புதிய சுசூகி ஸ்விஷ் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

சுசூகி ஸ்விஷ் 125 ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடலை சுசூகி மோட்டார்சைக்கிள் இந்திய பிரிவு ஸ்விஷ் 125 ஸ்கூட்டரை ரூ.51,661 விலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஸ்விஷ் ஸ்கூட்டர் புதிய பாடி கிராஃபிக்ஸ் மற்றும் சில புதிய வசதிகளை பெற்றுள்ளது. தற்பொழுது நான்கு புதிய வண்ணங்களில் கிடைக்கும். அவை சில்வர், கருப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு ஆகும்.

சுசூகி ஸ்விஷ் ஸ்கூட்டர்

புதிய டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளதால் இனி சர்வீஸ் ரிமைன்டர், இரட்டை டீரிப் மீட்டர் மற்றும் டிஜிட்டல் கிளாக் போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.  மேலும் பூஜ்ய பராமரிப்பு பேட்டரி, டீயூப்லஸ் டயர், மற்றும் புதிய ஸ்டீல் ஃபென்டர் சேர்க்கப்பட்டுள்ளது.

என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை. முந்தைய 125சிசி என்ஜினே பயன்படுத்தியுள்ளனர்.

புதிய சுசூகி ஸ்விஷ் ஸ்கூட்டர் விலை ரூ.51,661 (ex-showroom delhi)

மாருதி ஸ்விஃப்ட் விண்ட்சாங் பதிப்பு

மாருதி ஸ்விஃப்ட் காரில் கூடுதல் வசதிகளை இணைத்து விண்ட்சாங் என்ற பெயரில் வரையறுக்கப்பட்ட பதிப்பினை மாருதி சுஸூகி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மாருதி ஸ்விஃப்ட கார்

கூடுதலான வசதிகள் சேர்க்கப்பட்டுள்ள விண்ட்சாங் பதிப்பானது விஎக்ஸ்ஐ (VXi) மற்றும் விடிஐ(VDi) வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்க பெறும்.

மிகவும் ஸ்டைலான கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். அவற்றில் விண்ட்சாங் என எழுதப்பட்டுள்ளது. முன் மற்றும் பின் சக்கரங்களுக்கான மட் ஃபிளாப்கள், பின்பறத்தில் ஸ்பாய்லர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டீயரிங் வீல் கவர் மற்றும் சொகுசான தோற்றத்தினை கொடுக்கும் வகையில் இருக்கைகளில் புதிய இருக்கை கவர்களின் கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்களை பயன்படுத்தியுள்ளனர்.

மாருதி ஸ்விஃப்ட

ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, சோனி தொடுதிரை அமைப்பில் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது சிடி, டிவிடி, யூஎஸ்பி மற்றும் பூளூடூத் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. உட்ப்பற விளக்குகள், டோர் சீல் இல்லுமினேட் விளக்குகள் போன்றவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

மாருதி ஸ்விஃப்ட கார்

மாருதி ஸ்விஃப்ட் விண்ட்சாங் விலை

மாருதி ஸ்விஃப்ட் விஎக்ஸ்ஐ(VXi Petrol) – 5.14 லட்சம்
மாருதி ஸ்விஃப்ட் விடிஐ (VDi- diesel) – 6.1 லட்சம்
(ex-showroom delhi)

அசோக் லேலண்ட் எலக்டரிக் பஸ் வெர்சா

அசோக் லேலண்ட் நிறுவனம் புதிய வெர்சா எலக்ட்ரிக் பஸ்சை அறிமுகப்படுத்தியுள்ளது. அசோக் லேலண்ட் கீழ் செயல்படும் இங்கிலாந்தின் ஆப்டேர் நிறுவனம் எலக்ட்ரிக் பேருந்தை உருவாக்கியுள்ளது.

அசோக் லேலண்ட்

சுற்றுசூழலுக்கு எவ்விதமான கெடுதலும் ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள வெர்சா புகை மற்றும் சப்தம் இல்லாத வாகனமாகும்.டீசல் பேருந்துகளுக்கு இணையான செயல்திறன் மிக்க பேருந்து என்பதால் குறைவான ஆற்றல் என்பதற்க்கு இடமில்லை.

தாழ்தள வசதி கொண்ட பேருந்தாக இருக்கும். மொத்தம் 44 இருக்கைகள் கொண்டாதகவும் 4 விதமான நீளங்களில் கிடைக்கும். அவை 9.7 மீட்டர், 10.4 மீட்டர் 11.1 மீட்டர் மற்றும் 11.8 மீட்டராகும்.

1 கிமீ பயணிக்க 1 யூனிட் மின்சாரம் தேவைப்படும் எனவே ஒருமுறை முழுமையான சார்ஜ் செய்தால் சுமார் 144கிமீ வரை பயணிக்க முடியும் என்பதால் நகர்புறம், விமானநிலையங்களின் பயன்பாட்டிற்க்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

சுமார் ரூ.246 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள வெர்சா எல்க்ட்ரிக் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனமாக 2017 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும்.

பாஷ் நிறுவனம் திருநெல்வேலியில் புதிய ஆலையை தொடங்கியுள்ளது

பாஷ் நிறுவனம் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உதரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமாகும். திருநெல்வேலியில் உள்ள கங்கைகொண்டான் தொழிற்பேட்டையில் தற்பொழுது புதிய ஆலையை தொடங்கியுள்ளது.

இந்தியாவில் 5 உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களை பாஷ் நிறுவனம் கொண்டுள்ளது. தற்பொழுது 6வது ஆலையை தொடங்கியுள்ளது. சுமார் 500 மில்லியன் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள ஆலை 6500 சதுர அடி கொண்டதாகும்.

இந்த ஆலையில் பவர்டெரியன் சென்சார்கள், எரிபொருள் தெளிப்பான், என்ஜின் காற்று நிர்வாக அமைப்பு போன்றவற்றை தயாரிக்க உள்ளனர்.

புதிய ஆலையின் மூலம் விரைவாகவும் குறைவான விலையிலும் வாடிக்கையாளர்களின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு திருநெல்வேலியில் தொடங்கியுள்ளனர்.

ஃபெராரி யை தொடர்ந்து மஸராட்டி கார் இந்தியாவில்

மஸராட்டி கார் நிறுவனம் இந்தியாவில் நேரடியான விற்பனை மற்றும் சேவையை விரைவில் தொடங்க உள்ளது. ஃபெராரி கார் நிறுவனமும் இரண்டு டீலர்களை நியமித்துள்ளது.

மஸராட்டி

மஸராட்டி கார்கள் மிகவும் சக்திவாய்ந்த செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய மிக பிரபலமான கார் நிறுவனமாகும்.

சிரியான்ஸ் குழுமத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்த மஸராட்டி கார்கள் சிறப்பான சேவை இல்லாமை மற்றும் சர்வீஸ் குறைகளின் காரணமாக சிரியான்ஸ் குழுமத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்தது.

மஸராட்டி கார்களின் டீலர்கள் 2015யின் மத்தியில் நியமிக்க பட உள்ளதாக தெரிகின்றது. இதன் காரணமாக மஸராட்டி கார்களின் விற்பனை மற்றும் சேவை சிறப்பாக கிடைக்கும்.

ஃபியட் கிறைஸ்லர் குழுமத்தின் கீழ் மஸராட்டி நிறுவனம் செயல்படுகின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ கார் விற்பனைக்கு அறிமுகம்

மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனத்தின் சிஎல்ஏ செடான் கார் ரூ.31.5 லட்சத்திலான தொடக்க விலையில் ஆடி ஏ3 காருக்கு போட்டியாக மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ கார் விற்பனைக்கு வந்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ கார்

சிஎல்ஏ கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும். 135பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 181 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இரண்டு என்ஜினிலும் 7 வேக இரட்டை கிளட்ச் தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பல நவீன சொகுசு வசதிகளை கொண்டுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ காரில் 6 காற்றுப்பைகள் நிரந்தர அம்சமாக விளங்கும். மழையை வந்தால் தானாக மூடிகொள்ளும் பானராமா கூரைகள், அலைபேசி ஹாட்ஸ்பாட் மூலம் இணையத்தில் உலாவும் வசதி, ஹார்மன் கார்டன் ஆடியோ அமைப்பு, நேவிகேஷன் அமைப்பு போன்றவை உள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ கார் விலை


டீசல் மாடல்கள்
சிஎல்ஏ சிடீஐ ஸ்டைல் – 31.5 லட்சம்
சிஎல்ஏ சிடீஐ ஸ்போர்ட் – 35.9 லட்சம்
பெட்ரோல் மாடல்
சிஎல்ஏ ஸ்போர்ட் – 35 லட்சம்
(விலை எக்ஸ்ஷோரூம் டெல்லி)

டாடா போல்ட் கார் அறிமுகம்

டாடா போல்ட் ஹேட்ச்பேக் காரை ரூ.4.43 லட்சத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. சிறப்பான விலையை கொண்டுள்ளதால் மிகுந்த வரவேற்பினை போல்ட் கார் பெற்றுள்ளது.

டாடா போல்ட் கார்

கார் சந்தையில் வலுவற்ற நிலையில் இருந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்க்கு ஜெஸ்ட் செடான் கார் மூலம் புத்துணர்ச்சி பெற்றது . அதனை தொடர்ந்து ஜெஸ்ட் காரின் அடிப்படையான போல் மாடல் மிக சிறப்பான அடி தளத்தினை டாடா மோட்டர்ஸ்க்கு அமைத்து கொடுக்க உள்ளது.

டாடா போல்ட் அறிமுகம்

டாடா போல்ட் ஹேட்ச்பேக் காரில் பல நவீன வசதிகள் கொண்ட மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய காராக விளங்கும்.

மொத்தம் நான்கு வேரியண்டில் விற்பனைக்கு வந்தள்ள போல்ட் காரின் வேரியண்ட் விபரம் எக்ஸ்இ பேஸ் மாடல், எக்ஸ்எம், எக்ஸ்எம்எஸ் மற்றும் டாப் மாடல் எக்ஸ்டி ஆகும்.

5 வண்ணங்களில் டாடா போல்ட் கிடைக்கும். அவை ஸ்கை கிரே, வெனிட்டேன் சிகப்பு, பிரிஸ்டீன் வெள்ளை, பிளாட்டினம் சில்வர் மற்றும் டூன் பீயோஜ் வண்ணங்களில் கிடைக்கும்.

டாடா போல்ட் கார் சிறப்புகள்

போல்ட் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வந்துள்ளது. பெட்ரோல் மாடல் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜினும் டீசல் மாடல் காரில் 1.3 லிட்டர் குவாட்ராஜெட் என்ஜினும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரெவோட்ரான் என்ஜின்

போல்ட் காரில் பொருத்தப்பட்டுள்ள ரெவோட்ரான் 1.2 லிட்டர் என்ஜின் 89பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தகூடியதாகும். இதன் முறுக்கு விசை 140என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
ஈக்கோ , சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான வகையில் இயக்கலாம் என்பதால் மிக சிறப்பான செய்திறனை போல்ட் வெளிப்படுத்தும்.
ஈக்கோ மோடில் சிறப்பான மைலேஜ் கிடைக்க பெறும்.
சிட்டி மோடில் வாகனத்தை இயக்கும் பொழுது மைலேஜ் மற்றும் கூடுதலான செயல்திறனை வெளிப்படுத்தும்.
ஸ்போர்ட் மோடில் போல்ட் காரை இயக்கினால் மிகவும் சிறப்பான செயல்திறன் கிடைக்கும்.
போல்ட் டீசல் என்ஜின்

ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் குவாட்ராஜெட் (மல்டிஜெட்) என்ஜின் போல்ட் காரில் பயன்படுத்தியுள்ளனர் இதன் ஆற்றல் 74பிஎச்பி மற்றும் டார்க் 190என்எம் வெளிப்படுத்தும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
வெளிதோற்றம்

வெளி கட்டமைப்பில் ஜெஸ்ட் காரின் முகப்பில் மாற்றங்கள் இல்லை. மேலும் ஜெஸ்ட் செடான் என்பதால் பூட் உள்ளது போல்ட் காரில் பூட் இல்லாமல் இருக்கின்றது. முகப்பு கிரில் நேர்த்தியாக உள்ளது , புரோஜெக்டர் முகப்பு விளக்குகள் , பின்புற டெயில் விளக்குகள், பனி விளக்குகள், ஆலாய் வீல்கள் போன்றவை சிறப்பாக உள்ளது.
உட்புற தோற்றம்

உட்புற தோற்றத்தில் சிறாப்பாக டாடா மேம்படுத்தியுள்ளது. அதிகப்படியான இடவசதி உள்ளதால் மிகவும் இயல்பாக அமரக்கூடிய வகையில் உள்ளது. மேலும் பல நவீன வசதிகளை இணைத்துள்ளது குறிப்பாக ஹார்மேன் தொடுதிரை அமைப்பு, நேவிகேஷன் அமைப்பு , வீடியோ, ஆடியோ அலைபேசி இணைப்பு, குறுஞ்செய்தி படிக்க போன்ற பல வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

போல்ட் டாப் மாடலான எக்ஸ்டி  பாதுகாப்பு அம்சங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  9வது தலைமுறை போஸ் ஏபிஎஸ் பிரேக், இபிடி அமைப்பு , இரண்டு காற்றுப்பைகள், சிஎஸ்இ (Corner Stability Control) போன்றவற்றை பெற்றுள்ளது.
பாடி கிட்ஸ்
போல்ட் காருக்கு பாடி கிட்ஸ்கள் முகப்பு லிப் ஸ்பாய்லர், பக்கவாடில் ஸ்கர்ட், பின்புறத்தில் ரேலி டிஃப்யூசர் போன்றவை சேர்த்துள்ளது. இந்த பாடி கிட்கள் டீலர்களிடம் கூடுதலான விலை கொடுத்து பெற்று கொள்ளலாம்.
டாடா போல்ட் கார் மைலேஜ்

டாடா போல்ட் பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 17.57கிமீ கிடைக்கும்.
டாடா போல்ட் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 22.53 கிமீ கிடைக்கும்.

டாடா போல்ட் கார் விலை விபரம் (ex-showroom chennai)

போல்ட் பெட்ரோல் மாடல் விலை விபரம்

எக்ஸ்இ – 4.43 லட்சம்

எக்ஸ்எம் – 5.15 லட்சம்

எக்ஸ்எஸ் – 5.39 லட்சம்

எக்ஸ்டி – 6.07 லட்சம்

போல்ட் டீசல் மாடல் விலை விபரம்

எக்ஸ்இ – 5.55 லட்சம்

எக்ஸ்எம் – 6.15 லட்சம்

எக்ஸ்எஸ் – 6.38 லட்சம்

எக்ஸ்டி – 7.05 லட்சம்

 ஆட்டோமொபைல் தமிழன் (AMTபரிந்துரை
டாடா போல்ட் கார் சிறப்பான பல வசதிகள் கொண்ட காராக விளங்குகின்றது. டாப் மாடலில் பாதுகாப்பு அமசங்கள் மற்றும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய காராக போல்ட் விளங்குகின்றது. தாராளமாக டாடா போல்ட் காரை வாங்கலாம்.

பைக்கில் ஏபிஎஸ் பிரேக் கட்டாயம்

ஏபிஎஸ் பிரேக் (பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு) பைக்குகளில் நிரந்தரமாக்குவதற்க்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது. நம் நாட்டில் வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்ளுக்கு வரும் காலங்களில் மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் தர தொடங்கியுள்ளது.

ஏபிஎஸ் பிரேக்

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள எண்ணற்ற பைக் மாடலில் குறிப்பிட்ட சில பைக்குளில் மட்டுமே ஏபிஎஸ் பிரேக் உள்ளது. மேலும் ஏபிஎஸ் பிரேக் உள்ள பைக்களின் விலையும் சற்று கூடுதலாகத்தான் உள்ளதால் பல நடுத்தர வாடிக்கையாளர்களால் புறக்கணிக்கபடுகின்றது.

ஏபிஎஸ் பிரேக் ஏன் தேவை ?

பைக் பிரேக் பராமரிக்க டிப்ஸ் 

கார்களில் பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயம்

ஏபிஎஸ் அமைப்பின் விலை கூடுதலாக இருப்பதால் முன்னனி வாகன தயாரிப்பாளர்கள் கூட ஏபிஎஸ் பிரேக் பொருத்த ஆர்வம் காட்டுவதில்லை.

125சிசி எஞ்சினுக்கு மேல் உள்ள பைக்குகளில் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு வரும் ஆண்டுகளில் கட்டாயமாக்குவதற்க்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவிலே அதிகப்படியான பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு தயாரிக்கப்படும் பொழுது விலை குறைவதற்க்கான வாய்ப்புகள் உள்ளன.

டிவிஎஸ் அப்பாச்சி ஏபிஎஸ்

உலகின் நெ.1 நிறுவனம் டொயோட்டா

டொயோட்டா கார் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கார் விற்பனையில் முதலிடத்தினை தக்க வைத்து கொண்டுள்ளது. டொயோட்டாவை தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஜிஎம் நிறுவனங்கள் உள்ளது.

டொயோட்டா

டொயோட்டா

டொயோட்டா குழுமம் கடந்த 2014 ஆம் வருடத்தில் 1 கோடியே 2 லட்சம் வாகனங்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளது. கடந்த 2013யை (99 லட்சம்) விட  4 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களின் மொத்த விற்பனை 1 கோடி வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டை விட (97 லட்சம்) விட  4.2 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

ஜிஎம்

ஜிஎம் குழுமத்தின் மொத்த விற்பனை 2014ல் 99 லட்ச வாகனங்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டை விட (97 லட்சம்) விட  2 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

டொயோட்டா குழுமம் தொடர்ந்து விற்பனையில் முன்னிலை வகித்து வருகின்ற போதும் டொயோட்டா நிறுவனத்தினை தொடர்ந்து  மிக குறைவான இடைவெளியில் தான் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஜிஎம் நிறுவனங்கள் உள்ளன.

ராணுவத்தில் இணையும் ஸ்கார்பியோ மற்றும் சஃபாரி ஸ்ட்ராம்

ஸ்கார்பியோ மற்றும் சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி கார்கள் ராணுவத்தால் நடத்தப்பட்ட கடுமையான சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதால் ராணுவத்தின் பயன்பாட்டிற்க்கான வாய்ப்பினை பெற்றுள்ளது.

சஃபாரி ஸ்ட்ராம்

தற்பொழுது ராணுவ பயன்பாட்டில் உள்ள மாருதி ஜிப்ஸி மற்றும் மஹிந்திரா காமண்டர் கார்களின் குறைந்தபட்ச எடை இழுவை திறன் 500 கிலோ ஆகும். ஆனால் தற்பொழுது ராணுவத்தின் தேவை 800 கிலோ இழுக்க வல்ல திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏசி ஆப்ஷனலாக இருக்க வேண்டும் போன்ற காரணத்தால் புதிய கார்களை தேர்வு செய்ய வேண்டியது அவசியமானது.

மிகவும் கடுமையான சோதனைகள் நிறைந்த ராணுவ வாகன தேர்வில் பங்குபெற்ற ஸ்கார்பியோ மற்றும் சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி கார்கள் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த கார்களை ராணுவத்திற்க்கு சப்ளை செய்ய மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஸ்கார்ப்பியோ

முதல் வருடத்தில் 3249 வாகனங்களை ராணுவம் வாங்க உள்ளது. இரண்டு கார்களும் இந்திய தயாரிப்புகள் என்பது குறிப்பிட தக்க அம்சமாகும்.