மஹிந்திரா டிஜிசென்ஸ் நுட்பம் அறிமுகம்

மஹிந்திரா ஆட்டோமொபைல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மஹிந்திரா டிஜிசென்ஸ் நுட்பம் வாயிலாக மஹிந்திரா வாகனங்கள் , டிராக்டர் , டிரக் மற்றும் கட்டுமான கருவிகளுக்கான கிளவுட்  முறையிலான தொடர்பினை ஏற்படுத்தியுள்ளது.

Mahindra-digisense

மஹிந்திரா டிஜிசென்ஸ் ( DigiSense, or digitally enabled sensing)  நுட்பம் மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவின் அனைத்து வாகனங்களுக்கான சேவையை பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள நுட்பத்தில் முதற்கட்டமாக ஜீதோ , இம்பிரியோ பிக்அப் , அர்ஜூன் டிராக்டர் , மஹிந்திரா பிளேஷோ கனரக வாகனம் மற்றும் எர்த்மாஸ்டர் கட்டுமான கருவிகளுக்கு கிடைக்கின்றது.

வாகனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் கண்கானிக்கும் வகையில் ஃபீளீட் ஆப்ரேட்டர் , உரிமையாளர்கள் , ஓட்டுநர்கள் , சர்வீஸ் டீம் என அனைவரும் பயன்படுத்தும் வகையிலான இந்த செயலி வாயிலாக வாகனத்தின் தற்பொழுதைய நிலை, வாகன செயல்பாடு ,ரூட் பிளானிங் , வாகனத்தின் டெலிவரி திட்டங்கள் , வாகன இருப்பிடம் அறிதல் , ட்ரீப் அலர்ட் , எஞ்சின் செயல்திறன் என பல்வேறு தகவல்களை உடனுக்குடன் மிக தெளிவாக பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வருடங்களாக டெக் மஹிந்திரா , பாஸ் மற்றும் வோடோஃபோன்  என முன்று நிறுவனங்களின் கூட்டணியில் டிஜிசென்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.  முதலில் வர்த்தக பிரிவு வாகனங்களுக்கு டிஜிசென்ஸ் சேவையை வழங்கப்பட உள்ள நிலையில் படிப்படியாக பயணிகள் காருக்கும் விரிவுப்படுத்த உள்ளது. முதல் வருடத்திற்கு பிறகு கட்டன சேவையாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யமஹா எம்டி-03 பைக் தீபாவளி வருகை

வருகின்ற பண்டிகை காலத்தை ஒட்டி யமஹா எம்டி-03 பைக் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. யமஹா ஆர்3 பைக்கின் நேக்டூ வெர்ஷன் ஸ்டீரிட்பைக் எம்டி-03 மாடலாகும்.

Yamaha-mt-03

ஆர்3 பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே டைமன்ட் வகை ஸ்டீல் அடிச்சட்டத்தினை பெற்றுள்ளது.  மேலும் 40.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 321சிசி பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 29.6 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

முன் பக்கத்தில் டெலஸ்கோப்பிக் போர்க்குகளும், பின் பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ள எம்டி-03 பைக்கின் இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பெற்று விளங்குகின்றது. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் ஆப்ஷனை கால தாமதமாக விற்பனைக்கு கொண்டு வரலாம்.

கருப்பு , சில்வர் மற்றும் சிகப்பு என 3 வண்ணங்களில் வரவுள்ளது. யமஹா MT-03 பைக்கின் போட்டியாளர்கள் பெனெல்லி டிஎன்டி 300 , கவாஸாகி இசட் 250 ,  கேடிஎம் டியூக் 390 மற்றும் வரவுள்ள பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் போன்றவை ஆகும். எம்டி-03 பைக் அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

யமஹா எம்டி-03 பைக் விலை ரூ.2.75 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்கலாம்.

 

 

ஆடி க்யூ3 பெட்ரோல் எஞ்சின் மாடல் விரைவில்

இந்தியாவின் சொகுசு கார் விற்பனையில் முக்கிய பங்காற்றும் ஆடி கார் நிறுவனம் தன்னுடைய கார் மாடல்கள் அனைத்திலும் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. ஆடி க்யூ3 காரில் பெட்ரோல் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2015-Audi-Q3-facelift

இந்தியாவில் டீசல் கார்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் பெரும்பாலான கார் நிறுவனங்கள் டெல்லி மற்றும் தலைநகர் பகுதியில் சந்தையை இழந்த நிலையில் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெட்ரோல் மாடல்களை களமிறக்குவதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளது. ஆடி நிறுவனம் டீசல் கார் தடையின் காரணமாக 1500-2000 கார்கள் விற்பனை செய்ய முடியாமல் ரூ.760 கோடி அளவில் இழப்பினை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி A6, Q3 மற்றும் Q7 போன்ற மாடல்கள் விரைவில் பெட்ரோல் எஞ்சின் மாடல்களை பெற உள்ள நிலையில் ஆடி க்யூ3 மாடல் அடுத்த சில நாட்களில் 1.4 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சினுடன் வெளியாக உள்ளது.

ஆடி க்யூ3 காரில் 148 BHP ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 250 Nm ஆகும். இதில் 6 வேக டிசிடி கியர்பாக்சினை பெற்று முன்பக்க வீல்களுக்கு ஆற்றலை கடத்துகின்றது. ஆடி க்யூ3 காரின் உச்ச வேகம் மணிக்கு 240 கிலோமீட்டர் ஆகும். 0-100 கிமீ வேகத்தை எட்ட 8.9 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

மெர்சிடிஸ்-பென்ஸ ஜிஎல்இ 400 பெட்ரோல் எஞ்சின் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் 5 சீரிஸ் கார்களிலும் பெட்ரோல் மாடல் வெளியாகியுள்ளது.

2015-Audi-Q3-facelift-rear

2017 முதல் ஹூண்டாய் கார்களில் ஹைபிரிட் ஆப்ஷன்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் கார் நிறுவனம் அடுத்த வருடம் முதல் ஹைபிரிட் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மைல்ட் ஹைபிரிட் மற்றும் ஐயோனிக் போன்ற முழு ஹைபிரிட் கார்களும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

2017-hyundai-ioniq

சமீபத்தில்  இந்தியா ஹூண்டாய் தலைமை செயல் அதிகாரி YK Koo அளித்துள்ள பேட்டியில் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் சாஃப்ட் ஹைபிரிட் ஆப்ஷனை நடுத்தர பிரிவு கார்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பூளூடிரைவ் என்ற பெயரில் ஹூண்டாய் நிறுவனத்தால் அழைக்கபடும் மைல்ட் ஹைபிரிட் பெட்ரோல் ஹைபிரிட் அல்லது டீசல் ஹைபிரிட் கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹூண்டாய் சோனாடா ஹைபிரிட் கார் காட்சிப்படுத்தியது. ஹூண்டாய் ஐயோனிக் ஹைபிரிட் கார் மாடலும் அடுத்த சில வருடங்களில் விற்பனைக்கு கொண்டு வரும் நோக்கில் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஃபேம் (Faster Adoption and Manufacturing of Electric vehicles – FAME) எனப்படும் திட்டத்தின் கீழ் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. மாருதி சுஸூகி காரில் SHVS  மற்றும் மஹிந்திரா எஸ்யூவி காரில் இன்டெலி ஹைபிரிட் போன்ற மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. எலைட் ஐ20 மற்றும் க்ரெட்டா போன்ற கார்களில் ஹைபிரிட் சிஸ்டம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

hyundai-ioniq-rear-viewோனிக்

பறக்கும் தானியங்கி காரினை வடிவமைக்கும் : ஏர்பஸ்

உலக அளவில் விமானங்கள் தயாரிப்பத்தில் பிரசத்தி பெற்ற ஏர்பஸ் நிறுவனம் நகரங்களுக்கு இடையிலான தானியங்கி பறக்கும் காரை தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது.

airbus-cityairbus

ஏர்பஸ் நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ செய்தி குறிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் சிட்டி ஏர்பஸ் என்ற பெயரில் வடிவமைக்கப்பட உள்ள பறக்கும் கார்களை வாகானா என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வருகின்றது.

உபேர் நிறுவனம் திட்டமிட்டுள்ள ரைட் ஷேரிங் போன்ற அமைப்பிலே வானில் பறக்கும் கார்களை வழங்க ஏர்பஸ் திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூரில் உலகின் முதல் தானியங்கி கார் டாக்சி சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் உபேர் நிறுவனம் இதுபோன்ற சேவையை அடுத்த சில வாரங்களில் அமெரிக்காவில் தொடங்க உள்ளது. வானில் நகரங்களுக்கான இடையிலான போக்குவரத்து சேவையை அதிகரிக்கும் நோக்கில் பறக்கும் கார் ரைட் ஷேரிங் போல செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி தொழில்நுட்ப மையத்தில் தொடக்க கட்ட சிட்டி ஏர்பஸ் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த வருடத்தின் மத்தியில் பறக்கும் காரின் புரோட்டோடைப் மாடலை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது.

தானியங்கி கார்களுக்கு உள்ளதை போன்ற நுட்பத்தையே பறக்கும் கார்களும் பெறும் வாய்ப்புகள் இருந்தாலும் வான்வெளியில் பறக்கும்பொழுது மிக சிறப்பான நவீன கருவிகள் மற்றும் உயர்தர நுட்பத்தினை உருவாக்குவது மிக அவசியமானதாக இருக்கும்.

Skyways-project

இதுபோன்ற திட்டத்தை சிங்கப்பூர் நாட்டின் டிரேபல் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இணைந்து ஸ்கைவேஸ் என்ற பெயரில் சரக்கு போக்குவரத்துக்காக 2017 ஆம் ஆண்டின் இறுதிமுதல் ஆளில்லாமல் செயல்படும் பறக்கும் டிரான்களை செயல்படுத்த உள்ளது.

அடுத்த 10 வருடங்களுக்கு பிறகு பறக்கும் தானியங்கி கார் நகரங்களை ஆக்கரமிக்க தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விவசாயிகளுக்கு டிராக்டர் சேவையை வழங்கும் டிரிங்கோ

மஹிந்திரா அன்டு மஹிந்திரா குழுமத்தின் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனமான டிரிங்கோ மூலம் விவசாய பணிகளுக்கான டிராக்டர் மற்றும் விவசாய உபகரணங்கள் வாடகைக்கு கிடைக்க உள்ளது. டிரிங்கோ (TRRINGO) முதற்கட்டமாக 101 சேவை மையங்களை கர்நாடகா மாநிலத்தில் அமைத்துள்ளது.

mahindra-trringo-tractor-sharing

கார்களுக்கான உபேர் மற்றும் ஓலா போன்ற நிறுவனங்கள் வழங்கும் சேவை போன்ற அமைப்பினை கொண்ட ட்ரிங்கோ சேவையின் வாயிலாக விவசாயிகளுக்கு பயன்தரும் வகையிலான டிராக்டர் மற்றும் விவசாய கருவிகள் என அனைத்து விதமான சேவைகளும் உடனடியாக வழங்கும் வகையில் மஹிந்திரா டிரிங்கோ செயல்படும்.

முதற்கட்டமாக கர்நாடாக மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ள சேவையில் 101 மையங்கள் நிறுவப்பட்டுள்ளது. இவற்றின் வாயிலாக டிராக்டர் சேவைய அழைத்த ஒருமணி நேரத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் ரூ.50 லட்சம் மதிப்பிலான முதலீட்டை ட்ரிங்கோ செய்துள்ளது.

இந்த சேவை மையங்களில் 5 டிராக்டர் மற்றும் 10 விதமான விவசாய உபகரணங்கள் கையிருப்பில் வைத்திருக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு தேவையை உடனடியாக பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கும். இவ்வாறுஅமைக்கப்படுகின்ற மையங்களில் அருகாமையில் உள்ள டிராக்டர்கள் வைத்திருப்பவர்களே இந்த சேவையில் இணைந்து செயல்படுவார்கள் அதாவது 10 சதவீத கமிஷன் அடிப்படையில் செயல்படுகின்றது.

mahindra-yuvo-tractor

தற்பொழுது 101 மையங்கள் கர்நாடகா மாநிலத்தில் செயல்பட தொடங்கியுள்ள நிலையில் அடுத்த மாதம் நாடு முழுவதும் சேவையை அதிகரிக்கும் நோக்கில் 165 மையங்களை திறக்க உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் மிகசிறப்பான பங்களிப்பினை இந்திய டிராக்டர் சந்தையில் வழங்கி வருகின்றது.

மாருதி சுசூகி நிறுவனத்தில் 3500 பணியிடங்களுக்கு அழைப்பு

இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம் தன்னுடைய விற்பனை மற்றும் சேவை பிரிவில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் 3500 ஐடிஐ (அர‌சு தொழிற்ப‌யிற்சி நிலையம்) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க உள்ளது.

new-Maruti-Alto-800

மிக வேகமாக வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி நிறுவனம் மொத்த இந்திய ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பில் 47 சதவிதத்தை கொண்டுள்ளது. வருடாந்திரம் 200 க்கு மேற்பட்ட விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை திறந்து வரும்நிலையில் 6000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது. இவற்றில் 3500 நபர்களுக்கு புதிதாக பணிக்கு சேர உள்ள ஐடிஐ படித்தவர்களுக்கு வழங்க உள்ளது.

மாருதி சுசூகி நிறுவனம் இணைந்து செயல்படுகின்ற 100 ஐடிஐகளில் இருந்து 2000 நபர்களும் மற்றவர்களை வேறு ஐடிஐ களில் இருந்த வேலைக்கு அமர்த்த உள்ளது. மாருதி சுசூகி நிறுவனத்தின் 3000 சர்வீஸ் சென்டர்கள் வாயிலாக சுமார் 65,000 டெக்னீஷியன்கள் பணியாற்றி வருகின்றனர். வருகின்ற 2020க்குள் இரு மடங்காக பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி கார்களின் தயாரிப்பு மிக நவீனத்துவமான நுட்பத்துக்கு மாறிவரும் நிலையில் ஐடிஐகளில் பழைய பயற்சி முறையே கடைபிடிக்கப்பட்ட வருவதனால் படிப்பவர்களுக்கான திறமை குறைவாக உள்ளது. எனவே இதனை கலையும் நோக்கில் 100 ஐடிஐ கல்வி மையங்களுடன் இணைந்து புதிய ஆட்டோமொபைல் மற்றும் பராமரிப்பு நுட்பங்களை 300 ஆசிரியர்களை கொண்டு ரூ.20 லட்சம் முதலீட்டில் மாருதி சுஸூகி பயிற்சி அளித்து வருகின்றது.

விரைவில் 3500 பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்பு உள்ள மாருதி சுசூகி இவர்களுக்கு 3 மாத பயற்சி மற்றும் உதவித் தொகையை வழங்குகின்றது. பயிற்சிக்கு பின்னர் மாதம் ரூ.10.000 சம்பளம் மற்றும் ஊக்கத் தொகைகள் செயல்திறன் அடிப்படையில் வழங்க உள்ளனர்.

3500 பணியிடங்களில் 2000 பணியிடங்கள் 100 ஐடிஐ கல்வி மையங்கள் வாயிலாக நேரடியாக மாருதி நியமிக்க உள்ள நிலையில் மற்ற 1500 பணியிடங்கள் மாருதி டீலர்கள் வாயிலாக நியமிக்க உள்ளது.

ஐடிஐ படித்தவர்கள் உங்கள் அருகாமையில் உள்ள மாருதி டீலர்களை அனுகுங்கள்….

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 என்டியூரோ பைக் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் டுகாட்டி மோட்டார்சைக்கிள் நிறுவனம் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 என்டியூரோ பைக் அட்வென்ச்சர் ரக பைக் மாடலை ரூ.17.44 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ducati-multistrada-1200-enduro

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வரிசை பைக்குகளில் டூரிங் ரக மோட்டார்சைக்கிள்கள் மல்டிஸ்ட்ராடா 1200 மற்றும் 1200 S மாடல்கள் விற்பனையில் உள்ள கூடுதலாக விற்பனைக்கு வந்துள்ள மல்டிஸ்ட்ராடா 1200 என்டியூரோ மிக சிறப்பான அட்வன்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும்.

ஆல் டெர்ரெயின் ஆப்ஷனுடன் மிக சிறப்பான ஆஃப் ரோடு மற்றும் ஆன் ரோடுஅனுபவத்தினை வழங்கவல்ல மல்டிஸ்ட்ராடா 1200 என்டியூரோ பைக்கில் 160 hp ஆற்றல் வெளிப்படுத்தும் 1198.4cc டெஸ்டேஸ்ட்ரெட்டா டிவிடி (Testastretta DVT -Desmodromic Variable Timing) L- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 136 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

Ducati-Multistrada-1200-Enduro-side

எண்ணற்ற வசதிகளை பெற்றுள்ள இந்த பைக்கில் ஸ்போர்ட், அர்பன் , டூரிங் மற்றும் என்டியூரோ என  4விதமான டிரைவிங் மோட் பெற்றுள்ளது. எல்இடி ஹெட்லேம்ப் லைட் கார்னரிங் வசதியுடன் , 5 இன்ச் கலர் இன்ஸ்டூருமென்ட் பேனல் , மல்டிமீடியா சிஸ்டம் பூளுடூத் வசதி , டுகாட்டி டிராக்ஷ்ன் கன்ட்ரோல், ஏபிஎஸ் என பலவற்றை பெற்றுள்ளது.

முன்பக்க டயர் 19 இன்ச் வீல் பின்பக்க டயர் 17 இன்ச் வீல் பெற்று 30 லிட்டர் எரிபொருள் கலன் வாயிலாக 450 கிமீ வரை பயணிக்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 என்டியூரோ பைக் விலை ரூ.17.44 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

டெல்லி , மும்பை ,புனே மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள டுகாட்டி டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றது.

Ducati-Multistrada-1200-Enduro-bike

Ducati-Multistrada-Enduro-front

மெர்சிடிஸ்-பென்ஸ் GLE 400 பெட்ரோல் விற்பனைக்கு வந்தது

மெர்சிடிஸ்-பென்ஸ் GLE 400 எஸ்யூவி காரில் இந்தியாவில் முதன்முறையாக பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலை  ரூ.74.90 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி பெட்ரோல் மாடலின் ஆற்றல் 333 hp ஆகும்.

mercedes-benz-gle-petrol-suv

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில்  12 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக மெர்சிடிஸ் அறிவித்திருந்த நிலையில் 7வது மாடலாக ஜிஎல்இ 400 பெட்ரோல் வேரியண்ட் வெளிவந்துள்ளது.மேலும் வருகின்ற செப்டம்பர் இறுதிக்குள் அனைத்து மெர்சிடிஸ் பென்ஸ் கார்களிலும் பெட்ரோல் வேரியண்ட் கிடைக்கும்.

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படிருந்த  7 மாதங்களில் மிகுந்ந இழப்பினை சந்தித்த நிறுவனங்களில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனமும் ஒன்றாகும். தடை நீக்கப்பட்டிருந்தாலும் தங்களுடைய அனைத்து மாடல்களிலும் பெட்ரோல் கார்களை அறிமுகம் செய்ய இந்தியா மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது.

விற்பனைக்கு வந்துள்ள பென்ஸ் GLE 400 4MATIC எஸ்யூவி காரில் 333 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் ட்வீன் டர்போ 6 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 480Nm ஆகும். இதில் 7 வேக ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஜிஎல்இ எஸ்யூவி காரில் 4 மேட்டிக் ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் , 360 டிகிரி மேமரா , கீலெஸ் 6 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இஎஸ்பி , பிரேக் அசிஸ்ட் ஏர்மேட்டிக் சஸ்பென்ஷன் என பல வசதிகளை பெற்றுள்ளது.

இந்தியாவில் ஜிஎல்இ எஸ்யூவி காரில் GLE 250 d, GLE 350 d, GLE 400 மற்றும் பெர்ஃபாமென்ஸ் ரக GLE 450 AMG கூபே மாடல்களும் விற்பனையில் உள்ளது.

2017 கியா ரியோ கார் வரைபடம் – 2016 பாரீஸ் மோட்டார் ஷோ

வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள 2016 பாரீஸ் மோட்டார் ஷோ அரங்கில் 2017  கியா ரியோ ஹேட்ச்பேக் கார் மாடலை அறிமுகம் செய்ய உள்ளதால் கியா ரியோ காரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

2017-Kia-Rio-official-sketches

ஹூண்டாய் எலைட்  ஐ20 காரின் அடிப்படையிலான மாடலாக விளங்கும் கியா ரியோ காரின் 4வது தலைமுறை மாடல் அக்டோபர் 1ந் தேதி முதல் 16ந் தேதி வரை நடைபெற உள்ள பாரீஸ் மோட்டார் ஷோ அரங்கில் வெளிப்படுத்தப்பட உள்ளது.

வெளியிடப்பட்டுள்ள வரைபடங்களின் வாயிலாக கியா ரியோ காரின் முகப்பு தோற்றம் மிக ஸ்டைலிசாக விற்பனையில் உள்ள மாடலின் சாயலிலே கூடுதலான ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. முகப்பில் எல்இடி ஹெட்லேம்ப் ,எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , பின்பகத்தில் எல்இடி டெயில் விளக்குகளை பெற்றிருக்கும்.

2017-Kia-Rio-official-sketches-dashboard

உட்புறத்தில் இரட்டை வண்ண கலவை டேஸ்போர்டு ,அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாயிலாக ஆப்பிள் கார் பிளே ,ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்றவற்றின் தொடர்புகளை பெற உள்ளது.

எஞ்சின் ஆப்ஷன் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை வருகின்ற மோட்டார் ஷோ அறிமுகத்திற்கு பின்னர் ஐரோப்பா நாடுகளில் விற்பனைக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளது. மேலும் ரியோ காரின் அடிப்படையிலான செடான் காரும் மேம்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நுழைவதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக உள்ளது. 2019 ஆண்டு முதல் இந்தியாவில் கியா ஆண்டுக்கு 3,00,000 கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

2017-Kia-Rio-official-sketches-rear