புதிய செவர்லே க்ரூஸ் அறிமுகம்

ஜிஎம் நிறுவனத்தின் செவர்லே இந்தியப் பிரிவு புதிய மேம்படுத்தப்பட்ட செவர்லே க்ரூஸ் செடான் காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. புதிய க்ரூஸ் 13.75 லட்சத்தில் தொடங்குகின்றது.

புதிய க்ரூஸ்யில்  முகப்பு கிரில் மற்றும் பனி விளக்குகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் உட்ப்புற கட்டமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்பட வில்லை. புதிய வடிவம் கொண்ட ஆலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது.

செவர்லே க்ரூஸ்

டாப் வகையில் 4 காற்றுப்பைகள் பொருத்தப்பட்டுள்ளது. என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. 2.0 லிட்டர் விசிடிஐ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 168பிஎஸ் மற்றும் டார்க் 380என்எம் ஆகும்.

மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் முடுக்கிப் பெட்டி பயன்படுத்தியுள்ளனர். இவையிரண்டிலும் 6 வேக திறன் கொண்டிருக்கின்றது.

செவர்லே க்ரூஸ் விலை விபரம் (மும்பை)

செவர்லே க்ரூஸ் எல்டி விலை ரூ.13.75 லட்சம் (மேனுவல் )

செவர்லே க்ரூஸ் எல்டிஇசட் விலை ரூ.15.25 லட்சம் (மேனுவல் )

செவர்லே க்ரூஸ் எல்டிஇசட் விலை ரூ.16.15 லட்சம் (ஆட்டோ)

எஸ்யூவி சந்தையில் சவாலை தரப்போகும் எக்ஸ்யூவி500

இந்தியாவின் எஸ்யூவி கார்களின் விற்பனையில் முன்னனி வகிக்கும் மஹிந்திரா சற்று கடுமையாக போட்டியினை கடந்த சில மாதங்களை சந்தித்து வருகின்றது.

தனது சந்தையை நிலை நிறுத்துவதற்க்காக குறைந்த விலை மஹிந்திரா எக்ஸ்யூவி500 டபிள்யூ4 காரினை வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்கு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்பொழுது விற்பனையில் உள்ள டபிள்யூ8 மற்றும் டபிள்யூ6 வேரியண்டினை விட குறைவான வசதிகளை டபிள்யூ4 கொண்டிருக்கும். ஆனால் ஏபிஎஸ், காற்றுப்பைகள் மற்றும் இபிடி போன்ற வசதிகள் இடம் பெற்றிருக்கும்.

மேலும் முந்தைய எக்ஸ்யூவி கார்களில் இருந்த சில குறைபாடுகளை முழுமையாக களைந்துள்ளது.

எக்ஸ்யூவி500 டபிள்யூ4 காரின் விலை ரூ.10.99 லட்சத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த புதிய வேரியன்ட் ரெனோ டஸ்டர், நிசான் டெரோனோ மற்றும் ஈக்கோஸ்போர்ட போன்ற கார்களுக்கு சவாலினை தரவுள்ளது.

சுசூகி இன்ட்ரூடர் எம்1800ஆர் சிறப்பு எடிசன் அறிமுகம்

சுசூகி பைக் நிறுவனம் இன்ட்ரூடர் எம்1800ஆர் க்ரூஸர் பைக்கின் சிறப்பு எடிசனை ரூ16.45 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

பாஸ் (B.O.S.S)எடிசன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இன்ட்ரூடர் எவ்விதமான என்ஜின் மாற்றங்களும் இல்லாமல் வண்ணம் மற்றும் ஸ்டிக்கரிங்கில் மட்டும் மாற்றம் பெற்றுள்ளது.

 Intruder M1800R B.O.S.S

என்ஜின் ஆலாய் வீல், புகைப்போக்கி மற்றும் கைப்பிடி என அனைத்தும் கருப்பு வண்ணத்தில் உள்ளது. முகப்பு விளக்கின் வண்ணம் மற்றும் டேங்க மேல்பகுதியில் மஞ்சள் வண்ணம் பொறிக்கப்பட்டிருக்கும்.

இன்ட்ரூடர் எம்1800ஆர் பைக்கில் 1783சிசி திறன் கொண்ட வி-டிவீன் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சாதாரண இன்ட்ரூடர் பைக்கினை விட சிறப்பு இன்ட்ரூடர் 50000 கூடுதலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இன்ட்ரூடர் எம்1800ஆர் விலை ரூ.16.45 லட்சம்.(எக்ஸஷோரூம் டெல்லி)

டொயோட்டா ஃபார்ச்சூனர் சிறப்பு எடிசன் அறிமுகம்

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரின் டிஆர்டி ஸ்போர்டிவோ வரையறுக்கப்பட்ட பதிப்பினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த எடிசனில் 400 கார்கள் மட்டுமே கிடைக்கும். மேலும் 4×4 மெனுவல் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்.

இந்த டிஆர்டி ஸ்போர்ட்டிவ் லிமிடெட் எடிசனில் டூயல் டோன் கொண்ட முகப்பு மற்றும் பின்புற பம்பர்கள். புதிய கிரில் மேலும் டிஆர்டி முத்திரை பக்கவாட்டிலும் மற்றும் பின்புறத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்.

டொயோட்டா ஃபார்ச்சூனர்

எவ்விதமான என்ஜின் மாற்றங்களும் கிடையாது. மேலும் வரையறுக்கப்பட்ட பதிப்பு வெள்ளை மற்றும் சில்வர் மைக்கா மெட்டாலிக் என இரண்டு வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்டிவோ வரையறுக்கப்பட்ட பதிப்பின் விலை ரூ24.26 லட்சம் ஆகும்.

ஹீரோ பைக்கில் புதிய தொழில்நுட்பங்கள்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திலிருந்து  ஹோண்டா பிரிந்த பின்னர் ஹீரோ தன்னுடைய மாடல்களில் பல புதிய நுட்பங்ளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

தனது அனைத்து பைக் மற்றும் ஸ்கூட்டர்களிலும் புதிய நுட்பங்ளை புகுத்தி விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. அவற்றில் சில வசதிகள் பைக்களுக்கு புதிதாகும்.

ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட்

ஸ்பிளென்டர் பைக்கில் ஐ3எஸ் (i3s-idle start and stop system) என்ற புதிய நுட்ப்பத்தினை புகுத்தியுள்ளது. அதாவது வாகனத்தினை ஐடிலாக அல்லது நியூட்ரல் சமயங்களில் வீணாகும் எரிபொருளை தடுக்கும் வகையில் தானாவே என்ஜின் அனைந்துவிடும். வாகனத்தினை இயக்க முயற்சிக்க கிளட்ச்சினை பயன்படுத்தினாலே தானாகவே இயங்க ஆரம்பித்து விடும்.

ஹீரோ பைக்

மேலும் ஸ்பிளென்டர் பாடி கிராஃபிக்ஸ் , வண்ணங்கள், இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்ர் மற்றும் ஸ்டைலிங் போன்றவற்றை புதுப்பித்துள்ளது.

மேலும் ஸ்பிளென்டர் புரோ, சூப்பர் ஸ்பிளென்டர், பேஸன் புரோ டீலக்ஸ் மற்றும் எச்எஃப் டான் போன்ற பைக்களின் ஸ்டைல் மற்றும் பாடி கிராபிக்ஸ் போன்றவற்றை புதுப்பித்துள்ளது.

எச்ஃஎப் டீலக்ஸ் ஈக்கோ பைக்கில் புதிய ஏரோடைனமிக் கண்ணாடிகள் மற்றும் அதிகப்படியான டயர் உராய்வினை தடுக்ககூடிய நுட்பம் மற்றும் மைலேஜ் போன்றவற்றை அதிகரித்துள்ளது.

புதிய பிளசர் ஸ்கூட்டர்

பிளசர் ஸ்கூட்டரில் புதிய இன்ட்கிரேட்டட் பிரேக்கிங் அமைப்பினை ஹீரோ பொருத்தியுள்ளது. இந்த நுட்ப்மானது ஹோண்டா காம்பி பிரேக்கிங் அமைப்பினை போலவே இருக்கும். இதன் மூலம் பிளசர் பிரேக்கிங் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிளசர் ஸ்கூட்டரில் மொபைல் சார்ஜர் வசதி, லாக்கபல் குளோவ் பாக்ஸ், இருக்கையின் அடியில் உள்ள லக்கேஜ் பகுதியில் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது,

ஹீரோ சிபிஇசட் எக்ஸ்டீரிம்

சிபிஇசட் எக்ஸ்டீரிம் பைக்கில் பல புதிய வசதிகளை புகுத்தியுள்ளது. அவற்றில் குறிப்பாக   இம்மொபைல்சர் அதாவது அதற்க்கேற்ற சாவியில்லை என்றால் வாகனத்தினை இயக்க முடியாது. மேலும் புதிய முகப்பு விளக்கு மற்றும் பாடி கிராபிக்ஸ் மாற்றப்பட்டுள்ளது.

ஹீரோ க்ரிஸ்மா ஆர் மற்றும் இசட்எம்ஆர்

ஹீரோ க்ரிஸ்மா ஆர் மற்றும் இசட்எம்ஆர் என இரண்டினையும் அமெரிக்காவின் எரிக் புயல் நிறுவனத்தின் துனையுடன் ஹீரோ மேம்படுத்தியுள்ளது.

பென்ட்லி ஃபிளையிங் ஸ்பர் கார்

பென்ட்லி நிறுவனம் ஃபிளையிங் ஸ்பர் சொகுசு காரினை ரூ.3.10 கோடி விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மிக சக்திவாய்ந்த ஃபிளையிங் ஸ்பர் சிறப்பான சொகுசு காராக உலகயளவில் விளங்குகின்றது.

பென்ட்லி ஃபிளையிங் ஸ்பர்
6 லிட்டர் ட்வீன் ட்ர்போ டபிள்யூ 12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 616பிஎச்பி மற்றும் டார்க் 800என்எம் ஆகும். 8 வேக இசட்எஸ்எஃப் கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 வீல் ட்ரைவ் சிஸ்டத்தினை கொண்டுள்ளது.
0-100கிமீ வேகத்தினை தொட 4.6 விநாடிகளை மட்டுமே எடுத்துக்கொள்கின்றது. மேலும் உச்சக்கட்ட வேகம் மணிக்கு 322கிமீ ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 6.8கிமீ தரலாம்.
8 இஞ்ச் தொடுதிரை கொண்ட தகவலமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புற பயணிகளுக்கு 10இஞ்ச் எல்சிடி தொடுதிரை கொடுக்கப்பட்டுளள்ளது. இதன் சஸ்பென்ஷன் அமைப்பு தானாகவே சாலையின் தன்மையை உணர்ந்து அதற்க்கேற்றார் போல தன்னை மாற்றிக்கொண்டு சொகுசு தன்மையை வழங்கவல்லதாகும்.
பென்ட்லி ஃபிளையிங் ஸ்பர்
4 மற்றும் 5 நபர்கள் பயணிக்கும் வகையில் இரண்டு விதமான ஃபிளையிங் ஸ்பர் விற்பனைக்கு வந்துள்ளது. 
பென்ட்லி ஃபிளையிங் ஸ்பர் விலை ரூ3.10 கோடியாகும்.

2013 ஸ்கோடா ஆக்டாவியா அறிமுகம்

ஸ்கோடா ஆக்டாவியா செடான் கார் மூன்று வருடங்களுக்கு பின் மீண்டும் லாரா காருக்கு மாற்றாக விற்பனைக்கு வந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தினை தலைமை நிறுவனமாக கொண்டு செயல்படுகிறது ஸ்கோடா நிறுவனம்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி பிளாட்ஃபாரத்தினை அடிப்படையாக கொண்ட புதிய ஆக்டாவியா பல சிறப்பம்சங்களை கொண்டதாக விளங்கும்.

மூன்று விதமான ட்ரீம்களில் கிடைக்கும். அவை ஏக்டிவ், ஆம்பின்ட், மற்றும் எலிகன்ஸ் ஆகும். 1.4 லிட்டர் மற்றும் 1.8லிட்டர் என இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின்களில் கிடைக்கும். 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் ஆட்டோகியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

ஸ்கோடா ஆக்டாவியா

2.0 லிட்டர் டீசல் என்ஜினிலும் கிடைக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோ கியர் பாக்ஸ் என இரண்டுவிதமான வகையிலும் கிடைக்கும்.

1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆற்றல் 140பிஎஸ் வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 250என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 16.8கிமீ ஆகும்.

1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆற்றல் 180பிஎஸ் வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 250என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 14.8கிமீ ஆகும்.

2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆற்றல் 143பிஎஸ் வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 320என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 20.6கிமீ ஆகும். ஆட்டோ கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட காரில் மைலேஜ் லிட்டருக்கு 19.3கிமீ ஆகும்.

7 விதமான வண்ணங்களில் ஆக்டாவியா கிடைக்கும். அவை கருப்பு, சிவப்பு,  கிரே, சில்வர், வெள்ளை, பீஜி மற்றும் பூளூ ஆகும்.

2013 ஸ்கோடா ஆக்டாவியா விலை விபரம்.

பெட்ரோல் மாடல்

1.4 ஆக்டிவ் : ரூ.13.95 லட்சம்
1.4 ஆம்பிஷன் : ரூ. 14.95 லட்சம்
1.8 எலிகன்ஸ் : ரூ. 18.25 லட்சம்

டீசல் மாடல்

ஆக்டிவ் : ரூ.15.55 லட்சம்
 ஆம்பிஷன் : ரூ.16.55 லட்சம்
ஆம்பிஷன் (ஆட்டோ) : ரூ. 17.55 லட்சம்
 எலிகன்ஸ்(ஆட்டோ)  : ரூ.19.45 லட்சம்

கார்களின் தரத்தினை உயர்த்தும் மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் தனது கார்களின் தரம் மற்றும் கட்டுமானம் போன்றவற்றை மிக சிறப்பான முறையில் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய வகையில் உருவாக்குவதில் மகிந்திரா & மகிந்திரா திட்டமிட்டு வருகின்றது.

மஹிந்திரா

ஸ்கார்பியோ விற்பனைக்கு வந்த பின்னர் மஹிந்திரா நிறுவனத்தின் வளர்ச்சி அபரிதமான முறையில் வளர்ந்து வருகின்றது. மேலும் அதிகப்பபடியான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய என்ஜினாக எம்ஹவாக் என்ஜினை மேம்படுத்த உள்ளனர். மிக சிறப்பான உட்ப்புறம் மற்றும் கட்டுமானத்தினை வடிவமைக்க திட்டமிட்டுள்ளனர்.

சஸ்பென்ஷன் திறன் மற்றும் என்விஎச் போன்றவற்றை மேம்படுத்த உள்ளனர்

மஹிந்திரா கார்களின் தரம் 2015 ஆம் ஆண்டிற்க்குள் மேம்படுத்தப்படுத்தப்படும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

ஹோண்டா பிரியோ எஸ்குளூசிவ் எடிசன் அறிமுகம்

ஹோண்டா பிரியோ காரின் 2ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை யொட்டி சிறப்பு எஸ்குளூசிவ் பதிப்பினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.  பிரியோ எஸ்குளூசிவ் எடிசன் எஸ்எம்டி வேரியண்டில் கிடைக்கும்.

எஸ்குளூசிவ் எடிசனில் ரியர் ஸ்பாய்லர் ம்ஃபலர் ஃபினிஸிங், பின்புற சென்சார், சைட் வைசர்,  பக்கவாட்டு படி கார்னிஷ் போன்ற ஆக்சஸெரீஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் எஸ்களூசிவ் முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும். சிவப்பு, வெள்ளை, மற்றும் சில்வர் என மூன்று வண்ணங்களில் மட்டுமே எஸ்குளூசிவ் எடிசன் கிடைக்கும்.

ஹோண்டா பிரியோ

பிரியோ எஸ்குளூசிவ் எடிசன் விலை ரூ.4.92 லட்சம் முந்தைய எஸ்எம்டி வகையின் விலை ரூ.4.62 லட்சம் ஆகும்(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

ஹோண்டா பிரியோ பெட்ரோல் மாடலில் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றது. இதுவரை 54,000 பிரியோ கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது.

டீசல் பிரியோ கார் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமேஸ் மற்றும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மொபிலோ எம்பிவி கார்கள் பிரியோ காரினை அடிப்படையாக கொண்டதாகும்.

சுசூகி வேகன் ஆர் எம்பிவி அறிமுகம்

சுசூகி வேகன் ஆர் காரினை அடிப்படையாக கொண்ட பல பயன்பாட்டு வாகனத்தினை சுசூகி அறிமுகம் செய்துள்ளது. 7 இருக்கைகளை கொண்ட வேகன் ஆர் எம்பிவி 2014 ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம்.

Suzuki Wagon R 7-seater MPV
7 இருக்கைகள் கொண்ட காராக வேகன் ஆர் எம்பிவி இருக்கும். 4 மீட்டருக்கு குறைவான நீளத்திலே இந்த எம்பிவி விளங்கும். இதன் இருக்கை அமைப்புகள் 7 நபர்கள் இயல்பாக அமரக்கூடிய அளவில் இருக்கும். 3 வரிசைகள் கொண்டிருக்கும்.
இந்தியாவில் 2014 ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ வெளிவரும்.
Suzuki Wagon R 7-seater MPV

Suzuki Wagon R 7-seater MPV

Suzuki Wagon R 7-seater MPV