ஃபோக்ஸ்வேகன் கார்களில் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இணைப்பு

இந்தியாவில் மூன்றாவது ஆட்டோமொபைல் தயாரிப்பாளராக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தங்களுடைய அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக் மற்றும் ட்யூவல் ஏர்பேக் அம்சத்தை நிரந்தர அம்சமாக சேர்த்துள்ளது.

volkswagen-vento

டொயோட்டா ,ஸ்கோடா நிறுவனத்தை தொடர்ந்து இந்தியாவில் தனது அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக் மற்றும் ட்யூவல் ஏர்பேக் பாதுகாப்பு அம்சத்தை வோக்ஸ்வேகன் நிரந்தரமாக்கியுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக இந்த வருட தொடக்கத்தில் டொயோட்டா நிறுவனம் தங்களுடைய அனைத்து மாடல்களிலும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு (Anti-Lock Braking System) மற்றும் ஓட்டுநர், உடன் பயணிப்பவருக்கான காற்றுப்பை அம்சத்தை நிரந்தரமாக்கியது. அதனை தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக செயல்படும் ஸ்கோடா தங்களுடைய மாடல்களிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக சேர்த்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வென்ட்டோ மற்றும் போலோ கார்களில் விற்பனையில் உள்ள தொடக்கநிலை வேரியன்ட்  டிரென்ட்லைனிலும் நிரந்தர அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பாக கம்ஃபர்ட் லைன் வேரியண்டிலிருந்து மட்டுமே ஏபிஎஸ் இடம்பெற்றிருந்தது.

முன்பே நாம் வெளியிட்டிருந்த செய்தியின்படி வருகின்ற 2017 அக்டோபர் முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ள அனைத்து கார்களிலும் ஏர்பேக் , ரியர் வியூ சென்ஸார் , வேகம் எச்சரிக்கும் கருவி பீப் ஒலியுடன் மற்றும் இருக்கைபட்டை நிரந்தரமாக இருக்கும். மேலும் விற்பனை செய்யப்பட்ட கார்களில் இவற்றை நிரந்தர அம்சமாக அக்டோபர் 2018க்குள் பொருத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க ; 2017 அக்டோபர் முதல் கார்களில் கட்டாயம்

பஜாஜ் வி12 பைக் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின்  வி அணிவரிசையில் புதிய 125சிசி பைக் டிசம்பர் மாத தொடக்க வாரத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பஜாஜ் வி12 பைக் விலை ரூ. 56,200 ஆகும்.

அலுவல்ரீதியாக அடுத்த சில நாட்களில் புதிய V12  பைக் பற்றி விபரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வி15 பைக்கின் கீழாக டிஸ்கவர் 125 பைக்கிற்கு இடையில் நிலைநிறுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. 150சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட பைக் மாடல் வி15 என அழைக்கப்படுவதனால் வரவுள்ள பைக்கில் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்பதனால் வி12 என அழைக்கப்படலாம்.

11 ஹெச்பி ஆற்றல் வெளிப்படுத்தும் 125 DTS-i எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதன் டார்க் 10.8 நியூட்டன் மீட்டர் இருக்கும். வடிவமைப்பினை பொருத்தவரை விற்பனையில் உள்ள வி15 பைக்கின் தோற்றத்திலே அதே போன்ற பேட்ஜ் ,வண்ணங்கள் மற்றும்கூடுதலாக புதிய வண்ணங்களை பெற்று விளங்கலாம்.

bajaj-v-range-bikes

பஜாஜ் வி15 பைக் பெட்ரோல் டேங்க் ஐஎன்எஸ் விக்ராந்த போர்கப்பலின் மெட்டல் பாகத்தால் உருவாக்கப்பட்டிருப்பதை போலவே இதன் பெட்ரோல் டேங்கும் அதே பாகத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். வி15 பைக்கின் மாடலை சுமார் ரூ.6000 குறைவாக பஜாஜ் வி12 விலை ரூ.56,200 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி ) இருக்கலாம்.

கடந்த பிப்ரவரி 1,2016யில் விற்பனைக்கு வந்த வி15 இதுவரை 2லட்சம் பைக்குகளை விற்பனை செய்துள்ளது.மேலும் இந்தியாவின் 7 மாநிலங்களில் 150சிசி பிரிவு சந்தையில் முன்னனி இடத்தை வகிக்கின்றது.

 

இந்தியாவில் ஹூண்டாய் 70 லட்சம் கார்கள் உற்பத்தி சாதனை

கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் சென்னை அருகில் உள்ள திருபெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் இந்தியா பிரிவில் 7 மில்லியன் கார் அதாவது 70 லட்சம் கார்கள் உற்பத்தி இலக்கினை வெற்றிகரமாக கடந்துள்ளது.

18 ஆண்டுகளாக இந்தியாவில் கார்களை விற்பனை செய்து வரும் கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் முதன்முறையாக சான்ட்ரோ காரின் உற்பத்தியை 1998 ஆம் ஆண்டில் தொடங்கியது. அதனை தொடர்ந்து முதல் 10 லட்சம் கார்களை 8 ஆண்டுகளை கடந்த பிறகு 2006யில் உற்பத்தி செய்தது. கடந்த 2013 ஆம் ஆண்டில் 5 மில்லியன் கார்கள் உற்பத்தி இலக்கினை கடந்தது. சராசரியாக 18 மாதங்களில் 10 லட்சம் கார்களை ஹூண்டாய் உற்பத்தி செய்கின்றது.

21ந் தேதி ஹூண்டாய் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் மாடல் 70வது லட்சம் காராக உற்பத்தி செய்யப்பட்டு வெளிவந்தது. 1 கோடி கார்கள் என்ற இலக்கினை 2021 ஆம் ஆண்டின் மத்தியில் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாருதி சுஸூகி நிறுவனத்தை தொடர்ந்து இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் விற்பனை நிறுவனமாக ஹூண்டாய் விளங்குகின்றது. மேலும் முதன்முறையாக மாதந்திர கார் விற்பனையில் 50,000 என்ற இலக்கினை அக்டோபர் 2016யில் கடந்து புதிய விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் இயான் , ஐ10 ,கிராண்ட் ஐ10 , எலைட் ஐ20 ,  ஐ20 ஏக்டிவ் ,  எக்ஸ்சென்ட் , வெர்னா , எலன்ட்ரா ,க்ரெட்டா , டூஸான் மற்றும் சான்டா ஃபீ போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

2017 ஹூண்டாய் வெர்னா காரில் மைல்ட் ஹைபிரிட் வருகை

மாருதி சுஸூகி சியாஸ் காரில் இடம்பெற்றுள்ள எஸ்விஹெச்எஸ் நுட்பம் போல வரவுள்ள 2017 ஹூண்டாய் வெர்னா காரில் மைல்ட் ஹைபிரிட் ஆப்ஷனை சேர்க்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

மாருதி சுஸூகி நிறுவன கார்களில் நிறுவப்பட்டுள்ள SHVS (Smart Hybrid Vehicle by Suzuki) எனப்படும் ஸ்டார்டர் கிட்டுடன் இணைந்த ஸ்டார்ட் /ஸ்டாப் வசதி மற்றும் பிரேக் ஆற்றலை ரீஜெனரஷன் செய்யும் அமைப்பினை போன்ற சிறிய அளவிலான ஹைபிரிட் அம்சத்தை அடுத்த ஆண்டின் மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய வெர்னா செடான் காரில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.

மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை பெறுவதின் வாயிலாக மத்திய அரசின் FAME எனப்படும் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட அளவிலான மானியத்தை பெறும் என்பதனால் விலை சற்று குறைவாகவே இருக்கும்.  சமீபத்தில் சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெர்னா காரின் வடிவ தாத்பரியங்களை கொண்டாதாகவே புதிய வெர்னா வரவுள்ளது.

புதிய வெர்னா காரின் முகப்பு கிரில் தோற்றம் ,ஹெட்லைட் , முன் மற்றும் பின் பம்பர்களில் மாற்றங்களை பெற்று விளங்கும். இதில் மேம்படுத்தப்பட்ட டேஸ்போர்டு அமைப்பினை கொண்ட இன்டிரியரில் முக்கிய அம்சமாக காரின் நீளம் 30மிமீ வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால் காரில் சிறப்பான இடவசதி கிடைக்கும். மேலும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ,ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா , ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற அம்சங்களும் சேர்க்கப்பட்டிருக்கும். விற்பனையில் உள்ள அதே எஞ்சின் ஆப்ஷனுடன் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாருதி சுஸூகி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கு கடுமையான சவாலாக 2017 ஹூண்டாய் வெர்னா விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

2018ல் ஹூண்டாய் சான்ட்ரோ கார் வருகை

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற சான்ட்ரோ கார் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த முதல் காராகும். 16 ஆண்டுகளுக்கு மேலாக ஹூண்டாய் நிறுவனத்துக்கு வலுசேர்த்து வந்த சான்ட்ரோ கார் 2014யில் விடைபெற்றது. மீண்டும் ஹூண்டாய் சான்ட்ரோ 2018 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.

hyundai-santro

 

13.6 லட்சம் சான்ட்ரோ கார்கள் இந்திய சந்தையிலும் 5.35 லட்சம் கார்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்திய சந்தையில் கார்புரேட்டருக்குமாற்றாக மல்டி ஃபூயூவல் இன்ஜெக்ஷன் பொருத்தப்பட்ட ஹூண்டாய் சான்ட்ரோ கார் இந்திய சந்தையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பாளராக உருவாக முக்கிய காரணம் ஆன சான்ட்ரோ கார் புதிய மாடல்களான கிராண்ட் ஐ10 , எலைட் ஐ20 போன்ற கார்கள் வரவால் சான்ட்ரோ விற்பனை சரியவே ஓரங்கட்டப்பட்டது.

மீண்டும் சான்ட்ரோ காரினை நவீன தலைமுறைக்கு ஏற்றவாறு மேம்படுத்தி பல நவீன வசதிகளுடன் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட மாடலாக போட்டியாளர்களுடன் ஈடுகொடுக்கும் வகையில் விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் 2018 ஆம் ஆண்டில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. சான்ட்ரோ விற்பனைக்கு வரும்பொழுது தற்பொழுது  விற்பனையில் உள்ள ஐ10 காரினை விலக்கி கொள்ள ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

சான்ட்ரோ பிராண்டின் பெயரிலே விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. சந்தையில் உள்ள க்விட் ,ரெடி-கோ போன்ற கார்களுக்கும் சவாலாக புதிய மாடல் அமையும்.

பஜாஜ் டோமினார் 400 உற்பத்தி தொடங்கியது

வருகின்ற டிசம்பர் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள பஜாஜ் டோமினார் 400 க்ரூஸர் பைக்கின் உற்பத்தி பஜாஜ் சக்கன் தொழிற்சாலையில் முதல் டோமினார் 400 பைக் பெண்கள் ஒருங்கினைப்பு பிரிவில் இருந்து வெளிவந்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் சக்திவாய்ந்த மாடலாக வெளிவரவுள்ள இந்த பைக்கின் கான்செப்ட் மாடல் 2012 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் பல்சர் சிஎஸ்400 என காட்சிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து உற்பத்தியை எட்டியுள்ள இந்த பைக்கின் புதிய பெயர் டாமினார் 400 என இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

பெண்களால் அசெம்பிளிங் செய்யப்பட்ட முதல் பஜாஜ் டோமினார் உற்பத்தி படங்கள் வெளியாகியுள்ளது. டோமினார் விஎஸ்400 பைக்கில் கேடிஎம் டியூக் 390 பைக்கில் இடம் பெற்றுள்ள அதே இன்ஜினை ட்யூன் செய்து 34.51 hp (25.74 KW) ஆற்றல் 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கலாம். விஎஸ்400 பைக்கின் எடை 332 கிலோகிராம் ஆகும். டோமினார் 400 பைக்கின் உச்ச வேகம் மணிக்கு 160 கிமீ ஆக இருக்கலாம்.

நவீன காலத்துக்கு ஏற்ப முழு எல்இடி ஹெட்லேம்ப் , டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மோனோஷாக் அப்சார்பர் பின்புறத்தில் என பல வசதிகளை பெற்றதாக இருக்கும். வருகின்ற டிசம்பர் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள புதிய டோமினார் விஎஸ்400 பைக்கின் எதிர்பார்க்கப்படும் விலை ரூ.2.00 லட்சம் (ஆன்ரோடு விலை) ஆகும்.

மேலும் படிக்க ; மைலேஜ் அதிகம் பெறும் வழிமுறைகள்

பஜாஜ் டோமினார் விஎஸ்400 படங்கள்

யமஹா எம்டி-03 பைக் இந்தியா வருகை ?

இந்தியாவில் விற்பனையில் உள்ள யமஹா ஆர்3 பைக் மாடலின் அடிப்படையாக கொண்ட நேக்டு ஸ்போர்ட்டிவ் மாடலான யமஹா எம்டி-03 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வருமா ? என்ற எதிர்பார்ப்பு கடந்து சில மாதங்களாகவே இருந்து வருகின்ற நிலையில் யமஹா MT-03 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான சில தகவல்களின் அடிப்படையில் யமஹா எம்டி-03 நேக்டு ஸ்டீரிட்ஃபைட்டர் பைக் இந்தியா வர வாய்ப்புகள் இல்லை என தகவல் வெளியாகியுள்ள நிலையில் யமஹா நிறுவனத்தின் நேக்டு மாடல் ஒன்று சோதனையில் ஈடுபட்டுள்ள படங்கள் வெளியாகியுள்ளது.

தற்பொழுது கிடைத்துள்ள படங்களின் அடிப்படையில் இந்த நேக்டு ஸ்டீரிட்ஃபைட்டர் மாடல் யமஹா எம்டி-03 அல்லது எம்டி-15 ஆக இருக்கலாம் என கருதப்படுகின்றது.இந்த மாடலானது தீவர சோதனை ஓட்டத்தில் உள்ளதால் அடுத்த ஆண்டின் மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் விபரங்கள் வெளியாகும் இணைந்திருங்கள் ஆட்டோமொபைல் தமிழன் தளத்துடன்….

 

 

2017ல் க்விட் காரில் புதிய வேரியன்ட்கள் வருகை

இந்தியா வாகன சந்தையில் மாபெரும் வெற்றி பெற்ற ரெனோ க்விட் காரின் வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் புதிய வேரியன்ட்களை வருடத்திற்கு ஒன்று என விற்பனைக்கு கொண்டு வர ரெனால்ட் திட்டமிட்டுள்ளது.

 

கடந்த செப்டம்பர் 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த ரெனால்ட் க்விட் இதுவரை 1,07,033 கார்கள் விற்பனை செய்துள்ளது. மேலும் பல ஆண்டுகளாக சிறிய ரக சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த மாருதி சுஸூகி ஆல்ட்டோ காரினை தடுமாற வைத்துள்ளது.

இந்தியா ரெனோ சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநர் சுமீத் ஆட்டோகார் இந்தியா இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் “வாடிக்கையாளர்கள் வருடக்கனக்கில் புதிய க்விட் மாடலுக்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது , மிக விரைவில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய மாடல் வெளியாகும்” என கூறியுள்ளார்.

க்விட் வெற்றியால் ரெனோ நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிக வேகமாக 5 சதவீத சந்தை மதிப்பினை பெற்றுள்ளது. மேலும் 2023 ஆண்டிற்குள் இந்தியாவின் முதல் 3 ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களில் ஒன்றாக ரெனோ இடம்பிடிக்க திட்டமிட்டுள்ளது.

renault-kwid-expo-2016

 

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வந்த ரெனோ க்விட் கிளைம்பர் மற்றும் ரேஸர் கான்செப்ட் மாடல்கள் மேலும் கடந்த வாரத்தில் பிரேசில் நாட்டில் நடைபெற்ற சாவ் பவுல்லோ வாகன கண்காட்சியில் காட்சிக்கு வந்த ரெனோ அவுட்சைடர் கான்செப்ட் போன்றவைகள் அடுத்தடுத்து விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரெனோ க்விட் காரில் 0.8 லிட்டர் ,1.0 லிட்டர் மற்றும் க்விட் ஏஎம்டி மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றது.

உதவி ; ஆட்டோகார்இந்தியா

ஹோண்டா ஜாஸ் கார் விலை உயர்வு , ஏர்பேக் நிரந்தரம்

இந்தியாவின் ஹோண்டா நிறுவனம் ஜாஸ் காரில் உள்ள அனைத்து வேரியன்டிலும் முன்பக்க இரு காற்றுப்பைகள் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜாஸ் கார் விலை ரூ.12,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

honda-jazz

 

பெரும்பாலான இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தங்களுடைய அனைத்து மாடல்களிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் அதாவது ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான காற்றுப்பைகளை நிரந்தர அம்சமாக அனைத்து வேரியன்டிலும் சேர்க்க தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் ஹோண்டா ஜாஸ் காரும் இடம்பிடித்துள்ளது.

முந்தைய E மற்றும் S பேஸ் வேரியன்ட்கள் காற்றுப்பைகளை பெறாத நிலையில் தற்பொழுது டியூவல் ஏர்பேக் நிரந்தரமாக சேர்க்கப்பட்டுள்ளது. இரு காற்றுப்பை சேர்க்கப்பட்டுள்ளதால் ஜாஸ் காரின் இரு வேரியன்டின் விலையும் ரூ.12,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய நடுத்தர ,டாப் வேரியன்ட்களான  V, SV மற்றும் VX போன்றவற்றில் உள்ள வசதிகள் மற்றும் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை.

ஹோண்டா ஜாஸ் காரில் 1.5 லிட்டர்  i-DTEC டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இதன் ஆற்றல் 100 ஹெச்பி மற்றும் 200 நியூட்டன்மீட்டர் டார்க் வெளிப்படுத்துகின்றது.இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் எஞ்சின் ஆற்றல் 90 ஹெச்பி மற்றும் 110 நியூட்டன்மீட்டர் டார்க் வெளிப்படுத்துகின்றது.இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி ஆட்டோபாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கின்றது.

டாடா ஸெஸ்ட் காருக்கு 4 நட்சத்திர மதிப்பீடு – குளோபல் என்சிஏபி

இந்திய வாகன தயாரிப்பாளரின் தரத்தை நிரூபிக்கும் வகையில் குளோபல் என்சிஏபி சோதனையில் பெரியவர்களுக்கு 5க்கு 4 நட்சத்திர மிதிப்பீட்டினை பெற்று டாடா ஸெஸ்ட் கார் சர்வதேச க்ராஷ் டெஸ்ட் அமைப்பின் பாரட்டுதலை பெற்றுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் பாதுகாப்பு அம்சத்தை அதிகரிக்கவும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச க்ராஷ்டெஸ்ட் அமைப்பான குளோபல் என்சிஏபி  நடத்தும் #SaferCarsforIndia என்ற  பிரச்சாரத்தின் வாயிலாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பல்வேறு கார்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

சர்வதேச தயாரிப்பாளர்களின் பல கார்கள் பூஜ்ய நட்சத்திர மதிப்பினை பெற்ற நிலையில் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் தயாரித்த ஸெஸ்ட் செடான் காரின் முதற்கட்ட சோதனையில் காற்றுப்பை வசதி இல்லாத மாடல் பெரியவர்களுக்கு பூஜ்ய நட்சத்திரமும் குழந்தைகளுக்கு 1 நட்சத்திர அந்தஸ்த்தை மட்டுமே பெற்றது.

முன்பக்க இரட்டை காற்றுப்பை , பின்புற இருக்கைகளுக்கான இருக்கை பட்டை போன்ற வசதிகளுடன்கூடிய மாடலை மோதலின் பொழுது சோதனை செய்யப்பட்டதில் வயது வந்தோருக்கான பிரிவில் ஸெஸ்ட் கார் 5க்கு 4 என்ற தர மதிப்பீட்டை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கு 2 நட்சத்திர அந்தஸ்த்தை மட்டுமே பெற்றது.

இதுகுறித்து குளோபல் என்சிஏபி அமைப்பின் பொது செயலர் டேவிட் வார்டு கருத்து தெரிவிக்கையில் டாடா மோட்டார்ஸ் ஸெஸ்ட் காரின் பாதுகாப்பு தரத்தை சிறப்பான முறையில் கட்டமைத்துள்ளதன் வாயிலாக இந்திய கார் தயாரிப்பு நிறுவனத்தின் தரம் நிருபீக்கப்பட்டுள்ளது. இருகாற்றுப்பை உள்ள டாடா ஸெஸ்ட் வேரியன்டை வாடிக்கையார்கள் தேர்ந்தேடுப்பது பாதுகாப்பினை உறுது செய்யும் என கூறியுள்ளார்.

காரின் கட்டமைப்பு தரம் ,பாதுகாப்பு வசதிகள் போன்றவற்றை மேம்படுத்துவதோடு , வாகனம் மோதலை தடுக்கும் நுட்பங்களையும் சேர்ப்பது , விபத்தில் சிக்கினாலும் பாதிப்புகள் அதிகம் இல்லாத வகையில் நுட்பங்களை கொண்டு வரவேண்டும் என சாலை போக்குவரத்து கல்வி நிறுவனத்தின் தலைவர் ரோஹிஸ் பலூஜா தெரிவித்துள்ளார்.