மெர்சிடிஸ் ஏஎம்ஜி GT S விற்பனைக்கு வந்தது

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி GT-S சூப்பர் ஸ்போர்ட்ஸ் பெர்ஃபாமென்ஸ் கார் ரூ.2.40 கோடி விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் ஏஎம்ஜி GT S மற்றும் ஏஎம்ஜி ஜிடி கார்கள் கிடைக்கின்றது.

Mercedes-AMG GT S

சர்வதேச அளவில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி GT இரண்டு வேரியண்டில் கிடைக்கின்றது. அவை ஸ்டான்டர்டு ஏஎம்ஜி ஜிடி மற்றும் ஏஎம்ஜி ஜிடி  எஸ் ஆகும்.

510 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 4.0 லிட்டர் வி8 என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 650 என்எம் ஆகும். இதில் 7 வேக டிசிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு வெறும் 3.7 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி எஸ் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 310கிமீ ஆகும்.

கம்ஃபோர்ட் , ஸ்போர்ட் , ஸ்போர்ட் + , ரேஸ் மற்றும் இன்டிஜூவல் என 5 விதமான மெர்சிடிஸ் டிரைவ் மோட் செலக்ட்ரை கொண்டுள்ளது.

முகப்பில் மிக நேர்த்தியான தோற்றத்தில் அமைந்துள்ள  ஏஎம்ஜி GT S காரில் எல்இடி ஹை பெர்ஃபாமென்ஸ் முகப்பு விளக்கினை பெற்றுள்ளது. மேற்கூரை எல்இடி இண்டிகேட்டர் மற்றும் டெயில் விளக்குகளை பெற்று விளங்குகின்றது.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி GT S

முன்பக்கத்தில் 19 இஞ்ச் அலாய் வீல் பின்புறத்தில் 20 இஞ்ச் அலாய் வீலில் கிடைக்கின்றது. அலாய் வீலில் 4 விதமான ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம்.

ஸ்போர்ட்டிவ் இருக்கைகளுடன் நேர்த்தியாக அமைந்துள்ள காரின் உட்புறத்தில் ஏஎம்ஜி இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , ஸ்டீயரிங் வீல் போன்றவற்றை பெற்றுள்ளது.

போர்ஷே 911 டர்போ எஸ் மற்றும் ஜாகுவார் எஃப் டைப் கார்களுக்கு கடும் சவாலாக ஏஎம்ஜி GT S விளங்கும்.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி GT S விலை

மெர்சிடிஸ் ஏஎம்ஜி GT S காரின் விலை ரூ.2.40 கோடி (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

லம்போர்கினி கல்லார்டோ சூப்பர் காரின் பராமரிப்பு செலவு எவ்வளவு ?

சொகுசு சூப்பர் கார்களில் ஆண்டிற்க்கான பரமாரிப்பு செலவு நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் தொடக்க நிலை கார்களுக்கு இணையாக உள்ளது. லம்போர்கினி கல்லார்டோ சூப்பர் காரின் பராமரிப்பு செலிவினை பார்க்கலாம்.

Lamborghini Gallardo final car

லம்போர்கினி நிறுவனத்தின் வரலாற்றில் மிக அதிகமாக விற்பனையான சூப்பர் கார்களில் கல்லார்டோ முதன்மை வகிக்கின்றது. தற்பொழுது கல்லார்டோ காருக்கு மாற்றாக ஹூராகேன் விற்பனையில் உள்ளது.

கல்லார்டோ சூப்பர் காரின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 4.7கிமீ தருகின்றதாம். முதல் 5000 மைல்கள் அதாவது 8000 கிமீ வரை சர்வீஸ் செய்ய எவ்வளவு பராமரிப்பு செலவாகின்றது எனபதனை விளக்கியுள்ளனர்.

முதல் தலைமுறை கல்லார்டோ காரில் பொருத்தப்பட்டுள்ள கிளட்ச் 12,000 கிமீ க்குள் மாற்ற வேண்டியது அவசியமாகின்றதாம். அவ்வாறு மாற்றினால் கிளட்ச் மாற்ற $ 7000 – $ 9000 (ரூ.4.64 லட்சம் முதல் ரூ.5.97 லட்சம் ) வரை ஆகின்றதாம். முதல் தடவை மாற்றிய பின்னர் ஓட்டுதலை பொறுத்து  32,000 கிமீ வரை கிளட்ச் நீடிக்குமாம்.

என்ஜின் ஆயில் , ஆயில் ஃபில்டர் ,  காற்று ஃபில்டர் மற்றும் பிரேக் ஃபுளூயீட் டிஃப்ரன்ஷியல் போன்றவற்றில் முதல் ஆயில் சர்வீஸ் செய்யப்படுகின்றதாம். இதற்க்கு அமெரிக்கா டாலர் $1000 (ரூ.66,000) வரை செலவாகின்றதாம்.

கல்லார்டோ இரண்டாவது ஆயில் சர்வீசில் கூடுதலாக ஸ்பார்க் பிளக் மாற்றப்படுதனால் $1000 (ரூ.1,32லட்சம்) வரை செலவாகின்றதாம்.

12,000 கிமீ முதல் 16,000 கிமீ வரை தாங்ககூடிய 1 செட் டயருக்கு (மிச்செலின் சூப்பர் ஸ்போர்ட் அல்லது பைரேலி பிஜீரோ ) $ 1500-$2000 ( ரூ.1 லட்சம் முதல் 1.32 லட்சம் )வரை செலாகின்றதாம்.

பாரமரிப்பு செலவுகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட உரிமையாளர்க்கு டிரான்ஸ்மிஷன் ஹைட்ராலிக் லைனில் ஏற்பட்ட பிரச்சனைக்காக $ 7200 (ரூ.4.78 லட்சம்)   செலவாகியதாம்.

Lamborghini Gallardo Maintenance Cost

டாடா ஜீக்கா கார் மிக விரைவில் – TATA ZICA

டாடா கைட் என்ற பெயருடன் அழைக்கப்பட்ட காருக்கு டாடா ஜீக்கா ( Tata Zica ) என்ற பெயரினை டாடா மோட்டார்ஸ் வைத்துள்ளது. டாடா ஸீக்கா கார் ஜனவரி 2016 யில் விற்பனைக்கு வரவுள்ளது.

TATA ZICA

கைட் என்ற குறியீட்டு பெயரில் தயாரிக்கப்பட்டு வந்த  பி பிரிவு ஹேட்ச்பேக் காருக்கு ஜீக்கா என்ற பெயரினை சூட்டியுள்ளது. மேலும் ஜிக்கா காரை அடிப்படையாக கொண்ட செடான் காருக்கு டாடா ஸ்வே என்ற பெயரை சூட்டியுள்ளது.

டாடா நிறுவனத்தின் புதிய 1.05 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 67 பிஹெச்பி மற்றும் டார்க் 140என்எம் ஆகும்.

TATA ZICA
TATA ZICA

ஸெஸ்ட் மற்றும் போல்ட் கார்களில் பயன்படுத்தப்பட்ட 84பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் என்ஜினும் பொருத்தப்பட்டிருக்கும்.

5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வர வாய்ப்புகள் உள்ளது.

இன்டிகா காரின் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஜீக்கா கார் டாடா போல்ட் மற்றும் ஸெஸ்ட் காரில் உள்ள பல நவீன வசதிகளை பெற்றிருக்கும். ஜிக்கா காரின் போட்டியாளர்கள் செலிரியோ , ஆல்ட்டோ கே10 போன்ற கார்களாகும்.

டாடா ஜீக்கா காரின் விலை ரூ.3.80 லட்சம் முதல் 5.30 லட்சத்திற்க்குள் ஆன்ரோடு விலையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

TATA ZICA
டாடா ஜீக்கா

Tata Zica to launch on January 2016

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி எஸ் கார் நாளை முதல்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி பெர்ஃபாமென்ஸ் GT-S  ஸ்போர்ட்ஸ் கார் நாளை டெல்லியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Mercedes AMG GT-S

ஏஎம்ஜி ரக பெர்ஃபாமென்ஸ் மாடலான ஜிடி எஸ் காரின் பெரும்பாலான தாத்பரியங்கள் பிரபலமான எஸ்எல்எஸ் ஏஎம்ஜி மாடலில் இருந்து பெறப்பட்டுள்ளது.

510பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி8 4.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 650என்எம் ஆகும். இதில் 7 வேக இரட்டை கிள்ட்ச் கியர்பாக்ஸ் உள்ளது.

0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு வெறும் 3.7 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். மெர்சிடிஸ் AMG GT-S காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 310கிமீ ஆகும்.

சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை தரவல்ல மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி எஸ் முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுவதனால்  ரூ.2 கோடியில் விற்பனைக்கு வரலாம்.

Mercedes AMG GT-S sportscar launch tommrow

விற்பனையில் டாப் 10 எஸ்யூவி கார்கள் – அக்டோபர் 2015

கடந்த அக்டோபர் மாதம் விற்பனையில் சிறந்து விளங்கி டாப் 10 எஸ்யூவி கார்களை பற்றி பார்க்கலாம். டியூவி300 எஸ்யூவி சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

பொலேரோ எஸ்யூவி 7754 கார்களை விற்பனை செய்து முதலிடத்தினை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து க்ரெட்டா இரண்டாமிடத்தில் உள்ளது. ஈக்கோஸ்போர்ட் காருக்கு போட்டியாக விற்பனைக்கு வந்த டியூவி300 நான்காமிடத்தில் உள்ளது.
கடந்த இரு மாதங்களாக விற்பனையில் டியூவி300 மற்றும் பொலிரோ கார்கள் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வந்த எஸ் க்ராஸ் கிராஸ்ஓவர் ரக மாடல் 3017 கார்களை விற்பனை செய்துள்ளது.
top-10-selling-suv-october-2015

பிரிமியம் எஸ்யூவி 

ஃபார்ச்சூனர் எஸ்யூவி பிரிமியம் சந்தையில் மிக வலுவான இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து பஜீரோ மற்றும் சிஆர்-வி உள்ளது. புதிதாக விற்பனைக்கு வந்த ட்ரையல் பிளேசர் 74 கார்களை விற்பனை செய்துள்ளது.
top-10-selling-suv-october-2015

2016 டொயோட்டா இன்னோவா எம்பிவி கார் அறிமுகம் – Toyota Innova

2016 டொயோட்டா இன்னோவா எம்பிவி கார் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டொயோட்டா இன்னோவா கார் முற்றிலும் புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா கார்

இந்திய சந்தையில் புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா (Toyota Innova) கார் பல நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா தோற்றம்

முந்தைய தலைமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் சிறப்பான ஏரோடைனிக்ஸ் தோற்ற பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பயன்பாட்டு வாகனமாக இன்னோவா விளங்குகின்றது.
டொயோட்டா இன்னோவா
சரிவகமாக அமைந்துள்ள முகப்பு கிரில் பட்டையான இரு ஸ்லாட்களுக்கு மத்தியில் டொயோட்டா இலச்சினை பதிக்கப்பட்டுள்ளது. இரண்டு குரோம் ஸ்லாட்களை இணைப்பதனை போன்ற கூர்மையான புராஜெக்ட்ர் முகப்பு விளக்கில் பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்றுள்ளது. பானெட் தோற்றம் சிறப்பாகவே அமைந்துள்ளது.
டொயோட்டா இன்னோவா
பக்கவாட்டில் டி பில்லர் புதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தோனேசியா வேரியயண்டில் லோ மாடலில் 16 இஞ்ச் அலாய் வீல் மற்றும் டாப் மாடல்களில் புதிய 17 இஞ்ச் அலாய் வீலை பெற்று விளங்குகின்றது.
பின்புற டெயில்கேட்டில் அகலமான டெயிர் விளக்குகள் பம்பர் வடிவம் போன்றவை மாற்றியைக்கப்பட்டுள்ளது.
புதிய இன்னோவா காரின் நீளம் 4735மிமீ அகலம் 1830மிமீ மற்றும் உயரம் 1795மிமீ ஆகும் . இது தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட 180மிமீ நீளம் , 60மிமீ உயரம் மற்றும் 45மிமீ அகலம் போன்றவை கூடுதலாகும். ஆனால் வீல்பேஸ் 2750மிமீ சமமாக உள்ளது.

இன்னோவா உட்புறம்

2016 இன்னோவா காரின் உட்புறத்தில் 7 மற்றும் 8 இருக்கை ஆப்ஷன்களே தொடர்கின்றது. பிரிமியம் தோற்றத்தினை வழங்கும் வகையில் தரமான உட்புற பொருட்களால் ஃபிட் மற்றும் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
டொயோட்டா இன்னோவா கார்

 

டொயோட்டா இன்னோவா கார்
ஃபேபரிக் அப்ஹோல்ஸ்ட்ரி , சிறப்பான இருக்கை உறை , கேபின் டிரே , ஆம்பியன்ட் லைட்டிங் போன்றவற்றுடன் சிறப்பான மரவேலைப்பாடு மிக்க டேஸ்போர்டு கூல்டு க்ளோவ் பாக்ஸ் , புதிய வடிவ ஸ்டீயரிங் வீல் , ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாடு பொத்தான்கள் , ஸ்மார்ட் கீ , ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் , பூளூடூத் , யூஎஸ்பி தொடர்பு போன்றவை உள்ளது.
டொயோட்டா இன்னோவா கார்

 

டொயோட்டா இன்னோவா கார்

 

டொயோட்டா இன்னோவா கார்
8 இஞ்ச் அகலம் கொண்ட மிக நேர்த்தியான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல நவீன வசதிகள் உள்ளது. ஸ்மார்ட் போன் தொடர்பு , ஜெஸ்ச்சர் , குரல் வழி கட்டுப்பாடு , தானியங்கி கிளைமேட் கட்டுப்பாடு போன்றவை பெற்றுள்ளது,
என்ஜின்
இந்தோனேசியாவில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் புதிய 2.4 லிட்டர் ஜிடி டீசல் என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது. என்ஜினில் இகோ , நார்மல் மற்றும் பவர் என மூன்று விதமான மோட்களில் இயக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்னோவா என்ஜின்

 

டொயோட்டா இன்னோவா கார்
இந்திய சந்தையில் 147 ஹார்ஸ்பவர் மற்றும் 360என்எம் ஆற்றல் வழங்கும் 2.4 லிட்டர் ஜிடி டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

பாதுகாப்பு வசதிகள்

முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் ஏபிஎஸ் மற்றும் இபிடி நிரந்தர அம்சமாகவும் டாப் மாடலில் பக்கவாட்டு , முழங்கால் போன்றவைகளுக்கான காற்றுப்பைகளை பெற்றிருக்கும்.
டொயோட்டா இன்னோவா ஏர்பேக்

விலை

இந்தியாவில் அடுத்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள புதிய டொயோட்டா இன்னோவா காரின் விலை ரூ.13 லட்சத்தில் தொடங்கி ரூ. 21 லட்சத்தில் டாப் வேரியண்ட் விலை இருக்கும்.
டொயோட்டா இன்னோவா கார் கீ
இன்னோவா உட்புறம்

 

டொயோட்டா இன்னோவா கார் ரியர்
டொயோட்டா இன்னோவா கார்
டொயோட்டா இன்னோவா கார்

2017 ரேஞ்ச்ரோவர் எவோக் கன்வெர்டிபிள் அறிமுகம் – LA AUTO SHOW 2015

லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி காரின் கன்வெர்டிபிள் மாடல் LA AUTO SHOW 2015 யில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டின் இறுதியில் ரேஞ்ச்ரோவர் எவோக் கன்வெர்டிபிள் விற்பனைக்கு வருகின்றது.

2017 ரேஞ்ச்ரோவர் எவோக்

உலகின் முதல் சொகுசு கன்வெர்டிபிள் எஸ்யூவி காரான ரேஞ்ச்ரோவர் எவோக் கார் மிகவும் பிரபலமான இவோக் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலின் தோற்றத்தினை பெற்றுள்ளது.

2017 ரேஞ்ச்ரோவர் எவோக்
2017 ரேஞ்ச்ரோவர் எவோக்

மேற்கூரை இல்லாத ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி காரிலும் சாதரன மாடலில் உள்ள அதே என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். 237 ஹெச்பி ஆற்றல் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 178 ஹெச்பி ஆற்றலை வழங்கும் 2.0 லிட்டர் இக்கினியம் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் நிரந்தரமாக இருக்கும்.

மேற்கூறை இல்லையென்றாலும் மிக சிறப்பான கட்டுமானத்தை பெற்றிருக்கும். மேற்கூரை 18 விநாடிகளில் மூடிக்கொள்ளும்.

2016ஆம் ஆண்டின் இறுதியில் சந்தைக்கு வரவுள்ள ரேஞ்ச்ரோவர் எவோக் கன்வெர்டிபிள் எஸ்யூவி இந்தியாவிலும் விறுபனைக்கு வரவுள்ளது.

2017 ரேஞ்ச்ரோவர் எவோக்
2017 ரேஞ்ச்ரோவர் எவோக்
2017 ரேஞ்ச்ரோவர் எவோக்

ஃபியட் 124 ஸ்பைடர் அறிமுகம் – LA AUTO SHOW 2015

ஃபியட் 124 ஸ்பைடர் கன்வெர்டிபிள் கார் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வந்துள்ள ஃபியட் 124 ஸ்பைடர் காரை பின்னின்ஃபாரினா நிறுவனத்தின் வடிவ தாத்பரியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபியட் 124 ஸ்பைடர்

2016ம் ஆண்டின் மத்தியில் சர்வதேச அளவில் விற்பனைக்கு வரவுள்ள ஃபியட் 124 ஸ்பைடர் மாடலை 1966 ஃபியட் 124 ஸ்பைடர் மாடலின் 50வது வருட கொண்டாடத்தை முன்னிட்டு மஸ்டா மியடா ஸ்பைடர் காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அபார்த் பிராண்டில் உள்ள 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 160ஹெச்பி ஆற்றல் மற்றும் 241என்எம் டார்க் தரும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

கிளாசிக் தோற்றத்தில் மிக நேரத்தியாக அமைந்துள்ள ஃபியட் 124 ஸ்பைடர் காரில் உள்ள முகப்பு விளக்குகள் சிறப்பாக உள்ளது. அறுங்கோண வடிவ கிரில் பனி விளகுகள் , மிக நீளமான பானெட் போன்றவற்றை பெற்றுள்ளது. பின்புறத்தில் எல்இடி விளக்குகளை பெற்றுள்ளது.

உட்புறத்தில் மிக சிறப்பான கட்டுமானத்தை பெற்றுள்ள 124 ஸ்பைடர் காரில் பிரிமியம் சாஃபட் டச் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பினை பெற்றிருக்கும்.

சிவப்பு , வெள்ளை , கருப்பு , கிரே , டார்க் கிரே மற்றும் பரான்ஸ் என 6 வித நிறங்களில் ஃபியட் 124 ஸ்பைடர் வரவுள்ளது.

ஃபியட் 124 ஸ்பைடர் காரில் கிளாசிகா மற்றும் லூசா என இரண்டு வேரியண்டில் வரும் மேலும் விற்பனைக்கு வரும் பொழுது ஃபியட் 124 ஸ்பைடர் காரில் பிரைமா எடிசியோனா லூசா என்ற பெயரில் நீல வண்ணத்தில் சிறப்பு பதிப்பும் வரவுள்ளது. இந்த சிறப்பு பதிப்பில் 124 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

வரும் 2016ம் ஆண்டின் இறுதியில் சர்வதேச அளவில் விற்பனைக்கு வரவுள்ள ஃபியட் 124 ஸ்பைடர் இந்தியா வருவதற்க்கான வாய்ப்புகளும் உள்ளது.

Fiat 124 Spider Photo Gallery

Fiat 124 Spider debut at LA Auto Show 2015

  

புகாட்டி சிரோன் சூப்பர் காரின் என்ஜின் விபரம் – Bugatti Chiron details

புகாட்டி வேரான் காருக்கு மாற்றாக வரவுள்ள புகாட்டி சிரோன் காரின் ஆற்றல் விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  புகாட்டி சிரோன் காரின் வேகம் மணிக்கு 500கிமீ ஆக இருக்கலாம்.

புகாட்டி சிரோன்

தூபாயில் நடந்த சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்காக நடந்த அறிமுகத்தின் பொழுது தெரிவிக்கப்பட்ட முக்கிய விபரங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளது.

வேரான் காரில் பொருத்தப்பட்டிருந்த அதே W16 8 லிட்டர் என்ஜினே சிரான் காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் முந்தைய மாடலை விட 300பிஎஸ் ஆற்றல் வரை கூடுதலாக வெளிப்படுத்தி 1500 பிஎஸ் ஆற்றலை தரவுள்ளதாம். மேலும் இதன் டார்க் 1500என்எம் ஆகும். இதில் 7 வேக டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

0 முதல் 100 கிமீ வேகத்தினை புகாட்டி சிரோன் ஹைப்பர் கார் வெறும் 2.3 விநாடிகளில் எட்டிவிடும். 0 முதல் 300 கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு வெறும் 15 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். மேலும் இதன் புகாட்டி சிரோன் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 500கிமீ ஆகும்.

மேலும் முன்பக்கத்தில் 20 இஞ்ச் வீலும் பின்புறத்தில் 21 இஞ்ச் வீலும் பெற்றிருக்கும். இதில் மிச்செலின் பைலட் ஸ்போர்ட் PAX டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும்.  முன்பக்க டிஸ்க் 420மிமீ மற்றும் பின்பக்க டிஸ்க் 400மிமீ விட்டத்தினை பெற்றிருக்கும். இதுதவிர புகாட்டி சிரோன் காரின் என்ஜினை குளிர்விக்க 15 ரேடியேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளதாம்.

புகாட்டி சிரோன்

500 புகாட்டி சிரோன் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள நிலையில் இதுவரை 120 கார்களுக்கு முன்பதிவு நடந்துள்ளதாம். வரும் 2016 மார்ச்  ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அதிகார்வப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புகாட்டி சிரோன்

Bugatti Chiron supercar engine details

source

சக்திவாய்ந்த டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி விரைவில்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி காரில் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் மாடல் விரைவில் வரவுள்ளது.  வேரிகோர் 400 என்ஜினை டாடா சஃபாரி ஸ்ட்ராம் பெற்றிருக்கும்.

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி

மேம்படுத்தப்பட்ட புதிய டாடா சஃபாரி ஸ்ட்ராம் சில மாதங்களுக்கு முன்னதாக விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் வரவுள்ள சக்திவாய்ந்த  சஃபாரி ஸ்ட்ராம் காரில் ஆற்றல் மற்றும் கியர்பாக்ஸ் போன்றவற்றில் மாற்றம் தரப்பட்டுள்ளது. வேரிகோர்  400 டாப் வேரியண்டான VX யில் மட்டுமே கிடைக்கும்.

154.8 பிஹெச்பி ஆற்றலை வழங்கும் வேரிகோர் 400 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்ட உள்ளது. மேலும் இதன் டார்க் 400 என்எம் ஆகும். இதில் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இருக்கும்.

tata safari strom dashboard

LX  மற்றும் EX வேரியண்டில் 2.2 லிட்டர் Varicor டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 148பிஎச்பி ஆகும். இதன் முறுக்கு விசை 320என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க ; மேம்படுத்தப்பட்ட டாடா சஃபாரி ஸ்ட்ராம்

மற்றபடி மேம்படுத்தப்பட்ட டாடா சஃபாரி ஸ்ட்ராம் காரிலிருந்த மாற்றங்களை கொண்டுள்ளது. இன்னும் சில தினங்களில் சக்திவாயந்த டாடா சஃபாரி ஸ்ட்ராம் விற்பனைக்கு வரவுள்ளது.

Tata Safari Storme to get powerful engine