ஹாயாசங் வி650 பைக் விரைவில்

 ஹாயாசங்  V650 பைக் வருகிற ஜனவரி மாதத்தின் மத்தியில் வெளிவரயுள்ளது. கொரியாவின்  ஹியோசாங் இந்தியாவில் DSK உடன் இனைந்து விற்பனை செய்து வருகின்றது.

 ஹாயாசங்   V650 க்ருஸர் பைக் பற்றி சில தகவல்களும் கிடைத்துள்ளன. 647CC என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.இதன் சக்தி 79HP @9000rpm ஆகும். டார்க் 66.99NM @ 7250rpm.

விலை 4- 5 இலட்சம் வரை இருக்கலாம்..

hyosung gv650
Engine and transmission
Displacement: 647.00 cc (39.48 cubic inches)
Engine type: V2, four-stroke
Engine details: 9+ degree V-twin
Power: 79.00 HP (57.7 kW)) @ 9000 RPM
Torque: 66.99 Nm (6.8 kgf-m or 49.4 ft.lbs) @ 7250rpm
Compression: 11.6:1
Bore x stroke: 81.5 x 62.0 mm (3.2 x 2.4 inches)
Valves per cylinder: 4
Fuel system: Injection
Fuel control: DOHC
Lubrication system: Wet sump
Cooling system: Liquid
Gearbox: 5-speed
Transmission type,
final drive:
Belt
Clutch:   Wet, Multiplate
Chassis, suspension, brakes and wheels
Front suspension:  Upside down Telescopic (Compression, Rebound damping adjustable)
Rear suspension: Swing arm with Hydraulic Double shock absorber (Preload adjustable)
Front tyre dimensions: 120/70-ZR18
Rear tyre dimensions: 180/55-ZR17
Front brakes: Double disc. Semi floating discs, 2 pistons calipers
Front brakes diameter: 300 mm (11.8 inches)
Rear brakes: Single disc. 2 pistons caliper
Rear brakes diameter: 270 mm (10.6 inches)
Wheels: Three spoke wheels, dark red rims
Physical measures and capacities
Dry weight: 229.0 kg (504.9 pounds)
Power/weight ratio: 0.3450 HP/kg
Seat height: 706 mm (27.8 inches) If adjustable, lowest setting.
Overall length: 2,431 mm
Overall width: 840 mm 
Ground clearance: 160 mm
Wheelbase: 1,699 mm
Fuel capacity: 15.90 litres
Other specifications
Starter: Electric
Factory warranty: 2 years
Color options: Black, red, white

தமிழ் வாசகர்களை கவர்ந்த வாகனம்- 2012

வணக்கம் ஆட்டோமொபைல் தமிழன் வாசகர்களே….

2012 ஆம் ஆண்டில் வெளிவந்த கார் மற்றும் பைக்கில் “தமிழ் வாசகர்களை  கவர்ந்த வாகனம்” என்ற பெயரில் உங்களை கவர்ந்த வாகனங்களை தேர்ந்தேடுக்க சொல்லியிருந்தோம்.
அந்த வகையில் வாசகர்கள் வாக்களித்து வெற்றி பெற செய்த கார் மற்றும் பைக்கினை கான்போம்….
2012 ஆம் ஆண்டின் அதிகப்படியான தமிழ் வாசகர்களை கவர்ந்த கார்

1. மாருதி ஆல்டோ 800-26.19%

2. ரெனால்ட் டஸ்ட்ர்-23.81%

3. டோயோடா கேம்ரீ -14.29%

2012 ஆம் ஆண்டின் அதிகப்படியான தமிழ் வாசகர்களை கவர்ந்த பைக்

1. ஹோன்டா CBR150R-20.53%

2. பஜாஜ் டிஸ்கவர் 125ST-15.79%

3.ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 500-10.53%

டீசல் விலை உயருகிறது 10 ரூபாய் வரை

2013 ஆம் ஆண்டு முதல் மாதம் தொடங்கியே டீசல் விலை உயர்வதற்க்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதாக தெரிகிறது. பெட்ரோல் விலை பற்றி எந்த விபரமும் இது வரை தெரியவில்லை ஆனாலும் உயரும்..
இந்தியாவின் ஆயில் செயலாளர் சமீபத்தில் டீசல் விலை உயர்வு பற்றி சில கருத்துகளை வெளியிட்டுள்தாக தெரிகிறது. அவர் கூறிய கருத்தின் படி 2013 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இப்பொழுது இருக்கும் விலையை விட ரூபாய் 10 அதிகரிக்க வாய்ப்புள்ளதாம். அதாவது அடுத்த 10 மாதத்துக்குள் 20% விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.. மாதம் 1 ரூபாய் உயரலாம்..

இதனால் டீசல் கார்களின் விற்பனை 2013யில் மந்தமாகலாம்.
தகவல்;4traders

மாருதி சின்ன யானை

மாருதி  கார் விற்பனையில் இந்தியளவில் முதன்மையாக விளங்கும் நிறுவனமாகும்.சுசுகி நிறுவனத்துடன் இனைந்த இயங்கும் மாருதி சிறிய ரக சுமையேற்றும் வாகனங்களை (LCV-Light Commercial vehicle)களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
LCV வாகனங்களில் டாடா ஏஸ்(சின்ன யானை) 50% மார்கெட்டினை தன்வசம் வைத்துள்ளது. மேலும் மஹிந்திரா மேஸ்மியோ மற்றும் லைலேன்ட் தோஸ்த் மற்றும் ப்யோகா வாகனங்கள் விற்பனை செய்து வருகின்றன.

maruti lcv

மாருதி சுசுகி நிறுவனமும் இந்த துறையில் களமிறங்கலாம் என சில செய்திகள் வெளியாகி உள்ளன. சுசுகி நிறுவனம் தென்கிழக்கு ஆசியாவில் புதிய பிக்-அப் டிரக்களை வளர்ச்சியடைய திட்டமிட்டுவருகிறது. மாருதி ஈக்கோ அல்லது ஆம்னி என்ற பெயரில் 800cc ஒரு சிலிண்டர் என்ஜினுடன் 2015 ஆம் ஆண்டிற்க்கு மேல் வெளிவரலாம்.
source : economictimes

சுசூகி ஹயபுசா ஏபிஸ் பைக்- 2013

புதிய வரவு பைக்களை என்னால் முடிந்த வரை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றேன். இன்று சுசுகி ஹையபுஸா பைக்கினை பற்றி கான்போம். புதிய அப்கிரேடட் பைக்காக வெளிவரவுள்ள சுசூகி ஹயபுசா பல சிறப்புகளுடன் சிறப்பான ஸ்போர்ட்ஸ் பைக்காக வர உள்ளது.

ஹயபுசா பைக்கள் CBU  வகையில் வெளிவர உள்ளதால் விலை சற்று கூடுதலாகத்தான் இருக்கும். புதிய பைக் ABS ப்ரேக் உடன் வெளிவரவுள்ளதால் மிக சிறப்பான ப்ரேக்கிங் திறனை தரும். பழைய சுசுகி ஹயபுசாவில் இருந்த குறைகள் நீக்கப்பட்டுள்ளது.

விலை 14 முதல் 15 இலட்சம் வரை இருக்கலாம்.

காப்பி பேஸ்ட் செய்யும் நண்பர்களே தலைப்பினை மாற்றிவிட்டாவது காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்….

கார்களின் விலை உயர்வு- 2013

2013 ஆம் ஆண்டில் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விலையை உயர்த்த உள்ளது.
1.சேவ்ரலே 1 % முதல் 3% வரை உயர்த்த உள்ளது.
2. மாருதி சுசுகி நிறுவனம் இந்திய அளவில் கார் விற்பனையில் முதன்மையாக விளங்கும் நிறுவனமாகும்.
14 கார்களை மாருதி விற்பனை செய்து வருகிறது அனைத்து மாடல்களுக்கும் ரூபாய் 20000 வரை உயர்த்த உள்ளது.
3.ஆடி நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தன்னுடைய சொகுசு கார்களின் விலையை வருகிற ஜனவரி 1 2013 முதல் உயர்த்தயுள்ளது. விலை 59,600 முதல்  3,69,000 வரை உயர்த்த உள்ளது.

 Maruti Suzuki ritz automatic

4. நிசான் 3 சதவீத விலை உயர்வை அமல்படுத்த உள்ளது.

5. ஹோன்டா நிறுவனம் 0.8% முதல் 1.65 % வரை உயர்த்த உள்ளது.

6. மஹிந்திரா 2.5 % வரை உயர்த்த உள்ளது.

7. டோய்டோ நிறுவனம் 1 முதல் 2 % வரை உயர்த்த உள்ளது.

8.ரெனால்ட் 1.5 % வரை உயர்த்த உள்ளது.

9. மெர்சீடஸ்-பென்ஸ்  நிறுவனம் 1 முதல் 3 % வரை உயர்த்த உள்ளது.

இந்த விலை உயர்வு 1-1-2013 முதல் அமலுக்கு வரும்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எப்பொழுது

2013 ஆம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்க்குளாகிய கார்களில் ஃபோர்டு  ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரும் ஒன்று. தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ள இகோ ஸ்போர்ட் கார் பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றது.
எஸ்யூவி காராக வெளிவரவுள்ள ஈக்கோஸ்போர்ட் கார் வருகிற 2013 ஆகஸ்ட் மாதத்திற்க்கு முன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் அல்லது மே மாதத்தில் முன்பதிவு தொடங்கலாம். 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 1.6 லிட்டர் எஞ்சினுக்கு இணையான ஆற்றலை தரும்.கூடுதலான மைலேஜ் கிடைக்கும். ஃபியஸ்ட்டாவில் பொருத்தப்பட்ட அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் ஈக்கோஸ்போர்ட்டிலும் பொருத்தப்படும்.

ford ecosport car

பஜாஜ் 100cc பைக்

பஜாஜ் நிறுவனம் வருகிற ஜனவரி 7 அன்று புதிய 100 cc பைக்கினை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பைக் நிச்சியமாக சிறப்பான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.வருகிற 7 ஜனவரி 2013 அன்று அறிமுகம் செய்ய உள்ளனர். இந்த 100 cc பைக் மிகச் சிறப்பான விற்பனை வளர்ச்சியை எட்டும் என பஜாஜ் நம்புகிறது. இதுவரை எந்த என்ஜின் விபரங்களையும் வெளியிடவில்லை.

bajaj 100 cc

உலகின் NO.1 கார் நிறுவனம் 2012

2012 ஆம் ஆண்டின் நிறைவில் கார் தயாரிப்பு நிறுவனங்களில் உலக அளவில் முன்னிலையில் உள்ள நிறுவனங்களை கானலாம். இந்த நிறுவனங்களின் விற்பனை உலகில் உள்ள அனைத்து நாடுகளில் விற்பனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடதக்கதாகும்.
 1. சுனாமியால் டோயோடா நிறுவனம் பாதிக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து சிறப்பான விற்பனையை அடைந்து வருகிறது. உலக அளவில் 9.9 மில்லியன் வாகனங்களை விற்றுள்ளது. கடந்த ஆண்டையை விட 26% உயர்ந்துள்ளது.

2. சில வருடங்ளுக்கு முன் முதன்மையான இடத்தை இழந்த ஜிஎம் நிறுவனம் தொடர்ந்து முன்னேறி வருகின்றது. உலக அளவில் 9.3 மில்லியன் வாகனங்களை விற்று 2 ஆம் இடத்தில் உள்ளது. முதலிடத்தை மீண்டும் கைப்பற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. மூன்றாவது இடத்தில் வோக்ஸ்வேகன் உள்ளது.

மாருதி ரிட்ஸ் ஆட்டோமேட்டிக்

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஆட்டோமேட்டிக் ரிட்ஸ் காரின் விலை விபரத்தினை அறிவித்து உள்ளது. ரிட்ஸ் AT கார் 52 மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளது. 4 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாகஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
என்ஜின் 1.2 லிட்டர் K12M மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் சக்தி 87PS ஆகும். இது பழைய என்ஜினே ஆகும். மேலும் டீசல் வகையில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கிடையாது. இது சற்று வீழ்ச்சியாக அமையலாம்.

ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மைலேஜ் 17.16kmpl . மேன்வல் ட்ரான்ஸ்மிஷன் மைலேஜ் 18.5kmpl.

Maruti Suzuki ritz automatic

பெட்ரோல் வகையில் உள்ள சிறப்பம்சங்கள் VXi and VDi trim like immobiliser, fog lamps front and rear, light off and key off reminder, rear spoiler, side body moulding மேலும் சில…


விலை 6.15 லட்சம்(ex-showroom delhi),6.26 லட்சம்((ex-showroom chennai)