டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் சிறப்பு பதிப்பு அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மிக பிரபலமான ஜூபிடர் ஸ்கூட்டரின் முதல் வருடத்தினை கொண்டாடும் வகையில் டிவிஎஸ் ஜூபிடர் சிறப்பு பதிப்பினை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர்

ஜூபிடர் சிறப்பு பதிப்பில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலே ஸ்கூட்டர்கள் தயாரிக்க உள்ளனர். புதிய பிரவுன் வண்ணத்தில் வந்துள்ள பதிப்பில் உட்ப்புறத்தில் பியேஜ் வண்ணத்தினை கொண்டுள்ளது மேலும் சிறப்பு பதிப்பு என முத்திரையுடன் கிடைக்கும்.

டியூரோ கூல் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளதால் சூரிய வெப்பத்தினை தாங்கும் வகையில் அதாவது அதிகப்படியான வெப்பத்தினை தராத வகையில் கூலாக உள்ள இருக்கைகள் ஆகும்.

டிவிஎஸ் ஜூபிடர் விலை ரூ. 48, 925 (ex-showroom delhi)

டாடா டி1 பிரைமா டிரக் பந்தயம் 2015

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா டி1 பிரைமா டிரக் பந்தயம் வரும் மார்ச் 15ல் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் இரண்டாம் வருட டிரக் பந்தயம் நடைபெற உள்ளது.

Tata T1 Prima Truck racing logo

டிரக் பந்தயத்திற்க்கு ஏற்ற வகையில் 12 டாடா பிரைமா டிரக்குகளை உருவாக்கியுள்ளனர். 6 அணிகள் கலந்துகொள்ளும் டிரக் பந்தயத்தில் உலயளவில் முன்னிலை உள்ள வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

டாடா பிரைமா 4038எஸ் மாடலில் 8.9 லிட்டர் கும்மின்ஸ் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 370பிஎச்பி ஆகும். 8 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். பிரைமா டிரக்குகளின் உச்சகட்ட வேகம் மணிக்கு 130கிமீ ஆகும். கடந்த ஆண்டை விட 20கிமீ வேகத்தினை கூட்டியுள்ளனர். பந்தயத்திற்க்கு ஏற்ற வகையில் ஏரோடைனமிக்ஸ் நுட்பத்தினை டாடா புகுத்தியுள்ளது.

டாடா டி1 பிரைமா டிரக்

பிரைமா டிரக்கு பந்தயத்தில் பங்கேற்க்கும் அணிகள்

1. கேஸ்ட்ரால் வெக்டான் குழு

2. கும்மின்ஸ் குழு

3. டாடா மோட்டார்ஸ்போர்ட்ஸ் குழு

4. டீலர் வேரியர்ஸ் குழு

5. டேர்டெவில்ஸ் டீலர் குழு

6. அலையட் பாட்னர்ஸ் குழு

மொத்தம் 6 அணிகள் பங்கு பெற உள்ளன.

FIA (பெடரேஷன் இன்டர்னேஷனல் de l ‘ஆட்டோமொபைல்) மற்றும் இந்திய மோட்டார் விளையாட்டு கிளப் (FMSCI) இணைந்து டாடா டி1 பிரைமா டிரக் பந்தயத்தினை ஏற்பாடு செய்துள்ளனர்

ஆல்டோ காருக்கு போட்டியாக நானோ தளத்தில் டாடா அதிரடி

நானோ கார் எதிர்பார்த்த விற்பனையை எட்டாத நிலையில் நானோ காரின் தளத்தில் மாருதி ஆல்டோ காரருக்கு போட்டியாக புதிய சிறிய கார் டாடா மோட்டார்ஸ் உருவாக்கி வருகின்றது.

நானோ காரின் தளத்தில் நானோ காரை விட மாறுபட்ட புதிய சிறிய ரக காரினை பெலிக்கன் என்ற பெயரில் வடிவமைத்து வருகின்றதாம். இந்த கார் ஆல்டோ மற்றும் இயான் கார்களுக்கு நேரடியான சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நானோ கார்

1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 800சிசி டீசல் என இரண்டிலும் சிறிய ரக காரினை வடிவமைக்க உள்ளது. நானோ காரை விட கூடுதலான விலையில் இருக்கும் இந்த காரினை மாதம் 2500 கார்கள் விற்பனை இலக்காக வைத்துள்ளது.

குஜராத்தில் உள்ள சனந்த் ஆலையில் இந்த புதிய காரினை தயாரிக்க உள்ளனர். ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை தயாரிக்க கூடிய ஆலையில் மிக குறைவான அளவிலே நானோ கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஐஷர் புரோ 6000 சீரிஸ் டிரக்குகள் அறிமுகம்

வால்வோ மற்றும் ஐஷர் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் வால்வோ – ஐஷர் டிரக் நிறுவனத்தின் புதிய புரோ 6000 சீரிஸ் கனரக சரக்கு வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளனர்.

புரோ 6031 மற்றும் 6025 ஹாலேஜ் டிரக்குகள் மேலும் 6025T டிப்பர் டிரக் என மொத்தம் மூன்று டிரக்குகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஐஷர் டிரக்

ஐஷர் புரோ 6000 சீரிஸ் டிரக்

புரோ 6031 ஹாலேஜ் டிரக் (8×2) 31டன் ஜிவிடபிள்யூ(GVW), 6025 ஹாலேஜ் டிரக் (6×2) 25டன் ஜிவிடபிள்யூ(GVW) மற்றும் 6025டி டிப்பர் டிரக்குகளில் விஇடிஎக்ஸ் 5 மற்றும் விஇடிஎக்ஸ்8 என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் ஆற்றல் 210 பிஎச்பி மற்றும் டார்க் 825என்எம் வெளிப்படுத்தும். 6 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

ஐஷர் புரோ 6000 சீரிஸ் டிரக்

புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி அறிமுகம்

சாங்யாங் கார் நிறுவனத்தின் ரெக்ஸ்டன் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை தென்கொரியாவில் மஹிந்திரா சாங்யாங் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

மஹிந்திரா குழுமத்தின் கீழ் செயல்பட துவங்கிய பின்னர் சாங்யாங் மோட்டார்ஸ் டிவோலி காம்பெக்ட் எஸ்யூவி காரை அறிமுகம் செய்தது. அதனை தொட்ந்து தற்பொழுது சந்தையில் விற்பனையில் உள்ள ரெக்ஸ்டன் எஸ்யூவி மாடலை மேம்படுத்தி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

சாங்யாங் ரெக்ஸ்டன்

மேம்படுத்தப்பட்டுள்ள ரெக்ஸ்டன் காரில் வெளிப்புறத்தில் புதிய செங்குத்தான கிரில்கள் , புராஜெக்டர் முகப்பு விளக்குடன் பகல் நேர எல்இடி விளக்குகள்  மற்றும் பின்புற விளக்குகளில் மாற்றம் பெற்றுள்ளது. மேலும் புதிய வடிவ ஆலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது.

உட்புறத்தில் புதிய சென்டரல் கன்சோல், எல்இடி கேபின் விளக்குகள் , இருக்கையை சூடாக்கும் வசதி, புதிய ஸ்டீயரிங் வீல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

சாங்யாங் ரெக்ஸ்டன்

என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

இந்தியாவிலும் மேம்படுத்தப்பட்ட ரெக்ஸ்டான் மாடல் விரைவில் மஹிந்திரா விற்பனைக்கு வரவுள்ளது.

ஹோண்டா பிரியோ மற்றும் அமேஸ் புதிய வேரியண்ட்கள்

ஹோண்டா கார் நிறுவனத்தின் பிரியோ மற்றும் அமேஸ் கார்களில் புதிய டாப் வேரியண்ட்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அமேஸ் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல் கிடைக்கும். பிரியோ காரில் பெட்ரோல் மாடல் மட்டுமே கிடைக்க பெறும்.

பிரியோ விஎக்ஸ்

புதிய பிரியோ காரின் டாப் வகையில் புதிய கருப்பு நிற உட்டப்புறத்தினை பெற்றுள்ளது. மேலும் ஏவிஎன் பேக்கேஜ் சேர்க்கப்பட்டுள்ளது. பிரியோ மெனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என இரண்டிலும் கிடைக்கும்.
ஹோண்டா பிரியோ

அமேஸ் விஎக்ஸ் (ஒ)

புதிய அமேஸ் டாப் வேரியண்டில் விஎக்ஸ்(ஒ) ஏவிஎன் பேக்கேஜ் அதாவது ஆடியோ – வீடியோ நேவிகேஷன் சிஸ்டம் பொருத்தியுள்ளர்.  மடக்கி விரியும் பின்புறம் பார்க்கும் கண்ணாடிகள் பொருத்தியுள்ளனர், டீஃபோகர் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வசதிகள் எஸ்எக்ஸ் வேரியண்டிலும் கிடைக்கும்.

முதல் நிலை மாடலாக விஎக்ஸ் (ஒ) விளங்கும்.

மேலும் இந்த புதிய டாப் வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும்.

ஹோண்டா அமேஸ்

ஆடியோ – வீடியோ நேவிகேஷன்

ஏவிஎன் பேக்கேஜ் என்றால் 15.7 செமீ தொடுதிரையை பெற்றிருக்கும். செயற்கைகோள் உதவியுடன் வழிகாட்டும் வசதி பெற்றுள்ளது. ஆடியோ, வீடியோ, யூஎஸ்பி இணைப்பு, ஆக்ஸ் போர்ட், பூளூடூத், எஃப்எம், எம்பி3 போன்ற வசதிகளை பெற்றிருக்கும்.

ஹோண்டா பிரியோ கார் விலை

பிரியோ விஎக்ஸ் – ரூ. 5.99 லட்சம் (மெனுவல்)
பிரியோ விஎக்ஸ் – ரூ. 6.78 லட்சம் (ஆட்டோமெட்டிக்)

ஹோண்டா அமேஸ் கார் விலை

அமேஸ் விஎக்ஸ் (ஒ) – ரூ. 7.32 லட்சம் (பெட்ரோல்)
அமேஸ் விஎக்ஸ் (ஒ) – ரூ. 8.20 லட்சம் (டீசல்)
ex-showroom delhi)
Honda Brio and Amaze get new top variants

ப்ளாப்ளா கார் சேவை : உங்கள் கார்களை பகிர்ந்துகொள்ள

பிரான்சு நாட்டைச் சேர்ந்த ப்ளாப்ளா கார் நிறுவனம் உங்கள் கார்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் சேவையை வழங்கி வருகின்றது. ப்ளாப்ளா மூலம் காரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது ?

10 லட்சத்திற்க்கு அதிகமான பயனர்களை கொண்டு 13 நாடுகளில் செயல்பட்டு வரும் ப்ளாப்ளா நிறுவனம் இந்தியாவிலும் தன் சேவையை தொடங்க உள்ளது.
உங்களுடைய காரில் டெல்லியில் இருந்து ஆக்ரா செல்லும் கார் உரிமையாளர் மீதமுள்ள கார் இருக்கைகளை ஆக்ரா செல்லும் நபரிடம் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் கார் உரிமையாளருக்கு வருமானமும் கிடைக்கும். பயணியும் சிரமமில்லாமல் செல்ல ஏதுவாக இருக்கும்.

BlaBlaCar

ப்ளாப்ளா பதிவுசெய்வது எவ்வாறு ?

ப்ளாப்ளா சேவையை பயன்படுத்த ப்ளாப்ளா ஆப்ஸ் ஆன்டராய்டு மற்றும் ஐஒஎஸ்யில் கிடைக்கும். முகநூல் கணக்கு கட்டாயமாக வேண்டும் மேலும் உங்கள் மின்னஞ்சல் தொலைபேசி எண்கள் தேவைப்படும்.

ப்ளாப்ளா பாதுகாப்பானதா ?

பாதுகாப்பினை உறுதி தன்மை நிச்சியமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பெண்கள் பயன்படுத்தும் வாகனம் என்றால் பெண்களுடன் மட்டுமே தங்கள் வாகனத்தினை பகிர்ந்து கொள்ளலாம்.

முதற்கட்டமாக டெல்லி, ஆக்ரா சண்டிகர் மற்றும் ஜெய்ப்பூர் இடையே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ப்ளாப்ளா கட்டண விபரம் (ஒரு பயணிக்கு)

டெல்லி- ஆக்ரா — ரூ. 550

டெல்லி – ஜெய்ப்பூர் –ரூ.700

டெல்லி- சண்டிகர் –ரூ.700

குர்கான் — டெகுர்டன் — ரூ.750

முதல் வருடத்தில் எவ்வித சேவை கட்டணங்களும் இல்லாமல் செயல்படும்.

BlaBlaCar City-To-City Ride Sharing Service

பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்க்கு டாடா ஸ்கூல்மேன்

குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிகளுக்கு சென்று வீடு திரும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள டாடா ஸ்கூல்மேன் நுட்பம் பல சிறப்பம்சங்ளை கொண்டுள்ளது.

கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வரும் பேருந்து மற்றும் சிறப்பு வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டாடா அல்ட்ரா சேஃப் ஸ்கூல் பஸ் மாடலில் இந்த பாதுகாப்பு டிராக்கிங் அமைப்பினை நிரந்தர அம்சமாக்கியுள்ளது மற்ற பேருந்துகளுக்கு வாடிக்கையாளரின் விருப்பத்திற்க்கு ஏற்ப அம்சங்களாக இணைத்துள்ளது.

ஸ்கூல்மேன் டிராக்கிங் சிஸ்டம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பாதுகாப்பிற்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாக்கியுள்ள ஸ்கூல்மேன் நுட்பத்தில் ஒவ்வொரு பத்து விநாடிகளுக்கு ஒருமுறை பள்ளி வாகனம் இருக்கும் இடத்தை மேம்படுத்தி கொண்டிருக்கும்.
பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் ஸ்கூல்பஸ் எங்கே உள்ளது எந்த சாலையில் பயனித்து கொண்டிருக்கின்றது போன்ற விபரங்களை உடனுக்குடன் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் இட வரைபடத்தின் மூலமோ அல்லது அப்ளிக்கேஷன் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். மேலும் குறிப்பிட்டுள்ள பகுதிக்கு மட்டும் வாகனம் செல்லும் வகையில் நாம் உருவாக்கி கொள்ளமுடியும்.
பள்ளி வாகனங்களுக்கு மட்டுமல்லாமல் பேருந்துகளில் பயன்படுத்தி கொள்ளலாம்.
Tata launches skoolman tracking telematics for student saftey purposes

டொயோட்டா ஹைஏஸ் எம்பிவி விரைவில்

டொயோட்டா கார் நிறுவனத்தின் ஹைஏஸ் எம்பிவி இந்தியாவில் இந்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு ஹைஏஸ் வரவுள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.
பேருந்து மற்றும் சிறப்பு வாகன கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஹைஏஸ் 10 இருக்கைகள் கொண்ட மிக அதிகப்படியான இடவசதியுடன் பல பயன்களுக்கு பயன்படுத்தும் வகையில் உள்ள வாகனமாகும்.

Toyota Hiace

வர்த்தகரிதியான பயன்பாட்டிற்க்கும் மிகவும் பயன்தரும் வகையில் உள்ள ஹைஏஸ் எம்பிவியில் 3.0லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இதன் ஆற்றல் 134எச்பி மற்றும் டார்க் 300என்எம் ஆகும். 4 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
இரண்டு காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகளை பெற்றுள்ளது.

ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் கார் சிறப்பு பதிப்பு அறிமுகம்

இந்தியாவில் ஆடி ஆர்8 காரின் ஆர்8 எல்எம்எக்ஸ் சிறப்பு வரையறுக்கப்பட்ட பதிப்பினை ஆடி சொகுசு கார் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. எல்எம்எக்ஸ் சிறப்பு பதிப்பில் உலகம் முழுமைக்கும் 99 கார்கள் மட்டுமே விற்பனை செய்ய ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆர்8 எல்எம்எக்ஸ் காரில் பொருத்தப்பட்டுள்ள முகப்பு விளக்குகள் மிக நவீன நுட்பத்தால் உருவாகப்பட்ட மிக அதிகப்படியான ஒளியை தரவல்ல லேசர் ஒளிகற்றை விளக்குகளாகும்.

ஆடி ஆர்8

லேசர் முகப்பு விளக்குகள் எல்இடி விளக்குகளை விட பலமடங்கு வெளிச்சத்தினை மற்றும் அதிக தூரத்திற்க்கு ஒளி தரவல்லதாகும். 60 கிமீ வேகத்தினை தாண்டும் பொழுது லேசர் விளக்குகள் ஒளிர தொடங்கும்.

பல சிறப்பம்சங்களை பெற்ற சிறப்பு பதிப்பாக வெளிவந்துள்ள ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் காரில் 5.2 லிட்டர் வி10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 570எச்பி மற்றும் டார்க் 540என்எம் ஆகும்.

0-100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 3.5 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். உச்சகட்ட வேகம் மணிக்கு 320கிமீ ஆகும்.

ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் கார் விலை


ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் விலை ரூ. 2.97 கோடி (ex-showroom delhi)

Audi R8 LMX limited edition launched in India