அசோக் லேலண்ட் எலக்டரிக் பஸ் வெர்சா

அசோக் லேலண்ட் நிறுவனம் புதிய வெர்சா எலக்ட்ரிக் பஸ்சை அறிமுகப்படுத்தியுள்ளது. அசோக் லேலண்ட் கீழ் செயல்படும் இங்கிலாந்தின் ஆப்டேர் நிறுவனம் எலக்ட்ரிக் பேருந்தை உருவாக்கியுள்ளது.

அசோக் லேலண்ட்

சுற்றுசூழலுக்கு எவ்விதமான கெடுதலும் ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள வெர்சா புகை மற்றும் சப்தம் இல்லாத வாகனமாகும்.டீசல் பேருந்துகளுக்கு இணையான செயல்திறன் மிக்க பேருந்து என்பதால் குறைவான ஆற்றல் என்பதற்க்கு இடமில்லை.

தாழ்தள வசதி கொண்ட பேருந்தாக இருக்கும். மொத்தம் 44 இருக்கைகள் கொண்டாதகவும் 4 விதமான நீளங்களில் கிடைக்கும். அவை 9.7 மீட்டர், 10.4 மீட்டர் 11.1 மீட்டர் மற்றும் 11.8 மீட்டராகும்.

1 கிமீ பயணிக்க 1 யூனிட் மின்சாரம் தேவைப்படும் எனவே ஒருமுறை முழுமையான சார்ஜ் செய்தால் சுமார் 144கிமீ வரை பயணிக்க முடியும் என்பதால் நகர்புறம், விமானநிலையங்களின் பயன்பாட்டிற்க்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

சுமார் ரூ.246 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள வெர்சா எல்க்ட்ரிக் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனமாக 2017 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும்.