டாடா ஜீக்கா கார் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டாடா ஜீக்கா ஹேட்ச்பேக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  வரும் ஜனவரி 2016 யில் டாடா ஜீக்கா கார் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய  டாடா ஸீக்கா கார் ஹாரிஸன் நெஸ்ட் தளத்தில் இண்டிகா காரை அடிப்படையாக கொண்டதாகும்.Tata-Zica ஜீக்கா

இணையத்தில் டாடா ஜீக்கா காரின் படங்கள் வெளியானதை தொடர்ந்து அதிகார்வப்பூர்வமான படங்களை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. டாடாவின் புதிய தேன்கூடு கிரிலுக்கு மத்தியில் டாடா லோகோ பதிக்கப்பபட்டுள்ளது. ஸெஸ்ட் மற்றும் போல்ட் கார்களை தொடர்ந்து அதே டிசைன் தாத்பரியத்தில் வரவுள்ள ஜீக்கா சிறப்பான தரத்தினை பெற்ற காராகவும் விளங்கும்.

டாடா ஸீக்கா

முகப்பில் சிறப்பான கிரிலுடன் நேர்த்தியாக அமைந்துள்ள முகப்பு விளக்குகளில் கருப்பு நிற கிளஸ்ட்டர் மற்றும் பனி விளக்குகள் அறையில் குரோம் பூச்சீனை பெற்று விளங்குகின்றது.  பக்கவாட்டில் உள்ள கோடுகள் சிறப்பாக அமைய பெற்றுள்ளது. தேலும் அலாய் வீல்கள் பொருத்தமாக அமைந்துள்ளது. பின்புற தோற்றமும் சிறப்பாக அமைந்துள்ளது. டாடா மோட்டார்சின் டிசைன் வடிவங்கள் உயர்வு பெற்றிருக்கின்றது. ஆனாலும் ஹூண்டாய் கார்களின் சாயலை தழுவியது போல உள்ளது.

 

Tata-Zica-interior-snapped-uncovered

உட்புறத்தில் பல நவீன அம்சங்களை பெற்ற காராக வரவுள்ள ஜீக்கா விளங்கும். இரட்டை வண்ண கலவை இன்டிரியருடன் இரண்டு பிரிவு கொண்ட  வட்ட வடிவ இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், பல் வசதிகளை வழங்கும் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, பூளூடூத் , யூஎஸ்பி தொடர்புகளை பெற்று விளங்கும்.

முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி போன்றவற்றை பேஸ் வேரியண்டினை தவிர்த்து மற்றவையில் இருக்கலாம்.

ஸீக்கா காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.05 லிட்டர் புதிய டீசல் என்ஜின் ஆப்ஷனை பெற்றிருக்கும். மேலும் ஜீக்கா டீசல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 25 கிமீ தொடலாம் என தெரிகின்றது.

 

Tata-Zica-rear

மேலும் தற்பொழுது வெளிவந்துள்ள கூடுதல் படங்களில் டாக்சி சந்தைக்கு ஏற்ற கருப்பு பம்பர் , கைப்பிடி , ஸ்டீல் வீல் கொண்ட மாடலும் வந்துள்ளது. டாடா இன்டிகா காருக்கு மாற்றாக ஜீக்கா நிலைநிறுத்தப்படலாம்.

டாடா ஜீக்கா காரின் போட்டியாளர்கள் ஹூண்டாய் ஐ10 , மாருதி செலிரியோ போன்ற கார்கள் விளங்கும் . வரும் ஜனவரி முதல் வாரத்தில் டாடா ஜீக்கா 3.75 லட்சத்தில் விற்பனைக்கு வரலாம்.

Tata Zica hatchback car images

பட உதவி ; encartor facebook , autosarena

ஹூண்டாய் 4 மில்லியன் கார் விற்பனை சாதனை

இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 19 ஆண்டுகளில் 4 மில்லியன் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. சான்ட்ரோ கார் மூலம் இந்திய சந்தையில் நுழைந்த ஹூண்டாய் விற்பனையில் இரண்டாமிடத்தில் உள்ளது.

க்ரெட்டா

சென்னை அருகே அமைந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்தில் இயான் கிரான்ட் ஐ10 , எலைட் ஐ20 , ஐ20 ஏக்டிவ் , எக்ஸ்சென்ட் , வெர்னா , எலன்ட்ரா , க்ரெட்டா , சான்டா ஃபீ போன்ற கார் மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஃப்ளூடியிக் டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்படும் ஹூண்டாய் கார்கள் சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. புதிதாக விற்பனைக்கு வந்த க்ரெட்டா எஸ்யூவி 70000 முன்பதிவுகளை கடந்துள்ளது.

40 லட்சம் கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதை குறித்து ஹூண்டாய் இந்திய தலைவர் YK KOO கூறுகையில் இயான் முதல் சான்டா ஃபீ வரை 10 கார்களும் மிக சிறப்பான மாடலாக இந்திய சந்தையில் உள்ளது. ஹூண்டாய் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் மற்றும் பிரிமியம் கார் தயாரிப்பாளர் ஆகும். வரும் காலத்தில் வளர்ச்சிக்கு ஏற்ப சிறப்பான மாடல்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு தர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எலைட் ஐ 20 விற்பனை சாதனை

இந்தியாவில் விற்பனையாகும் சிறப்பான பிரிமியம் ஹேட்ச்பேக் காரான ஹூண்டாய் எலைட் ஐ20 1,50,000 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
ஹூண்டாய் எலைட் ஐ20
2015ம் வருடத்தின் சிறந்த கார் என்ற விருதினை பெற்றுள்ள எலைட் ஐ20 கடந்த 15 மாதங்களில் 66 % பிரிமியம் ஹேட்ச்பேக் சந்தையை பெற்றுள்ளது.
ஹூண்டாய் இந்திய பிரிவு விற்பனை தலைவர் ராக்கேஷ் ஶ்ரீவத்ஸாவா தெரிவிக்கையில் எதிர்பார்க்காத வகையில் மிக சிறப்பான வரவேற்பினை இந்திய வாடிக்கையாளர்கள் எலைட் ஐ20 காருக்கு தந்துள்ளனர். சிறந்த காராக தேர்வு செய்த வாடிக்கையாளர்கள் , சேனல் பார்டனர் மற்றும் ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

Hyundai achieves 4 Million Domestic Sales in India

டிவிஎஸ் அப்பாச்சி 200 ஸ்பை படங்கள் விபரம்

வரவிருக்கும் புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கின் ஸ்பை படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளது. தீவர சோதனை ஓட்டத்தில் உள்ள அப்பாச்சி 200 பைக்கில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

டிவிஎஸ் டார்கன் கான்செப்ட்

டிவிஎஸ் டார்கன் கான்செப்ட் அடிப்படையிலே பெரும்பாலான பாகங்களை பெற்றுள்ளது தெளிவாக சோதனை படங்களில் தெரிகின்றது. அப்பாச்சி 200 பைக்கில் உள்ள டிஜிட்டல் கன்சோல் மீட்டரில் ரேஸ் ஆன் என்ற எழுத்துடன் அமைந்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 ஸ்பை

கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் , சர்வீஸ் ரிமைன்டர் , டிஜிட்டர் கடிகாரம் , எரிபொருள் இன்டிகேட்டர் , ஸ்பீடோமீட்டர் , ஓடோமீட்டர் மற்றும் டிரிப் மீட்டர் போன்றவை ஒரே கன்சோலில் அமைந்துள்ளது.

ஸ்போர்ட்டிவ் ஸ்டைலுடன் விளங்கும் அப்பாச்சி 200 ஆர்டிஆர் பைக்கில் இரட்டை பிரிவு இருக்கைகள் மிகவும் ஸ்டைலாக உள்ளது. கிராப் ரெயில் பின்பகுதியிலிருந்து முன்பாக W  வடிவில் அமைந்துள்ளது. ட்வின் ஸ்போக் அலாய் வீல் , முன் மற்றும் பின் புறங்களில் சிங்கிள் டிஸ்க் பிரேக் போன்றவை பெற்றுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 ஸ்பை

டிவிஎஸ் அப்பாச்சி 200 ஸ்பை
டிவிஎஸ் அப்பாச்சி 200 ஸ்பை

27 பிஹெச்பி ஆற்றலை தரும் என்ஜின் 200சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதில் ஏபிஎஸ் பிரேக்கும் இருக்கும். வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் விற்பனைக்கு வரலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கின் விலை ரூ. 1.30 லட்சத்திற்க்குள் ஆன்ரோடு விலை இருக்கும்.

TVS Apache Spy Photos

imagesource : Anoop Radhakrishnan on Facebook

ஹோண்டா சிபிஆர் 150ஆர் , சிபிஆர் 250ஆர் விற்பனைக்கு வந்தது

ஹோண்டா சிபிஆர் 150ஆர் மற்றும் ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்குகளின் விற்பனைக்கு வந்துள்ளது. ரெவ்ஃபெஸ்ட் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வண்ணம் கொண்ட சிபிஆர் 150ஆர் , சிபிஆர் 250ஆர் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன.

ஹோண்டா சிபிஆர் 150ஆர்
ஹோண்டா சிபிஆர் 150ஆர்
வேறு எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல் புதிய வண்ணங்கள் மற்றும் பாடி கிராபிக்ஸ் மாற்றங்களை மட்டுமே பெற்று விளங்குகின்றது. சர்வதேச அளவில் இரண்டுமே இரட்டை வண்ண விளக்குகளுடன் விற்பனையில் உள்ளது.
ஹோண்டா சிபிஆர் 250ஆர்

ஹோண்டா சிபிஆர் 150ஆர்

சிபிஆர் 150ஆர் பைக்கில் 18.28பிஹெச்பி ஆற்றல் மற்றும் 12.66 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 149சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
ஹோண்டா சிபிஆர் 150ஆர் பைக்கின் வேகம் மணிக்கு 109கிமீ ஆகும். நீலம், சிவப்பு மற்றும் பச்சை என மூன்று நிறங்களில் கிடைக்கும்.
ஹோண்டா சிபிஆர் 150ஆர்

ஹோண்டா சிபிஆர் 250ஆர்

சிபிஆர் 250ஆர் பைக்கில் 26.15பிஹெச்பி ஆற்றல் மற்றும் 22.9 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 249சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கின் வேகம் மணிக்கு 135கிமீ ஆகும். கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை என மூன்று நிறங்களில் கிடைக்கும்.
ஹோண்டா சிபிஆர் 250ஆர்

ஹோண்டா சிபிஆர் 150ஆர் பைக் விலை

சிபிஆர் 150ஆர் – ரூ. 1,40,269

ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் விலை

சிபிஆர் 250ஆர் – ரூ. 1,81,488
சிபிஆர் 250ஆர் – ரூ. 2,13,716 (ABS)
{ அனைத்தும் சென்னை ஆன்ரோடு விலை }
ஹோண்டா சிபிஆர் 150ஆர்
ஹோண்டா சிபிஆர் 250ஆர்
New Honda CBR 150R , CBR 250R Chennai On-road price details

சென்னை ஆட்டோ ஓட்டுநரின் கின்னஸ் சாதனை

சென்னை ஆட்டோ ஓட்டுநர் ஜெகதீஸ் இருசக்கரங்களில் ஆட்டோவை இயக்கி கின்னஸ் சாதனை 2016 புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 4 வருடங்களுக்கு பிறகு எம்.ஜெகதீஸ் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

 ஆட்டோ ஓட்டுநர் ஜெகதீசன்
ஜெகதீசன் இயல்பாகவே சிறு வயது முதலே ஸ்ட்ன்ட் செய்வதில் ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார். முழு நேர ஆட்டோ ஓட்டுநராக மாறிய பின்னர் ஆட்டோவில் ஸ்டன்ட் செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளார்.
பகல் நேரங்களில் ஸ்டன்ட் செய்யாமல் இரவில் காலியாக உள்ள சாலைகளில் பயற்சி செய்துள்ளார். பல நாட்களின் பயற்சிக்கு பின்னர் கின்னஸ் சாதனைக்காக முயற்சி செய்ததில் கடந்த பிப்ரவரி 2011ம் ஆண்டில் மும்பையிலுள்ள ஜூகு விமான ஓடுதளத்தில் கின்னஸ் அதிகாரிகள் முன் இந்த சாதனையை செய்துள்ளார்.

 ஆட்டோ ஓட்டுநர் ஜெகதீசன்
80 கிமீ வேகத்தில் வீலை தூக்குவதனால் சிறப்பாக செயல்பட முடிகின்றதாம். இருசக்கரங்களில் இயக்கும்பொழுது வாகனத்தின் முழு கன்ட்ரோல் ஸ்டீயரிங்கில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கின்னஸ் சாதனை நிபந்தனைகள் ;
  • குறைந்தபட்சம் 1 கிமீ இருசக்கரங்களில் ஓட்ட வேண்டும்
  • ஒருமுறை கூட கீழே இறக்காமல் இயக்க வேண்டும்.
ஜெகதீசன் சாதனை
சுமார் 2.2 கிமீ இரு சக்கரங்களிலே இயக்கி கின்னஸ் சாதனை செய்துள்ளார்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் விற்பனைக்கு வந்தது

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட் ரூ.15.64 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. FWD மற்றும் AWD என இரண்டிலும் மொத்தம் 3 வேரியண்ட்கள் வந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500

க்ரெட்டா ஆட்டோமேட்டிக் காருக்கு போட்டியாக மிக சவாலான விலையில் 3 விதமான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் வந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை ஆட்டோமேட்டிக் மாடலும் பெறும்.

140பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் பயன்படுத்தபட்டுள்ளது. இதன் டார்க் 330என்எம் ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

மெனுவல் கியர்பாக்ஸ் மாடலை விட 13 % மைலேஜ் குறைவாக எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மைலேஜ் லிட்டருக்கு 13.85 கிமீ (ARAI) கிடைக்கும்.

சாங்யாங் டிவோலி காரில் பொருத்தப்பட்டிருக்கும் ஜப்பானிய ஏசின் செகீ  நிறுவனத்தின் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் ஸ்கார்ப்பியோ காரில் ஆஸ்திரேலியாவின் டிஎஸ்ஐ கியர்பாக்ஸ் பயன்படுத்தபட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக்

W8  மற்றும்  W10 டாப் வேரியண்டில் ஃபிரென்ட் வீல் டிரைவ் (FWD) மற்றும் ஆல் வீல் டிரைவ் (AWD) ஆப்ஷனிலும் வந்துள்ளது.  W10 டாப் வேரியண்டில் மெனுவல் வேரியண்டில் உள்ள அம்சங்களான 6 காற்றுப்பைகள் , சூரிய மேற்கூரை போன்றவற்றை பெற்றுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் ஆட்டோ கியர்பாக்ஸ்  மாடல்களுக்கு ரூ.58 கோடி முதலீடு செய்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் விலை விபரம்

XUV500 W8 FWD : ரூ.15.64 லட்சம்

XUV500 W10 FWD : ரூ.16.49 லட்சம்

XUV500 10 AWD : ரூ.17.55 லட்சம்

ஹூண்டாய் டீயூசான் எஸ்யூவி இந்தியா வருகை ?

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காரின் வெற்றியை தொடர்ந்து ஹூண்டாய் டீயூசான் எஸ்யூவி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

Hyundai Tucson SUV

முதற்கட்டமாக முழுதும் கட்டமைக்கப்பபட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள ஹூண்டாய் டீயூசான் வரவேற்பினை பொறுத்து வரும் காலத்தில் இந்தியாவிலே உற்பத்தி செய்ய வாய்ப்புகள்  உள்ளது. புதிய தலைமுறை டீயூசான் கார் வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள நிலையில் க்ரெட்டா மற்றும் சான்டா ஃபீ மாடல்களுக்கு இடையில் டியூஸான் நிலை நிறுத்தப்பட உள்ளது.

க்ரெட்டா மற்றும் சான்டா ஃபீ கார்களை போன்றே ஃபூளூயிட் 2.0 வடிவ தாத்பரியங்களை கொண்டு உருவாகப்பட்டுள்ள ட்யூசான் காரில் அறுங்கோண வடிவ கிரிலுடன் , எல்இடி முகப்பு விளக்குகள் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் போன்றவற்றுடன் பிரிமியம் வசதிகளுடன் விளங்குகின்றது.

சர்வதேச அளவில் 114 பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 1.7 லிட்டர் மற்றும் 182 பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகின்றது. இதில் 6 வேக மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

Hyundai Tucson SUV

ரூ.19.50 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் ஹூண்டாய் டீயூசான் காருக்கு போட்டியாக ஹோண்டா சிஆர் வி விளங்கும்.

Hyundai Tucson SUV

Hyundai Tucson SUV
Hyundai Tucson SUV to launch in India

ஸ்விஃப்ட் , டிசையர் கார்களில் ஏபிஎஸ் மற்றும் ஏர்பேக் : பேஸ் வேரியண்ட்

மாருதி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி டிசையர் கார்களின் பேஸ் வேரியண்டில் ஆப்ஷனலாக ஏபிஎஸ் மற்றும் ஏர்பேக் போன்ற பாதுகாப்பு அம்சங்களை இணைத்துள்ளது.

மாருதி ஸ்விஃப்ட்

பாதுகாப்பான கார்களை விற்பனை செய்யும் நோக்கில் பேஸ் வேரியண்டிலும் மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளது. ஸ்விஃப்ட மற்றும் டிசையர் கார்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிக பிரபலமான கார்களாகும்.

முன்பக்கத்தில் இரட்டை காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் போன்றவை எல்லா வேரியண்டிலும் கிடைக்கின்றது. மாதம் சராசரியாக 17 கார்கள் விற்பனை ஆகின்றது.

2008ம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள டிசையர் செடான் கார் மிக சிறப்பான எண்ணிக்கையை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது.

மாருதி ஸ்விஃப்ட் விலை

LXi (O) – ரூ.4.90 லட்சம்
LDi (O) – ரூ.6.04 லட்சம்
VXi (O) – ரூ. 5.60 லட்சம்
VDi (O) – ரூ.6.43 லட்சம்

மாருதி டிசையர் விலை

LXi (O) – ரூ.5.40 லட்சம்
LDi (O) – ரூ.6.19 லட்சம்
VXi (O) – ரூ. 6.14 லட்சம்
VXi AT (O) – ரூ. 6.19 லட்சம்
VDi (O) – ரூ.7.06 லட்சம்

{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை }

மாருதி டிசையர்
Swift and DZire, now with added safety features

மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் நாளை முதல்

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட் நாளை விற்பனைக்கு வரவுள்ளது. ஸ்கார்ப்பியோ காரில் உள்ள அதே 6 வேக ஆட்டோமேட்டிக் எக்ஸ்யூவி500 காரிலும் இடம் பெற உள்ளது.

Mahindra XUV500 Automatic

மெனுவல் எக்ஸ்யூவி 500 காருக்கும் ஆட்டோமேட்டிக் மாடலுக்கும் ரூ.50000 வரை விலை கூடுதலாக இருக்கலாம். ஸ்கார்ப்பியோ காரில் உள்ளது போலவே டிஎஸ்ஐ ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும்.

140 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 330 என்எம் ஆகும். இதில் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் விற்பனையில் உள்ளது.

ஆட்டோமேட்டிக் மாடல் 2WD அல்லது 4WD ஆப்ஷனிலோ அல்லது இரண்டிலுமே வர வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலம் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் மாடலுக்கு போட்டியாக அமையும்.

Mahindra XUV500 Automatic to launch tomorrow

உலகின் நீளமான சைக்கிள் : கின்னஸ் சாதனை

உலகின் மிக நீளமான சைக்கிளை வடிவமைத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இணைந்து சாதனை புடைத்துள்ளனர். டச்சின் மிஜி வேன் மேர்ஸ் வெர்க்புலோக் என்கின்ற சைக்கிளிங் அமைப்பு தான் வடிவமைத்துள்ளது.

117 அடி  5 இஞ்ச் நீளம் கொண்டுள்ள உலகின் மிக நீளமான சைக்கிளில் இரண்டு சங்கரங்களில் மட்டுமே இயங்குகின்றது. இரண்டு நபர்களால் இயக்கும் வகையில் மிக இலகுவான எடையில் உறுதியான பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சைக்கிளின் முன்புறத்தில் கைப்பிடியை கட்டுப்படுத்த ஒருவரும் , பின்புறத்தில் பெடல் செய்ய ஒருவரும் இருந்தால் போதுமானதாகும்.
இந்த சைக்கிள் மிக நீளமானதாக இருந்தாலும் பெடல் செய்வதற்க்கு மிக எளிமையாகவும் , சைக்கிளின் நிலைப்பு தன்மையிலும் எவ்வித பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 கின்னஸ் சாதனை புத்தகத்தில் உலகின் மிக நீளமான சைக்கிளாக இடம் பெற்றுள்ளது.