ஆண்டுகளுக்கு பிறகு இழந்துள்ளது. 2016ல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 10.31 மில்லியன் கார்களை விற்பனை செய்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் குழுமம்

 

கடந்த 2011 முதல் ஜிஎம் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த டொயோட்டா நிறுவனம் தற்பொழுது மிக குறைவான வித்தியாசத்தில் முதலிடத்தை ஃபோக்ஸ்வேகன் குழுமத்திடம் இழந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் குழுமம் 10.31 மில்லியன் (1,03,12,400) கார்களை சர்வதேச அளவில் விற்பனை செய்துள்ளது.இதே காலகட்டத்தில் டொயோட்டா நிறுவனம் 10.17 மில்லியன் (1,01,75,000) கார்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் ஜிஎம் நிறுவனம் தன்னுடைய விற்பனை எண்ணிக்கையை அடுத்த சில நாட்களில் வெளியிட உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டின் விற்பனையை விட டொயோட்ட 0.2 சதவீத வளர்ச்சியும் ஃபோக்ஸ்வேகன் 3.8 சதவீத வள்ச்சியும் அடைந்துள்ளது. 2015யில் டொயோட்டா 10.15 மில்லியன் வாகனங்களும் , ஃபோக்ஸ்வேகன் 9.93 மில்லியன் கார்களும் மற்றும் ஜிஎம் 9.8 மில்லியன் வாகனங்களும் விற்பனை செய்திருந்தது.

மஹிந்திரா கேயூவி100 அனிவெர்ஸரி எடிசன் விலை விபரம்

ரூ. 6.37 லட்சம் விலையில் மஹிந்திராவின் கேயூவி100 மைக்ரோ எஸ்யூவி மாடலின் அனிவெர்ஸரி எடிசன் விற்பனைக்கு  வெளியாகியுள்ளது. கேயூவி100 அனிவெர்ஸரி பதிப்பில் இரு வண்ண கலவையில் கிடைக்கும்.

கேயூவி100 அனிவெர்ஸரி

K8 வேரியன்டில் வந்துள்ள சிறப்பு முதல் வருட கொண்டாட்ட பதிப்பானது சாதரன மாடலை விட ரூ.13,000 விலையில் கூடுதலாக சில சிறப்பு வசதிகளை பெற்றதாக வந்துள்ளது. கேயூவி100 காரில் கருப்பு வண்ண மேற்கூரையை சில்வர் மற்றும் சிவப்பு வண்ண மாடல்களில் மட்டுமே இரு வண்ண கலவையிலான தோற்ற பொலிவுடன் மிக நேர்த்தியான மாடலாக விளங்க உள்ளது. புதிய 15 அங்குல அலாய் வீல் (சாதரன மாடல்களில் 14 அங்குல அலாய் வீல்) , கருப்பு வண்ணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இன்டிரியரை பெற்று விளங்கும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான கூடுதல் கஸ்டமைஸ் ஆப்ஷன்களையும் மஹிந்திரா வழங்குகின்றது.

 

2017 மஹிந்திரா கேயூவி100 எஞ்சின்

82 bhp @ 5500 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் G80 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115 Nm 3500 முதல் 3600 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

77 bhp @ 3750 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் D75 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190 Nm 1750 முதல் 2250 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் KUV100 காரில் பவர் மற்றும் இக்கோ மோட் உள்ளது.

மேலும் பெட்ரோல் எஞ்சின் மாடலில் மைலேஜ் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வினை வழங்க்கும் வகையில் இசியூ அமைப்பில் சில குறிப்பிடதக்க மாற்றங்களை பெற்றுள்ளது. மற்றபடி வேறு எவ்விதமான ஆற்றல் மாற்றங்களும் இல்லை.

மேலும் K6 மற்றும் K6+ மாடல்களில் சிறிய 14 அங்குல அலாய் வால் ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது.  மஹிந்திரா கேயூவி100 அனிவெர்ஸரி எடிசன் விலை ரூ. 6.37 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

மாருதி எஸ் க்ராஸ் 1.6l பேஸ் வேரியன்ட்கள் நீக்கம்

மாருதி சுசூகி எஸ் க்ராஸ் காரின் 1.6 லிட்டர் எஞ்சின் வரிசையில் இருந்த ஜெட்டா மற்றும் டெல்டா வேரியன்ட்கள் நீக்கப்பட்டுள்ளன. டாப் வேரியன்டான ஆல்ஃபா மட்டுமே விற்பனைக்கு  கிடைக்க உள்ளது.

கடந்த 2015யில் விற்பனைக்கு வந்த எஸ் கிராஸ் பெரிதாக வெற்றி பெறாமல் போனாலும் நெக்ஸா வழியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இருவிதமான டீசல் எஞ்சின் ஆப்ஷனுடன் வந்த எஸ் க்ராஸ் மொத்தம் சிக்மா , டெல்டா,ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியன்டில் கிடைத்து வருகின்றது.

மாருதி எஸ் க்ராஸ்

DDiS 200 மாடலில்  சிக்மா , டெல்டா,ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களும் , DDiS 320யில்ஆல்பா மட்டுமே இனி கிடைக்கும்.

DDiS 200 என்ற பெயரில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் 89பிஎச்பி ஆற்றல் மற்றும் 200என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
DDiS 320 என்ற பெயரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் 118பிஎச்பி ஆற்றல் மற்றும் 320என்எம் டார்க்கையும் தரவல்லது. 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாருதி எஸ் கிராஸ் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 23.65கிமீ மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 22.7கிமீ ஆகும்.

எஸ் க்ராஸ் விலை விபரம்

DDiS 200 சிக்மா – ரூ. 8.52 லட்சம்

DDiS 200 டெல்டா- ரூ. 9.25 லட்சம்

DDiS 200 ஜெட்டா – ரூ. 9.92 லட்சம்

DDiS 200 ஆல்பா – ரூ. 11.13 லட்சம்

DDiS 320 ஆல்பா –  ரூ. 12.55 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் சென்னை )

கஸ்டமைஸ் டோமினார்400 பைக்கின் டூரர் மாடல்

மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிமியம் ரக மோட்டார் சைக்கிள் சந்தையில் பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்துள்ள ரூ.138 லட்சம் தொடக்க விலையிலான டோமினார்400 பைக்கினை டூரர் வகை மாடலாக மோட்டார் ஆர்வலர்கள் கஸ்டமைஸ் செய்துள்ளனர்.

பெர்ஃபாமென்ஸ் ரக க்ரூஸர் மாடலாக விற்பனைக்கு வந்த டோமினார் 400 பைக்கில் மிக சிறப்பான பல்வேறு வசதிகளுடன் 34 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 327 சிசி கேடிஎம் டியூக் 390 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் இல்லாத இருவேரியன்ட்களில் கிடைக்கின்றது. எல்இடி ஹெட்லேம்ப் , டெயில் லேம்ப் , டிஜிட்டல் கிளஸ்ட்டர் போன்றவை குறிப்பிடதக்கதாகும்.

கஸ்டமைஸ் டோமினார்400

கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ள மும்பை பைக்கில் கூடுதலாக 15 வாட்ஸ் துனை எல்இடி விளக்குகள் , நெடுஞ்சாலைகளில் மிக சிறப்பாக இயக்கும் வகையிலான வின்ட்ஷில்டு , Shad SH39 டாப் லக்கேஜ் பாக்ஸ் போன்றவை இடம்பெற்றுள்ளது.

டோமினார் 400 பைக் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தக்கூடிய மற்றும் விலை குறைந்த மாடலாகும்.

டோமினார் 400 விலை ரூ. 1.38 லட்சம் மற்றும் ரூ.1.52 லட்சம் ஏபிஎஸ் மாடல் (தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம் விலை)

டாடாவின் ஹெக்ஸா ஆட்டோமேட்டிக் காருக்கு அமோக வரவேற்பு

டாடா மோட்டார்சின் புதிய ஹெக்ஸா எம்பிவி மாடல் ரூ. 12.25 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் ஹெக்ஸா ஆட்டோமேட்டிக்  வேரியன்ட் மாடலுக்கு முன்பதிவு அமோகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தற்பொழுது ஹெக்ஸா காரினை முன்பதிவு செய்துள்ள பெரும்பாலான வாடிக்கையாளர்களின் அதாவது 50 சதவீதம் ஆட்டோமேட்டிக் மாடலாக உள்ளதால் ஹெக்ஸா ஆட்டோமேட்டிக் வேரியன்ட் காத்திருப்பு காலம் 8 வாரங்கள் வரை அதிகரித்துள்ளதாம்.

ஹெக்ஸா ஆட்டோமேட்டிக்

XMA மற்றும் XTA என இரு விதமான வேரியன்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ள மாடல்களில்   156 bhp ஆற்றலை வெளிப்படுத்தும்  2.2 லிட்டர் வேரிகார் 400 டீசல் எஞ்சின் இடம் பெற்றிருக்கும். இதன் டார்க் 400 Nm ஆகும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும்.

மற்றொரு எஞ்சின் ஆப்ஷனாக  வேரிகார்320 டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 148 bhp பவரை வெளிப்படுத்தும். இதன் டார்க் 320Nm ஆகும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

டாடாவின் ஹெக்ஸா விலை ரூ. 12.25 லட்சத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றது.  இன்னோவா க்ரீஸ்ட்டா , எக்ஸ்யூவி500 போன்ற கார்களுக்கு நேரடியான சவாலாக விளங்கும் வகையில் டாடா ஹெக்ஸா விளங்கும்.

மேலும் வாசிங்க –  டாடா ஹெக்ஸா குறித்து முழுவிபரம் 

 

டாடா ஹெக்ஸா வேரியன்ட் விலை பட்டியல் (சென்னை எக்ஸ்-ஷோரூம்)
XE  ரூ. 12.25 லட்சம்
XM ரூ. 13.85 லட்சம்
XT ரூ. 16.45 லட்சம்
XMA (Automatic) ரூ. 15.15 லட்சம்
XTA (Automatic) ரூ. 17.65 லட்சம்
XT (4×4) ரூ. 17.74 லட்சம்

 

ஹெக்ஸா கார் படங்கள்

2017 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 விலை விபரம் கசிந்தது – images updated

விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 விலை ரூ. 4.58 லட்சத்தில் தொடங்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகப்படியான வசிகளை பெற்ற மாடலாக புதிய கிராண்ட் ஐ10 கார் விளங்கும்.

கிராண்ட் ஐ10 விலை

இதுகுறித்து வெளியாகியுள்ள விபரங்களில் புதிய கிராண்ட் ஐ10 மாடலின் விலை ரூ.4.58 லட்சம் முதல் ரூ. 7.32 லட்சம் வரையில் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வெளியான தகவலான முந்தைய 1.1 லிட்டர் டீசல் எஞ்சின்குக்கு மாற்றாக 1.2லிட்டர் டீசல் எஞ்சினே இடம்பெற்றிருக்கும் என தெரிகின்றது.

பாரீஸ் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வந்த மாடலை போன்றே அமைப்பினை பெற்றதாக வரவுள்ள இந்த மாடலில்முன் மற்றும் பின்புற பம்பர்கள் பதுப்பிக்கப்பட்டு , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் ,  புதிய பனிவிளக்கு , புதுப்பிக்கப்பட்ட 15 அங்குல அலாய் வீல் , போன்றவற்றை பெற்றிருக்கும்.

இன்டிரியரில் முழு ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ,  புதிய 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல்வேறு விதமான நவீன வசதிகளுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 விலை பட்டியல் மற்றும் வசதிகள்

வருகின்ற பிப்ரவரி மாத தொடக்க வாரங்களில் இந்த மாடல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தகவல் உதவி – டீம்பிஹெச்பி

 

 

ஃபோர்டு மஸ்டாங் காரின் மிக மோசமான தர மதிப்பீடு – கிராஷ் டெஸ்ட்

கடந்த 2008 முதல் யூரோ கிராஷ் டெஸ்ட் சோதனைகளில் சிறப்பான தர மதிப்பீட்டை பெற்று வரும் ஃபோர்டு கார்களுக்கு தற்பொழுது மிகப்பெரிய தர இழப்பீட்டை மஸில் மஸ்டாங் கார் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மஸில் ரக மாடலாக விளங்கும் ஃபோர்டு மஸ்டாங் முதன்முறையாக வலது பக்க ஸ்டீயரிங் வீல் பெற்று அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்தே இந்திய சந்தையிலும் ரூ.65 லட்சத்தில் மஸ்டாங் கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

யூரோ என்சிஏபி

அமெரிக்காவின் கிராஷ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர மிதப்பீட்டை பெற்றுள்ள மஸ்டாங் ஐரோப்பியா கிராஷ் டெஸ்ட் ஆய்வில் வெறும் 2 நட்சத்திரத்தை மட்டுமே பெற்றுள்ளது. இது குறித்து யூரோ என்சிஏபி வெளியிட்டுள்ள சோதனை முடிவுகளில் முன்பக்க மோதலின் பொழுது மணிக்கு 64 கிமீ வேகத்தில் மோதிய பொழுது  முன்பக்கத்தில் அமைந்திருக்கும் இரண்டு காற்றுப்பைகளும் போதுமான அளவு விரிவடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான டம்மிகளை வைத்து ஆய்வு முடிவுகளின் படி மிக அதிகப்படியான சேதராம் வயறு மற்றும் முக்கிய உடற்பாகங்களில் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாலே இரண்டு நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது.

மேலும் பக்கவாட்டு சோதனையில் 10 வயது மதிக்கதக்க சிறுவனக்கான டம்மியை வைத்து சோதனை செய்தபொழுது கர்டெயின் காற்றுப்பையும் போதுமான பாதுகாப்பினை வழங்கவில்லை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இது ஃபோர்டு நிறுவனத்தின் பாரம்பரிய முத்திரை பதித்த மஸ்டாங் காருக்கு ஐரோப்பா சந்தையில் கிடைத்துள்ள மிகப்பெரிய மோசமான தர மதிப்பாகும்.

youtubelink- https://youtu.be/F0StTHnTKK8