புதிய மாருதி சுசூகி ஆல்டோ வருகை உறுதியானது

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளாரான மாருதி சுசூகி நிறுவனத்தின் மாருதி ஆல்ட்டோ காரின் புதிய தலைமுறை மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக மாருதி சுசூகி நிர்வாக இயக்குநர் கெனிச்சி அயுகவா தெரிவித்துள்ளார்.

மாருதி சுசூகி நிர்வாக இயக்குநர் & தலைமை செயல் அதிகார் கெனிச்சி அயுகவா டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்துத்துள்ள பேட்டியில் சியாஸ் செடான் மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற பிரிமியம் கார்களின் வெற்றியை தொடரும் நோக்கில் உள்ளதாக தெரிவிக்கையில் இந்திய வாடிக்கையாளர்கள் மேம்படுத்தபட்ட மற்றும் அதிக பிரிமியம்  கார்களை மாருதி சுஸூகி நிறுவனத்திடம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா பயணிகள் கார் சந்தையில் 47 சதவீத பங்களிப்பினை பெற்று விளங்கும் மாருதி நிறுவனம் மேலும் 10 சதவீத சந்தை மதிப்பினை அதிகரிக்கும் நோக்கில் தங்களுடைய வருங்கால மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

ஆண்டுக்கு 15 லட்சம் கார்கள் வரை தயாரிக்கும் திறனை கொண்டுள்ள மாருதி சுஸூகி அடுத்த வருடத்தில் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஆலையை திறக்க திட்டமிட்டுள்ளது. இது தவிர மானசேர் மற்றும் குர்கான் உற்பத்தியை 10 சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் மூன்றாவது ஷிஃப்ட்டை திறக்கவும் வருகின்ற 2020க்குள் வருடத்துக்கு 20 லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கினை நிர்னையித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் 13 லட்சம் கார்கள் இந்தியாவிலும் 1.2 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுதைய சந்தையின் முக்கிய மாடலாக விளங்கும் மாருதி ஆல்ட்டோ காரின் உற்பத்தி கடந்த சில மாதங்களாகவே அதாவது ரெனோ க்விட் காரின் வரவுக்கு பின்னால் சரிவினை சந்திக்க தொடங்கி உள்ளதால் அதனை ஈடுகட்டும் நோக்கில் புதிய தலைமுறை ஆல்ட்டோ கார் இந்தியாவில் அமல்ப்படுத்தப்பட உள்ள பாரத் கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ற மாடலாக இருக்கும் வகையில் தரமான கட்டமைப்புடன் ஸ்டைலிங்கான மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

தகவல் உதவி : et auto

மஹிந்திரா தார் டேபிரேக் எடிசன் கஸ்டமைஸ் விலை விபரம்

பிரபலமான மஹிந்திரா தார் எஸ்யூவி மாற்றியமைக்கப்பட்ட மஹிந்திரா தார் டேபிரேக் பதிப்பின் கஸ்டமைஸ் கட்டணம் ரூ.9.60 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தார் டேபிரேக் கஸ்டமைஸ் காலம் 2 மாதங்களாகும்.

மஹிந்திரா கஸ்டமைசேஷன் பிரிவினால் தார் எஸ்யூவி காரை தனிபயனாக்கம் செய்து தரப்பட உள்ளது. தார் எஸ்யூவி மற்றும் 9.60 லட்சம் கொடுத்து இரு மாதங்கள் காத்திருப்புக்கு பின்னர் கஸ்டமைஸ் செய்யப்பட்ட தார் டேபிரேக் எஸ்யூவி கிடைக்கும். மேலும் மேற்கூறை திடமானதாக மாற்ற கூடுதலாக 1.50 லட்சம் செலுத்தப்பட வேண்டும். தார் டேபிரேக் மாடலை பதிவு மற்றும் காப்பீடு செய்ய இயலும்.

தார் டேபிரேக் எஸ்யூவி காரில் எஞ்சின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் செய்யப்படுவதில்லை. மேட் கிரே வண்ணம் , ஃபேக்டரியில் பொருத்தப்பட உள்ள இழுவைக்கான கருவி மற்றும் ஸ்டிங்கர் பம்பர் , வட்ட வடிவ எல்இடி வளையங்களை கொண்ட ஹெட்லைட் , எல்இடி டெயில் லைட் , காற்று செல்ல வழிவகுக்கும் ஸ்கூப் பானெட் மேல் பொருத்தப்பட்டிருக்கும். ரேஸ் பகெட் இருக்கைகள் , 4 வாட்டர் ப்ரூஃப் ஸ்பீக்கர்கள் என பல வசதிகளை பெற்றிருக்கும்.

எந்த சாலைகளிலும் பயணிக்கும் வகையில் மிக பலமான திறனை கொண்ட 37 இன்ச் மேக்சிஸ் டிரிப்டோர் டயர்கள் பொருத்தப்படும். இந்த டயர்களின் வாயிலாக வாகனத்தின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிப்பதுடன் எஸ்யூவி தோற்றம் மிக பெரிதாக காட்சி தருகின்றது. பின்புறத்தில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட இரு புகைப்போக்கி போன்றவற்றை பெற்றிருக்கும்.  கஸ்டமைஸ் செய்யப்பட்ட தார் டேபிரேக் எஸ்யூவி வாயிலாக மிக சிறப்பான ஆஃப்ரோடு அனுபவத்தினை பெறலாம்.  தார் எஸ்யூவி காரில் 105 bhp பவர் மற்றும் 247 Nm டார்க் வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

mahindra-thar-daybreak-edition-rear

ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் சிறப்பு எடிசன் விரைவில்

சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸர் எஸ்எஃப் பைக்குகளில் சிறப்பு பதிப்பினை பண்டிகை காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. ஜிக்ஸெர் எஸ்பி எடிசன் விலை கூடுதலாக அமையலாம்.

suzuki-gixxer-sp-edition_1

ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் என இரு மாடல்களிலும் வரவுள்ள ஜிக்ஸெர் எஸ்பி எடிசனில் புதிய வண்ணமாக மேட் கிரே வண்ணத்துடன் செக்கட் கொடி ஸ்டிக்கரிங்கினை பெற்று சிவப்பு மற்றும் கருப்பு வண்ண கலவை இருக்கையுடன் அலாய் வீல் ஸ்டைர்ப் பெற்றிருக்கும். ஸ்போர்ட்டிவ் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.

ஜிக்ஸெர் மாடல் நேகட் பைக்காகவும் ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடல் அலங்கரிங்கப்பட்ட பைக் மாடலாக விற்பனையில் உள்ளது.இரு மாடல்களும் நல்ல வரவேற்பினை பெற்று சிறப்பான சந்தை மதிப்பினை 150சிசி மார்கெட்டில் பெற்று விளங்குகின்றது.

14.6 பிஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 155சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 14 என்எம் ஆகும். இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. சுசூகி ஈகோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்றுள்ள இரு பைக்குகளின் மைலேஜ் லிட்டருக்கு 50 கிமீ வரை கிடைக்கும்.

suzuki-gixxer-sp-edition

சுசூகி ஜிக்ஸ்ர் பைக் விலை

சுசூகி ஜிக்ஸ்ர்- ரூ. 87802 (All Mono Tone)
சுசூகி ஜிக்ஸ்ர் – ரூ. 88925 (All Dual Tone Colors)
சுசூகி ஜிக்ஸ்ர் -ரூ. 91253 (All Dual Tone Colors- With Rear Disc Brake)

சுசூகி ஜிக்ஸ்ர் SF பைக் விலை

ஜிக்ஸ்ர் SF : ரூ. 97472 (Pearl Mira Red /Glass sparkle Black )
ஜிக்ஸ்ர் SF : ரூ. 99170 (Moto GP Edition )
ஜிக்ஸ்ர் SF : ரூ. 99801 (Pearl Mira Red /Glass sparkle Black  – With Rear Disc Brake)
 ஜிக்ஸ்ர் SF : ரூ. 101499 (Moto GP Edition- With Rear Disc Brake)
(அனைத்தும் சென்னை ஆன்ரோடு விலை )
சாதரன வேரியண்ட் விலையை விட கூடுதலாக ஜிக்ஸர் SP அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Image ;Classic Omega Auto Facebook

ஜீப் எஸ்யூவிகள் செரோக்கீ , SRT, ரேங்லர் விற்பனைக்கு வந்தது

பிரசத்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஜீப் எஸ்யூவிகள் செரோக்கீ , SRT மற்றும் ரேங்லர் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி பெர்ஃபாமென்ஸ் ரக மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது.

jeep-suv-launched-in-india

இந்தியாவில் முதற்கட்டமாக டெல்லி மற்றும் அகமதாபாத்தில் மட்டும் டீலர்களை திறந்துள்ள ஜீப் அக்டோபர் இறுதிக்குள் சென்னை மற்றும் மும்பையிலும் தொடங்க உள்ளது. ஆண்டின் இறுதிக்குள் பெங்களூரு , ஹைத்திராபாத் , சண்டிகர் மற்றும் கோச்சி போன்ற பகுதிகளில் விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது.

அதிக வீல்பேஸ் கொண்ட 4 கதவுகளை பெற்றுள்ள ஜீப் ரேங்கலர் அன்லிமிடேட் மாடல் 197 bhp ஆற்றலை வழங்கும் 2.8 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதில 5 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

கிராண்ட் செரோக்கீ எஸ்யூவி மாடலில் எஸ்ஆர்டி உள்பட லிமிடேட் , சம்மீட் என மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில் வெளியாகியுள்ளது.

செரோக்கீ எஸ்ஆர்டி 475 hp ஆற்றலை வழங்கும் 6.4 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 624Nm ஆகும். இதில் 4 வீல்களுக்கும் ஆற்றலை எடுத்து செல்லும் குவாட்ரா ட்ராக் ஏக்டிவ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.  இந்த என்ஜினில் ஈக்கோ மோட் வாயிலாக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை பெற இயலும்.

0 முதல் 100 கிமீ வேகத்தினை 5 விநாடிகளில் எட்டும் . கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி உச்ச வேகம் மணிக்கு 257 கிமீ ஆகும்.

jeep-grand-cherokke-srt

செரோக்கீ  லிமிடேட்  மற்றும் சம்மீட் வேரியண்டில் 240 hp ஆற்றலை வழங்கும்  3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 570 Nm ஆகும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

மூன்று வேரியண்ட்களுமே 4 வீல்களுக்கும் ஆற்றலை எடுத்து செல்லும் குவாட்ரா ட்ராக்  II  ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது.

முதற்கட்டமாக அமெரிக்கவிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள ஜீப் எஸ்யூவி கார்கள் அடுத்த வருடத்தின் மத்தியிலிருந்து இந்தியாவிலே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்த விலையில் எதிர்பார்க்கப்படும் ஜீப் சி எஸ்யூவி காரும் அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரலாம். தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ள செரோக்கீ , SRT மற்றும் ரேங்லர் மாடல்களின் பெட்ரோல் வேரியண்ட் வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வரலாம்.

ஜீப் எஸ்யூவிகள் விலை பட்டியல்

Jeep Wrangler Unlimited 2.8 CRD: ரூ. 71.59 லட்சம்

Jeep Grand Cherokee Limited: ரூ. 93.64 லட்சம்

Jeep Grand Cherokee Summit: ரூ. 1.03 கோடி

Jeep Grand Cherokee SRT: ரூ. 1.12 கோடி

(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )

jeep-wrangler

மாருதி ஸ்விஃப்ட் டெகா விற்பனைக்கு வந்தது

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிறப்பு பதிப்பாக  மாருதி ஸ்விஃப்ட் டெகா சிறப்பு எடிசன் ரூ.5,94,445 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. . ஸ்விப்ட் டெகா எடிசன் VXi மற்றும் VDi வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும்.

காலபந்து ஆட்டத்தில் 10 எண் கொண்ட விளையாட்டு வீரர்களை நினைவுப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள ஸ்விப்ட் டெகா சிறப்பு பதிப்பில் சிவப்பு மற்றும் வெள்ளை என இருவிதமான வண்ணங்களில் வந்துள்ளது.

ஸ்விப்ட் டெகா கார் வசதிகள்

டெகா காரின் வெளிதோற்றத்தில் பக்கவாட்டு ஸ்க்ர்ட் , மேற்கூறை ரியர் ஸ்பாய்லர் , முன்பக்க பானெட் மற்றும் பின்புறத்தில் இருபக்க  ஸ்டிக்கரிங் , பக்கவாட்டிலும் சி பில்லர் மற்றும் பின்பக்க கதவுகளில் ஒற்றை ஸ்டிக்கரிங் இடம்பெற்றுள்ளது. வீல் கவர்களில் கருப்பு வண்ணத்தினை கொண்டுள்ளது.

maruti-suzuki-swift-deca-edition-dashboard

உட்புறத்தில் சோனி மல்டிமீடியா தொடுதிரை சிஸ்டத்தில் பூளூடூத் மற்றும் எக்ஸ்டரனல் மைக் , 6 இன்ச்  சோனி ஸ்பீக்கர்கள் , கருப்பு மற்றும் சிவப்பு வண்ண கலவையிலான இருக்கைகள் , ரிவர் பார்க்கிங் உதவி , முன்பக்க ஆர்ம் ரெஸ்ட் , கியர் பூட் கவர், கார்பன் பூச்சூ கொண்ட சென்ட்ரல் கன்சோல் , மிதியடிகள் , ஸ்டீயரிங் வீல்கவர் என பல புதிய வசதிகளை பெற்றுள்ளது.

83 bhp பவர் மற்றும்  115 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும்  74 bhp பவர் மற்றும் 190 Nm வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பவரில் எந்த மாற்றங்களும் இல்லாமல் கூடுதல் துனைகருவிகளை பெற்று அசத்தலான ஸ்டைலில் ஸ்விப்ட் டெகா விளங்குகின்றது. இரு எஞ்சினிலும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

மாருதி ஸ்விப்ட் டெகா விலை

VXi வேரியண்ட் ரூ. 6,86,983

VDi வேரியண்ட் ரூ. 5,94,445

(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரும் விலை )

maruti-suzuki-swift-deca-edition-seats

maruti-suzuki-swift-deca-edition-music-system

maruti-suzuki-swift-deca-edition-rear-spoiler

ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் பெட்ரோல் விற்பனைக்கு வந்தது

ரூ.52.75 லட்சத்தில் ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் 35 TFSI பெட்ரோல் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிவந்துள்ள ஆடி ஏ6 டாப் வேரியண்டில் எல்இடி மேட்ரிக்ஸ் ஹைட்ரேம்ப் இடம்பெற்றுள்ளது.

190 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் TFSI டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 320 Nm ஆகும். இதில் 7 வேக எஸ் ட்ரானிக் டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் வழியாக 4 வீல்களுக்கும் ஆற்றலை எடுத்து செல்கின்றது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு 7.9 விநாடிகளும் , ஆடி ஏ6 மேட்ரிக்ஸ்காரின் உச்ச வேகம் மணிக்கு 233 கிமீ மற்றும் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 15.26 கிலோ மீட்டர் ஆகும்.

A6 மேட்ரிக்ஸ் காரில் 8 இன்ச் தொடுதிரை நேவிகேன் அமைப்புடன் இனைந்த MMI டச் சஸ்டம் , 14 ஸ்பிக்கர்களை கொண்ட போஸ் சிஸ்டம் , 8 காற்றுப்பைகள்  ,  5 விதமான டைனமிக் டிரைவிங் மோட்கள் என பல வசதிகளை கொண்டதாக பெட்ரோல் வேரியண்ட் விளங்குகின்றது.

பிஎம்டபிள்யூ 520i , மெர்சிடிஸ் E200 மற்றும் வரவுள்ள ஜாகுவார் எக்ஸ்எஃப் பெட்ரோல் போன்ற மாடல்களுக்கு போட்டியாஅமைந்துள்ள ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் விலை ரூ. 52.75 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

Static photoColour: Daytona Grey

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஜூலை 2016

 

கடந்த ஜூலை, 2016 மாதந்திர விற்பனையில் முன்னனி வகித்த டாப் 10 பைக்குகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். ஹீரோ ஸ்பிளென்டர் , HF டீலக்ஸ், கிளாமர் போன்ற பைக்குகள் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது.

 

splendor-ismart-110

 

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர், HF டீலக்ஸ், கிளாமர் மற்றும் பேஸன் என 4 பைக்குகளும் முதல் 4 இடத்தினை பிடித்து பட்டியலில் முன்னிலை வகிக்கின்றது. அதனை தொடர்ந்து  பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிளாட்டினா , பல்சர் 150 மற்றும் சிடி 100 மாடல்கள் மூன்று இடங்களை பெற்று விளங்குகின்றது.

டிவிஎஸ் அப்பாச்சி பைக் வரிசை மாடல்கள் 30,116 அலகுகள் விற்பனை ஆகி பட்டியலில் 10வது இடத்தை பெற்றுள்ளது. ஹீரோ ஸ்பிளென்டர் 1,97,760 என்கின்ற எண்ணிக்கையில் விற்பனை ஆகியிருந்தாலும் ஆக்டிவா ஸ்கூட்டர் 2,56,173 அலகுகள் என்ற நிலையில் உயர்ந்துள்ளது.

ராயல் என்பீல்டூ கிளாசிக் 350 பைக் 31,372 அலகுகள் விற்பனை ஆகி பட்டியலில் 8வது இடத்தை பெற்றுள்ளது.

முழுமையான பட்டியலை கான கீழுள்ள அட்டவனையில் பார்க்கலாம்.

டாப் 10 பைக்குகள் ஜூலை 2016

வ.எண்  மாடல் விபரம்   ஜூலை – 2016
1. ஹீரோ ஸ்பிளென்டர்  1,97,760
2. ஹீரோ HF டீலக்ஸ் 1,01,708
3. ஹீரோ கிளாமர் 75,088
4. ஹீரோ பேஸன் 63,229
5.  ஹோண்டா சிபி ஷைன் 56,892
6. பஜாஜ் சிடி 100 41,301
7. பஜாஜ் பிளாட்டினா 33,384
8. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 31,372
9. பஜாஜ் பல்சர் 150 31,092
10. டிவிஎஸ் அப்பாச்சி 30,116

 

விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஜூலை 2016

கடந்த ஜூலை 2016 , மாதந்திர விற்பனையில் முன்னனி வகிக்கும் டாப் 10 ஸ்கூட்டர் பற்றி தெரிந்துகொள்வோம். டாப் 10 இடங்களில் முதன்முறையாக ஹோண்டா நவி 10வது இடத்தை பிடித்துள்ளது.

honda-navi1

இந்தியாவின் நெ.1 ஸ்கூட்டராக தொடர்ச்சியாக இருந்து வரும் ஹோண்டா ஆக்டிவா கடந்த மாத விற்பனையில் 2,56,173 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது.அதனை தொடர்ந்து டிவிஎஸ் ஜூபிடர் 46, 557 அலகுகள் விற்பனை ஆகியுள்ளது.

ஹோண்டா நவி மோட்டோஸகூட்டர் மாடல் பல தரப்பட்ட மெட்ரோ மக்களிடம்நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால் 11,644 அலகுகள் விற்பனை ஆகி முதன்முறையாக முதல் 10 இடங்கள் பட்டியலில் நுழைந்து 10வது இடத்தை பெற்றுள்ளது.

ஹீரோ டூயட் , மேஸ்ட்ரோ , பிளஸர் போன்ற மாடல்கள் தொடர்ச்சியாக சீரான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. யமஹா பேசினோ ஸ்கூட்டர் 18,162 அலகுகள் விற்பனை ஆகி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

முழுமையான பட்டியலை கான கீழுள்ள அட்டவனையில் பார்க்கலாம்.

டாப் 10 ஸ்கூட்டர் ஜூலை 2016

 வ.எண்  மாடல் விபரம்   ஜூலை 2016
1. ஹோண்டா ஆக்டிவா  2,56,173
2. டிவிஎஸ் ஜூபிடர் 46,557
3. ஹோண்டா டியோ 32,388
4. ஹீரோ மேஸ்ட்ரோ 31,311
5. ஹீரோ டூயட் 24,391
6. யமஹா பேசினோ 18,162
7.  ஹீரோ பிளஸர் 15,738
8.  யமஹா ரே 14,080
9. சுசூகி ஆக்செஸ் 13,120
10. ஹோண்டா நவி 11,644

ஃபயர்ஸ்டோன் டயர் விற்பனைக்கு அறிமுகம் செய்த பிரிட்ஜ்ஸ்டோன்

இந்தியாவில் பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனத்தின் அங்கமான அமெரிக்காவின் பிரசத்தி பெற்ற ஃபயர்ஸ்டோன் பிராண்டில் இரு கார் டயர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. FR500 மற்றும் LE02 என இருவிதமான டயர்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

Bridgestone-introduces-the-Firestone-brand

ரூ.2,200 ஆரம்ப விலையில் தொடங்கும் FR500 வகை டயர்கள் பயணிகள் காருக்கும் ரூ.5,500 ஆரம்ப விலையில் தொடங்கும் LE02 வகை டயர்கள் எஸ்யூவி கார்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபயர்ஸ்டோன் எஃப்ஆர்500 டயர்கள் 24 விதமான அளவுகளில் 12 இன்ச் ரிம்  முதல் 16 இன்ச் ரிம் வரையிலான விட்டமுள்ள கார்களுக்கு ஏற்ற வகையில் கிடைக்கும்.

ஃபயர்ஸ்டோன் எல்இ02 டயர்கள் 3 விதமான அளவுகளில் 15 இன்ச் மற்றும் 16 இன்ச் விட்டமுள்ள எஸ்யூவி ரக கார்களுக்கு ஏற்ற வாகையில் அமைந்திருக்கும். மேலும் அடுத்த இருவருடங்களில் எல்இ02 பிரிவில் கூடுதலாக 11விதமான அளவுகளில் டயர்கள் வரவுள்ளது.

இரு டயர்களுமே சிறப்பான கட்டுமானத்தை பெற்றுள்ளதால் அனைத்து விதமான சாலைகளிலும் சிறப்பாக பயணிக்கும் வகையில் அமைந்திருக்கும். பிரேக்கிங் பெர்பாமென்ஸ் சிறப்பான வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது எந்த ஆட்டோமொபைல் நிறுவனங்களுடனும் இணைந்து ஃபயர்ஸ்டோன் பிராண்டில் டயர் தயாரிக்கும் எண்ணம் இல்லை . முதற்கட்டமாக அதிக வாடிக்கையாளர்களிடன் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் , எஸ்யூவி மற்றும் பயணிகள் கார்கள் பிரிவில் சிறப்பான சந்தை மதிப்பினை பெறுவதே நோக்கமாகும் , என பிரிட்ஜ்ஸ்டோன் நிரவாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

firestone-tyres-india

பிரிட்ஜ்ஸ்டோன் தொழிற்சாலைகள் புனே , சக்கன் மற்றும் கேதா போன்ற பகுதிகளில் அமைந்துள்ள ஆலைகளின் வாயிலாக நாள் ஒன்றுக்கு 25,000 டயர்கள் தயாரிக்க முடியும்.

ஆன்லைனில் அதிகம் பார்க்கப்பட்ட ஆட்டோ பிராண்டு : ஹீரோ மோட்டோகார்ப்

இந்தியா ஆன்லைன் வீடியோ பார்வையாளர்களில் அதிகம் பார்க்கப்பட்ட  ஆட்டோ பிராண்டு என்ற பெருமையை ஹீரோ மோட்டோகார்ப் பெற்றுள்ளது. யூடியூப் , டிவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் உள்ள வீடியோ பார்வையாளர்களை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.

hero-xtreme-200s-1

வீடியேலை (vidooly) நடத்தி ஆய்வில் இந்தியாவில் 19 ஆட்டோ பிராண்டுகள் எடுத்துக்கொண்டதில் 1.3 மில்லியன் வீடியோ பார்வையாளர்களை பெற்று ஹீரோ மோட்டோகார்ப் பிராண்டு முன்னிலை வகிக்கின்றது.

மாருதி சுஸூகி , ஹூண்டாய் இந்தியா , மஹிந்திரா ஆட்டோ , டொயோட்டா இந்தியா , டட்சன் இந்தியா , ரெனோ இந்தியா, செவர்லே இந்தியா, ஃபோர்டு இந்தியா , ஹோண்டா இந்தியா , ஃபோக்ஸ்வேகன் இந்தியா ,  மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா, பிஎம்டபிள்யு இந்தியா மற்றும் ஆடி இந்தியா போன்ற 13 கார் நிறுவனங்களும் ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா இந்தியா , பஜாஜ் ஆட்டோ , டிவிஎஸ், யமஹா மற்றும் சுஸூகி மோட்டார்சைக்கிள்  என 6 பைக் பிராண்டுகள் என மொத்தம் 19 ஆட்டோ பிராண்டுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் வீடியோ பார்வை பட்டியல் – ஆட்டோ பிராண்டு

ஹீரோ மோட்டோகார்ப்  – 13,00,000

ஆடி இந்தியா – 5,24,000

செவர்லே இந்தியா – 4,14,000

மஹிந்திரா ஆட்டோ – 1,79,000

பிஎம்டபிள்யு இந்தியா – 1,65,000

அதிகப்படியான பார்வையாளர்களை பெறுவதில் யூடியூப் முதலிடத்திலும் அதனை தொடர்ந்து பேஸ்புக் , டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளது.

வீடியேலை இனை நிறுவனர் நிஷாத் கூறுகையில் இளம் பார்வையாளர்களை அதிகம் பெற்றுள்ள யூடியூப் வாயிலாக அதிக பார்வையாளர்களை வீடியோ சென்றடைய முக்கிய காரணமாக உள்ளது. மேலும் இன்ஸ்டாகிராம் ,  ஸ்னாப்சாட் மற்றும் பெரிஸ்கோப் போன்றவற்றிலும் ஆட்டோபிராண்டு பார்வையாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.  வரும் காலத்தில் ஆட்டோ பிராண்டுகள் ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த டேட்டாவில் அதிக தகவலை வழங்குவதன் வாயிலாக மிக இலகுவாக சென்றடைய வாய்ப்புள்ளது தெரிவித்துள்ளார்.

hero-karizma-zmr

இந்த வருடத்தில் 400,000 மணி நேர விளம்பரங்களை இந்தியர்கள்  யூடியூப் வழியாக பார்த்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. பேஸ்புக் பயன்படுத்துவதில் இந்தியர்கள் அமெரிக்காவினை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளனராம்.