ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II அறிமுகம்

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2 காரினை ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிறிதான வெளிப்புற மற்றும் உட்டப்புற கட்டமைப்பில் மாற்றங்களை தந்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்

என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. ட்வீன் ட்ர்போசார்ஜ்டு 6.6 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 563பிஎச்பி ஆகும்.

பவர்டெரியினில் மாற்றத்தினை தந்துள்ளது ரெயீத் காரில் உள்ளது போல சாலைகளின் தன்மையை அறிந்த அதற்க்கு ஏற்றார்போல செயல்படும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலைகளின் தன்மையை செயற்கைகோள் உதவிமூலம் அறிந்த இயங்கும்.

முகப்பு கிரில் சில மாற்றங்களை சந்தித்துள்ளது. பகல் நேர விளக்குகள், பயனிக்கும் அனைவருக்கும் வைஃபை இனைப்பினை ஏற்ப்படுத்தியுள்ளது. மிக சிறப்பான இருக்கை வசதியினை தந்துள்ளது. எலக்ட்ரானிக் அட்ஜஸ்மென்ட் இருக்கைகளை பெற்றுள்ளது.

உலகின் அதிவேகமான கார் ஹேன்னிஸி வேனோம்

உலகின் அதிவேகமான காராக இருந்து வந்த புகாட்டி வேயரான் காரின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை ஹேன்னிஸி வேனோம்  கார் படைத்துள்ளது.

ஹேன்னிஸி வேனோம்

புகாட்டி வேயரான் கார் 2010 ஆம் ஆண்டில் மணிக்கு 434.4கிமீ வேகத்தினை பதிவு செய்திருந்தது. இதன் சாதனையை ஹேன்னிஸி வேனோம் கார் 435.31 கிமீ வேகத்தினை பதிவு செய்துள்ளது.

7 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 1244 எச்பி வரை வெளிப்படுத்தும். குறைந்தபட்சம் 30 கார்களையாவது விற்றால்தான் இந்த சாதனையை தக்கவைத்துக் கொள்ளமுடியும். இதுவரை 11 கார்களை ஹேன்னிஸி வேனோம் ஜிடி விற்றுள்ளது.

ஹேன்னிஸி வேனோம் ஜிடி காரின் வீடியோ